ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.
செவ்வாய்: அஸ்வினி- 1. (வ).
புதன்: அஸ்தம்- 4. (வ).
குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1.
சுக்கிரன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 2.
கேது: கேட்டை- 4.
கிரக மாற்றம்:
19-10-2020- புதன் உதயம்.
20-10-2020- புதன் வக்ரநிவர்த்தி.
23-10-2020- கன்னிச் சுக்கிரன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
18-10-2020- விருச்சிகம்.
21-10-2020- தனுசு.
23-10-2020- மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம். சாரம்கொடுத்த கேது ராசிக்கு 8-ல் இருந்தாலும், செவ்வாய் வீட்டில் நின்று செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். அத்துடன் உங்கள் ராசியை பாக்கியஸ்தானத்தில் ஆட்சி பெற்ற குருவும் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; 9-ல் குருவும் சனியும் கூடியிருக்கிறார்கள். இது தர்மகர்மாதிபதி சேர்க்கை யாகும். எத்தனையோ யோகங் களிருந்தாலும் ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் போதும்- எப்பொழுதும் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் இடமில்லை. ஜாதக தசாபுக்திக் கோளாறினாலோ கோட்சாரக் கோளாறினாலோ கெடுபலன் நடக்க வாய்ப்பிருந்தால், தர்ம கர்மாதிபதி யோகமிருந்தால் அது பரிகாரமாகிவிடும். பந்தயத்தில் ஓடும் குதிரை இடறிக் கீழேவிழுந்தாலும் துள்ளியெழுந்து ஓடுவதுபோல, உங்கள் முயற்சிகளும் காரியங்களும் செயல்களும் தேக்கமாகி நின்றுவிடாமல் தொடர்ந்து செயல்படும். குறிப்பிட்ட கோரிக்கைகளும் கொள்கைகளும் குறிப்பிட்டபடி நிறைவேறும். சிலருக்கு குலதெய்வ வழிபாடும், சிலருக்கு இஷ்ட தெய்வ வழிபாடும் கைகூடும். 5-க்குரிய சூரியன் 7-ல் நீசமென்றாலும், ராசிக்கு 7-ல் கேந்திரமாக இருப்பதாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 5-ல் திரிகோணமாக இருப்பதாலும் பரிவர்த்தனை யோகம் அமையும். இதனடிப்படையில் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. இதனால் புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு போன்ற யோகங்களும் அமையும். திருமண மாகாதவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதோருக்கு புத்திரபாக்கிய யோகமும் உண்டாகும். ஏற்கெனவே வாரிசு உள்ளவர்களுக்குப் பிள்ளைகளால் பெருமை யும் சிறப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும், ராசிக்கு 9-க்குரிய குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதோடு புத்திர ஸ்தா னத்தையும் பார்ப்பதால், "நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்னும் வாசகப்படி எல்லாம் இனிமையாகவும் வலிமையாகவும் வளமாகவும் அமையும்
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் இருக்கி றார். வாரக்கடைசியில்- 23-ஆம் தேதி கன்னி ராசிக்கு மாறுவார். அங்கு அவர் நீசமடைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் கன்னியில் ஆட்சி என்பதால், சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. மேலும், சிம்மச் சுக்கிரனும் துலா சூரியனும் பரிவர்த்தனை என்பதாலும் உங்களுக்கு எவ்விதக் கேடுகெடுதிக்கும் இடமில்லை. ஜென்மத்தில் ராகு, 7-ல் கேது இருப்பதாலும்- ரிஷப ராசிக்கு அட்ட மத்துச்சனி நடப்பதாலும் சிலருக்கு குடும்பக் குழப்பமும் பிரச்சினைகளும் மனநிறைவைக் கெடுக்கும்; சந்தோஷத்தைக் கெடுக்கும். ஏதோவொரு குறையிருப்பதுபோல தோன்றும். அது பணக்குறையா- மனக் குறையா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது. இது அட்டமத்துச்சனியின் பாதிப்பா- அட்டமத்து குருவின் பாதிப்பா எனச் சொல்லமுடியாது. மேலும், உங்கள் ராசியை எந்த சுபகிரகமும் பார்க்க வில்லை. உங்கள் சஞ்சலத் திற்கு அதுவும் ஒரு காரண மாக
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.
செவ்வாய்: அஸ்வினி- 1. (வ).
புதன்: அஸ்தம்- 4. (வ).
குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1.
சுக்கிரன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 2.
கேது: கேட்டை- 4.
கிரக மாற்றம்:
19-10-2020- புதன் உதயம்.
20-10-2020- புதன் வக்ரநிவர்த்தி.
23-10-2020- கன்னிச் சுக்கிரன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
18-10-2020- விருச்சிகம்.
21-10-2020- தனுசு.
23-10-2020- மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம். சாரம்கொடுத்த கேது ராசிக்கு 8-ல் இருந்தாலும், செவ்வாய் வீட்டில் நின்று செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். அத்துடன் உங்கள் ராசியை பாக்கியஸ்தானத்தில் ஆட்சி பெற்ற குருவும் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; 9-ல் குருவும் சனியும் கூடியிருக்கிறார்கள். இது தர்மகர்மாதிபதி சேர்க்கை யாகும். எத்தனையோ யோகங் களிருந்தாலும் ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் போதும்- எப்பொழுதும் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் இடமில்லை. ஜாதக தசாபுக்திக் கோளாறினாலோ கோட்சாரக் கோளாறினாலோ கெடுபலன் நடக்க வாய்ப்பிருந்தால், தர்ம கர்மாதிபதி யோகமிருந்தால் அது பரிகாரமாகிவிடும். பந்தயத்தில் ஓடும் குதிரை இடறிக் கீழேவிழுந்தாலும் துள்ளியெழுந்து ஓடுவதுபோல, உங்கள் முயற்சிகளும் காரியங்களும் செயல்களும் தேக்கமாகி நின்றுவிடாமல் தொடர்ந்து செயல்படும். குறிப்பிட்ட கோரிக்கைகளும் கொள்கைகளும் குறிப்பிட்டபடி நிறைவேறும். சிலருக்கு குலதெய்வ வழிபாடும், சிலருக்கு இஷ்ட தெய்வ வழிபாடும் கைகூடும். 5-க்குரிய சூரியன் 7-ல் நீசமென்றாலும், ராசிக்கு 7-ல் கேந்திரமாக இருப்பதாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 5-ல் திரிகோணமாக இருப்பதாலும் பரிவர்த்தனை யோகம் அமையும். இதனடிப்படையில் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. இதனால் புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு போன்ற யோகங்களும் அமையும். திருமண மாகாதவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதோருக்கு புத்திரபாக்கிய யோகமும் உண்டாகும். ஏற்கெனவே வாரிசு உள்ளவர்களுக்குப் பிள்ளைகளால் பெருமை யும் சிறப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும், ராசிக்கு 9-க்குரிய குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதோடு புத்திர ஸ்தா னத்தையும் பார்ப்பதால், "நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்னும் வாசகப்படி எல்லாம் இனிமையாகவும் வலிமையாகவும் வளமாகவும் அமையும்
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் இருக்கி றார். வாரக்கடைசியில்- 23-ஆம் தேதி கன்னி ராசிக்கு மாறுவார். அங்கு அவர் நீசமடைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் கன்னியில் ஆட்சி என்பதால், சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. மேலும், சிம்மச் சுக்கிரனும் துலா சூரியனும் பரிவர்த்தனை என்பதாலும் உங்களுக்கு எவ்விதக் கேடுகெடுதிக்கும் இடமில்லை. ஜென்மத்தில் ராகு, 7-ல் கேது இருப்பதாலும்- ரிஷப ராசிக்கு அட்ட மத்துச்சனி நடப்பதாலும் சிலருக்கு குடும்பக் குழப்பமும் பிரச்சினைகளும் மனநிறைவைக் கெடுக்கும்; சந்தோஷத்தைக் கெடுக்கும். ஏதோவொரு குறையிருப்பதுபோல தோன்றும். அது பணக்குறையா- மனக் குறையா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது. இது அட்டமத்துச்சனியின் பாதிப்பா- அட்டமத்து குருவின் பாதிப்பா எனச் சொல்லமுடியாது. மேலும், உங்கள் ராசியை எந்த சுபகிரகமும் பார்க்க வில்லை. உங்கள் சஞ்சலத் திற்கு அதுவும் ஒரு காரண மாகிறது. "கழுதை முன்னால் போனால் கடிக்கிறது, பின் னால் போனால் உதைக் கிறது' என்கிற கதையாக கிரகங்களெல்லாம் ஏட்டிக் குப்போட்டியாக இருப்ப தால், நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்கிறது. ஐந்தும் மூன்றும் "எட்டு' என மனம் நினைக்கும். ஆனால், கை "ஒன்பது' என எழுதும். இப்படிப் பல காரியங்களில் உங்களுக்கு ஏமாற்றமும் இழப்பும் ஏற்படுகிற காலம். பொறுமையாகவும் மிகுந்த கவனத் துடனும் சிந்தித்து செயல்படவேண்டியது அவசியமாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கிறார். அவரை 7-ல் இருக்கும் சனி 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். சனி 8, 9-க்குரியவர். சனியோடு சேர்ந்த குரு 10-க்குரியவர். தர்மகர்மாதிபதியான சனியும் குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, புதனை சனி பார்க்கிறார். எனவே, எவ்வளவு தடைகள், குறுக்கீடுகள் காணப்பட்டாலும் குரு, சனி சேர்க்கையால் தடைகளைக் கடந்து முன்னேறலாம்; லட்சியங்களை நிறைவேற்றலாம். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளுக்குத் தகுந்தபடி முயற்சிகளிலும் லட்சியங்களிலும் வைராக்கியமும் விடாமுயற்சியும் சாதனையும் இருப்பதால் கருதியது கைகூடும்; நினைத்தது நிறைவேறும். இதுதான் தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன். தர்மம் என்பது 9-ஆமிடம்- திரி கோணம், தெய்வ அனு கூலம். 10-ஆமிடமென்பது கேந்திரம்- முயற்சி. தன்னம் பிக்கையும் விடாமுயற்சியும் உடையவர்களுக்கு வெற்றி நிச்சயம். அதனால்தான் முன்னோர்கள் "முயற்சியுடை யார் இகழ்ச்சியடையார்' என்றார்கள். இறைவன் சோம்பேறிக்கும் நம்பிக்கைத் துரோகிகளுக்கும் உதவி செய்யமாட்டார். வைராக்கிய மும் சாதனையும் உடைய வர்களுக்கு பக்கத்துணையாக இருந்து வெற்றிபெறத் துணைசெய்வார். அதேசமயம் சனி அஷ்டமாதிபதி. அவர் 7-ல் நின்று ராசியைப் பார்ப்பதால், "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு' என்பதுபோல, நல்ல தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பீர்கள். வாய்ப்பு வரும்போது அதைக் கைநழுவவிடாமல் தக்கவைத்துக்கொள்வீர்கள். மிதுன ராசிக்கு 5-ல் சூரியன் நீசமாக இருந்தாலும் அவரை செவ்வாய் பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. சூரியனுக்கு செவ்வாய் உச்ச ராசிநாதனாவார்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, சனி மறைந்தாலும், 10-க்குரிய செவ்வாய் 10-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். அவரை 9-க்குரிய குரு பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. ஏற்கெனவே எழுதியபடி, ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு எப்பொழுதும் வீழ்ச்சிக்கு இடமில்லை. குருவருளும் திருவருளும் அந்த ஜாதகருக்கு பக்கபலமாக இருந்து, பாதுகாப்பு அரணாக விளங்கி முன்னேற் றத்தை ஏற்படுத்தும். தர்ம ஸ்தானம் என்பது திரிகோணம். கர்ம ஸ்தானம் என்பது கேந்திரம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம்- இதை முயற்சி ஸ்தானம் எனவும் சொல்லலாம். திரிகோணம் என்பதை வெற்றியாக்கித் தரும் தெய்வ அனுகூல ஸ்தா னம் எனவும் சொல்லலாம். ஆக, கேந்திரமும் திரிகோண மும் பலம்பெறும் ஜாத கருக்கு தோல்விக்கு இடமில்லை; எப்பொழுதும் வெற்றிதான். தெளிவாகச் சொன்னால், தேன் தானும் கெடாது, தன்னைச் சேர்ந்த பொருளையும் கெடவிடாது. குருவும் சனியும் 6-ல் மறைவதால் சில காரியங்களில் தடையும் தாமதமும் காணப் பட்டாலும், 10-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதால் முயற்சிகள் தளர்ச்சி யில்லாமல் வளர்ச்சிபெறும். வெற்றி வாய்ப்புக்கு இடம் ஏற்படும். சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும்- ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிடுவதுபோல. சில காரியங்கள் முயற்சிக்குப் பின் கைகூடும்- தோலுரித்து வாழைப்பழம் சாப்பிடுவதுபோல. சில காரியங்கள் பலாப்பழம்போல கடின முயற்சிக்குப் பிறகு செயல்படும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் மறைவு, நீசம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் சிம்ம ராசியில் பரிவர்த்தனையாக இருக்கிறார். அதனால் ராசிநாதன் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும், சிம்ம ராசிக்கு 5-ல் குரு ஆட்சிபெற்று சிம்ம ராசியைப் பார்க்கிறார். எனவே, குரு பார்க்கக் கோடி நன்மை என்பதுபோல, "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' எனப் பாடலாம். 6-க்குரிய சனி குருவோடு கூடியிருப்பதால், சிலசமயங்களில் கோட்டைக்குள் குத்துவெட்டு என்பதுபோல, சொந்த பந்தங்கள் அல்லது சுற்றத்தார்வகையில்- கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்வகையில் எதிர்ப்புகளும் இடையூறுகளும் தடை, தாமதங்களும் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்த்து நின்று போராடி உங்கள் காரியங்களை நிறைவேற்றவேண்டும். ராசிநாதன் சூரியன் நீசமாக இருந்தாலும், சூரியனின் உச்ச ராசிநாதன் செவ்வாய் ஆட்சிபெற்று சூரியனைப் பார்ப்பதாலும், சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருப்பதாலும் நீசபங்க ராஜயோகமாகிறது. தொடக்கத்தில் தோல்விபோல தோன்றுகிற பல காரியங்களும் உங்கள் விடாமுயற்சியினா லும் வைராக்கியத்தினாலும் முடிவில் முழுவெற்றியாக அமையும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் கன்னியில் ஆட்சியாக இருக்கிறார். 11-ஆமிடத்து அதிபதியான சந்திரனின் சாரம்பெறுகிறார். (அஸ்தம்). புதன் 1, 10-க்குரியவர். 4-ல் குரு, சனி சேர்ந்து நின்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதோடு, சனி கன்னி ராசியையும் புதனையும் பார்க்கிறார். ஆகவே, குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும் கழுவின மீனில் நழுவின மீனைப்போல, உங்கள் காரியங்கள் யாவும் தோல்வியடையாமல்- தொய்வடையாமல் முழுவெற்றியடையும். முயற்சிகளில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பழைய தொழில் விருத்தியடையும். புதிய தொழில் கைகூடும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். 3-ஆமிடத்துக் கேதுவும் 9-ஆமிடத்து ராகுவும் குலதெய்வ வழிபாடு அல்லது இஷ்டதெய்வ வழிபாடு ஆகியவற்றில் குறுக்கீடுகளையும் தடைகளையும் உருவாக்கலாம். அவற்றை உங்கள் வைராக்கியத்தினாலும் விடாமுயற்சியினா லும் எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும். அதற்கு உறுதுணையாக உங்கள் ராசிநாதன் புதன் ஆட்சிபெறுவதும், அவரை சனி பார்ப்பதும் அமைகிறது. 2, 12-க்குரிய சுக்கிரனும் சூரியனும் பரிவர்த்தனை என்பதால் வரவும் உண்டு; செலவும் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து அவை சுபமங்களச் செலவுகளாக அமையலாம். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்ளும் சந்தர்ப்பம் அமையும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரனும் 11-க்குரிய சூரியனும் பரிவர்த்தனையாக இருக்கி றார்கள். சூரியன் துலா ராசியில் நீசமாக இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்தால் நீசபங்கமாக அமைகிறது. வரவு- செலவில் பஞ்சமில்லை. எவ்வளவு வரவு வந்தாலும் அவ்வளவும் செலவாகும். அதேசமயம், அவை பயனுள்ள செலவாக அமையும். விரயம் என்பது சுபவிரயமாக மாறும். கையில் சேமிப்பு இருக்காது. ஏதாவதொன்றில் சுபமுதலீடு செய்துவிடவேண்டும். பொன் ஆபரணங்கள், காலிமனை, வீடு, வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. அப்படி எந்தவொரு திட்டமும் இல்லையென் றால் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். 7-ல் ஆட்சிபெற்ற செவ்வாயை அவருக்கு 9-க்குரிய குரு பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணயோகம் கைகூடும். திருமணமானவர்கள் மனைவிக்கு பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை செய்யலாம். தேக ஆரோக்கியம், பொருளாதாரப் புழக்கம் திருப்தியாக இருக்கும். 12-ல் புதன் ஆட்சி பெறுவதால்- அவரை சனி பார்ப்பதால் வேலை விˆயமாக சிலர் வெளியூர் போகலாம் அல்லது வெளிநாடு போகலாம். ஏற்கெனவே குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளிமாநிலத்தில் வேலை பார்ப்போர் விரும்பிய இட மாற்றத்தை சந்தித்து, மனைவி, மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கலாம். உள்ளூரிலிருப்பவர்கள் குடியிருப்பு மாறலாம். சொந்த வீட்டுக்குரியவர்களுக்குத் தொழில்துறையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆக, வாழ்க்கை, தொழில், உத்தியோகம், பதவி ஆகியவற்றில் ஏதோவொரு மாற்றம் அமையும். அந்த மாற்றம் மனதுக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருப்பதால் மறைவு தோˆமில்லை; ராசியை 8-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். 2-ல் குரு, சனி சேர்க்கை. 11-ல் புதன் ஆட்சி. ஜென்மக் கேது- சப்தம ராகுவால் சிலநேரங்களில் சில காரியங்களில் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும், 11-ல் புதன் ஆட்சி பெறுவதால் எடுத்த காரியங்களைத் தொடுத்து முடிக்கலாம். அடுத்தடுத்து உற்சாகத்தோடு செயல்படலாம். ஏழரைச்சனியின் கடைக் கூறு பாதச்சனி நடைபெற்றாலும், குருவோடு சேர்ந்த சனி உங்களுக்குப் பொங்குசனியாக தங்குதடையில்லாத வெற்றிகளைக் கொடுப்பார். சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனை என்பதால், ஏழரைச்சனியின் மாற்றங்கள் திருப்தியான, முன்னேற்றமான மாற்றங்களாக அமையும். தொழில், பதவி, உத்தியோகம், வேலை ஆகிய எல்லா வற்றிலும் விரும்பியமாதிரி சிறப்பான பலன்களை சந்திக்கலாம். நீண்டகாலமாக திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றலாம். குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி சேர்க்கை. மங்கள காரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். மனைவி, மக்களுக்கு பொன்னா பரணச் சேர்க்கை உண்டாகும் அல்லது அவர்கள் பெயரில் நிரந்த வைப்புநிதி முதலீடு செய்யலாம். கொடுக்கல்- வாங்கல், பொருளாதாரம், ஆரோக்கியம் எல்லாவற்றி லும் நற்பலன்களாக நடைபெறும். உறவினர் களிடமிருந்து நல்ல செய்தி தேடிவரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடைபெற்றாலும் குருவோடு கூடியதால் நிறைவான பலன்களை எதிர்பார்க்கலாம். குரு இயற்கையில் நல்லவர். அத்துடன் ராசிநாதன். "நல்லாரைக் காண்பதும் நன்று. நல்லாரோடு இணைந்திருப்பதும் நன்று. நல்லார் சொல் கேட்பதும் நன்று' என்பது பழம்பாடல். ஜென்மச்சனி நடந்தாலும் உங்களுக்குப் பொங்குசனியாகவே பலன்தரும். அது எந்தச் சுற்றாக இருந்தாலும் கவலையில்லை. பொதுவாக, முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்பார்கள். சனி பூராடம் 4-ல் சுக்கிரன் சாரம்பெறுவதால்- குருவோடு கூடியிருப்பதால் எல்லாவகையிலும் ஏழரைச்சனி நல்ல பலன்களையே தரும். தனுசு ராசிக்கு 3, 7, 10-ஆமிடங்களை சனி பார்ப்பதால் நண்பர்கள் வகையிலும், உடன்பிறப்புகள் வகையிலும் நல்லதே நடக்கும். அதேபோல, கணவன்- மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். பார்க்கும் வேலை அல்லது பதவி, செய்யும் தொழில், குடும்ப வாழ்க்கை எல்லாவற்றிலும் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீடு, மனை, வாகனம் போன்றவகையில் உங்களுடைய முயற்சிகளும் செயல்களும் திட்டமிட்டபடி நூற்றுக்கு நூறு வெற்றியடையும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு தற்போது விரயச்சனி நடக்கிறது. 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. அதற்குப் பிறகு ஜென்மச்சனியாக மாறுவார். விரயச்சனி 2, 6, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கு இடமில்லை. சரளமான பணப்புழக்கமும் தாராளமான பணப்புழக்கமும் காணப்படும். சிலருக்கு தசாபுக்திரீதியாகக் கடன்கள் ஏற்பட் டாலும், அவை சுபக்கடன்களாக அமையும். வீடு, மனை, வாகனம் போன்றவகையிலும், சடங்கு, திருமணம், மகப்பேறு போன்றவகை யிலும் சுபச்செலவுகளாக மாறும். இவற்றில் பற்றாக்குறையை சமாளிக்கக் கடன் வாங்க லாம். அது சுபக்கடனாகும். கடன் வாங்கு வதில் ஒரு நடைமுறை இருக்கிறது. தரம் உள்ளவர்களிடம் கடன் வாங்கவேண்டும். தரங்கெட்டவர்களிடம் கடன் வாங்கக் கூடாது. அப்படித் தரமில்லாதவர்களிடம் கடன் வாங்கினால், கம்பர் பாடியமாதிரி "கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கதையாகிவிடும். பொதுவாக, நீங்கள் வாங்கும் கடன் சுப மங்களக் கடனாக அமையும். குருவோடு சேர்ந்த சனி என்பதால், வாங்கிய கடனை நாணயமாகத் திரும்பக் கொடுத்து நல்ல பெயர் எடுக்கலாம். திருக்குரானில் ஒரு வாசகம் உண்டு- வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க நினைப்பவருக்கு அல்லா எல்லா உதவி களையும் செய்துகொடுப்பார். வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க மனமில்லா தவர்களுக்கு அன்றாடச் செலவுக்கே அல்லா வழியில்லாமல் செய்துவிடுவார் என்பதாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சனியோடு 2, 11-க்குரிய குரு சம்பந்தம். 3-ல் செவ்வாய் ஆட்சி. 8-ல் புதன் ஆட்சி. 11-ல் குரு ஆட்சி. போஜ மகாராஜன் ஜாதகப்படி ஏழரைச்சனி வந்தது. அவன் அஷ்டலட்சுமிகளை ஆராதனை செய்தவன். ஆதிலட்சுமி அவனிடம், ""உனக்கு சனி ஆரம்பிப்பதால் நாங்கள் உன்னைவிட்டு வெளியேறும் காலம் வருகிறது. என்றாலும் ஆன்மார்த்தமாக எங்களை வழிபட்டதால் எங்களுள் ஒருவரை உன்னிடம் விட்டுச்செல்ல விரும்புகிறோம். யார் வேண்டும்?'' என்று கேட்டாள். அதற்கு அவன், ""தைரியலட்சுமி மட்டும் என்னிடமிருந்தால் போதும்'' என்றான். அப்பொழுது ஆதிலட்சுமி, ""தைரியலட்சுமி இருக்குமிடத்தில் நாங்கள் ஏழுபேரும் ஒன்றாக இருப்போம்'' என்றாள். ஆகவே, தைரியம் புருˆ லட்சணம். 3-ஆமிடம் தைரிய ஸ்தானம். 3-ல் செவ்வாய் ஆட்சிபெற்றதால் உங்களை தைரியமும் தன்னம்பிக்கையும் வழிநடத்தும். 11-ல் குரு, சனி சேர்க்கையினால் தொட்டது துலங்கும்; வெற்றிமேல் வெற்றிசேரும். 8-ல் புதன் ஆட்சிபெறுவதால்- அவர் 5-க்குரியவர் என்பதால், எதிர்பாராதவகையில் அதிர்ஷ் டம் வந்தடையும். அது இஷ்டமாக வருவது தான் அதிர்ஷ்டம். பொதுவாக ஒரு நியதி உண்டு. விரும்பிப்போனால் விலகிப்போகும். விலகிப்போனால் விரும்பிவரும். உங்கள் கிரக அமைப்புக்கு விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதிர்ஷ்டம் அது இஷ்டமாக வந்தடையும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறுகி றார். அவருடன் 11, 12-க்குரிய சனி சேர்க்கை. பொதுவாக, மீன ராசிக்காரர்கள் ஓய்வறியாத உழைப்பாளிகள். நீரில் மீன் ஆடி ஓடி நீந்திக்கொண்டே இருக்கும். அது போல, மீன ராசிக்காரர்கள் ஓடியாடி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். குருவோடு சனி சம்பந்தப்படுவதால், அவர் களையறியாமல் சோம்பேறித்தனமிருக்கும். அதை சோம்பேறித்தனம் எனச் சொல்வதா? அலட்சிய புத்தி எனச் சொல்வதா என்பது குழப்பம்தான். என்றா லும் குருவோடு சனி கூடியதால், சனியின் சோம்பேறித்தனம் விலகி சுறுசுறுப்பாக மாறிவிடும். "வருமுன் காப்போன்- வந்தபின் காப்போன்- வந்தபின்னும் காவாதவன்' என்பதை விளக்க ஆரம்பப் பள்ளியில் ஒரு பாடக் கதையுண்டு. அதுபோல, உங்களிடம் இந்த மூன்று நிலைப்பாடுகளும் அமைந்திருக்கும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து அது அவ்வப்பொழுது வேலைசெய்யும். ஆக, சுறுசுறுப்புக்கு மீனைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒற்றுமைக்கு காகத்தைப் பார்த்துப் பழகிக்கொள்ளவேண்டும். அதனால்தான் பெரியோர்கள், "கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்றார்கள். அதுமட்டுமல்ல; "கூட்டுறவே நாட்டுயர்வு' என்றார்கள். பொருளாதாரத்திலும் தேக ஆரோக்கியத்தி லும் தெளிவான பலனை அனுபவிக்கலாம். சிலர் குடியிருப்பு மாற்றம் அல்லது தொழில் மாற்றம் செய்யலாம். எதைச் செய்தாலும் திட்டமிட்டுச் செயல்படவும்.