ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: கார்த்திகை- 4, ரோகிணி- 1, 2.

செவ்வாய்: பூனர்பூசம்- 1, 2, 3.

புதன்: ரோகிணி- 3, 2.

Advertisment

குரு: சதயம்- 1.

சுக்கிரன்: ரோகிணி- 4, மிருகசீரிடம்- 1, 2, 3.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

23-5-2021- துலாம்.

25-5-2021- விருச்சிகம்.

27-5-2021- தனுசு.

thisweek

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந் தாலும் பாக்கியாதிபதி குருவின் சாரம்பெற்று (புனர் பூசம்) குருவால் பார்க்கப் படுகிறார். செவ்வாய்க்கு மறைவு தோஷமில்லை. செவ்வாயின் பார்வை 4-ஆமிடம், 9-ஆமிடம், 10-ஆமிடங்களுக்குக் கிடைக்கிறது. எனவே சகோதர ஒற்றுமை, சகோதர சகாயம், நண்பர்களின் நல்லாதரவு போன்ற நற்பலன்களையெல்லாம் எதிர்பார்க்கலாம். தைரிய ஸ்தானத்தில் தைரிய காரகன் செவ்வாய் இருப்பதால், தைரியமும் துணிச்சலும் உங்களை வழிநடத்தும். சக்திக்கு மீறிய காரியங் களையும் ஜெயிக்கவைக்கும். 3-ஆமிடம் சகோதர ஸ்தா னம், நண்பர்கள் ஸ்தானம். 3-ஆமிடத்துக்கு 10-க்குடைய குரு 9-ல் நின்று 3-ஆமிடத் தைப் பார்ப்பதால் குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை எல்லாவற்றிலும் துணிவாக வும் தன்னம்பிக்கையோடும் தைரியமாக செயல்பட்டு வெற்றியை நிலைநாட்டு வீர்கள். இதுவரை பகைமை பாராட்டிய பங்காளிகளும், உங்களை ஓரங்கட்டிய உறவினர்களும் உங்களின் தேவையின் முக்கியத்துவம் தெரிந்து தேடிவந்து கூடு வார்கள். குலதெய்வ வழி பாட்டிலும், சாதி, சமய சங்க நடவடிக்கைகளிலும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிருத்தி உங்களைப் பின்பற்றி வருவார்கள். அதனால் நீங்களும் பழைய பகைகளை மறந்து கைகோர்த்து செயல் பட்டு சிறப்படையலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். தொடக்கத்தில் சந்திரன் சாரத்திலும், பிறகு செவ்வாயின் சாரத்தில் சஞ்சாரம். செவ்வாய் 7, 12-க்குடையவர். அவர் குடும்ப ஸ்தானத்தில் பலம்பெறுகிறார். செவ்வாய்க்கு 9-ல் குரு நின்று செவ்வாயைப் பார்க்கிறார். திருமணத்தடை விலகும். புத்திரதோஷம் நீங்கும். நல்ல மனைவி, மக்கள் யோகமும் அமையும். ஜென்ம ராகு- சப்தம கேது என்ற நாக தோஷமும் விலகும். 10-ல் குரு நிற்பதால் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை யோகம் அமையும். உள்ளூரில் பதவியில் இருப்பவருக்கு பதவி உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். விவரமறிந்த நாள்முதல் சம்பளத்திற்கு வேலைபார்த்து வந்தவர்கள் இக்காலகட்டத்தில் முதலீடு தேடி சொந்தத் தொழில் ஆரம்பித்து முதலாளியாகலாம். கூட்டுத் தொழில் செய்கிறவர் களுக்கு தனித்தொழில் அமையும் வாய்ப்பு உருவாகும். முதலீடு கிடைப்பதற்கும் யோகமுண்டு. ஒருசிலர் "ஒர்க்கிங் பார்ட்னர்' என்ற அடிப்படையில் கூட்டுத்தொழில் ஆரம்பிக்கலாம். ராகு- கேது, சனி சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு வெளிநாடு சென்று வேலைபார்க்கும் யோகமும், சம்பாதிக்கும் யோகமும் அமையும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ஸ்தானத் துக்கு 12-ல் மறைந்தாலும், இரண்டுக்குடைய சந்திரன் சாரம் பெறுவதாலும் அந்த வீட்டுக்குடைய சுக்கிரன் சம்பந்தம் பெறுவதாலும் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்வதால் தோல்வி ஏற்பட வாய்ப்பில்லை. தொட்டதெல்லாம் வெற்றிபெறும் சூழல் உருவாகும். 10-க்குடைய குரு ஒன்பதில் இருப்பதாலும், மிதுன ராசியை குரு பார்ப்பதாலும் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தி வெற்றியைத் தேடித்தரும். அட்ட மத்துச் சனி நடந்தாலும், சனி ஆட்சிபெற்றவர் என்பதாலும் அந்த சனியை- சனி நின்ற ராசிக்கு உச்சநாதனாகிய செவ்வாய் பார்ப்பதாலும் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, காலமும் கிரகமும் உங்களுக்கு அனுகூலமாக அமைந்து எல்லா வகையிலும் எதிர்பாராத வெற்றிகளைத் தரும். சிலருக்கு குடியிருப்பு ரீதியாகவும் தொழில்ரீதியாகவும் மாற்றங் கள் ஏற்பட்டாலும், அந்த மாற்றங்கள் அனைத்தும் சமுதாயத்தில் முன்னேற்றமான மாற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். பொதுவாக எந்த ஒரு ராசியையும் அல்லது லக்கத்தையும் குரு பார்ப்பது வெற்றிக்கு அறிகுறியாகும். அதிலும் மிதுன ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகம்பெறும் குரு பார்வை, ஈடு இணையில்லாத வெற்றியையும் எதிர்ப்பில்லாத வெற்றியையும் குறிக்கும். தேகநலம் நன்றாக இருக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு எட்டில் மறைவது ஒருவகையில் நல்லது; இன்னொருவகையில் கெட்டது. 6-க்குடையவர் எட்டில் மறைவது நல்லது; 9-க்குடையவர் எட்டில் மறைவது கெட்டது. குருவுக்கு சாரம்கொடுத்த ராகு (சதயம் 1-ல் குரு), குருவுக்கு வீடுகொடுத்த சனி இருவரும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக நிற்பதால் குருவின் பலம் மறைந்திருந்தாலும் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். இராமாயணத்தில் வாலி-யை இராமன் மறைந்திருந்து தாக்கி வெற்றிபெற்றார். பொதுவாக இராமபாணம் வீணாவதில்லை. எதிரியை வதம் செய்துவிட்டு இராமர் விட்ட அம்பு மீண்டும் அவரிடமே திரும்ப வந்து விடும். ஆனால் வாலி-யை வதம் செய்த இராமபாணம் வாலி-யின் நெஞ்சிலேயே தங்கிவிட்டது; இராமரிடம் திரும்பவில்லை. அப்போ தைய இராமரின் வெற்றி பாராட்டத்தக்கதல்ல என்பது நிரூபணமாகிவிட்டது. அந்த சமயத் தில் வாலி, "அண்ணனுக்கும் தம்பிக்குமுள்ள சண்டையில் நீ ஏன் ராமா ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டாய்?'' என்று வா-லி கேட்ட கேள்விக்கு இராமனால் பதில்சொல்ல முடியவில்லை. "சீதையைப் பிரிந்த துக்கத் தால் உன் மதியும் கெட்டுவிட்டதா?'' என்று வாலி- கேட்டான் இராமாயணத்தில் இராம பிரானுக்கு இரண்டு இடங்களில் களங்கம் ஏற்பட்டது. ஒன்று வா-யின் வதம்; இன்னொன்று சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது. நடக்கும் செயல்கள் எல்லாம் காரணம், காரியம், கர்த்தா என்ற மூன்றுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறது. அது தான் விதியின் செயல்!

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு பத்தில் இருக்கிறார். 4, 7, 10 என்னும் ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானங்கள் எனப் படும். இதில் பத்தாமிட கேந்திரம் திக்பலம் எனப் படும். அதேபோல 5, 9 ஆகியவை திரிகோண ஸ்தானங்களாகும். 9-ஆமிடம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 5-க்குடைய குரு சப்தம கேந்திரத்தில் இருப்பதும், ராசியைப் பார்ப்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோணம் பெறுவதைவிட கேந்திரம் பெறுவது சிறப்பு. அதே போல ஒரு கேந்திராதி பதி இன்னொரு கேந்திரத் தில் இருப்பது கேந்திர தோஷம். ஆனால், அவர் திரிகோணம் பெற்றால் அது யோகமாகும். (இந்த விதிகள் எல்லாம் ஜோதிடம் பயில்கிறவர்களுக்கு ஆதார மான குறிப்புகளாகும்). இதற்கு விளக்கம்- கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம்; திரிகோணம் என்பது தெய்வ அனுகூலம். மனித முயற்சிக்கு தெய்வ அனுகூலம் இருந்தால்தான் வெற்றி யாகும். அதனால்தான் கவியரசர் கண்ணதாசன், 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று எழுதினார். எனவே குரு ராசியைப் பார்ப்பதால் திறமை, செயல்பாடு, கீர்த்தி எல்லாம் சிறப்பாக இருக்கும். 9-க்குடைய செவ்வாய் பதினொன் றில் நிற்க, ஏழில் நிற்கும் குரு செவ்வாயையும் பார்க்கிறார். அதாவது ஒரு கேந்திராதிபதிக்கு இன்னொரு திரிகோணாதிபதியின் சம்பந்தம் கிடைக்கிறது. இதுதான் விதியை மதியால் வெல்லலாம் என்பது!

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு ஒன்பதில் திரிகோணம் பெறுகிறார். அவர் 10-க்குடையவர். அவர் 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம். 9-ஆமிடம் திரிகோணம்; 10-ஆமிடம் கேந்திரம். இருவரும் சம்பந்தப் பட்டால் ராஜயோகம். ரிஷப ராசிக்கும், துலா ராசிக்கும் ஒரே கிரகத்திற்கு கேந்திராதிபத்திய யோகமும், திரிகோணாதிபத்திய யோகமும் அமையும். அப்படி அமைவதால்தான் அந்த கிரகத்திற்கு ராஜயோகம் எனப்படும். கேந்திராதிபத்தியமும், திரிகோணாதி பத்தியமும் பெறும் எல்லா கிரகங்களும் ராஜ யோகத்தைத் தரும். ஏற்கெனவே கூறியது போல் கேந்திரம் முயற்சி ஸ்தானம்- விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது பலன் தரும் வெற்றி ஸ்தானம்- லட்சுமி ஸ்தானம். முயற்சி மட்டும் இருந் தால் போதாது. வெற்றியும் அடையவேண்டும். அதாவது லட்சுமி கடாட்சமும் வேண்டும். எத்தனையோ திறமைசா-லிகள் அதிர்ஷ்டம் இல்லாததால், திறமையிருந்தும் பிரகாசிக்க முடியாமல் போகிறார்கள். கன்னி ராசிக்கு 9, 10-க்குடைய சுக்கிரனும் புதனும் இணைவ தும் தர்மகர்மாதிபதி யோகம் தான். அதனால் முயற்சிக்கேற்ற வெற்றியும் பாராட்டும் பலனும் பரிசும் அடையலாம். தர்ம கர்மாதிபதி யோகமுடைய ஜாதகர்களுக்கு அந்த அதிர்ஷ் டம் தேடிவந்து அரவணைக் கும். மாடு மேய்த்த காளிதாசனுக்கு, காளியின் அருளால் மகாகவி பட்டம் கிடைத்தது. 4, 7-க்குடைய குரு ராசிக்கு 6-ல் மறைவதால், உங்கள் வெற்றிக்கு தாய் அல்லது தாரம் காரணமாக அமையலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களுக்கு மறைவுதோஷம் இருக்காது. அதாவது பாதிக்காது. மேலும் துலா ராசியை 5-ல் உள்ள குரு பார்க்கிறார். துலா ராசிக்கு 3, 6-க் குடைய குரு கெட்ட ஆதிபத்தியம் பெற்றவராக இருந்தாலும், திரிகோணத்தில் நிற்பதால் தோஷம் நிவர்த்தியாகும். மேலும் நல்ல ஆதிபத்தியமோ கெட்ட ஆதிபத்தி யமோ- திரிகோண ஸ்தானத்தில் நிற்கும் குருவுக்கு சுபத்தன்மை கூடி விடும். அதேபோல சனிக்கு பத்தாமிடத்தில் கேந்தி ரம் பலம்பெறுவதால் முக்கியத்துவம் உண்டு. குருவுக்கு ஒன்பதாம் இடமும் பத்தாம் இடமும் பலம்வாய்ந்த ஸ்தானங்கள். வாத்தியார் நல்லவரோ கெட்டவரோ- ஆசிரியர் என்ற பெருமை அவருக்கிருப்பதால் எல்லா ரும் அவருக்குக் கட்டுப்பட்ட வர்கள்தான். அதுபோல திரிகோணத்தில் இருக்கும் குருவுக்கும், பத்தில் நிற்கும் சனிக்கும் பலம் அதிகம்; முக்கியத்துவம் உண்டு. இங்கு 4-ல் உள்ள சனியை 9-ல் உள்ள செவ்வாய் 8-ஆம் பார்வை பார்க்கிறார். 'மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் தீது' என்பது ஜோதிட விதி. என்றா லும் மகரத்தில் ஆட்சிபெற்ற சனியை அந்த வீட்டின் உச்சநாதனான செவ்வாய் பார்ப்பதால் கேடு கெடுதிக்கு இடமில்லை. மேலும் செவ்வாய் குருவின் பார்வையைப் பெற்று சனியைப் பார்ப்ப தால், நல்ல பலனுக்குதான் இடம்கொடுக் குமே தவிர துர்பலனுக்கு இடம்கொடுக்காது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் எட்டில் மறைந்தாலும் பஞ்சமாதிபதி குருவின் பார்வையைப் பெறுவதால் தோஷமில்லை. ஆனால் ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் சில நேரங்களில் தடை, தாமதம், குழப்பங்களை உருவாக்கலாம். இருந்தாலும் அதன் சூடும் கடுமையும் பாதிக்காது. அதற்குக் காரணம், ராகுவுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ஆட்சிபெறுவதும், 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் இணைந்து இருப்பதும்தான். இது லாபம், வெற்றி என்பதைக் குறிக்கும். பொதுவாக குரு பார்க்க கோடி நன்மை என்பதுபோல, ராசிநாதன் செவ்வாயை குரு பார்ப்பதால், செவ்வாய் எட்டில் மறைந்தாலும் தோஷம் தராது. கேடு கெடுதிக்கு இடமில்லை. மூன்றில் சனி ஆட்சி; ஏழில் சுக்கிரன் ஆட்சி. இதன்காரணமாக ராசிநாதன் எட்டில் மறைந்தாலும் உங்களுடைய ஆற்றல், திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாம் சீரும்சிறப்புமாக விளங்கும். அந்தக் காரணமே ஜென்ம கேது, சப்தம ராகுவின் தோஷத்தைப் போக்கும். ராசிக்கோ ராசிநாதனுக்கோ லக்னத்திற்கோ லக்னநாதனுக்கோ திரிகோணாதிபதியின் பார்வை (5-க்குடைய குரு) இருப்பது சிறப்பு. எனவே நினைத்தது நிறைவேறும்; கருதியது கைகூடும்; திட்டங்கள் வெற்றியடையும். 5, 9-க்கதிபர் பாபர் சுபரானாலும் பொன்போன்ற நன்மையே செய்வார் என்பது சந்திர காவிய விதி. எனவே குறையொன்றும் இல்லை; மறைமூர்த்தி கண்ணா!

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு மூன்றில் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் மறைவுதோஷம் பாதிக்காது. மேலும் 5-க்குடைய செவ்வாய் ஏழில் அமர்ந்து சனியைப் பார்க்கிறார். அதாவது திரிகோணாதிபதி கேந்திரம் ஏறுகிறார். எந்த ஒரு கிரகத்திற்கும் திரிகோணாதிபத்தியமோ கேந்திராதிபத்தியமோ கிடைக்கப் பெற்றால் அந்த கிரகம் ராஜயோக கிரகமாக மாறும். ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் கேந்திர திரிகோணாதிபதியாக சனி வருவார். அதனாலேயே இந்த இரு ராசிகளுக்கும் சனி ராஜயோகப் பலன் தருவார் என்பர். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை கெடுதல் என்று சொல்லப்பட்டாலும், சனி ஆட்சி கிரகம். சனி நின்ற மகர ராசிக்கு உச்ச கிரகம் செவ்வாய். எனவே இவர்களின் சேர்க்கையோ பார்வையோ நன்மையாகதான் செயல்படும். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல, இந்த கிரகச் சேர்க்கை நற்பலனாகவே அமையும். ராசிநாதன் குருவின் பார்வை 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களுக்குக் கிடைக்கிறது. 2, 5, 7, 9, 11-ஆமிடங்களில் குரு இருந்தாலும் பார்த்தாலும் நற்பலனைத் தரும். எனவே ராசிநாதன் குருவுக்கு மறைவுதோஷம் விலகி நிறைவுப் பலனை ஏற்படுத்தும். இலைமறைவு காய்மறைவாக என்பார்கள். சில காரியங்களை வெளிப்படையாகச் செய்யலாம். சில காரியங்களை மறைவாகத் தானே செய்யவேண்டும்!

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சி பெறுகிறார். அவரை ஆறில் மறைந்திருக்கும் செவ்வாய் பார்க்கிறார். செவ்வாய் மகர ராசிக்கு உச்சநாதன். அவர் குரு பார்வையின் பலம்பெற்று செயல்படுகிறார். அதனால் சனி, செவ்வாய் பார்வை சம்பந்தம் நன்மையாகத்தான் திகழும். கெடுதல் ஏற்படுத்தாது. இதற்கு உதாரணமாக, பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது குற்றமில்லாத பொய்யும் மெய்மைக்கு சமமாகும். 3, 12-க்குடைய குரு 2-ல் இருப்பதால் உடன் பிறந்தவர்கள் வகையில் உதவியும் நன்மையும் ஆதரவும் பெருகும். பழைய பகை தீரும். புதிய உறவு பலப்படும். அதேபோல 12-க்குடையவர் 2-ல் இருப்பதால் வரவேண்டிய பாக்கி பணம் எல்லாம் வசூலாகும். 2-க்குடையவர் 12-ல் மறைந்தால் நமது பணம் அன்னியர்வசம் விரயமாகும். 12-க்குடையவர் 2-ல் இருந்தால் அன்னியர் பணம் நம்வசமாக அமையும். அதாவது இழந்தவை மீண்டும் கிடைக்கும். பொதுவாக செவ்வாய், சனி சேர்க்கையும் பார்வையும் கெடுதல்தான் என்றாலும், மகர ராசிக்கு அது பொருந்தாது. அது மேலே சொன்ன விதியாகும். உங்கள் வெற்றிக்கு சிலசமயம் அறிந்தோ அறியாமலோ துணையாக உங்கள் எதிரிகளே அமைந்துவிடுவார்கள். செவ்வாய் 4-க்குடையவர்; குரு 12-க்குடையவர். பூமி, வீடு, வாகனம், இடம் போன்ற வகையில் சுப முதலீடு செய்யலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந் தாலும் ஆட்சியாக இருக்கிறார். 3, 12-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 10-க்குடைய செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். எனவே மலையே விழுந்தாலும் நிலைகுலையா தன்மையால் உங்கள் முயற்சிகளும் காரியங்களும் சீரும்சிறப்புமாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டும். இறையருளும் குருவருளும் உங்களுக்குத் துணைநிற்கும். உங்கள் வெற்றிக்கு தாயார் அல்லது தாரம் ஆதரவாக நிற்பார்கள். அதைத்தான் தாய்க்குப்பின் தாரம் என்றார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ண பகவானுக்கு ஒரு காலகட்டத்தில் அவர் மனைவி பாமா துணையாக நின்று, ஒரு அசுரனைக் கொன்று வெற்றி தேடித்தந்தார். அதனால்தான் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லப்படுகிறது. அது தாய் அல்லது தாரம் அல்லது சகோதரியாகவும் இருக்கலாம். காமவெறி பிடித்த அருணகிரிநாதருக்கு ஆன்மிக ஞானத்தை உண்டாக்கி திருப்புகழைப் பாடவைத்த பெருமை அவர் சகோதரிக்குக் கிடைத்தது. அதேபோல சத்ரபதி சிவாஜியின் வெற்றிக்கு அவர் தாயாரே காரணமாக அமைந்தார். சனி மறைந்தாலும், ஆட்சிபெற்று சந்திரன் சாரம்பெற்று சந்திரன் வீட்டைப் பார்ப்பதால் மனக் கட்டுப்பாட்டால் பல காரியங்களை நீங்கள் சாதிக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைவு. என்றாலும் சனி ஆட்சிபலம் பெறுகிறார்; சனியை செவ்வாய் பார்க்க, செவ்வாயை குரு பார்ப்பதால், மூவருக்கும் ( சனி, குரு, செவ்வாய்) ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுகிறது. தர்மகர்மாதிபதி யோகமும், லாபாதிபதி சேர்க்கையும் அல்லது சம்பந்தமும் ஏற்படுகிறது. எனவே செவ்வாய், சனி, குரு இந்த சம்பந்தம் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தும். சிலரின் முயற்சிகள் நீர்மேல் எழுத்தாக மறைந்துவிடும். ஆனால் உங்களுடைய முயற்சிகள் கல்வெட்டில் பதிப்பதுபோல நிலைத்து நிற்கும். பேரும் புகழும் பெருமையும் உண்டாகும். பாராட்டுக்களும் பரிசுகளும் கிடைக்கும். அதுதான் தர்மகர்மாதிபதியின் பலனாகும். அதாவது 9-க்குடைய செவ்வாய், 10-க்குடைய குரு பார்ப்பதன் பலன் அதுதான். பொதுவாக இப்படிப்பட்ட கிரக அமைப்புள்ள ஜாதகர்கள்தான் வரலாற்றில் இடம்பெற்றவர்களாக திகழ் கிறார்கள். நான்குபேரின் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாக மாறுகிறார்கள். அவர்களைத்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று போற்றுவார்கள். உங்களில் யாருக்கு அந்த பெருமை கிடைக்கப்போகிறதோ- அது இறைவனுக்கே வெளிச்சம்!