இந்த வார ராசிபலன் 30-5-2021 முதல் 5-6-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-30-5-2021-5-6-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 2, 3, 4.

செவ்வாய்: பூனர்பூசம்- 3, 4, பூசம்- 1.

புதன்: ரோகிணி- 2, 1,

கார்த்திகை- 4.

குரு: சதயம்- 1.

சுக்கிரன்: மிருகசீரிடம்- 3, 4,

திருவாதிரை- 1.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

3-6-2021- கடகச் செவ்வாய்.

சனி வக்ரம்.

புதன் வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

1-6-2021- கும்பம்.

3-6-2021- மீனம்.

5-6-2021- மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைந்திருந் தாலும் குருவின் சாரம் பெற்று குருவால் பார்க்கப் படுவதால் மறைவு தோஷம் விலகும். 3-ஆமிடம் சகோதர சகாய ஸ்தானம், தைரிய ஸ்தானம், நண்பர்கள் ஸ்தானம். அந்தவகையில் சகோதரர்கள், நண்பர்கள் சம்பந்தமான எல்லா பலன்களும் திருப்திகரமாக செயல்படும். சகோதர ஸ்தானத்தில் சகோதர காரகன் செவ்வாய் இருப்பது காரகோபாவக நாசம் என்ற விதி இருந்தாலும், பாக்யாதிபதி குருவின் பார்வையைப் பெறுவதால் அந்த தோஷமும் பாதிக்காது. ரத்தபந்த சம்பந்த உறவு போன்றவையெல்லாம் நன்றாக இருக்கும். 7-க்குடைய சுக்கிரன் செவ்வாயோடு இணைந்திருப்பதாலும், செவ்வாயின் சாரமான மிருகசீரிட நட்சத்திரத்தில் இருப்பதாலும் மனைவியின் உறவு, மனைவி வர்க்கத்தாரின் உறவெல்லாம் மகிழ்ச்சிகரமாக- மன நிறைவாக அமையும். ஒருசிலருக்கு மனைவிமூலமாக அதிர்ஷ்டம் உண்டாகும். சொத்து சுகங்கள் கிடைக்கும் யோகமும் உண்டாகும். அப்படி இல்லையென்றாலும் வேலைக்குப் போகும் தகுதி யுடைய மனைவிகளுக்கு நல்ல வேலையும் சம்பாத்தியமும் வருமானமும் உண்டாகும். பெண்கள் ஜாதகமாக இருந் தால் கணவருக்கு உத்தியோகம், வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் யோகம், சம்பாத்தி யம், வருமானம் எல்லாம் உண்டாகும். ஆண்கள் ஜாதகமா னால் மனைவி பெயரிலும், பெண்கள் ஜாதகமானால் கணவர் பெயரிலும் அசையும் சொத்து அல்லது அசையா சொத்து அமைய வாய்ப்புண் டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருப்பதோடு 2-க்கு டைய புதன் ரிஷப ராசியில் இருப்பதால், 2-க்குடையவரும் ராசிநாதனும் பரிவர்த்தனை யோகமடைகிறார்கள். குடும்பச் சூழ்நிலையிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். 8, 11-க்குடைய குரு 10-ல் இருந்து செவ்வாய், சுக்கிரனைப் பார்ப்பதால் கணவன்- மனைவி உறவு இனிய உறவாகவும் மனநிறைவாகவும் அமைவதோடு லாபகரமாகவும் இருக்கும். சொத்து சுகங்கள் ஏற்படவும் அல்லது வாகன யோகம் அமையவும் வாய்ப்புகள் உண்டாகும். 6-க்குடைய சுக்கிரன் 2-ல் இருப்பதால் முன்சொன்ன யோகத்திற்காக அரசுக் கடன், வங்கிக்கடன், தனியார் கடன் கிடைக்கும் யோகமும் உண்டாகும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாகும். அனால் இஷ்டதெய்வ வழிபாடும் குலதெய்வ வழி பாடும் உங்களை வழிநடத் தும். நீண்டநாள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் அமைப்பு உருவாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி கள் நடைபெறும். திருமணம், புத்திர பாக்கியம், பேரன்- பேத்தி யோகம், பூமி, வீடு வாகன வகையோகமும் இடம் பெறும். 6-க்குடைய வர் 2-ல் இருப்பதால் வராத கடன் பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் அலுத்து சலி-த்துப் போனவர் களுக்கு கடன் வாங்கியவர்களே தேடிவந்து கொடுக்கும் யோகமும் அமையும். கடன் வாங்கு வதிலும் கடன் கொடுப்பத்திலும் தரமுள்ள வர்களிடம் வரவு- செலவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றொரு தத்துவம் உண்டு.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 12-ல் மறைந

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 2, 3, 4.

செவ்வாய்: பூனர்பூசம்- 3, 4, பூசம்- 1.

புதன்: ரோகிணி- 2, 1,

கார்த்திகை- 4.

குரு: சதயம்- 1.

சுக்கிரன்: மிருகசீரிடம்- 3, 4,

திருவாதிரை- 1.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

3-6-2021- கடகச் செவ்வாய்.

சனி வக்ரம்.

புதன் வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

1-6-2021- கும்பம்.

3-6-2021- மீனம்.

5-6-2021- மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைந்திருந் தாலும் குருவின் சாரம் பெற்று குருவால் பார்க்கப் படுவதால் மறைவு தோஷம் விலகும். 3-ஆமிடம் சகோதர சகாய ஸ்தானம், தைரிய ஸ்தானம், நண்பர்கள் ஸ்தானம். அந்தவகையில் சகோதரர்கள், நண்பர்கள் சம்பந்தமான எல்லா பலன்களும் திருப்திகரமாக செயல்படும். சகோதர ஸ்தானத்தில் சகோதர காரகன் செவ்வாய் இருப்பது காரகோபாவக நாசம் என்ற விதி இருந்தாலும், பாக்யாதிபதி குருவின் பார்வையைப் பெறுவதால் அந்த தோஷமும் பாதிக்காது. ரத்தபந்த சம்பந்த உறவு போன்றவையெல்லாம் நன்றாக இருக்கும். 7-க்குடைய சுக்கிரன் செவ்வாயோடு இணைந்திருப்பதாலும், செவ்வாயின் சாரமான மிருகசீரிட நட்சத்திரத்தில் இருப்பதாலும் மனைவியின் உறவு, மனைவி வர்க்கத்தாரின் உறவெல்லாம் மகிழ்ச்சிகரமாக- மன நிறைவாக அமையும். ஒருசிலருக்கு மனைவிமூலமாக அதிர்ஷ்டம் உண்டாகும். சொத்து சுகங்கள் கிடைக்கும் யோகமும் உண்டாகும். அப்படி இல்லையென்றாலும் வேலைக்குப் போகும் தகுதி யுடைய மனைவிகளுக்கு நல்ல வேலையும் சம்பாத்தியமும் வருமானமும் உண்டாகும். பெண்கள் ஜாதகமாக இருந் தால் கணவருக்கு உத்தியோகம், வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் யோகம், சம்பாத்தி யம், வருமானம் எல்லாம் உண்டாகும். ஆண்கள் ஜாதகமா னால் மனைவி பெயரிலும், பெண்கள் ஜாதகமானால் கணவர் பெயரிலும் அசையும் சொத்து அல்லது அசையா சொத்து அமைய வாய்ப்புண் டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருப்பதோடு 2-க்கு டைய புதன் ரிஷப ராசியில் இருப்பதால், 2-க்குடையவரும் ராசிநாதனும் பரிவர்த்தனை யோகமடைகிறார்கள். குடும்பச் சூழ்நிலையிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். 8, 11-க்குடைய குரு 10-ல் இருந்து செவ்வாய், சுக்கிரனைப் பார்ப்பதால் கணவன்- மனைவி உறவு இனிய உறவாகவும் மனநிறைவாகவும் அமைவதோடு லாபகரமாகவும் இருக்கும். சொத்து சுகங்கள் ஏற்படவும் அல்லது வாகன யோகம் அமையவும் வாய்ப்புகள் உண்டாகும். 6-க்குடைய சுக்கிரன் 2-ல் இருப்பதால் முன்சொன்ன யோகத்திற்காக அரசுக் கடன், வங்கிக்கடன், தனியார் கடன் கிடைக்கும் யோகமும் உண்டாகும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாகும். அனால் இஷ்டதெய்வ வழிபாடும் குலதெய்வ வழி பாடும் உங்களை வழிநடத் தும். நீண்டநாள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் அமைப்பு உருவாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி கள் நடைபெறும். திருமணம், புத்திர பாக்கியம், பேரன்- பேத்தி யோகம், பூமி, வீடு வாகன வகையோகமும் இடம் பெறும். 6-க்குடைய வர் 2-ல் இருப்பதால் வராத கடன் பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் அலுத்து சலி-த்துப் போனவர் களுக்கு கடன் வாங்கியவர்களே தேடிவந்து கொடுக்கும் யோகமும் அமையும். கடன் வாங்கு வதிலும் கடன் கொடுப்பத்திலும் தரமுள்ள வர்களிடம் வரவு- செலவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றொரு தத்துவம் உண்டு.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 12-ல் மறைந் தாலும், 2-க்குடைய சந்திரன் சாரம் பெறுவதால் பொருளாதாரத்தில் விரயம், வீண் செலவுக்கு இடமிருக்காது. அவசியமான செலவுகள் ஏற்பட்டாலும், இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல செலவை ஈடுசெய்யும் வகையில் வருமானமும் வந்துகொண்டே இருக்கும். பொதுவாக 2-க்குடையவர் 6-ல் மறைந்தால் நமது பணம் அந்நியர்வசமாகும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால் அந்நியர் தனம் நம்வசமாகும். அது போல 12-க்குடையவர் 2-ல் இருந்தால் விரயம் செய்து வரவுண்டாகும். 2-க்குடையவர் 12-ல் மறைந் தால் கையிருப்பும் விரய மாகும்- குட்டையில் தேங்கி யிருக்கும் நீரை ஆற்றில்வரும் பெரும் வெள்ளம் அடித்துச் செல்வதுபோல! யோகமான தசாபுக்திகள் நடந்தால், விரயம் ஏற்பட்டாலும் அதற்கு சமமான வரவும் கிடைக்கும். அது எப்படி யென்றால், தேர்தலி-ல் வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம்கொடுத்து வெற்றிபெறுவது என்று சொல்வதுபோல! அரசு அலுவலகத்தில் நமக்கு வரவேண்டிய தொகைக்கு, சம்பந்தப் பட்டவர்களுக்கு மாமூல் கொடுத்து வரவு பெற்றுக்கொள்வதுபோல என்றும் சொல்ல லாம். இதுதான் 2-க்குடையவர் 12-ல் மறைவ தும், 12-க்குடையவர் 2-ல் பலம் பெறுவது மான பலன். 7.10-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால், கணவர் அல்லது மனைவிவகையில் நன்மைகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை..

weekrasi

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு 8-ல் மறைகிறார். 7, 10-க்குடைய செவ்வாயும், 4, 11-க்குடைய சுக்கிரனும் 12-ல் மறைகிறார்கள். அதேசமயம் 9-க்குடைய குரு, 10-க்குடைய செவ்வாயைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். இங்கு குரு 8-ல் இருப்பதாலும், செவ்வாயும் 12-ல் இருப்பதாலும் தனக்கு வரவேண்டிய தொகையை கஷ்டப்பட்டு வசூல் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும். அதாவது, இருந்து கொடுத்து நடந்து அலைந்து வசூல் செய்வதுபோல! அலைச்சல் இருந்தாலும் முழுத்தொகையும் வசூலாகி விடும். வாரக்கடைசியில் 5, 10-க்குடைய செவ்வாய் கடகத்தில் நீசமடைவார். அவரை சனி பார்ப்பதால் நீசபங்க ராஜயோகமாகும். அதாவது சனி, செவ்வாயின் உச்ச ராசிநாதன். மகரத்திற்கு அதிபதி. எனவே, எதிர் பாராத தனப்ராப்திகள், வரவேண்டிய தொகை சிரமமின்றி வசூலாவது போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். இருந்து கொடுத்து நடந்து அலைந்து வசூல் செய்யும் நிலைமாறி, வாங்கியவர்களே வந்து கொடுப்பார்கள். எனது நண்பர் ஒருவர் டைரியில் குறித்து வைத்து, கடன் வாங்கியவர்களிடம் தேடிப் போய் வட்டியைக் கொடுத்து வந்தார். அவருடைய நாணயத் திற்காக காலம் அவரைக் கைவிடவில்லை. காசுபணம், வரவு- செலவில் கடைசிவரை எந்தக் குறையுமில்லாமல் காப்பாற்றப் பட்டார். குர்-ஆனில் ஒரு வாசகம் உண்டு. வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க நினைப்பவனுக்கு அல்லா ஒரு குறையும் வைக்கமாட்டார். திரும்பக்கொடுக்க நினைக் காதவனுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் செய்துவிடுவார்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 10-ல் திக்பலம் பெறுகிறார். 5-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 11-க்குடைய புதன் 10-லும், 10-க்குடைய சுக்கிரன் 11-லும் பரிவர்த்தனை. சுக்கிரன் 9-க்குடைய செவ்வாயோடு சேர்க்கை. அவர்களுக்கும் குரு பார்வை. எனவே நடப்புக் கோட்சார கிரக நிலைகள் உங்கள் ராசிக்குதான் அதியற்புதமான யோகப் பலனாக அமைகிறது. 6-ல் சனி மறைந்தாலும் ஆட்சி பெற்றவர் என்பதாலும், 10-ஆமிடத்துக்கு திரி கோணத்தில் இருப்பதாலும் உங்கள் வாழ்க்கை, தொழில் எல்லாம் மிக அற்புதமான இயங்கும். 4, 9-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பதும், அவரை 5-க்குடைய குரு பார்ப்பதும், உங்கள் முயற்சி களுக்கும் காரியங்களுக்கும் பச்சைக்கொடி (கிரீன் சிக் னல்) காட்டுவதாக அமையும். உங்கள் மனதில் என்ன திட்டங்கள் உருவாகிறதோ- புத்தியில் என்ன யோசனைகள் உதயமாகிறதோ அவற் றைப்பற்றி யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்காமல், உங்கள் மனம் போல செயல்படவேண்டும். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதுபோல செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எல்லாவற்றையும் ஜெயித்துக் காட்டலாம். செவ்வாய் 11-ல் சுக்கிர னோடு சேர்வது (செவ்வாய் 9-க்குடையவர்; சுக்கிரன் 10-க்குடையவர்) தர்மகர்மாதிபதி யோகம். 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியதுபோல எல்லாம் நிறைவாக நிறைவேறும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பதும், 10-க்குடைய புதன் 9-ல் இருப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். அதேசமயம் சுக்கிரன் 8-க்குடைய செவ்வாயுடன் சேர்க்கை. புதன் 12-க்குடைய சூரியனுடன் சேர்க்கை. எனவே சில காரியங்கள் நினைப்பதுபோல நிறைவேறும். சில காரியங்கள் தடைப்பட்டு தாமதப்பட்டு நிறைவேறும். குறுக்குப் பாதையில் பயணம் போகும்போது போய்ச் சேரவேண்டிய இடத்தை சீக்கிரமாக அடைந்துவிடலாம். போக்குவரத்துத் தடையால் மாற்றுப் பாதையில் சுற்றிப்போகும்போது நேரம் கூடுதலாகும். அதுபோல உங்கள் காரியங்கள் எதிர்பாராத தடைகளால் தாமதப்பட்டு நிறைவேறும். இருந்தாலும் புதன், சுக்கிரன் பரிவர்த்தனையால் (தர்மகர்மாதிபதி) நினைத்தை நிறைவேற்றலாம். எண்ணியதை ஈடேற்றலாம். 8-க்குடையவர் 10-ல் இருப்பது தான் காரியத் தடைக்கும் தாமதத்திற்கும் காரணமாகும். ஆனால் மேற்சொன்ன புதன், சுக்கிரன் பரிவர்த்தனை காரிய நிறைவேற்றத் தைத் தரும். அதற்கு குரு பார்வையும் ஒரு காரணம். (10-ஆமிடத்தை குரு பார்க் கிறார்). 5-ல் சனி ஆட்சிபெறுவதால், கொண்ட கொள்கையில் உறுதிப்பாடும் செய்யும் முயற்சிகளில் கட்டுப்பாடும் அமைவதால் எல்லாவற்றையும் ஜெயித்துக் காட்டலாம். உங்களுடைய வெற்றிக்கு யாராவது ஒரு பெண்மணி பக்கபலமாகத் திகழ்வார். அது தாயாகவோ தாரமாகவோ சகோதரியாகவோ அமையலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோண மாகிறார். அவருடன் 2, 7-க்குடைய செவ்வாய் சம்பந்தம். சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை. 5-ல் நிற்கும் குரு செவ்வாயையும் சுக்கிரனையும் பார்க்கிறார். இவர்கள் மூவரும் சம்பந்தம். இது கேந்திர திரிகோணாதிபதிகள் சம்பந்தம் எனப்படும். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம்; திரிகோணம் என்பது தெய்வ அனுகூல ஸ்தானம். ஆகவே உங்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் குருவருளும் திருவருளும் வாழ்த்துக் கூறி வழிநடத்தி வெற்றிபெறச் செய்யும். 6-க்குடைய குரு 5-ல் இருப்பது நல்லதுதான் என்றாலும், உங்கள் மனதில் உருவாகும் கற்பனை பயம்தான் உங்களுக்கு எதிர்மறைப் பலனாக மாறும். எனவே "வினாசகாலம் விபரீதபுத்தி' என்பதை மாற்றியமைத்து, ஒரே முடிவாக "ஒன்றேசெய்; நன்றே செய்; அதுவும் இன்றே செய்' என்ற அறிவுரையைப்போல, கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு குறையாமல் வைராக்கியமாக செயல்பட்டால் வாழ்வது நிச்சயம். வீழ்வதற்கு இடமில்லை. துலா ராசிக்கு குரு பார்வை 5-லி-ருந்து கிடைக்கப் பெற்றாலும், அவர் 3, 6-க்குடையவர் என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். ஒரு வழிப்போக்கன், நினைத்தது எல்லாவற்றையும் நிறைவேற்றும் கற்பக மரத்தடியில் வெயிலுக்காக ஒதுங்கினான். இந்த வெயில் நேரத்தில் தென்றல் வீசினால் நன்றாக இருக்குமென்று நினைத்தான்; நடந்தது. அதேபோல உறங்கக் கட்டிலும் மெத்தையும், கால் அழுத்திவிடப் பணிப்பெண் களும், விருந்தும் கிடைக்க நினைத்தான்; எல்லாம் நடந்தது. அவன் மனக்குரங்கு, "இதெல்லாம் துர்சக்தியின் விளைவாக இருக்குமோ' என்று நினைத்தது. உடனே துர் சக்தி உதயமாகி அவனை பலி-கொண்டு விட்டது. எனவே மனம்போல் வாழ்க்கை என்பதை உணரவேண்டும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். 7-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். 2, 5-க்குடைய குரு பார்வை. ஒரு ராசியையோ அல்லது ராசிநாதனையோ, லக்னம் அல்லது லக்னாதி பதியையோ குரு பார்க்கவேண்டும். அல்லது 5, 9-க்குடைய திரிகோணாதிபதி பார்க்கவேண்டும். குரு 5-க்குடையவர்- திரிகோணாதிபதி. அவர் 4-ல் கேந்திர ஸ்தானத் தில் நின்று ராசிநாதனைப் பார்க்கிறார். எனவே, 'மங்கை சூதகமானால் கங்கையில் குளிப்பாள்; தோஷம் போய்விடும்' என்பதுபோல, குரு பார்வையால் எந்த தோஷமும் உங்களை அணுகாது. ரப்பர் கையுறை மாட்டிக்கொண்டு மின்சாரத்தைத் தொடுவதுபோல! அதனால் தான் "குரு பார்க்கக்கோடி குற்றம் நீங்கும்' என்று ஜோதிடவிதி சொல்கிறது. அதே போல சந்திர காவியம் என்ற ஜோதிட நூலி-ல் "5, 9-க்கு அதிபர் பாபர் சுபரானா லும் பொன்போன்ற நன்மையே தருவார்' என்று சொல்லப்பட்டுள்ளது. கேந்திர ஸ்தானம் என்பது விஷ்ணு ஸ்தானம்; திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம் என்று அடிக்கடி எழுதுகிறேன். கேந்திரம் என்பது முயற்சி; திரிகோணம் என்பது குருவருள், தவப்பயன், தெய்வ அனுகூலம் எனப்படும். அதனை வள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி-தரும்' என்றார். இங்கு முயற்சியென்பதற்குத் தவம் என்றே பொருள். "தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. அந்தத் தவமென்பது முன்ஜென்ம வினைப்பயன் என்றும் சொல்லலாம். வாரக் கடைசியில் ராசிநாதன் செவ்வாய் நீசமடைந்தாலும், செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி பார்ப்பது நீசபங்க ராஜயோகமாகும்; பாதிக்காது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த சனி 2-ல் ஆட்சிபெறுவதால் மறைவுதோஷம் நீங்கும். ராசிநாதன் குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு வாரிசுயோகம் கூடும். ஜாதகர்- பெற்றோர் உறவு தெளிவாக இருக்கும். ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் ஆதரவாகவும் அனுகூலமாகவும் அமையும். 2-ல் உள்ள சனியை 5, 12-க்குடைய செவ்வாய் பார்ப்பதால், குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பு மலரும். தேவகேரளீயம் என்ற ஜோதிட நூலி-ல் "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் தீது' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விதி, ஆட்சிபெற்ற மகரச் சனியை அந்த வீட்டின் உச்ச ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் பொருந்தாது. திருக்குறளில் கூறியபடி "பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின்' என்றபடி சனி, செவ்வாய் பார்வை உங்களுக்கு நன்மையே தரும். தீக்குச்சி தீபமேற்றவும் பயன்படும்; வீட்டைக் கொளுத்தவும் பயன்படும். ஆக, எல்லா கிரகங்களின் சேர்க்கையும் சம்பந்தமும் நல்லதும் செய்யும்; கெடுதலும் செய்யும். எப்போதும் நன்மை செய்யும்- எப்போது கெடுதலைச் செய்யுமென்பது அந்தந்த கிரகங்களின் சாரபலன், சேர்க்கைப் பலன், பார்வைப் பலன் போன்றவற்றைப் பொருத்தது. 9-க்குடைய சூரியன் 6-ல் மறைவதாலும், அட்டமாதிபதி சந்திரன் சாரம் பெறுவதாலும் தகப்பனார் அல்லது பிதுரார்ஜித சொத்துகள்வழியில் பிரச்சினைகளை சந்திக்கநேரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சியாகவும் இருக்கிறார்; வக்ரமாகவும் இருக்கிறார். 7-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். எனவே, சனியைப் பார்க்கும் செவ்வாய்க்கு கெடுபலன் இல்லை. மேலும் ஜூன் 3-ஆம் தேதி கடகத்திற்கு செவ்வாய் நீசபங்க ராஜயோகம் பெற்று சனியைப் பார்க்கும் காலம், உங்களுக்கு விபரீத ராஜயோகம் உண்டாகும். 3, 12-க்குடைய குரு 2-ல் அமர்ந்து வாரத்தொடக்கத்தில் செவ்வாயையும் சுக்கிரனையும் பார்க்கிறார். செவ்வாய் லாபாதிபதி. சுக்கிரன் ஜீவன ஸ்தானாதிபதி. வாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் நற்பலன்களே நடக்கும். சனி 3-ஆமிடம் மீனம், 7-ஆமிடம் கடகம், 10-ஆமிடம் துலாம் ஆகியவற்றைப் பார்ப்பதால், சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் கூட்டுத்தொழில் அல்லது சுயதொழில் ஆரம்பிக்கலாம். ஒருசிலருக்கு முதலீடு இல்லாவிட்டாலும் திறமையின் அடிப்படையில் ஒர்க்கிங் பார்ட்னர் என்ற அந்தஸ்து உருவாகும். வயது வந்தும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கூடிவரும். ஏழரைச்சனியின் காரணமாக பிரிந்திரிந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். குடும்பத்தைவிட்டு விலகி வெளிநாடு சென்றிருந்தவர்கள் (வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள்) ஒப்பந்தகாலம் முடிந்து சொந்த ஊர் திரும்புவார்கள். சொந்த பந்தம், மனைவி மக்களோடு சேர்ந்து வாழும் கிரக அமைப்பு உருவாகும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தேக ஆரோக்கியத்திலும் திருப்தியான பலனை எதிர்பார்க்கலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசியில் 2, 11-க்குடைய குரு நிற்கிறார். 4-ல் இருக்கும் ராகு சாரம் பெறுகி றார். (சதயம் 1-ல் குரு). பாதசாரப்படி குரு அம்சத்தில் தனுசுவில் ஆட்சியாக இருப்பார். எனவே செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப் பாக அமையும். வரவேண்டிய பணம் வசூலாகும். வாங்கிய கடன் ஓடியடையும். "நான் ஏன் பிறந்தேன்; நாட்டுக்கும் வீட்டுக்கும் என்ன செய்தேன்' என்ற கேள்விக்கு பதிலாக, எல்லாருக்கும் பயன்படுமளவு அவரவர் தகுதிக்கேற்ப நல்லது செய்யலாம். ஒரு திரைப்படத்தில், "வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்பதற்காக ஒருவனை சுட்டிக்காட்டி, "இவனை வளர்க்கிறார் கள்' என்று ஒருவர் வசனம் பேசுவார். அதுபோல் இல்லாமல் நடிகர் விவேக் செயல்பட்ட மாதிரி பல மரங்களை நட்டுவைக்கலாம். பலருக்கு உதவிகரமாக அமையலாம். அதாவது தோட்டக்கலையை வளர்க்கலாம். அறுபத்துநான்கு கலைகளில் தோட்டக்கலையும் ஒரு கலைதான். அதற்கு ஆர்வமும் அக்கறையும் தேவைப்படும். "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை' என்ற வள்ளலார் இராமலிங்க அடிகள், "வாடிய பயிரைக் கண்டபோதெலாம் வாடினேன்' என்று பாடினார். உடனே இயற்கை அன்னை கருணை கொண்டு மழைபொழிய, வாடியபயிர் பசுமையடைந்தது. அந்த அருமை பெருமையெல்லாம் விவசாயிகளுக்குதான் தெரியும். அதனால்தான் வள்ளுவர் ஐயா, "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்றார். "நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல, உழவுத்தொழில் இல்லாமல் செழிப்பும் இல்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சனி அதற்கும் 12-ல் மறைவு. சனி நின்ற வீட்டுக்கு 12-க்குடைய குரு சனிக்கு 2-ல் இருப்பதால் குருவின் மறைவு தோஷம் விலகும். சில காரியங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக செயல்படுத்தவேண்டும். சில காரியங்களை ரகசியமாகத்தான் செய்யவேண்டும். உதாரணமாக, தேர்த-லில் வாக்களிக்கும்போது ரகசியமாகத்தான்- மறைவாகவும் தான் வாக்களிக்கவேண்டும். வா-லியை வதம் செய்யும்போது இராமபிரான் மறைவாக இருந்துதான் அம்பெய்தார். அதே போல யுத்த தர்மத்திலும் மறைவி-லிருந்து தாக்கும் கொரில்லா போர் என்று ஒரு முறையுண்டு. 11-ல் ஆட்சிபெற்ற சனி, ராசிநாதன் குருவுக்கு வீடுகொடுத்தார் என்ற பெருமையோடு உங்கள் ராசியைப் பார்க்கிறார். 12-ஆமிடம் விரயஸ்தானம். 11-ஆமிடம் லாபஸ்தானம். அதாவது விரயமாகிப் பிறகு லாபம் தேடவேண்டும். சீட்டு போடுகிறவர்கள் முதலி-ல் விரயமாகச் செய்வார்கள். பிறகு லாபம் பெறுவார்கள். 10-க்குடைய குரு 12-ல் இருப்பதால், தொழில்ரீதியாக முதலீடு செய்வதும் விரயம்தான். முதலில் முதல்போட்டு தொழில் நடத்தி பிறகு லாபம் பார்க்கவேண்டும். 12-ல் மறைந்த குரு 4-ஆமித்தைப் பார்ப்பதால், சிலர் அரசு திட்டத்தின்கீழ் குறைந்த பட்ஜெட் டில் வீடு கட்டுவார்கள். ஆனால் அதற்கு சிறுதொகை முதலீடு செய்யவேண்டும். பிறகு அந்தத்தொகை கிடைக்கப்பெறும்.

bala040621
இதையும் படியுங்கள்
Subscribe