இந்த வார ராசிபலன் 17-1-2021 முதல் 23-1-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-17-1-2021-23-1-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 2, 3, 4.

செவ்வாய்: பரணி- 1, 2.

புதன்: திருவோணம்- 3, 4.

குரு: திருவோணம்- 1.

சுக்கிரன்: பூராடம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 2.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

20-1-2021- புதன் வக்ர ஆரம்பம்.

22-1-2021- குரு அஸ்தமனம்.

சனி அஸ்தமனம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

18-1-2021- மீனம்.

20-1-2021- மேஷம்.

22-1-2021- ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். 2-ல் இருக்கும் ராகு குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு குழப்பத்தையும் மனச்சங்கடங்களையும் தந்தாலும், குரு 2-ஆமிடமான குடும்பஸ்தானத்தைப் பார்ப்பதால் அந்த குழப்பங்களுக்கும் மனச்சங்கடங்களுக்கும் தீர்வும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் வைத்தியச்செலவுகள் வந்துவிலகும். என்றாலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் 10-ல் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். மகரத்தில் குரு நீசம் என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். எனவே, தொழில்வாழ்க்கை இவற்றில் குறையேதுமில்லை. எல்லாம் நிறைவாக நிறைவேறும். 2-ஆமிடத்து ராகு, வருவது அத்தனையை யும் செலவாக்கும். மிச்சம் மீதி இருக்காது. ஐந்நூறு வந்தாலும் செலவு. ஆயிரம் வந்தாலும் செலவு. பத்தாயிரம் வந்தாலும் அதற்கு ஒரு செலவு காத்திருக்கும் ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், நினைக்கும் காரியங்கள் திருப்திகரமாக நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் நாணயம் காப்பாற்றப்படும். 2-க்குடைய சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெற, அவருக்கு வீடுகொடுத்த குரு 10-ல் நீசபங்க ராஜயோகம் பெற்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டவுடன் எப்படியோ பணம்புரளும். திருப்பிக்கொடுத்து நாணயத்தைக் காப்பற்றிவிடலாம்.

thisweekrasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகமாக ராசியைப் பார்க்கிறார். தாராளமான பொருளதாரமும் வரவு- செலவுகளும் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பணம் வந்துசேரும். கொடுக்கவேண்டிய பணம் கொடுக்கப்பட்டு வாக்குநாணயம் காப்பாற்றப் படும். ஜென்ம ராகு சோர்வையும் அசதிகளையும் காரியத்தடைகளையும் ஏற்படுத்தினாலும், குரு ராசியைப் பார்ப்பதால் சமாளித்து செயல்படலாம். 9-ல் குரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்து வாழ்வை வளப்படுத்துவார். 7-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, மனச்சங்கடங்களை உண்டாக்கலாம். தொழில்துறையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் தொழில் இயக்கம் தடைப்படாது. போட்டிகளை வெல்லலாம். 3-ஆமிடத்ûப் பார்க்கும் குரு அதற்குண்டான தைரியத்தையும் தருவார். ஒரு மனிதனுக்கு தைரியம் இருந்தால்தானே எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுகிறார். தர்மகர்மாதிபதி யோகமும் செயல்படுகிறது. தொழில்வாழ்க்கையில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும். 12-ல் செவ்வாய் ஆட்சி. சுபவிரயங்களும் திடீர்ப்பயணங்களால் செலவுகளும் உண்டாகும். சகோதர- சகோதரிகள்வகையில் நன்மை ஏற்படும்; உறவுகள் பலப்படும்; தேவைகள் நிறைவேறும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ராசிக்கு 8-ல் இருக்கிறார். பொதுவாக 8-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும், புதனுக்கு அஸ்தமன தோஷமோ மறைவு தோஷமோ பாதிக

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 2, 3, 4.

செவ்வாய்: பரணி- 1, 2.

புதன்: திருவோணம்- 3, 4.

குரு: திருவோணம்- 1.

சுக்கிரன்: பூராடம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 2.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

20-1-2021- புதன் வக்ர ஆரம்பம்.

22-1-2021- குரு அஸ்தமனம்.

சனி அஸ்தமனம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

18-1-2021- மீனம்.

20-1-2021- மேஷம்.

22-1-2021- ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். 2-ல் இருக்கும் ராகு குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு குழப்பத்தையும் மனச்சங்கடங்களையும் தந்தாலும், குரு 2-ஆமிடமான குடும்பஸ்தானத்தைப் பார்ப்பதால் அந்த குழப்பங்களுக்கும் மனச்சங்கடங்களுக்கும் தீர்வும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் வைத்தியச்செலவுகள் வந்துவிலகும். என்றாலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் 10-ல் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். மகரத்தில் குரு நீசம் என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். எனவே, தொழில்வாழ்க்கை இவற்றில் குறையேதுமில்லை. எல்லாம் நிறைவாக நிறைவேறும். 2-ஆமிடத்து ராகு, வருவது அத்தனையை யும் செலவாக்கும். மிச்சம் மீதி இருக்காது. ஐந்நூறு வந்தாலும் செலவு. ஆயிரம் வந்தாலும் செலவு. பத்தாயிரம் வந்தாலும் அதற்கு ஒரு செலவு காத்திருக்கும் ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், நினைக்கும் காரியங்கள் திருப்திகரமாக நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் நாணயம் காப்பாற்றப்படும். 2-க்குடைய சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெற, அவருக்கு வீடுகொடுத்த குரு 10-ல் நீசபங்க ராஜயோகம் பெற்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டவுடன் எப்படியோ பணம்புரளும். திருப்பிக்கொடுத்து நாணயத்தைக் காப்பற்றிவிடலாம்.

thisweekrasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகமாக ராசியைப் பார்க்கிறார். தாராளமான பொருளதாரமும் வரவு- செலவுகளும் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பணம் வந்துசேரும். கொடுக்கவேண்டிய பணம் கொடுக்கப்பட்டு வாக்குநாணயம் காப்பாற்றப் படும். ஜென்ம ராகு சோர்வையும் அசதிகளையும் காரியத்தடைகளையும் ஏற்படுத்தினாலும், குரு ராசியைப் பார்ப்பதால் சமாளித்து செயல்படலாம். 9-ல் குரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்து வாழ்வை வளப்படுத்துவார். 7-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, மனச்சங்கடங்களை உண்டாக்கலாம். தொழில்துறையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் தொழில் இயக்கம் தடைப்படாது. போட்டிகளை வெல்லலாம். 3-ஆமிடத்ûப் பார்க்கும் குரு அதற்குண்டான தைரியத்தையும் தருவார். ஒரு மனிதனுக்கு தைரியம் இருந்தால்தானே எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுகிறார். தர்மகர்மாதிபதி யோகமும் செயல்படுகிறது. தொழில்வாழ்க்கையில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும். 12-ல் செவ்வாய் ஆட்சி. சுபவிரயங்களும் திடீர்ப்பயணங்களால் செலவுகளும் உண்டாகும். சகோதர- சகோதரிகள்வகையில் நன்மை ஏற்படும்; உறவுகள் பலப்படும்; தேவைகள் நிறைவேறும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ராசிக்கு 8-ல் இருக்கிறார். பொதுவாக 8-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும், புதனுக்கு அஸ்தமன தோஷமோ மறைவு தோஷமோ பாதிக்காது என்பது நீங்கள் அறிந்ததுதான். புதனுக்கு வீடுகொடுத்த சனி 8-ல் அவரது சொந்த வீட்டில் ஆட்சி. 8-ஆமிடம் என்பது விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், கௌரவப் போராட்டம், விரக்தி ஆகியவற்றைக் குறிக்கும். என்றாலும் சனி அங்கு ஆட்சி என்பதால் 8-ஆமிடப் பலன்களைப் பற்றிய பயமோ கவலையோ கொள்ளத்தேவையில்லை. தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். களஸ்திரகாரகன் சுக்கிரன் 7-ல் இருக்கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த குரு 8-ல் மறைவு. கணவன்- மனைவிக்குள் சச்சரவு, வாக்குவாதம் உண்டாகும். 8-ல் உள்ள குரு 2-ஆமிடம் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பிரிவு பிளவிற்கு இடமிருக்காது. பொருளாதாரத்தில் வரவு வந்துகொண்டிருக்கும் என்றாலும் செலவும் அதற்கு நிகராக நடந்துகொண்டிருக்கும். அதைத் தடுப்பது கடினமான விஷயமாக அமையும். வெளியூர்ப் பயணம், திடீர் இடமாற்றம், குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். வேலைதேடி வெளிநாட்டு முயற்சியில் இறங்குவோருக்கு முயற்சிகள் கைகூடும். 4-ஆமிடத்தை குரு பார்ப்பதால் கல்வி மேன்மை உண்டாகும். மேற்படிப்பு சம்பந்தமான செயல்திட்டங்கள் கைகூடும். சிலர் குடும்பத்தைவிட்டு வெளியில் தங்கிப் படிக்கலாம். ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ, சந்திரபுக்தியோ நடப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 7-ல் குருவும் சனியும் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார்கள். 7-ஆமிடம் குருவுக்கு நீசவீடு என்றாலும் நீசபங்கம் பெற்று, குருவுக்கு உச்சவீடான உங்கள் ராசியையே குரு பார்ப்பதால் உங்கள் செயல்பாடுகள், திட்டங்கள், முயற்சிகள் நிறைவேறும். 10-ல் செவ்வாய் ஆட்சி. பூமி, வீடு, கட்டடம், அக்னி சம்பந்தப்பட்ட தொழில் துறையில் இருப்போருக்கு முன்னேற்ற கரமான சூழல்கள் அமையும். 5-ல் கேது உங்கள் திட்டங்களுக்கும் எண்ணங்களுக்கும் தடை, தாமதத்தைத் தந்தாலும், 5, 10-க்குடைய செவ்வாய் 5-ஆமிடத்தையே பார்ப்பதால் தடை, தாமதங்களை உடைத்து காரியசித்தி பெறலாம். 11-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு. ஆடை, அலங்காரம், ஆபரணம் போன்ற துறையில் இருப்போருக்கு சற்று மந்தமான நிலைகள் காணப்படலாம். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த நீசபங்கம் பெற்ற குரு ராசியைப் பார்க்கிறார். எனவே நஷ்டத்திற்கு இடமில்லை. வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதாரத் தேக்கம் விலகும். 12-க்குடைய புதன் வக்ரமாக இருப்பதால் (20-ஆம் தேதிமுதல்) செலவுகளையும் கட்டுப்படுத்துவது கடினம்தான். தேவைகள் அதிகரிக்க செலவுகளும் கூடுமல்லவா! இளைய சகோதரவகையில் நன்மைகளை எதிர்பார்க்க லாம். உடன்பிறப்புகளுக்குள் நிலவிய மனவருத்தம், பகையெல்லாம் மாறும். நீரடித்து நீர் விலகாது என்ற கருத்தை மனதில்கொண்டு யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால் உறவுமுறையில் வருத்தங்களைத் தவிர்க்கலாம். நண்பர்களால் சகாயம் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைவு. அவருடன் 5-க்குடைய குருவும் மறைவு. 2, 11-க்குடைய புதனும் மறைவு. இவையெல்லாம் ஒருவகையில் மைனஸ் என்றாலும், 6-க்குடைய சனி 6-ல் ஆட்சி என்பது ஒருவகையில் ஆறுதலையும் தேறுதலையும் தரும். சனிக்கு 3, 6, 11-ஆமிடங்கள் யோகமான இடங்கள். அந்த வகையில் மற்ற கிரகங்களின் மறைவை சனி ஈடுசெய்து நன்மை தருவார் என்று எதிர்பார்க்கலாம். 6-ல் குரு நீசபங்கம் பெற்று 2, 10, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில் இயக்கம் பாதிக்காது. வருமானம் பெருகும். அதேசமயம் செலவும் பெருகும். தொழில்யோகம், வேலையோகம், உத்தியோக வாய்ப்பு அமையும். 9-ல் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்க, விவகாரங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். வழக்குகளில் சுமூகமான தீர்ப்புகள் கிடைக்கும். சூரியன் தனது சுயசாரத்தில் (உத்திராடம்) சஞ்சாரம் என்பதால் முயற்சிகள் தொய்வடையாது. புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். கூட்டுத்தொழில் புரியும் யோகமும் அமையும். அதற்குண்டான கடன் கிடைக்கும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து சுயதொழில் முயற்சிப் பலன்களை அறிந்த நடந்துகொள்வதும் அவசியம். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சியும் கைகூடும். அவர்கள்வகையில் நன்மைகளும், அவர்களால் நற்பெயரும் கிடைக்கும். உற்றார்- உறவினரிடையே கௌரவப் போராட்டங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் சூரியன், குரு சேர்க்கை. இவர்கள் மூவருக்கும் வீடுகொடுத்த சனி ஆட்சி. ராசிக்கு குருபார்வை கிடைக்கிறது. மகிழ்ச்சி, திட்டங்கள் செயலாகுதல், எண்ணங்கள் நிறைவேறுதல், மந்திர உபதேசம் கிடைக்கப் பெறுதல், பூர்வபுண்ணியம், பாட்டனார், தாய்மாமன் போன்றவகையில் நற்பலன்களை அனுபவிக்கலாம். "யோகக்காரனுக்கு ஆண்டவன் காவல்காரன்' என்பதுபோல் ஆண்டவன் உங்களுக்குக் காவலாய் இருந்து உங்கள் காரியங்களைப் பூர்த்தி செய்வார். பிள்ளைகள்வகையில் சுபகாரியம் அரங்கேறும். அவர்களைப் பற்றிய கவலைமாறும். தொழில் துறையில் உண்மையான- விசுவாசமான வேலையாட்கள் அமைதல், புதிய முயற்சிகள் கைகூடுதல் போன்றவற்றை சந்திக்கலாம். உங்களது நீண்டகாலக் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 20-ஆம் தேதிமுதல் புதன் வக்ரமடைவதால், வக்ரத்தில் உக்ரபலன் உண்டாகும். 9-ல் உள்ள ராகு தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துகள்வகையில் நற்பலன்களைத் தருவார். அந்த இடத்தை 5-ல் உள்ள குரு பார்ப்பதால் கவலைவேண்டாம். தொழில்துறை அல்லது வியாபாரத்தில் இருப்ப வர்களுக்கு இடையூறு விலகும். சத்ருஜெயம் உண்டாகும். காரிய லாபம் ஏற்படும். உப தொழில் சம்பந்தமான முயற்சிகள் செயல் வடிவம் பெறும். உத்தியோகம், வேலை இவற்றில் தைரியமான முடிவுகள் எடுக்கலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த குரு 4-ல் நீசபங்கம். 3-ஆமிடம் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு ஆட்சிபெற்ற சனியுடன் இருப்பதால் தோஷம் பாதிக்காது. தாயின் தேகசுகத்தில் வைத்தியச்செலவுகள் வந்துவிலகும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தொழில் வகைக்காக கடன் வாங்கும் தேவையை ஏற்படுத்துவார். அப்படி கடன் வாங்கினதை நாணயமாகத் திரும்ப அடைத்து விடமுடியுமா என்ற கவலை உண்டாகும். என்றாலும் குரு 10-ஆமிடத்தைப் பார்க்கும் காரணத்தால் தொழில் இயக்கம் தடைப்படாமல் செயல்பட்டு கடனை அடைக்கமுடியும். பூமி, வீடு, வாகனம் போன்றவகையில் நற்பலன்கள் உண்டாகும். வாகனத்தில் அவ்வப்போது சிறுசிறு பழுது செலவுகள் ஏற்படலாம். 2-ல் உள்ள கேது பொருளாதாரத்தில் பய உணர்வை ஏற்படுத்தினாலும், 2, 7-க்குடைய செவ்வாய் 7-ல் ஆட்சிபெற்று ஜென்ம ராசியையும் பார்க்கிறார். 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். எனவே வரவும் உண்டு; செலவும் உண்டு. வரவுக்கு மீறிய செலவு ஏற்பட்டால்தானே பயப்படவேண்டும்! செலவு செய்வதற்கு ஏற்ப வருமானம் உண்டாகும். 8-ல் உள்ள ராகு திடீர் ராஜயோகத்தை ஏற்படுத்தலாம். 12, 9-க்குடைய புதன் சனியுடன் இணைவதால் சொத்துப் பிரச்சினைகள் சிலருக்கு தலைவலியாக அமையும். அது சம்பந்தமாக சிலருக்கு விரயங்களும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் லாபகரமும் சாதகமுமாக அமையும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிமாநில வகையில் உத்தியோக வாய்ப்புகள் உண்டாகும்; தைரியமாக செயல்படுத்தலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டது என்றாலும், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக எல்லாக் காரியங்களிலும் இழுபறி நிலை, பொருளா தாரத்தில் சிக்கல், வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகாமால் தாமதநிலையைச் சந்தித்தல் போன்ற பலன்கள் ஏற்படலாம். எனினும் 3-ல் சனி ஆட்சி பெறுவதாலும், 2-க்குடைய குரு 3-ல் நீசபங்கம் பெறுவதாலும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் அவற்றை எதிர்த்து சமாளிக்கலாம். 8-க்குடைய செவ்வாய் 8-ல் ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். விடாமுயற்சியுடன் செயல்பட்டு சாதுர்யமாகவும் செயல்பட்டு வெற்றி காணலாம். சகோதர- சகோதரிவகையில் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நீங்கள் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்துச் செல்ல முற்படுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் தலையீட்டால் உடன்பிறப்புகளோடு உடன்பாடு ஏற்படும்படியான முயற்சியும் அமையும். 7-ல் ராகு திருமணத்தடை ஏற்படுத்தும் என்றாலும், குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் தோஷம் விலகும். திருமணயோகம் கைகூடும். திருமணமான கணவன்- மனைவிக் குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். சிலருக்கு (கணவன்மார்களுக்கு) மனைவிவகையில் அனுகூலமும் ஆதாயமும் ஏற்படும். அவ்வப்போது தேகநலனில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். 9-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தகப்பனார்வகையில் நன் மதிப்பும் பாராட்டும் ஏற்படும். சொத்துகளை மாற்றியமைத்து புதுமையாக செயல்படுத்தும் அமைப்பும் உருவாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. ஜென்ம ராசியில் சுக்கிரன் தனது சுயசாரத்தில் சஞ்சாரம். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த குரு 2-ல் நீசபங்கம். ஆக, கழுவின மீனில் நழுவின மீனைப்போல- சிக்கல் சிரமங்கள் உங்களைச் சூழ்ந்தாலும், உங்கள் சாமர்த்தியத்தாலும் சாதுர்யத்தாலும் நழுவி விடுவீர்கள். இந்த ஏழரைச்சனியில் சந்திர தசை அல்லது சந்திரபுக்தி நடப்பவர்கள் மட்டும் மிகுந்த கவனமுடன் செயல்படுவது அவசியம். இதில் பொருட்செலவு அல்லது இழப்பு அல்லது உயிருக்குச் சமமான இழப்பு போன்றவற்றை சந்திர தசை அல்லது புக்தி நடப்பவர்கள் சந்திக்கும் சூழல் உண்டாகும். அப்படிப்பட்ட வர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு திங்கட்கிழமை சிவன்கோவிலில் ருத்ர ஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்றமாதிரி தப்பிக்கலாம். ஜென்ம ராசிநாதன் குரு 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில் சம்பந்தமாகவோ அல்லது பழைய தொழில் விரிவாக்கம் செய்யவோ கடன் ஏற்படலாம். 2-ல் சனி இருப்பதால் உங்கள் பேச்சில் நிதானமும் பொறுமையும் கடைப்பிடிப்பது நல்லது. ஏனெனில் வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பது பழமொழி. உங்கள் பேச்சால் உறவு களை இழக்காதீர்கள். உடன்பிறந்த வகையில் அனுசரித்துச் சென்றால்தான் சகோதரத்துவம் செயல்படும். வீண் வீம்பு, வறட்டுப் பிடிவாதம் போன்றவற்றை விட்டொழித்து நல்லுறவுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்பாராத யோகமும் அதிர்ஷ்டமும் உருவாகலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி யாக இருக்கிறார். ஏழரைச்சனியில் ஒரு பகுதி யான விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது. தேவையற்ற விரயம், வீண்செலவு, அர்த்தமற்ற ஆதாயம் தேடுதல் போன்றவற்றை சந்தித்து நொந்தவர்களுக்கு இந்த ஜென்மச்சனி மாற்றியமைக்கும். சனி மகர ராசிநாதன் என்பதால், கெடுதல்களை மாற்றியமைத்து நற்பலனைத் தருவார். 12-ல் சுக்கிரன் இருப்பது ஒருவகையில் விரயம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு ஜென்மத்தில் நீசபங்கம் பெறுவதால் விரயத்தை சுபவிரயமாக மாற்றுவார். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார். உங்களது ஆற்றலும், சாமர்த்தியமும், அறிவாற்றலும் வெளியுலகத் திற்குத் தெரியவரும். உங்களது வீண் தயக்கம் மாறும். 3-ஆமிடத்தை சனி பார்ப்பதால் அதற்குண்டான தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே உருவாகும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- நீங்கள் தீட்டிய திட்டத்தை செயல் படுத்துவார். நீண்டநாள் கனவுகளும் ஆசை களும் நிறைவேறும். ஆன்மிகம், குரு உபதேசம், மந்திரஜெபம் பலனளிக்கும். தியானம், யோகா போன்ற ஆன்மிக ஈடுபாடும், பயிற்சியில் நாட்டமும் ஏற்படும். 7-ஆமிடத்தை குருவும் பார்க்கிறார்; சனியும் பார்க்கிறார். கணவன் அல்லது மனைவிக்குள் வாக்குவாதம் தோன்றி மறையும். ஒற்றுமை பலப்படும். பிரிவினை ஏற்படாது. ஜாதக தசாபுக்தி காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் இனி சேர்ந்துவாழ முற்படுவர். கடந்த சனிப்பெயர்ச்சியும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு கடந்த டிசம்பர் 2020 முதல் ஏழரைச்சனி ஆரம்பம். இதில் முதல் சுற்று மங்குசனி. இரண்டாம் சுற்று பொங்கு சனி. மூன்றாம் சுற்று மரணச்சனி என்பதாகும். கும்ப ராசிக்கு ராசிநாதன் சனி விரயஸ்தானத்தில் இருப்பது விரயத்தை உண்டாகும். அதை சிலர் சுபவிரயமாகவோ அல்லது சுபமுதலீடாகவோ மாற்றலாம். அதற்கு ஜெனனகால தசாபுக்திகளை யும் தெரிந்துகொண்டு செயல்படவேண்டும். 11-க்குடைய குருவும் 12-ல் இருக்கிறார். 11-க்கு டைய குருவும் 12-ல் இருக்கிறார். 7-க்குடைய சூரியனும் 12-ல் மறைவு. தகப்பனார்வகையில் சங்கடங்களும் மனவருத்தமான நிகழ்வுகளும் ஏற்படலாம். அல்லது தகப்பனாருக்கு உத்தி யோக இடமாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகலாம். கணவன்- மனைவி ஒற்றுமை யாக இருந்தாலும் அவ்வப்போது கருத்து மோதல்கள் வந்துவிலகும். பிள்ளைகளைப் பற்றிய கவலை மாறும். அவர்களால் நற்பெயர் உண்டாகும். 4-ல் உள்ள ராகு தன்சுகம் அல்லது தாயார் சுகத்தில் பாதிப்பு, மருத்துவச் செலவு களை ஏற்படுத்துவார். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம். இன்னும் சிலர் சொந்தவீடு கட்டும் முயற்சியில் இறங்க லாம். அதற்கான வங்கிக்கடனும் கிடைக்கும். அல்லது தனியாக கடனும் கிடைக்கும். 3-ல் செவ்வாய் ஆட்சி. சகோதரவகையில் நற்காரியம் நடைபெறும். சுபமங்கள நிகழ்வு களும் உண்டாகும். அவர்களால் சகாயமும் ஆதரவும் ஏற்படும். அன்னிய இனத்து நண்பர் களால் ஆதாயம் உண்டாகும். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடிவந்து சுமையைத் தலையில் வைக்கும். அதை ஏற்று செயல் படுவதும் விடுவதும் உங்கள் மனநிலையைப் பொருத்தது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீசபங்கம். 10-ல் சுக்கிரன். 11-ல் சனி ஆட்சி. 2-ல் செவ்வாய் ஆட்சி. எனவே உங்கள் காட்டில் மழைதான். மீன ராசிக்காரர்கள் "நானே ராஜா நானே மந்திரி' என்று முழங்கி செயல்படலாம். தொழில்துறையில் புதிய அணுகுமுறைகள் நல்ல பலன்களைத் தரும். ஆடை, ஆபரணம், அலங்காரம், கலை போன்ற துறையினருக்கு யோகமான சூழ்நிலைகள் அமையும். சனிக்கு 3, 6, 11-ஆமிடங்கள் மிக யோகமான இடங்கள். எனவே, 11-ஆமிடத்துச் சனி உங்களுக்கு அற்புத யோகங்களை அள்ளி வழங்குவார். தொழில் யோகம், உத்தியோக யோகம், வெளிநாட்டு வேலை யோகம் அமையும். தாராள வரவு- செலவுகள் இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். கட்டடம், ரியல்எஸ்டேட் போன்ற துறையில் ஈடுபடுபவர்கள் கூட்டுசேர்ந்தும் தொழில் செய்யலாம். அல்லது அதில் அனுபவமிக்கவர்களை உடன் இணைத்துக்கொள்ளலாம். உங்கள் எண்ணங்களும் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும். 9-ஆமிடத்தை செவ்வாய் பார்க்கிறார். பூமி சம்பந்தமான சொத்துப் பிரச்சினைகள் சாதகமான நல்ல முடிவுக்கு வரும். இழுபறிநிலை விலகும். தெய்வ கைங்கரியங்களில் 9-ஆமிடத்துக் கேது ஈடுபடவைக்கும். இளைய சகோதரர்களால் சங்கடமும் பிரச்சினையும் ஏற்படலாம். அவர்களோடு சிலர் தாமரை இலை தண்ணீர்போல- உறவுகளைச் செயல்படுத்துவ ர். மனைவிவழி அனுகூலம் ஏற்படும். நேர்மையான மனிதர்களையும் உண்மையான நடப்புகளையும் மதித்து அரவணைத்துக்கொள்ளுங்கள்.

bala210121
இதையும் படியுங்கள்
Subscribe