ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 4,
திருவாதிரை- 1, 2.
செவ்வாய்: பூசம்- 3, 4.
புதன்: ரோகிணி- 2, 3, 4.
குரு: சதயம்- 1.
சுக்கிரன்: புனர்பூசம்- 3, 4, பூசம்- 1.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 2.
கேது: அனுஷம்- 4.
கிரக மாற்றம்:
23-6-2021- கடக சுக்கிரன்.
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
22-6-2021- விருச்சிகம்.
24-6-2021- தனுசு.
26-6-2021- மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் கடகத்தில் நீசமாக இருக்கி றார். அவரை செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி ஆட்சிபெற்றுப் பார்க்கிறார். செவ்வாய், சனி சேர்ந்தாலும் தீது; பார்த்தாலும் தீது என்பது தேவ கேரளீய ஜோதிட நூல் விதி. ஆனால் அந்த விதி உங்கள் ராசியின் இந்த கிரக நிலைக்குப் பொருந்தாது. விதி விலக்காகிவிடும். ஏனென்றால் ஒரு நீச கிரகத்தை அந்த கிரகத்தின் உச்ச ராசிநாதன் பார்த்தாலும் சேர்ந்தாலும் மேலே சொன்ன விதி பொருந்தாது. 23-ஆம் தேதிமுதல் சுக்கிரன் கடகத்தில் மாறுவார். 2, 7-க்குடையவர் ராசிநாதனோடு சம்பந்தப்படும்போது செல்வாக்கு திறமை, பெருமை எல்லாம் தெளிவாக அமையும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் பூமி, வீடு சம்பந்தமான நற்பலனை எதிர்பார்க்கலாம். வாடகை வீட்டிலி-ருப்போர் ஒத்திவீட்டுக்குப் போகலாம். ஒத்திவீட்டில் இருப்போர் சொந்தவீட்டுக்கு மாறலாம். வீட்டடி மனை, கா-லி இடம் வாங்கலாம். ஏற்கெனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் அதை அபிவிருத்தி செய்து வாடகை வசூல் வரும்படி செயல்படலாம். சிலர் விவசாயம், பண்ணை போன்றவற்றில் ஈடுபட்டுத் தொழில் செய்யலாம். வருமானம் பார்க்கலாம். மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழிப் பண்ணை வைக்கலாம். இப்படி எல்லாம் நல்லபடியாக சொந்த வாழ்க்கை முன்னேறினாலும் பங்காளிப் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மிதுனத்தில் புதன் வீட்டிலும், அவருக்கு வீடு கொடுத்த புதன் சுக்கிரன் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். சுக்கிரன் களஸ்திரகாரகன்; புதன் மாமன்காரகன். அந்த வகையில் உங்களுக்கு நற்பலன். உண்டாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண வாய்ப்பு கைகூடும். திருமணமாகி பிரிந்திருக்கும் தம்பதிகள் இக்கால கட்டத்தில் இணைந்து வாழலாம். சேர்ந்து செயல்படலாம். ஜென்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது நாகதோஷமென்று குறிப்பிட்டாலும், ராசிநாதன் சுக்கிரனை குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. குரு பார்த்தால் கோடி தோஷம் விலகுமென்றும் சொல்லலாம். கோடி நன்மை என்றும் கூறலாம். நீச செவ்வாய் 10-ல் உள்ள குருவைப் பார்ப்பதாலும், 10-க்குடைய சனியைப் பார்ப்பதாலும் நீசபங்க ராஜயோகமாக மாறி தொழில் வாழ்க்கை, செயல்பாடு எல்லாவற்றிலும் சீரும் சிறப்புமான பலன்களை எதிர்பார்க்கலாம். ரிஷப ராசிக்கு 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுவதால் தர்மகர்மாதிபதி யோகமும் அமைகிறது. ஆகவே கடந்த காலத்தில் சனி 8-ல் இருந்தபோது ஏற்பட்ட நஷ்டங்களும் கஷ்டங்களும் முழுமையாக விலகி, இனி முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் உண்டாகும். தேக ஆரோக்கியமும் பொருளாதாரமும் திருப்திகரமாக அமையும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 12-ல் மறைந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் மிதுன ராசியில் பரிவர்த்தனையாக இருப்பதால் மறைவு தோஷம் விலகும். விரய தோஷமும் விலகும். விரயத்தில் மூன்றுவகை உண்டு. லாபவிரயம். நஷ்டவிரயம். இழப்பு அல்லது ஏமாற்ற விரயம் என்று சொல்லப்படும். உங்கள் கிரகப்படி எல்லாம் லாப விரயமாகவே அமையும். சிலர் ஒன்றுக்கு பத்து லாபம் வருமென்று கருதி சீட்டுபோட்டு அல்லது பணத்தை முதலீடு செய்து, அந்த கம்பெனிக்காகவே ஏமாற்றி தலைமறைவாகி விடுவதால் எல்லாம் இழப்பாகி விடுவதும் உண்டு. இது ஏமாறுகிறவர்கள் தவறா? ஏமாற்றுகிறவர்கள் தவறா என்றால், ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதனால்தான் ஒரு திரைப் படத்தில் எம்.ஜி.ஆர்., "ஏமாறாதே ஏமாற்றாதே' என்று பாடினார். ஆசைப்படலாம்; ஆனால் பேராசைப் படக் கூடாது. பேராசை பெரு நஷ்டம். மிதுன ராசிக்கு அட்ட மத்துச் சனி நடப்பதால் இப்படிப்பட்ட ஏமாற்றங் களை சந்திக்கும் கால கட்டம் உண்டு. ஆகவே மிதுன ராசிக்காரர்கள் எதிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இழந்த பணம் மீண்டும் கிடைக்க கார்த்தவீர்யார்ஜுன மந்திரத்தை சொல்-லி வழிபடவேண்டும். கும்பகோணம் அருகில் சேங்கா-லிபுரம் தத்தாத்ரேயர் கோவி-லில் கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் உள்ளது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் செவ்வாய் நீசமாக இருக்கிறார். செவ்வாய் 5, 10-க்குடைய ஆதிபத்தியம் பெற்றவர். இரண்டு வகையில் கடகச் செவ்வாய் நீசபங்கம் அடைகிறார். செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி செவ்வாயைப் பார்ப்பதாலும், செவ்வாய் நின்ற கடக ராசிக்கு உச்ச ராசிநாதனான குருவை செவ்வாய் பார்ப்பதாலும் நீசபங்க ராஜயோகம் செவ்வாய்க்குக் கிடைக்கிறது. குரு பார்த்தாலும் சரி; குருவை நீச கிரகம் பார்த்தாலும் சரி- நீசபங்க ராஜயோகம் எனப்படும். வேடிக்கையாகச் சொன்னால் போர்த்திக் கொண்டு படுத்தாலும் சரி- படுத்துக்கொண்டு போர்த்தினாலும் சரி என்பதுபோல! செவ்வாய், சனி நேரடி பார்வைக்கு ஏற்கெனவே விளக்கம் கொடுத்துவிட்டோம். ஆக, செவ்வாய், சனி, குரு இந்த மூவரின் சம்பந்தம் எல்லா வகையிலும் யோகமும் லாபமும் தரும். 10-க்குடைய செவ்வாய் 9-க்குடைய குருவைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். கடக ராசிக்கு 9-க்குடைய குரு 8-ல் மறைவது ஒரு வகையில் தோஷம் என்றா லும், தர்மகர்மாதிபதி யோகத்தின் பலனாக பூர்வ புண்ணியம் பலமாகிறது. 6-க்குடையவர் 8-ல் மறைவதால் சத்ரு ஜெயம், நோய் நிவர்த்தி, கடன் நிவர்த்தி போன்ற நன்மைகளை எல்லாம் எதிர்பார்க்கலாம். 6-ஆமிடம், 8-ஆமிடத்தின் கெட்ட பலன்கள் மறைகிறது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் பலம்பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த புதனும், புதனுக்கு வீடுகொடுத்த சுக்கிரனும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். அத்துடன். 5-க்குடைய குரு 11-ஆமிடத்தையும், 11-ல் நிற்கும் சூரியன் சுக்கிரனையும் பார்க்கிறார்கள். மொத்தத்தில் இந்த கிரக அமைப்பு பன்னிரண்டு ராசிக்காரர்களில் சிம்ம ராசிக்கு நூறு சதவிகிதம் யோகப் பலனாக அமைகிறது. பொதுவாக ஒரு லக்னம் அமைக் கிறபோது (எந்தவொரு காரியத்திற்கும்) 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்து அதில் செயல்பட்டால் நூற்றுக்கு நூறு வெற்றியும் நன்மையும் உண்டாகும். அது முகூர்த்தமாக இருந்தாலும் சரி; தொழில் ஆரம்பமாக இருந்தாலும் சரி; வேறொரு எந்த செயல் தொடக்கமாக இருந்தாலும் சரி- வெற்றி, லாபம், முன்னேற்றம் என்பது ஜோதிடவிதி. இங்கு சூரியனே ராசிநாதனாகி 11-ல் இருப்பதும், பரிவர்த்தனை கிரகமான சுக்கிரனோடு சம்பந்தப்படுவதும் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைதான். "எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லதே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனிபோல நன்னிய நின்முன் நசித்தல் வேண்டும்' என்று பாரதியார் பாடிய மாதிரி எல்லாம் நல்லதாக முடியும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-க்குடையவர். அவர் 9-ல் சுக்கிரன் வீட்டில் நிற்க, சுக்கிரன் புதன் வீட்டில் நிற்க, 9, 10-க்குடையவர்கள் பரிவர்த்தனையாகிறார்கள். இதை தர்மகர்மாதிபதி யோகம் என்பார்கள். எந்தவொரு ஜாதகத்திலும் ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களைவிட, தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் அந்த ஜாதகருக்கு எப்போதும் இறக்கமில்லை. வீழ்ச்சியில்லை. ரேஸ் ஆட்டத்தில் குதிரை காலிடறிக் கீழே விழுந்தாலும், வேகமாக எழுந்து ஓடி வெற்றிபெறும் குதிரையைப் போல- தர்மகர்மாதிபதி யோகமுடைய ஜாதகர்கள் இடறி விழுந்தாலும் துடிப்போடு எழுந்து வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். எந்தச் சிக்கலி-ல் மாட்டிக்கொண்டாலும், ஆண்டவனே வந்து சாட்சி சொல்வதுபோல சந்தர்ப்பம், சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக அமையும். 9-ஆமிடம் தர்ம ஸ்தானம். அதை லட்சுமி ஸ்தானம் என்பார்கள். 10-ஆமிடம் கர்மஸ்தானத்தை விஷ்ணு ஸ்தானம் என்பார்கள். 9-ம், 10-ம் சம்பந்தம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகம். அதாவது 10- முயற்சி; 9- அதற்கு தெய்வம் தரும் பரிசென்று சொல்லலாம். அதைத்தான் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலருடைய முயற்சி விழலுக்கு இரைத்த நீரைப்போல வீணாகிவிடும். சிலருடைய முயற்சி காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக வெற்றியாகும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்கி றார். 9-க்குடைய புதன் 8-ல் மறைகிறார். மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது ஜோதிடப் பழமொழி. அதுமட்டுமல்ல; புதன், சுக்கிரன் பரிவர்த்தனை என்பதால் அவரவர் ராசியில் அவரவர் ஆட்சி பெறுவதாக அர்த்தம். 23-ஆம் தேதி 9-ல் இருக்கும் சுக்கிரன் 10-ஆமிடத்துக்கு மாறுவார். துலா ராசிக்கு 9-ல் இருக்கும் சுக்கிரனும், 10-ஆமிடத்துக்கு மாறும் சுக்கிரனும் யோகத்தையே செய்வார். கெடுக்கமாட்டார். 11-க்குடைய சூரியன் 9--ல் இருப்பது மிகமிக யோகம். தொட்டது துலங்கும். பட்டது துளிரும். விட்டது கிடைக்கும். மேலும் துலா ராசியை 5-ஆமிடத்து குரு 9-ஆம் பார்வையாகப் பார்க்கிறார. வாரத் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்கிரனையும் குரு பார்க்கக்கூடும். 5-ல் நிற்கும் குருவும் வக்ரம். குரு- சனி இருவரும் துலா ராசியைப் பார்க்கிறார்கள். எனவே தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்னும் பழமொழிப்படியும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற மனோன்மணீய வாசகப்படியும், நாளை நமதே என்று பாடினமாதிரி வெற்றியும் நமதே! 6-க்குடைய குரு 5-ல் இருப்பதால் சிலர் பிள்ளைகள் வகையில் கடன்படலாம். அல்லது பிள்ளைகள் பட்ட கடனை நீங்கள் அடைக்கலாம். 4-க்குடைய சனி 6-ஆமிடத்தைப் பார்ப்பதற்கு அதுதான் பலன்!
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதான் செவ்வாய் 9-ல் நீசமாக இருக்கிறார். அவரை செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி பார்ப்பதால் நீசபங்கமாகிறது. ராசிநாதன் செவ்வாய் குருவைப் பார்க்கிறார். அதாவது செவ்வாய் நின்ற ராசிக்கு குரு 9-க்குடையவர்- செவ்வாய் 10-க்குடையவர். ராசி ரீதியாக தர்மகர்மாதிபதி யோகம் என்று சொல்லப்படுவதுபோல- ராசிநாதனுக்கும் அந்த தர்மகர்மாதிபதி யோகத்தைச் சொல்லலாம். ஒரு கிரகத்தின் பலனை ஆய்வு செய்யும்போது பாவம், பாவாதிபதி, பாவகாரகன், நின்ற ஸ்தானம், அந்த வீட்டின் அதிபதி, அந்த வீட்டின் காரகன், அந்த கிரகம் நின்ற சாரநாதன்- அடுத்து சேர்க்கை, பார்வை, கிரகங்களின் சம்பந்தம் என்று பத்துவகையான பலன்களை ஆய்வு செய்யவேண்டும். அஷ்டவர்க்கத்தில் தசவர்க்கம் என்று சொல்லுவதுபோல இந்த முறைப்படியும் தசவர்க்கத்தைக் கணக்கிடலாம். அதனால் தான் ஜோதிடத்தை சமுத்திரம் என்று சொன்னார்கள். ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடம் ஏறும்போது அறுபத்து நான்கு கலைகளில் சங்கீதம், ஜோதிடம் இரண் டைத் தவிர மற்ற எல்லா கலைகளையும் கற்றுக்கொண்டேன் என்று சத்தியம் செய்தார். ஆகவே ஜோதிடமும் சங்கீத மும் சமுத்திரத்தைவிட ஆழமானது. ஜென்ம கேது, சப்தம ராகு திருமணத்தடை யைக் குறிக்கும். காலதாமதமான திருமண யோகம் அமையும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 1, 4-க்குடையவர். 3-ல் மறைவு என்றா லும் 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங் களைப் பார்க்கிறார். 7 என்பது திருமணம், கணவன்- மனைவி, கூட்டுத் தொழில்களைக் குறிக்குமிடம். 9-ஆமிடம் என்பது தகப்பனார், பூர்வ புண்ணியம், தெய்வ வழிபாடு ஆகியவற்றைக் குறிக்குமிடம். 11-ஆமிடம் என்பது வெற்றி, லாபம், மூத்த சகோதரம் ஆகியவற்றைக் குறிக்குமிடம். இந்த மூன்று பாவங்கள் சம்பந்தப்பட்ட பலன்கள் எல்லாம் அனுகூலமாகவும் ஆதாயமாகவும் அமையும். 7-ல் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள். 23-ஆம் தேதி 7-ல் உள்ள சுக்கிரன் 8-ல் மறைவார். 8-ல் மறைந்தாலும் 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் திருமணத் தடை விலகும். நல்ல கணவன்- மனைவி அமையும். குரு புத்திர காரகன் என்பதால், திருமணமானவர்களுக்கு நல்ல வாரிசு யோகம் அமையும். 2-ஆமிடத்தில் சனியும், 8-ஆமிடத்தில் நீச செவ்வாயும் அமர்ந்து இருவரும் பார்த்துக்கொள்வதால், வேலை செய்யுமிடத்தில் சக ஊழியர்களிடம் அன்யோன்யமாகவும் அனுசரணையாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் காரணமில்லாமல் வம்பு வழக்குகளை சந்திக்க நேரும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். அந்த ராசியின் உச்சநாதன் செவ்வாய் 7-ல் நீசபங்கம் பெற்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக சனியும் செவ்வாயும் சேர்ந்தாலும் பார்த்தாலும் கெடுபலன் என்பது பொது விதி. ஆனால் இங்கு ஆட்சிபெற்ற சனியும் நீசபங்கம் பெற்ற செவ்வாயும் பார்த்துக்கொள்வதால் கெடுபலன் நடக்காது. டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோல! டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ் என்ற மாதிரி- கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதுபோல- எதிர்மறைகள் இணையும்போது உடன்மறையாகிவிடும். தனகாரகன் குரு தன ஸ்தானத்தில் நிற்க, நீசபங்க ராஜயோகம் பெற்ற செவ்வாய் பார்ப்பதால் சிலருக்கு நீச வழிகளில் தன விருத்தி உண்டாகும். அரசியல் துறையில் பினாமிகளுக்கு இப்படிப்பட்ட கிரக அமைப் பிருந்தால் தன யோகம் ஈசிறப்பாக அமையும். அதேபோல இரண்டாம் நம்பர் செய்கிறவர்களும் இந்த காலகட்டத்தில் அபரிமிதமான லாபத்தை சந்திக்கலாம். என்னதான் சம்பாத்தியம் இருந்தாலும் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சம்பாத்தியம் செய்தால் அதைத் தக்க வைத்துக்கொள்வது கடினம்! தர்மத்தின் அடிப்படையில் சேரும் செல்வம் நிலைத்து நிற்கும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்காரர்கள் பொதுவாக அனுதாபத்திற்குரியவர்கள் என்று சொல்லப்படுவார்கள். நான் குறிப்பிடுவது பணச் செல்வாக்கை மட்டுமல்ல! மனைவி- மக்கள்- குடும்ப அமைதி- நிம்மதி போன்றவற்றைதான் குறிப்பிடுகிறேன். ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டருகில் ஒரு வண்டிக்காரன் குடிசை போட்டுக் குடியிருந்தான். காலைமுதல் மாலைவரை வண்டிச் சுமை வேலைபார்த்து மாலையில் வீடு திரும்பிய பிறகு, கஞ்சி காய்ச்சிக் குடித்துப் படுத்துவிடுவான். வீடு வந்ததுமுதல் படுக்கும்வரை சந்தோஷமாக பாடி ஆடி மகிழ்ச்சியாக இருப்பான். பக்கத்து வீட்டுப் பணக்காரருக்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமை ஏற்படும். அவனைப்போல நாம் சுதந்திரமாக- மகிழ்ச்சியாக இல்லையே என்ற ஏக்கம் வரும். நண்பர்களிடம் இதைச் சொல்லி-ப்புலம்பினார். அவர்கள் ஆலோசனைப்படி, குடிசையில் இருந்தவனிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, "பத்திரமாக வைத்திரு; தேவைப்படும்போது திரும்ப வாங்கிக்கொள்கிறேன்' என்றார். அன்று முதல் அவன் ஆட்டம் பாட்டம். மகிழ்ச்சி எல்லாம் ஓடிவிட்டது. செல்வந்தரின் பணத்தை பத்திரப்படுத்தி திரும்ப ஒப்படைக்கவேண்டுமே என்ற கவலைதான் இருந்தது. ஆகவே, பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தராது. நிம்மதி தராது. நல்ல மனைவி, மக்கள், வறுமையிலும் செழுமை, தரித்திரத்திலும் பரோபகாரம் என்ற இமய ஜோதியின் அறிவுரைப்படி நெறிகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைந் தாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைந்தாலும், மீன ராசிக்கு 11-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய குருவை 9-க்குடைய செவ்வாய் பார்ப்பது தர்மகர்மாதிபதியோகம். 9-ஆமிடம் லட்சுமி ஸ்தானம்; 10-ஆமிடம் விஷ்ணு ஸ்தானம் என்பது உங்களுக்குத் தெரியும். லட்சுமி கடாட்சமும், விஷ்ணு கடாட்சமும் கிடைப்பதுதான் தர்மகர்மாதி பதி யோகத்தின் பலன். இதன் உள்ளர்த்தம், குருவருளும் திருவருளும் பரிபூரணம் என்பதுதான். குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும். மகாபாரதத்தில் குரு துரோணாச்சாரியார், ஏகலைவன் ராஜவம்சத்தில் பிறக்கவில்லை என்று வில்வித்தையைக் கற்றுக்கொடுக்க மறுத்து விட்டார். ஏகலைவனோ துரோணரை மானசீக குருவாக மதித்து இயற்கை அன்னை யின் கிருபையால் அர்ச்சுனனைக் காட்டிலும் சிறந்த வில்லாளியாக மாறிவிட்டான். இதைப் பொறுக்கமுடியாத அர்ச்சுனன் குருவிடம் சொல்-லி, அவன் கட்டைவிரலை குரு காணிக்கையாக வாங்கச் செய்தான். ஏகலைவனும் மனதார கட்டைவிரலை குரு காணிக்கையாக சமர்ப்பித்து வரலாற் றில் இடம் பெற்றான். பாரபட்சமாக நடந்து கொண்ட குரு குரோணர், மகன் அஸ்வத் தாமா இறந்துவிட்டதாக தவறாக நினைத்து பாரத யுத்தத்திலிருந்து விலகிவிட்டார். ஆக, செய்தாருக்கு செய்தபடி என்பது இதன் தத்துவம்.