Advertisment

இந்த வார ராசிபலன் 13-12-2020 முதல் 19-12-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-13-12-2020-19-12-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 4, மூலம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 1.

புதன்: மூலம்- 1, 2, 3, 4.

குரு: உத்திராடம்- 3.

சுக்கிரன்: விசாகம்- 4,

அனுஷம்- 1, 2.

சனி: உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம்.

16-12-2020- தனுசு சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

14-12-2020- தனுசு.

17-12-2020- மகரம்.

19-12-2020- கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். 8-ல் உள்ள கேது சாரம் பெறுகிறார். கேது 3, 6-க்குடைய புதன் சாரம். (கேட்டை 3-ல் கேது.) ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை முன்னேற் றம் தெளிவாக இருந்தாலும், உடன்பிறப்புகள் பற்றிய கவலையும் விசனமும் சஞ்சலமும் அதிகமாகவே ஏற்படலாம். பாதிப்புக்கு இடமில்லை என்றாலும், மழை பெய்யும்போது, பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்யும்போது மழைச் சாரல் மேலே தெறிப்பதுபோன்ற ஒரு உணர்வு தோன்றும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே- அதுதான் ரத்த பந்த சொந்தம். சிலர் உதவலாம்; இயலாத வர்கள் அனுதாபப்படலாம். அவர்களுக் காக நீங்கள் இறைவனிடம் செலுத்தும் பிரார்த்தனைகளுக்கு பலம் உண்டு. அதே சமயம் எந்த கார ணத்தை முன்னிட் டும் அவர்களை ஏசாதீர்கள்- பேசாதீர் கள். உடன்பிறந்தோர் தவறே செய்திருந் தாலும், குற்றமே புரிந்திருந்தாலும் பெருந்தன்மை யோடு மறப்போம் மன்னிப்போம் என்று நடந்துகொள்ளவும். நீரடித்து நீர் விலகாது; குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால் குருவருளும் திருவரு ளும் உங்களை வழி நடத்தும். அதனால் தொழில் துறையிலும் வாழ்க்கை அமைப் பிலும் எந்த பிரச்சினைகள் வந்தாலும் எளிதாக அதை சமாளித்து முன்னேறலாம். ஆரோக்கியம், பொருளாதாரம் இரண்டிலும் பாதிப்புக்கு இடமில்லை. 2-ல் ராகு நிற்பதால், குடும்பத்திலும் வெளியிலும் சுற்றம், நட்பு வகையிலும் தர்க்கமில்லாத வகையில் பேச்சில் மென்மையைக் கடைப்பிடிப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் கேந்திர பலம் பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் நீசபங்கம் பெற்ற குருவும் ராசியைப் பார்க்கிறார். அதனால் ஜென்ம குருவும் அட்டமச்சனியும் உங்களுக்கு கெடுதல் செய்யாது. ஒருசிலருக்கு குடியிருப்பு மாற்றம் அல்லது பதவி, தொழில் துறையில் மாற்றம் ஏற்படலாம். ஜாதகரீதி யாக மோசமான தசாபுக்தி கள் நடந்தால் பதவி உயர்வினால் மாற்றம் உண்டாகலாம். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் வருத்தம் ஏற்படுத்தும் மாற்றமாக அமையலாம். அப்படியிருந்தால் தசாபுக்திகளுக்கேற்ற தேவையான பரிகாரங் களைச் செய்துகொள்ளலாம். ஜாதக தசா புக்திகள் தெரியாதவர்கள் நாமக்கல் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், தொழில் சிக்கல், உத்தியோக சிக்கல் நிவர்த்தியாகும். ஒருசிலர் வேலை விஷயமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளியூர் செல்ல நேரிடும். அதாவது மனைவி, மக்களின் உபசாரம் இல்லாமல், ஹோட்டல் சாப்பாடு, அறையில் தங்குதல் என்று வாழநேரிடும். அட்டமச்சனி 2020 டிசம்ப ரில் விலகியதும் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழலாம். வெளியூர் மாற்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 4, மூலம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 1.

புதன்: மூலம்- 1, 2, 3, 4.

குரு: உத்திராடம்- 3.

சுக்கிரன்: விசாகம்- 4,

அனுஷம்- 1, 2.

சனி: உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம்.

16-12-2020- தனுசு சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

14-12-2020- தனுசு.

17-12-2020- மகரம்.

19-12-2020- கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். 8-ல் உள்ள கேது சாரம் பெறுகிறார். கேது 3, 6-க்குடைய புதன் சாரம். (கேட்டை 3-ல் கேது.) ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை முன்னேற் றம் தெளிவாக இருந்தாலும், உடன்பிறப்புகள் பற்றிய கவலையும் விசனமும் சஞ்சலமும் அதிகமாகவே ஏற்படலாம். பாதிப்புக்கு இடமில்லை என்றாலும், மழை பெய்யும்போது, பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்யும்போது மழைச் சாரல் மேலே தெறிப்பதுபோன்ற ஒரு உணர்வு தோன்றும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே- அதுதான் ரத்த பந்த சொந்தம். சிலர் உதவலாம்; இயலாத வர்கள் அனுதாபப்படலாம். அவர்களுக் காக நீங்கள் இறைவனிடம் செலுத்தும் பிரார்த்தனைகளுக்கு பலம் உண்டு. அதே சமயம் எந்த கார ணத்தை முன்னிட் டும் அவர்களை ஏசாதீர்கள்- பேசாதீர் கள். உடன்பிறந்தோர் தவறே செய்திருந் தாலும், குற்றமே புரிந்திருந்தாலும் பெருந்தன்மை யோடு மறப்போம் மன்னிப்போம் என்று நடந்துகொள்ளவும். நீரடித்து நீர் விலகாது; குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால் குருவருளும் திருவரு ளும் உங்களை வழி நடத்தும். அதனால் தொழில் துறையிலும் வாழ்க்கை அமைப் பிலும் எந்த பிரச்சினைகள் வந்தாலும் எளிதாக அதை சமாளித்து முன்னேறலாம். ஆரோக்கியம், பொருளாதாரம் இரண்டிலும் பாதிப்புக்கு இடமில்லை. 2-ல் ராகு நிற்பதால், குடும்பத்திலும் வெளியிலும் சுற்றம், நட்பு வகையிலும் தர்க்கமில்லாத வகையில் பேச்சில் மென்மையைக் கடைப்பிடிப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் கேந்திர பலம் பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் நீசபங்கம் பெற்ற குருவும் ராசியைப் பார்க்கிறார். அதனால் ஜென்ம குருவும் அட்டமச்சனியும் உங்களுக்கு கெடுதல் செய்யாது. ஒருசிலருக்கு குடியிருப்பு மாற்றம் அல்லது பதவி, தொழில் துறையில் மாற்றம் ஏற்படலாம். ஜாதகரீதி யாக மோசமான தசாபுக்தி கள் நடந்தால் பதவி உயர்வினால் மாற்றம் உண்டாகலாம். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் வருத்தம் ஏற்படுத்தும் மாற்றமாக அமையலாம். அப்படியிருந்தால் தசாபுக்திகளுக்கேற்ற தேவையான பரிகாரங் களைச் செய்துகொள்ளலாம். ஜாதக தசா புக்திகள் தெரியாதவர்கள் நாமக்கல் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், தொழில் சிக்கல், உத்தியோக சிக்கல் நிவர்த்தியாகும். ஒருசிலர் வேலை விஷயமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளியூர் செல்ல நேரிடும். அதாவது மனைவி, மக்களின் உபசாரம் இல்லாமல், ஹோட்டல் சாப்பாடு, அறையில் தங்குதல் என்று வாழநேரிடும். அட்டமச்சனி 2020 டிசம்ப ரில் விலகியதும் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழலாம். வெளியூர் மாற்றம் போகாதவர் கள் உள்ளூரில் வீடு மாறலாம். யோகமான தசாபுக்திகள் நடந்தால் வாடகை வீட்டில் இருந்து சொந்தவீடு கட்டிப் போகலாம். சொந்த வீட்டுக் கனவு நிறைவேறாதவர்கள் பொன்னமராவதி வழி செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடலாம். திருச்சி மார்க்கெட் அருகிலும், திருச்சுழியிலும் பூமி நாதசுவாமி கோவில் உள்ளது. அங்கும் சென்று வழிபடலாம்.

thisweekrasi

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு 6-ல் சூரியன், சுக்கிரன், கேது மறைவு. 7, 10-க்குடைய குரு 8-ல் மறைவு. 2020 டிசம்பர் கடைசியில்தான் அட்டமத்துச் சனி வருகிறது. அதற்கு முன்னதாகவே இப்போதே அதன் அறிகுறியும், சங்கடம், சஞ்சலம், இடர்கள் எல்லாமும் தெரிய ஆரம்பிக்கும். போஜ மகாராஜன் அஷ்ட லட்சுமியை வழிபட்டுவந்தான். ஏழரைச் சனி ஆரம்பிக்கும் காலம், "உனக்கு சனி பாதிப்பு வருகிறது. அதனால் உன்னை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். இருந்தாலும் உன்னுடைய விசுவாசமான பக்திக்காக எங்களில் யாரேனும் ஒருவர் உன்னுடன் இருக்கலாம். அதனால் யார் வேண்டுமென்று நீயே கேள்' என்றாள் ஆதிலட்சுமி. அதற்கு போஜன், "தைரிய லட்சுமி இருந்தால் போதும்' என்று கூறினான். "தைரியலட்சுமி இருக்குமிடத்தில் மற்ற ஏழு லட்சுமிகளும் இருப்பதாக எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. ஆகவே, அஷ்ட லட்சுமிகளான நாங்கள் உன்னைவிட்டு விலகாமல் இருக்கிறோம்' என்றாள். அதனால் தான் "தைரியம் புருஷ லட்சணம்' என்றார் கள். குரு, சனி பரிவர்த்தனையும், 11-ல் ஆட்சிபெற்ற செவ்வாயும் உங்களுக்கு பேராதரவும் பெருந்துணையாகவும் இருந்து வழிநடத்துவார்கள். வெற்றிகளைத் தேடித் தருவார்கள். ராகுவை நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு பார்ப்பதால், குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். ஆன்மிக ஈடுபாடும், கோவில் பூஜை, கும்பாபிஷேக விழா போன்ற வகையிலும் உங்கள் பங்களிப்பு சிறப்பாக அமையும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 5-ல் சூரியன், சுக்கிரன், கேது. 6-க்குடைய குருவும் 7-க்கு டைய சனியும் பரிவர்த்தனை. 10-ல் செவ்வாய் ஆட்சி. 11-ல் ராகு. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்பது குறள். வைராக்கியமும் விடா முயற்சியும் இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்; வெற்றியடைவார்கள் என்பது இதன் கருத்து. உங்களிடம் அந்த வைராக்கியமும் வல்லமையும் உண்டு. கடகம் என்றால் நண்டு. நண்டின் உடலைச் சுற்றிக் கால்கள் அமைந்திருப்பதால், அது நின்ற இடத்திலிருந்தே உடலைத் திருப்பாமல் எந்த திசையிலும் பயணம் செய்யும். அது போல சந்தர்ப்பங்களை அனுசரித்து வளைந்து கொடுத்துச் சென்று வாழ்க்கையில் வெற்றிபெறுவீர்கள். சிறு காற்றில்கூட நாணல் புல் ஆடி அசையுமாம். அதைப்பார்த்த ஓங்கி வளர்ந்த பனைமரம் கேலிசெய்து சிரித்ததாம். பெரும்புயல் வீசியவுடன் பனைமரம் சாய்ந்துவிட்டது. ஆனால் நாணல் சாயாமல் நிலைத்து நின்றது. நீங்கள் நாணலைப்போல் வளைந்து கொடுத்து எல்லாவகையிலும் ஸ்திரமாக நிமிர்ந்து நிற்பீர்கள். இது கடக ராசிக்கும் கடக லக்னத்திற்கும் பொருந்தும். 11-ஆமிடத்து ராகுவும் 10-ஆமிடத்துச் செவ்வா யும் தொழில் துறையில் புதிய முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் தரும். 6-க்குடைய குருவும் 7-க்குடைய சனியும் பரிவர்த்தனை என்பதால், கடன்கள் இருந்தாலும் அடைபடு மளவு வருமானம் பெருகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் கேந்திரபலம் பெறுகிறார். அவருக்கு 9-ல் உள்ள செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. சூரியனின் உச்ச ராசிநாதன் செவ்வாய். (மேஷம்.) எனவே பதவி, தொழில், வாழ்க்கை, வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். 10-ல் உள்ள ராகு, ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பை ஏற்படுத் தும். குறிப்பாக ராகுதசை, ராகுபுக்தி நடப்ப வர்களுக்கு இது சாத்தியப்படும். 9-ல் செவ்வாய் ஆட்சி என்பதால், பூர்வபுண்ணிய பிதுரார் ஜித சொத்து வகையிலுள்ள பிரச்சினைகளும் சிக்கல்களும் விலகும். குலதெய்வ, இஷ்டதெய்வ வழிபாடு அனுகூலமாக அமையும். அது சம்பந்தமான பூஜை கைங்கரியங்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். நிதி வசூல்செய்து கொடுக்கலாம். குரு, சனி பரிவர்த்தனை யோகத்தால் வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் அமையும். கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் என்னும் ஊரில் தத்தாத்ரேயர் கோவில் உள்ளது. டிசம்பர் இறுதியில் 31-12-2020 அன்று தத்த ஜெயந்தி (தொட்டில் உற்சவம்) நடைபெறும். அங்குசென்று வழிபட்டால் வாரிசு யோகம் அமையும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 4-ல் கேந்திரபலம் பெறுகிறார். அவருடன் இணைந்த சனி ராசியைப் பார்க்கிறார். சனி 5, 6-க் குடையவர். வாரிசு இருப்ப வர்களுக்கு பிள்ளைகள்வகையில் நல்ல செலவுகள் உண்டாகும். வாரிசு இல்லாதவர் களுக்கு வாரிசு யோகமும் ஏற்படும். சிலர் வாரிசுகளின் சுபமங்கள செலவுக்குக் கடன் வாங்கவும் நேரும். கன்னி ராசிக்கு 8-ல் உள்ள செவ்வாய் சிலருக்கு இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தலாம். வீடு, பதவி, தொழில், உத்தியோகம் இவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அது முன்னேற்றமான மாற்றமாக அமையும். பூமி, வீடு, வாகனவகையில் உங்கள் கனவுத் திட்டங்கள் நிறைவேறும். அதற்காக வாங்கும் கடன் சுபக்கடனாக அமையும். எவ்வளவு கடனும் எளிய தவணையாக அடைபடும். குரு, சனி பார்வை ராசிக்கு ஏற்படுவதே மேற்கண்ட யோகங்களுக்குக் காரணம். சகோதரவகை சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும். ஒற்றுமையும் நல்லுற வும் மலரும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் செயல்படும். உங்கள் முயற்சிகள் யாவும் பலன்தரும். முன்னேற்றமடையும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். கூட்டு சேர்ந்து அரசு கான்ட்ராக்ட் ஒப்பந்தங்கள் செய்து லாபமடையலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் பலம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 7-ல் ஆட்சிபலம் பெற்று ராசியைப் பார்க்கி றார். திருமணத்தடை விலகும். ஏற்கெனவே விவாகரத்தானவர்கள் அல்லது களஸ்திர தோஷ மடைந்தவர்களுக்கு மறுமணம் கூடிவரும். அந்த முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டால், காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்தால் தடைகள் விடு படும். மறுமண யோகத்திற்கு புனர்விவாக மந்திரஜபம் செய்து ஹோமம் செய்யலாம். ஏழரைச்சனியில் பிரிந்திருந்த குடும்பம் இக்காலகட்டத்தில் ஒன்றுசேரும். ஸ்ரீராமபிரானும் சீதையும் 14 ஆண்டுகள் பிரிந்திருந்தனர். அவர்கள் ஒன்றுகூடியதுபோல பல ஆண்டுகள் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள். 4-ல் உள்ள புதனும் சனியும் பிதுரார்ஜித பூர்வீக சொத்துவகையில் நிலவிய பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும் நல்ல தீர்வை உருவாக்குவார்கள். பங்காளிப் பிரச்சினைகள் தீர்ந்து, உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பங்கு பாகங்கள் முறையாகக் கிடைக்கும். அது சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகும். 8-ல் உள்ள ராகு சிலருக்கு இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தும். அந்தப் பெயர்ச்சி வளர்ச்சியான பெயர்ச்சி யாக அமையும். சிலருக்குக் குடியிருப்பு மாற்றம், சிலருக்குப் பதவி மாற்றம் அல்லது தொழில் மாற்றம், சிலருக்கு ஊர்மாற்றம் போன்ற மாற்றங்களை சந்திக்க நேரலாம். பொருளா தாரம், ஆரோக்கியத்தில் பாதிப்புக்கு இடமில்லை.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு தற்போது நடக்கும் ஏழரைச்சனி இம்மாதம் 26-ஆம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் முன்னேற் றமாக இருக்கும். முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி மூன்றாம் சுற்று மரணச்சனி என்று ஜோதிடவிதி உண்டு. உங்கள் கிரக அமைப்புக்கு எந்த சுற்றாக இருந்தாலும் அந்த ஏழரைச்சனி சோதனையும் வேதனையுமாகத்தான் அமைந்துவிட்டது. இனிமேல் சனிப் பெயர்ச்சிக்குப்பிறகு உங்கள் கிரக அமைப்புக்கு எல்லாமே இனியதாகவும் நல்லதாகவும் அமையும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். நினைத்தவை நிறைவேறும். லட்சியங்கள் பூர்த்தியடையும். "பிருகு சனி பாம்பிரண்டும் பிற்பலன்' என்னும் ஜோதிட விதிப்படி, சனி போகிறபோக்கில் நன்மைகளை வாரிவழங்குவார் என்பது உண்மை. இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்துக் கையேந்தி நின்றவர்கள், இனி சொந்த முயற்சியால் வளர்ச்சியடைந்து எல்லாருக்கும் உதவும் கரங்களாக மாறி பாராட்டு பெறலாம். மன நிம்மதியடையலாம். குரு, சனி பரிவர்த்தனையும் செவ்வாயின் ஆட்சிபலமும் உங்களுக்கு சொல்வாக்கையும் செல்வாக்கையும் ஏற்படுத்தித் தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

டிசம்பர் இறுதியில் ஜென்மச்சனி விலகும். அதன்பிறகு இரண்டரை வருடங்கள் பாதச்சனி நடக்கும். சனி தன் சொந்த வீடான மகரத்தில் ஆட்சி பெறுவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த சுற்றுச் சனியாக இருந்தாலும் அது யோகமான சுற்றாக அமையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதவர் களுக்கு வாரிசு யோகமும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில் யோகமும், சம்பாத்தியம் இல்லாதவர்களுக்கு சம்பாத் திய யோகமும், சொந்தவீடு இல்லாத வர்களுக்கு சொந்தவீட்டு யோகமும் வாகன யோகமும் உண்டாகும் என்று எதிர்பார்க்கலாம். மேற்படி காரணங் களுக்காக சுபக்கடன் வாங்கலாம். ஒருசிலர் பழைய கடன்களை அடைத்துவிட்டுப் புதிய திட்டங்களுக்காக புதுக்கடன் வாங்கலாம். வசதிபடைத்த பெரியவர்கள் சொத்து சுகங்களைப் பிள்ளைகள், பேரன், பேத்திகளுக்கு எழுதிவைப்பார்கள். தேக ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் பாதிப்புக்கு இடமில்லை. கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள் என்பதுபோல, உங்களுக்கு எண்ணிக்கையில்லாத ஆசை களும் திட்டங்களும் உருவாகும். அது நிறைவேறுமா நிறைவேறாதா என்ற குழப்பம் உருவாகலாம். எல்லாம் ஈசன் செயலென்று சமாதானமடைந்து விடுவீர்கள்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி குரு வீட்டிலும், குரு சனி வீட்டிலும் பரிவர்த்தனை. பரிவர்த்தனை யோகமென்பது அவரவர் தங்கள் சொந்த வீட்டில் ஆட்சியாக இருப்பதற்கு சமம். எனவே உங்களுடைய மதிப்பு, மரியாதை, கௌரவம், திறமை ஆகியவற்றுக்கு எந்தக் குறையும் ஏற்படாது; கேடு கெடுதியும் வராது. 4-ல் செவ்வாய் ஆட்சிபெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், நெருப்பு சம்பந்தமான தொழில் அல்லது பூமி, மனை, ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஏற்றமும் லாபமும் பெருகும் காலம். ஒருசிலர் சொத்துப் பரிவர்த்தனை செய்வார்கள். அதாவது ஒரு சொத்தைக் கொடுத்து விட்டு வேறொரு புது சொத்து வாங்கலாம். அல்லது ஒரு வீட்டைக் கொடுத்துவிட்டு வேறொரு புதிய வீடு வாங்கலாம். அல்லது பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புது வாகனம் வாங்கலாம். பெண்கள் பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை. அதேபோல அரசுப் பணியில் இருப்போருக்கு டெபுடேஷன் என்று சொல்வதுபோல பதவி மாற்றம் ஏற்படலாம். எந்த மாற்றமாக அமைந்தாலும் அது மனநிறைவான மாற்றமாக அமையுமென்று எதிர்பார்க்கலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று தன் ராசியைப் பார்க்கிறார். குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம். 11, 12-க்குடைய வர்களின் பரிவர்த்தனை. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்பதுபோல வீடு, மனை, கட்டடம், தொழில் எல்லாவற்றிலும் பல சீர்திருத்தங்களைச் செய்வீர்கள். ஒருசிலர் சென்டிமென்ட் ராசி பார்த்து மாற்றங்களைச் செய்வார்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக உள்ளவர்களுக்கு எல்லா மாற்றங்களும் யோகமாக அமையும். இல்லையென்றால் ஏமாற்றமாக அமைந்து விடும். அது அவரவர் சுயஜாதக அமைப்பை பொருத்த விஷயம். 4-ல் உள்ள ராகு பூமி, வீடு சம்பந்தமான பிரச்சினைகளை உருவாக்கினா லும், பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி என்பதா லும் ராகுவை குரு பார்ப்பதாலும் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். மூன்றாம் இடத்துச் செவ்வாய் பங்காளி வகையிலும் உடன்பிறப்புகள் வகையிலும் நிலவிய சஞ்சலங்களையும் சங்கடங்களையும் நிவர்த்திசெய்து அனுகூலமான பலனைத் தருவார். ராகு தசை, ராகு புக்தி நடப்பவர் களுக்கு அல்லது ராகு சாரம் பெற்றுள்ள தசாபுக்தி நடப்பவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கலாம். அல்லது தாயாருக்கு ஆரோக் கிய பாதிப்பு உருவாகலாம். தேவையான பரிகாரங்களைச் செய்துகொண்டு தெளிவு பெறலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீசமாக இருந்தாலும், குருவும் சனியும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். அதனால் மலைபோல வரும் துன்பங்கள் பனிபோல விலகிவிடும். குலதெய்வ வழிபாடும் இஷ்டதெய்வ வழிபாடும் உங்களுக்கு பக்கபலமாக இருந்து வழிநடத்தும். பொருளாதாரத்தில் பாதிப்புக்கும் பற்றாக்குறைக்கும் இட மில்லை. எனினும் பலநேரங்களில் அளந்து படிபோட்டமாதிரி செயல்படும். எப்படியோ தேவைகள் பூர்த்தியடையும். தக்கசமயத்தில் உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். அதைவைத்து தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். பதவி, வாழ்க்கை, தொழில், உத்தியோகம், வேலை எல்லாவற்றிலும் வழக்கம்போல செயல்பட்டாலும் குரு, சனி பரிவர்த்தனை சிலசமயத்தில் மனத் திருப்தி இல்லாத நிலையை உருவாக்கலாம். காரணம் புரியாத கவலை உருவாகலாம். தவிர்க்கமுடியாத பயணங்களும் அதனால் செலவுகளும் ஏற்படலாம். செலவைக் கண்டு மலைத்து நிற்கும்போது எதிர்பாராத வகையில் வருமானம் வந்து அதை சரிக்கட்டும். அது உங்களுக்குப் பெரும் ஆறுதலாக அமையும். 9-ஆம் இடத்து ராகு உடன்பிறப்புகள் வகையில் ஏமாற்றத் தையும் விரக்தியையும் ஏற்படுத்தினாலும், குரு பார்ப்பதால், "நீரடித்து நீர் விலகாது; குற்றம் பார்க்கில் சுற்றமில்லை' என்ற அடிப்படையில் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். அதேபோல "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்ற பழமொழிப்படி உடன்பிறந்தோரிடமும் பெருந்தன்மையாக நடந்துகொள்வது அவசியம்.

bala181220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe