இந்த வார ராசிபலன் 21-2-2021 முதல் 27-2-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-21-2-2021-27-2-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 1, 2, 3.

செவ்வாய்: கார்த்திகை- 2, 3.

புதன்: திருவோணம்- 1, 2, 3.

குரு: திருவோணம்- 2.

சுக்கிரன்: அவிட்டம்- 2, 3.

சனி: உத்திராடம்- 3, 4.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

22-2-2021 கும்ப சுக்கிரன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

21-2-2021- மிதுனம்.

24-2-2021- கடகம்.

26-2-2021- சிம்மம்.

rasi

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய். திரிகோணாதிபதி சூரியனின் சாரம். (கார்த்திகை நட்சத்திரம்). சூரியனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் கேந்திரமாக இருக்கிறார் கள். ஒரு ராசிநாதன் அல்லது லக்னநாதன் சுயசாரம் பெற்றாலும் அல்லது அவருடைய உச்ச ராசிநாதனின் சாரம் பெற்றாலும் கேந்திர திரிகோணம் பெற்றாலும் நற்பலன்களே நடக்கும். 6, 8, 12-ல் மறையும் கிரகங்கள்கூட மேற்படி சுபகிரக சாரம் பெற்றால் கெடுதல் ஏற்படாது; நல்லது நடக்கும். அதேசமயம் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது ஒருவகையில் உங்களுக்குப் பொருளாதாரத் தேக்கத் தையும், குடும்பக் குழப்பத் தையும் உருவாக்கும். என்றாலும் ராகுவுக்கு குருபார்வை இருப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. ராகுவை மட்டும் குரு பார்க்கிறார்; கேதுவைப் பார்க்கவில்லையே என்ற சந்தேகம் வரலாம். ராகு அல்லது கேது இருவரில் யாராவது ஒருவரைப் பார்த்தாலும் குரு பார்க்க கோடி நன்மை என்பதுபோல தோஷம் விலகும்; நல்லது நடக்கும். எல்லாவற்றுக்கு மேலாக 11-ல் சூரியன் இருப்பது உங்களுக்கு மாபெரும் பலம். ஒரு முகூர்த்த லக்னத் திற்கு 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால் அந்தக் காரியம் தங்குதடையின்றி மிகச் சிறப்பாக அமையும் என்பது ஜோதிடவிதி. ஆகவே, உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவில் சிறப்படையும். நாள் செய்வதை நல்லோர் செய்யார் என்பது பழமொழி.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனியும் அவருடன் இருக்கிறார். அத்துடன் குருவின் ராசியான மீன ராசியின் உச்ச ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிநாதனா கவே அமையப் பெற்று கூடியிருப்பது பெரும் பாக்கியம். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்பது குறள். தெய்வத்தாலாகாது என்பது ஒன்றும் இல்லை. எல்லாம் இறைவன் கட்டளைப்படிதான் நடக்கிறது. அப்படியானால் மேற்கண்ட குறளுக்கு என்ன அர்த்தமென்றால்- உங்கள் முயற்சிக் கேற்ற முழுப்பலனும் நூற்றுக்கு நூறு உண்டு என்பது தெளிவு! அதனால்தான் "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்று முன்னோர்கள் கூறினார்கள். ஜென்மத் திலிள்ள ராகுவும், 7-ல் உள்ள கேதுவும் இடையூறுகளையும் தடைகளையும் குறுக்கீடுகளையும் ஏற்படுத்தினாலும், 9-ல் உள்ள குரு நீசபங்க ராஜயோகம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், ஒரு திரைப்படத்தில் நடிகர் விஜய் "ஆல் இஸ் வெல்' என்று சொல்வதுபோல எல்லாம் நல்லதாகவே நடக்கும். அதனால்தான் பெரியோர்கள் "நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்' என்றார்கள். 10-ல் உள்ள சூரியன் தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் நற்பலன்களைத் தருவார். தேக ஆரோ

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 1, 2, 3.

செவ்வாய்: கார்த்திகை- 2, 3.

புதன்: திருவோணம்- 1, 2, 3.

குரு: திருவோணம்- 2.

சுக்கிரன்: அவிட்டம்- 2, 3.

சனி: உத்திராடம்- 3, 4.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

22-2-2021 கும்ப சுக்கிரன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

21-2-2021- மிதுனம்.

24-2-2021- கடகம்.

26-2-2021- சிம்மம்.

rasi

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய். திரிகோணாதிபதி சூரியனின் சாரம். (கார்த்திகை நட்சத்திரம்). சூரியனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் கேந்திரமாக இருக்கிறார் கள். ஒரு ராசிநாதன் அல்லது லக்னநாதன் சுயசாரம் பெற்றாலும் அல்லது அவருடைய உச்ச ராசிநாதனின் சாரம் பெற்றாலும் கேந்திர திரிகோணம் பெற்றாலும் நற்பலன்களே நடக்கும். 6, 8, 12-ல் மறையும் கிரகங்கள்கூட மேற்படி சுபகிரக சாரம் பெற்றால் கெடுதல் ஏற்படாது; நல்லது நடக்கும். அதேசமயம் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது ஒருவகையில் உங்களுக்குப் பொருளாதாரத் தேக்கத் தையும், குடும்பக் குழப்பத் தையும் உருவாக்கும். என்றாலும் ராகுவுக்கு குருபார்வை இருப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. ராகுவை மட்டும் குரு பார்க்கிறார்; கேதுவைப் பார்க்கவில்லையே என்ற சந்தேகம் வரலாம். ராகு அல்லது கேது இருவரில் யாராவது ஒருவரைப் பார்த்தாலும் குரு பார்க்க கோடி நன்மை என்பதுபோல தோஷம் விலகும்; நல்லது நடக்கும். எல்லாவற்றுக்கு மேலாக 11-ல் சூரியன் இருப்பது உங்களுக்கு மாபெரும் பலம். ஒரு முகூர்த்த லக்னத் திற்கு 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால் அந்தக் காரியம் தங்குதடையின்றி மிகச் சிறப்பாக அமையும் என்பது ஜோதிடவிதி. ஆகவே, உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவில் சிறப்படையும். நாள் செய்வதை நல்லோர் செய்யார் என்பது பழமொழி.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனியும் அவருடன் இருக்கிறார். அத்துடன் குருவின் ராசியான மீன ராசியின் உச்ச ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிநாதனா கவே அமையப் பெற்று கூடியிருப்பது பெரும் பாக்கியம். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்பது குறள். தெய்வத்தாலாகாது என்பது ஒன்றும் இல்லை. எல்லாம் இறைவன் கட்டளைப்படிதான் நடக்கிறது. அப்படியானால் மேற்கண்ட குறளுக்கு என்ன அர்த்தமென்றால்- உங்கள் முயற்சிக் கேற்ற முழுப்பலனும் நூற்றுக்கு நூறு உண்டு என்பது தெளிவு! அதனால்தான் "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்று முன்னோர்கள் கூறினார்கள். ஜென்மத் திலிள்ள ராகுவும், 7-ல் உள்ள கேதுவும் இடையூறுகளையும் தடைகளையும் குறுக்கீடுகளையும் ஏற்படுத்தினாலும், 9-ல் உள்ள குரு நீசபங்க ராஜயோகம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், ஒரு திரைப்படத்தில் நடிகர் விஜய் "ஆல் இஸ் வெல்' என்று சொல்வதுபோல எல்லாம் நல்லதாகவே நடக்கும். அதனால்தான் பெரியோர்கள் "நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்' என்றார்கள். 10-ல் உள்ள சூரியன் தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் நற்பலன்களைத் தருவார். தேக ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்ப முன்னேற்றம் எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு 8-ல் புதன், குரு, சுக்கிரன், சனி நால்வரும் மறைகிறார்கள். அதேபோல செவ்வாயும் ராகுவும் 12-ல் மறைகிறார்கள். எனவே, இந்த வாரம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் கல்லிலே நார் உரிப்பதைப்போல கடும் பிரயாசையாகக் காணப்படும். அதற்காக மனமுடைந்து மூலையிலேயே முடங்கிவிடாதீர்கள். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதுபோல உங்கள் விடாமுயற்சி வெற்றியைத் தேடித்தரும். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான். ராஜகுல மன்னனாக இருந்த விசுவாமித்திரர் வசிஷ்டர் வளர்த்த காமதேனுவை அபகரிக்க முயன்று தோற்றுப்போனார். அமைச்சரின் ஆலோசனைப்படி ராஜயோகத்தைத் துறந்து தவமிருந்து ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார். தவமும் முயற்சி யும் அவரை கௌசிக முனிவராக்கியது. பிரம்மரிஷி ஆனார். அதனால்தான் பெரியோர்கள், "தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்' என்றார்கள். செல்வம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல; பதினாறுவகைப் பேறுகளையும் குறிக்கும். 9-ல் உள்ள சூரியன் உங்களுக்கு ஆற்றலைத் தருவார். மணமாகாத பருவ வயதில் குந்திதேவி பெற்ற மந்திர உபதேசத்தால் கர்ணனைப் பெற்றெடுத்தாள். ஆக, தவத்திற்கும் மந்திரத்திற்கும் சக்தியுண்டு என்பது தெளிவாகிறது. புராண காலத்தில் மந்திர சக்தியால் போர்புரிந்து வெற்றியடைந்தார்கள்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தையே பார்க்கிறார். 11-ல் இருக்கும் ராகு சாரம் பெறுகிறார் (சதயம்). 6, 8, 12-ல் மறையும் கிரகங்கள் 2, 11, கேந்திர திரிகோணம் பெறுகிறபோது அல்லது அந்த வீடுகளில் சம்பந்தப்படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். எனவே, 8-ல் மறையும் சூரியன் 2-க்குடையவர் என்பதாலும், 11-ல் இருக்கும் ராகுசாரம் பெறுவதாலும் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் யோகங் களும் உங்களைத் தேடிவரும். 11-ல் உள்ள செவ்வாயும் ராகுவும் எதிர்பாராத வெற்றிகளையும் தேடித்தரும். 11-ஆமிடம் என்பது வெற்றி ஸ்தானம், ஜெய ஸ்தானம், லாப ஸ்தானம். அங்கு 5, 10-க்குடைய செவ்வாய் இருப்பது எதிர்பாராத யோகத்தைக் குறிக்கும். 5 என்பது திரிகோணம், 10 என்பது கேந்திரம். எந்த ஒரு கிரகத்திற்கு அல்லது எந்த ஒரு ராசிக்கு கேந்திரம் திரிகோணம் அல்லது இரண்டும் கிடைக்கிறதோ அந்த கிரகம் அல்லது அந்த ராசிக்கு ராஜயோகமாகும். கடக ராசிக்கு செவ்வாய் ராஜயோக கிரகம். அவர் நிற்கும் இடமும் பார்க்கும் இடமும் யோகமாக அமையும். செவ்வாய் சகோதரகாரகன் 5, 10-க்குடைய வர். ஆகவே, பிள்ளைகளாலும் தொழில்வகையிலும் சகோதரவகையிலும் நண்பர்கள்வகையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். வைத்தியச்செலவுகள் விலகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 10-ல் திக்பலம் பெறும் செவ்வாயும் ராசியைப் பார்க்கி றார். செவ்வாய் 4, 9-க்குடையவர். அதாவது கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்திய மும் செவ்வாய்க்குக் கிடைக்கிறது. கேந்திரம் என்பது முயற்சி; ஸ்தானம். திரிகோணம் என்பது தெய்வ அனுகூல ஸ்தானம். நினைப் பது மனித முயற்சி; நிறைவேற்றுவது இறைவன் கருணை. எனவே, உங்கள் முயற்சிகளை இறைவன் நிறைவேற்றித் தருவார். புதன், குரு, சுக்கிரன், சனி நால்வரும் 6-ல் மறைகிறார் கள். என்றாலும் 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். அதுவே வாழ்க்கை ஸ்தானமும் ஆகும். வாழ்க்கை, தொழில் இருவகையிலும் கடந்தகாலத்தில் நிலவிய கஷ்டங்களும் பிரச்சினைகளும் விலகி இஷ்டம்போல் எல்லாம் கூடிவரும். 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் அந்த ஜாதகருக்கு எப்போதும் வீழ்ச்சியில்லை. தாழ்ச்சியில்லை. கலைஞருக்கும், இந்திராகாந்திக்கும் மேற்படி யோகம் இருந்த காரணத்தால்தான் கலைஞர் எந்தத் தேர்தலிலும் தோற்றது இல்லை. தர்மமிகு வாழ்வுதனை சூதுகவ்வும் என்றாலும் தர்மமே வெல்லும் என்ற நியதிப்படி, சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட இந்திராகாந்தி சிக்மகளூர் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியாகி மீண்டும் பிரதமரானார்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் திரிகோணம் பெறுகிறார். (5-ஆமிடம்). அவருடன் 4, 7-க்குடைய குருவும் சம்பந்தம். 2, 9-க்குடைய சுக்கிரனும் சம்பந்தம். இவர்களுடன் 10-க்குடைய புதனும் சம்பந்தம். ராசிநாதனே 10-க்கும் உடையவராவார். ஒரு கேந்திராதிபதி திரிகோணம் பெறும்போது எல்லா கிரக சோதனைகளையும் வென்று சாதனை படைப்பார்கள். ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரம் ஏறினால் கேந்திர தோஷம். ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணம் ஏறினால் ராஜயோகம். ஜாதக தசாபுக்திகளுக்கு இந்த விசேஷவிதி நூற்றுக்குநூறு பொருத்தமாக அமையும். அதேபோல கெட்ட கிரகம் கெட்டுப் போனா லும் "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம்.' அதாவது டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோல! எல்லாம் நன்மையாக முடியும். துவர்க்கும் நெல்லிக்காய் உமிழ்நீர் பட்டவுடன் இனிக்கும் என்றமாதிரி- கெடுதலும் நல்லதாக முடியும். கன்னி ராசிக்கு 5, 9 என்ற இரண்டு திரிகோணங்களிலும் முக்கியமான கிரகங்கள் அமைவதால் உங்கள் முயற்சிகளுக்கு தெய்வம் பரிபூரணக் கிருபையாக ஆசிர்வதிக்கும். அதனால் தேக ஆரோக்கியம், பொருளாதார முன்னேற் றம், முயற்சிகளில் வெற்றி, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடையலாம். வரவு- செலவு திருப்திகரமாக செயல்படும். வரவேண்டியது வரும். கொடுக்க வேண்டியதும் அடைபடும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திர பலம் பெறுகிறார். அவருடன் 9, 12-க்குடைய புதனும், 3, 6-க்குடைய குருவும் சம்பந்தம் பெறுவது ஒரு வகையில் மைனஸ் பாயின்ட்டுதான். ஆனால் இவர்களுக்கு வீடுகொடுத்த சனி அங்கு ஆட்சிபெறுவதால், டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ் என்பதுபோல கெடுதல் விலகி நல்லதாக மாறுகிறது. எனவே, உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் செயல்களும் விரும்பியதுபோல நிறைவேறும். 7-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதாலும், ராகு- கேது சம்பந்தம் பெறுவதாலும், 5-ல் சூரியன் இருப்பதாலும் சனி ராசியைப் பார்ப்பதாலும் சிலருக்கு புத்திர தோஷம். சிலருக்கு களஸ்திர தோஷம், ஏற்பட இடமுண்டு. ஜனன ஜாதகரீதியாகவும். மேற்படி தோஷம் இருந்தால் உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. ஒருசிலர் வாழ்க்கையில் தவளை தன் வாயால் கெட்டதுபோல பேச்சினாலேயே பிரச்சினைகளை உருவாக்கி வேதனைக்குள்ளாவர். ஒரு சிலருடைய அனுபவத்தில் தனக்கு வரவேண்டிய ராஜயோகத்தை விபரீதப் பேச்சாலேயே கெடுத்துக்கொள்வார்கள். 2-ல் கேது- 2-ஆமிடத்தைப் பார்க்கும் செவ்வாய், ராகுவே இவற்றுக்குக் காரணம். அத்துடன் வாக்கு, காரகன் குருவும் நீசம், ஆகவே, "மௌனம் கலக நாஸ்தி' என்பதுபோல அமைதியைக் கடைபிடித்தால் நன்மை!

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பது ஒருவகையில் தோஷம். அதேபோல 7-க்குடைய சுக்கிரனும் அட்டமாதிபதி புதனும் சனியோடு சேர்ந்திருப்பதாலும், நீச குரு சம்பந்தப்படுவதாலும் களஸ்திர தோஷம், புத்திர தோஷத்தையும் சந்திக்க நேரலாம். புத்திர காரகனும் 5-க்குடையவருமான குரு நீசபங்க ராஜயோகம் பெறுவதால் முறையான பரிகாரங்களைச் செய்து களஸ்திர தோஷத்தையும் புத்திர தோஷத்தையும் நிவர்த்தி செய்துகொள்ளலாம். நாகதோஷ நிவர்த்திக்கு சூலினிதுர்க்கா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும் செய்வது அவசியம். பெண்களின் திருணத்தடைக்கு சுயம்வரகலா பார்வதி ஹோமமும், ஆண்களின் களஸ்திர தோஷநிவர்த்திக்கு கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொள்வது அவசியம். 10-க்குடைய சூரியன் 4-ல் அமர்ந்து 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும், ராசிநாதன் செவ்வாயும் 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் தொழில்துறையிலும் வாழ்க்கை அமைப்பிலும் நிலவிய கடுமையான தோஷங்கள் விலகி நல்லது நடக்க வாய்ப்புண்டு. சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் சுயதொழில் புரியலாம். அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி, ஊதி உயர்வு போன்ற நன்மைகள் நடக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசபங்க ராஜயோகமாக இருக்கிறார். அதாவது நீச கிரகத்திற்கு வீடுகொடுத்த கிரகம் சனி ஆட்சிபெறுவதால், நீசகிரகம் நீச பங்கமாகி நீச பங்க ராஜயோகமாகிறது. உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எதற்கும் பங்கமில்லை. 6-க்குடைய சுக்கிரன் குடும்பஸ்தானத்தில் அமர்ந்து சனி சம்பந்தப்படுவதால், சிலருக்கு உறவினர்கள் வகையில் வருத்தங்களும் சங்கடங்களும் ஏற்படலாம். குரு 4-க்குடையவர் என்பதால் சிலருக்கு பூமி, வீடு, கட்டடம் சம்பந்தமான சுபச்செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு சுபக்கடன் ஏற்படலாம். வீடு, மனை, வாகனம் போன்றவகையில் சுபச்செலவுகளும் வரலாம். சிலருக்கு பழைய கடன் அடைபட புதிய கடன் உருவாகலாம். அதாவது கடன்வாங்கிக் கடனைக் கொடுக்கவேண்டும். 6-ல் உள்ள செவ்வாய், ராகுவால் சத்ரு ஜெயம், வழக்குகளில் வெற்றி, ரத்தபந்த சொந்தம்வகையில் வருத்தமூட்டும் நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் தெளிவான நிலையும் எதிர் பார்க்கலாம். மனதில் நிலவிய இனம்புரியாத கவலைகளும் மனக்குழப்பமும் கற்பனை பயமும் மாறும்; விலகி ஓடும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். 6-க்குடைய புதனும், 12-க்குடைய குருவும் ஜென்ம ராசியில் இருந்தாலும், புதன் 9-க்குடையவர் என்பதாலும் அவருடன் சேர்ந்துள்ள சுக்கிரன் 5-க்குடையவர் என்பதாலும், உங்கள் எண்ணங்களும் கருத்துகளும் நியாயமான கோரிக்கைகளும் எளிதாக ஈடேறும். 5-ல் செவ்வாய், ராகு சம்பந்தம் பெறுவதால் ஒருசிலருக்கு பிள்ளைகள்வகையில் பிரச்சினைகளும் தொல்லைகளும் ஏற்பட இடமுண்டு. ஜாதகரீதியாக யோகமான தசாபுக்திகள் நடந்தால் வம்புத் தொல்லைகள் அன்புத் தொல்லைகளாக மாறிவிடும். ஜென்மச் சனி நடப்பதால் சிலருக்கு குடியிருப்பு மாற்றம், தொழில் மாற்றம், பதவி மாற்றம், ஊர்மாற்றம் போன்றவை ஏற்பட இடமுண்டு. 5, 9-க்குண்டான யோக தசாபுக்திகள் நடந்தால் அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் வருத்தமூட்டும் பின்னேற்றகரமான மாறுதல்களாக அமையும். என்றா லும் அடிப்படை வாழ்க்கை வசதிகள், பொருளாதாரம் தொழில்துறையில் பாதிப்புக்கு இடமில்லாதவகையில் சமாளிக்கலாம். எந்த மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றம் அனுகூலமான மாற்றமாக அமைய இறைவழிபாடு செய்யுங்கள்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்று அடிக்கடி எழுதுவேன். அதற்குக் காரணம் ராசிநாதனே விரயாதிபதியுமாக ஆகிறார். அதாவது தனக்குதானே விரயம் என்பது பொருள். மற்ற ராசிகளில் 1, 6 என்றும், 1, 8 என்றும் அமையும். 6 என்பது எதிர்ப்பு, இடையூறு, போட்டி, பொறாமை. 8 என்பது ஏமாற்றம் சஞ்சலம். கவலை. இதில் 1, 12 என்பதுதான் பாதிப்பான கொடுமை. அதாவது எழுதி எழுதி கிழித்துப் போட்டு மீண்டும் எழுதுகிற மாதிரியான நிலைக்குச் சமம். இதனால் கால விரயம். கருத்து விரயம், எல்லாம் உண்டாகிறது. தெளிவாகச் சிந்தித்து தெளிவாக செயல்படும் நிலை என்பதற்கு இடமில்லாமல் போகிறது. அதனால்தான் கும்ப ராசிக்காரர்களை அனுதாபத்திற்குரியவர்கள் என்று வர்ணிக்கிறேன். நல்ல ஜாதக தசாபுக்திகள் யோகமாக நடந்தால், அனுதாப அலையே வெற்றி அலையாகமாறி ஜெயத்தை உண்டுபண்ணலாம். ஒரு தேர்தலில் எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாத நிலையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுபோல, சிலசமயம் உங்களுக்கு அனுதாப அலை ஆதரவு அலையாக மாறும். 10-ல் கேது நின்றாலும் 10-க்குடைய செவ்வாயே 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் பதவி, தொழில், வாழ்க்கை, உத்தியோகம் எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றியைப் பிடிக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீசபங்க ராஜயோகமாக அமைகிறார். குரு 1, 10-க்குடையவர். 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4, 7-க்குடைய புதன் சம்பந்தம். இவர்களுடன் 3, 8-க்குடைய சுக்கிரனும் சம்பந்தம். ரோஜா செடியில் மலரைப் பறிக்கும்போது கையில் முள் குத்துவதைப்போல ஒருசில நேரம் ஒருசில பிரச்சினைகள் உங்கள் மனதைக் காயப்படுத்தலாம். சொந்த பந்தம் உறவினர் கள்வகையில் வருத்தம் தரும் நிகழ்வுகளும் இடம்பெறலாம். என்றாலும் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதுபோலவும், நீரடித்து நீர் விலகாது என்பதுபோலவும் எல்லாவற்றையும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. இந்த பெருந் தன்மையே உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் வேதனைகளை விரட்டியடித்து சாதனைகளைப் படைக்கச் செய்யும். அதேசமயம் "மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்ற அவ்வை சொல்லுக்கும் மதிப்பளித்து, உங்கள் தன்மானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும். இதில் எதைக் கடைப்பிடிப்பது என்ற கேள்வி, குழப்பம் ஏற்பட்டால் அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ளுங் கள். எல்லாவகையிலும் எதிர்மறையும் உண்டு: உடன்மறையும் உண்டு. அதனால் சந்தர்ப்பம்போல் நடந்துகொள்வது அவசியம்.

bala260221
இதையும் படியுங்கள்
Subscribe