ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.
செவ்வாய்: உத்திரம்- 3, 4.
புதன்: அஸ்தம்- 2, 3.
குரு: அவிட்டம்- 3, 2.
சுக்கிரன்: சுவாதி- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 3.
ராகு: ரோகிணி- 1, கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 3, 2.
கிரக மாற்றம்:
13-9-2021- புதன் வக்ர ஆரம்பம்.
14-9-2021- மகர குரு.
17-9-2021 கன்னி சூரியன்.
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
12-9-2021- விருச்சிகம்.
14-9-2021- தனுசு.
16-9-2021- மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் தன் ராசியைப் பார்க்கிறார். (8-ஆம் பார்வை). அவருக்கு வீடு கொடுத்த புதனும் அங்கு ஆட்சியாக இருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த பலன். எனவே செவ்வாய்க்கும் மறைவு தோஷம் பாதிக்காது. 5-க்குடைய சூரியன் 5-ல் ஆட்சி. 7-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சி. 6-க்குடைய புதன் 6-ல் ஆட்சி. 10-க்குடைய சனி 10-ல் ஆட்சி. 5-ஆமிடம் புத்திர ஸ்தானம்; மனது, எண்ணம், திட்டம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானம். 9-ஆமிடம் பூர்வ புண்ணியம், பாக்கியம், தெய்வ உபாசனா ஸ்தானம். 5, 9 திரிகோண ஸ்தானங்கள். ஒரு திரிகோணாதிபதியை இன்னொரு திரிகோணாதிபதி பார்ப்பது ஒரு யோகம். மனிதன் நினைக்கிறான்; இறைவன் நிறைவேற்றுகிறான் என்பதற்கு அடையாளமாகும். உங்களது நியாயமான ஆசை களெல்லாம், நேர்மையான விருப்பங்களெல்லாம் நிறை வேறுவதற்கு இறைவன் துணைபுரிவார். அதாவது நீங்கள் நினைப்பது நிறைவேறும். அதேபோல் உங்கள் விருப்பங்களையும் எண்ணங் களையும் நிறைவேற்ற மனைவியும் மக்களும் துணையாக நிற்பார்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதேபோல நன்மக்கள் அமை வதும் ப்ராப்த பலம். உங்கள் விஷயத்தில் இந்த இரண்டும் அமைவதால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுவதால் மறைவு தோஷமில்லை. அதேசமயம் ஜென்ம ராகுவும் 7-ஆமிடத்துக் கேதுவும் இல்லற வாழ்க்கையில் தொல்லைகளைக் கொடுத்தாலும், நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்வதுபோல- ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். காரணமில்லாமல் காரியமில்லை; காரியமில்லாமல் காரணமில்லை. காரணம், காரியம், கர்த்தா- இந்த மூன்றும் ஒட்டி உறவாடும்! வெட்டி விலகிப்போகாது. இதை ஒரு புலவர் எவ்வாறு வர்ணிக்கிறார் என்றால்- "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்- எவரெவர்க்கு உதவினர் எவரெவர்க்கு உதவிலர்- தவறவர் தம்மை உணர்வதுவே!' என்று பாடினார். கேந்திராதிபதி செவ்வாய் திரிகோணம் ஏறியதால் களஸ்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவை விலகும். "சந்திர காவியம்' என்ற ஜோதிட நூ-ல், "ஐந்து ஒன்பதுக்கதிபர் பாபர் சுபரானாலும் பொன்போன்ற நன்மையை தருவார்' என்று சொல்லப்படுகிறது. கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம்- திரிகோணம் இரண்டுக்கும் தொடர்பிருந்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். இன்னொரு வகையில் கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். திரிகோணம் என்பது இறையருள் கூட்டுவிக்கும் ஜெய ஸ்தானம். ஆகவே உங்கள் நேர்மையான முயற்சிகள் அனைத்தும் திருவருளால் நிறைவேறுவது உறுதி!
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி, உச்சம். நவகிரகங்களில் ராகு- கேதுவுக்கு சொந்தவீடு இல்லை. மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு, நட்பு வீடு, பகை வீடு என்று உண்டு. இதில் புதன் ஒருவருக்கு மட்டும் ஆட்சி வீடு, உச்ச வீடு ஒரே வீடு- அது கன்னியாகும். அதனால்தான் ஜோதிடத்தில் "பாடப் படிக்க பரதவியம் கற்க தேட சுகிக்க செலவழிக்க கற்கடகம் சிம்மம் கன்னிக்கல்லாது மற்கிடமேது' என்று பாடியுள்ளார்கள். மிதுன ராசிக்கு 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். மேலும் ராசியை 9-ஆமிடத்து குரு பார்ப்பதும் ஒரு யோகமாகும். ஆகவே குருவருளும் திருவருளும் உங்களை பரிபூரணமாக வழிநடத்தும். இந்த உலகத்தில் எதையாவது சாதிக்கவேண்டும் என்றால் ஒன்று பணபலம் வேண்டும். அல்லது படைபலம் வேண்டும். இரண்டும் இல்லா விட்டால் தெய்வபலம் வேண்டும். ஐம்பெரும் சக்திகள் என்று சொல்லப் படுபவை- மக்கள் சக்தி, அரசு சக்தி, தொண்டர் சக்தி! செல்வர் சக்தி, தெய்வ சக்தி! மனிதமுயற்சி வெற்றிபெற இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று வேண்டும். ஒரு சிலருக்கு இந்த ஐந்தும் துணையாக நிற்கும். அவர்கள்தான் வெற்றிபெறும் சாதனையாளர்கள். அந்த சாதனையாளர் பட்டிய-ல் மிதுன ராசிக்காரர்களாகிய நீங்களும் இடம்பெற 9-ஆமிடத்து குரு அருள்புரிவார்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு குரு 8-ல் மறைவது ஒருவகையில் குற்றம் என்றாலும், 6-க்குடைய குரு 8-ல் மறைவது யோகமாகும். 5-ம், 9-ம் திரிகோண ஸ்தானம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம். திரிகோண ஸ்தானம் என்பது தெய்வானுகூல ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி என்னும் ஜெயஸ்தானம். அதை தெய்வப் புலவர் திருவள்ளுவர், "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூ-தரும்' என்று நயம்படக் கூறுவார். அரச போகத்தில் திளைத்த கௌசிக மன்னன், வசிஷ்டர் வளர்த்த காமதேனுப் பசுவைக் கவர முடியவில்லை என்பதற்காக தவவாழ்க்கை மேற்கொண்டு விசுவாமித்திரராக சித்தி பெற்றார். தன் தவ வ-மை யால் திரிசங்கு மன்னனுக்காக தனி சொர்க்க லோகத்தையே உருவாக்கி னார். ஒவ்வொரு தெய்வ மந்திரத்திற்கும் ரிஷி- சந்தஸ்- காயத்ரி என்ற மூன்று உண்டு. பூணூல் அணியும் எல்லாரும் ஜபிக்கும் காயத்ரி மந்திரத்திற்கு விசுவாமித்திரரே ரிஷியாவார். அவர் தன் உடலையே (காயம்) திரியாக்சி தகனமாக எரித்துக் கண்டுபிடித்த மந்திரம்தான்ன காயத்ரி மந்திரம். ஒரு ஷத்ரியன் பூணூல் அணிபவர்கள் அனைவருக்கும் ரிஷியாக மாறினார் என்றால் அதுதான் அவர் செய்த தவப் பயன். அதாவது சாதனையும் வைராக்கியமும் உடையவர் களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 5-க்குடைய குரு 7-ல் அமர்ந்து அவரைப் பார்க்கிறார். 5-ஆமிடம் திரிகோண ஸ்தானம்; 7-ஆமிடம் கேந்திர ஸ்தானம். திரிகோணமும் கேந்திரமும் இணைவதால் லட்சுமி கடாட்சமும் விஷ்ணு கடாட்சமும் பெருகும் என்று அர்த்தம். இன்னொருவகையில் விஷ்ணுவின் மார்பிலேயே லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். ஒருசமயம் துர்வாச முனிவர், விஷ்ணுவை மார்பில் எட்டி உதைத்துவிட்டாராம். அதனால் லட்சுமி விஷ்ணுவைவிட்டு விலகிவிட்டாராம். ஆனால் விஷ்ணு துர்வாச முனிவருக்கு பாதபூஜை செய்து அவர் கா-லுள்ள அகந்தைக் கண்ணை நசுக்கி அழித்துவிட்டா ராம். அதன் பிறகுதான் முனிவர் லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாராம். ஒவ்வொரு மனிதனுக்கும் அகந்தை என்பது உண்டாகும். அது அவனுடைய அழிவிற்குக் காரணமாக அமைந்துவிடும். பைபிளில் ஒரு வாசகம் உண்டு. "எவன் ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறானோ அவன் இறைவன் சந்நிதியில் உயர்த்தப்படுகி றான்' என்று சொல்லப்படுவதுண்டு. அதைத் தான் பெரியவர்கள் "பணிவு உயர்வு தரும்' என்றார்கள். பதவியிலும் பணிவு, செல்வத்திலும் தர்மம், கோபத்திலும் பொறுமை, வறுமையிலும் நேர்மை என்று சொல்லப்படும் இவை எல்லாம் மனித வாழ்க்கையின் உயர்வுக்கும் வெற்றிக்கும் உரிய மார்க்கமாகும். ராசிநாதன் சூரியனை குரு பார்ப்பதால் இந்த உயர்ந்த பண்புகள் எல்லாம் இயற்கையாகவே உங்களை வந்துசேரும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். 2-ல் சுக்கிரன் ஆட்சி. 5-ல் சனி ஆட்சி. 12-ல் சூரியன் ஆட்சி. 3, 8-க்குடைய செவ்வாய் கன்னியில் இருப்பதாலும், 3-ல் கேது இருப்பதாலும், குரு 6-ல் மறைவதாலும் சிலசமயம் உங்களை அறியாமலேயே அதர்ம வழிக்கு காலம் உங்களை அழைத்துச் செல்லும். அதில் சிக்கிவிடாமலும் அகப் பட்டுக் கொள்ளாமலும் தர்மம் தவறாமல் செயல்படவேண்டும். அதற்கு நல்லோர் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் சத்சங்கம். 5-ல் உள்ள சனி எது தர்மம்- எது அதர்மம், எது நல்லது- எது கெட்டது, எது நியாயம்- எது அநியாயம் என்பதை உணரவிடாமல் தடுக்கப் பார்க்கும். அதாவது போதை மயக்கத்தில் உள்ளவனுக்கு உண்மைநிலை புலப்படாதது போல! அதில் தெளிவுபெற்று சிந்தித்து செயல்பட்டால் பழிபாவத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பிக்கலாம். உலகத்தில் நல்லது- கெட்டது என்று எல்லாவற்றிலும் உண்டு. எல்லாரும் கனியிருக்க காயைச் சாப்பிடுவது போல, நல்லதை விட்டுவிட்டு கெட்டதையே நாடுகிறார்கள். சத்சங்கத்தின் உதவியிருந்தால் கெட்டதைவிட்டு நல்லதைக் கைக்கொள்ள லாம். ஜாதகத்தில் 6, 8, 12-க்குடைய தசா புக்திகள் நடந்தால் கெட்டவை உங்களை வந்தடையும். 5, 9-க்குடைய திரிகோணாதி பதிகளின் பலமிருந்தால் அதி-ருந்து விடுபட்டு மேன்மை பெறாலம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். 11-ல் சூரியன் ஆட்சி. 4-க்குடைய சனி 4-ல் ஆட்சி. 12-ல் புதன் ஆட்சி. 4-ஆமிடம் வீடு. மனை, கல்வி, வாகன ஸ்தானம். இவற்றில் குறையேதுமில்லை. தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஏனென்றால் துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனி- அதாவது கேந்திராதிபதியும் அவர்தான்; திரிகோணாதிபதியும் அவர்தான். 4-ஆமிடத்தைக் கெடுக்கமாட்டார் என்று நம்பலாம். 5-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே, உங்களை ஏளனமாக நினைத்த வர்களுக்கு உங்களைப் பற்றி அறியும்படி செயல்படுவீர்கள். விட்டு விலகிப்போனவர்கள் மீண்டும் ஒட்டிவந்து உறவாடலாம். 12-ல் புதன் ஆட்சி என்பதால் விரயம், அலைச்சல், ஏமாற்றத்தைத் தவிர்க்கமுடியாது. நீங்கள் யாரை நல்லவர் என்று நம்பினீர்களோ அவர்களே உங்களை ஏமாற்றுவது உங்களுக்கு வருத்தத்தைத் தரும். நீங்கள்தான் தரம்பிரித்து உணர்ந்து பழகவேண்டும். சகோதரவழியில் சில சங்கடங்கள் வந்துவிலகும். 11-ல் உள்ள சூரியன் அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சில நன்மையான பலன்களைத் தருவார். 7-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவு. மனைவிவகையில் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். என்றாலும் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமையும் பாதிக்காது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருக்கிறார். அவருடன் 11-க்குடைய புதன் ஆட்சி, உச்சம். எனவே, நீங்கள் தொட்ட காரியம் வெற்றியாகும். வியாபாரம் தொழில் இவற்றில் மேன்மையான பலன்கள் உண்டாகும். 2-க்குடைய குரு 4-ல் கேந்திரம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப்படாது; தொடர்ந்து செயல்படும். கூட்டாளிகளுக்கோ முதலீட்டிற்கோ எதிர்பார்த்துக் காத்திருந்த வர்களுக்கு, நண்பர்கள் வகையிலோ அல்லது உறவினர்கள் வகையிலோ கூட்டு முயற்சிகள் வெற்றியாகும். 12-ல் சுக்கிரன் ஆட்சி என்பதாலும் 12-ஆமிடத்தை குரு பார்ப்பதாலும் சில விஷயங்களில் விரயம் என்பது தவிர்க்க முடியாதவையாக அமையும். என்றாலும் அது வீண் விரயமாகாமல் முதலீட் டிற்காகவோ அல்லது வாகனத் தேவைக்கா கவோ அல்லது குடியிருப்பிற்காகவோ ஏற்படலாம். ஜென்ம கேது- சப்தம ராகு குடும்பத்தில் சில அலைக்கழிப்புகளை உண்டாக்கலாம். சிலர் தாமதத் திருமணம், தாமத வாரிசு போன்றவற்றை சந்திக்க நேரும். எனினும் 3-ல் உள்ள சனி எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் ஆற்றலையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. சகோதரவழி சங்கடங்கள் நீங்கும். சிலருக்கு மனைவிவழியில் ஆதாயம், ஆதரவு உண்டாகலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
ராசிநாதன் குருவும் வக்ரம். அவர் நின்ற வீட்டின் ராசியாதிபதியான சனியும் வக்ரம். இருவரும் வக்ரம் என்பதால் வக்ரத்தில் உக்ரபலம் என்பது பொருந்தும். குரு 1, 4-க்குடையவர். சனி 2, 3-க்குடையவர். 1-ஆமிடம் செல்வாக்கு, செயல்திறன், கௌரவம், திறமை, இவற்றைக் குறிக்குமிடம். இவையெல்லாம் இயற்கையாகவே உங்களை இயக்கும் என்பது தெளிவு. அத்துடன் 3-ஆமிடம் சகோதர, தைரிய, சகாய ஸ்தானம். உடன்பிறப்புகள் வகையில் பாசமும் பரிவும் ஒற்றுமையும் எதிர்பார்க்கலாம். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடும் தைரியத்தோடும் செயல் படுத்தலாம். நண்பர்களிடத்தில் நன்மதிப்பும் எதிர்பார்க்கலாம். குரு அந்தண கிரகம் என்பதால் பிராமணர் அல்லது பூணூல் அணிகிறவர்களின் ஆதரவும் உதவியும் எதிர்பார்க்கலாம். 9-ல் சூரியன் ஆட்சி. அவருக்கு புத்திரகாரகன் குரு பார்வை. தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் சிந்தை மகிழும் நல்லுறவு சிறக்கும். குரு தாய் ஸ்தானத்திற்கு அதிபதி. தாயன்பும் நேசமும் பாசமும் பலமடையும். வறட்டு கௌரவமும் வம்பு தும்பும் நீங்கும். இதுவரை காணாதபோது பாசமும் நேரில் கண்டபோது ரோஷமும் இருந்த நிலை மாறிவிடும். தேக ஆரோக்கியம் பொருளாதாரம், பதவி, உத்தியோகம், தொழில்துறையில் குறையேதுமில்லை.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கி றார். அவருக்கு சாரம் கொடுத்த சூரியன் அவருக்கு 8-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். சூரியனை குரு பார்க்கிறார். எனவே, "குறையொன்மில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி பாதிப்பும் இழப்பும் ஏதும் இல்லையென்றாலும் ஏதோ ஒரு விரக்தி, எதுவுமே நிறைவேறாத மாதிரி ஒரு கவலை இருக்கும். அது கற்பனைக் கவலைதான். அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்தால் அதை அடியோடு அகற்றிவிடலாம். கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் என்று சொல்லுவார்கள். அதன் உள் அர்த்தம் புரிந்து செயல்பட்டால் குறைகள் நிறைகளாகும். மனம் போல் மாங்கல்யம் என்பார்கள். ஆகவே, குறைகள் வெளியில் இல்லை; உள்மனதில்தான் இருக்கிறது. அதை நீங்கள்தான் உணர்ந்து விலக்கவேண்டும். தனகாரகன் குரு தன ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் ஏக்கமில்லை; தேக்கமில்லை. தேவைகளுக்கேற்ற சமயம் பொருளாதாரம் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியடையும். 10-ல் சுக்கிரன் ஆட்சியென்பதால் பதவி, உத்தியோகம், தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் குறை இருக்காது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைவு. 5-க்குடைய புதன் 8-ல் மறைவு. அவருடன் 3, 10-க்குடைய செவ்வாயும் மறைவு. சிலருக்கு உடன்பிறந்தவர்கள் வகையில் வருத்தம் ஏற்படலாம். சிலருக்கு பிள்ளைகள்வகையில் வருத்தம் ஏற்படலாம். சிலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் வருத்தம் ஏற்படலாம். 4-ல் ராகு நின்றாலும் 4-க்குடைய சுக்கிரன் 9-ல் நிற்பதால் பாதிப்புக்கு இடமில்லை. என்றா லும் தாய்வர்க்கம் அல்லது தன்சுகம் அல்லது பூமி, வீடு, வாகனம் இவற்றில் சிறுசிறு பாதிப்புகள் அவ்வப்போது வந்துவிலகலாம். எந்தக் குறைகளையும் பூதக்கண்ணாடியில் பார்த்து பெரிதாக்கி புலம்பவேண்டாம். நீரில் எழுதிய எழுத்தாக மாறி மறைந்துவிடும். இந்த நேரம் பகவத் கீதையில் கண்ண பரமாத்மா சொன்ன வாசகத்தை நினைவுகூரவேண்டும். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்'. 7-ல் சூரியன்- அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றிச் செய்தி கிடைக்கும். அல்லது வாழ்க்கைத் துணைக்கு மேற்கண்ட சுபச்செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். 6-க்குடைய சூரியன் 6-ல் ஆட்சி பெறுகிறார். அதேபோல 7-க்குடைய புதனும் ஆட்சி. 8-க்குடைய சுக்கிரனும் ஆட்சி. 11-க்குடைய சனியும் ஆட்சி. இத்தனை கிரகங்கள் ஆட்சிபெற்றும் ராசிநாதன் குரு 12-ல் மறைவதால், ஏ.சி., கலர் டி.வி., பிரிட்ஜ் எல்லாம் இருந்தும் கரன்ட் சப்ளை இல்லை என்பதுபோல பயனற்ற நிலையாக இருக்கும். கரண்ட் வராமல் போகாது. சிறு மின்தடைதான். அதுவரை சிரமத்தைத் தாங்கிக்கொள்ளுங்கள். பொதுவாகவே அந்தப் பக்குவம் வந்துவிட்டாலே எந்தத் துன்பமும் துன்பமாகத் தோன்றாது. ஒருசமயம் ஒரு சாபத்தால் நாரதர் ரிஷ்ய சிருங்கராக அவதாரம் எடுத்தார். கிடைக்கும் உணவை அந்தப் பொழுதில் பயன்படுத்திக்கொண்டு, அடுத்த வேளைக்கு சேமித்து வைப்பார். பெண் இனத்தையே பார்க்காத பிறவி. ஒரு கட்டத்தில் வழிதவறி வந்த அரசிளங்குமரியை சந்திக்கிறார். அப்போதுதான் பெண்ணை முதன்முதலாகப் பார்க்கிறார். அவளது மார்பகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "இதுபோல எனக்கில்லையே உனக்கு எப்படி ஏற்பட்டது?' என்று கேட்கிறார். "பெண்ணானவள் தாய்மைப் பேறு அடையும்போது பிறக் கப்போகும் குழந்தைக்கு உணவூட்டும் கருவி' என்கிறாள். அப்போதே அவருக்கு ஞானம் ஏற்பட்டு அடுத்த வேளைக்கு சேமித்து வைத்த உணவைத் தூக்கி எறிகிறார். "குர்-ஆனில் ஒவ்வொரு அரிசியிலும் அதை சாப்பிடுகிறவனின் பெயர் எழுதப்படும்' என்று சொல்லப்படுகிறது.