ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 3, 4, உத்திரட்டாதி- 1.
செவ்வாய்: ரோகிணி- 1, 2.
புதன்: சதயம்- 2, 3, 4, பூரட்டாதி- 1.
குரு: அவிட்டம்- 1, 2.
சுக்கிரன்: பூரட்டாதி- 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 3.
கேது: கேட்டை- 1.v
கிரக மாற்றம்:
18-3-2021- மீன சுக்கிரன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
16-3-2021- மேஷம்.
18-3-2021- ரிஷபம்.
20-3-2021- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவோடு சம்பந்தம். 10-ல் இருக்கும் குருவும் பார்க்கிறார். குருவுக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும் தர்மகர்மாதிபதி யோகமும் உண்டாகிறது. எனவே, உங்களுடைய முயற்சி களிலும் செயல்களிலும் தோல்விக்கும் தொய்வுக்கும் இடமில்லை. தொட்டதெல்லாம் துலங்கும். கைவிட்டுப் போன தெல்லாம் மீண்டும் கிடைக்கும். என்றாலும் 2-ஆமிடத்து ராகுவால், இறைக்க இறைக்க கிணற்றில் நீர் ஊறுவதுபோல செலவழிக்க செலவழிக்கத்தான் கைக்குப் பணம் வந்துசேரும். இருந்தாலும் தேவைகள் பூர்த்தியடையும். 3, 6-க்குடைய புதனும் 2, 7-க்குடைய சுக்கிரனும் ராசிக்கு 11-ல் பாதக ஸ்தானத்தில் இருப்பதால், வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோல யாருக்கு உதவி செய்கிறீர்களோ அவர்களே உங்களுக்குப் போட்டியாகவும் எதிரியாகவும் மாறுவார்கள்; தொல்லை கொடுப்பார்கள். எனினும் ராசிநாதன் பலத்தால் எதிரிகள் உதிரிகளாகி விடுவார்கள். மாடி வீட்டில் இருப்பவனைப் பார்த்து தரையில் இருப்பவன் கல்லைவிட்டு ஏறிவதுபோல எதிரிகள் முயற்சி தளர்ச்சியாகி விடும். நண்பர்களிடமும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வாக்குவாதம், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. குறிப்பாக யாரையுப் பற்றியும் வேறு யாரிடமும் குறைசொல்ல வேண்டாம். ஒன்றுக்குப் பத்தாக கதைதிரித்து சிண்டு முடிப்பவர்கள் உண்டு. சிறியோர் செய்த பெரும் பிழைகளைப் பெரியோர் பொருத்தருளுவது மேன்மை என்று பெருந்தன்மையாக நடந்துகொள்வது நல்லது. பொருளாதாரம், தேக ஆரோக்கியம் திருப்தியாக அமையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். குருவின் சாரம் பெறுகிறார். (பூரட்டாதி). பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அது தவறு. குரு எனப்படுபவர் தேவர்களின் குரு. பிருகு எனும் சுக்கிரன் அசுரர்களின் குரு. ஒருவர் வாதியின் வக்கீல் என்றால் மற்றவர் பிரதிவாதியின் வக்கீல். தங்களின் கட்சிக்காரருக்காக வக்காளத்து வாங்கி கோர்ட்டில் வாதாடும் வக்கீல்கள் அவர்களுக்குள் பகை, வருத்தம் சொல்லமாட்டார்கள். தங்கள் கட்சிக்காரர் வெற்றியடைய காரசாரமாக வாதாடுவார்கள். அது மாதிரிதான் தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் தமக்குள் போட்டி, பொறாமை அடைய மாட்டார்கள். தங்கள் கட்சியினருக்காக வாதாடுவார்கள். அப்படி சுக்கிரனுக்கும் குருவுக்கும் பகைத்தன்மை என்றால் குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சமடையமாட்டார் அல்லவா! புராணத்தில் குருவின் மகனான கசன் சுக்கிரனின் மகளான தேவயாணியை விரும்பினான். ஜென்ம ராகுவும் சபதம கேதுவும் முறையற்ற விருப்பங் களை ஏற்படுத்தினாலும், குரு பார்வையால் அதை தரமாக மாற்றியமைப்பார். அதாவது கலப்புத் திருமணம், காதல் திருமணம், எதிர்ப்புத் திருமணம் என்றளவில் அவர்கள் வாழ்க்கை அமையும். ஆரம்பத்தில் எதிர்ப்பும் இடையூறும் இருந்தாலும் முடிவில் பெரியவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் காதல் வெற்றிடையும். வாழ்க்கை வளமாகும்.
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 3, 4, உத்திரட்டாதி- 1.
செவ்வாய்: ரோகிணி- 1, 2.
புதன்: சதயம்- 2, 3, 4, பூரட்டாதி- 1.
குரு: அவிட்டம்- 1, 2.
சுக்கிரன்: பூரட்டாதி- 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 3.
கேது: கேட்டை- 1.v
கிரக மாற்றம்:
18-3-2021- மீன சுக்கிரன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
16-3-2021- மேஷம்.
18-3-2021- ரிஷபம்.
20-3-2021- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவோடு சம்பந்தம். 10-ல் இருக்கும் குருவும் பார்க்கிறார். குருவுக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும் தர்மகர்மாதிபதி யோகமும் உண்டாகிறது. எனவே, உங்களுடைய முயற்சி களிலும் செயல்களிலும் தோல்விக்கும் தொய்வுக்கும் இடமில்லை. தொட்டதெல்லாம் துலங்கும். கைவிட்டுப் போன தெல்லாம் மீண்டும் கிடைக்கும். என்றாலும் 2-ஆமிடத்து ராகுவால், இறைக்க இறைக்க கிணற்றில் நீர் ஊறுவதுபோல செலவழிக்க செலவழிக்கத்தான் கைக்குப் பணம் வந்துசேரும். இருந்தாலும் தேவைகள் பூர்த்தியடையும். 3, 6-க்குடைய புதனும் 2, 7-க்குடைய சுக்கிரனும் ராசிக்கு 11-ல் பாதக ஸ்தானத்தில் இருப்பதால், வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோல யாருக்கு உதவி செய்கிறீர்களோ அவர்களே உங்களுக்குப் போட்டியாகவும் எதிரியாகவும் மாறுவார்கள்; தொல்லை கொடுப்பார்கள். எனினும் ராசிநாதன் பலத்தால் எதிரிகள் உதிரிகளாகி விடுவார்கள். மாடி வீட்டில் இருப்பவனைப் பார்த்து தரையில் இருப்பவன் கல்லைவிட்டு ஏறிவதுபோல எதிரிகள் முயற்சி தளர்ச்சியாகி விடும். நண்பர்களிடமும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வாக்குவாதம், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. குறிப்பாக யாரையுப் பற்றியும் வேறு யாரிடமும் குறைசொல்ல வேண்டாம். ஒன்றுக்குப் பத்தாக கதைதிரித்து சிண்டு முடிப்பவர்கள் உண்டு. சிறியோர் செய்த பெரும் பிழைகளைப் பெரியோர் பொருத்தருளுவது மேன்மை என்று பெருந்தன்மையாக நடந்துகொள்வது நல்லது. பொருளாதாரம், தேக ஆரோக்கியம் திருப்தியாக அமையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். குருவின் சாரம் பெறுகிறார். (பூரட்டாதி). பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அது தவறு. குரு எனப்படுபவர் தேவர்களின் குரு. பிருகு எனும் சுக்கிரன் அசுரர்களின் குரு. ஒருவர் வாதியின் வக்கீல் என்றால் மற்றவர் பிரதிவாதியின் வக்கீல். தங்களின் கட்சிக்காரருக்காக வக்காளத்து வாங்கி கோர்ட்டில் வாதாடும் வக்கீல்கள் அவர்களுக்குள் பகை, வருத்தம் சொல்லமாட்டார்கள். தங்கள் கட்சிக்காரர் வெற்றியடைய காரசாரமாக வாதாடுவார்கள். அது மாதிரிதான் தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் தமக்குள் போட்டி, பொறாமை அடைய மாட்டார்கள். தங்கள் கட்சியினருக்காக வாதாடுவார்கள். அப்படி சுக்கிரனுக்கும் குருவுக்கும் பகைத்தன்மை என்றால் குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சமடையமாட்டார் அல்லவா! புராணத்தில் குருவின் மகனான கசன் சுக்கிரனின் மகளான தேவயாணியை விரும்பினான். ஜென்ம ராகுவும் சபதம கேதுவும் முறையற்ற விருப்பங் களை ஏற்படுத்தினாலும், குரு பார்வையால் அதை தரமாக மாற்றியமைப்பார். அதாவது கலப்புத் திருமணம், காதல் திருமணம், எதிர்ப்புத் திருமணம் என்றளவில் அவர்கள் வாழ்க்கை அமையும். ஆரம்பத்தில் எதிர்ப்பும் இடையூறும் இருந்தாலும் முடிவில் பெரியவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் காதல் வெற்றிடையும். வாழ்க்கை வளமாகும். அதைத்தான் "இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தான் தேவன்' என்றார்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் கும்பத்தில் திரிகோணமாக இருக்கிறார். அவருடன் 5-க்குடைய சுக்கிரனும் சம்பந்தம். ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோணம் ஏறுவது சிறப்பு. அவரோடு சம்பந்தப்பட்ட ராசிநாதன் புதன் 4-க்குடைய கேந்திராதிபதி என்பதால், கேந்திராதிபதி திரிகோணம் ஏறுவதும் மிகச் சிறப்பு. 9-ல் நிற்கும் சுக்கிரன் 10-க்குடைய குருவின் சாரம் பெறுவது (பூரட்டாதி) தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, குரு. 8-ல் மறைந்தாலும் மறைவு தோஷம் பாதிக்காது. குருவும் சனியும் 8-ல் மறைவது ஒருவகையில் எதிர்பாராத ராஜயோகங்களை ஏற்படுத்தும். 8-ஆமிடம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம். அங்கு 9, 10-க்குடைய சனியும் குருவும் இணைவது ஒரு யோகமாகும். ஜனன ஜாதகத்தில் இப்படிப்பட்ட கிரக ஒற்றுமை இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டசாலியாக எல்லா நன்மைகளையும் அடைவார்கள். பத்தடிக்கு கீழிருக்கும் ஒரு புதையலை எட்டு அடிவரை தோண்டுகிறவன் விரக்தியடைந்து விட்டுப்போய்விடலாம். அடுத்து ஒருவன் அதை இரண்டு அடி தோண்டி அந்தப் புதையலை அடைந்துவிடுவான். அதுதான் அதிர்ஷ்டம் என்பது. எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டும். 3-க்குடைய சூரியன் 10-ல் இருப்பதால் தகப்பனார் வகையில், முன்னோர்கள் வகையில் நன்மைகளை அடையலாம்; பலன்களை அனுபவிக்கலாம். அரசு சம்பந்த காரியங்களில் நன்மைகள் ஏற்படலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 8-ல் இருக்கும் சுக்கிரன் வாரக் கடைசியில் 9-ல் மாறுகிறார். 4, 11-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவது ஒருவகையில் கெடுதல்தான். "எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் இரண்டு எம்.ஜி.ஆர் வேடம் போட்டு நடிப்பார். ஒரு எம்.ஜி.ஆர். வயிறார சாப்பிட்டுவிட்டு கை கழுவுகிறமாதிரி வெளியே போய்விடுவார். இன்னொரு எம்.ஜி.ஆர் காபி மட்டும் சாப்பிடுவார். முதல் எம்.ஜி.ஆர் சாப்பிட்ட பில்லையும் இரண்டாவது எம்.ஜி.ஆரிடம் வசூல் செய்து விடுவார்கள். அதுபோல நீங்கள் அனுபவிக்கா விட்டாலும் உங்களிடம் தண்டம் தீர்வை வசூல் பண்ணிவிடுவார்கள். என்றாலும் சுக்கிரன் பாக்கியாதிபதி (குருசாரம்) பெறுவதால் வேறு வகையில் அந்த நஷ்டம் ஈடுசெய்யப்படும். பல வருடங்களுக்குமுன்பு ஒரு அன்பர் என்னிடம் திருமணப் பொருத்தம் பார்க்கவந்தார். பதி னைந்து ஜாதகம் பார்த்துவிட்டு பதினைந்து ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டுப் போனார். அடுத்து ஒரு வெளிநாட்டு அன்பர் ஒரே ஒரு ஜாதகம் பார்த்துவிட்டு முன்னூறு ரூபாய் கொடுத்துவிட்டுப் போனார். ஆக, என் உழைப்பு வீணாகவில்லை. விசுவாசமாக உழைப்பவர் களின் கூலி எந்தவகையிலும் ஈடுசெய்யப்படும். இது எல்லா வகைக்கும் பொருந்தும். இதுதான் சுக்கிரன் பாக்கியாதிபதி சாரம் பெற்ற பலன். பொருளாதாரம், தேக ஆரோக்கியம் இரண்டும் தெளிவாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினைகளானாலும் மலைபோல வருவது பனிபோல விலகிப்போகும். சமாளிக்கும் ஆற்றலும் உருவாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். சூரியனுக்கு வீடுகொடுத்த குரு 6-ல் மறைந்தாலும் நீசபங்க ராஜயோகமாக பலன் தருகிறார். உறவினர் கள், பங்காளிகள், உடன்பிறப்புகள்வகையில் மனக்கசப்புகள் விலகி, ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு எல்லாக் காரியங்களையும் சாதிக்கலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடு, சாதி சமய சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்படலாம். எதிர்காலத்தில் உங்களுடைய பெயர் பிரகாசிக்குமளவு பெருமை ஏற்படலாம். பொதுவாக குருவும் சனியும் சேர்ந்தால் சண்டாள யோகம் என்பார்கள். ஆனால் இங்கு சண்டாள யோகம் மாறி நீசபங்க ராஜயோகமாக அமையும். எதிர்பாராத நன்மையான பலன்களைத் தரும். குரு 5-க்குடைய திரிகோணாதிபதி, சனி, 7-க்குடைய கேந்திராதிபதி- இருவரும் கூடுவது விபரீத ராஜயோகமாகும். கேந்திராதிபதியும் திரிகோணாதிபதியும் இணைவது மாபெரும் யோகமாகும். இருவரும். 6-ல் இணைவதால் ஆரம்பத்தில் எதிர்ப்புகளும் தடைகளும் காணப்பட்டாலும் முடிவில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உருவாகும். பெரும் பாலும் பெண்களுக்கு கணவர்வகையிலும், ஆண்களுக்கு மனைவிவகையிலும் மேற்படி அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும் எனலாம். ஜனன ஜாதக தசாபுக்திகளும் அந்த அமைப்பில் இருந்தால் மேற்படி யோகம் தப்பாமல் நடைபெறும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. தொடகத்தில் 9-ல் நிற்கும் ராகு சாரத்திலும் பிறகு 5-ல் நிற்கும் குருவின் சாரத்திலும் சஞ்சாரம் (சதயம், பூரட்டாதி) செய்கிறார். 5, 9 இரண்டும் திரிகோணமாகும். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம்; விஷ்ணு ஸ்தானம் என்பார்கள். திரிகோணம் என்பது தெய்வ அதுகூல ஸ்தானம்; லட்சுமி ஸ்தானம் என்பார் கள். உழைப்பும் வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். அதைத்தான் திருவள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்' என்றார். இரண்டு பிரம்மச்சாரிகள் செல்வந்தராக கடும்தவம் இயற்றினார்கள். லட்சுமி தேவி தோன்றி, ""இந்த ஜென்மாவில் நீங்கள் செல்வந்தராக வாய்ப்பில்லை. அடுத்த ஜென்மாவில் இந்த தவத்தின் பலன் கிடைக்கும்'' என்றார். அவர்கள் வெறுத்துப் போய் குருவிடம் கேட்டார்கள். ""அடுத்த ஜென்மா என்றால் நீங்கள் மரண மடைந்து பிறவி எடுக்கவேண்டுமென்பதில்லை. சந்நியாசம் வாங்கிக்கொண்டால் மறுபிறவி எடுத்தற்குச் சமம்'' என்றார். உடனே இருவரும் சந்நியாசம் பெற்றார்கள். சந்நியாசம் ஏற்றுக் கொண்டவுடன் பணத்தின்மேல் இருந்த பற்று நீங்கிவிட்டது. என்றாலும் குபேரனும் லட்சுமியும் அவர்கள் செய்த தவத்தின் பலனாக சங்கநிதி, பதுமநிதி ஆகிய செல்வங்களைக் கொட்டிவிட்டார்கள். அந்த செல்வத்தை வைத்து தான் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி னார்கள். தர்மகர்மாதிபதி யோகம் இருந்தால் வரும் அதிர்ஷ்டத்தைத் தடுத்து நிறுத்த யாருக் கும் அதிகாரமில்லை.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் வாரத்தொடக்கத் தில் 5-ல் சஞ்சரிக்கிறார். அவருடன் 9-க்குடைய புதன் சம்பந்தம். 9-ஆமிடம் திரிகோண ஸ்தானம். 5-ஆமிடமும் திரிகோண ஸ்தானம். ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணம் ஏறுவது சிறப்பு. அந்த சிறப்பு அவருடன் சேர்ந்த கிரகத்திற்கும் கிடைக்கும். எனவே, உங்கள் திறமை வெளிப்பட்டு பெருமை தேடித் தரும். கற்றோரும் மற்றோரும் உங்களைப் பாராட்டு வார்கள். செயற்கரிய செயல்களைச் செய்து சீரும் சிறப்பும் அடையலாம். கேந்திரம் என்பது மனித முயற்சி. திரிகோணம் என்பது தெய்வ கடாட்சம். 18-ஆம் தேதி சுக்கிரன் 6-ல் மறைவு பெற்றாலும் அது அவருக்கு உச்சவீடாகும். ஆட்சி, உச்சத்தில் உள்ள கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. உதாரணமாக துலா ராசிக்கு 8-ஆமிடம் ரிஷபம் மறைவு ஸ்தானம் என்றாலும், அது அவருக்கு ஆட்சிவீடு என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. அதேபோல மீன ராசி 6-ஆமிடம் என்றாலும் அங்கு சுக்கிரன் உச்சமடைவதால் அதுவும் பாதிக்காது. ஜாதகத்தில் விதி என்று ஒன்றிருந் தால் அதற்கு விதிவிலக்கும் உண்டு. அதை எல்லாம் கணித்து நிர்ணயித்தால்தான் ஜோதிடத்தின் சூட்சமங்களை உணரலாம். ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடம் ஏறும்போது ஜோதிடமும் சங்கீதமும் தவிர மற்ற எல்லா கலைகளின் ஆதியந்தத்தைக் கற்று வந்தேன் என்று பிரம்மாணம் செய்கிறார். ஜோதிடத்திற்கும் சங்கீதத்திற்கும் இதுவரை எல்லையைக் கண்டவரில்லை. 2-ல் கேதுவும், 8-ல் செவ்வாய், ராகுவும் இருப்பது களஸ்திரதோஷம், குடும்ப தோஷம் எனப்படும். ஆனால் குரு பார்ப்பதால் தோஷம் விலகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்க்கிறார். ஒரு லக்னாதிபதியோ, ஒரு ராசியாதிபதியோ, ஒரு பாவகாதிபதியோ தன் ஸ்தானத்தைத் தானே பார்த்தால் அதற்கு முக்கியத்துவம் உண்டாகும். மற்ற பாவகிரக சம்பந்தம் இருந்தாலும் அது நிவர்த்தியாகிவிடும். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் தாரதோஷம் அல்லது தாமதத் திருமணம், திருமணத்தில் தடை போன்ற பலன்களைக் கொடுக்கும் என்றாலும், ராசிநாதன் செவ்வாய் சம்பந்தபடுவதால் மேற்படி தோஷம் விலகிவிடும். மேலும் 7-ஆமிடத்தை நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. ஜனன ஜாதகத்திலும் 2-ஆமிடம், 7-ஆமிடம், 8-ஆமிடங்களில் செவ்வாய், ராகு- கேது, சனி போன்ற பாவகிரகச் சேர்கை, சம்பந்த மிருந்தால் தாரதோஷம், இருதார யோகம், இருமண வாழ்க்கை போன்றவைக்கு இடம் உண்டாகும். தாரம் இருக்கத் தாரம் அமைவதும், தாரமிழந்தபிறகு மறுதாரம் அமைவதும் இந்த விதிக்குப் பொருந்தும். பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகன் குரு, ராகு- கேது, சனியுடன் சம்பந்தப்பட்டாலும், மேலே சொன்ன 2, 7, 8-ஆமிடங்களின் பாவகிரக சம்பந்தமிருந்தாலும் இரு மாங்கல்ய பலம் உண்டாகும். மேற்கண்ட தோஷமுடைய ஜாதகர்கள் காமோகர்ஷண ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜ ஹோமமும் செய்து கொள்ளவேண்டும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
2023 வரை தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. இதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடக்கும் ஜாதகர் களுக்கு பிரச்சினை அதிகமாக இருக்கும். அப்படிப் பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்து ருத்ரஜபப் பாராயணம் செய்து, ருத்ர ஹோமம் வளர்த்து சிவனுக்கு ருத்ர அபிஷேகம் செய்யவேண்டும். 5-க்குடைய செவ்வாய் 6-ல் ராகு- கேதுக்களோடு சம்பந்தப்படுவதால், சில ருக்குத் தன்னைப் பற்றியும் தன் ஆரோக்கியத் தைப் பற்றியும் கவலை ஏற்படலாம். அல்லது குரு 4-க்குடையவர் என்பதால் இடம், பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கலாம். எதுவானாலும் ஜாதக தசாபுக்திரீதியான தேவையான பரிகாரங்களைச் செய்துகொண்டால் எல்லா சங்கடங்களும் சஞ்சலங்களும் விலகும். தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசமடைந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. அதனால் வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். வரவு- செலவுகள் சீராக அமையும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் பெருகும். வரவேண்டியது வந்து சேரும். கொடுக்கவேண்டியது ஓடியடையும். நீண்டகாலக் கனவுத்திட்டங்கள் நிறைவேறும். ஏழரைச்சனி நடப்பதால் சில திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேறும். சில திட்டங்கள் தாமதமாக நிறைவேறும். அதற்காக கொண்ட கொள்கையில் குறிக்கோளும் லட்சியமும் மாறாது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகரத்தில் குரு, சனி சேர்க்கை. சனி ஆட்சி பெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 5-ல் செவ்வாய், ராகு சம்பந்தம். கேது பார்வை. ஜனன ஜாதகத்திலும் 5-ஆமிடம், 9-ஆமிடங்களில் பாவ கிரக சம்பந்தம் இருந்தால் புத்திர தோஷமோ புத்திர சோகமோ ஏற்படும். குழந்தையே பிறக் காமல் இருப்பது புத்திர தோஷம். குழந்தை பிறந்து இறப்பது புத்திர சோகம். ஒரு சில ஜாதகர் களுக்கு ஒரே குழந்தை இருக்கும். அதற்குப் பெயர் "கதலி வந்தியா தோஷம்' எனப்படும். இன்றைய நாகரீக உலகில் பெரும்பாலும் "நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதால் எல்லாருக்கும் ஒரே வாரிசாக அமைகிறது. அந்தக் காலத்தில் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள். பதினாறு என்றால் பதினாறு குழந்தைகள் என்று அர்த்தமல்ல. பதினாறுவகை பாக்கியங்கள். மகர ராசிக்கு 8-க்குடைய சூரியன் 3-ல் இருப்பதும், பாதகாதிபதி செவ்வாய் ராகு- கேது சம்பந்தம் பெற்று 8-ஆமிடத்தைப் பார்ப்பதும்- சிலருக்கு உடன்பிறப்புகள்வகையில் சச்சரவுகளும் சஞ்சலங்களும் உருவாகும். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்ற கொள்கை மாறி உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல சக உதிரம் (உதிரம் என்றால் ரத்தம்) என்பதுதான் சகோதரம் என்று மாறியது. ரத்தத் தின் ரத்தம் என்பதும் உடன்பிறப்பு என்பதும் சகோதரர்களைக் குறிக்கும். பொதுவாக அது பிரச்சினைக்குரியதாகவேதான் அமைகிறது. "நீரடித்து நீர் விலகாது' என்பதுபோலவும் "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்பதுபோலவும் பொருந்தன்மையாக நடந்துகொண்டால் பிரச்சினைகள் வளராது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 12-ல் ஆட்சியாகிறார். பன்னிரண்டு ராசிகளில் கும்ப ராசிநாதனும் விரயாதிபதியும் ஒருவராக வரும் ராசி கும்பமாகும். எழுதி எழுதி சரியில்லையென்று கிழித்துப்போட்டு மீண்டும் எழுதுகிற தன்மையைப்போல, கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்பது ஒரு விதி. சில நேரங்களில் அனுதாப அலையும் அனுகூல நிலையை உருவாக்கிவிடும். 4-ல் செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் பூமி, இடம், வீடு சம்பந்தமான பிரச்சினைகள் சிலருக்கு உருவாகலாம். என்றாலும் குரு பார்ப்பதால், கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பதுபோல முடிவில் உங்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும். சிலருக்கு இடப் பெயர்ச்சி உண்டாகலாம். சிலருக்கு பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான முயற்சிகள் உருவாகும். வாடகை வீட்டில் உள்ளோர் ஒத்தி வீட்டுக்குப் போகலாம். ஒத்தி வீட்டில் உள்ளோர் கிரையத்திற்குப் போகலாம். பொருளா தாரப் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு லோன் வசதி கிடைக்கும். ஈஸியான இ.எம்.ஐ செலுத்தும்படி யோகம் உண்டாகும். அதற் குக் காரணம் 4-ஆமிடத்தை குரு பார்ப்பது தான். கும்ப ராசிக்காரர்களுக்கு நடக்கும் ஏழரைச்சனி வேலை சம்பந்தமாக வெளியூர், வெளிநாடு யோகத்தை உருவாக்கித் தரும். வெளியூர்களில் புதிய தொழில் தொடங்கும் பாக்கியமும் ஏற்படும். அதற்கான பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தா லும் சுலபத் தவணை முறையில் லோன் வசதி கிடைக்கும். சிலருக்கு மனைவியின் சிறுசேமிப்பு கைகொடுத்து உதவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசியில் 6-க்குடைய சூரியன் பலமாக இருக்கிறார். அதாவது ஜென்ம ராசியும் ஜென்ம லக்னமும் கேந்திரத்திற்கும் பொருந்தும்; திரிகோணத்திற்கும் பொருந்தும். 1, 5, 9 திரிகோணம். 1, 4, 7, 10 கேந்திரம். 6-ஆமிடம் என்பது குடும்ப ஸ்தானமாகிய 2-ஆமிடத்துக்கு திரிகோண ஸ்தானமாகும். 10-ஆமிடமாகிய தொழில், வாழ்க்கை ஸ்தானத்திற் கும் திரிகோணம். எனவே குடும்பம், வாழ்க்கை, உத்தியோகம், களப்பணியி லும் உங்களுக்கு எல்லாம் நற்பலனா கவே நடக்கும். சூரியன் 6-க்குடையவர் என்பதால் சிலருக்கு சுபக்கடன் உருவாக லாம். 6-க்குடையவன் 6-ஆமிடத்துக்கு 8-ல் மறைவதால் எதிரிகள் மறைவார்கள். போட்டி, பொறாமைகள் விலகிப் போகும். கடன் உருவானாலும் அது சுபக்கடன்தான். சொத்துகள் வாங்கு வது, வாகனங்கள் வாங்குவது. குடும்பத் தில் சுபகாரியம் நடத்துவது, பிள்ளை கள், பேரன்- பேத்திகள் படிப்பு சம்பந்த மாகவும் மற்ற சுபகாரியங்களுக்காவும் கடன் வாங்கலாம். சிலருக்கு வட்டி யில்லாத கைமாற்றுக்கடன் அமையும். சிலருக்கு ஈஸியான தவனை கட்டுவது போலவும் அமையும். "கடன்பட்டார் நெஞ்சும்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பர் பாடினார். அந்த விதி உங்களுக்குப் பொருந்தாது. கடன் வாங்குவதிலும் யோகம்; கடன் கொடுப்பதிலும் யோகம். அதுதான் உங்கள் ராசி. வாக்கு நாணயம் காப்பாற் றப்படும். பத்து வட்டிக்கு கடன் கொடுப் பவர்களும் உங்கள் ராசி அமைப்புக்கு மூன்று வட்டிக்கு கடன் தரலாம்.