முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை- 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.

Advertisment

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அனுஷம்- 1.

Advertisment

செவ்வாய்: விசாகம்- 1.

புதன்: விசாகம்- 4.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: பூராடம்- 2.

சனி: திருவோணம்- 2.

ராகு: கிருத்திகை- 4.

கேது: அனுஷம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

21-11-2021

இரவு 9.10 மணிக்கு மிதுனம்.

24-11-2021

காலை 9.50 மணிக்கு கடகம்.

26-11-2021

இரவு 8.35 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் கஷ்டங்கள் விலகி வளமான பலனைப் பெறுவீர்கள். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடிவரும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல செய்திவரும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வேலைப்பளு அதிகரிக்கும். ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வும். சூரியன் 8-ல் சஞ்சரிப்ப தால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி கிடைக்கும். அவபெயர் நீங்கும்; திறமைகள் வெளிப்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். சிலருக்கு வாகனங்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். செவ்வாய்க் கிழமை கோவிலுக்குச் சென்று தீபமேற்றி முருகக் கடவுளை வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் நன்மைகள் உண்டாகும். கந்தசஷ்டிக் கவசம் படிப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தெம்புடன் செயல்பட முடியும். புதன் 7-ல் இருப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றவாறு அமைந்து அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நெருங்கியவர் களே இடையூறுகளை உண்டாக்குவார்கள். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பதும், குடும்பத்தில் உள்ளவர் களை அனுசரித்து நடந்து கொள்வதும் சிறப்பு. ராசியாதிபதி சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகலாம் என்பதால் வேலைச் சுமையைக் குறைத்துக்கொள்ளவும். வெளியூர் நபர்களின் தொடர்புகள்மூலம் நற்பலன் கிட்டும். இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல், டென்ஷன்களைக் குறைத்துக் கொள்ள முடியும். சனி 9-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், தொழில், வியாபாரம் செய்பவர் கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் உங்களின் தனித்திறனால் எடுக்கும் பணியை சிறப் பாகச் செய்வீர்கள். குரு 10-ல் இருப்ப தால் கொடுக்கல்- வாங்கலில் அதிக முதலீடுகளைத் தவிர்க்கவும். ஞாயிற்றுக் கிழமை சிவ வழிபாடு செய்வதும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வதும் சிறப்பு.

tt

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சூரியன்- கேது சேர்க்கை பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்தகால பணப் பிரச்சினைகள் விலகி தாராள தனச்சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள்வழியில் அனு கூலம் ஏற்படும். செவ்வாய் 5-ல், சனி 8-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை மிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த பொருட் தேக்கங்கள் விலகி முன்னேற் றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைந்து கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாய்ப்புகள் கிடைத்து நிம்மதி ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் இருந்த தடைகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். வாகனங்களில் செல்லும் போது சற்று நிதானித்துச் செல்லவும். செவ்வாய்க்கிழமை விரதமிருந்து துர்க்கையம்மனுக்கு நெய்தீபமேற்றி வழிபடுவதும், சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவதும் நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சூரியன், கேது 5-ல் சஞ்சரிப்பதால் வயிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சுக்கிரன் 6-ல், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எனவே ஆடம்பர செலவுகளைக் குறைக் கவும். புதன் 5-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால், எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு ஏற்றங்களை அடை வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குரு பார்வை 2-ஆம் வீட்டிற்கு இருப்பதால் ஒற்றுமை குறையாது. இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் செய்யும் செயல்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. முன்ஜாமின் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த வேண்டாம். தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக் குப்பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பளு அதிகரித்தாலும், உயரதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நிம்மதி உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு நன்று. ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு தலத்திற்குச் சென்று முருகனை வணங்குவது மிக நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

குரு 7-ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிபெறுவீர்கள். பணம் பலவழிகளில் தேடிவரும். சிலருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்புண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சனி சஞ்சரிப்பதால் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி நிம்மதி ஏற்படும். கடந்தகாலங்களில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது எளிதில் கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை வலுப்பெறும். ராசியாதிபதி சூரியன், 4-ல் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி ஏற்படலாம். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிக நல்லது. சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறுவது மட்டுமின்றி, வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பணப்புழக்கத்தில் சிறப் பான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறைந்து கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். புதன்கிழமை ஆலயம் சென்று பெருமாளை தரிசிப்பதாலும், விஷ்ணு சகஸ்கரநாமம் ஜெபிப்பதாலும் மேன்மையான பலன்களை அடையலாம்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சூரியன், கேது சேர்க்கைபெற்று முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பணவரவுகள் சாதகமாக இருக்கும். எனினும் குரு 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். குரு பார்வை 2-ஆம் வீட்டிற்கு இருப்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடு கொண்ட காரியங்களில் கவனமுடன் செயல்பட்டால் பணத்தைப் பாதுகாக்க முடியும். சந்திரன் 10, 11 ஆகிய ராசிகளில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், மேலே குறிப்பிட்ட நாட்களில் அன்றாடச் செயல்களில் அனுகூலப்பலனைப் பெறலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகள் இருந்தாலும் தங்கள் தனித்திறமையால் எளிதில் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கவேண்டிய உயர்வுகள் சிறு தடை, தாமதத்திற்குப் பின் கிடைக்கும். வியாழக்கிழமை விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் நேரம் என்பதால், முடிந்தவரை கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். தாராள தனச் சேர்க்கை ஏற்படும். சுக்கிரன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் எதிலும் தெம்புடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். பணியில் பலருக்கு ஆலோசனை வழங்கும் ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து தொழிலை மேன்மைப்படுத்த முடியும். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தேய்பிறை அஷ்டமியன்று உபவாசமிருந்து, பைரவருக்கு செவ்வரளி மாலைசாற்றி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவதால் கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பது சகல விதத்திலும் முன்னேற் றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால், உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை, பிள்ளைகள்மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவேண்டும். ஞாயிறு, சனிக்கிழமை களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளும், அன்றாடப் பணியில் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். தொழில், வியாபாரிகளுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்லில் சரளமான நிலை காணப்படும். ஆடம்பரப் பொருட்சேர்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமிக்கு வெள்ளைநிற ஆடை சாற்றி, வெண்தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குரு 3-ல் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்கவேண்டிய வாரமாகும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி 2-ல், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது, முன்கோபத்தைக் குறைப் பது, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், கூட்டாளிகளின் உதவியால் ஒருசில அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். ராசிக்கு 6, 7-ல் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட நாட்களில் உங்களின் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடைப்பட்டாலும், உயரதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் பணியை சிறப் பாகச் செய்யமுடியும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும், எதிலும் துணிவுடன் செயல்பட்டு லாபத்தைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருக்கவும். சனிபகவான், அனுமன் மற்றும் விநாயகரை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன், புதன், கேது இனைந்து 11-ல் சஞ்சரிப்பதால் நீண்டநாள் கனவுகள் நிறைவேறி நிம்மதி உண்டாகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். ஜென்ம ராசியில் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல்நிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளமுடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் கடந்தகாலத் தடைகள் விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாய் 10-ல் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சிறப் பான பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து நிம்மதி ஏற்படும். சனிக்கிழமை விரதமிருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியையும் மனமுருகி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வநிலை உயரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ஆம் அதிபதி புதன், 7-ஆம் அதிபதி சூரியன் இணைந்து உச்ச கேந்திரமான 10-ல் சஞ்சரிப்பதால், உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பாராத திடீர் தன வரவுகள் ஏற்பட்டு கடந்தகால கடன்களைத் தீர்க்கமுடியும். அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லசெய்தி கிடைக்கும். ராகு 4-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். எனவே உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்து, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். அசையும்- அசையா சொத்துகள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சந்திரன் இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் செய்யும் செயல்களுக்கு எதிர்பார்த்ததைவிட சிறப்பான பலனை அடையமுடியும். கேது 10-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருக்கும் இடையூறுகள் விலகும்; அடைய வேண்டிய லாபத்தை அடையமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ளலாம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு திறமைக் கேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். சனிக்கிழமை விரதமிருந்து கோவிலுக்குச் சென்று நவகிரகங்களில் சனிக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி சங்கு மலர்களாலும், ராகுவுக்கு மந்தாரை மலர்களாலும் அர்ச்சனை செய்வது மிக நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசிக்கு 3-ல் ராகு, லாப ஸ்தானத் தில் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் துணிவுடன் செயல்பட முடியும். சூரியன், புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு சிறப்பாக இருந்து வளமான பலனைப் பெறுவீர்கள். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி கிடைக்கும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதும், தூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இவ்வாரத்தில் சந்திரன் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் எண்ணம் நிறைவேறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சஷ்டியன்று விரதமிருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிக நல்லதாகும். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கு வதும் சிறப்பு.