ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: உத்திரம்- 2, 3, 4.

செவ்வாய்: உத்திரம்- 4,

அஸ்தம்- 1.

Advertisment

புதன்: அஸ்தம்- 3, 1,

உத்திரம்- 4.

குரு: அவிட்டம்- 2.

சுக்கிரன்: சுவாதி- 3, 4,

விசாகம்- 1.

சனி: உத்திராடம்- 3.

ராகு: கார்த்திகை- 4.

கேது: அனுஷம்- 2.

tt

கிரக மாற்றம்:

புதன் வக்ரம்.

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

20-9-2021- மீனம்.

23-9-2021- மேஷம்.

25-9-2021- ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் தன் ராசியை 8-ஆம் பார்வையாகப் பார்ப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. மேலும் 3, 6, 11-ஆமிடங்களில் செவ்வாய் இருப்பது சிறப்பான பலன்களைத் தருமென்பது ஜோதிடக் கணக்கு. ராசிக்கு 10-ல் குருவும் சனியும் கூடியிருப்பது இன்னொரு வகையில் சிறப்பு. அதாவது குரு 9-க்குடையவர். சனி 10-க்குடையவர். இது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஜாதகம் எழுதும்போது, "ஜனனீ ஜென்ம ஸெக்யா னாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்ணியானாம்' என்று எழுதப்படும். பூர்வ புண்ணிய வசத்தால் அந்த ஜாதகர் நல்ல தாய்- தந்தையருக்குக் குழந்தையாகப் பிறப்பார் என்பது விதி. தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் ஜாதகர்களுக்கு அந்த பாக்கியம் உண்டாகும். ஏழ்மையாகப் பிறந்தாலும் செல்வாக்கை அடையும் பாக்கியம் உண்டாகும். அதை சேற்றில் முளைத்த செந்தாமரை என்றும் சொல்லலாம். தாசி குலத்தவரான மாதவியின் வயிற்றில் மணிமேகலை பிறந்த மாதிரி. 7-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறுகிறார். ஒவ்வொரு மனிதனுடைய வெற்றிக்குப்பின் ஒரு பெண் இருப்ப தாகச் சொல்லப்படும். அது தாயாகவோ, தமக்கை யாகவோ, தாரமாகவோ இருக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் ஆட்சிபெறுகிறார். 6-ஆமிடம் என்பது வாழ்க்கை, தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத் திற்கு பாக்கிய ஸ்தானம். வாழ்க்கை, தொழில், முயற்சி எல்லாவற்றிலும் எதிர்ப்பு, இடையூறு, போராட்டங்களை சந்தித்தாலும் எதிர்நீச்சலடித்து வெற்றி அடையலாம். ரிஷபத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது ஒருசிலருக்குத் திருமணத் தடையையும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும், குரு ராசியைப் பார்ப்பதால் (குரு நீசபங்க ராஜயோகம்) நல்ல மனைவி, நல்ல கணவர், நல்ல மக்கள் என்பதை அடைய லாம். "அன்பும் அறனும் உடைத் தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்பது குறள். அதன் படி குடும்ப வாழ்க்கை இனிய வாழ்க்கையாக அமையும். தெளிவா கச் சொன்னால் நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதா கும். "தாரமும் குருவும் தலை விதிப்படி' என்றொரு பழமொழி உண்டு. அதேபோல, "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று சொல்லு வார்கள். வள்ளுவர் சாப்பிடும் போதெல்லாம் அருகில் ஒரு ஊசியும் ஒரு டம்ளரில் தண்ணீரும் வாசுகி வைப்பார். வாசுகி தன் அந்திம காலத்தில் அதற்கு விளக் கம் கேட்டார். "நீ பரிமாறும்போது சாதம் கீழே சிந்தினால் ஊசியில் எடுத்து நீரில் அலசிவிட்டு சாப்பிட வேண்டும். அதற்கு நீ வாய்ப்பளிக்கவில்லை'' என்றார்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி நாதன் புதன் 4-ல் ஆட்சிபெறுகிறார். அவருடன் 3-க்குடைய சூரியனும் 6-க்குடைய செவ்வாயும் சம்பந்தம். என்றாலும் அவர்களை நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு பார்க்கிறார். குருவும் சனியும் இணைந்திருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாகும். எந்த ஒரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதியோகம் அமைந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்குப் பாத்திரமாவார் என்பது பொதுவிதி. அதைத்தான் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். மேற்படி தர்ம கர்மாதிபதி யோகமுள்ள ஜாதகர்கள் எல்லா வகையில் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். தர்மகர்மாதிபதி இருவரும் சேர்ந்திருப்பதால், கலைஞர் கருணாநிதி சொன்ன மாதிரி, கட-ல் தூக்கிப் போட்டாலும் மிதக்கும் பலகையா கலாமே தவிர நீரில் மூழ்கிவிட மாட்டீர் கள். 9-ஆமிடம் தர்மஸ்தானம்- திரிகோண ஸ்தானம். 10-ஆமிடம் கர்மஸ்தானம்- கேந்திரஸ்தானம். திரிகோணம் தெய்வானுகூல ஸ்தானம். கேந்திரம் முயற்சி ஸ்தானம். "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூ- தரும்' என்ற குறளுக்கு ஏற்றவகையில் உங்களுடைய முயற்சிக்கும் உழைப்புக்கும் உரிய பலன்கள் உங்களை வந்தடையும். இதைத்தான் எடுத்துவைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டும் என்பதாகும். அந்தவகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 7-ல் குருவும், சனியும் கூடி நின்று ராசியைப் பார்க்கிறார்கள். குரு திரிகோணாதிபதி, சனி கேந்திராதிபதி. கேந்திரம் முயற்சி ஸ்தானம். திரிகோணம் தெய்வானுகூல ஸ்தானம். "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூ-தரும்' என்பது குறள். ஹரிஹரன்- புக்கர் என்ற இரண்டு பிரம்மச்சாரி இளைஞர் கள் வறுமையில் வாடினார்கள். குபேர சம்பத் அடைய கடும்தவம், ஹோமம் செய்தார்கள். மகாலட்சுமி தோன்றி, "இந்த ஜென்மாவில் உங்களுக்கு செல்வந்தர் ஆகும் வாய்ப் பில்லை' என்றதும் இளைஞர்கள், "அப்படி யானால் இந்த தவமும் ஹோமமும் பயனில் லையா?' என்றதும், "இந்தப்பலன் அடுத்த ஜென்மாவில் உண்டு' என்று பதில் கிடைத்தது. அவர்கள் வெறுத்துப் போனார்கள். அவர்கள் குருநாதர், "அதனால் வகுத்தமடைய வேண்டாம். சந்நியாசம் வாங்கிக்கொண் டால் மறு ஜென்மம் எடுத்ததாக அர்த்தம்' என்றார். அதே போல அவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டவுடன் செல்வத்தின் மேலிருந்த பற்று நீங்கிவிட்டது. குபேர னும் லட்சுமியும் "உங்கள் புண்ணியத்தை உங்களுக்குத் தான் திருப்பித்தர வேண்டும். நாங்கள் கடன்காரர்களாக மாட்டோம்' என்று சொன் னார்கள். அதனால் அந்த சங்கநிதி பதும நிதியை வைத்துக்கொண்டு ஹரிஹரனும் புக்கரும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இப்படி அமைந்தது தான் ஆந்திரா! 4-ல் சுக்கிரன் ஆட்சி. 3-ல் புதன் ஆட்சி. 7-ல் சனி ஆட்சி. இவர்களெல்லாம் உங்களுக்குப் பக்கத்துணையாக இருந்து வெற்றியைத் தேடித்தருவார்கள்.

t

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ஆமிடத்தில் அவருக்கு வீடுகொடுத்த புதனோடும், சூரியனின் உச்ச ராசிநாதனான செவ்வாயோடும் சேர்ந்திருக்கிறார். 1-ஆமிடம் கீர்த்தி, கௌரவம், புகழ், தலைமை இவற்றை குறிக்குமிடம். 2-ஆமிடம் வாக்குதனம், குடும்பம் இவற்றை குறிக்கும் இடம். இவற்றுக்கு எல்லாம் எந்தக் குறைகளும் குற்றங்களும் இல்லை. 3-ஆமிடம் சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், அங்கு சுக்கிரன் ஆட்சி பெறுவதால் சகோதரவகையிலும் நண்பர்கள்வகையிலும் கேடு கெடுதிக்கு இடமில்லை. "உயிர் காப்பான் தோழன்' என்ற பழமொழிப்படி உங்களுக்காக உயிர் கொடுக்கும் நண்பர் களும் உங்களின் உயிரைக் காக்கும் நபர்களும் தோழர் களாக அமைவார்கள். நல்ல நண்பர்கள் அமைவதும், நல்ல தாரம் அமைவதும், நல்ல குரு அமைவதும் அவரவ ரின் முன்ஜென்ம ப்ராப்த பலமாகும். சரித்திர காலத்தில் ஜூலியட் சீசரின் விசுவாச மான நண்பரான புரூட்டஸே சீசருக்கு எதிரியாக மாறி கத்தியால் குத்தினான். அப்போது சீசர் சொன்ன கடைசி வார்த்தை "யு டூ புரூடஸ்' என்பதாகும். உயிர் காப்பான் தோழன் என்ற பழமொழி சீசரின் வரலாற்றில் மாறிவிட்டது. இராமாயணத்தில் சீதையை அபகரித்துச் சென்ற இராவணனை ஜடாயு என்ற பட்சி தடுத்தது. அதன் இறக்கையை ராவணன் வெட்டிவிட்டான். அந்த செய்தியை இராம பிரானுக்குத் தெரிவிக்கும்வரை ஜடாயு உயிரைக் காத்தது. அதுதான் நட்பு!

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் கன்னியில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 8-க்குடைய செவ்வாயும், 12-க்குடைய சூரியனும் சம்பந்தம். தவிர்க்கமுடியாத இழப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கநேரும். தேவையற்ற வீண் விரயங் களுக்கும் இடம் உண்டாகும். என்றாலும் நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு ராசியை யும் ராசிநாதனையும் பார்ப்பதால், எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழிப்படி தெளிவாகவும் இருக்கும்; நிம்மதியாகவும் இருக்கும். 3-ல் கேது, 9-ல் ராகு. ஒத்துழைப் பில்லாத உடன்பிறப்பு, பாரபட்சமான தகப்பனார், தாயார். இனிப்பு முலாம் பூசிய கசப்பு மருந்தாக அதை எடுத்துக் கொண்டால் வருத்தத்திற்கும் இடமில்லை; பகைமைக்கும் இடமில்லை. குருவும் சனியும் கூடியிருந்தால் சண்டான யோகம் என்பார் கள். இந்த சேர்க்கை 5-ஆம் இடத்தில் இருப்பதால், சிலருக்குப் பிள்ளைகள்வகையில் தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு மனத் தளவிலே கற்பனைத் தொல்லையாகவும் அமையலாம். ஆக, எது நடந்தாலும் அதுவும் ஒரு நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குடிகார மகன் போதையில் தாயாரைக் கத்தியால் காயப்படுத்தி விட்டுபோகும்போது நிலைப்படி தட்டி நிலை தடுமாறி விழுகிறான். வெட்டப்பட்ட தாய் தவழ்ந்து வந்து "பார்த்துப் போகக்கூடாதா' என்று அவனைத் தடவிக் கொடுக்கிறாள்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். உங்களுடைய திறமை, செயலாற்றல் எல்லாம் குறைவற பெருமை யடையும். நியாயமான கோரிக்கைகளும் விருப்பங்களும் தடையின்றி நிறைவேறும். 2-ல் கேது, 8-ல் ராகு நிற்பதால் சில நேரங்களில் சில மனிதர்கள் எதிர்மறைக் கருத்தோடு நடந்துகொண்டு, உங்களை யும் வேதனைப்படுத்தி அவர்களும் வேதனைக்கு ஆளாவார்கள் அதையெல் லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீரடித்து நீர் விலகாது என்றும், குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்றும் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு மீன ராசிக்காரரும் ஒரு துலா ராசிக்காரரும் மிக நெருக்கமாக அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள். மீன ராசியும் துலா ராசியும் 6 ஷ்8 சஷ்டாஷ்டக ராசி. என்றாலும் துலா ராசிநாதன் சுக்கிரன் மீன ராசியில் உச்சம்! அதனால் அது சுப சஷ்டாஷ்டாகமாகிவிட்டது. இருந்தாலும் ஒரு சந்திராஷ்டம நாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகிவிட்டது. ஒரு சிறு கீறல் பெரிதாகி விரிசலாகிவிட்டது. இதுதான் சந்தர்ப்பம், சூழ்நிலை என்பது! ஒரு வார்த்தை வெல்லும்- ஒரு வார்த்தை கொல்லும். கோவலனும் மாதவியும் அன்யோன்யமாக வாழ்ந்தார்கள். ஜாதகப்படி இருவரும் பிரியும் கட்டம் வந்தது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல; ஆணுக்கும் உண்டு என்ற பொதுவான ஒரு கருத்து இருவரையும் பிரியவைத்துவிட்டது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் பலம் பெறுகிறார். 3, 6, 11-ஆமிடங்கள் செவ்வாய்க்கு உகந்த இடங்கள். அதிலும் அவர் 6-க்குடையவர் 11-ல் இருப்பது மிகமிகச் சிறப்பு. 6- என்பது எதிரி, நோய், கடன், போட்டி, பொறாமை இவற்றைக் குறிக்கும் இடம். அந்த இடத்துக்கு 6-ல் (அதாவது ராசிக்கு 11-ல்) மறைவது "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம்' என்பதற்குச் சமம். ஆகவே, கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ரு ஜெயம் போன்ற நன்மைகளையெல்லாம் எதிர்பார்க்கலாம். 6-க்குடையவர் ராசிநாதன் என்பதால் உங்களுடைய பகைவர்கள் (விரோதிகள்) அவர்களுக்குள்ளேயே பகையாகிவிட்டால் உங்களுக்கு அது அனுகூலமான நிலைதான். பள்ளிக்கூடப் பாடத்தில் ஒரு கதை வரும். நான்கு எருதுகள் ஒற்றுமையாக இருந்தபோது அவர்களின் எதிரியான பு-க்கு அவர்களை ஜெயிக்க முடியவில்லை. ஒற்றுமையான நான்கு எருதுகளையும் நரி சூழ்ச்சிசெய்து பிரித்துவிட்டது. அதன்பிறகு ஒவ்வொரு எருதையும் பு- அடித்துக்கொன்று சாப்பிட்டது. அதுதான் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் ராஜதந்திரம் என்பது. அந்த ராஜ தந்திரத்தால்தான் ஒற்றுமையாக இருந்த ராஜபுத்திர மன்னர்களைப் பிரித்து சூழ்ச்சிசெய்து இந்தியாவை அடிமை நாடாக்கினர். அதனால்தான் "ஒற்றுமை எதையும் வெல்லும்' என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசமாக இருந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. சனி 2, 3-க்குடையவர். குரு 1, 4-க்குடையவர். நண்பர்கள்வகையிலும் உடன்பிறப்பு கள் வகையிலும், தவிர்க்கமுடியாத கருத்து வேறுபாடு காரணத்தால் பகைமை பாராட்டி விரோதமாக இருந்த நிலைக்கு இப்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பிரிவதற்குக் காரணமாக இருந்த வஞ்சகர்களின் நெஞ்சங்களைப் புரிந்துகொண்டு பகைமையை விலக்கி நட்பு கொண்டாடலாம். தண்ணீரும் எண்ணெயுமாக ஒட்டாமல் இருந்த உறவு, இனிமேல் தண்ணீரும் பாலும் கலந்த மாதிரி பிரிக்கமுடியாமல் ஒன்றாகலாம். 6-ல் ராகு இருப்பது கடன்நிவர்த்தி, நோய்நிவர்த்தி, பகைநிவர்த்தி. அவரை ராசிநாதன் குரு நீசபங்கமாகிப் பார்ப்பதும் விசேஷம். மரணத்தாலன்றி வேறு எந்த துர்சக்திகளாலும் இனி பிரிக்கமுடியாது என்ற நிலைமையை சந்திக்கலாம். அதைத்தான் பெரியவர்கள் "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான்' என்றும்; "கெட்டுப் போகிறவன் விட்டுக்கொடுக்கமாட்டான்' என்றும் சொன்னார்கள்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 8-க்குடைய சூரியன் சாரம் பெறுகிறார். (உத்திராடம்). சூரியன் 9-க்குடையவரோடும் 4, 11-க்குடையவரோடும் சம்பந்தம். இவர்களுக்கு ஜென்ம குருவின் பார்வை. பகை நீங்கி உறவு மலரும். நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் எல்லா வகையிலும் நட்பு மலரும். "உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்ற வாசகத்தை நிலைநாட்ட பாடுபடலாம். சொத்துப் பிரச்சினைகளில் இதுவரை நீடித்த பகையும் வருத்தமும் மாறும். ஏற்கெனவே எழுதியபடி "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போகமாடடான்' என்பதை செயல்படுத்து வீர்கள். "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதுபோல பகையை விலக்கி உறவை மேம்படுத்தலாம். பிதுரார்ஜித சொத்துகள்வகையில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் தீர்வாவதால் பங்காளிகள் இணைந்து அதை மேன்மைப்படுத்தலாம்; பலனடையலாம். 9-ஆமிடத்திற்கு குருபார்வை கிடைப்பதும் அதற்கொரு காரணமாகும். இரண்டு கைகள் இணைவது போன்ற சின்னம்தான் கூட்டுறவின் சின்னம். ஆக, ஒரு கை தட்டினால் ஓசை இல்லை. இரண்டு கைகள் தட்டினால்தான் ஓசை என்று செயல்படவேண்டும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந் தாலும் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2, 11-க்குடைய குருவும் 12-ல் மறைகிறார். 12 ராசிகளில் கும்ப ராசிக்கு மட்டுமே ராசிநாதனும் அவரே; விரயாதிபதியும் அவரே (சனி) என்ற நிலை உண்டாகும். அதாவது ஊதுபத்தியும் மெழுகுவர்த்தியும் தன்னைக் கரைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு மணமும் ஒளியும் தரும். அதுதான் தியாகம். ஆகவே, கும்ப ராசிக்காரர்கள் தியாகத்திற்கு உரியவர்கள் என்றும் சொல்லலாம்; அனுதாபத்திற்குரியவர்கள் என்றும் சொல்லலாம். கும்பம் என்றால் குடம். நிறை குடம் தளும்பாது. குறைகுடம் தளும்பும். கும்ப ராசிக்காரர்களில் இந்த இருநிலையும் காணப்படும். 4-ல் ராகு. தேக ஆரோக்கியத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் வந்து விலகலாம். ஆனாலும் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 9-ல் ஆட்சி, திரிகோணம் என்பதால், சிறு காற்றுக்கும்கூட அசையும் நாணல்புல் புயலடித்தாலும் ஆடிக்கொண்டே தாக்கு பிடிக்குமாம். அசையாமல் நிறம். பனைமரம் புயலில் வேரோடு வீழ்ந்துவிடும். உங்களுடைய மனம், புத்தி, செயல் இவற்றால் நீங்கள் நாணல் புல்லாக விழாமல் இருக்க வேண்டும்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசியின் சின்னம் மீன். (இரட்டை மீன்). நீரில் மீன் நீந்திக்கொண்டே இருக்கும். தூங்குவது அரிது. அதுபோல நீங்களும் உங்கள் மனமும் ஏதாவது ஒரு கற்பனையாலும் எண்ணத்தாலும் மன ஓட்டத்திலேயே இருப்பீர்கள். இந்த மனம் என்பது எப்போதும் எதையாவது பற்றிக்கொண்டே இருக்கும். சிந்தித்துக்கொண்டே இருக்கும். தூங்கும் நேரத்தில்கூட ஏதாவது கனவு களைப் பார்த்துக்கொண்டே இருக்கும். மனிதன் ஒருவனுக்கே மனம் என்ற ஒன்றுண்டு. மற்ற உயிர்களுக்கெல்லாம் மனம் என்பது இல்லை. மனம் இருப்பதாலேயே அவனுக்கு மனிதன் என்று பெயர். அந்த மனம் எப்போதும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத தியாக மனமாக அமையவேண்டும். அப்போது அவர்கள் மகான்களாகிறார் கள். 5-ஆமிடத்தை குருவும் சனியும் பார்க்கி றார்கள். சனி பார்ப்பது கள்ள மனம். குரு பார்ப்பது நல்ல மனம். இந்த நல்லதும் கெட்டதும் உங்களிடமே இருக்கிறது. ஆக, கெட்டதை விலக்கி நல்லது செய்ய முயலுங்கள். நல்லதையே நினையுங்கள். நல்லதையே செய்யுங்கள். நல்லதே நடக்கும். 8-ல் சுக்கிரன் மறைந்தாலும் ஆட்சி. ஆகவே வீண் கற்பனை பயத்தை விரட்டிவிடுங்கள்.