ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: திருவாதிரை- 2, 3, 4.

செவ்வாய்: பூசம்- 4,

ஆயில்யம்- 1.

Advertisment

புதன்: ரோகிணி- 4,

மிருகசீரிடம்- 1, 2, 3.

குரு: சதயம்- 1.

சுக்கிரன்: பூசம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 4.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

2-7-2021- மிதுன புதன்.

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

28-6-2021- கும்பம்.

30-6-2021- மீனம்.

3-7-2021- மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் கடகத்தில் நீச ராசியில் இருந்தாலும் செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி செவ்வாயைப் பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. நீசபங்க ராஜயோகத்திற்கு எத்தனையோ விதிமுறைகள் இருந்தாலும் நீச கிரகத்தின் உச்ச ராசிநாதன் சம்பந்தம் பெற்றாலோ நீசபங்க ராஜயோகம் என்பது ஒரு சிறப்பு விதியாகும். நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன! முன்பொரு காலத்தில் எம்.ஜி.ஆர் தேர்த-ல் நின்றபோது திடீர் உடல்நலக்குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். அந்த நிலையிலே போஸ்டர் ஒட்டி பெறும் மெஜாரிட்டியில் வெற்றிபெற்றார். அனுதாப அலை அபரிதமான வெற்றியை தேடித் தந்தது. இதுதான் நீசபங்க ராஜயோகம். 2, 7-க்குடைய சுக்கிரன் 4-ல் செவ்வாயோடு சேர்ந்து சனியின் பார்வையைப் பெறுகிறார். 2-ஆமிடம், குடும்பஸ்தானம். 7-ஆமிடம் கணவன் அல்லது மனைவி ஸ்தானம். அதனால் பிரிந்திருந்த குடும்பத்தில் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும். வருத்தத்தினால் பிரிந்திருந்த குடும்பமும் ஒன்றுசேரும். வேலையினால் பிரிந்திருந்த கணவன்- மனைவியும் ஒன்றுசேர்வார்கள். 10-க்குடைய சனி 10-ல் ஆட்சியாக நின்று ராசிநாதனுடைய பார்வையைப் பெறுவதாலும் 2, 7-க்குடைய சுக்கிரனுடைய பார்வையைப் பெறுவதாலும் மனைவியின் பெயரில் தொழில் அமையும்.

th

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கி றார். அவருடன் 7, 12-க்குடைய செவ்வாய் சம்பந்தம். சுக்கிரன் களஸ்திரகாரகன். எனவே கணவன்- மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படும் மனஒற்றுமை அமையும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டாலே வம்பு வழக்குக்கு இடமில்லை; கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. "காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்' என்று நாமக்கல் கவிஞர் ராம-ங்கம் பிள்ளை பாடினார்கள். ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் அதுவே பேரின்பம். "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' ஜென்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதும் நாகதோஷம் எனப்படும். அத்துடன் 7-க்குடைய செவ்வாய் நீசமடைந்து சனியின் பார்வையைப் பெறுவதும் தோஷம். எனவே ஒரு சிலருக்கு இருதார யோகம் அல்லது களஸ்திர தோஷம் உண்டாகலாம். ஜனன ஜாதகத் திலும் மேற்படி கிரக அமைப்பு இருந்தால் களஸ்திர தோஷம் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் அதற்கு பரிகார ஹோமங்கள் செய்துகொள்ளவேண்டும். 7-க்குடைய செவ்வாய் நீசபங்கம் பெற்று குருவைப் பார்க்கிறார். அதனால் குரு, செவ்வாய் சம்பந்தம் ஏற்படுவதால் மாங்கல்ய தோஷமும் களஸ்திர தோஷமும் விலகும். வாரக் கடைசியில் 2-க்குடைய புதன் 2-ல் ஆட்சிபெறுவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 12-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 2-ல் இருக்கிறார். செவ்வாய் நீச ராசியில் இருந்தாலும் சனியின் பார்வையால் நீசபங்கமாகிறார். (செவ்வாயின் உச்சநாதன் சனி). ஜென்ம ராசியில் சூரியன் நின்று குரு பார்வையைப் பெறுகிறார். எனவே, பொதுவாக உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் கேடு கெடுதிக்கு இடம் இல்லை. என்றாலும் சில காரியங்களை கடின முயற்சிக்குப் பிறகு நிறைவேற்றவேண்டும். வழவழப்பான தார் ரோட்டில் வாகனம் செல்வது வேகத்தடையின்றி துரித பயணமாக அமையும். சரளைக்கல் பரப்பிய கப்பி ரோட்டில் வாகனத்தை ஓட்டும்போது மெதுவாகவும் நிதானமாகவும் ஓட்டவேண்டும். உங்கள் வாழ்க்கை பயணம் இரண்டாவது குறிப்பிட்ட மாதிரி அமையும். வேகத்தடையாக இருந்தாலும் குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிடலாம்; சற்று காலதாமதமாகும். வாரக்கடைசியில் ராசிநாதன் புதன் ஜென்மத்தில் ஆட்சி பெறும்போது குறுக்கீடுகளும் இடையூறுகளும் தடைகளும் விலகிவிடும். ஆர்வத்தோடும் அக்கறையோடும் விறுவிறுப்போடும் செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியும். 10-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். நினைத்ததை முடிக்கலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் 10-க்குடைய செவ்வாயும், 11-க்குடைய சுக்கிரனும் சேர்ந்திருக்க அவர்களை 7-ல் ஆட்சிபெற்ற சனி பார்க்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் தீது என்பது ஜோதிடவிதி. ஆனால் இங்கு கடகச் செவ்வாயும், மகரச் சனியும் பார்த்துக்கொள்வது எதிர்பாராத திருப்பத்தையும் முன்னேற்றத் தையும் யோகத்தையும் உருவாக்கிவிடும். 9-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் 10-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நீசபங்கம் பெற்று குருவைப் பார்ப்பதால் ராஜயோகமாகிவிடும். சொல்- கில்- அடிக்கலாம் என்பதுபோல திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டலாம். குறிப்பாக கணவன் அல்லது மனைவி வகையிலும் உடன்பிறப்புகள் வகையிலும் உதவி, ஒத்தாசை, ஆதரவு அணுகூலம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். செவ்வாய், சனி பார்வையால் தாமரை இலை தண்ணீர்போல நிலவிய சகோதர பாசம் பாலும் தண்ணீரும்போல கலந்து நிறைந்து திருப்திகரமான பலனைத் தரும். 2-க்குடைய சூரியன் 12-ல் மறைந்தாலும் 9-க்குடைய குரு பார்வையால் மறைவு தோஷம் விலகும். வாக்கு தனம் குடும்பம் என்ற 2-ஆமிடத்துப் பலன் கொண்டாடத் தக்க வகையில் அமையும். சூரியனை குரு பார்ப்பதால் தந்தை மகன் உறவு சிந்தை மகிழச் செய்யும். தேக சுகம் நன்றாக இருக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருக்கிறார். பொதுவாக 11-ல் சூரியன் இருந்தால் எல்லா நன்மைகளையும் வெற்றிகளையும் அணுகலாம் என்பது ஜோதிடவிதி. இங்கு அவர் ராசிநாத னாகி 11-ல் இருப்பது பருத்தி புடவையாகக் காய்த்த மாதிரி! மேலும் சிம்ம ராசிக்கு 5-க்குடைய குரு 7-ல் அமர்ந்து சூரியனைப் பார்ப்பதும் பழம் நழுவிப் பா-ல் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி! கும்மிடப்போன- தெய்வம் எதிரில் வந்த மாதிரி என்றும் சொல்லலாம். முக்கியமான வி.ஐ.பியை சந்திக்க வெளியூர் சென்றவன் விலாசத்தைத் தொலைத்துவிட்டு தவிக்கும்போது குறிப்பிட்ட நபரே எதிரில் வந்தால் எப்படி இருக்கும் அப்படிதான் உங்களுக்கு தேடிப்போன அதிர்ஷ்டம் உங்கள்முன் நிற்பதற்கு சமம். இதைத்தான் குருவருளும் திருவருளும் காட்டும் பெறுவருள் என்பது! சூரியனை குரு பார்த்த பெருமை என்னவென்றால் நல்ல மனைவி, மக்கள் யோகத்தை அடைந்து இல்லறத்தை நல்லறமாக அனுபவிப்பதுதான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதேபோல தாரமும் குருவும் தலைவிதிப்படி என்றும் சொல்வார்கள். பூர்வபுண்ணிய பாக்கியம் சிறப்பாக அமைந் தால்தான் நல்ல மனைவி, நல்ல மக்கள் அமைவார்கள். அதனால்தான் பெரியவர்கள் நல்ல குடும்ப ஒரு பல்கலைக்கழகம் என்றார்கள்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 9-ல் இருப்பது ஒரு சிறப்பு, அதேசமயம் அவர் 10-க்குடையவர் என்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் அமைகிறது. 10-ஆமிடம் கர்மஸ்தானம் முயற்சி ஸ்தானம், தொழில் ஸ்தானம், வாழ்க்கை ஸ்தானம்.- இதற்குடையவர் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது பூர்வ ஜென்ம புண்ணிய வசமாக உங்களுக்கு நல்லன எல்லாம் நடக்கும் என்பது அர்த்தம். ஜாதகம் எழுதும்போது ஆரம்பத்தில் "ஜெனனீ ஜென்ம ஸெக்யா னாம் வர்த்தனீ குலம் ஸம்பத் பதவி பூர்வ புண்ணியானாம்' என்று எழுதப்படும். பூர்வபுண்ணியம் சிறப் பாக அமைந்தால்தான் நல்ல தாய்- தந்தை கருவில் உருவாக முடியும். அதுதான் குலம் என்பது. ஜாதியை குறிக்காது. அடுத்து அந்த ஜாதகன் ஸம்பத்து செல்வ நிலையை அடைவதைக் குறிக்கும். அதற்கு அடுத்து பதவியைக் குறிக்கும். அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் நாட்டில் குடியரசுத் தலைவரான தலைமைப் பொறுப்பு ஏற்றார். ராமேஸ்வரத்தில் இந்தியாவின் தென் கோடியில் பிறந்தவர் பூர்வபுண்ணிய வசமாக நாட்டின் முதன்மை மனிதராக பதவியேற்றார். இதெல்லாம் பூர்வபுண்ணியத்தின் அருள் இருந்தால்தான் முடியும். 9-ல் ராகு நிற்பதும் அவரைக் கேது பார்ப்பதும் சில காரியங்களில் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவில்லை என்ற கதையாக ஏமாற்றங்ளைத் தந்தாலும் விடாமுயற்சி வெற்றி தரும் என்ற முறையில் மேன்மையடையலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் பலம் பெற்று துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியின் பார்வையைப் பெறுகிறார். 7-க்குடைய செவ்வாய் நீசமாகி சுக்கிரனோடு சம்பந்தப்பட்டாலும் செவ்வாயின் உச்ச ராசிநாதனான சனி பார்ப்பதால் விபரீத ராஜயோகமாக மாறிவிடும். துலா ராசிக்கு 9-ல் சூரியன் நிற்க அவரை குரு பார்க்கிறார். இந்த ராசிக்கு 3, 6-க்குடைய வர். நல்லவரா- கெட்டவரா என்று பட்டிமன்ற விவாதம் தேவையில்லை. குரு (வாத்தியார்) எத்தன்மை யுடையவராக இருந்தாலும் மதிப்பிற்குரியவர்தான் வணங்கத்தக்கவர்தான். அதனால்தான் குரு பார்க்கக் கோடி தோஷம் விலகும். கோடி நன்மை உண்டாகும். எனவே, துலா ராசிக்கு குரு 6-க்குடையவர் என்ற குறையை களங்கத்தை ஏற்படுத்தத் தேவையில்லை. துலா ராசிக்கு ராஜயோகாதி பதியான சனி 4-ல் ஆட்சிபெற்று ராசியையும் பார்க்கிறார். ராசிநாதனான சுக்கிரனையும் பார்க்கிறார். எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் திட்டங்களும் திட்டமிட்டபடி சிறப்பாக அமையும். அதைத்தான் திருக்குறளில் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்று சொல்லப்பட்டது. எண்ணம் வைராக்கியமாக (உறுதியாக) அமைந்தால் செயல் முழுவெற்றியடையும். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்!

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதான் செவ்வாய் 9-ல் நீச ராசியில் இருக்கிறார். அதே சமயம் செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி, செவ்வாயை ஆட்சிபெற்று பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் செவ்வாய்க்கு கிடைக்கிறது. பொதுவாக குரு அல்லது சுக்கிரனோடு சம்பந்தப்படும் கிரகங்கள் அனைத்தும் பலமுடையவர்களாக மாறுவார்கள். (குரு- தேவர்களின் குரு, சுக்கிரன்- அசுரர்களின் குரு) குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். அது ஏற்புடையது அல்ல. குருவின் வீடான மீனத்தில்தான் சுக்கிரன் உச்சமடைவார். பகைத் தன்மை என்றால் குருவின் வீட்டில் சுக்கிரனுக்கு உச்சபலம் அமையாதல்லவா! குரு (வியாழன்) வாதியின் வக்கீல் என்றால், சுக்கிரன் பிரதிவாதியின் வக்கீல். இருவரும் தாங்கள் சார்ந்த கட்சிக்காரர்களுக்காக வாதாடுவார்கள். வழக்காடுவார்கள். அதற்காக அவர்களுக்குள் பகை என்று சொல்லமுடியாது. கோர்ட்டுக்குள் வாதி பிரதிவாதி வக்கீல்கள் காரசாரமாக வாதாடிக் கொண்டாலும் கோர்ட்டுக்கு வெளியே இருவரும் கைகோர்த்துக்கொள்வதில்லையா- அதுமாதிரிதான்! ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் 10-க்குடைய சூரியனுக்கு 6, 12-ல் மறைவதால் தொழில் போட்டி, உத்தியோகச் சிக்கல்களை சந்தித்தாலும் சூரியனை குரு பார்ப்பதால் சமாளித்துவிடலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந்தா லும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் திரிகோணாதிபதி செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் இருவகையில் மறைவுதோஷம் விலகும். நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும்- கொடும் கூற்று என் செய்யும்- குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடினார். அதாவது செவ்வாய் முருகனுடைய அம்சத்தைக் குறிக்கும். முருகன் ப்ரணவ மந்திரத்திற்கு விளக்கம் தரும்போது தந்தையாகிய சிவனை மாணவ ஸ்தானத் தில் வைத்து விளக்கம் தந்தார். அதனால் தான் அவருக்கு சுவாமிநாதர் என்று பெயர். 9-க்குடைய சூரியன் 7-ல் நிற்பதும் அவரை ராசிநாதன் குரு பார்ப்பதும், குருவை செவ்வாய் பார்ப்பதும் உங்களை தந்தைக்கு மந்திர உபதேசம் செய்த குருநாதனாக மாற்றிவிடும். 7-க்குடைய புதன் 6-ல் மறைவதாலும் ராகு சம்பந்தப்படுவதாலும் ஒரு சில குடும்பங்களில் குடும்பம் பிளவுபடுவதற்கு மனைவி காரணமாக அமையலாம். அதேசமயம் 7-யைக் குரு பார்ப்பதால் (ராசிநாதன் குரு) நீரடித்து நீர் விலகாது என்பதும் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதும் பொய்யாகாது. 9-க்குடையவரையும் 9-ஆமிடத்தையும் குரு பார்ப்பதால் எதிர்கால வாழ்வாதார திட்டங்களுக்கு முதலீடு செய்யலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி மகரத்தில் ஆட்சி வக்ரமாகவும் இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம். மேலும் சனியை, செவ்வாய், சுக்கிரன் பார்க்கிறார்கள். செவ்வாய் 4-க்குடையவர். சுக்கிரன் 5-க்குடையவர். மந்தன் சேய் இருவர் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் தீது என்பது ஜோதிடவிதி என்றாலும் இங்கு சுக்கிரன், செவ்வாய் சேர்க்கையால் செவ்வாய், சனி பார்வை உங்களுக்கு கெடுதல் செய்யாது. நல்லதையே செய்யும். நல்லோர் நட்பு நெல்-க்கனிபோல் முத-ல் துவர்க்கும் பின்பு இனிக்கும் என்பதுபோல- கெடுதலாகத் தோன்றுபவை அனைத்தும் நல்லதாக மாறிவிடும். 5-ல் ராகு- கேது சம்பந்தம் புதன் சேர்க்கை. ஒரு சிலருக்கு புத்திர சோகத்தை ஏற்படுத்தலாம். புத்திர சோகம் என்பது வேறு; புத்திர தோஷம் என்பது வேறு. குழந்தைகளே இல்லாம-ருப்பது புத்திர தோஷம். ஒரு குழந்தை மட்டும் இருந்தால் கதளி வந்தியா தோஷம். (கதளி- என்பது வாழைமரம்). குழந்தை பிறந்து இறப்பது புத்திர சோகம். ஆதி என்ற பெண்மணியும, பகவன் என்ற ரிஷியும் திருமணம் செய்யும்போது தனக்கு பிறக்கும் குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு தேச சஞ்சாரம் மேற்கொண்டார்கள். பகவனுக்கு வைராக்கிய நெஞ்சம் இருந்தாலும், தாயாரா கிய ஆதிக்கு தாய்ப்பாசம் தடுத்தது. அப்போது பிறந்த குழந்தையே தாயாருக்கு தைரியமூட்டி பாடியது. அப்படி பிறந்தவர்கள்தான் ஔவையார் முதல் அதியமான் வரை!

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் 12-ல் ஆட்சியாக இருக்கிறார். அதனால் மறைவுதோஷம் பாதிக்காது. 2, 11-க்குடைய குரு ஜென்ம ராசியில் இருக்கிறார். 3, 10-க்குடைய செவ்வாய் ராசிநாதனையும் பார்க்கிறார் குருவையும் பார்க்கிறார். பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் உங்களைப் பொறுத்தவகையில் இந்த கோட்சார கிரகங்கள் அனுதாப அலையே வெற்றி அலையாக மாறி போற்றும்படி செய்து விடும். 4-ல் ராகு, 10-ல் கேது இருந்தாலும் திரிகோணாதிபதி புதன் சம்பந்தப்படுவதால் வைராக்கியமும் சாதனையும் உங்களை செயல்பட வைத்து வெற்றி வாகை சூடச் செய்யும். 7-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெற்று 2, 11-க்குடைய குருவின் பார்வையைப் பெறுவதும் ஒரு காரணம். புராணத்தில், ஒரு அசுரனை வதம் செய்ய பாமா உதவியாக கிருஷ்ணனுக்கு இருந்தார். அதுபோல உங்கள் வெற்றிக்கு ஆணாக இருந்தால் மனைவியும் பெண்ணாக இருந்தால் கணவரும் காரணமாக அமைவார்கள். ஆணில் சரிபாதி பெண் என்பது அர்த்தநாரீஸ்வர தத்துவம். அர்த்தம் என்றால் பாதி. நாரி என்றால் சக்தி. இதைத்தான் ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் அமைகி றார் என்று சொன்னார்கள். அது தாயாகவும் இருக்கலாம்; தாரமாகவும் இருக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைக்கி றார், அவருக்கு வீடுகொடுத்த சனி அதற்கு 12-ல் மறைகிறார். சனிக்கு குரு 12-க்குடையவர். ராசிக்கு 12-ல் இருக்கிறார். பொதுவாக முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்லுவார்கள். அந்த விதி உங்களுக்குப் பொருந்தாது. முதல் தோல்வி வெற்றிக்கு முதல்படி என்று மாறி உங்களுக்கு விடாமுயற்சியையும் வைராக்கியத்தையும் வெற்றியையும் நிலை நாட்டும். "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா' என்று சொல்லப்பட்டாலும் அந்த கருத்தை தூக்கி எறிந்துவிட்டு அடிமேல் அடிவைத்தால் அம்கியும் நகரும் என்று உங்கள் விடாமுயற்சி வெற்றிக்கு பாதை வகுக்கும். அதைத்தான் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்றார்கள். அது மட்டுமல்ல "தெய்வத் தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருந்த கூ-தரும்' என்றும் வள்ளுவர் கூறினார். அதற்கு உதாரணம் அரசனாகப் பிறந்து தவமியற்றி காயத்திரி மந்திரத்தை உபதேசித்த ராஜரிஷ விசுவாமித்திரர்தான். இன்றைக்கு பூணூல் அணியும் அனைவரும் அரச குலத்தில் பிறந்த விசுவாமித்திரர் உபதேசித்த காயத்திரி மந்திரத்தைதான் கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் முயற்சி திருவினையாக்கும் என்பதன் பொருள். சாதனையும் வைராக்கியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.