இந்த வார ராசிபலன் 28-11-2021 முதல் 4-12-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-28-11-2021-4-12-2021

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அனுஷம்- 3.

செவ்வாய்: விசாகம்- 2.

புதன்: அனுஷம்- 3.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: பூராடம்- 4.

சனி: திருவோணம்- 2.

ராகு: கிருத்திகை- 4.

கேது: அனுஷம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

29-11-2021

அதிகாலை 4.05 மணிக்கு கன்னி.

1-12-2021 காலை 7.45 மணிக்கு துலாம்.

3-12-2021 காலை 8.25 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

தனகாரகன் குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து 5, 7-ஆமிடங்களைப் பார்ப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து, உங்கள் கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய் 7-ல், சூரியன், கேதுவுடன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. 2-ல் ராகு இருப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நன்று. உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட நாட்களில் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் வாங்கும் யோகம் ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி இலக்கை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு, நந்தி வழிபாடு செய்வது சிறப்பு. முருக வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 8-லும், குரு 10-லும் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத் துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும், 6-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். ஏற்றங்களை அடைவீர் கள். அதேசமயம் எதையும் செய்வதற்குமுன்பு சிந்தித்து செயல்பட்டால்தான் இலக்கை அடையமுடியும். சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனு கூலம் உண்டாகும். ஜென்ம ராசி யில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர் களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் பொறுமை காப்ப தும் நல்லது. சந்திரன்- புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் ராசிக்கு 6, 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களின் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதன் 7-ல், சனி 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக் கேற்றவாறு திறமையுடன் செயல்பட்டு போட்ட முதலீட்டை எடுத்துவீடுவீர்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து மகிழ்ச்சியளிக்கும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு நந்தி வழிபாடு செய்வது, அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது.

dd

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சூரியன்- கேது சேர்க்கை பெற்று தனது நட்புவீடான விருச்சிகத்தில் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதை யும் மேலோங்கும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதி

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அனுஷம்- 3.

செவ்வாய்: விசாகம்- 2.

புதன்: அனுஷம்- 3.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: பூராடம்- 4.

சனி: திருவோணம்- 2.

ராகு: கிருத்திகை- 4.

கேது: அனுஷம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

29-11-2021

அதிகாலை 4.05 மணிக்கு கன்னி.

1-12-2021 காலை 7.45 மணிக்கு துலாம்.

3-12-2021 காலை 8.25 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

தனகாரகன் குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து 5, 7-ஆமிடங்களைப் பார்ப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து, உங்கள் கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய் 7-ல், சூரியன், கேதுவுடன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. 2-ல் ராகு இருப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நன்று. உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட நாட்களில் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் வாங்கும் யோகம் ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி இலக்கை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு, நந்தி வழிபாடு செய்வது சிறப்பு. முருக வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 8-லும், குரு 10-லும் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத் துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும், 6-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். ஏற்றங்களை அடைவீர் கள். அதேசமயம் எதையும் செய்வதற்குமுன்பு சிந்தித்து செயல்பட்டால்தான் இலக்கை அடையமுடியும். சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனு கூலம் உண்டாகும். ஜென்ம ராசி யில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர் களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் பொறுமை காப்ப தும் நல்லது. சந்திரன்- புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் ராசிக்கு 6, 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களின் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதன் 7-ல், சனி 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக் கேற்றவாறு திறமையுடன் செயல்பட்டு போட்ட முதலீட்டை எடுத்துவீடுவீர்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து மகிழ்ச்சியளிக்கும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு நந்தி வழிபாடு செய்வது, அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது.

dd

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சூரியன்- கேது சேர்க்கை பெற்று தனது நட்புவீடான விருச்சிகத்தில் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதை யும் மேலோங்கும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்தகால மனக்கசப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் கைகூடும். பண வரவுகள் எதிர் பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து கடந்தகாலக் கடன் பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சமாளித்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இவ்வாரத் தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல் பட்டு நற்பலனை அடைவீர் கள். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். விரோதி களும் நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். ஒருசிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். முருகக் கடவுளுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் குறையும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு கள் ஏற்படலாம். எனவே, எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. புதன் 5-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை யும் உற்றார்- உறவினர்களை யும் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு 8-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் சிக்கனமாக இருக்கவும். ராசிக்கு 5-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத் திற்கு சாப்பிடுவது நல்லது. சந்திரன் இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். புதன், வியாழக்கிழமைகளில் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள்கூட தாமதப்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் கைகூட நெருங்கியவர்களே இடையூறு ஏற்படுத் துவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருக்கவும். தொழில், வியாபாரத்தில் லாபத்தை அடைய எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும். விரைவில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முருகன், தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலனை அடைவீர்கள். புதன் 4-ல், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூல மான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவு களால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புத்திரர்கள் வழியில் இருந்த கவலைகள் மறைந்து நிம்மதி ஏற்படும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு களால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். சூரியன், கேது 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலால் உடல் பாதிப்புகள் ஏற்படும். உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஞாயிறு, புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தை அடையமுடியும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டைவிட இருமடங்கு லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்கள் வழியில் அனு கூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த உயர்வுகளை எளிதில் அடையலாம். மேலதிகாரிகளிடம் சுமுகமான நிலை இருக்கும். தினமும் விநாயகர், சிவனை வழிபட்டுவந்தால் மேன்மைகள் உண்டாகும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருக்குமென்றாலும் 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சியில் இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். அசையா சொத்துகளால் விரயங்களை சந்திக்க நேரிடும். முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றிபெறமுடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் எதிர்பாராத வகையில் வரவேண்டிய தொகை வந்துசேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளிகளால் நற்பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக் கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். முடிந்த உதவிகளை ஏழைகளுக்குச் செய்வது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் அவசரப் படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சனி 4-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மன அமைதி குறையும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைக்கவும். ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து பொருளாதார நெருக்கடி கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள்விலகி நல்லசெய்தி வரும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். அரசாங்க அதிகாரிகள் வழியில் கெடுபிடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனமாக இருக்கவும். வேலைப்பளு குறையும். மகாலட்சுமிக்கு தாமரைமலர் சாற்றி நெய்விளக்கேற்றி வழிபடுவதும், சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சனி 3-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறி நிம்மதி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடிவரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல் படுவதால், கடினமான காரியத்தைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். ஜென்ம ராசியில் சூரியன்- கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், குரு பார்வை 8-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய ஐந்து நாட்கள் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வீடு, மனை போன்ற அசையா சொத்துகள் வாங்குவது, வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகள் கொண்ட காரியங்களில் நல்ல அனுகூலங்களைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் ஆதாயம் கிடைக்கும். தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் சில உதவிகளை அடையமுடியும். ஒரு பெரிய இடத்து நட்பு கிடைத்து அதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபட்டுவந்தால் தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். முருக வழிபாடும் உத்தமம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன்- கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலால் ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்வீர்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குரு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் பணவரவுகள் தாமதப்பட்டாலும், ராகு 6-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் கவனமாக செயல்பட்டால் நல்ல செய்தி கிடைக்கும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய ராசிகளில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் உங்கள் செயல்களுக்குப் பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில், வியாபாரத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற- இறக் கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைப்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பதன்மூலம் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சனிக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள்தீபமேற்றி வழிபடுவதாலும், ஆஞ்சனேயரை வழிபடுவதாலும் துன்பங்கள் குறையும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு செவ்வாய் உச்ச கேந்திரமான 10-ல் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சூரியன்- புதன், கேதுவுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்த தெல்லாம் நடக்கும் இனிய வாரமாக வரும் நாட்கள் இருக்கும். குரு 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்தகாலக் கடன்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்லசெய்தி கிடைக்கும். ஏழரைச்சனி நடப்பதால் உடல்சோர்வு ஏற்பட்டாலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். சந்திரன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற அனுகூலப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளைத் தடையின்றிப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகயை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். நவகிரகங்களில் சனிக்கு நீலநிற சங்கு மலர்களாலும், ராகுவுக்கு மந்தாரை மலர்களாலும் அர்ச்சனை செய்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சுக காரகன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் கிடைக்கவேண்டிய நேரத்தில் பணவரவுகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். சூரியன்- புதன் சேர்ந்து ஜீவன ஸ்தானத்தில் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப் பாக இருந்து கடந்தகால கசப்புகள் மறையும். ராகு 4-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க சில இடையூறுகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். உங்கள் ராசிக்கு ஞாயிறு, வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகி போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளையும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். சுக்கிரன் உச்ச கேந்திரமான 10-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், எதிர்பாராத வகையில் தனவரவுகள் ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் 8-ல், சூரியன்- கேது சேர்ந்து 9-ல் சஞ்சரிப்பதால் பங்காளிகளிடம் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் காலம். எனவே பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும், புதன் 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைவீர்கள். தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற இடையூறுகள் நிலவினாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். முருகப் பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டுவந்தால் குடும்பத்தில் செல்வநிலை உயரும்.

bala031221
இதையும் படியுங்கள்
Subscribe