இந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-24-1-2021-30-1-2021

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்-

4, திருவோணம்- 1, 2.weekrasi

செவ்வாய்: பரணி- 2, 3.

புதன்: திருவோணம்- 3, 2.

குரு: திருவோணம்- 2.

சுக்கிரன்: பூராடம்- 4,

உத்திராடம்- 1, 2.

சனி: உத்திராடம்- 2, 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம்.

குரு அஸ்தமனம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

25-1-2021- மிதுனம்.

27-1-2021- கடகம்.

30-1-2021- சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பரணி). சுக்கிரன் ராசிக்கு திரிகோணமாக இருக்கிறார். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகும். வழக்கு, வில்லங்கம், வியாஜ்ஜியம் இவற்றில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். ஆன்மிக ஈடுபாடு அதிகமாகும். 10-ல் சூரியன் இருப்பதால் அரசு காரியங் களில் அனுகூலமான பலன்கள் ஏற்படலாம். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வோ அல்லது இடமாற்றமோ உண்டாகலாம். 9-க்குடைய குரு 10-ல், 10-க்குடைய சனியோடு கூடியிருப்பது தர்மகர்மாதிபதி யோகம். பலமுறை தர்மகர்மாதிபதி யோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். எனவே, உங்கள் செயல்பாடுகளில் தேக்கமோ தடையோ இருக்காது. காரியங்கள் நிறைவேறும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அகலும். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். செலவுக்கேற்ற வரவும் வரும். தொழில்துறையில் முன்னேற்றம் தென்படும். தாய்மாமன் அல்லது பாட்டனார் வழியில் சில சங்கடங்கள் உண்டாகலாம். உறவுகளில் பிரிவினை ஏற்படாது. சகோதர- சகோதரி வகையில் சுபமங்கள செலவுகளும், திடீர்ப் பயணங்களால் விரயங்களும் உண்டாகும். 10-க்குடைய சனி 10-ல் ஆட்சி. தொழில், வாழ்க்கை, ஜீவிதம் இவற்றில் குறைகளுக்கு இடமில்லை. என்றாலும் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத குறையோ கவலையோ தோன்றலாம். 2-ல் உள்ள ராகுவும் 8-ல் உள்ள கேதுவும் மனக் குறையையோ கவலையையோ உண்டாக்கினாலும், குரு ராகுவைப் பார்ப்பதால் கவலைகளை விலக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு. ஜென்ம ராசியில் ராகு. 7-ல் கேது. மிக எளிதாக வும் சுலபமாகவும் முடியவேண்டிய காரியங்கள் அத்தனை யும் கடுமையாகவும் சுமையாகவும் தோன்றும். என்றாலும், நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு ராசியைப் பார்ப்பதால், தடை தாமதமானாலும் நினைத்தப்படி நிறைவேறும். ஒரு சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோகம், தொழில்துறை அல்லது குடியிருப்பில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மாற்றங் கள் ஏற்பட இடமில்லை. என்றாலும் தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்படும். 9-ல் சூரியன், புதன், குரு, சனி சேர்க்கை இருப்பதால் இஷ்டதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். நீண்டகாலப் பிரார்த்தனைக் கடன்களை நிறைவேற்றலாம். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளும் சுபமங்கள விரயச்செலவுகளும் ஏற்படும். வேலைதேடி அலைவோர் வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் வெளியூரில் கிளைகள் அமைக்கலாம். அல்லது வெளியூர் கம்பெனிகளுக்கு ஏஜென்ஸி உரிமைபெற்று தொழில் செய்யலாம். பூர்வீகம் சம்பந்தமான சொத்து விவகாரங்கள் எல்லாம் நீங்கள் விரும்பியபடி சாதகமாக நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சீராக செயல்படும். ஒருசிலருக்கு (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) திருமணத்தடை காணப்படலாம். அப்படிப்பட்டவர்கள் நாகதோஷ நிவர்த்திப் பரிகார பூஜை செய்துகொள்ளலாம். வசதி இருப்பவர்கள் ஹோமப் பூஜைகள் செய்துகொள்ளலாம். மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு நினைத்தவை நிறைவேறும் வாரம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்-

4, திருவோணம்- 1, 2.weekrasi

செவ்வாய்: பரணி- 2, 3.

புதன்: திருவோணம்- 3, 2.

குரு: திருவோணம்- 2.

சுக்கிரன்: பூராடம்- 4,

உத்திராடம்- 1, 2.

சனி: உத்திராடம்- 2, 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம்.

குரு அஸ்தமனம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

25-1-2021- மிதுனம்.

27-1-2021- கடகம்.

30-1-2021- சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பரணி). சுக்கிரன் ராசிக்கு திரிகோணமாக இருக்கிறார். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகும். வழக்கு, வில்லங்கம், வியாஜ்ஜியம் இவற்றில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். ஆன்மிக ஈடுபாடு அதிகமாகும். 10-ல் சூரியன் இருப்பதால் அரசு காரியங் களில் அனுகூலமான பலன்கள் ஏற்படலாம். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வோ அல்லது இடமாற்றமோ உண்டாகலாம். 9-க்குடைய குரு 10-ல், 10-க்குடைய சனியோடு கூடியிருப்பது தர்மகர்மாதிபதி யோகம். பலமுறை தர்மகர்மாதிபதி யோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். எனவே, உங்கள் செயல்பாடுகளில் தேக்கமோ தடையோ இருக்காது. காரியங்கள் நிறைவேறும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அகலும். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். செலவுக்கேற்ற வரவும் வரும். தொழில்துறையில் முன்னேற்றம் தென்படும். தாய்மாமன் அல்லது பாட்டனார் வழியில் சில சங்கடங்கள் உண்டாகலாம். உறவுகளில் பிரிவினை ஏற்படாது. சகோதர- சகோதரி வகையில் சுபமங்கள செலவுகளும், திடீர்ப் பயணங்களால் விரயங்களும் உண்டாகும். 10-க்குடைய சனி 10-ல் ஆட்சி. தொழில், வாழ்க்கை, ஜீவிதம் இவற்றில் குறைகளுக்கு இடமில்லை. என்றாலும் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத குறையோ கவலையோ தோன்றலாம். 2-ல் உள்ள ராகுவும் 8-ல் உள்ள கேதுவும் மனக் குறையையோ கவலையையோ உண்டாக்கினாலும், குரு ராகுவைப் பார்ப்பதால் கவலைகளை விலக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு. ஜென்ம ராசியில் ராகு. 7-ல் கேது. மிக எளிதாக வும் சுலபமாகவும் முடியவேண்டிய காரியங்கள் அத்தனை யும் கடுமையாகவும் சுமையாகவும் தோன்றும். என்றாலும், நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு ராசியைப் பார்ப்பதால், தடை தாமதமானாலும் நினைத்தப்படி நிறைவேறும். ஒரு சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோகம், தொழில்துறை அல்லது குடியிருப்பில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மாற்றங் கள் ஏற்பட இடமில்லை. என்றாலும் தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்படும். 9-ல் சூரியன், புதன், குரு, சனி சேர்க்கை இருப்பதால் இஷ்டதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். நீண்டகாலப் பிரார்த்தனைக் கடன்களை நிறைவேற்றலாம். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளும் சுபமங்கள விரயச்செலவுகளும் ஏற்படும். வேலைதேடி அலைவோர் வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் வெளியூரில் கிளைகள் அமைக்கலாம். அல்லது வெளியூர் கம்பெனிகளுக்கு ஏஜென்ஸி உரிமைபெற்று தொழில் செய்யலாம். பூர்வீகம் சம்பந்தமான சொத்து விவகாரங்கள் எல்லாம் நீங்கள் விரும்பியபடி சாதகமாக நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சீராக செயல்படும். ஒருசிலருக்கு (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) திருமணத்தடை காணப்படலாம். அப்படிப்பட்டவர்கள் நாகதோஷ நிவர்த்திப் பரிகார பூஜை செய்துகொள்ளலாம். வசதி இருப்பவர்கள் ஹோமப் பூஜைகள் செய்துகொள்ளலாம். மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு நினைத்தவை நிறைவேறும் வாரம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைகிறார். வக்ரமாகவும் இருக்கிறார். அவருடன் இணைந்த குரு அஸ்தமனமாக இருக்கிறார். ஒரு முறைக்குப் பலமுறை முயற்சிசெய்து ஒவ்வொரு காரியத்தையும் சாதிக்கவேண்டும். வேலைதேடி அலைவோர் எல்லா டெஸ்ட்களிலும் தேர்ச்சியடைந்தாலும் ஆர்டருக்கு காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டும். முதல் சுற்றில் வேலை ஆர்டர் வருமென்று எதிர்பார்த்திருப்போருக்கு வி.ஐ.பியின் சிபாரிசின் பேரில் மற்றவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, இவர்கள் வழிவிட்டு ஒதுங்கி நிற்கும் சூழ்நிலைகள் வரலாம். ராசிநாதன் புதன் 8-ல் மறைந்தாலும் வக்ரம் என்பதால் (வக்ரத்தில் உக்ரபலம்) காத்திருப்போர் பட்டியலில் உங்களுக்கு முதலிடம் கிடைக்கப் பெறும். உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் வேறு வேலைக்குப் போவதால் அந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். 11-ஆமிடத்துச் செவ்வாய் திரிகோணாதிபதியான சுக்கிரன் சாரம் பெறுவதால், தெய்வானுகூலமும் அதிர்ஷ்டமும் உங்களை வழிநடத்தி வெற்றிவாய்ப்பைத் தேடித்தரும். 8-ஆமிடம் ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் போன்ற பலன்களைக் குறித்தாலும் அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமுமாகும். 2, 5, 9, 11-ஆமிடத்திற்கு அதிபர்கள் சம்பந்தப்படும்போது 8-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். இதேபோல ஜனன ஜாதகத்திலும் 8-ஆமிடத்திற்கு 2, 5, 9, 11-ஆமிடம் சம்பந்தப்படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாகிவிடும். மேற்படி தசாபுக்திக் காலங்களில் இரட்டிப்பு அதிர்ஷ்ட யோகங்களை எதிர்பார்க்கலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 10-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் கடக ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 9-க்குடைய குருவும் நீசபங்க ராஜயோகம் பெற்று ராசியைப் பார்க்கிறார். ஆகவே கடக ராசிக்கார்களுக்கு செவ்வாயும் குருவும் மாறும்வரை தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அதனால் திரைப்படத்தில் பாடிய மாதிரி, "சக்கைப்போடு போடு ராஜா உன் காட்டிலே மழை பெய்யுது' என்பதுபோல உங்களுக்கு யோகமழை பெய்யப்போகிறது. ஜனன ஜாதகத்தில் 6, 8, 12-க்குடைய சம்பந்தம் இல்லாமல் 5, 9 என்ற திரிகோணாதிபதிகள் சம்பந்தம் பெற்ற தசாபுக்திகள் நடந்தால் அதிர்ஷ்ட மழை கொட்டும். 5-ல் கேது நின்றா லும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் கேதுவைப் பார்ப்பதால், உங்கள் கனவு களும் திட்டங்களும் எளிதாக ஈடேறும். ஒரு சின்னக் கதை. பத்து அடியில் புதையல் இருக்கிறது என்ற அறிவிப்பைப் பார்த்து, மூடியிருந்த பாறாங்கல்லை நகர்த்தி, எட்டடிவரை தோண்டி அலுத்துப்போய் விட்டுவிட்டு ஒருவன் போய் விடுவான். அடுத்து இன்னொருவன் மேலும் இரண்டடி தோண்டி அந்த புதையலை எடுத்து அனுபவிப்பான். அது போல மற்றவர்கள் கஷ்டப்பட்டு செய்த முயற்சிகளை விட்டுவிட்டுப்போய்விட, நீங்கள் அதில் முயற்சிசெய்து எஞ்சியுள்ள இரண்டடியைத் தோண்டி புதையலை எடுக்கலாம். இதுதான் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டுமென்பது. இந்த வார கிரக நிலைகள். தர்மகர்மாபதியோகம் எல்லாம் கடக ராசிக்கு சாதகமாக அமைகிறது.

weekrasi

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 6-ல் சூரியன், புதன், குரு, சனி நால்வரும் இணைகிறார்கள். சூரியன் ராசிநாதன். புதன் 2, 11-க்குடையவர். குரு- பஞ்சமாதிபதி. உங்களுடைய முயற்சிகளில் குறுக்கீடுகளும் தடைகளும் தாமதங்களும் காணப்பட்டாலும், உங்களுடைய வைராக்கியமும் விடாமுயற்சியும் வெற்றிவாய்ப்பை உண்டாக்கித் தரும். "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகாது' என்று சொல்லப்பட்டாலும், அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதுபோல உங்கள் வைராக்கியமும் உறுதிப்பாடும் உங்களுக்கு சாதகமாக அமையும்; வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும். அதற்கு உதாரணம் விசுவா மித்திரர்தான்! கௌசிகன் என்ற மன்னன் (விசுவாமித்திரர்) வசிஷ்டரிடமிருந்த காமதேனு வைக் கவர்வதற்காக (திருடு வதற்காக) முயன்று தோற்றுப் போனான். இது எதனால் என்று ஆராய்ந்து, வசிஷ்டரைப்போல் தவமிருந்து சித்தி பெற்றான். தன் விடாமுயற்சியால் தன் தேகத்தையே திரியாக்கி தீபமேற்றி ஈசனருள் பெற்றான். அவன் உருவாக்கியதே காயத்ரி மந்திரம். ஒவ்வொரு மந்திரத்திற்கும் ரிஷி, சந்தஸ், தேவதை என்று மூன்றுநிலை உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு ரிஷி- விசுவாமித்திரர்தான். 10-க்குடைய சுக்கிரன் திரிகோணம் பெறுகிறார். கேந்திராதிபதி திரிகோணம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகமாகும். (9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்றாலும், கேந்திராதிபதி திரிகோணம் பெறுவதும் தர்மகர்மாதிபதி யோகமாகும்).

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். வக்ரமாக இருக்கிறார். அவருடன் சூரியன், சனி, குரு மூவரும் சம்பந்தம். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். நினைத்தவை நிறைவேறும். லட்சியங்கள் வெற்றியடையும். மொத்தத்தில் இந்த வாரக் கதாநாயகர்களே நீங்கள்தான்! 9-ல் உள்ள ராகு- பூர்வீகச் சொத்து விவகாரங்களில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். உங்களைவிட பணபலம், படைபலம் பெற்ற எதிரி உங்கள் யோகத்திற்கு காலாவதியாவதால் எதிர்ப்பு, இடையூறு இல்லாத வெற்றியை எளிதாகச் சந்திக்கலாம். 8-ல் உள்ள செவ்வாய் 9-க்குடைய சுக்கிரன் சாரம் பெறுவதால் (பரணி) எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், எதிர்பாராத வெற்றிகளும் உங்களை முற்றுகையிடும். ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளரை எதிர்த்து பணபலம், படைபலம், செல்வாக்குமிக்க ஒருவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சாமான்ய வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு செல்வாக்கு பெற்ற வேட்பாளர் திடீர் மரணமடைந்தார். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மறுபடியும் தேர்தல் வந்தது. இறந்தவரின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரைவிட, இன்னொரு வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். "யோகக்காரனுக்கு ஆண்டவன் காவல்காரன்' என்பதுபோல வெற்றிபெற்ற வேட்பாளருக்கு காலம் அனுகூலமாக மாறிவிட்டது. கேந்திராதிபதியும் திரிகோணாதிபதியும் இணையும்போது இந்த யோகம் அமையும். தேக ஆரோக்கியம், பொருளாதாரம் இரண்டும் சிறப்பாக விளங்கும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கி றார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம். என்றாலும் சுக்கிரனுக்கு 6, 8, 12-ஆமிடம்தான் மறைவு ஸ்தானங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மற்ற கிரகங்களுக்கு 3-ல் மறைவு ஸ்தானம் என்றா லும், சுக்கிரனுக்கு அது ஏற்புடையது அல்ல. ஜோதிட சாஸ்திரத்தில் இது விதிவிலக்காக சொல்லப்படுகிறது. ராசிநாதன் 3-ல் இருக்கிறபோது அதை தைரிய, சகோதர, சகாய ஸ்தானம் என்று எடுத்துக்கொள்ளலாம். எவ்வளவு பெரிய சிக்கல்கள் நிறைந்த பிரச்சினைகளாக இருந்தாலும் நீங்கள் தீர்க்கமாக முடிவெடுத்து தைரியமாகச் செயல்படுவீர்கள். அதுமட்டு மல்ல; சகோதரகாரகன் செவ்வாய் 7-ல் ஆட்சிபெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் சகோதரவகையிலும், பெண்களுக்கு கணவன் வகையிலும், ஆண்களுக்கு மனைவிவகையிலும் நல்லுறவும் நட்பும் மலரும். "பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தொல்காப்பிய விதிப்பிடி பகை மறந்து உறவு கூடிவரும். 4-ல் சூரியன், புதன், குரு, சனி சேர்க்கையாகி 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையும் தொழில்துறையும் சிறப் பாக அமையும். செல்வச் சூழ்நிலையாகவும் அமையும். புதுமுயற்சிகள் வெற்றியடையும். ஒருசிலர் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம். அல்லது வர்த்தக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். கடகமும் மகரமும் ஜலராசி சம்பந்தப்பட்டது. கடகம்- நண்டு, மகரம்- திமிங்கலம். இரண்டும் நீரில் வாழ்வது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் ஆட்சி பெறுகிறார். தன் ராசியைத் தானே பார்க்கிறார். "புஜபல பராக்கிரமங்கள், போர்தனில் வெற்றி, ஆண்மை மிகமிக அவரவர்க்குத் தரும்' என்பது பாடல். நிலமகன் குஜன் எனப்படும் செவ்வாய் 6-ல் ஆட்சி பெறுவதால் சத்ரு ஜெயம், சகோர சகாயம், வீரியம், பராக்கிரமம், வெற்றி எல்லாம் உங்களை வந்தடையும். 6-ல் செவ்வாய் இருப்பது கடன் நிவர்த்தி. வரவேண்டிய கடனும் வசூலாகும். கொடுக்கவேண்டிய கடனும் ஓடியடையும். பொதுவாக செவ்வாய்க்கிழமை யாரிடமும் கைநீட்டி கடன் வாங்கக் கூடாது. தவிர்க்கமுடியாத பட்சம் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு மரப்பலகையில் அந்த பணத்தை வைக்கச்சொல்லி அந்த பணத்தை எடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் கடன் சீக்கிரம் ஓடியடையும். செவ்வாய்க் கிழமை கடன் அடைக்கலாம். ஜென்ம கேது, சப்தம ராகுவால் திருமணத்தடை ஏற்படலாம். ஜனன ஜாதகத்திலும் இப்படி நாகதோஷம் இருந்தால், பெண்களுக்கு 25 வயதுவரையிலும், ஆண்களுக்கு 35 வயது வரையிலும் திருமணம் தடைப்படும். அப்படிப்பட்டவர்கள் காமோகர்ஷண ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். திருமணத்தடை விலகும். நல்ல கணவன், நல்ல மனைவி அமைவார். வசதி வாய்ப்பில்லாதவர்கள் திருமணஞ்சேரி சென்று பூஜை செய்யலாம். 2-ல் சுக்கிரன்- திருமணம் செய்த வகையில் பொருள்வரவு, தனவரவு உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 2023 வரை ஏழரைச்சனி. முப்பது வயதிற்குட் பட்டவர்களுக்கு இது முதல் சுற்று. அதற்கு மேல் வயதானவர்களுக்கு இரண்டாம் சுற்று. அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் சுற்று. முதல் சுற்று மங்குசனி. இரண்டாம் சுற்று பொங்குசனி. மூன்றாம் சுற்று மரணச்சனி என்பார்கள். அதற்காக மூன்றாம் சுற்று நடப்பவர்களெல்லாம் மரணம் வருமென்று பயப்படவேண்டாம். கலைஞர் நான்கு சுற்று ஏழரைச்சனியை சந்தித்தவர். அவர் ரிஷப ராசி. கடக லக்னம். அட்டமாதி, ஆயுள் காரகனான சனி ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி ஆவார். அவர் கோவில், குளம், சாமி, வழிபாடு என்று போகாவிட்டாலும், அவர் மனைவி தயாளு அம்மாள் எல்லா கோவில்களுக்கும் சென்று பரிகாரபூஜை செய்து வந்தார்கள். மனைவி செய்த பூஜை கணவருக்கு பலத்தைக் கொடுத்தது. அதேபோல மாதா, பிதா செய்த பூஜை மக்களுக்கு பலத்தைத் தரும். தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடந்தாலும் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும் தான் பிரச்சினையாக இருக்கும். மற்றவர்களுக்கு சனி இனியவர். 6-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் இருப்பதால் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு கடன் பிரச்சினைகள் உருவாகலாம். ஒருசிலருக்கு உறவினர்கள் வகையில் வருத்தங்களை உண்டாக்கலாம். ராசிநாதன் குரு 2-ல் நீசபங்கம் பெறுவதால் ஆயுள், பொருளாதாரம், கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகள் எல்லாம் திருப்திகரமாக அமையும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 6-க்குடைய புதனும். 8-க்குடைய சூரியனும், 12-க்குடைய குருவும் சம்பந்தம். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை "எழுதி எழுதிமேலே செல்லும் விதியின் கை' என்று பாடினார். அதுபோல உங்களுக்கு எல்லாவற்றிலும் பிரச்சினைகளை சந்திக்கும்படியும் போராட்டங்களை சந்திக்கும்படியும் சூழ்நிலை அவையும். மிக எளிதாக முடியவேண்டிய காரியங்களும், நூல்கண்டு சிக்கல்போல மாறி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிவிடும். திருவிளையாடல் புராணத்தில் ஒரு நிகழ்ச்சி வரும். ஒரு வேடன் எய்த அம்பு மரக்கிளையில் சிக்கி நின்றுவிடுகிறது. அங்கு வந்த ஒரு கர்ப்பிணிப் பெண் மரத்தடியில் இளைப்பாறும்போது, காற்றடித்து கிளையில் சிக்கியிருந்த அம்பு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பாய்கிறது. இதற்கு யாரைக் குறை சொல்வது? வேடனைச் சொல்லுவதா- அம்பைச் சொல்லுவதா- அங்கு வந்து இளைப்பாறிய பெண்ணைச் சொல்வதா? இதற்கு பெயர்தான் விதி! அதே போல ஒரு திருமண நிகழ்ச்சியில் தாலிகட்டியவுடன் மணமகனுக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென்பது விதி. அங்குவந்த எமதூதர்கள் தாலிகட்டியதும் மணமகனை எப்படிக் கொல்வது என்று ஆராய்ச்சி செய்தார்கள். "அவர்கள் வீட்டில் கட்டியிருந்த காளை மாட்டின் கொம்பில் நீ அமர்ந்துகொள்; நான்கட்டை அவிழ்த்துவிடுகிறேன்' என்று ஒரு எமதூதன் சொல்வான். அதேபோல கட்டவிழ்ந்த மாடு மணமகனைக் குத்தி சாய்த்துவிடும். இதுவும் திருவிளையாடலில் வரும் நிகழ்ச்சி. விதி எந்த ரூபத்திலும் வரும். விதியை மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் விரயஸ்தானத் தில் இருக்கிறார். 12-ஆமிடம் மறைவு ஸ்தானமும்கூட. ராசிநாதன் மறைவது நல்லதல்ல என்றாலும், சனிக்கு 12-ஆமிடமும் சொந்த வீடு. அங்கு ஆட்சி என்பதால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். 2-க்குடைய குரு 12-ல் இருக்கிறார். பொருளாதாரத்தில் வரவும் செலவும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆதலால் சேமிப்புக்கு இடமிருக்காது. 12-ல் 7-க்குடைய சூரியனும், 5, 8-க்குடைய புதனும் மறைவு. கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு, வாக்குவாதம் உண்டாகலாம். 8-ஆமிடத்தை குரு பார்க்கி றார். திடீர் யோகமும் ஏற்படலாம். 8-க்குடைய புதன் வக்ரமாகி குருவுடன் இணைவது வக்ரத்தில் உக்ரபலமாக செயல்படும். எது எப்படி இருந்தாலும் 3-க்குடைய செவ்வாய் ஆட்சி. சுக்கிரன் சாரம். (பரணி). எதையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சகோதரவகையிலும் நண்பர்களாலும் சகாயம், ஆதரவு, அனுகூலம் உண்டாகலாம். சுபமங்கள விரயச் செலவுகளும் ஏற்படும். சிலர் தொழில்துறையில் உடன்பிறப்புகளையே கூட்டணி சேர்த்து தொழில் புரியும் சூழல்கள் அமையலாம். அது ஆதாயமும் தரும். 4-ஆமிடத்து ராகு தாய் சுகத்தில் சௌகரியக் குறைவை ஏற்படுத்தலாம். செவ்வாய் ராகுவுடன் இணையும்போது சிறு அறுவை சிகிச்சைக்கும் இடமுண்டு. குரு பார்வையால் பெரிய பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கும் அவசியமும் உண்டாகலாம். ஜனன ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து நடந்துகொள்ளவும்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு இந்த வாரம் யோகமான வாரம். கடந்த வாரம் போலவே 11-ல் குரு, சனி, சூரியன், புதன் சேர்க்கை. ஆக அனுகூலமான வாரமும் ஆதாயமான வாரமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. சூரியன் 11-ல் இருப்பது நல்ல பலனைத் தரும். ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டுமென்றால், அந்த காரியத்தை ஆரம்பிக்கும் நேரத்தை சூரியன் 11-ல் இருக்குமாறு அமைத்துக் கொடுத்தால் அந்தக் காரியம் தடையின்றி நிகழும். 2-க்குடைய செவ்வாய் 2-ல் ஆட்சி. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். 9-ஆமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் பூமி, வீடு, கட்டட சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் அமையும். செவ்வாய் 3-க்குடைய சுக்கிரன் சாரமான பரணியில் சஞ்சாரம் செய்கிறார். கட்டடத்தொழில் புரிகிறவர்கள் கூட்டணி சேர்த்தும் பணிபுரியலாம். நம்பிக்கைக்குரியவர்களின் கூட்டணியும் அமையும். உங்களது நடவடிக்கைகளிலும் நல்ல மாற்றங்களை நிகழ்த்துவது அவசியம். உடன்பிறப்புகளால் சங்கடமும் சஞ்சலமும் உண்டாகும். தகப்பனாருக்கு தேகநலனில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு தகப்பனாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்திருக்கும் சூழ்நிலையும் உருவாகலாம். 9-ஆமிடத்து கேதுவும் அதற்கு ஒரு காரணமாக அமையும். 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகளால் ஆதாயமும் உண்டாகும். அவர்களுக்கு சுபகாரிய நிகழ்வுகளும் ஏற்படலாம். தாய்மாமன் வழியில் சில இழப்பீடுகளை சந்திக்கநேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள்.

bala290121
இதையும் படியுங்கள்
Subscribe