இந்த வார ராசிபலன் 20-9-2020 முதல் 26-9-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-20-9-2020-26-9-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரம்- 2, 3, 4.

செவ்வாய்: அஸ்வினி- 3.

புதன்: சித்திரை- 2, 3, 4.

குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1.

சுக்கிரன்: ஆயில்யம்- 2, 3, 4.v சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 2.

கேது: கேட்டை- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

21-9-2020- துலா புதன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

21-9-2020- விருச்சிகம்.

23-9-2020- தனுசு.

25-9-2020- மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். அஸ்வினியில் கேதுவின் சாரம் பெறுகிறார். கேதுவும் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் பலம்பெறுகிறார். ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெறுவதுபோல், அவருக்கு சாரம்கொடுத்த கிரகமும், வீடுகொடுத்த கிரகமும் அவருக்குத் தொடர்புடைய அமைப்பிலிருந்தால் நன்மையாகவே நடக்கும். செவ்வாய்க்கு சாரம்கொடுத்தவர் கேது (அஸ்வினி). கேது ராசிக்கு 8-ல் மறைவுபெற்றாலும் செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் மறைவு தோஷம் கேதுவுக் கில்லை. உங்களுடைய முயற்சிகளில் தோவிக்கு இடமில்லை; ஏமாற்றத்திற்கும் இடமில்லை. 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். அதேபோல, மற்றவர்கள் சொல்லும் உங்களைக் காயப்படுத்தலாம். இருந் தாலும், குரு ராசியைப் பார்ப்பதால், "சிறியோர் செய்த செயலை பெரியோர் பொறுத்தருள்வது கடமை' எனப் பெருந்தன்மையாக நடந்துகொள்வீர்கள். 2-ஆமிடத்து ராகுவும் 8-ஆமிடத்துக் கேதுவும் உங்களையறியாமல் மற்றவரைப் புண்படுத்தும்படி பேசவைக்கும். எல்லாவற்றையும் "டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ளுங்கள். "நண்பா' திரைப் படத்தில் "ஆல் இஸ் வெல்' என்று சொன்னது போல, எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொண்டால் வருத்தமுமில்லை; வேதனையுமில்லை. குடும்பச் சூழ்நிலையிலும் பொருளாதாரத்திலும் திட்டமிட்டபடி வரவு- செலவு நடக்கும். காரியங்கள் கைகூடும். 9-ல் குரு, சனி சேர்க்கை இருப்பது தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். அது உங்களை வழிநடத்தும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ராகு நிற்க, 7-ல் கேது இருப்பதால், நீங்களும் குழப்பமடைந்து மற்றவரையும் குழப்பமடையச் செய்வீர்கள். வீட்டில் பாம்பு நுழைவதைப் பார்த்தவர், அதைக் கண்டுபிடித்து அடிக்காதவரை நிம்மதியாக வீட்டிலிருக்க முடியுமா? அது போலதான் உங்கள் நிலை. மேலும், குருவும் சனியும் 8-ல் மறைவதும், 7-க்குரிய செவ்வாய் 12-ல் மறைவதும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, குடும்பத்தில் உள்ளவர்களின் பேச்சும் செயலும் உங்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல புண்படுத்தும். "துணைவன்' என்ற திரைப்படத்தில், வாரியார் சுவாமிகள் கதாநாயகன் ஏ.வி.எம். ராஜனிடம், ""உன் வழியே மனைவி வரவில்லையென்றால், சிறிதுகாலம் மனைவிவழியே நீ போனால், அடுத்து அவர் உன்வழியே வந்துவிடுவார்'' எனச் சொல்வார். அதுபோல, உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கா மல் எதிர்வாத

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரம்- 2, 3, 4.

செவ்வாய்: அஸ்வினி- 3.

புதன்: சித்திரை- 2, 3, 4.

குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1.

சுக்கிரன்: ஆயில்யம்- 2, 3, 4.v சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 2.

கேது: கேட்டை- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

21-9-2020- துலா புதன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

21-9-2020- விருச்சிகம்.

23-9-2020- தனுசு.

25-9-2020- மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். அஸ்வினியில் கேதுவின் சாரம் பெறுகிறார். கேதுவும் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் பலம்பெறுகிறார். ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெறுவதுபோல், அவருக்கு சாரம்கொடுத்த கிரகமும், வீடுகொடுத்த கிரகமும் அவருக்குத் தொடர்புடைய அமைப்பிலிருந்தால் நன்மையாகவே நடக்கும். செவ்வாய்க்கு சாரம்கொடுத்தவர் கேது (அஸ்வினி). கேது ராசிக்கு 8-ல் மறைவுபெற்றாலும் செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் மறைவு தோஷம் கேதுவுக் கில்லை. உங்களுடைய முயற்சிகளில் தோவிக்கு இடமில்லை; ஏமாற்றத்திற்கும் இடமில்லை. 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். அதேபோல, மற்றவர்கள் சொல்லும் உங்களைக் காயப்படுத்தலாம். இருந் தாலும், குரு ராசியைப் பார்ப்பதால், "சிறியோர் செய்த செயலை பெரியோர் பொறுத்தருள்வது கடமை' எனப் பெருந்தன்மையாக நடந்துகொள்வீர்கள். 2-ஆமிடத்து ராகுவும் 8-ஆமிடத்துக் கேதுவும் உங்களையறியாமல் மற்றவரைப் புண்படுத்தும்படி பேசவைக்கும். எல்லாவற்றையும் "டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ளுங்கள். "நண்பா' திரைப் படத்தில் "ஆல் இஸ் வெல்' என்று சொன்னது போல, எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொண்டால் வருத்தமுமில்லை; வேதனையுமில்லை. குடும்பச் சூழ்நிலையிலும் பொருளாதாரத்திலும் திட்டமிட்டபடி வரவு- செலவு நடக்கும். காரியங்கள் கைகூடும். 9-ல் குரு, சனி சேர்க்கை இருப்பது தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். அது உங்களை வழிநடத்தும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ராகு நிற்க, 7-ல் கேது இருப்பதால், நீங்களும் குழப்பமடைந்து மற்றவரையும் குழப்பமடையச் செய்வீர்கள். வீட்டில் பாம்பு நுழைவதைப் பார்த்தவர், அதைக் கண்டுபிடித்து அடிக்காதவரை நிம்மதியாக வீட்டிலிருக்க முடியுமா? அது போலதான் உங்கள் நிலை. மேலும், குருவும் சனியும் 8-ல் மறைவதும், 7-க்குரிய செவ்வாய் 12-ல் மறைவதும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, குடும்பத்தில் உள்ளவர்களின் பேச்சும் செயலும் உங்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல புண்படுத்தும். "துணைவன்' என்ற திரைப்படத்தில், வாரியார் சுவாமிகள் கதாநாயகன் ஏ.வி.எம். ராஜனிடம், ""உன் வழியே மனைவி வரவில்லையென்றால், சிறிதுகாலம் மனைவிவழியே நீ போனால், அடுத்து அவர் உன்வழியே வந்துவிடுவார்'' எனச் சொல்வார். அதுபோல, உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கா மல் எதிர்வாதம் செய்தால், நீங்களும் மறுவாதம் செய்யாமல் விட்டுக் கொடுத்துப்போனால் பிரச்சினைகள் வளராது. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. இவையெல்லாம் 8-ல் மறையும் குரு, சனியின் பலனாகும். ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந்தாலும், 2, 5-க்குரிய புதன் சாரம் பெறுவதால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் பாதிப்புக்கு இடமில்லை. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். குடியிருப்பு, பதவி, தொழில்துறையில் மாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

rr

மிதுன ராசிக்கு குரு, சனி இருவரின் பார்வை கிடைப்பதோடு, ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கிறார். குரு, சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். சனி ராசியைப் பார்ப்பதோடு ராசிதாதன் புதனையும் பார்க்கிறார். 21-ஆம் தேதி புதன் துலா ராசிக்கு மாறினாலும் திரிகோணம் பெறுவதால் பலமுண்டு. குரு ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய செயல்கள் யாவும் திட்டமிட்டபடி பூர்த்தியடையும். சனி 9-க்குரியவர், குரு 10-க்குரியவர் என்பதால், உங்கள் முயற்சிகளுக்கு தெய்வம் உறுதுணையாக இருந்து வழிநடத்தும். "மனிதன் நினைக்கி றான்- இறைவன் நிறைவேற்றுகிறான்' எனச் சொல்வார்கள். அது உங்கள் விஷயத்தில் பரிபூரணமாக செயல்படும். 12-ல் உள்ள ராகு தவிர்க்கமுடியாத பயணங்களைத் தந்தாலும், அதனால் பயனும் பலனும் உண்டு. சிலர் டூரிஸ்ட் டாக்ஸி அல்லது ஆட்டோவகையில் முதலீடுசெய்து டிராவல் ஏஜன்சி நடத்தலாம். 6-ல் உள்ள கேது அதற்கான பொருளாதாரத்தை வங்கிக்கடன் வடிவில் ஏற்படுத்திக் கொடுப்பார். இப்படி சொந்தத் தொழிலில் முதலீடு செய்யமுடியாதவர்கள் கடல்கடந்து முஸ்லிம் நாடுகளுக்கு வேலைக்குப்போய் சம்பாதிக்கலாம். ராகு- முஸ்லிம் கிரகம். 12-ஆமிடம் அயல்தேசம். அடுத்து, அட்டமச் சனி வரப்போவதால் (டிசம்பர் 2020) குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லும் வாய்ப்பு உருவாகலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் 4, 11-க்குரிய சுக்கிரன் இருப்பது ஒருவகையில் பலம். தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகனவகையில் யோகம், லாபம், வழக்குகளில் வெற்றி, செய்யும் முயற்சிகளிலும் வெற்றி போன்ற பலன்களையெல்லாம் சந்திக்கலாம். கடக ராசிக்கு குருவும் சனியும் 6-ல் மறைகிறார்கள். 8-க்குரிய சனி 6-ல் மறைவது நல்லதுதான். ஆனால், 9-க்குரிய குருவும் 6-ல் மறைவது ஒருவகையில் கெடுதல்தான். அதேசமயம், 9-க்குரிய குரு ஆட்சிபெற்று 10-மிடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. எனவே, எந்தக் கெடுதலும் உங்களை வந்தடையாது. சொந்தத் தொழில் புரிகிறவர்களுக்கும் செவ்வாயை குரு பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் வழிநடத்தி லாபம் பெருகும்; கடன்கள் அடைபடும். வில்லங்கம், விவகாரமெல்லாம் வெற்றியடையும். குரு, சனி 6-ல் மறைவது போட்டி, பொறாமைகளை உருவாக்குமென்றாலும், 11-ல் பலம்பெறும் ராகு எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும். அரசியல், பொதுவாழ்க்கை, சாதிச் சமயச் சங்க ஈடுபாடுகளில் உங்களுக்குத் தன்னிகரற்ற வெற்றியுண்டாகும். பணபலம், படைபலம் படைத்தோரையும் உங்கள் கிரகபலத்தால் வெற்றிகொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதுதான் தெய்வ பலமென்பது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் தனது சுயசாரத்தில் (உத்திரம்) சஞ்சரிக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த புதனும் ஆட்சி பலம்பெறுகிறார். அவர்களை குருவோடு சேர்ந்த சனி பார்க்கிறார். ஜென்ம ராசியை சனியோடு சேர்ந்த குரு பார்க்கிறார். இதன் பலன்- மனைவியும் மக்களும் உங்களுக்கு இரு கைகளாக விளங்கி, இணைந்த கைகளாக மலர்ந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்கிறமாதிரியும், "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்கிறமாதிரியும் உங்களுக்கு உடன்பிறப்புகளும், மனைவி, மக்களும் உறுதுணையாக அமைந்து பெரும் வெற்றிபெறச் செய்வார்கள். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் துணையிருக்கும் என்பார்கள். அது தாயாகவும் இருக்கலாம்; தாரமாகவும் அமையலாம். 5-ல் ஆட்சிபெற்ற குரு ராசியைப் பார்ப்பதன் பலன் அது தான். தசாபுக்தி பாதகமாக இருந்தால், சிலருக்கு ஆரோக்கியக்குறைவும் வைத்தியச் செலவுகளும் வரலாம். தனக்கு வரவில்லை யெனில் தாய்க்கு வரலாம். இந்த இரண்டு வகையிலும் இல்லையெனில், வாகனவகை யில் பழுதுச்செலவுகள் வரலாம். ஜாதக தசா புக்தி யோகமாக இருந்தால், மேற்கண்ட வகையில் சுபமுதலீடுகள் செய்யலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். அவருக்கு சாரம்கொடுத்த செவ்வாயும் ஆட்சியாக இருக்கிறார். (சித்திரை நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரம்). இங்கு செவ்வாயும் புதனும் இயற்கையில் பகைவர்களென்றாலும், தற்போது தற்காலிக மித்ருவாக மாறுகிறார்கள். கொள்கை வேறுபட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டால், அவர்களுக்குள் பகை வராது; நட்புதான் இருக்கும் என்பதுபோல. இன்னொருவகையில், எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் எனவும் மாறலாம். 9-க்குரிய சுக்கிரன் 11-ல் நிற்பது, உங்கள் காரியங்களிலும் முயற்சிகளிலும் முழுவெற்றியடையலாம் என்பதைக் காட்டுகிறது. மேலும், 8-ல் ஆட்சிபெறும் செவ்வாய் 11-ஆமிடத்தைப் பார்ப்பது ஒருவகையில் வெற்றிக்கு அறிகுறியாகும். நீண்டநாள் பகையாக இருக்கும் பங்காளிகளும் உடன்பிறப்புகளும் இப்பொழுது நட்பாக மாறி உறவாடலாம். செவ்வாய்க்கு குரு பார்வை கிடைப்பதால், பொதுக்காரியங்களில் பகைத் தன்மை மாறுவதற்கு இடமுண்டு. அதேபோல, குடும்பத்திலும் உடன்பிறப்புகள்வகையிலும் பகை மறையும்; உறவு மலரும். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பது பழமொழி. அதை உணர்ந்து நடந்துகொள்வது நல்லது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கி றார். 9-க்குரிய புதன் சாரம் பெறுகிறார். இதற்கும் தர்மகர்மாதிபதி யோகமுண்டு எனலாம். 9, 10-க்குரியவர்கள் சேர்ந்தாலும் பார்த்தாலும், சாரப் பரிவர்த்தனையானா லும் எப்படி தர்மகர்மாதிபதி யோகம் அமையுமோ, அப்படி 9, 10-ல் இருக்கும் கிரகம் 9 அல்லது 10-க்குரிய சாரபலம் பெற்றாலும் தர்மகர்மாதிபதி யோகம் பலன் செய்யும். அலுவலகத்தில் விடுமுறையில் ஒருவரின் பதவியில் வேறொருவர் அமர்ந்து பணியாற்றினாலும், அந்தப் பதவியைப் பொருத்த அதிகாரங்கள் அவருக்குக் கிடைக்குமல்லவா- அதுபோல. அத்துடன் 9-ஆமிடத்தை குரு பார்க்கிறார். துலா ராசிக்கு குரு 3, 6-க்குரிய ஆதிபத்தியம் பெற்றாலும், ராசிநாதன் சுக்கிரனின் சாரத்தை குரு பெறுவதாலும் (பூராடம்), துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியோடு சேர்ந்திருப்பதாலும் குருவுக்கு 6-க்குரிய தோஷம் விலகும். எதிரியும் நண்பனாவதுபோல! அதாவது- எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் எனச் சொல்லலாம். முன்பொரு காலத்தில் இந்திய எல்லைப் பகுதியில் சீனா படையெடுத்தபோது, பகைக் கொள்கையுடைய எல்லாக் கட்சி களும் ஒன்றுதிரண்டு பொது எதிரியான சீனாவுக்கெதிரான எதிர்க்குரல் எழுப்பியது போல.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 2020, டிசம்பர்வரை ஏழரைச்சனி நடக்கிறது. சனி குருவோடு கூடியதால், மங்கு சனிப் பலனைத் தந்த சனி இனி பொங்கு சனியாக மாறிப் பலன் தருவார். சனியும் குருவும் பூராட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். 7-ல் ராகுவும், ஜென்மத்தில் கேதுவும் இருப்பது சிலருக்கு ஆரோக்கியக்குறைவையும், சிலருக்குக் கௌரவப் போராட்டத்தையும் ஏற்படுத்தினாலும், ராசிநாதனான செவ்வாயை ஆட்சிபெற்ற குரு பார்ப்பதால் வேதனைகளை விரட்டியடித்து சாதனைகளைப் படைக்கலாம். மேலும், ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும், அவரும் ராசியைப் பார்க்கிறார். போர்த் தந்திரத்தில் மறைந்திருந்து தாக்கும் முறை ஒன்றுண்டு. நிராயுதபாணியைத் தாக்குவது தர்மமில்லை. குருக்ஷேத்திரப் போரில் நிராயுதபாணியான அபிமன்யுவை கௌரவர்கள் தாக்கினார்கள். அதனால்தான், அபிமன்யுவின் தகப்பன் அர்ச்சுனன், ஜெயத்ரதனை வதம்செய்தான். 10-க்குரிய சூரியன் 11-ல் பலம்பெறுகிறார். அவரை சனியும் பார்க்கிறார். வில்லங்கம், விவகாரம், வழக்கு, வியாஜ்ஜியங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசியில் குருவும் சனியும் கூடியிருப்பதை "சண்டாளயோகம்' என்பார்கள். ஆனால், குரு ஆட்சிபெறுவதால் அந்த தோஷம் பாதிக்காது. ஆட்சியிலும் அதிகாரப் பீடத்திலும் இருப்பவர்கள் நல்லவர்களானாலும்- கெட்டவர்களா னாலும் அவர்களுக்கு மற்றவர்கள் அடிபணிந்துதானே செயல்படவேண்டும்? அதுபோலதான் இதுவும். அதேசமயம், 9-க்குரிய சூரியன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-க்குரியவரோடு சேர்ந்திருப்பதும் தர்மகர்மாதிபதி யோகம். மேலும், சூரியன், புதன் இருவரையும் சனி பார்ப்பதால், உங்களுக்கு எல்லாவகையிலும் காரிய ஜெயம், சத்ரு ஜெயம் எனப் பெருமை பேசலாம். 6-ஆமிடத்து ராகுவும் 12-ஆமிடத்துக் கேதுவும் அதற்குப் பக்கபலமாக அமைகிறார்கள். அதாவது, பாவ ஸ்தானத்தில் பாவகிரகங்கள் அமர்வது மைனஸ்* மைனஸ்= பிளஸ் என்பதுபோல, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாகும். கெட்ட இடத்தில் ஒரு கெட்ட கிரகம் அமர்வது யோகம். ஜென்மத்தில் குரு, சனி சேர்க்கை. 10-ல் சூரியன், புதன் சேர்க்கை. 5-ல் செவ்வாய் ஆட்சி. இவையெல்லாம் உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் பக்கபலமாக அமைகிறது.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். 2020, டிசம்பர்வரை விரயச் சனி. குருவோடுகூடிய விரயச்சனி சுப விரயச்சனியாக மாறும். குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உருவாகும். 4-ல் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். பூமி, வீடு, வாகனவகையில் சுபமுதலீடுகள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் அமையும். தாரமிழந்தவர்களுக்கு மறுதாரம் அமையும். அது ஏனென்றால், களத்திரகாரகன் சுக்கிரன் 8-ல் மறைவு; களஸ்திர ஸ்தானத்துக்கு சனி பார்வை. சுக்கிரனை செவ்வாய் பார்க்கிறார். பொதுவாக, ஆண் ஜாதகத்தில் 7-க்குரியவரும் அல்லது சுக்கிரனும் மறைந்தாலே இருமணம் என்பது விதி. அதேபோல, பெண் ஜாதகத்தில் 7-ஆமிடத்து குரு சனி, ராகு- கேது சம்பந்தம் பெற்றாலும் மாங்கல்ய தோஷம் என்பது விதி. அவரவர் ஜனன ஜாதகத்தில் மேற்சொன்ன கிரக அமைப்புகள் இருந்தால் மறுமணத்திற்கு இடமுண்டு. 2020, டிசம்பர்வரை விரயச்சனி நடப்பதால், இந்த விரயச்சனியின் பலனை சுபவிரயச்சனியின் பலனாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். கும்பம் எனில் குடம். ராசிநாதன் பார்வையால் நீங்கள் நிறைகுடம். நிறைகுடம் தளும்பாது. அகண்ட காவேரியைக் கமண்டலத்தில் அடக்கிய குறுமுனி அகத்தியரைப்போல, எல்லாம் அறிந்தும் தெரிந்தும் அடக்கமாக, அமைதியாக இருப்பீர்கள். 4-ல் ராகு, 10-ல் கேது. இதன்காரணமாக, சிலநேரம் ஆரோக்கியத்தில் சிற்சிறு பிரச்சினைகள் உருவானாலும், பாதிப்புக்கு இடமில்லை. பதவி, தொழில், வாழ்க்கை ஆகியவற்றிலும் பிரச்சினைக்கு இடமில்லை; பாதிப்புக்கும் இடமில்லை. 9-க்குரிய சுக்கிரன் 6-ல் மறைவு. 10-க்குரிய செவ்வாய் 3-ல் மறைவு. என்றா லும், 11-ல் பலம்பெற்ற குரு செவ்வாயைப் பார்ப்பதால், செவ்வாய்- சுக்கிரன் மறைவு தோஷம்விலகி நிறைவுப் பலனைத் தரும். சிலருக்கு மேற்படிப்பு யோகம் அல்லது தொழில்சம்பந்தமான படிப்பு நிறைவடையும். சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் அமையும். 6-ல் மறையும் சுக்கிரன் மேற்கண்டவகையில் சுபக்கடன் உருவாக்கித் தருவார். பொருளாதாரத்தில் குறைவில்லை. நிறைவான பலன்களை சந்திக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் சனியோடு சம்பந்தம். குருவும் சனியும் 3, 8-க்குரிய சுக்கிரன் சாரம். இருவருக்கும் சாரம்கொடுத்த சுக்கிரன் அவர்களுக்கு 8-ல் மறைந்தாலும், உங்கள் ராசிக்குத் திரிகோணத்தில் இருக்கிறார். "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று சொன் னாலும், காரணமில்லாத கற்பனைக் கவலைகள் உங்களுக்குத் திருப்தியற்ற நிலையைத் தரும். அதற்குக் காரணகாரியமும் புரியாது. 9-க்குரிய செவ்வாய் 2-ல் ஆட்சிபெற்று 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். 9-ல் கேது, ராகு சம்பந்தம். அதனால், தந்தைவழி சொந்தபந்தங்கள் பந்தபாசமில்லாமல் விலகி நிற்கும். சிலருக்கு தாமரையிலைத் தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். சிலரின் துன்பங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ தந்தை காரணமாக அமையலாம். கைகேயியின் சூழ்ச்சியால் ராமர் வனவாசம் போனதற்கு தசரதன் காரணமாகப் பெயர் எடுத்ததுபோல. உங்கள் நல்லது கெட்டதற்கும் முன்னேற் றத்திற்கும் அல்லது பின்னேற் றத்திற்கும் தந்தையே பெயர் எடுத்துக்கொள்வார்.

bala250920
இதையும் படியுங்கள்
Subscribe