முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
தபால் பெட்டி எண்: 2255, வடபழனி, சென்னை- 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்தம்- 2.
செவ்வாய்: அஸ்தம்- 3.
புதன்: சித்திரை- 2.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: விசாகம்- 4.
சனி: திருவோணம்- 3.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
5-10-2021- காலை 8.15 மணிக்கு கன்னி.
7-10-2021- காலை 10.17 மணிக்கு துலாம்.
9-10-2021- பகல் 11.20 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசி அதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்து ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால், எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் கையாண்டு முன்னேறும் யோகம் உங்களுக்கு இவ்வாரத்தில் ஏற்படும். எல்லா வகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். தன காரகன் 10-ல் இருந்தாலும், வக்ரகதியில் இருப்பதாலும் சுக்கிரன் 8-ல் இருப்பதாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். ராகு 2-ல் இருப்பதால் குடும்பத்தினருடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், உற்றார்- உறவினர்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால், பணியாளர்கள் தடைப் பட்ட பதவி உயர்வுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண் டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடையலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் அனுசரித்துச் செல்வது நலம். வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நற்பலன்களை ஏற்படுத்தும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால், பணவரவில் இருந்த தேக்கங்கள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உங்கள் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனினும் ஒற்றுமை பாதிக் காது; சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஓரளவு ஆதரவாக செயல்படு வார்கள். தடைப்பட்ட திருமண சுபகாரிய முயற்சி களைத் தற்போது மேற் கொண்டால் அனுகூலமான பலன் கிட்டும். சூரியன், செவ்வாய் 5-ல் இருப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள்- குறிப்பாக வயிறு சார்ந்த பிரச்சினைகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணலாம். என்றாலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பணியாளர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் இணக்கமாக நடந்துகொண்டால் வேலை பளுவைக் குறைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்குப்பின் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். சிவ வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும். மகாளய அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வது மிக நன்று.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிப் பதில் இடையூறுகள் ஏற்படும். 8-ல் குரு, சனி சஞ்சரித்தாலும், இரு கிரகங்களும் வக்ரகதி யில் இருப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்து விடுவீர்கள். குடும்பத் தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் காலம். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது உத்தமம். பண வரவு ஏற்ற- இறக்கமாக இருக் கும். என்றாலும் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத் தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டு மன அமைதி குறையலாம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். என்றாலும் புதன் 4-ல், கேது 6-ல் இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்குப் புது நம்பிக்கையைக் கொடுக்கும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்தால் மேன்மை யான பலன்களை அடையலாம். மகாளய அமாவாசையன்று ஆதரவற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். 7-ல் குரு, லாபஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர் கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். எதிர்பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனமாக செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் செய்பவர் கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். கடந்த காலக் கடன்களும் குறையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவதும், சனி நெருங்கமுடியாத தெய்வங்களாகிய விநாயகரை யும் அனுமனையும் வழிபடுவது நலம் தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன், சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சாரம். எனவே பணவரவுகள் சாதகமாக இருக்கும். ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி 6-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். ஆடம்பரப் பொருட் சேர்க்கையுண்டு. சூரியன், செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால், சிலரது குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு காணப்பட லாம். கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்த்து பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்பு கள் தோன்றி மருத்துவச் செலவை உண்டாக் கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்று. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலப் பலன்களைப் பெற முடியும். ராகு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை காணப்படும். என்றாலும் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருகப் பெருமானுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ஜென்ம ராசியில் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் திறம்பட செயல்பட்டு அனுகூலமான பலனை அடைவீர்கள். உங்களது வலிமை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி யடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. பொருளாதாரரீதியாக சிறப்பான முன்னேற் றம் உண்டாகும். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால், முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு நிதானத்துடன் இருக்கவேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. எந்த செயலில் ஈடுபடும்போதும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல் படுவது நன்று. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் உறவினர்களிடம் நல்லபெயர் எடுக்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் உண்டாகும். கடன்கள் யாவும் குறையும். குரு 5-ல் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங் கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். எனினும் எந்த காரியத்தையும் செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளி களை அனுசரித்துச்செல்வது நல்லது. சிவபெருமானையும் சனிபகவானையும் வழிபடவும். சனி கவசம் படிப்பது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்று. சூரியன், செவ்வாய் இணைந்து விரய ஸ்தானமான 12-ல் இருக்கிறார் கள். எனவே வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் வாரம் என்பதால், எதிலும் கவனத் துடன் செயல்படவேண்டும். வீண் பிரச்சினைகள் தேடிவரும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால், சிலரது குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனநிம்மதி குறையலாம். ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு திருப்திகரமாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். எனினும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் சில ஆதாயங்களை அடையலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில்ரீதியான கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிலருக்கு நம்பியவர்களே ஏமாற்றும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகஸ்தர்கள் வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல், மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். திறமைக்கேற்ற உயர்வு கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபமே கிட்டும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் சென்றால் ஓரளவு முன்னேற் றம் உண்டாகும். சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாற்றி, விநாயகர் துதிகளைப் பாடி வழிபட்டால் தும்பிக்கையான் அருள் பரிபூரணமாய்க் கிடைக்கும்; நம்பிக்கை கைகூடும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சூரியன், புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொருளாதாரரீதியாக மிக அனுசுலமான பலன்கள் ஏற்படும். முயற்சி ஸதானமான 3-ல் சனி இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த சிக்கலையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர் பார்த்ததைவிட சிறப்பான லாபங்களை அடையலாம். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராகு 7-ல் சஞ்சரித்தாலும், குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார்- உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், தடைப்பட்ட ஊதிய உயர்வும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை காணப்படும். தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை சாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
ராசியாதிபதி குரு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு. எனவே, இருக்குமிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சர்ப்ப கிரகமான ராகு 6-ல் இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய இனிய வாரமாக இவ்வாரம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் யோகமுண்டு. சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு களால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதங்களைத் தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். எதிர் பாராத திடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயரும்; கடன்கள் குறையும். உத்தியோகஸ் தர்களுக்கு எதிர்பாராத ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றலாம். சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபட்டு வந்தால் தொல்லைகள் விலகும்; நல்லவை நாடிவரும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ஜென்ம ராசியில் குரு, சனி சஞ்சரிப்பதால், எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பல்வேறு நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என்றாலும், உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 11-ல் கேது, சுக்கிரன் சஞ்சரிப்பதால், எதையும் சமாளிக்கும் திறனும் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கோபத்தைக் குறைத்து அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை காணப்படும். என்றாலும் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில், வியாபாரரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்; அபிவிருத்தி பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் பெறலாம். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபட்டு, ராகுவுக்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் வாழ்வில் பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். எனவே, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குரு, சனி 12-ல் இருப்பதால் எதிலும் கவனத் துடன் இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களிடம் இணக்கமாகச் சென்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சுக்கிரன் 10-ல் இருப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துகளால் அலைச்சல்களும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை காணப்படும். என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சிவ பெருமானையும் முருகப் பெருமானையும் வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், லாப ஸ்தானமான 11-ல் குரு, சனி சஞ்சரிக்கின்றனர். தொழில், பொருளாதார நிலை மிகவும் அனுகூலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்பு களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். சிறப்பான பணவரவால் பொருளாதாரரீதியான பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் கூட்டாளிகளை யும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்லவும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நன்று. நெருங்கிய வர்களை அனுசரித்துச் செல்லவும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எனினும் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும், உடனிருப்பவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்; ஆயினும் அனுகூலப் பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் விலகும். அனுகூலமான பலன்களை அடைவீர்கள். அசையும்- அசையா சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். விஷ்ணு பகவானையும், லட்சுமி தேவியையும் வழிபட்டால் மனக்கவலைகள் நீங்கும்; செல்வநிலை உயரும். ப்