ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 4, பூசம்- 1, 2.
செவ்வாய்: ஆயில்யம்- 4, மகம்- 1.
புதன்: - புனர்பூசம்- 3, 4, பூசம்- 1, 2.
குரு: சதயம்- 1, அவிட்டம்- 4.
சுக்கிரன்: ஆயில்யம்- 4, மகம்- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
18-7-2021- சிம்ம சுக்கிரன்.
19-7-2021- கடக புதன்.
22-7-2021- சிம்மச் செவ்வாய்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
19-7-2021- விருச்சிகம்.
21-7-2021- தனுசு.
23-7-2021- மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரப் பிற்பகுதியில் 22-ஆம் தேதிமுதல் 5-ஆமிடமான சிம்மத்திற்கு மாறி திரிகோணம் பெறுகிறார். மேலும் 9-க்குடைய குரு 11-ல் நின்று செவ்வாயைப் பார்க்கிறார். இது பழம் நழுவிப் பா-ல் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதை என்பார்களே- அதுபோல உங்களுடைய முயற்சிகள் யாவும் எளிதாக நிறைவேறும். மனதில் தோன்றும் திட்டங்களை செயல்வடிவம் பெறவைப்பீர்கள். கடின முயற்சிக்குப்பின் இழுபறியாக இருந்த காரியங்கள்கூட துரித வேகத்தில் முன்னேறும். 2-க்குடைய சுக்கிரன் வாரத் தொடக்கத்திலேயே 5-ல் மாறுகிறார். அவரும் குரு பார்வையைப் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். கணவன்- மனைவிக்குள் இருந்துவந்த சிக்கல், சிரமங்கள், பண விஷயங்களில் நிலவிய பிரச்சினைகள் யாவும் நல்ல முடிவுக்கு வரும். தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் அல்லது முயற்சிகள் பற்றிய செயல்பாடுகளை தைரியமாக நிறைவேற்றலாம். தொழில், வியாபாரத்துறையினருக்கு லாபகரமான சூழல் தென்படும். 10-ல் சனி ஆட்சி என்பதால் இரும்பு யந்திரம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு வியாபாரம் நன்றாக இயங்கும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- சகோதரவழியில் நிலவிய சங்கடங்களை யும் வருத்தங்களையும் நிவர்த்தி செய்து ஒற்றுமையை உண்டாக்குவார். சிலர் வெளியூர் வேலைக்காக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
வாரத் தொடக்கத்தில் ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் மாறுகிறார். 4-ஆமிடம் கேந்திர ஸ்தானம். அந்த இடத்தையும் அங்கிருக்கும் சுக்கிரனையும் 7-க்குடைய குரு பார்க்கிறார். ஒரு கேந்திர ஸ்தானத்தை மற்றொரு கேந்திர ஸ்தானாதிபதி பார்ப்பது நல்லதுதான். என்றாலும் 12-க்குடைய செவ்வாய் அங்கு மாறுவதால் கடின முயற்சிக்குப்பின் வெற்றியை எட்டிப் பிடிக்கவேண்டும். அதாவது பலாப் பழத்தின் சுவையை அறிய அதன் தோலை எளிதாக உரிக்க முடியாதல்லவா- அதுபோலத் தான் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் பிரயாசைப்பட்டு நிறைவேற்ற நேரும். ஜென்ம ராகு உங்களை அவ்வப்போது சோர்வடையச் செய்தாலும், என்னடா வாழ்க்கை என்று புலம்ப வைத்தாலும் ராசிநாதனை குரு பார்ப்பதால் தொய்வடையும் சமயத்தில் ஒரு உத்வேகம் வந்து நிறைவேற்றலாம். 7-ல் கேது திருமண முயற்சிகளில் தாமதத்தை ஏற்படுத்தும். 4-ல் உள்ள செவ்வாய் வீடு, மனை கட்டடம் சம்பந்தமான விஷயங்களில் புதிய ஈடுபாடு களை உண்டாக்கலாம். அந்தவகையில் கடன் கள் ஏற்பட்டாலும் அது சுபக்கடன் என்று ஏற்றுக்கொள்ளலாம். பணவரவு திருப்திதரும் வகையில் அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். 4-க்குடைய சூரியன் 3-ல் மறைகிறார். தகப்பனார்வழியில் சில வருத்தமான நிகழ்வுகளோ, சங்கடமான சூழல்களோ ஏற்படலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 4, பூசம்- 1, 2.
செவ்வாய்: ஆயில்யம்- 4, மகம்- 1.
புதன்: - புனர்பூசம்- 3, 4, பூசம்- 1, 2.
குரு: சதயம்- 1, அவிட்டம்- 4.
சுக்கிரன்: ஆயில்யம்- 4, மகம்- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
18-7-2021- சிம்ம சுக்கிரன்.
19-7-2021- கடக புதன்.
22-7-2021- சிம்மச் செவ்வாய்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
19-7-2021- விருச்சிகம்.
21-7-2021- தனுசு.
23-7-2021- மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரப் பிற்பகுதியில் 22-ஆம் தேதிமுதல் 5-ஆமிடமான சிம்மத்திற்கு மாறி திரிகோணம் பெறுகிறார். மேலும் 9-க்குடைய குரு 11-ல் நின்று செவ்வாயைப் பார்க்கிறார். இது பழம் நழுவிப் பா-ல் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதை என்பார்களே- அதுபோல உங்களுடைய முயற்சிகள் யாவும் எளிதாக நிறைவேறும். மனதில் தோன்றும் திட்டங்களை செயல்வடிவம் பெறவைப்பீர்கள். கடின முயற்சிக்குப்பின் இழுபறியாக இருந்த காரியங்கள்கூட துரித வேகத்தில் முன்னேறும். 2-க்குடைய சுக்கிரன் வாரத் தொடக்கத்திலேயே 5-ல் மாறுகிறார். அவரும் குரு பார்வையைப் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். கணவன்- மனைவிக்குள் இருந்துவந்த சிக்கல், சிரமங்கள், பண விஷயங்களில் நிலவிய பிரச்சினைகள் யாவும் நல்ல முடிவுக்கு வரும். தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் அல்லது முயற்சிகள் பற்றிய செயல்பாடுகளை தைரியமாக நிறைவேற்றலாம். தொழில், வியாபாரத்துறையினருக்கு லாபகரமான சூழல் தென்படும். 10-ல் சனி ஆட்சி என்பதால் இரும்பு யந்திரம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு வியாபாரம் நன்றாக இயங்கும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- சகோதரவழியில் நிலவிய சங்கடங்களை யும் வருத்தங்களையும் நிவர்த்தி செய்து ஒற்றுமையை உண்டாக்குவார். சிலர் வெளியூர் வேலைக்காக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
வாரத் தொடக்கத்தில் ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் மாறுகிறார். 4-ஆமிடம் கேந்திர ஸ்தானம். அந்த இடத்தையும் அங்கிருக்கும் சுக்கிரனையும் 7-க்குடைய குரு பார்க்கிறார். ஒரு கேந்திர ஸ்தானத்தை மற்றொரு கேந்திர ஸ்தானாதிபதி பார்ப்பது நல்லதுதான். என்றாலும் 12-க்குடைய செவ்வாய் அங்கு மாறுவதால் கடின முயற்சிக்குப்பின் வெற்றியை எட்டிப் பிடிக்கவேண்டும். அதாவது பலாப் பழத்தின் சுவையை அறிய அதன் தோலை எளிதாக உரிக்க முடியாதல்லவா- அதுபோலத் தான் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் பிரயாசைப்பட்டு நிறைவேற்ற நேரும். ஜென்ம ராகு உங்களை அவ்வப்போது சோர்வடையச் செய்தாலும், என்னடா வாழ்க்கை என்று புலம்ப வைத்தாலும் ராசிநாதனை குரு பார்ப்பதால் தொய்வடையும் சமயத்தில் ஒரு உத்வேகம் வந்து நிறைவேற்றலாம். 7-ல் கேது திருமண முயற்சிகளில் தாமதத்தை ஏற்படுத்தும். 4-ல் உள்ள செவ்வாய் வீடு, மனை கட்டடம் சம்பந்தமான விஷயங்களில் புதிய ஈடுபாடு களை உண்டாக்கலாம். அந்தவகையில் கடன் கள் ஏற்பட்டாலும் அது சுபக்கடன் என்று ஏற்றுக்கொள்ளலாம். பணவரவு திருப்திதரும் வகையில் அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். 4-க்குடைய சூரியன் 3-ல் மறைகிறார். தகப்பனார்வழியில் சில வருத்தமான நிகழ்வுகளோ, சங்கடமான சூழல்களோ ஏற்படலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 2-ல் கடகத்தில் மாறுகிறார். (19-ஆம் தேதிமுதல்). அவருடன் சூரியனும் செவ்வாயும் இணைந்திருக்கி றார்கள். மிதுன ராசிக்கு செவ்வாய் 11-க்குடையவர். அவருடன் இணையும் ராசிநாதன் புதன் உங்களது காரியங்களில் வெற்றியைத் தருவார். 12-க்குடைய சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 3-ல் மறைகிறார். 12-க்குடையவர் 3-ல் மறைவது நன்மைதான். திட்டமிட்ட செயல்பாடுகளை சிறப்பாகச் செய்துமுடிக்கலாம். உத்தியோகத் துறையினருக்கு வேலைப்பளு சற்று குறைவாகக் காணப்படும். 22-ஆம் தேதிமுதல் செவ்வாய் சுக்கிரனோடு இணைகிறார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலைப்பாடுகள் மாறும். அட்டமத்துச் சனி ஒருபுறம் அலைக் கழித்தாலும் அதற் கேற்ற நற்பலன்களும் கிடைக்கும். ஜென்ம ராசியை குரு பார்ப்பதும் அதற்கு ஒரு காரணம். எந்த ஒரு ராசியையோ அல்லது லக்னத்தையோ குரு பார்த்தால் அவர் களுக்கு தோல்விக்கும் தொய்வுக்கும் இட மில்லை. எதிர்பார்த்த பணியிடமாற்றம் கிடைக் கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். சிலர் குடியிருப்பு மாற்றத்தை சந்திக்கலாம். தொழில், வியாபாரம் இவற்றில் போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக் கும் ஆற்றலும் தெளிவும் பிறக்கும். உடல் நலத் தில் நிலவிய வைத்தியச் செலவுகள் படிப் படியாக விலகும்; ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 3, 11-க்குடைய சுக்கிரன் 2-ல் (வாரத் தொடக்கத்தில்) மாறுகி றார். 2-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் 10-க்குடைய செவ்வாயோடு இணைகிறார். உங்களது முயற்சி, செயல்பாடு இவற்றில் நிதானம் தென்படும். இதுவரை நிலவிவந்த குழப்பங்களும் மன உளைச்சல்களும் விலகி அமைதி பிறக்கும். 9-க்குடைய குரு 8-ல் மறைந்து 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீண் விரயங்கள், செலவுகள் எல்லாம் அனாவசியமாக ஏற்படும். அதேசமயம் குரு 2-ஆமிடத்தையும் பார்ப்பதால் மேற்கண்ட விரயங்களையும் செலவு களையும் சமாளிக்கும் தன வரவும் உண்டாகும். அவ்வப்போது அலைச் சல் ஏற்படலாம். தொழில் தொடர்பான முயற்சிகள் சற்று தள்ளிப்போகலாம். 2-ல் மாறும் (10-க்குடைய) செவ்வாய் குருவின் பார்வையைப் பெறுகி றார். நிலுவையில் உள்ள தொகைகள் வந்துசேரும். குடும்பத்திலும் இத மான சூழ்நிலைகள் காணப்படும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை யும் அன்யோன்யமும் அதிகரிக்கும். பிள்ளை களுடன் மகிழ்ச்சிகர மான சூழ்நிலைகள் உண்டாகும். 5-ஆமிடத் துக் கேது சில விஷயங் களில் ஒருவித கற்பனை பயத்தை ஏற்படுத்தி சந்தேகத்தை உண்டுபண்ணினாலும், 5-க்குடைய செவ்வாயை குரு பார்க்கும் காரணத் தால் அந்த சந்தேகம் விலகும். மேற்கூறிய தொழில் முயற்சிகளும் கைகூடும். இதுவரை இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் 22-ஆம் தேதிக்குப் பிறகு நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைகி றார். பொதுவாக ராசிநாதன் மறைந்தாலோ அஸ்தமனமானாலோ மைனஸ் பாயின்ட்தான். இங்கு ஜென்ம ராசியை 5-க்குடைய குரு பார்க்கி றார். எனவே, ராசிநாதன் மறைந்தாலும் ராசி யைப் பார்க்கும் குருவால் சில காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். 10-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் வாரத் தொடக்கத்தில் மாறுகிறார். அவருடன் 9-க்குடைய செவ்வாயும் 22-ஆம் தேதிமுதல் இணைகிறார். இது 9, 10-க்குடையவர் சேர்க்கையான தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த விஷயத்திலும் உங்களின் நிதானப்போக்கு காரிய வெற்றிக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. 2-க்குடைய புதன் 19-ஆம் தேதிமுதல் 12-ல் மறைகிறார். புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது பழமொழி. வியாபாரம் சம்பந்த மாக முதலீடு செய்யலாம். அது சுபவிரயமாக எடுத்துக்கொள்ளலாம். 5-க்குடைய குரு 7-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மாறும். அவர்களின்மூலம் உண்டான பிரச்சினைகளுக்கும் சுமூகத் தீர்வு அமையும். 7-ல் உள்ள குரு திருமண யோகத்தை உருவாக்கித் தருவார். திருமணமான கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகமாகும். பூர்வீக சொத்துகள்வகையில் நிலவிய பங்காளிப் பிரச்சினைகள், வில்லங்கம், விவகாரங்களில் சாதகமான நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 19-ஆம் தேதிமுதல் 11-ஆம் இடமான கடக ராசிக்கு மாறுகிறார். 11-ஆமிடம் ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம், காரிய அனுகூல ஸ்தானம். அங்குவரும் புதன் உங்கள் காரிய முயற்சிகளில் வெற்றியைத் தருவார் என்று நம்பலாம். புதிய நபர்களின் நட்பும் அதன்மூலம் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 3-ல் உள்ள கேது அதற்குண்டான தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தருவார். 4-க்குடைய குரு 2-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். தேகசுகம் நன்றாக இருக்கும். அவ்வப்போது இருந்துவந்த வைத்தியச் செலவுகள் அகலும். பிள்ளைகள் அல்லது பிள்ளைகள் சார்ந்தவகையில் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதற்கேற்ற கடனும் கிடைக்கும். அது சுபக்கடன் ஆகும். 9-ஆமிடத்து ராகு- தெய்வ சிந்தனையை அதிகரிப்பதோடு ஆன்மிக யாத்திரை, குலதெய்வ வழிபாடு, பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், ஆன்மிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பலன்களை சந்திக்க நேரும். களஸ்திரகாரகன் சுக்கிரன் 12-ல் மறைகிறார். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், வீண் வம்பு போன்ற பலன்களாக ஏற்படும். குரு சுக்கிரனைப் பார்ப்பதால் என்ன பிரச்சினைகள் வந்தாலும் ஒற்றுமை குறையாது. பிரிவினையும் வராது என்று நம்பலாம். அரசுத் துறையினருக்கு இடமாற்றம் உருவாகலாம். உடன்பிறந்த சகோதர- சகோதரிவழியில் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வராமல் இழுபறியாக இருக்கும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 11-ஆமிடமான சிம்ம ராசிக்கு மாறுகிறார். ராசிநாதன் 11-ல் இருப்பது நல்லது தான். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். மனைவி பெயரில் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். சுயதொழில் அல்லது கூட்டுத்தொழில்வகையில் லாபகர மான முன்னேற்றங்கள் உருவாகும். 9-க்குடைய புதன் 19-ஆம் தேதி முதல் 10-ல் மாறுகிறார். அது தர்மகர்மாதிபதி யோகமாகும். மேற்கூறிய பலனில் நன்மைகள் நடைபெற இதுவும் ஒரு காரணமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்பட இடமுண்டு. 11-ஆமிடத்தையும் ஜென்ம ராசியையும் குரு பார்க்கிறார். உங்கள் திறமைகள் வெளிப்படும். நீங்கள் செய்யத் தயங்கிய காரியங்களில் எல்லாம் தயக்கம் நீங்கித் தெளிவு பிறக்கும். 10-ல் உள்ள சூரியன் அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இக்காலகட்டத்தில் நல்ல தகவல்களைத் தரும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த சலுகைகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராக செயல்படும். 2-ஆமிடத்துக் கேதுவும், 8-ஆமிடத்து ராகுவும் குடும்பச் சூழ்நிலையில் அவ்வப்போது குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்களைத் தரலாம். என்றாலும், ராசியை குரு பார்ப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சமயோசித சாமர்த்தியமும் உருவாகும். அரசியல்துறை மற்றும் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும். பூர்வீக சொத்து விற்பனை செய்வதன்மூலம் கையில் பணம் புரளும். தாராள வரவு- செலவும் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பது களஸ்திர தோஷத்தைக் குறிக்கும். என்றாலும் விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 22-ஆம் தேதி முதல் சிம்ம ராசிக்கு மாறுகிறார். அவரை 2-க்குடைய குரு பார்க்கிறார். எனவே தோஷ நிவர்த்திக்கும் இடமுண்டு. "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்' என்பது ஜோதிட மொழி. அதுபோல ராசிநாதனை குரு பார்க்கிறார். 10-ல் மாறும் செவ்வாய் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எனவே தொழில், வாழ்க்கை இவற்றில் முன்னேற்றகரமான பலன்கள் உண்டாகும். புதிய அலுவலகம் மாறுதல் அல்லது அலுவல கத்தை இடமாற்றுதல் போன்ற பலன்களும் உண்டாகும். விருச்சிக ராசிக்கு 10-க்குடைய சூரியன் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோக மாகும். அது உங்களது முயற்சிகளில் மேலும் நற்பலனை ஏற்படுத்தித் தரும். பூர்வீக சொத்து களால் லாபம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக ஏதேனும் வழக்கு வியாஜ்ஜியங்கள், விவகாரங்கள் இருந்தால் அவை மாறி சுமூக தீர்வு கிடைக்கும். 2-க்கு டைய குரு 4-ல் அமர்ந்து 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிலர் வீட்டைப் பழுதுபார்க்கும் முயற்சியில் இறங்கி செலவு செய்யலாம். சிலர் புதிய வாகனம் வாங்குவதில் செலவு செய்ய லாம். சிலர் மனை வாங்குவதில் முதலீடு செய்ய லாம். ஆக, ஏதாவது ஒருவகையில் செலவினங் கள் வரத்தான் செய்யும். அதை சுபவிரயச் செல வாக மாற்றுவது நாம் எடுக்கும் முயற்சியில் உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உயர்ந்த மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைகிறார். குருவுக்கு வீடுகொடுத்த சனி 2-ல் ஆட்சி. குரு, சனி இருவரும் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். எனவே குருவுக்கு மறைவுதோஷம் பாதிக்காது. 3-ல் உள்ள குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். சகோதரவழியில் நிலவிய பிரச்சினைகள், மனச்சங்கடங்கள் விலகும். திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். தகப்பனார்வழியில் பூர்வீக சொத்து சம்பந்தமாக நல்ல தீர்வுகள் எடுக்கப்படும். தகப்பனாரின் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வைத்தியச் செல்வுகள் அகலும். தகப்பனாரிடம் காணப்பட்ட பிரச்சினைகள் விலகி ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும். தொழில்துறையில் புதிய அணுகுமுறைகளைக் கையாளலாம். 7-க்குடைய புதன் 8-ல் மறைகி றார். என்றாலும் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதற்கிணங்க பொருளாதாரத்தில் தன வரவும் உண்டாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே நிறைவேற்றலாம். 22-ஆம் தேதிமுதல் 5-க்குடைய செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகி றார். ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோணம் ஏறுவது சிறப்பு. வீடு, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நற்பலன்கள் உண்டாகும். சிலர் புதிய வீடு கட்டலாம். அல்லது புதிய மனை வாங்கலாம். அது சம்பந்தப்பட்டவகையில் கடன்களும் பெறலாம். உடன்பிறப்புகளால் அனுகூலம் ஏற்படும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி. வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம் தருவார். வாரத் தொடக்கத்தில் 5-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைகிறார். களஸ்திரகாரகன் மறைவதால் கணவன்- மனைவிக்குள் சிலசில பிரச்சினைகள் தோன்றி விலகும். யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வது அவசியம். சிலநேரம் உடல்ரீதியாக சோர்வும் மனரீதியாக கவலையும் ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்தும். 12-க்குடைய குரு 2-ல் இருப்பது தாராள வரவு- செலவு இருக்கும் என்றாலும், பெரியளவு சேமிப்புக்கும் இடமிருக்காது. நிதானத்தோடு செயல்படுவதன்மூலம் நிம்மதி உண்டாகும். 5-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் உங்களை ஒரு நிரந்தர முடிவெடுக்கவிடாமல் அலைக்கழிக்கலாம். பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். அவர்களினால் ஏற்பட்ட பிரச்சினைகள் மனதை வருத்தலாம். என்றாலும் 5-ஆமிடத்து அதிபதியை குரு பார்ப்பதால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி பிரச்சினைகளை சமாளித்து ஆறுதலடையலாம். வருமானப் பிரச்சினைகள் விலகும். 22-ஆம் தேதிக்குப்பிறகு சிம்ம ராசியில் மாறும் செவ்வாயும் குருவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் சகோதர ஒற்றுமை, அன்யோன்யம் உண்டாகும். தொழில்துறையில் பிற நபரை நம்பாமல் தானே இறங்கி செயல்புரிந்தால் நஷ்டத்தைத் தவிர்த்து லாபகரமான சூழ்நிலைகளை மேற்கொள்ளலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 12-ல் ஆட்சி. 12-ஆமிடம் விரயஸ்தானம். ராசிநாதனே விரயாதிபதியாக அமைவதால்தான் கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திறகுரியவர்கள் என்று எழுதுகிறேன். 2, 11-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு ஏழரைச் சனி நடந்துகொண்டிருந்தாலும் அவர் ராசிநாதன் என்பதால் பெரியளவு பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார் என்று நம்பலாம். என்றாலும் உத்தியோகத்தில் திடீர்மாற்றம், குடியிருப்பு இடமாற்றம், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமை போன்றவை ஏற்படலாம். 4-ல் உள்ள ராகு தேகநலன் அல்லது தாயார் உடல்நலனில் வைத்தியச் செலவு, கட்டட வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். 7-க்குடைய சூரியன் 6-ல் மறைகிறார். தந்தை அல்லது தந்தைவழியில் சில சங்கடங்கள் உருவாகலாம். வாரத் தொடக்கத்தில் களஸ்திரகாரகன் சுக்கிரன் 7-ல் மாறுகி றார். குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் பார்வை. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்பும் பெருகும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் பெருமை, நன்மதிப்பு உண்டாகும். சிலர் மனைவி பெயரில் சிறுதொழில் ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் உள்ள மனைவிகளுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகி றார். அவருக்கு வீடுகொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைகிறார். ராசிநாதன் 12-ல் மறைவ தால் காரியதாமதம் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் இழுபறி நிலைகளைச் சந்திக்கலாம். முடியும் தறுவாயில் சென்று, முடியாமல் போகும் சூழ்நிலைகளும் ஏற்படலாம். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைகிறார். அவர் 12-ல் உள்ள குருவைப் பார்க்கிறார். விரயம் செய்து பிறகு பலனடையவேண்டி வரும். 12-ல் இருக்கும் குரு 4, 6, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். வீடு, மனை, கட்டடம், வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் நற்பலன்கள் உண்டாகும். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். அல்லது பழைய வீட்டைப் பழுதுபார்க்கவும் செய்யலாம். அதற்காக அரசு வங்கிக்கடன் அல்லது தனியார் வங்கிக்கடன் வாங்கலாம். தொழில்வகையில் போட்டி, பொறாமை களைச் சந்திக்க நேரலாம். 3-ல் உள்ள ராகு அவற்றையெல்லாம் சமாளிக்கும் தைரியத்தை யும் தன்னம்பிக்கையையும் தருவார். உபதொழில் முயற்சிகள் கைகூடும். சிலருக்கு வெளி மாநில அல்லது வெளியூர் வேலை வாய்ப்பு கள் உண்டாகும். 5-ல் சூரியன், புதன் சேர்க்கை. உங்கள் திட்டங்கள், முயற்சிகள் யாவும் வெற்றியடையும் இலக்கை நோக்கிச் செல்லும். பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். சகோதர சகாயமும் ஆதரவும் உண்டாகும்.