இந்த வார ராசிபலன் 22-8-2021 முதல் 28-8-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-22-8-2021-28-8-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: மகம்- 2, 3, 4.

செவ்வாய்: பூரம்- 2, 3, 4.

புதன்: உத்திரம்- 1, 2, 3, 4.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: அஸ்தம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 1.

கேது: அனுஷம்- 3.

கிரக மாற்றம்:

23-8-2021- கன்னி புதன்.

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

22-8-2021- கும்பம்.

24-8-2021- மீனம்.

26-8-2021- மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 5-க்குடைய சூரியன் ஆட்சி. இது ஒருவகையில் ப்ளஸ் பாயின்ட். 5-ஆமிடம் மக்கள், திட்டம், மகிழ்ச்சி, எண்ணம் போன்றவற்றைக் குறிக்கும். அந்தவகையில் உங்கள் நீண்டகால திட்டங்களை செயல்படுத்தலாம். அதற்குண்டான வாய்ப்பும் சூழ்நிலை களும் அமையும். 5-ஆமிடத்தை 9-க்குடைய திரிகோணாதிபதி (குரு) 11-ல் நின்று பார்ப்பது மேலும் பலம். பிள்ளைகளைப் பற்றிய கவலை மாறும். அவர்களின் எதிர்காலத் தேவைக்காக சேமிப்பு முதலீடு செய்யலாம். 10-ல் சனி வக்ரம், ஆட்சி. வக்ரத்தில் உக்ரபலம். தொழில்துறையில் புதிய முதலீடுகள் பற்றிய திட்டங்கள் நிறைவேறும். பங்குதாரர்களும் கிடைப்பர். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம். பொருளாதாரத்தில் சிலநேரம் சிறுசிறு பற்றாக்குறை நிலவினாலும் தேவைகள் பூர்த்தியாகும். 6-க்குடைய புதன் 23-ஆம் தேதிமுதல் ஆட்சிபெற்று உச்சமடைகி றார். கொடுக்கல்- வாங்க-ல் பிரச்சினைக்கு இடமில்லை என்றாலும் யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்கவேண்டாம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் அத்தியாவசியத் தேவைக்குக்கூட கடன் வாங்கும் அவசியம் ஏற்படலாம். என்றாலும் நாணயம், கௌரவம் பாதிக்காது. குரு 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்புகள் கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் நல்லமுடிவுக்கு வரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெற்றாலும் அது அவருக்கு நீச ஸ்தானம். 23-ஆம் தேதிமுதல் 5-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. உங்களது காரியங் களில் தாமதமான பலன்போலத் தெரிந்தாலும் தடைப்படாது. ஜென்ம ராகு உங்கள் மனதில் சந்தேகத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கலாம். ஆரோக்கியத் தொல்லையால் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும், 10-ல் குரு நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பாதிப்புகளுக்கோ- அறுவை சிகிச்சைக்கோ இடமில்லை. 2-க்குடைய புதன் 5-ல் ஆட்சி, உச்சம் பெறும்போது தடை, தாமதங்கள் விலகும். குடும்பத்தில் முன்னேற்றகரமான சூழல் அமையும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும். சிலருக்கு உத்தியோகரீதியாக பதவி மாற்றம், இடமாற்றம் உண்டாகலாம். ஒருசிலருக்கு வேலை போனாலும் அதைவிட ஊதிய உயர்வான வேலை உடனடியாக அமையும். 9-ல் சனி ஆட்சி, வக்ரம். தகப்பனார்வகையில் பூர்வீக சொத்து சம்பந்தமாக சில வில்லங்கம், விவகாரம் ஏற்படும். எனவே, தகப்பனாரால் பிரச்சினைகளையும் சந்திக்க நேரும். பாகப்பிரிவினையில் இழுபறி நிலை காணப்படலாம். குரு 2-ஆமிடத் தைப் பார்க்கிறார். பொருளாதாரத் தேவைகளில் பற்றாக்குறை நேராது. தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை, அனுசரிப்புத் தன்மை, அன்யோன்யம் நன்றாக இருக்கும்.

saibaba

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: மகம்- 2, 3, 4.

செவ்வாய்: பூரம்- 2, 3, 4.

புதன்: உத்திரம்- 1, 2, 3, 4.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: அஸ்தம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 1.

கேது: அனுஷம்- 3.

கிரக மாற்றம்:

23-8-2021- கன்னி புதன்.

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

22-8-2021- கும்பம்.

24-8-2021- மீனம்.

26-8-2021- மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 5-க்குடைய சூரியன் ஆட்சி. இது ஒருவகையில் ப்ளஸ் பாயின்ட். 5-ஆமிடம் மக்கள், திட்டம், மகிழ்ச்சி, எண்ணம் போன்றவற்றைக் குறிக்கும். அந்தவகையில் உங்கள் நீண்டகால திட்டங்களை செயல்படுத்தலாம். அதற்குண்டான வாய்ப்பும் சூழ்நிலை களும் அமையும். 5-ஆமிடத்தை 9-க்குடைய திரிகோணாதிபதி (குரு) 11-ல் நின்று பார்ப்பது மேலும் பலம். பிள்ளைகளைப் பற்றிய கவலை மாறும். அவர்களின் எதிர்காலத் தேவைக்காக சேமிப்பு முதலீடு செய்யலாம். 10-ல் சனி வக்ரம், ஆட்சி. வக்ரத்தில் உக்ரபலம். தொழில்துறையில் புதிய முதலீடுகள் பற்றிய திட்டங்கள் நிறைவேறும். பங்குதாரர்களும் கிடைப்பர். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம். பொருளாதாரத்தில் சிலநேரம் சிறுசிறு பற்றாக்குறை நிலவினாலும் தேவைகள் பூர்த்தியாகும். 6-க்குடைய புதன் 23-ஆம் தேதிமுதல் ஆட்சிபெற்று உச்சமடைகி றார். கொடுக்கல்- வாங்க-ல் பிரச்சினைக்கு இடமில்லை என்றாலும் யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்கவேண்டாம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் அத்தியாவசியத் தேவைக்குக்கூட கடன் வாங்கும் அவசியம் ஏற்படலாம். என்றாலும் நாணயம், கௌரவம் பாதிக்காது. குரு 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்புகள் கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் நல்லமுடிவுக்கு வரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெற்றாலும் அது அவருக்கு நீச ஸ்தானம். 23-ஆம் தேதிமுதல் 5-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. உங்களது காரியங் களில் தாமதமான பலன்போலத் தெரிந்தாலும் தடைப்படாது. ஜென்ம ராகு உங்கள் மனதில் சந்தேகத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கலாம். ஆரோக்கியத் தொல்லையால் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும், 10-ல் குரு நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பாதிப்புகளுக்கோ- அறுவை சிகிச்சைக்கோ இடமில்லை. 2-க்குடைய புதன் 5-ல் ஆட்சி, உச்சம் பெறும்போது தடை, தாமதங்கள் விலகும். குடும்பத்தில் முன்னேற்றகரமான சூழல் அமையும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும். சிலருக்கு உத்தியோகரீதியாக பதவி மாற்றம், இடமாற்றம் உண்டாகலாம். ஒருசிலருக்கு வேலை போனாலும் அதைவிட ஊதிய உயர்வான வேலை உடனடியாக அமையும். 9-ல் சனி ஆட்சி, வக்ரம். தகப்பனார்வகையில் பூர்வீக சொத்து சம்பந்தமாக சில வில்லங்கம், விவகாரம் ஏற்படும். எனவே, தகப்பனாரால் பிரச்சினைகளையும் சந்திக்க நேரும். பாகப்பிரிவினையில் இழுபறி நிலை காணப்படலாம். குரு 2-ஆமிடத் தைப் பார்க்கிறார். பொருளாதாரத் தேவைகளில் பற்றாக்குறை நேராது. தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை, அனுசரிப்புத் தன்மை, அன்யோன்யம் நன்றாக இருக்கும்.

saibaba

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்துகொண்டிருக்கிறது. பொதுவாக அட்டமச்சனி தொட்டது துலங்காது என்பது பேச்சு வழக்கு. இங்கு மிதுன ராசியை குரு பார்க்கிறார். ஒரு ராசிக்கோ, ராசிநாதனுக்கோ அல்லது ஒரு லக்னத்திற்கோ, லக்னநாதனுக்கோ குரு பார்வை கிடைப்பது நன்மையான பலனைத் தருமென்பது ஜோதிடக் கருத்து. குரு பார்க்க கோடி தோஷம் விலகும். எனவே, உங்களது முயற்சிகளில் தாமதநிலை காணப்பட்டாலும் காரிய வெற்றி உண்டு. மேலும் 23-ஆம் தேதிமுதல் புதன் 4-ல் ஆட்சி, உச்சம் பெறுகிறார். அது கூடுதல் பலம். வீடு வாங்கும் யோகம் அமையும். தொழில்வளம் சிறக் கும். பொருளாதாரநிலை திருப்தி தரும். செலவும் சுபச்செலவுகளாக மாறும். வாகனம் வாங்கும் முயற்சியும் கைகூடலாம். தொழி-ல் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். விரிவுபடுத்தும் வேலைகளும் நடக்கும். அதற்குண்டான தொகை முதலீட்டுக்கு அந்நிய இனத்து நண்பர் ஒருவரால் சகாயம் கிடைக்கும். 3-ல் செவ்வாய். அவருடன் ஆட்சிபெற்ற சூரியன் சேர்க்கை. தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். திடீர் மாற்றங்கள் வந்தாலும் அது நன்மையான மாற்றமாக அமையும். சுபவிரயங்களும் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை முயற்சியில் ஈடுபடுவோருக்கு சாதகமான பலன்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் ஏற்படும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மகிழ்ச்சியையும் உருவாக்கித் தருவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த வாரம் அட்டமச்சனி பொங்குசனியாக வேலை செய்யும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 2-ல் இருப்பதும், அவரை 9-க்குடைய குரு பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் எத்தனையோ யோகமிருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் அந்த ஜாதகருக்கு தோல்விக் கும் தொய்வுக்கும் இடமில்லை. 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம். அதை குரு பார்ப்பதால், அவை சம்பந்தப்பட்ட வகையில் நற்பலன்களே நடக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை, பொருளாதாரத்தில் சீரான நிலை போன்ற நன்மைகள் உண்டா கும். 5-ல் உள்ள கேது மன நிம்மதியைக் குறைப்பது போலத் தோன்றும், 5-க்கு டைய செவ்வாய் 5-ஆமிடத் தையே பார்க்கிறார். எனவே மனநிம்மதிக்குறைவு மாறும். 3-ல் புதன் ஆட்சி, உச்சம். அவருடன் சுக்கிரன் சேர்க்கை. சுக்கிரனுக்கு நீசபங்க ராஜ யோகம். வாழ்க்கைத் துணை வழியே உண்டான பிரச்சினை களுக்கு நல்ல முடிவு காணப் படும். சிலர் வாழ்க்கைத் துணை யின் வேலைக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு கொடுக்கப் பட்ட பொறுப்புகளை நீங்களே செய்வது நல்லது. யரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 3, 12-க்கதிபதி உச்சம் பெறுவதால் நண்பர்கள் வழியில் சகாயம் உண்டாகும். தன்னம்பிக்கை யும் அதிகமாகும். தேகசுகம் நன்றாக இருக்கும். உடன்பிறப்புகள் வகையில் மனக்கிலேசம், ஒற்றுமைக்குறைவு இருக்கத்தான் செய்யும். தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் செயல்படும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சி. 9-க்குடைய செவ்வாய் சேர்க்கை. 5-க்குடைய குரு பார்வை ராசிக்கும் ராசிநாதனுக்கும் கிடைக்கி றது. எந்த ஒரு விஷயத்திலும் சொல்- கில்- அடிக்கலாம். உங்களது திறமைகள், செயல்பாடு கள் யாவும் சிறப்பாக இருக்கும். 3-ஆமிடத்திற்கு 2-ல் கேது நீசம் பெற்றாலும், 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் நண்பர்கள் சகாயம், சகோதர ஒற்றுமை எல்லாம் அமையும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கலாம். 2-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெறுகிறார். அவர் தன- லாபாதிபதி. பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழி-ல் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலர் அடகு வைத்த நகைகளை மீட்பதற்குண்டான வாய்ப்பும் சூழல்களும் அமையும். இல்லத்தில் சுபகாரியத்திற்கான அறிகுறிகள் தென்படும். 5-க்குடைய குரு 7-ல் நிற்பதால், பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய திருமண காரியங்களும் கைகூடும். குடும்ப முன்னேற் றம் திருப்தி தரும். தொழி-ல் முன்னேற்றம் கருதி புதிய பங்கு தாரர்களை இணைத்துக் கொள்ளலாம். தொழில் மேன்மையும், புதிய ஒப்பந்தங் களும் வந்துசேரும். உத்தி யோகத்தில் உள்ளவர்கள் சுயதொழில் தொடங்கும் யோசனைகளைச் செய்யலாம். எதிரிகளின் பலம் குறையும். நோய் நொடி வைத்தியச் செலவும் நீங்கும். சிலருக்கு மனைவிவழியில் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். கல்வி சம்பந்தப் பட்ட அணுகுமுறைகள் பலன்தரும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் ஆட்சி, உச்சம் பெறுகிறார். 9-க்குடைய சுக்கிரன் அங்கு நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகமாகும். புதன் 10-க்குடையவர். சுக்கிரன் 9-க்குடையவர். இருவரின் சேர்க்கையும் தர்மகர்மாதிபதி யோகத்திற்கு வழிவகுக்கிறது. எனவே 12-ல் சூரியன் மறைவு தோஷத்தை மாற்றும். வரவைக் காட்டிலும் செலவு ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றலும் திறமையும் உண்டாகும். 4-க் குடையவர் 6-ல் மறைகிறார். சிலநேரம் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். எனினும் உச்ச புதன் ஆரோக்கியத்தில் பெரிதளவு பாதிப்புக்கு இடம்தர மாட்டார். அடுத்தவர் நலன்கருதி எடுக்கும் முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் மீண்டும் நடைபெறும். 2-ஆமி டத்தை குரு பார்ப்பதால் குடும்பத்திலுள்ள குழப்பம் தீரும். என்றாலும் கணவன்வழி உறவினர்களை சமாளித்துச் செல்வதற்கு சமயோஜித சிந்தனையும் தேவைப்படும். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் ஒருபுறம் மனதை தைரியப்படுத்தும். உடன் பிறந்த சகோதரவழியில் சங்கடங்கள் நீடிக்கும். செவ்வாய் மறைவு ஸ்தானத்தைவிட்டு மாறியபிறகு, உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களும் மாறி ஒற்றுமையுணர்வு மேலோங்கும். உங்களின் சொல்வாக்கு செல்வாக்கு பெறும். மதிப்பும் மரியாதையும் உண்டாகும். தனவரவு திருப்தியாக அமையும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் 12-ல் மறைவு, நீசம். 23-ஆம் தேதி 12-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது. எனினும் விரயங்கள் சற்று அதிகமாகவே காணப்படும். யாரையும் முழுமையாக நம்பி செயல்படமுடியாது. நம்பிய உடன்பிறப்புகளால் கைவிடப்பட்டாலும் குரு பார்வை உங்களைத் தூக்கிவிடும். கொடுக்கல்- வாங்க-ல் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். திடீரென ஏற்படும் மாற்றங்கள் நல்ல மாற்றமாக அமையும். அது குடியிருப்பு மாற்றமானாலும் சரி; வேலை மாற்றமானாலும் சரி! துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி 4-ல் வக்ரம் பெறுவதால் கெடுபலன்கள் குறையுமென்று நம்பலாம். 11-க்குடைய சூரியன் ஆட்சி. 7-க்குடைய செவ்வாய் சேர்க்கை. விடாமுயற்சியுடன் செய்யும் வேலையில் வெற்றி காணலாம். வாழ்க்கைத் துணையினால் உண்டாகும் வருமானம் பெரிதளவு உதவியாக அமையும். அதனால் இல்லறம் நல்லறமாக ஓடிக் கொண்டிருக்கும். பூர்வீகச்சொத்து அல்லது தகப்பனாரின் சொத்துகளில்- வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல காரியம் நடைபெறும். மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும். விலகிய சொந்த பந்தங்கள் மீண்டும் வந்து இணையலாம். நீங்களும் "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்று பெருந்தன்மை யோடு ஏற்றுகொள்ளலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் இருக்கிறார். அவருடன் ஆட்சி பெற்ற சூரியன் சேர்க்கை. லாபாதிபதி புதன் ஆட்சி, உச்சம். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வேலை, தொழில் இவற்றில் முன்பிருந்ததைவிட வேகமும் விறுவிறுப்பும் காணப்படும். உடன்பிறப்புகள் அல்லது உறவினர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அல்லது புதிய பங்குதாரர்கள் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கலாம். தாராளமான பொருளாதாரநிலை காணப்படும். வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரத் தேவைகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கிணங்க சேமிப்பு, சிக்கனம் போன்றவற்றைக் கடைப் பிடித்தால் நிம்மதியான வாழ்வும் நிறைவான மனதும் அமையும். மனம்போன போக்கில் செலவு செய்வதைக் கைவிட வேண்டும். ஜென்ம கேது அலைக்கழிப்புகளைத் தந்தாலும் ஆதாயமும் ஏற்படுத்தும். சப்தம ராகு திருமணத்தில் தடை, தாமதத்தை உண்டு செய்யலாம். அப்படிப்பட்டவர்கள் ஆண் களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொண்டால் நல்ல வரனும், நல்ல மணவாழ்க்கையும் அமையும். கேந்திர பலம் பெற்ற செவ்வாய் பங்காளி உறவை பலப்படுத்துவார்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 12-ல் மறைவு. 5-க்குடைய செவ்வாய் குருவைப் பார்க்கிறார். உங்கள் திட்டங்களை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகக் காப்பாற்றி செய்து முடிப்பீர்கள். 12-ல் கேது பலம் பெறுவதாலும், 12-க்குடைய செவ்வாய் அந்த இடத்தைப் பார்ப்பதாலும் விரயங்களைத் தவிர்க்கமுடியாது. வீடு மாற்றங் கள், சிலருக்கு உத்தியோக மாற்றங்கள் ஏற்படலாம். சனி வக்ரகதியில் இயங்குகிறார். ஒரு தொகை செலவழிந்த பின்னரே மறுதொகை கையில் புரளும். வியாபாரத் தேவை களுக்குக் கடன் வாங்கும் சூழல் அமையும். என்றாலும் நாணயம் கெடாது. வாங்கிய கடனை கௌரவமாகத் திருப்பி அடைத்து விடலாம். 10-ல் புதன் ஆட்சி உச்சம். அது ஒருவகையில் தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ராசிநாதன் குரு 11-ஆமிடத்தைப் பார்ப்பது லாபத்தையும் தரும், புதிய முயற்சிகளுக்கான வெற்றியையும் தரும். 6-ல் உள்ள ராகு நோய் நொடி, வைத்தியச் செலவுகளைக் குறைப்பார். எதிரிகளினால் ஏற்படும் போட்டி, பொறாமைகளையும் கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் சில பிரச்சினைகளுக்கு இடமுண்டு. உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதாலோ மனக்கசப்புகள் தோன்றலாம். நீரடித்து நீர் விலகாது என்பதை மனதில்கொண்டு யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்தால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகரத்தில் சனி ஆட்சி. ஏழரைச்சனி யில் இப்போது ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடக்கிறது. வக்ரத்தில் சனி சஞ்சரிப்ப தால் கடுமையான பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது என்று நம்பலாம். இருப்பினும் சில காரியங்கள் தாமதப்படும். மனதில் குழப்ப நிலைகளும் உண்டாகும். ஒரு சிலர் வீடு மாற்றம் செய்ய நேரும். சிலர் ஊர்மாற்றம் செய்ய நேரிடும். 10-க்குடைய சுக்கிரன் 9-ல் நீசம் பெற்றாலும், புதன் அங்கு உச்சம் பெறுவதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. தர்மகர்மாதிபதி யோகமும் வழிநடத்தும். தொழில்துறையில் பாதிப்புகளுக்கு இடமில்லை. தொழில் இயக்கம் நடந்து கொண்டிருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். ஊதிய உயர்வும் இலாகா சம்பந்தப்பட்ட மாற்றங் களும் ஏற்பட வாய்ப்புண்டு. தந்தையிடையே நிலவிய வருத்தங்களும் சங்கடங்களும் விலகும். சகோதர ஒற்றுமை பலப்படும். 8-ல் சூரியன் ஆட்சி. 4-க்குடைய செவ்வாய் சேர்க்கை. ஆரோக்கியத்தில் சிலநேரம் தொல்லை கள் ஏற்படலாம். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் இழுபறிநிலை காணப்படும். இது தாமதநிலையே தவிர தடைப்படாது. முடிவில் வெற்றி உண்டாகும். முன்னோர்வழிச் சொத்துகளில் முறையான பங்கீடு கிடைக்கும். சுயதொழில் சம்பாத்தியமும் கூடும். விரயத்திற்கேற்ற பொருளாதார வரவு வந்துகொண்டிருக்கும். 5-ஆமிடத்து ராகு- பிள்ளைகள்வழியில் சில தொல்லைகளைச் சந்திக்க நேரும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் விரயஸ்தானத் தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச்சனி நடக்கிறது. அதேசமயம் சனி வக்ரகதியில் இயங்குகிறார். சிலநேரம் விரயம் அதிகமாக இருக்கும் என்றாலும், தன ஸ்தானாதிபதி குரு ஜென்ம ராசியில் நிற்பதால் அவற்றை சமாளிக்கலாம். ஜென்மத்தில் இருக்கும் குரு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அவை சம்பந்தமான பலன்கள் நன்மையாகவே நடக்கும். 3, 10-க்குடைய செவ்வாய் 7-ல், 7-க்குடைய சூரியனோடு சேர்ந்திருக்கிறார். அவரை குரு பார்ப்பது சிறப்பு. தொழில்துறை யில் நிலவிய மந்தமான பலன்கள் மாறி வேகம், விறுவிறுப்புடன் செயல்படும். அவை சம்பந்தமாக தைரியமான சில முடிவுகளை எடுத்து மாற்றம் செய்யலாம். களஸ்திரகாரகன் சுக்கிரன் 8-ல் மறைவு, நீசம். என்றாலும் 8-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெறுவதால் (23-ஆம் தேதிமுதல்) கணவன் அல்லது மனைவி வகையில் எதிர்பாராத நன்மைகளுக்கு இடமுண்டு. அதனால் ஆதாயமும் அனுகூல மும் உண்டாகும். 5-க்குடையவர் 8-ல் சஞ்சரிப்ப தால், பிள்ளைகளின் நலன்கருதி எதிர்காலத் தேவைக்காக ஒரு தொகையை விரயமாக முதலீடு செய்வது நல்லது. வீண் விரயத்தை சுபவிரயமாக மாற்றும் யுக்தியைக் கையாள லாம். பூர்வீக சொத்துகளைப் பிரித்துக் கொள்வதில் இருந்த சிக்கல்கள் விலகும். தாய்மாமன் ஒருவரால் உதவியும் ஒத்தாசையும் உண்டாகும். 7-ல் செவ்வாய் நின்றாலும் குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதார வரவும் திருப்தியளிக்கும் வகையில் அமையும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். வக்ரகதியில் இயங்குகிறார். எனவே விரயங்கள் அதிரிக்கும். குடியிருப்பு மாற்றங் கள் எதிர்பார்த்தபடி அமையும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றமும் ஏற்படலாம். அது நல்ல மாற்றமாக அமையும். குருவுக்கு வீடுகொடுத்த சனி 11-ல் ஆட்சியாகவும் வக்ரமாகவும் இருப்பதால் செலவுகள் வந்தாலும் அவற்றை சமாளித்துவிடலாம். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைகிறார். 6-க்குடையவர் 2-ல் இருந்தால் அந்நியர் பணம் நம்மிடம் புரளும். 2-க்குடையவர் 6-ல் இருந்தால் நம் பணம் அந்நியரிடம் புரளும் என்பது ஜோதிடப் பாடம். உங்களுக்கு வரவேண்டிய தொகைகள் இழுபறியாக இருப்பதால் நிறைவேற வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படும். குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியாமல் திணறும் சூழ்நிலையும் உருவாகும். 3, 8-க்குடைய சுக்கிரன் 7-ல் நீசம்பெறுகிறார். 7-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெற்று இணைகிறார். சிலருக்கு மனைவிவழி வருமானத்தால் குடும்பச் சூழ்நிலையை நடத்தவேண்டிவரும். மனைவியின் வேலைக்காக எடுக்கும் முயற்சிகள் பலன்தரும். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடந்தால் வெளி நாட்டு வேலைக்குக்கூட அழைப்புகள் வரலாம். 3-ஆமிடத்து ராகு எவற்றையும் சமாளிக்கும் தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கையைத் தருவார். 10-க்குடைய குருவும் 9-க்குடைய செவ்வாயும் பார்த்துக்கொள்வது தர்மகர்மாதிபதி யோகமாகும். அது ஒன்றேபோதும்! உங்கள் முயற்சி, திறமை இவற்றை வீணாக்காமல் நற்பலன் தரும். வறுமை, தரித்திரம் ஏற்படாது. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்; பலனை இறைவன் தருவார்.

bala270821
இதையும் படியுங்கள்
Subscribe