ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: மகம்- 2, 3, 4.
செவ்வாய்: அஸ்வினி- 2.
புதன்: பூரம்- 2, 3, 4, உத்திரம்- 1, 2.
குரு: பூராடம்- 4.
சுக்கிரன்: புனர்பூசம்- 1, 2, 3.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 3.
கேது: மூலம்- 1.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
குரு, சனி வக்ரம்.
29-8-2020- கன்னிப் புதன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
23-8-2020- துலாம்.
25-8-2020- விருச்சிகம்.
27-8-2020- தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்; கேதுவின் சாரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குருவின் பார்வை ராசிக்கும் ராசிநாதனுக்கும் கிடைக்கிறது. உங்கள் முயற்சிகள் செயல்வடிவம் பெறும். அதேபோல, 9-ஆமிட குருவும் 10-ஆமிட சனியும் 9-ல் சேர்ந் திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 5-ல் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் புதன் சேர்ந்திருப்பது ஒருவகை யில் குற்றமெனினும், குரு அவர்களைப் பார்ப்பதால் தோஷநிவர்த்தியாகிறது. 3, 6-க்குரிய புதன் அஸ்தமனமடைந்து 5-ல் இருப்பது பிள்ளைகள்வகையில் தொல்லைகள் என்பதைக் குறிக்கிறது. ஆனால், குரு பார்வையால் அதை வம்புத் தொல்லையாக எடுத்துக்கொள்ளாமல் அன்புத் தொல்லையாக எடுத்துக்கொள்ளலாம். 2, 7-க்குரிய சுக்கிரன் 3-ல் மறைந்தாலும் தன் ஸ்தானத்துக்கு திரிகோணம் என்பதால், ஆண்களுக்கு மனை வியாலும் பெண்களுக்கு கணவராலும் நன்மைகள் உண்டாகும். ராகு- கேது சம்பந்தம் சுக்கிரனுக்கு இருந்தாலும்- குரு பார்வையிருப்பதாலும், சுக்கிரன் குருவின் சாரமான புனர்பூசத்தில் இருப்பதாலும் தோஷநிவர்த்தியாகிறது. ஆயுள் தீர்க்கம், ஆரோக்கியம் தெளிவு, கணவன்- மனைவி ஒற்றுமை, நல்லுறவு, பரஸ்பர அன்பு எல்லாம் சிறப்பாக அமையும். பொருளாதாரப் பாதிப்புக்கு இடமில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக் கிறார்; ராகுவோடு சம்பந்தம். குரு, சனி, கேது பார்வை. 8-ஆமிடம் ஆயுள் ஸ்தானம், மரணத்தைக் குறிக்கும் ஸ்தானம் என்றாலும், அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமுமாகும். திருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரிவது. அதிர்ஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. மரணமும் அதிர்ஷ்டமும் எதிர்பாராதபடிதான் வரும். 2, 9, 11-க்குரியவரோடு 8-ஆமிடம் சம்பந்தப் படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாகவும் செயல்படும். 6, 12-க்குரியவரோடு சம்பந்தப் படும்போது 8-ஆமிடம் ஏமாற்றம், இழப்பு, விரய ஸ்தானமாக செயல்படும். ஆக, 6, 8, 12 துர்ஸ்தானங்கள் எனினும் சிலசமயம் அவை நற்ஸ்தானங்களாகவும் மாறும். நல்லதும் கெட்டதும் வெவ்வேறாக செயல்படாது. ஒன்றினுள் ஒன்று இணைந்து செயல்படும். அதாவது, நல்லதிலும் கெட்டது உண்டு. கெட்டதிலும் நல்லது உண்டு. அஷ்டமி திதி ஆகாது என சாஸ்திரம் சொன்னாலும், அஷ்டமியில் தங்க நகைகள் வாங்கினாலும் அது பெருகும். ஒரு அஷ்டமியில் பிறந்த குழந்தையின் பால் தேவைக்காக ஒருவர் மாடு வாங்கினார். அவர் மனைவி அதைப் பராமரித்த தன்மையில் ஆர்வம்கொண்டு மேலும் இரண்டு மாடுகள் வாங்கிக் கவனித்தார்.பால் வியா பாரமும் செய்தார். அஷ்டமியில் வைத்த
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: மகம்- 2, 3, 4.
செவ்வாய்: அஸ்வினி- 2.
புதன்: பூரம்- 2, 3, 4, உத்திரம்- 1, 2.
குரு: பூராடம்- 4.
சுக்கிரன்: புனர்பூசம்- 1, 2, 3.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 3.
கேது: மூலம்- 1.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
குரு, சனி வக்ரம்.
29-8-2020- கன்னிப் புதன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
23-8-2020- துலாம்.
25-8-2020- விருச்சிகம்.
27-8-2020- தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்; கேதுவின் சாரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குருவின் பார்வை ராசிக்கும் ராசிநாதனுக்கும் கிடைக்கிறது. உங்கள் முயற்சிகள் செயல்வடிவம் பெறும். அதேபோல, 9-ஆமிட குருவும் 10-ஆமிட சனியும் 9-ல் சேர்ந் திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 5-ல் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் புதன் சேர்ந்திருப்பது ஒருவகை யில் குற்றமெனினும், குரு அவர்களைப் பார்ப்பதால் தோஷநிவர்த்தியாகிறது. 3, 6-க்குரிய புதன் அஸ்தமனமடைந்து 5-ல் இருப்பது பிள்ளைகள்வகையில் தொல்லைகள் என்பதைக் குறிக்கிறது. ஆனால், குரு பார்வையால் அதை வம்புத் தொல்லையாக எடுத்துக்கொள்ளாமல் அன்புத் தொல்லையாக எடுத்துக்கொள்ளலாம். 2, 7-க்குரிய சுக்கிரன் 3-ல் மறைந்தாலும் தன் ஸ்தானத்துக்கு திரிகோணம் என்பதால், ஆண்களுக்கு மனை வியாலும் பெண்களுக்கு கணவராலும் நன்மைகள் உண்டாகும். ராகு- கேது சம்பந்தம் சுக்கிரனுக்கு இருந்தாலும்- குரு பார்வையிருப்பதாலும், சுக்கிரன் குருவின் சாரமான புனர்பூசத்தில் இருப்பதாலும் தோஷநிவர்த்தியாகிறது. ஆயுள் தீர்க்கம், ஆரோக்கியம் தெளிவு, கணவன்- மனைவி ஒற்றுமை, நல்லுறவு, பரஸ்பர அன்பு எல்லாம் சிறப்பாக அமையும். பொருளாதாரப் பாதிப்புக்கு இடமில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக் கிறார்; ராகுவோடு சம்பந்தம். குரு, சனி, கேது பார்வை. 8-ஆமிடம் ஆயுள் ஸ்தானம், மரணத்தைக் குறிக்கும் ஸ்தானம் என்றாலும், அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமுமாகும். திருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரிவது. அதிர்ஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. மரணமும் அதிர்ஷ்டமும் எதிர்பாராதபடிதான் வரும். 2, 9, 11-க்குரியவரோடு 8-ஆமிடம் சம்பந்தப் படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாகவும் செயல்படும். 6, 12-க்குரியவரோடு சம்பந்தப் படும்போது 8-ஆமிடம் ஏமாற்றம், இழப்பு, விரய ஸ்தானமாக செயல்படும். ஆக, 6, 8, 12 துர்ஸ்தானங்கள் எனினும் சிலசமயம் அவை நற்ஸ்தானங்களாகவும் மாறும். நல்லதும் கெட்டதும் வெவ்வேறாக செயல்படாது. ஒன்றினுள் ஒன்று இணைந்து செயல்படும். அதாவது, நல்லதிலும் கெட்டது உண்டு. கெட்டதிலும் நல்லது உண்டு. அஷ்டமி திதி ஆகாது என சாஸ்திரம் சொன்னாலும், அஷ்டமியில் தங்க நகைகள் வாங்கினாலும் அது பெருகும். ஒரு அஷ்டமியில் பிறந்த குழந்தையின் பால் தேவைக்காக ஒருவர் மாடு வாங்கினார். அவர் மனைவி அதைப் பராமரித்த தன்மையில் ஆர்வம்கொண்டு மேலும் இரண்டு மாடுகள் வாங்கிக் கவனித்தார்.பால் வியா பாரமும் செய்தார். அஷ்டமியில் வைத்தியம் பார்க்கக்கூடாது. வழக்கு, வில்லங்கங்களில் ஈடுபடக்கூடாது.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 3-ல் மறைந் தாலும், வீடுகொடுத்த சூரியனுடன் இணைந்திருப்பதாலும்- 7-ல் ஆட்சிபெற்ற குருவின் பார்வையைப் பெறுவதாலும் மறைவு தோஷப் பாதிப்பில்லை. பொதுவாக, "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பார்கள். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் நன்மைகள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணத் தடை உண்டாகும். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் மனைவிவகையில் சொத்துசுகங்கள் வந்துசேரும். ஜாதக தசாபுக்திகள் 6, 8, 12-க்குரியவர்கள் சம்பந்தமிருந்தால் எதிர்பாராத வைத்தியச் செலவுகள் அல்லது பொருள் இழப்புகள் அல்லது உறவினர் பகையுண்டாகும். என்றாலும், ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் "கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்' என்ற பழமொழிப்படி, பிரச்சினைகள் ஓடியடையும். 9-க்குரிய சனியும் 10-க்குரிய குருவும் இணைந்து 7-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். சிலருக்கு, பெண்ணாக இருந்தால் கணவர்வகையிலும், ஆணாக இருந்தால் மனைவிவகையிலும் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் அமையும். வேலை தேடியலையும் ஆண் அல்லது பெண்களுக்கு நல்ல தகவல் வாய்ப்புகள் வந்துசேரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 10-ல் 10-க்குரிய செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்; உங்கள் ராசியைப் பார்க்கிறார்; 4, 5-ஆமிடங்களைப் பார்க்கிறார். 9-க்குரிய குரு 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று 10-ஆமிடத்தையும், 10-க்குரிய செவ்வாயையும் பார்க்கிறார். எனவே, உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அக்னி சம்பந்தப்பட்ட தொழில், கட்டட ஒப்பந்தம் போன்ற தொழில் செய்வோருக்கும் இக்காலம் நற்காலமாக அமைகிறது; பொற்காலமாகவும் அமையும். 6-ல் குரு, சனி, கேது சம்பந்தமிருப்பதால் சிலருக்கு ஆரோக் கியக்குறைவும், சிறுசிறு வைத்தியச் செலவும் ஏற்பட்டாலும் பாதிப்புக்கு இடமேற்படாது; பயப்பட வேண்டாம். 6-ஆமிடம் என்பது எதிரி, கடன், நோய் என சொல்லப்பட்டாலும், 10-ஆமிடமான வாழ்க்கை, தொழில் ஸ்தானத்துக்கு 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானமாகும். எனவே, பதவி உயர்வு, தொழில் மேன்மை, புதிய தொழில் தொடக்கம், வாழ்க்கை உயர்வு, வருமானப் பெருக்கம் போன்ற நன்மைகளையெல்லாம் அடையலாம். 6-ல் குரு, சனி, கேது சேர்க்கை இருப்பதால், சிலர் நற்காரியங்களுக்காகக் கடன் வாங்கலாம். அது சுபக்கடன் என எடுத்துக்கொள்ளலாம். சிலர் சிறுசேமிப்பு அல்லது சீட்டு, அல்லது காப்பீட்டுத் திட்டம், வைப்புத்தொகை போன்றவகையில் முதலீடு செய்யலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2, 11-க்குரிய புதன் சம்பந்தம். 5-ல் ஆட்சிபெற்ற குரு பார்க்கிறார். இது சிறப்புதானெனினும், அதைவிட சிறப்பு 9-க்குரிய செவ்வாயை குரு பார்ப்பது. அதாவது, 9-ஆமிடம் ஒரு திரிகோண ஸ்தானம்; அதற்குரியவர் செவ்வாய். 5-ஆமிடம் மற்றொரு திரிகோண ஸ்தானம். அதற்குரியவர் குரு. ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணத்தைப் பார்ப்பது சிறப்பு. திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். எல்லா மனிதர்களுக்கும் லட்சுமி கடாட்சம் அவசியமாகும். அந்த லட்சுமி கடாட்சத்தை அனுபவிப்பதற்கு விஷ்ணு அருள் அவசியம். இதுதான் "கொடுப்பினை' என சொல்வப்படுவதுண்டு. எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டுமல்லவா? ஹரிஹரன், புக்கன் என்ற இரு பிரம்மச்சாரிகள் வறுமையில் வாடினர். வறுமை விலகக் கடுந் தவமிருந்தனர். அவர்கள்முன் தோன்றிய லட்சுமி,""இந்த ஜென்மா வில் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது. அடுத்த ஜென்மாவில், நீங்கள் செய்த தவத்தின் பலனை அடையலாம்'' என்றார். அவர்கள் மனமுடைந்துவிட்டார்கள். அவர்களின் குருநாதர்,""இதற்காக நீங்கள் சாகவேண்டுமென்பதில்லை. சந்நியாசம் வாங்கிக்கொண்டால் மறுஜென்மம் அடைந்தமாதிரிதான்'' என்றார். சந்நியாசம் வாங்கியதும் செல்வத்தின்மீதிருந்த பற்று நீங்கிவிட்டது. அந்த செல்வத்தைக் கொண்டு ஆந்திர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 12-ல் மறைவு. அவரே 10-க்குரியவருமா வார். 10-ல் ராகு இருப்பதும்- சனி, கேது பார்ப்பதும் தொழில், வாழ்க்கை இரண்டிலும் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தும். என்றா லும் 9-க்குரிய சுக்கிரன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால், இடையூறுகளும் இன்னல்களும், தடைகளும் தாமதங்களும் சூரியனைக்கண்ட பனிபோல விலகியோடிவிடும். வேலையில்லா தோருக்கு வேலையுண்டாகும். பதவியிலிருப்போருக்குப் பதவி உயர்வும் தேடிவரும் காலம். சிலர் சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கி முதலீடுசெய்யலாம். ஏற்றுமதி- இறக்குமதி அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படும். அதற்கான சொந்த முதலீடு குறைவாக இருந்தாலும் அரசுக்கடன், வங்கிக்கடன் உதவி பெற்று ஆர்வத்தோடு செயல்படுத்தலாம். தளர்வில்லாத உங்கள் முயற்சிகள் வளர்ச்சியடையும். வருமானம் பெருகும். வட்டியும் முதலுமாகக் கடன்களை அடைக்கலாம். "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பர் குறையாகக் கூறினாலும், இன்றைய உலகில் கடன் வாங்கியே தொழிலைப் பெருக்கிக் கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு சாரம்கொடுத்த குரு (புனர்பூசம்) ஆட்சிபெற்று சுக்கிரனைப் பார்க்கிறார். எனவே, உங்களுடைய முயற்சிகளில் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். சுக்கிரனுடன் ராகு சேர்ந்திருக்க, சனியும் கேதுவும் பார்ப்பதால், எதிர்பாராத இடையூறுகளும் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்பட்டாலும், குரு பார்வை இருப்பதால் தடைகளைக் கடந்து செயல்படலாம்; முன்னேற்றப்பாதையில் பயணிக்கலாம், வெற்றிக்கனியைப் பறிக்கலாம். அதாவது, ராசிநாதன் (சுக்கிரன்) நின்ற இடத்துக்கு 9-க்குரிய சனியும், 10-க்குரிய குருவும் இணைந்து பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால், தடைகள் உடைபடும், தாமதங்கள் பொடியாகும். போஜ மகாராஜன் ஆத்மார்த்தமாக அஷ்டலட்சுமி வழிபாடு செய்தான். ஜாதகரீதியாக அவனுக்கு ஏழரைச்சனி வந்தது. உடனே, ஆதிலட்சுமி, ""உனக்கு ஏழரைச்சனி வரப்போவதால் கெட்டநேரம் தொடங்கும். அக்காலம் உன்னைவிட்டு நாங்கள் விலகியிருக்கும் சூழ்நிலை வருகிறது. இருந்தாலும், உன்னுடைய ஆத்மார்த்தமான பூஜையைக் கருதி அஷ்டலட்சுமிகளுள் ஒரு லட்சுமியை உன்னிடம்விட்டுச்செல்ல விரும்புகிறோம். யார் வேண்டும்?'' என்று கேட்க, போஜன், ""தைரிய லட்சுமி மட்டுமிருந்தால் போதும்'' என்று பதில் கூறினான். அதற்கு ஆதிலட்சுமி,""தைரிய லட்சுமி இருக்கு மிடத்தில் மற்ற ஏழு லட்சுமிகளும் இருப்பதாக எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு'' என்று அஷ்டலட்சுமிகளும் போஜனின் பூஜையறையில் வாசம் செய்தார்களாம். இதனால்தான், "தைரியம் புருஷ லட்சணம்' என்றார்கள். தைரியமிருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெறுகிறார். அத்துடன் 8-ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்க்கிறார். ஒரு ஜாதகத்தில் ராசிநாதன் ராசியைப் பார்த்தாலும்; லக்னநாதன் லக்னத் தைப் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு நூற்றுக்கு நூறு பலமுண்டாகும். ராசிநா தனோ லக்னநாதனோ 6, 8, 12-ல் மறைந்தால் சிறு துரும்பைக்கூட அசைக்கமுடியாது. அதேபோல, ஒரு பாவாதிபதி தன் பாவத்தைப் பார்த்தாலும் அந்த பாவம் பலமடையும். பாவம், பாவாதிபதி, பாவகாரன் என மூன்றுண்டு. இந்த மூன்றும் பலம்பெற் றால் அந்த ஜாதகருக்கு எந்தக் குறையும் இருக்காது. ராசிநாதனோ லக்னநாதனோ இவர்களுடன் சம்பந்தப்பட்டால் அதை அனுபவிக்கும் யோகமுண்டு. உதாரணமாக, ஒருவருக்கு விலையுயர்ந்த கார் சொந்தமாக இருந்தாலும், டாக்டர் அறிவுரைப்படி காரில் பயணம் செய்யமுடியாத அவல நிலை ஏற்படும். அதேசமயம், கார் டிரைவர் தன் குடும்பத்தை ஏற்றிக்கொண்டு ரகசியமாக அழைத்துப்போவார். அவருக்கு அந்த பயண யோகம் அமைகிறதென அர்த்தம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசியில் தனுசு ராசிநாதன் குரு ஆட்சியாகவும் வக்ரமாகவும் இருக்கிறார். அவருடன் சனியும் கேதுவும் சம்பந்தம்; சுக்கிரன், ராகுவும் பார்வை. இங்கு சுக்கிரன் பார்வை யோகமான பார்வை. ராகு- கேது, சனி சம்பந்தம் தேவையற்ற கற்பனைகளையும், வேண்டாத விமர்சனங்களையும் உருவாக்கும் நிலை. வசதிவாய்ப்பு சௌகர்யங்களுக்குக் குறைவில்லை. அதேசமயம், ராகு- கேது சம்பந்தம் "திருவிளையாடல்' திரைப்படத்தில் "தருமி' சொன்ன வசனம்போல, ""பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் உண்டு; குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் உண்டு'' என்பதுபோல, மற்றவர்களின் குறைதான் பெரிதாகத் தோன்றும். உங்கள் உடனிருப்போருக்கும் அது பழக்கமான சமாச்சாரமாகிவிடும். இதைப் பெரிய விஷயமாகக் கருதமாட்டார்கள். அதேபோல, எல்லா சமயங்களிலும் எல்லா விஷயங்களிலும் உங்கள் கணிப்பு நூற்றுக்கு நூறு சரியாக அமையும்.குடும்பத்திலுள்ளவர்கள் அதை மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்வதிலும் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து ஒதுக்குவதும் இருதரப்பு செயல்கள் இருந்தாலும், நீங்கள் அதைப் பொருட்படுத்தமாட்டீர்கள். யாருக்காகவும் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டீர்கள்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். அவருடன் குரு, கேது சம்பந்தம்; சுக்கிரன், ராகு பார்வை. தவிர்க்கமுடியாத பயணங்கள் உருவாகும். அலைச்சலும் திரிச்சலும் அதிகமாக இருக்கும். அதனால் பலனும் பயனும் உண்டாகும். சூரியனும் புதனும் 8-ல் மறை கிறார்கள். தகப்பனார்வழியில் எதிர்பாராத வைத்தியச் செலவுகள் உருவாகலாம். அல்லது பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் வருத்தத்தை உண்டாக்கலாம். சிலருக்கு இடத்தைவிட்டு மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 4-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதாலும், அவரை குரு பார்ப்பதாலும் மாற்றங்கள் உண்டாகும். சிலர் தொழில் மாற்றத்தை சந்திக்கலாம். எந்த மாற்றமாக இருந்தாலும் அது முன்னேற்றமாகவே அமையும்; ஏற்றமான மாற்றமாகவே அமையும். 6-ல் சுக்கிரன், ராகு சேர்க்கையால் மனைவி அல்லது பிள்ளைகள்வகையில் தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு சொத்துப் பிரச்சினைகள், பங்குபாகப் பிரச்சினைகள் தோன்றலாம். அம்மாதிரி சந்தர்ப் பங்களில் "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்கிற தத்துவத்தைக் கடைப் பிடித்து, அனுசரிப்போடு நடந்துகொண்டால் விவகாரத்துக்கு இடமிருக்காது. பகை அல்லது வருத்தமும் இருக்காது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கி றார். 11-க்குரிய குரு ஆட்சிபெற்று 3, 5, 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் தைரிய, சகோதர, சகாய ஸ்தானம், நண்பர்கள் ஸ்தானம். 5-ஆமிடம் பிள்ளைகள் ஸ்தானம், 7-ஆமிடம் கணவர் அல்லது மனைவி ஸ்தானம். இந்த மூன்று அடிப்படையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் (குடும்பத்தினர்) அனுசரிப்பும் ஆறுதலாக அமையும். வில்லங்கம், விவகாரம், வழக்கு போன்றவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு அமையும். 11-ஆமிடம் என்பது 6-ஆமிடத்துக்கு 6-ஆமிடம். அதனால், போட்டி, பொறாமை, எதிரி, இடையூறு, கடன், வைத்தியச்செல வாகிய 6-ஆமிடத்துப் பலன்கள் அனைத்தும் வேரோடு விலகிவிடும். எதிரிகள் அனைவரும் உதிரிகளாகிவிடுவர். போட்டியாளர்கள் புதைந்துபோவார்கள். சிலரின் அனுபவத்தில் "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' என்கிற தத்துவப்படி, கூட்டணி சேர்த்துக்கொண்டு எதிரியை வீழ்த்திவிடலாம். முயற்சிகளில் தளர்விருக்காது. பொருளாதாரத்திலும் பணப்புழக்கத்திலும் குறையிருக்காது. எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த உதவிகளெல்லாம் அமையும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் இருக்கிறார்; பலம்பெறுகிறார். அவருடன் 11-க்குரிய சனி சம்பந்தம். இதனால் எந்தத் தளர்வும் இருக்காது. வளர்ச்சிமேல் வளர்ச்சி உண்டாகும். சுற்றிநின்று உங்களைத் தளர்வடையச் செய்த சுற்றத்தார்களும் உங்களைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். அதனால் உங்கள் முன்னேற்றமும் வெற்றியும் முத்திரை பதிக்கும். எதிர்கால வாழ்வுக்கும் வருமா னத்துக்கும் பல வழிகள் தெரிந்தாலும் எதில் முழுகவனம் செலுத்துவது, எதில் முழுவேகத்தோடு செயல்படுத்துவது என்கிற குழப்பமும் தயக்கமும் மயக்கமும் சிலசமயம் உருவாகும். அந்த தயக் கத்துக்கும் மயக்கத்துக்கும் குழப்பத்துக்கும் ராகுவும் கேதுவும்தான் காரணம். 10-க்குரிய குரு வக்ரமாக ஆட்சிபெறுவதால் மற்றவரின் கருத்துகளுக்கும், ஆலோசனை களுக்கும் முக்கியத்துவம் தராமல், உங்கள் சொந்தக் கருத்தின்படியே செயல்பட வேண்டும். கவியரசர் கண்ணதாசன், "ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றிடுவேன் சாதித் திடுவேன் நில்லேன் அஞ்சேன்' என்று பாடினார். அதுமாதிரி, உங்கள் கருத்து உண்மையென உணர்ந்தால் அதனை உறுதியோடு செயல்படுத்த வேண்டும்.