இந்த வார ராசிபலன் 11-10-2020 முதல் 17-10-2020 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-11-10-2020-17-10-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 1, 2, 3.

செவ்வாய்: அஸ்வினி- 2, 1.

புதன்: சித்திரை- 2, 1, அஸ்தம்- 4.

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: பூரம்- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 4.

கேது: கேட்டை- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

புதன் வக்ரம், அஸ்தமனம்.

17-10-2020- துலா சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

12-10-2020- சிம்மம்.

14-10-2020- கன்னி.

16-10-2020- துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். வக்ரமாகவும் இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். அதாவது, வக்ரமாக இருக்கும் ஒரு கிரகம் கெட்ட இடத்திலிருந்தால் கெட்டதை ஆணித்தரமாக- வலுவாகச்செய்யும். அதேபோல, நல்ல இடத்தில் வக்ரமடையும் ஒரு கிரகம் நல்லதை மிகமிக வலுவாகச் செய்யும். இதுதான் வக்ரத்தில் உக்ரபலம் என்பதன் அர்த்தம். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் வக்ரம், ஆட்சி என்பதால், உங்கள் திறமையும் செயல்பாடுகளும் நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாமல் சல்லென்று பயணிப்பதுபோல விளங்கும். நினைத் தவை நிறைவேறும். கருதியது கைகூடும். எண்ணியது ஈடேறும். தேர்தலில் எதிர்ப்பே இல்லாது ஒருமனதான வெற்றியடைவதுபோல, உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிவந்து குவியும். ஆறில் சூரியன்- புதன் இருந்தாலும், அவர் களை சனி பார்ப்பதால் (சனி 11-க்குரியவர்) எளிதாக வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கலாம். மேலும், 9-ல் ஆட்சிபெற்ற குரு 10-க்குரிய சனியுடன் சேர்ந்து உங்கள் ராசியையும் ராசிநாதனையும் பார்ப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால், முதலில் குறிப்பிட்டதுபோல எதிரியும் எதிர்ப்பும் இல்லாத வெற்றி எளிதாகும். ஆயுள், ஆரோக்கியம், பொருளாதாரம் எல்லாவற்றிலும் சிறப்பாகத் திகழும்.

பரிகாரம்: 2-ல் உள்ள ராகு, 8-ல் உள்ள கேதுவுக்குப் பரிகாரமாக ராகுகால பூஜை, எமகண்ட நேர பூஜை விநாயகருக்குச் செய்வது உத்தமம்.

dd

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ஜென்ம ராகு நிற்க, 7-ல் உள்ள கேது அவரைப் பார்க்கிறார். 8-ல் குருவும் சனியும் மறைகிறார்கள். சனி மறைந்தாலும் 10-க்குரியவர் 10-ஆமிடத்தை 3-ஆம் பார்வை பார்க்கிறார். ராசிநாதன் சுக்கிரனும் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே, உங்களுடைய வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் குறையேதுமிருக்காது. குறுக்கீடுகளும் தடைகளும் இடையூறுகளும் ஏற்பட்டாலும் அவற்றை எளிதாகக் கடந்து முன்னேறலாம். தொய்வுக்கு இடமிருந்தாலும் தோல்விக்கு இடமிருக்காது. 12-ல் செவ்வாய் ஆட்சி. அவரை அட்டமாதிபதி குரு பார்க்கிறார். சிலர் பத்துக் கடை ஏறி இறங்கி பேரம்பேசி சலுகை விலையில் ஒரு பொருளை வாங்குவார்கள். சிலர் அலைச்சலைத் தவிர்த்து ஒரே கடையில் சொன்ன விலையைக் கொடுத்துவிட்டுப் பொருளை வாங்கிச் செல்வார்கள். இதுபோல, உங்களுடைய வாழ்க்கையில் விரும்பிய பொருளை சொன்ன விலைகொடுத்து வாங்கித் திருப்தி யடையலாம். அதில் நேரம் மிச்சப்படும். மற்றவரோ காசை மிச்சப்படுத்தலாம்; நேரத்தை செலவழிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

பரிகாரம்: 8-ல் மறையும் குரு, சனிக்காக தட்சிணா மூர்த்தியையும், ஆஞ்சனேயரை யும் வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆ

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 1, 2, 3.

செவ்வாய்: அஸ்வினி- 2, 1.

புதன்: சித்திரை- 2, 1, அஸ்தம்- 4.

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: பூரம்- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 4.

கேது: கேட்டை- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

புதன் வக்ரம், அஸ்தமனம்.

17-10-2020- துலா சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

12-10-2020- சிம்மம்.

14-10-2020- கன்னி.

16-10-2020- துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். வக்ரமாகவும் இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். அதாவது, வக்ரமாக இருக்கும் ஒரு கிரகம் கெட்ட இடத்திலிருந்தால் கெட்டதை ஆணித்தரமாக- வலுவாகச்செய்யும். அதேபோல, நல்ல இடத்தில் வக்ரமடையும் ஒரு கிரகம் நல்லதை மிகமிக வலுவாகச் செய்யும். இதுதான் வக்ரத்தில் உக்ரபலம் என்பதன் அர்த்தம். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் வக்ரம், ஆட்சி என்பதால், உங்கள் திறமையும் செயல்பாடுகளும் நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாமல் சல்லென்று பயணிப்பதுபோல விளங்கும். நினைத் தவை நிறைவேறும். கருதியது கைகூடும். எண்ணியது ஈடேறும். தேர்தலில் எதிர்ப்பே இல்லாது ஒருமனதான வெற்றியடைவதுபோல, உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிவந்து குவியும். ஆறில் சூரியன்- புதன் இருந்தாலும், அவர் களை சனி பார்ப்பதால் (சனி 11-க்குரியவர்) எளிதாக வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கலாம். மேலும், 9-ல் ஆட்சிபெற்ற குரு 10-க்குரிய சனியுடன் சேர்ந்து உங்கள் ராசியையும் ராசிநாதனையும் பார்ப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால், முதலில் குறிப்பிட்டதுபோல எதிரியும் எதிர்ப்பும் இல்லாத வெற்றி எளிதாகும். ஆயுள், ஆரோக்கியம், பொருளாதாரம் எல்லாவற்றிலும் சிறப்பாகத் திகழும்.

பரிகாரம்: 2-ல் உள்ள ராகு, 8-ல் உள்ள கேதுவுக்குப் பரிகாரமாக ராகுகால பூஜை, எமகண்ட நேர பூஜை விநாயகருக்குச் செய்வது உத்தமம்.

dd

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ஜென்ம ராகு நிற்க, 7-ல் உள்ள கேது அவரைப் பார்க்கிறார். 8-ல் குருவும் சனியும் மறைகிறார்கள். சனி மறைந்தாலும் 10-க்குரியவர் 10-ஆமிடத்தை 3-ஆம் பார்வை பார்க்கிறார். ராசிநாதன் சுக்கிரனும் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே, உங்களுடைய வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் குறையேதுமிருக்காது. குறுக்கீடுகளும் தடைகளும் இடையூறுகளும் ஏற்பட்டாலும் அவற்றை எளிதாகக் கடந்து முன்னேறலாம். தொய்வுக்கு இடமிருந்தாலும் தோல்விக்கு இடமிருக்காது. 12-ல் செவ்வாய் ஆட்சி. அவரை அட்டமாதிபதி குரு பார்க்கிறார். சிலர் பத்துக் கடை ஏறி இறங்கி பேரம்பேசி சலுகை விலையில் ஒரு பொருளை வாங்குவார்கள். சிலர் அலைச்சலைத் தவிர்த்து ஒரே கடையில் சொன்ன விலையைக் கொடுத்துவிட்டுப் பொருளை வாங்கிச் செல்வார்கள். இதுபோல, உங்களுடைய வாழ்க்கையில் விரும்பிய பொருளை சொன்ன விலைகொடுத்து வாங்கித் திருப்தி யடையலாம். அதில் நேரம் மிச்சப்படும். மற்றவரோ காசை மிச்சப்படுத்தலாம்; நேரத்தை செலவழிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

பரிகாரம்: 8-ல் மறையும் குரு, சனிக்காக தட்சிணா மூர்த்தியையும், ஆஞ்சனேயரை யும் வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சிபெறுகிறார்.

அவரை, 7-ல் அமர்ந்துள்ள சனி பார்க்கிறார். 11-ல் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். நினைத்தவை நிறைவேறும். கருதியவை கைகூடும். முயற்சிகளில் தளர்ச்சி இருக்காது. முன்னேற்றப் பாதையில் வேகத்தோடும் விறுவிறுப்போடும் செயல்பட்டு வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கலாம். 7-ல் குரு, சனி சேர்க்கை. திருமண முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் பூசலும் புகைச்சலும் உருவாகலாம். என்றா லும், மிதுன ராசிக்கு 9, 10-க்குரியவர்கள் சேர்க்கை என்பதால் (சனி 9-க்குரியவர்; குரு 10-க்குரியவர்)- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால் தடைகளைக் கடந்து செல்லலாம். எளிதாக வெற்றியை எட்டிப் பிடிக்கலாம். 10-ஆமிடத்தை சூரியனும் புதனும் பார்ப்பதால், வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து நிம்மதி பெறலாம். 12-ஆமிடத்து ராகு தெய்வ வழிபாட்டை யும், ஆன்மிக சுற்றுலாவையும் ஏற்படுத்தும். தெய்வத் தல யாத்திரைக்குப் போவதோடு தெய்வத் திருப்பணிக் கைங்கர்யத்தில் ஈடுபடலாம். ராகு- கேது சம்பந்தப்பட்ட தசாபுக்தி நடந்தால் சாது, சந்நியாசி தரிசனம் கிடைக்கும்.

பரிகாரம்: சித்தர்கள் வழிபாடு சிறப்பானது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் குரு, சனி மறைவு. 3-ல் சூரியன், புதன் மறைவு. இவை உங்களுடைய தொழில், செயல், குடும்பச் சூழ்நிலை, வேலை ஆகியவற்றில் குறுக்கீடுகளை ஏற்படுத்தினாலும், 9-க்குரிய குரு 10-க்குரிய செவ்வாயைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அது உங்களை எளிதாக வழிநடத்திச் செல்லும். "தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பார்கள். 7-க்குரிய சனியும் 9-க்குரிய குருவும் 6-ல் இணைந்திருப்பது உங்களுக்கு குடும்ப பலமும் குருபலமும் இணைந்து அருள்பாலிக்கும் நிலையாகும். அதாவது, நல்ல குரு, நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நல்ல வழிபாடு ஆகியவற்றை அடையும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். இதற்குக் காரணம் தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு 6-ல் மறைந்தாலும், 10-ஆமிடத்துக்கு 6-ஆமிடம் பாக்கியஸ்தானம் என்பதாலும், 10-க்குரிய செவ்வாயைப் பார்ப்பதாலும் தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றில் தடையேதும் இருக்காது. எந்தவொரு ஜாதகத்திலும் 9, 10-க்குரியவர்கள் சேர்க்கை இருந்தால் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கை அல்லது வடக்குப் பார்த்த அம்மனை வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் அவருக்கு வீடுகொடுத்த புதனோடு சம்பந்தம். அவர்களை 6, 7-க்குரிய சனி பார்க்கிறார்.

வாழ்க்கை, தொழில்துறை, குடும்பம் ஆகியவற்றில் சிக்கல்களும் பிரச்சினைகளும் காணப்பட்டாலும், ராசிக்கு குரு பார்வையும், ராசிநாதன் சூரியனுக்கு சனி பார்வையும் கிடைப்பதால் எல்லாவற்றையும் மிக எளிதாகக் கடந்து முன்னேறலாம். "எழுதி எழுதி மேல்செல்லும் விதியின் கைகள்' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடி னார். எழுதி மேல்செல்லும் விதி உங்களுக்கு மேன்மையைத் தரும்; தோல்வியைத் தராது. தொய்வுகளையும் ஏற்படுத்தாது. புதிய புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தலாம். பழைய திட்டங்களில் காணப்படும் இடையூறுகளைக் களையெடுக்கலாம் அல்லது சீர்திருத்தலாம். "குரு பார்க்கக் கோடிக் குற்றம் நீங்கும்; கோடி நன்மை கிட்டும்' என்பது பழமொழி. அதிலும் 5-ல் ஆட்சிபெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது விசேஷம். மனிதன் நினைக்கி றான்; இறைவன் நிறைவேற்றுகிறான் எனச் சொல்வார்கள். அது உங்களுக்குத்தான் பொருந்தும். 4- ஆமிடத்துக் கேது பலன்- ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகர் அல்லது வடக்குப் பார்த்த விநாயகரை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் ஆட்சிபெறுகி றார். அவரோடு 12-க்குரிய சூரியனும் சம்பந்தம். அவர்களை 6-க்குரிய சனி பார்க்கிறார். கூட்டுத்தொழில் செய்கிறவர்களுக்கு கூட்டாளிகளுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம் அல்லது மாற்றங்கள் ஏற்படலாம். கூட்டிலிருந்து விலகி தனித்தொழில் ஆரம்பிக்கலாம். அதேபோல, வாடகை வீட்டிலிருப்போர் ஒத்திவீட்டுக்குப் போகலாம். ஒத்தி வீட்டிலிருப்போர் சொந்த வீட்டுக்குப் போகலாம். தொழில்துறையிலும், குடியிருப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த மாற்றங்கள் முன்னேற்றமான மாற்றமாகவே அமையும். ஏமாற்றமாக இருக்காது. சிலர் வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு போகலாம். 9-ஆமிடத்து ராகு குலதெய்வ வழிபாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும். திருப்பணி சம்பந்தமான முயற்சிகளை செயல்படுத்தும். பீடமாக வைத்துக் கும்பிட்டவர்கள் கோவில் எழுப்பிக் கும்பிடலாம். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வரும் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றலாம். தந்தை, பாட்டனார்வழி பூர்வீகச் சொத்து பங்குபாகம் தங்குதடையின்றி நிறைவேறும்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகிலுள்ள செவலூர் சென்று பூமிநாத சுவாமியையும் ஆரணவல்லியம்மனையும் வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அவரை துலா ராசிக்கு 3, 6-க்குரிய குரு பார்க்கிறார். பெரும்பாலும் சுக்கிரனும் குருவும் பகைவர்கள் எனச் சொல்வார்கள். உண்மையில் அந்த விதியை ஏற்றுக்கொள்ள முடியாது. குருவின் வீடான மீனத் தில்தான் சுக்கிரன் உச்சம்பெறுவார். அப்படியிருக்கும்போது, அவர்களைப் பகைவர்கள் எனச் சொல்வதெப்படி சாத்தியமாகும்? சுக்கிரன் அசுரர்களின் குரு. குரு தேவர்களின் குரு. அசுரர்களும் தேவர்களும் வாதி, பிரதிவாதிகளுக்குச் சமம். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சுக்கிரனும் குருவும் தமது கட்சிக்காக வாதாடுவார்கள், வழக்காடுவார்கள். அதற்காக அவர்கள் பகைவர்களாகிவிடுவார்களா? நீதிமன்றத் தில் வாதிக்காகவும் பிரதிவாதிக்காகவும் கடுமையாக வாதாடும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வெளியே கைகோர்த்து காபி சாப்பிடுவார்கள் அல்லவா? அதுமாதிரிதான் குரு, சுக்கிரன் நிலை. அதனால் பாதிப்பு எதுவுமில்லை. 2-ஆமிடத்துக் கேதுவும், 8-ஆமிடத்து ராகுவும் பொருளாதாரப் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.

பரிகாரம்: சொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு உத்தமம் அல்லது மேற்படி மந்திரஜபம் செய்யலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபலம் பெறுகிறார். அதனால் அவருக்கு மறைவு தோஷமில்லை. யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்குதல் என்பது ஒரு மரபு. அதனை "கொரில்லா போர்' என இராணுவத்தில் குறிப்பிடுவார்கள். இராமாயணத்தில் வாலியை இராம பிரான் மறைந்திருந்துதான் அம்பெய்து வென்றார். வாலி கேட்ட கேள்விக்கு இராமனால் பதில் விளக்கம் கூறமுடியாமல் தலைகுனிந்து நின்றான். இராமன் விடும் அம்பு எதிரியைத் தாக்கி அழித்துவிட்டு மீண்டும் இராமனின் அம்பறாத்தூணியில் வந்து தங்கிவிடுமாம். ஆனால், வாலியை வதம்செய்த இராம பாணம் (அம்பு) வாலியின் நெஞ்சிலேயே நிலைத்துவிட்டதாம். அங்கேயே இராமனின் நீதியும் நேர்மையும் அழிந்துவிட்டது என்பார்கள். ஒரு உயிரை வதம்செய்வது (கொலைசெய்வது) சட்டப்படிக் குற்றம்- தர்மப்படி பாவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் பாவத்தைச் சுமக்கிறவர்கள்தான். அதனால்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்யத்தை போதித்தார். மாமிசம் சாப்பிடுவதை எதிர்த்தார். ஆனால், கலியுக தர்மத்தில் அவர் போதனை எடுபடவில்லை. அதற்காக அவரின் கொள்கையும் குறிக்கோளும் தவறெனக் கூறமுடியாது. "குடி- குடியைக் கெடுக்கும், மது நாட்டையும் வீட்டையும் கெடுக்கும்' என்று எழுதிவைத்துவிட்டுதான் "பார்' நடத்துகிறார்கள். என்ன செய்வது? "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்று பாடியதைப்போல, மனிதராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் மனித நேயத்தைக் காப்பாற்றமுடியாது.

பரிகாரம்: ஜென்ம கேதுவுக்காக பிள்ளையார்பட்டிக்கும், சப்தம ராகுவுக்காக பட்டீஸ்வரத்துக்கும் (துர்க்கை) சென்று வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சிபெறுகிறார்.

அவருடன் சனி சேர்க்கை. குருவும் சனியும் சேர்ந்தால் "சண்டாள யோகம்' என சிலர் குறிப்பிடுவர். அது தவறு. சனி கர்மக்காரகன். குரு தர்மக்காரகன். இருவரும் கூடினால் கர்மவினை அழிந்து தர்மப் பலன் சித்திக்கும். இன்னொருவகையில், சனி கர்மப்பலனை அனுபவிக்கச் செய்கிறவர்.

அவரவர் தலையெழுத்துப்படி கர்மப்பலனை தர்மப்பலனாக மாற்றிக்கொண்டால் உய்வடையலாம். பெரும் கொள்ளைக்கார னான ரட்சகன்தான் ராமாயணம் பாடிய வால்மீகியானார். காம வெறிப்பிடித்த அருணகிரிதான் "திருப்புகழ்' பாடிய குருநாதரானார். கொள்ளைக்காரனாகத் திரிந்தவர்தான் திருமங்கையாழ்வாராகத் திகழ்ந்தார். இந்த உலகில் பாவம் செய்யாதவர்களே இல்லை- பாவத்தை நினைத்து, தவறை உணர்ந்து திருந்தி வாழ்ந்தால் புண்ணியசீலர்களாக மாறிவிடலாம். சரித்திரத்திலும் வரலாற்றிலும் தவறைத் திருத்திக்கொண்டவர்களே புகழுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் களாகிறார்கள். ஜென்மச்சனி உங்கள் முயற்சி களில் தளர்ச்சியை உருவாக்கினாலும், ஆட்சிபெற்ற குருபலத்தால் வளர்ச்சி பாதிக்காது. 5-ல் ஆட்சிபெற்ற செவ்வாயும், அவரைப் பார்க்கும் ராசிநாதன் குருவும் (செவ்வாய்க்கு பாக்கியாதிபதி குரு) உங்கள் எண்ணங்களை ஈடேற்றுவார்கள். திட்டங்களை வெற்றிபெறச் செய்வார்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த குருவுடன் சேர்க்கை- ஆட்சி என்பதால் மறைவு தோஷம் விலகும். திருச்செங்கோடு மலைமீதுள்ள கோவிலில் ஒரு தூணில் இராமர் அம்பு எய்வதுபோல ஒரு சிற்பமும், மற்றொரு தூணில் வாலியும் சுக்ரீவனும் சண்டைபோடுவதுபோல ஒரு சிற்பம் இருக்கும். வாலி, சுக்ரீவன் சண்டைபோடுவதுபோன்ற தூணிலிருந்து பார்த்தால் இராமர் வடிவம் அமைந்த தூண் தெரியாது. இராமர் வடிவமுள்ள தூணிலிருந்து பார்த்தால் வாலியும் சுக்ரீவனும் சண்டைபோடும் காட்சி தெரியும். இப்படி இராமர் மறைந்திருந்து தாக்கிய நிலையை அவர்கள் சிற்ப வடிவில் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். அதாவது, மறைந்த தோஷம் (மறைவு தோஷம்) விதிவிலக்கு என்பதை விளக்கவே இங்கு இதனைக் குறிப்பிடுகிறேன். "இலை மறைவு காய் மறைவு' என கிராமத்தில் சொல்வார்கள். மறைவாக இருந்தால்தான் ரகசியம், மதிப்பு. மூடிய கைக்குள் என்ன மறைந்திருக்கிறது எனத் தெரியாதவரை ரகசியம். இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அவருடைய சீடர் ஒருவர், ""நெருப்பில் நடக்கலாம்- நீரில் நடக்கலாம் என்பது முடியுமா?'' என்றார். "முடியும்' என்று ஒரு தாளில் ஒரு மந்திரத்தை எழுதிக்கொடுத்து, ""கையால் மூடிக்கொள். திறந்து பார்த்தால் மந்திரம் பலிக்காது'' என்றார். குருநாதர் கொடுத்த சீட்டைக் கையில் வைத்துக்கொண்டு சீடன் நீரில் நடந்தான்; ஆச்சரியம் அடைந்தான். அடுத்து, அவனுக்குள் ஓர் ஆதங்கம். மனக்குரங்கு அந்த மந்திரம் என்னவென்று பார்க்க ஆசைப்பட்டது. பிரித்துப் பார்த்தான்- "ஓம் நமசிவாய' என்றிருந்தது. இவ்வளவுதானே- இது நமக்குத் தெரிந்ததுதானே என்று நினைத் தவன் நீரில் நடக்கமுயன்று தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான்.

பரிகாரம்: குருவருள் திருவருள். எனவே குருவை ஆத்மார்த்தமாக வழிபடவேண்டும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் அமர்ந்து தன் ராசியைப் பார்க்கிறார். அவருடன் 11-க்குரிய குரு ஆட்சிபெற்று சேர்க்கை. பொதுவாக, "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்குமாகில் கூறுபொன் பொருளும் உண்டாம் குறைவிலா செல்வம் உண்டாம் ஏறுபல்லக்கு உண்டாம் இடம்பொருளே ஏவலுண்டாம் காறு பாலாஷ்ட லட்சுமி கடாட்சமும் உண்டாம் தானே' என்பது ஜோதிடப் பாடல். எனவே, 11-ல் உள்ள சனியும் குருவும் உங்களுக்குக் குறைவில்லாத நிறைவான பலன்களைத் தருவார்கள் என்பது உறுதி. ஒரு கிரகம் தனக்கு சாரம்கொடுத்த கிரகத்தோடும், தன்னோடு சேர்ந்த கிரகத்தோடும் உண்டான பலன்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி. ராசிநாதன் 11-ல் 11-க்குரிய குருவுடன் கூடியதோடு, தன் ராசியைப் பார்த்த சுக்கிரனின் (பூராடம்) சாரம் பெறுவதால் உங்களுக்கு எல்லாவகையிலும் நல்ல பலன்களாகவே நடக்கும் என்பது உறுதி. சனி ராசிநாதன் என்பதோடு விரயாதிபதியுமாவார் என்பதால், சுபமங்களச் செலவுகள் உண்டாகும். திருமணம், புத்திர பாக்கியம், கிரகப் பிரவேசம், புதிய தொழில் வாய்ப்பு, வாகன யோகம் போன்ற சுபச்செலவுகள் உண்டாகும். 4-ல் உள்ள ராகு சிலருக்கு (ராகு தசாபுக்தி அல்லது கேது தசாபுக்தி நடந்தால்) தேக ஆரோக்கியத்தில் கவனத்தை ஏற்படுத்தலாம் அல்லது தாய்க்குப் பீடை உண்டாக்கலாம்.

பரிகாரம்: ராகு காலத்தில் ராகுவையும், எமகண்ட நேரத்தில் கேதுவையும் வழிபடலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவருடன் 11, 12-க்குரிய சனி சம்பந்தம். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் நிச்சயம். சனி 12-க்குரியவர் என்பதால் சிலருக்குத் தொழில் மாற்றும் சிந்தனையும், சிலருக்குக் குடியிருப்பு மாற்றும் சிந்தனையும் ஏற்படலாம். எந்த மாற்றமானாலும் அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாகவே அமையும். ஏனெனில், 10-ஆமிடம் வாழ்க்கையையும் குறிக்கும்; தொழில், பதவி, வேலை, உத்தியோகத்தையும் குறிக்கும். ஆகவே, மேலே சொன்ன அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளலாம். சம்பளத்துக்கு வேலை பார்த்தவர்கள் முதலாளியாகி சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். வாடகை வீட்டிலிருப்போர் ஒத்திவீடு அல்லது சொந்த வீடு மாறலாம். சிலர் வாகனப் பரிமாற்றம் செய்யலாம். டூவீலர் வைத்திருப்போர் கார் வாங்கலாம். ஏற்கெனவே சொந்த உபயோகத்திற்கு கார் வைத்திருப்போர் தொழில் வருமானம் கருதி வாகனம் வாங்கலாம். ஆட்டோ, டாக்ஸி, லாரி போன்று அவரவர் வசதிக்கேற்றவகையில் முதலீடு செய்யலாம். பணப் பற்றாக்குறையை சமாளிக்க வங்கி அல்லது தனியார் கடன் வசதியையும் பெறலாம்.

பரிகாரம்: சேலம்- மேட்டூர் பாதை யிலுள்ள நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் புதிய தொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் ஈடேறும்.

bala161020
இதையும் படியுங்கள்
Subscribe