ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.
செவ்வாய்: அஸ்வினி- 3.
புதன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2.
குரு: பூராடம்- 4.
சுக்கிரன்: பூசம்- 3, 4, ஆயில்யம்- 1, 2.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 3.
கேது: கேட்டை- 4.
கிரக மாற்றம்:
14-9-2020- சனி வக்ர நிவர்த்தி.
15-9-2020- செவ்வாய் வக்ரம் ஆரம்பம்.
17-9-2020- கன்னிச் சூரியன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
13-9-2020- கடகம்.
15-9-2020- சிம்மம்.
17-9-2020- கன்னி.
குறிப்பு:
சித்திரை 30 முதல் (13-5-2020) ஆவணி 24 (9-9-2020) வரை குரு வக்ரமாக இருந்தார். சென்ற வாரம் வக்ர நிவர்த்தியடைந்தார்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 15-ஆம் தேதிமுதல் வக்ரமடைகிறார். ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். வக்ரத்தில் உக்ர பலம் என்பது ஜோதிட விதி. அதாவது, கெட்ட இடங்களிலிருக்கும் கிரகங்கள் வக்ரமடைந்தால் கெட்ட பலனை வலுவாகச் செய்யும். நல்ல இடத்திலிருந்தால் நல்ல பலனை வலுவாகச் செய்யும். அதுதான் வக்ரத்தில் உக்ர பலம் என்பதன் அர்த்தம். உங்கள் ராசிக்கு செவ்வாய் ராசி நாதனாகி ராசியில் ஆட்சி பெறுவதால், எல்லா வகையிலும் நல்ல பலன் களாக நடக்குமென்பது மறுக்கமுடியாத உண்மை. ராசி அல்லது லக்னம் என்பது திறமை, செல்வாக்கு, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்குமிடமென்பதால், அவையெல்லாம் அற்புதமாக அமையும். அதேசமயம் கேது சாரத்திலிருப்பதால் உங்களை நீங்களே குழப்பிக்கொள்வீர்கள். வீட்டைப் பூட்டிவிட்டு சிறிதுதூரம் சென்றபிறகு, வீட்டை சரியாகப் பூட்டினோமா என்ற சந்தேகம் ஏற்பட்டு, மீண்டும் திரும்பிவந்து பூட்டை சரியாக இழுத்துப்பார்ப்பது- அது தான் தன்னைத்தானே நம்பாதது; சந்தேகம். மேலும், 9-ல் குரு ஆட்சிபெற்று ராசியையும் ராசிநாதனையும் பார்ப்பதால் சந்தேகம் நீங்கி தெளிவடைந்து சந்தோஷம் அடைவீர்கள்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணி செவ்வாய்க்குரிய தெய்வம். செவ்வாய்க் கிழமை சென்று வழிபடலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைகிறார். அவர் நிற்கும் வீடு சந்திரன் வீடு. (கடகம்). சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷபமாகும். ஆக, சுக்கிரன் சந்திரன் வீட்டிலிருப்பதால் அவருக்கு மறைவு தோஷம் விலகுகிறது. ஒரு ராசிநாதனோ லக்னநாதனோ 3, 6, 8, 12-ல் மறைந்தால், அவர் சோதனைகளில் வெற்றிபெற முடியாது. இது ஜாதகப் பொதுவிதி. ஆனால், இங்கு ராசிநாதன் சுக்கிரன் கடகத்தில் மறைவதை தோஷமென எடுத்துக்கொள்ளமுடியாது. கடகத்திற்குரிய சந்திரன் ரிஷபத்தில்தான் உச்ச மடைவார். ஆகவே, கொள்கை வேறுபட்ட கட்சி கள் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொண்டால் ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்ள ம ôட்டார்கள். பகைவர்களைப் பேதம் பாராட்ட மாட்டார்கள். அதுபோல, ரிஷபம், கடகம், சுக்கிரன், சந்திரன் இணைப்பு மதிப்புடையதாக இருப்பதால், சுக்கிரனுக்கு மறைவு தோஷம் இருக்காது. மேலும், மேஷச் செவ்வாய் கடகச் சுக்கிரனைப் பார்ப்பதால் கெடுபலன்கள் விலகி நற்பலன்களே நடக்குமென்பது அனுபவரீதியான உண்மை. ஆனால், ஜென்ம ராகு, சப்தமக் கேது உங்கள் வைராக்கியத்துக்கும் சாதனைகளுக்கும் செயல் தேக்கத்தை உருவாக்கித் தேங்கச் செய்யலாம்.
பரிகாரம்: ரிஷபம் சுக்கிரன் வீடு. சுக்கிரனுக்குரிய கோவில் கஞ்சனூர். வெள்ளிக்கிழமை சென்று வழிபடலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி. அவருக்கு- ராசிக்கு 7-ல் இருக்கும் சனி பார்வை. 4-ஆமிடம் பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி முதலிய இடங்களைக் குறிக்குமிடம். இவற்றுள் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது; எந்தக் குறையும் இருக்காது. ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் அல்லது தொழில் மாற்றம் உண்டாகும். 7-ல் குரு, சனி சேர்க்கையோடு 7-ஆமிடத்துக்கு சுக்கிரன் 8-ல் மறைவு. எனவே, குடும்ப வாழ்க்கையில் குழப்பங்களும் பிரச் சினைகளும் உருவாக லாம். என்றாலும், குரு 7-ல் ஆட்சி என்ப தால், பிரச்சினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். இந்த உலகில் யாருக்குத் தான் பிரச்சினை இல்லை? அவரவர் தகுதிக்கேற்ற அளவில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். நித்திய கண்டம் பூரண ஆயுள் என்றளவில் நாளும் பொழுதும் ஓடும். 6-க்குரிய செவ்வாய் 11-ல் ஆட்சி என்பதாலும், அவருக்கு ஆட்சிபெற்ற குரு பார்வை கிடைப்பதாலும் எதிரிகள் உதிரிகளாகி விடுவார்கள். வழக்கு, வில்லங்கம், விவகாரம் எதுவானாலும் எல்லாமே உங்களுக்கு அனுகூலமாகவும் சாதக மாகவும் அமையும். மிதுன ராசிக்கு 9-க்குரிய சனியும், 10-க்குரிய குருவும் இணைந்து 7-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகமாகும். அதனால், உங்களுடைய நியாயமான ஆசைகளும் திட்டங்களும் கோரிக்கைகளும் மிகமிக எளிதாக ஈடேறும். ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலை எல்லா வற்றிலும் திருப்தியான பலன் உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்குக் கொண்டக்கடலை மாலையும், சனிக்கிழமைதோறும் கால பைரவருக்கு மிளகு தீபமும் ஏற்றுவது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குருவும் சனியும் கூடியிருக்க, ஜென்ம ராசியில் சுக்கிரன் நிற்க, 10-ல் ஆட்சிபெறும் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பது பலம்தான். "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி எந்தக் குறையும் ஏற்படாது. அத்துடன் 10-க்குரிய செவ்வாய் ஆட்சிபெற்று ஜென்ம ராசியையும் 4-ஆமிடத்தையும் 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். அதனால் தேக ஆரோக்கியத்தில் தெளிவுண்டாகும். பூமி, வீடு, வாகனம் போன்ற 4-ஆமிடத்துப் பலன்கள் யாவும் நல்லமுறையில் செயல்படும். சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் போன்ற பலன்கள் நடைபெறும். சிலருக்கு வாகன யோகம் அமையும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கலாம். இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் நான்கு சக்கர வாகனம் வாங்கலாம். ஜாதக தசாபுக்தி சாதகமாக இருந்தால் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்யலாம். டாக்ஸி, லாரி, ஆட்டோ போன்ற தொழில்துறையில் முதலீடு செய்யலாம். அதற்கான வங்கிக் கடன் வசதியும் கிடைக்கும். சிலர் கூட்டுசேர்ந்து மேற்படி டிராவல்ஸ் தொழில்துறையில் செயல்படலாம். அல்லது, 10-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதால் கட்டடம், கான்டிராக்ட், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்துறையில் செயல்படலாம். அல்லது, செவ்வாய் அக்னிகாரகன் என்பதால் உணவு விடுதி, ஹோட்டல், டீக்கடை போன்றவகையிலும், செங்கல்சூளை, விறகு வியாபாரம் போன்றவகையிலும் முதலீடுசெய்து தொழில் செய்யலாம். படித்துமுடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு போலீஸ், இராணுவம், தீயணைப்புப் படை போன்ற துறையில் வாய்ப்புகள் வரும்.
பரிகாரம்: பொன்னமராவதி வழி செவலூர் சென்று பூமிநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யலாம். இது வாஸ்துக் கோவிலாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசியில் ஆட்சிபெறுகிறார். தொடக்கத்தில் சுக்கிரன் சாரத்திலும் (பூரம்), பிறகு சூரியன் சாரத்திலும் (உத்திரம்) சஞ்சாரம். சுக்கிரன் சிம்ம ராசிக்கு 3, 10-க்குரியவர். சூரியன் ராசிநாதன். எனவே, உங்களுடைய முயற்சிகள் யாவும் தளர்ச்சி யில்லாமல் வளர்ச்சிபெறும். 10-ல் உள்ள ராகுவால், படித்துமுடித்துப் பட்டம்பெற்று வேலைதேடியலைவோருக்கு அவரவர் தகுதிக்கேற்ற- திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு அமைந்தாலும் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் கடல்கடந்துபோய் வேலை பார்க் கும் வாய்ப்புகள் உருவாகும். 10-க்குரியவர் சுக்கிரன். சந்திரன் வீடான கடகத்தில் இருப்ப தால் (ஜல கிரகம் ஜல ராசியில் இருப்பதால்) கடல்கடந்த தொழில் வாய்ப்புகள் ஏற்படும். அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக பரிட்சை எழுதலாம்; முயற்சிக்க லாம். அதற்காகப் பணமும் செலவழிக்கலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு நடப்புத் தொழில் கைகொடுக்காமல் நஷ்டம் ஏற்பட்டால், வெளியூருக்குச் சென்று தொழில் செய்யலாம். பணப்பற்றாக்குறை இருந்தால் சம்பளத்திற்குப் பணிபுரியலாம். பொதுவாக, கடல்கடந்துபோய் பணியாற்றுபவர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் அமையும்.
பரிகாரம்: 10-ல் உள்ள ராகுவுக்காக, நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தொழில் அல்லது வேலை வாய்ப்பு திருப்திகரமாக அமையும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் 11-க்குரிய சந்திரன் சாரத்திலும், பிறகு 3, 8-க்குரிய செவ்வாய் சாரத்திலும் சஞ்சாரம். செவ்வாய் 8-ல் இருக்கிறார். 5, 6-க்குரிய சனி 4-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். வேலை அல்லது தொழில்ரீதியாக திடீர் திருப்பங்களும் மாற்றங்களும் உண்டாகும். அவை திருப்திகரமாகவும் முன்னேற்றமாகவும் அமையும். 10-ஆமிடமான மிதுனத்தை குருவும் சனியும் பார்க்கிறார்கள். 10-ஆமிடமாகிய மிதுனத்துக்கு சனி 9-க்குரியவர். குரு 10-க்குரியவர். எந்தவொரு இடத்துக்கும் 9, 10-குரியவர்களின் சம்பந்தம் கிடைத்தால், அந்த இடத்துப் பலன் அதாவது, அந்த வீட்டுப் பலன் சிறப்பாகவும் யோகமாகவும் அமையும். அதேபோல, அந்த இடத்துக்கு 6, 8, 12-க்குரிய கிரகங்களின் சம்பந்தமிருந்தால் சிக்கல், சிரமம், ஏமாற்றம், இழப்பு போன்ற கெடுபலன்கள் உண்டாகும். அப்படியமையும் கிரகங்கள் அந்த வீட்டுக்கு (பாவத்துக்கு) 5, 9-க்குரிய சம்பந்தம் பெற்றால், முதலில் துர்பலனும் பிறகு நற்பலனுமாக மாறும்- நெல்லிக்காய் முதலில் துவர்க்கும் பிறகு இனிக்கும் என்பதுபோல.
பரிகாரம்: ஜென்ம ராசியில் புதன் நிற்க, அவரை சனி பார்ப்பதால் காரியத் தடை களை நீக்கி வெற்றிபெற ஆஞ்சநேயரை வழிபடவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் திக்பலம் பெறுகிறார். துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியின் சாரத்திலும் (பூசம்) பிறகு, பாக்கியாதிபதியான புதன் சாரத்திலும் (ஆயில்யம்) சஞ்சாரம். உங்களுடைய முயற்சிகள் யாவும் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சியடையும். மனக்கிளர்ச்சிகளெல்லாம் விலகி மகிழ்ச்சி மலரும். நீண்டகாலத் திட்டங்கள் எல்லாம் நினைத்தவண்ணம் நிறைவேறும். பிள்ளைகள்வகையில் நிலவும் தொல்லைகள் எல்லாம் அகன்று நல்லவையாக நடக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற்று இனிமை அடைவார்கள். தொழிலதிபர்கள் எல்லாம் தொய்வு நீங்கி உய்வடைவார்கள். புதிய தொழில் முயற்சிகள் அதியற்புதமாகி மன மகிழ்வை உண்டாக்கும். வீடு, மனை, வாகன யோகம் அடைந்து ஆனந்தம் பெறலாம். கடன்கள் எல்லாம் நீங்கி களிப்படையுமளவு தனவரவு தாராளமாக அமையும். 7-ல் செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்க, 7-க்குரிய செவ்வாய் 7-ஆமிடத்துக்கு பாக்கியாதிபதியான குரு ஆட்சிபெற்றுப் பார்ப்பதால், கணவன்-மனைவி உறவுப் பிணக்குகள் நீங்கி இணக்கமாகும், இனிமை சேர்க்கும், வளமையாக்கும். மனதை ஈர்க்கும். பங்கமில்லாத தாம்பத்திய வாழ்க்கை தங்க மென ஜொலிக்கும். மக்கள்மீது அக்கறைகொண்டு சர்க்கரைத் திட்டங்களை நிறைவேற்றலாம்.
பரிகாரம்: 2-ல் கேது, 8-ல் ராகு நிற்கும் தோஷம் விலக காளஹஸ்தி சென்று வழிபட லாம். அல்லது தேனி அருகே தென்காள ஹஸ்தி என அழைக்கப்படும் உத்தமபாளை யம் சென்று வழிபடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசி ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு பெற்றாலும் ஆட்சியாக இருக்கிறார். ஆட்சிபெற்ற கிரகங்களையும் உச்சம் பெற்ற கிரகங்களையும் மறைவு தோஷம் பாதிக்காது. அதேபோல, வக்ரம் பெற்ற கிரகங்களுக்கு பலம் அதிகம். கெட்ட இடத்திலிருந்தாலும் நல்ல இடத்திலிருந்தாலும் வக்ரத்தில் உக்ர பலம் என்பார்கள். கெட்ட இடத்தில் இருந்தால் கெடுபலனைக் கடுமையாகவும், நல்ல இடத்திலிருந்தால் நற்பலனை வலுவாகவும் செய்யும். கிரகம், கிருகம் என இரண்டு உண்டு. கிரகம் என்பது நம்மை வந்து பற்றிக்கொள்வது. கிருகம் என்பது நாம்போய்ப் பற்றிக்கொள்வது. ஓர் எழுத்து வித்தியாசத்தில் அர்த்தமே மாறி விடும். இது வடமொழி சமஸ்கிருதத்தின் சூட்சுமம். ஜென்மக் கேது, சப்தம ராகு குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளையும் ஈகோ பிரச்சினைகளையும் உருவாக்க இடமுண்டு. அதற்கு இடந்தராமல், யாராவதொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப்போனால் பிரச் சினைகள் பெரிதாகாமல் சுமுகமாகப் போய் விடும். அதனால்தான் பெரியவர்கள் "விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்று சொன்னார்கள். ஜென்மக் கேது, சப்தம ராகு, வாக்கு ஸ்தானத்திலுள்ள சனி மூவரும், உங்கள் மனதில் மாசு மருவில்லை எனினும், பேச்சில் மற்றவரைப் புண்படுத்தும்படி வார்த்தைகளை வெளிப்படுத்தும். "வாக்குச் சனி கோப்பைக் குலைக்கும்' என்பார்கள். அதைக் கட்டுப்படுத்திக்கொண்டால் பகையில்லை.
பரிகாரம்: 2020 டிசம்பர்வரை (சனிப் பெயர்ச்சிவரை) ஏழரைச்சனி இருப்பதால் சனிக்கிழமைதோறும் பைரவருக்கு மிளகு தீபமேற்றவும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு ஆட்சியாக இருக்கிறார். அதனால் ஜென் மச்சனியின் தோஷம் பாதிக்காது. 5-ல் செவ்வாய் ஆட்சி. 9-ல் சூரியன் ஆட்சி. 10-ல் புதன் ஆட்சி. இந்த மூவருக்கும் குரு சம்பந்தம் கிடைக்கிறது. செவ்வாயை குரு நேரடியாகப் பார்க்கிறார். சூரியனையும் குரு 9-ஆம் பார்வை யாகப் பார்க்கிறார். 10-ல் உள்ள புதனை குருவோடு சேர்ந்த சனி பார்க்கிறார். ஆகவே, "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி, உங்களுக்கு கிரகங்களால் ஏற்படும் எந்தக் குறையும் இருக்காது. 5-ல் உள்ள செவ்வாய் கேது சாரம் பெறுவதால் மனக்குறை மட்டும் இருக்கும். அதை நிவர்த்தி செய்துகொண்டால் எல்லாம் தெளிவாகும். தெளிவில்லாத நெஞ்சம் தெளியும். எந்த கிரகம் எப்படியிருந்தாலும் ராசிநாதன் குரு ஆட்சிபெற்று 5, 9 என்ற இரண்டு திரிகோண ஸ்தானங்களையும் பார்க்கிறார். 5-க்குரிய செவ்வாய், 9-க்குரிய சூரியன் இருவரையும் குரு பார்க்கிறார். உங்கள் விருப்பங்களும் எண்ணங் களும் திருப்பங்கள் இல்லாமல் நிறைவேறும். ஆனால், குருவோடு சனி சம்பந்தப்படுவதால், உங்கள் வழி தனிவழியாக இருக்கும்- ரஜினி காந்த் "படையப்பா' திரைப்படத்தில் "என் வழி தனி வழி' என்று சொன்னதுபோல.
பரிகாரம்: குரு, சனி சேர்ந்திருப்பது சண்டாள யோகம் எனப்படும். அதனால் வியாழக்கிழமைதோறும் பைரவருக் கும், சனிக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கும் நெய் விளக்கேற்றுவதால், மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமையும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு இந்த வருடம் டிசம்பர்வரை விரயச்சனி நடக்கிறது. அதனால் தவிர்க்க முடியாத பயணங்களும் செலவுகளும் அதிக மாகத்தான் இருக்கும். சிலருக்குச் செய்த செலவே மீண்டும் மீண்டும் திரும்பப் படை யெடுக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சி உண்டா கும். குடியிருப்பு மாற்றம் அல்லது தொழில் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். அவரவர் ஜாதகரீதியாக அந்த மாற்றம் நல்ல மாற்றமாகவோ, கெட்ட மாற்றமாகவோ அமையும். அதாவது, 6, 8, 12-க்குரிய தசாபுக்தி நடந்தால் கெட்ட மாற்றமாகவோ, விபரீத மாற்றமாகவோ நடக்கும். 5, 9- திரிகோணாதி பதிகள் தசாபுக்தி நடந்தாலோ, 4, 7, 10- கேந்திராதிபத்திய தசாபுக்திகள் நடந்தாலோ நல்ல மாற்றமாகவோ, சுபமாற்றமாகவோ அமையும். எந்த மாற்றமாக இருந்தாலும் ஏமாற்றமாக இருக்காது. அதற்குக் காரணம், 4-ல் கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி, 9-ல் திரிகோணத்தில் புதன் ஆட்சி. கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம்- விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம்- அதிர்ஷ்ட ஸ்தானம். கேந்திரமும் திரிகோண மும் இணைந்து கொடுக்கும் பலன் மாறாது; மறையாது, நிரந்தரமாக அமையும். அதை வள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார்.
பரிகாரம்: 8-ல் சூரியன் மறைந்து ஆட்சி பெறுவதால், தஞ்சாவூர் மாவட்டம் பருத்தி யப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வரரை வழிபடவும். இயலாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை சூரிய வழிபாடு செய்வது உத்தமம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெறுகிறார். அவரோடு சேர்ந்த குரு ஆட்சியாக இருக்கிறார். 3-ல் செவ்வாய் ஆட்சி. 7-ல் சூரியன் ஆட்சி. 8-ல் புதன் ஆட்சி. இவர்களெல்லாம் நலிவடைந்த உங்களுக்குப் பலம் சேர்க்கும்.; பக்கபலமாக அமையும்; தக்கத் துணையாக விளங்கும். 4-ல் உள்ள ராகு சிலருக்கு தேக சுகக்குறைவு ஏற்படுத்தினாலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. கும்ப ராசிக்கு யோகாதிபதி சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன்- மனைவிக் குள் சிலநேரம் ஈகோ உணர்வு ஏற்படலாம். அதற்கு இடம் தராமல் கணவன்- மனைவி இருவரும் அனுசரித்து விட்டுக்கொடுத்துப் போனால் வாழ்க்கையின் உயர்வுகளை அடையலாம், அனுபவிக்கலாம். மேலும், தாய் அல்லது மனைவியை அனுசரித்து நடப்பவர்களுக்கு- அவர்களைத் திருப்திப் படுத்துபவர்களுக்கு வற்றாத செல்வமும் தட்டாத நிலையும் உருவாகும். அவரவர் முன்னேற்றம் தாய் அல்லது தாரத்தின் கையிலுள்ளது. அதனால்தான் "தாய்க்குப்பின் தாரம்' என்றார்கள். நாட்டு நடப்பில், தாய் வயிற்றைப் பார்ப்பாள். தாரம் கையைப் பார்ப் பாள் எனச் சொல்வார்கள். அந்த வாதம் பொருந் தாது. 7-ல் சூரியன் ஆட்சி. கணவன் அல்லது மனைவிக்கு ஆயுள், ஆரோக்கியம் விருத்தி யடையும். சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் செவ்வாய் பார்ப்பதால் மனம்போல் மாங்கல்யமாகும்.
பரிகாரம்: 7-ல் சூரியன் ஆட்சி என்பதால், ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடு சிறந்தது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவரோடு சனி சம்பந்தம். 2-ல் செவ்வாய் ஆட்சி. 6-ல் சூரியன் ஆட்சி. 7-ல் புதன் ஆட்சி. 10-ல் குரு ஆட்சி. இப்படி ஆட்சிபெற்ற கிரகங்களெல்லாம் உங்கள் தொழில்துறையில் தொய்வடையாமல் விரிவடையச் செய்வார்கள். தளர்ச்சியில்லாமல் வளர்ச்சி பெறும். மனக்கிளர்ச்சி பெறத் தேவையில்லை. தேக நலம், பண நலம், குடும்ப நலம் எல்லாம் பலமாக இருக்கும். 10-ல் குரு ஆட்சிபெற்றாலும், 12-க்குரிய சனி சேர்க்கை என்பதால், திட்டங்களையும் செயல்களையும் மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் குறிப்பிட்டபடி நிறைவேற்றாமல் குழப்பமடைவீர்கள். மற்றவரையும் குழப்பமடையச் செய்வீர்கள். அது உங்கள் ராசியின் பலவீனம். மீன ராசி என்பது இரட்டை மீன்களைக் குறிக்கும் சின்னம். குளத்தில் மீன்கள் நிலையாக இருக்காது. நீரில் சுற்றிக்கொண்டே இருக்கும். அதுபோல, உங்கள் மனமும் நிலையாக நிற்காது, மாறிக்கொண்டே இருக்கும். "மனமது செம்மையானால் மந்திரமது ஜெபிக்கவேண்டாம்' என ஒரு பாட்டு உண்டு. பாரதியார் பாடியமாதிரி "உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா'- என்பதுபோல, மனதில் உறுதி இருந்தால் செயலிலும் உறுதியும் வலுவும் உண்டாகும், வெற்றி தேடிவரும்.
பரிகாரம்: வடக்குப் பார்த்த அம்மனை நெய் தீபமேற்றி வழிபட்டால், வேண்டுவ தெல்லாம் நிறைவேறும்.