ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூனர்பூசம்- 2, 3, 4.
செவ்வாய்: ஆயில்யம்- 2, 3, 4.
புதன்: திருவாதிரை- 3, 4.
புனர்பூசம்- 1, 2.
குரு: சதயம்- 1.
சுக்கிரன்: ஆயில்யம்- 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
17-7-2021- கடக சூரியன்
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
12-7-2021- சிம்மம்.
15-7-2021- கன்னி.
17-7-2021- துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார். செவ்வாயின் உச்சநாதன் சனி அவரைப் பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது என்பது நீங்கள் அறிந்த விஷயம்தான். செவ்வாயின் பார்வை 7-ஆமிடம், 10-ஆமிடம், 11-ஆமிடங்களுக்குக் கிடைக்கிறது. நல்ல மனைவி, மக்கள், நல்ல தொழில், நல்ல வருமானம் எல்லாம் நல்லதாகவே அமையும். 9-க்குடைய குரு 11-ல் இருப்பதால் பூர்வபுண்ணிய பாக்கிய ஸ்தானம் மிகச் சிறப்பாக அமையும். அனுகூலமாகவும் அமையும். பெண்கள் ஜாதகமாக இருந்தால் நல்ல கணவன் அமைவார். ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். வீண் கவலைகளும் சஞ்சலங்களும் மறைந்துவிடும். சிக்கனமும் சேமிப்பும் உண்டாகும். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் நற்பெயரும் பாராட்டும் உண்டாகும். ஆண்களுக்கு புதுமுயற்சியும் வெற்றியும் லாபமும் உண்டாகும். உடன்பிறப்புகள் வகையில் சஞ்சலமின்றி சந்தோஷம் பெருகும். ஒருசிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் எதிர்பாராத இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். எதிர்காலத்தைப் பொருத்தவகையில் இனிய திட்டங்கள் உருவாகும். அது செயல்பட மற்றவர்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் சுகமும் பிறக்கும். மனவுறுதியும் தைரியமும் பெருகும். மொத்தத்தில் இந்த வாரம் சத்தான வாரம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கிறார். சந்திரன் வீட்டில் சந்திர னோடு சேர்ந்திருக்கிறார். செவ்வாயும் சம்பந்தம். இவர்களுக்கு சனி பார்வை. எனவே, ஜென்ம ராகு- சப்தம கேதுவினுடைய கெடுபலன்கள் எல்லாம் மாறிவிடும். நெல்-க் காய் உமிழ்நீர் பட்டவுடன் துவர்ப்புச் சுவை மாறி இனிப்புச் சுவையாக மாறுவதுபோல, உங்கள் முயற்சிகள் யாவும் தளர்ச்சியின்றி வளர்ச்சியடையும். ரிஷப ராசிக்கு 12-ல் குருவும் 9-ல் சனியும் இருப்பது மேலும் அதியோகத்தை உண்டாக்கும். சிலருக்கு காலதாமதமான திருமணம் என்றாலும் திருப்தியான மணவாழ்க்கை அமையும். 2-ல் உள்ள சூரியனை 10-ல் உளள குரு பார்ப்பதால், அரசு சம்பந்தப்பட்ட எல்லா முயற்சிகளும் துரிதமாக செயல்படும். பதவியில் இருப்போருக்கு பாராட்டும் முன்னேற்றமும் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் நிலவிய சிக்கல்கள் விலகி எதிர்பார்த்த அளவில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். சிலர் பழையதைக் கொடுத்துப் புதியதை வாங்கலாம். ஒருசிலருக்கு ஊர்மாற்றமும் இடமாற்றமும் முன்னேற்ற கரமாக அமையும். தேக ஆரோ
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூனர்பூசம்- 2, 3, 4.
செவ்வாய்: ஆயில்யம்- 2, 3, 4.
புதன்: திருவாதிரை- 3, 4.
புனர்பூசம்- 1, 2.
குரு: சதயம்- 1.
சுக்கிரன்: ஆயில்யம்- 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
17-7-2021- கடக சூரியன்
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
12-7-2021- சிம்மம்.
15-7-2021- கன்னி.
17-7-2021- துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார். செவ்வாயின் உச்சநாதன் சனி அவரைப் பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது என்பது நீங்கள் அறிந்த விஷயம்தான். செவ்வாயின் பார்வை 7-ஆமிடம், 10-ஆமிடம், 11-ஆமிடங்களுக்குக் கிடைக்கிறது. நல்ல மனைவி, மக்கள், நல்ல தொழில், நல்ல வருமானம் எல்லாம் நல்லதாகவே அமையும். 9-க்குடைய குரு 11-ல் இருப்பதால் பூர்வபுண்ணிய பாக்கிய ஸ்தானம் மிகச் சிறப்பாக அமையும். அனுகூலமாகவும் அமையும். பெண்கள் ஜாதகமாக இருந்தால் நல்ல கணவன் அமைவார். ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். வீண் கவலைகளும் சஞ்சலங்களும் மறைந்துவிடும். சிக்கனமும் சேமிப்பும் உண்டாகும். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் நற்பெயரும் பாராட்டும் உண்டாகும். ஆண்களுக்கு புதுமுயற்சியும் வெற்றியும் லாபமும் உண்டாகும். உடன்பிறப்புகள் வகையில் சஞ்சலமின்றி சந்தோஷம் பெருகும். ஒருசிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் எதிர்பாராத இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். எதிர்காலத்தைப் பொருத்தவகையில் இனிய திட்டங்கள் உருவாகும். அது செயல்பட மற்றவர்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் சுகமும் பிறக்கும். மனவுறுதியும் தைரியமும் பெருகும். மொத்தத்தில் இந்த வாரம் சத்தான வாரம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கிறார். சந்திரன் வீட்டில் சந்திர னோடு சேர்ந்திருக்கிறார். செவ்வாயும் சம்பந்தம். இவர்களுக்கு சனி பார்வை. எனவே, ஜென்ம ராகு- சப்தம கேதுவினுடைய கெடுபலன்கள் எல்லாம் மாறிவிடும். நெல்-க் காய் உமிழ்நீர் பட்டவுடன் துவர்ப்புச் சுவை மாறி இனிப்புச் சுவையாக மாறுவதுபோல, உங்கள் முயற்சிகள் யாவும் தளர்ச்சியின்றி வளர்ச்சியடையும். ரிஷப ராசிக்கு 12-ல் குருவும் 9-ல் சனியும் இருப்பது மேலும் அதியோகத்தை உண்டாக்கும். சிலருக்கு காலதாமதமான திருமணம் என்றாலும் திருப்தியான மணவாழ்க்கை அமையும். 2-ல் உள்ள சூரியனை 10-ல் உளள குரு பார்ப்பதால், அரசு சம்பந்தப்பட்ட எல்லா முயற்சிகளும் துரிதமாக செயல்படும். பதவியில் இருப்போருக்கு பாராட்டும் முன்னேற்றமும் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் நிலவிய சிக்கல்கள் விலகி எதிர்பார்த்த அளவில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். சிலர் பழையதைக் கொடுத்துப் புதியதை வாங்கலாம். ஒருசிலருக்கு ஊர்மாற்றமும் இடமாற்றமும் முன்னேற்ற கரமாக அமையும். தேக ஆரோக்கியத்தில் தெளிவுண் டாகும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். தாராள வரவு- செலவு ஏற்படும். கடன் நிவர்த்தியும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன். புதன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சூரியன் சம்பந்தம். அவர்களுக்கு 9-ல் உள்ள குரு பார்வை. குரு 7, 10-க்குடையவர். அவர் 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். உங்களுடைய நியாயமான கோரிக்கைகளும் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று பாடியமாதிரி எந்தக் குறையுமில்லை. எல்லாம் நிறைவாக ஈடேறும். குருவருளும் திருவருளும் பெருகும். அதனால் வற்றாத செல்வமும் தட்டாத நிலையும் உண்டாகும். அட்டமத்துச் சனியால் ஒருசிலருக்கு ஊர்மாற்றம், இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஏற்படலாம். எந்த மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றம் வரவேற்கத்தக்க தாக அமையும். ஆன்மிகச் சுற்றுலாகவும் தெய்வீக வழிபாடும் திருப்திகரமாக அமையும். 12-ல் உள்ள ராகு ஒரு சிலருக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பை உருவாக்கும். அது ஜா- டூராகவும் இருக்கலாம் அல்லது பிஸினஸ் டூராகவும் அமையலாம். நீண்டகாலமாக சிக்க-ல் இருந்த சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக தீர்வாகும். சிலர் புதிய பொருட்கள் வாங்கலாம் அல்லது சீர்திருத்தம் செய்யலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும், 12-ஆமிடம், 4-ஆமிடங்களைப் பார்க்கிறார். 12- அயன சயன சுகபோக ஸ்தானம்; விரய ஸ்தானம். 2-ஆமிடம் குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம். 4-ஆமிடம், பூமி, வீடு, வாகனம், சுக ஸ்தானம். மேற்கண்ட எல்லா இடங்களைப் பொருத்த பலன்கள் யாவும் இனிய பலனாக அமையும். விரயம் என்பதும் சுபவிரயம், மங்கள விரயமாக அமையும். சிலருக்கு லாப விரயமாகவும் அமையும். வாராது என்று நினைத்திருந்த- கொடுத்திருந்த பணமெல்லாம் வசூலாகிவிடும்.தேடிக் கொண்டு வந்து தருவார்கள். சிறுசேமிப்பும் சிலருக்கு பெரும் சேமிப்பாக அமையும். பலன்தரும். பெற்றோர் உறவும் மற் றோர் உதவியும் உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும். புது முயற்சிகள் முழு வடிவில் பலன்தரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம், ஆதாயம் எதிர்பார்க்கலாம். குடும்ப உறவில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். தாராள பணப்புழக்கமும் வரவு- செலவுகளும் நடப்பதால் ஏராளமான காரியங்களை சாதிக்கலாம். மனைவிவகையில் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நலம், பொருளாதார உதவி, வளம் எல்லாம் அமையும். தனவரவும் தொழில் முயற்சிகளும் கைகூடும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் அவருடன் சேர்ந்திருக்கிறார். அவர்களை 7-ல் உள்ள குரு பார்க்கிறார். குரு 5, 8-க்குடையவர். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழு அளவில் வெற்றியடையும். சிலர் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அல்லது சுமாரான வேலையில் இருப்போர் நல்ல வேலைக்கு மாறிப்போகலாம். 4-ல் கேது, 10-ல் ராகு இருப்பதால் சிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகும். அல்லது பதவி மாற்றம் எற்படும். அல்லது ஊர்மாற்றம் ஏற்படும். எந்த மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றம் ஆனந்தமான மாற்றமாக மாறும். 6-ல் ஆட்சிபெற்ற சனி சத்ரு ஜெயத்தைக் குறிக்கும். போட்டி பொறாமைகளை எதிர்த்துநின்று வென்று சாதிக்கலாம். சிலருக்கு சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவாரணம், பகை முடிதல் போன்ற 6-ஆமிடத்துப் பலன்கள் எல்லாம் விலகிவிடும். வேறாகி விடும். மேலும் ராசியைப் பார்க்கும் குருவால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு மனைவிவகையில் அனுகூலமும் ஆதாயமும் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் நன்மை உண்டாகும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி பெறுகிறார். அவருடன் 12-க்குடைய சூரியன் சேர்க்கை. அவர்கள் இருவரையும் 6-ல் மறைந்துள்ள குரு பார்க்கிறார். குரு 4, 7-க்குடையவர். 6-ஆமிடம் என்பது எதிரி, கடன் ஸ்தானம். அதனால் தொழில் ரீதியாகவோ, பூமி, இடம், வீடு சம்பந்தமாகவோ அல்லது திருமண சுபகாரியங்களுக்காகவோ கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். அந்தக்கடன் சுபக்கடன், விருத்திக்கடன் என்று எடுத்துக்கொள்ளலாம். நஷ்டக்கடன், விரயக்கடன் என்று எண்ணவேண்டாம். சிலருக்கு குடும்பத்தில் திருமணம், காதணிவிழா, பூப்புனித நீராட்டுவிழா போன்ற சுபமங்கள காரியங்களுக்காகக் கடன் வாங்கலாம். அல்லது பூமி, வீடு, கட்டடம் சம்பந்தபமாகவும் கடன் வாங்கலாம். மொத்தத்தில் இவையெல்லாம் சுபக்கடன்தான். 9-ல் உள்ள ராகு பிதுரார்ஜித வகையில்- முன்னோர் சொத்துகள் வகையில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், 9-க்குடைய சுக்கிரன் 11-ல் இருப்பதால் எல்லாம் அனுகூலமாகவும் சுபமாகவும் அமையும். மேற்படிவகையில் சிலருக்கு கடன் ஏற்படலாம். அல்லது மனைவியின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் செலவு செய்யநேரும். அதற்காகவும் கடன் பெறலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் இருக்கிறார். அவருடன் செவ்வாய், சந்திரன் சம்பந்தம். அவர்களுக்கு சனி பார்வை. பொதுவாக சனி, செவ்வாய் பார்த்துக்கொள்வது நல்லதல்ல- சிறப்பல்ல என்றாலும், மகரச் சனியும் கடகச் செவ்வாயும் பார்த்துக்கொள்வது வித்தியாசமான பலனாக வும், டபுள் நெகட்டிவ்- ஒரு பாஸிட்டிவ் என்ற மாதிரியும் பலன் தரும். எப்படி நெல்-க் கனி சாப்பிட்டபிறகு வாயில் உமிழ்நீர் பட்டவுடன் துவர்ப்புச் சுவை மாறி இனிப்புச் சுவையாக மாறுவதுபோல, உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். 3, 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனியும் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 10-ல் நீசபங்கம் பெற்ற செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். ஆகவே வலுவான எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆளும் கட்சியை எதிர்த்து தேர்த-ல் போட்டியிடடு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பதுபோல! இந்த கூட்டுகிரகங்கள் உங்களுக்கு மாற்றுவழி அமைத்து வெற்றிப் பயணம் போகச் செய்யும். நினைத்ததை சாதிக்கலாம். எண்ணியதை ஈடேற்றலாம். எதிரிகளை முறியக்கலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீச ராசியில் இருந்தாலும், செவ்வாயின் உச்ச ராசிநாதனான சனியின் பார்வையைப் பெறுவது நீசபங்க ராஜயோகமாகும். ஜென்ம கேது, சப்தம ராகு; 10-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. எனவே, வேலை, உத்தியோகம், தொழில் துறையில் பிரச்சினைகளை சந்திக்கலாம். என்றாலும் 2, 5-க்குடைய குரு 4-ல் அமர்ந்து 10-ஆமிடத்தையும், 10-க்குடைய சூரியனையும் பார்ப்பதால் மேற்கண்ட தொழிற்சிக்கல், உத்தியோகப் பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தியாகும். 7-ஆமிடம் கணவன் ஸ்தானம்; மனைவி ஸ்தானம். (ஆண்களுக்கு கணவன் ஸ்தானம்; பெண்களுக்கு மனைவி ஸ்தானம்). அங்கு ராகு- கேது இருப்பதால் திருமணத்தடை, தாமதம் ஏற்படலாம். ஆண்களுக்கு 30 வயதுக்குமேல், பெண்களுக்கு 27 வயதுக்குமேல் திருமணமானால் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும். முன்னதாக அமைந்தால் குழப்பங்களும் பிரச்சினைகளும் கருத்துவேறுபாடுகளும் உருவாகும். அதற்குப் பரிகாரம் காமோகர்ஷண ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். 3-ல் சனி நிற்க, அவரை செவ்வாய் பார்ப்பதால் சகோதரவகையில் அல்லது சகோதரிவகையில் பிரச்சினைகள் உருவாகலாம். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்பதே பரிகாரம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் இருக்கிறார். குருவுக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதால் குருவுக்கு மறைவுதோஷம் விலகுகிறது. சகோதரவழியில் பிரச்சினைகள் தோன்றி மறையும். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். 3-ல் இருக்கும் குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். எனவே திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணம் நடந்தேறும். ஜனன ஜாதகத்தில் 7-ல் ராகு அல்லது கேது, சனி தோஷமிருந்தால் தாமதத் திருமணத்தை சந்திக்கநேரும். திருமணமான கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் பெருகும். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு 9-க்குடைய சூரியனையும் (மிதுனத்தில் இருக்கும் சூரியன்) பார்க்கிறார். தகப்பனாரால் ஏற்பட்ட மனவருத்தம் தீரும். பிள்ளைகள்- பெற்றோர் களுக்கிடையே நடக்கும் பனிப்போர் விலகி சமாதான சூழ்நிலைகள் அமையும். குலதெய்வ வழிபாடு பற்றிய தகவல்கள் தென்படும். தொழில்துறை அல்லது வேலை ஆகியவற்றில் சுறுசுறுப்பும் விறுவிறுப்பம் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத நல்ல சந்திப்பு நிகழும். தனியார்துறையில் பணிபுரிவோருக்கு பாராட்டும் தக்க சன்மானமும் எதிர்பார்க்கலாம். பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. தேவையற்ற அலைச்சலைக் குறைப்பது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சி. மகர ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடந்தாலும், சனி ராசிநாதன் என்பதால் பாதிப்புகள் பெரிதளவில் இருக்காது. நினைத்த காரியத்தை செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். 3-ஆமிடத்தை ராசிநாதன் பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். சுயநம்பிக்கை உண்டாகும். உங்களை ஏளனமாக நினைத்தவர்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கூடும். செயல்திறன் அதிகரிக்கும். 12-க்குடைய குரு 2-ல் இருப்பதால் ஒருபுறம் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் தனவரவும் ஏற்படுவதால் அலைச்சலைப் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. வியாபாரத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகலாம். 7-ஆமிடத்தை ராசிநாதன் பார்க்கிறார். அங்கு செவ்வாயும் சுக்கிரனும் அமர்ந்திருக்கி றார்கள். சிலருக்கு தாமதத் திருமணத்தைக் குறிக்கும். கணவன்- மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசுவதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 5-ஆமிடத்து ராகு உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் சிலசில சந்தேகங்களையும் வீண் கற்பனை பயத்தையும் ஏற்படுத்தினாலும் முடிவில் நற்பலனையே தரும். பிள்ளைகளாலும் நன்மதிப்பு உண்டாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 12-ல் இருக்கி றார். அவர் 2-ஆமிடம், 6-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவது நல்லதுதான். பொருளாதாரப் பற்றாக்குறை இல்லையென்றாலும் கடன் வாங்கும் அவசியம் குறையாது. சிலர் பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தமாக கடன்படலாம். சிலர் மருத்துவச் செலவுகளுக்காகக் கடன்படலாம். சிலர் சுபநிகழ்வுகளுக்காகக் கடன்படலாம். ஜென்மத்தில் இருக்கும் குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5-ல் சூரியன் இருப்பதால் தாமத வாரிசு ஏற்படலாம். குரு பார்வையால் வாரிசு தோஷம் ஏற்படாது. 5-க்குடைய புதன் 5-ல் ஆட்சி. உங்களின் செயல்பாடு, திட்டங்களுக்கு தாய்மாமன் உதவி பேராதரவாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் கவனம் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க நேரிட்டாலும் ஆதாயமும் ஏற்படலாம். கவலை வேண்டாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கணவர்கள் பெண்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளை ஆதரிப்பார்கள். இதனால் கணவன்- மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றிபெறும். முதலாளிகளுக்கு திறமை யான பணியாட்கள் அமைவார்கள். அரசியல் வாதிகளுக்கு தொட்டது துலங்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு 12-ல் குரு அமர்ந்திருக்கிறார். குரு 1, 10-க்குடையவர். அவர் 12-ல் இருப்பதால் தொழில்துறையில் முக்கிய முடிவுகள் எடுப்பதுடன், புதிய முயற்சிகளை மேற்கொள்வதன்மூலம் சில விரயங்களை ஏற்படுத்தலாம். அது ஆதாயமான விரயமாக அமையும். 3-ல் உள்ள ராகு அதற்குண்டான தைரியம், தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார். 2-க்குடைய செவ்வாய் 5-ல் நீசபங்கம் பெற்று ராசிநாதன் குருவைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் வீழ்ச்சிக்கு இடமில்லை. பங்குதாரர்கள்மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணியாளர்கள் கூடுதலாக பணியை முடித்துத்தர வேண்டியதிருக்கும். குரு 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். தேகநலம், தாயார் சுகம் நன்றாக இருக்கும். சிலர், பூமி, வீடு மனை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் இறங்கலாம். அதற்குண்டான வங்கி அல்லது தனியார் கடன் அமைந்து மேற்கண்ட பலனில் சுபச் செய்திகளைத் தரும். 8-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதால், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதுபோல் திடீர் முன்னேற்றம், லாபகரம் போன்றவை ஏற்படலாம். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநில வேலை முயற்சிகளில் இறங்கலாம். அது பலன் தரும். பணிகளில் குறுக்கீடு வந்தாலும் சாமர்த்தியமாக சமாளிக்கலாம்.