முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்- 1.

செவ்வாய்: அனுஷம்- 2.

Advertisment

புதன்: பூராடம்- 1.

குரு: அவிட்டம்- 4.

சுக்கிரன்: உத்திராடம்- 2.

சனி: திருவோணம்- 2.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

மார்கழி- 4 (19-12-2021) சுக்கிரன் வக்ர ஆரம்பம் (மாலை 4.07)

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

21-12-2021 மாலை 3.45 மணிக்கு கடகம்.

24-12-2021 அதிகாலை 2.40 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதி சூரியன்- புதன் சேர்க்கை பெற்று தனது நட்பு கிரகமான குரு வீட்டில் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு மேலோங்கும். தன சப்தமாதிபதி சுக்கிரன் 10-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் கடன் பிரச்சினைகளும் குறையும். முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி வெற்றிகளைப் பெற்றி டும் ஆற்றல் உண்டாகும். போட்டி, பொறாமை கள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மன நிம்மதி ஏற்படும். சிலருக்கு வாகனங்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக் கும். என்றாலும் செவ்வாய்- கேது 8-ல் சஞ்சரிப் பதால் பயணங்கள் மேற்கொள்ளும்போது மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்கள் ராசிக்கு சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல் பட்டு நற்பலனை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வு களையும் தகுதிக்கேற்ற பதவிகளையும் அடைய முடியும். உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகும். பெரிய மனிதர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். சஷ்டியன்று முருக வழிபாடு செய்வதும், சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடு செய்வதும் மேன்மைகளை உண்டாக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு நெருங்கிய வர்களிடம் விட்டுக்கொடுத் துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி ஒருவரை யொருவர் அனுசரித்துச் சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சற்று தேக்கநிலை நிலவினா லும், ராசியாதிபதி சுக்கிரன் 9-ல் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் தக்க நேரத்தில் பணவரவுகள் கிடைத்து அனைத்து அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். அஷ்டம ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, குடும்ப விஷயங் களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனமாக இருந் தால்தான் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். வெள்ளி, சனிக்கிழமை களில் தேவையற்ற அலைச்சல் கள் ஏற்படும் என்பதால் பயணங் களை யோசித்து மேற்கொள்வது நல்லது. புதன் 8-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும்; நடப்பது ஒன்றாக இருக்கும். புதிய நபர் களிடம் கவனமாக இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர் களின் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும். விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொண்டு வளமான பலனைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு குரு 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மேன்மை கள் உண்டாகும். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் சுபநிகழ்வுகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது தேக்கத்தை சந்தித்தாலும் வெற்றி பெற்றுவிட முடியும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் உங்கள் கனவுகள் நிறைவேறும். இவ்வாரத்தில் சந்திரன்- ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் மேலே குறிப்பிட்ட நாட்களில் பணவரவுகள் சிறப்பாக அமைந்து அதன்மூலம் கடன் பிரச்சினைகளும் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். செவ்வாய் 6-ல் ஆட்சிபெற்று, உடன் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற் றம் ஏற்படும். அரசுவழியில் இருந்த கெடுபிடிகள் விலகி நிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நற்பெயர் கிடைக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவதாலும், வேங்கடேசப் பெருமாளை வழிபடுவதாலும் மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானாதி பதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது. ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருந்தால்தான் கடன்கள் ஏற்படாமல் நிலைமையை சமாளிக்கமுடியும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்கும். செவ்வாய், கேது 5-ல் சஞ்சரிப்ப தால் வயிறு பாதிப்புகள், அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால், விட்டுக்கொடுத்துச் சென்றால் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சந்திரன்- செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் எதிர்பாராத வகையில் பொருளா தார உதவிகள் கிடைத்து மனநிம்மதி அடைவீர் கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன்மூலம் வீண் விரயங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். சனி 7-ல் சஞ்சரிப் பதால் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர் களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் அவர்களின் ஆதரவுகளைப் பெறமுடியும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, நெய்தீபமேற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 5-ல், குரு 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி சகல விதத்திலும் வளமான பலனைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நவீன கரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண் டாகும். உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும்; கடந்தகால மனக்கசப்புகள் குறையும். செவ்வாய்- கேது சேர்க்கை பெற்று 4-ல் சஞ்சரிப்பதால், உடன்பிறந்தவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் ஒற்றுமை பலப்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய ஐந்து நாட்கள் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இவ்வாரத்தில் உங்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல ஆதாயத்தை அடைந்து உங்கள் கடன்களை பைசல் செய்வீர் கள். புதன் 5-ல் சஞ்சரிப்பதால், உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தேடிவரும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வரும் நாட்களில் நீங்கள் முயற்சித்தால் உங்களுக்குள்ள வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். சஷ்டியன்று விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்க்கை யம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபாடு செய்வதும் நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய், கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும் எதிர் பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலமுண்டாகும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். வயதில் மூத்தவர்களிடம் பேசும்போது பொறுமையுடன் பேசுவது நல்லது. சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக அமைந்து, நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தக்க நேரத்தில் நிறைவேற்ற முடியும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் கொடுக் கல்- வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. எதிலும் சிக்கனமாக இருக்கவும். இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய ராசிகளில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சஞ்சரிப் பதால், இந்த நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனு கூலங்கள் கிடைக்கும். அலை பேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். தொழில், வியாபாரத்தில் வேலை யாட்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால், உங்களுக்கு பணிச்சுமை சற்று அதிகரிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால்தான் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். ராகு 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர்மூலம் எதிர் பாராத வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அதன் மூலம் ஒருசில ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்ப மையும். தட்சிணாமூர்த்தியையும், துர்க்கையம் மனையும் வழிபடுவதால் கஷ்டங்கள் குறையும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் நட்பு வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் தனச்சேர்க்கை அமோகமாக இருக்கும். கடந்தகால சோதனைகள் எல்லாம் விலகும். திருமண சுபமுயற்சிகள் கைகூடும். சூரியன், புதன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சனி 4-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது நல்லது. முடிந்தவரை உங்களுக்கு ஒதுக் கப்பட்ட பணியை மட்டும் செய்து, மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. செவ்வாய், கேது 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத் தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்ட முடியும். சந்திரன் 10, 11 ஆகிய ராசிகளில் புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களது புதிய முயற்சிகளை மேற்கூறிய நாட்களில் செய்தால் அனுகூலப்பலனை அடைய லாம். புதிய சொத்துகள் வாங்கு வதற்கான வாய்ப்புகள் அமை யும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். தூரப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். உத்தி யோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். அரசுவழியில் எதிர் பார்க் கும் உதவிகள் கிடைக்கும். சனிக்கு எள்தீபமேற்றி வழிபடுவது, ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலைசாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

சனி உங்கள் ராசிக்கு 3-ல் வலுவாக சஞ்சரிப் பதால் உங்கள் தேவைக்கேற்றவாறு பணவரவு கிடைத்து நிம்மதியுடன் இருக்கமுடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பதால் இலக்கை எளிதில் அடைந்துவிடமுடியும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். உற்றார்- உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றலாம் என்பதால், சற்று கவனத்துடன் பேசவும். குரு பார்வை 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் உற்சாகத்துடன் செயல்படமுடியும். உங்கள் ராசிக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட இந்த நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளி களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும் என்றாலும், பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்ப தைத் தவிர்க்கவும். வேலை தேடிக்கொண்டிருப் பவர்களுக்கு பெரிய மனிதரின் தொடர்புமூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கப்பெறும். ஆருத்ரா தரிசனத்தன்று சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

சூரியன் ஜென்ம ராசியில், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம். சனி 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார்- உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற செலவு களைத் தவிர்க்கலாம். பணவரவில் நெருக்கடி கள் இருந்தாலும், ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர் பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கிருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலனை அடைய வாய்ப்புண்டு. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் ஒருசில எதிர் பாராத உதவிகள் கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல் படவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் காலமென்பதால், எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, அதிகாரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சக்தி வழிபாடும், முருக வழிபாடும் நற்பலன்கள் தரும். சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1 ,2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், குரு 2-ல் சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை, கை- கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும், குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் அன்றா டப் பணிகளைச் செய்துமுடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். செவ்வாய், கேது 11-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். இவ்வாரத்தில் சந்திரன் உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய ராசிகளில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்நாட்களில் தடைப்பட்ட காரியங்களை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன்மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும். ராகு காலத் தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் திக்பலத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்ப தால், உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சூரியன், புதன் இணைந்து 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இருந்த மந்தநிலை மாறி தாராள வரவுகள் கிடைத்து உங்களுக்குள்ள கடன் சிக்கல்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். ராகு 4-ல், சுக்கிரன், சனி 12-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், வேலைப்பளுவை சற்று குறைத் துக்கொள்ளவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படுமென்பதால் சற்று கவனம் தேவை. சந்திரன் 6, 7 ஆகிய ராசிகளில் புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், ஆடம்பரப் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை கவனத் துடன் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் போட்டிகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம் பட செயல்பட்டு அனைவரின் பாராட்டு தல்களைப் பெறுவார்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சுக காரகன் சுக்கிரன் தனது நட்பு கிரகமான சனி சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எல்லா வகையிலும் உங்களுடைய செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். சூரியன், புதனுடன் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ராசியாதிபதி குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சற்று சாதகமற்று இருந்தாலும், ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கப்பெற்று அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவான செயல்பாடுகளால் மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சந்திரன்- ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சாமர்த்தியமாகச் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். பண விஷயத்தில் புதிய நபர்களை எளிதில் நம்பாமல் இருப்பதன்மூலம் வீண் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும். பயணங்கள் காரணமாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலைசாற்றி, சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கும்.