முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.

தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 2.

செவ்வாய்: கேட்டை- 4.

Advertisment

புதன்: திருவோணம்- 2.

குரு: சதயம்- 1.

சுக்கிரன்: பூராடம்- 3 (வ).

சனி: திருவோணம்- 3.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

தை 3 (16-1-2022) தனுசு செவ்வாய்- மாலை 4.31 மணிக்கு.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

17-1-2022 இரவு 10.02 மணிக்கு கடகம்.

20-1-2022 காலை 8.24 மணிக்கு சிம்மம்.

22-1-2022 மாலை 4.48 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதி சூரியன் 10-ல் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். குரு 11-ல் அமைந்து 3, 5, 7 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு வரும் நாட்களில் உண்டு. இதுவரை 8-ல் சஞ்சரித்து சில இன்னல்களை ஏற்படுத்திய செவ்வாய் 16-ஆம் தேதிமுதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்ப தால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகால மருத்துவச் செலவுகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். 2, 7-க்கு அதிபதி யான சுக்கிரன் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் ராகு சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், குறிப்பாக- பெண்களால் வீண் செலவு கள் ஏற்படும். குடும்பத் தில் விட்டுக்கொடுத் துச் செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் அரசுவழியில் நீங்கள் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலுக்குக் கிடைப்பார் கள். நல்ல லாபம் கிடைத்து வாங்கிய கடன் களைத் தீர்க்கமுடியும். பூர்வீக சொத்து வழியில் பொருளாதார அனுகூலமும், உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும் சூழ்நிலையும் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு திறமைகளை வெளிகாட்டுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல இடத்தி-ருந்து சுபச்செய்தி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, புதன்கிழமை மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் வக்ரகதியில் 8-ல் சஞ்சரிப்பதும், 16-ஆம் தேதிமுதல் செவ்வாய் 8-ல் சஞ்சரிக்கவிருப்பதும் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் சில நேரங்களில் தன்னிலை மறந்து செயல்படுவீர்கள். கோபத்தைக் குறைத் துக்கொள்வதும் உடனிருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங்களில் பயணிக்கும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். கையிருப் பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. முடிந்தவரை ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்ளவும். பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூரியன் இணைந்து சஞ்சரிப்பதால், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து அதன்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தா லும் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்களு டைய முயற்சிகளுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போதுள்ள வாய்ப்புகளை கவனமாகக் கையாள்வது நல்லது. தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் வெளிப்படையாகப் பேசாம-ருப்பது உத்தமம். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. சற்று பொறுமையாக செயல்பட்டால் ஓரிரு மாதங்களில் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு சற்று அதிகபடியாக இருக்கும். தைப்பூச நாளில் விரதமிருந்து முருகனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால், நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தக்க நேரத்தில் காப்பாற்று வீர்கள். இவ்வாரத்தில் செவ்வாய் 7-ல், சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பதும் நல்லது. 1, 4-க்கு அதிபதி புதன் வக்ரகதியில் 8-ல் சஞ்சரிப்பதால் அசையா சொத்துவகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளி நாடு மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில்ரீதியாக உங்கள் உழைப் பிற்கான பலனை அடையமுடியும். வேலையாட் கள் சரிவர உதவமாட்டார்கள் என்பதால், வேலைப்பளு அதிகரித்து உடல் அசதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. திங்கட்கிழமை சிவனுக்கு நெய்தீபமேற்றி வழிபடுவதும், சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவதும் நன்மையைத் தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதி செவ்வாய் 16-ஆம் தேதிமுதல் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். புதன் 7-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர் பாராத வரவுகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், சனி 7-ல் இணைந்திருப் பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் துடன் செயல்பட்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பதால் கடினமான பணியைக் கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். பூர்வீக சொத்துவகையில் இருந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி கள் நடக்கும். இந்த நாட்களில் செய்யும் செயல்களுக்கு அனுகூல மான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்பு களை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேலையாட் கள் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியும். அரசுவழி அதிகாரி யிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதன்கிழமை விநாயகரையும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கடந்த காலப் பிரச்சினைகள் எல்லாம் விலகி சமுதாயத் தில் உயர்வான நிலையை அடைவீர்கள். குரு பகவான் 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசி யைப் பார்ப்பதால் எதிலும் தெம்புடன் செயல் படமுடியும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். கடந்தகால கடன்களைத் தீர்த்து சேமிக்கும் அளவுக்கு பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் நற்பலனை அடையும் யோகமுண்டு. 4-ல் சஞ்சரித்த செவ்வாய் 16-ஆம் தேதி முதல் 5-ல் சஞ்சரிக்கவுள்ளதால் தேவை யற்ற அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியடைய முடியும். உறவினர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இவ்வாரத்தில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைத்து லாபங்கள் அதிகரிக்கும். வங்கிமூலமாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைத்து தொழிலை அபி விருத்தி செய்யமுடியும். வேலைக் குச் செல்பவர்களுக்கு கௌரவ மான பதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனத்தி-ருந்து அழைப்பு வரும். புதன்கிழமையன்று மகாவிஷ்ணுவை துளசி இலைகளாலும், லட்சுமிதேவியை தாமரை மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

thisweekrasi

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரித்தாலும், வக்ரம் பெற்றிருப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். செவ்வாய் 4-ல், குரு 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதாரரீதியாக நெருக்கடி கள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதி சுக்கிரன் 4-ல் வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் 10, 11-ல் அனுகூலமாக சஞ்சரிப்பதால், எதிர் பாராத பணவரவுகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் அன்றாட செயல்களில் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்கள், அதன்மூலம் கையிருப்பு குறையும் சூழ்நிலை இவ்வாரத்தில் உண்டு. தைப்பூச நாளில் விரதமிருந்து முருக வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

குரு உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசி, 9, 11 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் எல்லா வகையிலும் சிறப்பான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்தி கரமாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த லாபங்கள் கிடைத்து அசையா சொத்துகளில் முதலீடு செய்யமுடியும். கடந்தகால கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மனநிம்மதி அடையலாம். இதுவரை 2-ல் சஞ்சரித்த செவ்வாய் 16-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் குடும்பத் தில் கணவன்- மனைவியிடையே இருந்த பிரச் சினைகள் முழுமையாக மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சனி, சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாம-ருப்பது நல்லது. சில நேரங்களில் வேலைப் பளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கடந்த சில நாட்களாக இருந்த மனக் குழப்பங்கள் குறையும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களின் அனைத்து முயற்சி களும் வெற்றிகளைத் தரும். தொழில்ரீதியாக படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். கடந்தகால பொருட் தேக்கங்கள் விலகி லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் நல்லபெயர் எடுக்கமுடியும். சிலருக்கு வெளியூர் மூலமாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது வேகத்தைக் குறைத்து பொறுமையுடன் இருப்பது நல்லது. சிவபெருமானையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றிபெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றும் அளவுக்கு உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சர்ப்ப கிரகங்கள் 1, 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வதும், உற்றார்- உறவினர்களிடம் வீண் பேச்சைக் குறைப்பதும் நல்லது. குரு பார்வை 8, 10 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகமுண்டு. அசையும்- அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆன்மிகத் தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். புதிய நபர்களிடம் தொழில் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர் கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர் கள். இடமாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டி ருந்தவர்களுக்கு விரும்பிய மாற்றங்கள் கிடைக்கும். தைப்பூச நாளில் முருக வழி பாட்டையும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டையும் செய்துவந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்ப தால் பணவரவில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது, கையிருப்பைக்கொண்டு அன்றாட செலவு களைப் பார்த்துக்கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்ப தால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவதும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் காலமென்பதால் பேச்சில் பொறுமை யுடன் இருப்பதும், வெளிநபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேசாமல் இருப்பதும் நல்லது. சுக்கிரனும் புதனும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள்கூட தடைப்படும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், இருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது. அரசுவழி அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி காரண மாக வியாபாரத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பணியில் மட்டும் மிகுந்த கவனத் துடன் செயல்படுவது நல்லது. அலைச்சல் காரணமாக உங்களுக்கு உடல் அசதி ஏற்படும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகு 6-ல் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஆறுதல் அடையமுடியும். சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி, எள் தீபமேற்றி வழிபாடு செய்தால் மனக் கவலைகள் குறையும். உடல் ஊனமுற்றவர் களுக்கு முடிந்த உதவியைச் செய்வது மிக நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

குரு 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். கடந்தகாலக் கடன் பிரச்சினைகள் விலகி சேமிக்குமளவுக்கு பணவரவுகள் இருக்கும். ஜென்ம ராசியில் சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்ப தால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தபட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபங்களைப் பெறமுடியும் என்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்ளவும். வயது மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பங்காளிவழியில் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும் காலமென்பதால் வாக்குவாதங் களைத் தவிர்க்கவும். தற்போது செவ்வாய், சுக்கிரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொருளா தாரத் தேவைகள் அனைத்தும் எளிதில் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் சிறப் பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புண்டு. ஏழரைச்சனி நடப்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் சென்றால் தான் தொழிலை சரிவர நடத்தமுடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். தைப்பூச நாளில் முருக வழிபாட்டை மேற்கொள்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், பொருளாதாரநிலை ஏற்றத் தாழ்வாக இருக்கும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ராசிக்கு 5, 7, 9 ஆகிய ஸ்தானங் களுக்கு குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் நெருக்கடிகள் சற்று குறையும். 16-ஆம் தேதிமுதல் செவ்வாய் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் கௌரவப் பதவிகளை அடைவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நன்மைகளைப் பெறமுடியும். சூரியன், சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மிகவும் சாதகமான பலன்களைப் பெறும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், உழைப்பிற்கான ஊதியத்தைத் தற்போதைக்கு அடையமுடியாது. வேலை தேடுபவர்கள் தற்போதைக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதமிருந்து விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி, விநாயகர் சுலோகங்களைச் சொல்- வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துவகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்தகால நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றங் கள் ஏற்படும். ராசிக்கு 6, 8 ஆகிய ஸ்தானங் களுக்கு குரு பார்வை இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். 16-ஆம் தேதிமுதல் செவ்வாய் 10-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பண விஷயத்தில் அனுகூலமான பலன்களை அடையும் யோகமிருந்தாலும், குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழி-ல் நல்ல லாபங்களைப் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். அரசுவழியி-ருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற முடியும். உத்தியோகத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்மூலமாக எதிர்பார்த்த நல்ல செய்திவரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அறுகம்புல் மாலையும் சாற்றி வழிபட்டால் சுபச்செய்திகள் இல்லம் தேடிவரும்.