முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூராடம்- 2.
செவ்வாய்: கேட்டை- 1.
புதன்: உத்திராடம்- 3.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: உத்திராடம்- 1 (வ).
சனி: திருவோணம்- 3.
ராகு: கிருத்திகை- 3.
கேது: அனுஷம்- 1.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
3-1-2022 மாலை 6.52 மணிக்கு மகரம்.
5-1-2022 இரவு 7.53 மணிக்கு கும்பம்.
7-1-2022 இரவு 12.15 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு புதன் 10-ல் சஞ்சரிப்பதால், சூழ்நிலைக்குத் தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. சூரியன், சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். செவ்வாய், கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால், கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் படிப்படியாக விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் இருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனு கூலமான செய்தி கிடைக்கும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் நிமித்தமாக வெளி நபர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். விநாயகரையும் முருகனையும் வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், சூரியனுடன் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் மேலோங்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைப் பது சிறப்பு. உடல் ஆரோக்கியம் சிறப் பாக அமையாது. அன்றாடப் பணிகளை செய்துமுடிப்பதில் மந்தநிலை உண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் பணவரவுகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சனி, புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால், திடீர் உதவிகள் கிடைத்து தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் அலைச் சலை எதிர்கொள்வீர்கள். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். என்றா லும் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். அரசு அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடிகளால் தொழிலை நிம்மதியுடன் செய்யமுடியாது. உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்கள் உங்கள்மீது வீண் பழிபோடும் நேரமென்பதால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு 9-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்களது பொருளா தாரநிலை மிகச்சிறப்பாக இருந்து கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். செவ்வாய், கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்தப் பிரச்சினையும் சாமர்த்தியமாகக் கையாண்டு வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். ராசியாதிபதி புதன் சனியுடன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சூரியன் இவ்வாரத்தில் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களது அன்றாட செயல்களில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான அனு கூலங்கள் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்லசெய்தி கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உங்கள் சிறப்பான செயல்பாட்டால் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று லாபங்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதிக் கும் வாய்ப்புண்டு. செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மட்டும் எதிலும் நிதான மாக செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள்கூட தடைப்படும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துப் பணிகளையும் சிறப் பாக செய்துமுடிக்க முடியும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு களும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். விஷ்ணு மற்றும் அம்மன் வழிபாடு உத்தமம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு சூரியன் 6-ல் சஞ்சரிப்ப தால் சகலவிதத்திலும் வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. புதன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். என்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உறவினர்களின் ஆதரவால் உங்களது நெருக்கடிகள் குறைந்து அனுகூலங்களை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வீண் அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். செவ்வாய், கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, உறவினர்களிடம் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறப்பு. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்ப தைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் சரிவர உதவமாட்டார்கள் என்பதால், எதிலும் நீங்கள் நேரடியாக நின்று செயல்பட்டால்தான் எடுத்த ஆர்டர்களை தக்க நேரத்தில் முடிக்கமுடியும். வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டால் ஓரிரு மாதங்களில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால், எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிக்கும் யோகமுண்டு. பணவரவுகள் மிக நன்றாக இருப்பது மட்டுமல்லாமல், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். சுக்கிரன் 5-ல் வக்ரகதியில் சஞ்சரிப்ப தால், பெண் உறவினர் களிடம் பேசும்போது பொறுமையுடன் இருப்பது நல்லது. சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட நாட்களில் நீங்கள் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைவீர்கள். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். சனிக்கிழமை வீண் மன உளைச்சல் ஏற்படும் என்பதால், தேவை யற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர் கள் சாதகமாக செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துகளால் கிடைக்கவேண்டிய அனுகூலம் கிட்டும். கடன்களும் படிப்படி யாகக் குறையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக் கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி யடைவது மட்டுமில்லாமல், கடந்தகாலப் பொருட் தேக்கங்கள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சஷ்டி நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் சுபச் செய்திகள் இல்லம்தேடி வரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால், எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். குரு 6-ல் சஞ்சரிப்பதால், பணவரவில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. செவ்வாய், கேது 3-ல் சஞ்சரிப்பதால் அன்றாட செயல்களில் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உங்களது சுகவாழ்வு பாதிக்கும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் நற்பலனைக் கொடுத்து மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாக செய்யமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு கொண்ட வற்றில் கவனமாக செயல்பட்டால் இழப்பு களைத் தவிர்க்கலாம். ராகு 9-ல் இருப்பதால் வெளியூர்மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர் களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண் டால் எதையும் சமாளிக்க முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும், முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. சிவ வழிபாடு செய்தல், ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுதல் உத்தமம்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் சூரியனுடன் 3-ல் சஞ்சரிப்பதால், உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பல்வேறு வளர்ச்சிகளை அடைவீர்கள். குரு 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் சுபிட்சமான நிலை ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி யாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மனநிம்மதி ஏற்படும். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், கோபத்தைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். செவ்வாய், புதன் கிழமைகளில் தேவையற்ற பயணங் கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு புதிய ஆர்டர்களைப் பெறும் யோகம், அடையவேண்டிய லாபத்தை அடையும் வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது பொறுமையுடன் செல்வது நல்லது. சனிக்கு எள்தீபமேற்றி வழிபாடு செய்வதாலும், சஷ்டியன்று முருகனுக்கு அர்ச் சனை, அபிஷேகம் செய்து வழிபடுவதாலும் மேன்மையான பலன்களை அடையலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், கேது சேர்க்கை பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்பதால் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்லவும். குரு பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், சனி 3-ல் சஞ்சரிப்பதால் தக்கநேரத்தில் தாராள பணவரவு ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. சுக்கிரன் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு முன்னேற்றத் தைத் தரக்கூடிய காலமாக இருக்கும். வியாழன், வெள்ளியன்று எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நற்பலனை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிவ வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையுடன் இருக்கவேண்டிய காலமாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. வரவுக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும், உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத் துடன் இருக்கவும். உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள்மூலமாக உங்கள் கஷ்டங்கள் குறையும். இவ்வாரத்தில் கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் இருக்கமுடியும். சுக்கிரன் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஒரு அனுகூலமான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலையை சந்திக்க நேர்ந்தாலும், உங்களின் கடினமான உழைப்பால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். வேலையாட்களை அனுசரித் துச் செல்வதும், தற்போது உள்ள ஆர்டர் களைத் தக்கவைத்துக் கொள்வதும் நல்லது. தொழில்ரீதியாக மறைமுகப் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம் என்பதால், வெளிநபர் களிடம் உங்கள் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்க தாமதங்கள் ஏற்படும். மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நிலை இருக்கும். முருக வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு உத்தமம்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனி நடைபெற்றாலும், குரு பகவான் 2-ல் சஞ்சரித்து 6, 8, 10-ஆகிய ஸ்தானங் களைப் பார்ப்பதால் உடல் உபாதைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால், வெளியாட்களால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை எளிதில் எதிர் கொண்டு நிம்மதியுடன் இருப்பீர்கள். செவ்வாய் கேதுவுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதாரரீதியாக உங்களுக்கிருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்படும். நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தக்க நேரத்தில் காப்பாற்றமுடியும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்கள், எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படும். பங்காளிகள் வழியில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். 10-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நியாயமாகக் கிடைக்கவேண்டிய அனுகூலங் கள் தடைப்படும். புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சாமார்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் விலகி எதிலும் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களைத் தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்குப் பொருளாதாரரீதியாக சில ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். எதிலும் சிக்கனமாக இருப்பது, கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்தநிலை தோன்றும் என்றா லும், செவ்வாய் 10-ல் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சூரியன் இவ்வாரத்தில் 11-ல் சஞ்சரிப்பதால் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் பிரச்சினைகள் சற்று குறையும். சுக்கிரன் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் நல்ல ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் அன்றாடச் செயல்களில் அனைத்து வகையிலும் அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும், கடின முயற்சி யால் இலக்கை அடைந்துவிடுவீர்கள். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வதன்மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், விரும்பிய இடமாற்றங் கள் கிடைக்கும். மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் சுக்கிரனுடன் சஞ்சரிப்பதால், நல்ல வாய்ப்புகளும் கௌரவப் பதவிகளும் நாடிவரும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவீர்கள். சனி, புதன் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருக்கும் அமைப்பும், எந்த செயலில் ஈடுபட்டாலும் அதிகப்படியான ஆதாயத்தை அடையும் வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. குரு 12-ல் சஞ்சரிப்பதால் அனாவசிய செலவுகளைக் குறைத்து, கையில் இருப்பதை வைத்து செலவுசெய்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், இவ்வாரத்தில் உங்கள் வாழ்வில் பல்வேறு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி முன்னேற் றம் ஏற்படும். கூட்டாளிகள்மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிட்டும். முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.