இந்த வார ராசிபலன் 10-1-2021 முதல் 16-1-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-10-1-2021-16-1-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 4, பரணி- 1.

புதன்: திருவோணம்- 1, 2, 3.

குரு: திருவோணம்- 1.

சுக்கிரன்: மூலம்- 2, 3, 4, பூராடம்- 1.

சனி: உத்திராடம்- 2.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

14-1-2021- மகர சூரியன்.

சனி அஸ்தமனம்.

15-1-2021- சனி உதயம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

11-1-2021- தனுசு.

13-1-2021- மகரம்.

15-1-2021- கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 4-ஆமிடம், 7-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஆரோக்கியம், தேகசுகம், கல்வி மேன்மை, பூமி, வீடு, வாகன யோகம் இவற்றுக்கெல்லாம் அனுகூலமான காலம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும் திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மேன்மையும் உண்டாகும். வசதி இருப்பவர்கள் கணவன் அல்லது மனைவியின் பெயரில் பூமி, வீடு, வாகன யோகத்தை அடையலாம். அதற்காக சுபக்கடன் அமையலாம். குறைந்த வட்டியும் நீண்டகாலத் தவணையுமான கடன் கிடைக்கும். அதாவது சுபமுதலீடு என்று அர்த்தம். சிலர் தொழில் துறையில் சுபமுதலீடு செய்யலாம். பலகாலமாக சம்பளத்தில் மிகக் கடுமையாக உழைத்தவர்கள், இக்கால கட்டத்தில் சொந்தத் தொழில் ஆரம்பிக்க லாம். கடன் வாங்கியோ அல்லது கூட்டுச் சேர்ந்தோ தொழில் ஆரம்பிக்கலாம். குருவும் சனியும் 10-ஆமிடமான தொழில் ஸ்தானத் தில் சேர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அவருடன் 6-க்குடைய புதனும் சேர்ந்திருப்பதால் தொழில் விருத்திக் கடனும் கிடைக்கலாம். 9-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. தகப்பனார் வகையில் வரவேண்டிய சொத்து சுகங்கள், பங்கு பாகங்கள் முறையாகக் கிடைக்க வாய்ப்புண்டு. கிடைப்பதை அப்படியே நிர்வகிக்கலாம் அல்லது தன் விருப்பப்படி தனக்கு சாதகமான இடத்தில் பரிவத்தனை செய்து கொள்ளலாம்.

weekrasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ஜென்ம ராகு நிற்கி றார். ராசிநாதனும் சுக்கிரனும், 4-க்குடைய சூரியனும் 8-ல் மறைகிறார்கள். உங்கள் முயற்சியில் தளர்ச்சியும் கிளர்ச்சியும் உண்டாகலாம். சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். ஜாதகரீதியான தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்துகொண்டால் தடைகள் விலகும். காரியங்கள் கைக்கூடும். 9-ஆமிடத்தில் குரு, சனி, புதன் சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகத்தைக் குறிப்பதால் ராகு- கேதுக்களினால் உண்டாகும் தடை களும் கெடுதல்களும் மாறி விருப்பம்போல் சாதனை படைக்கலாம். 12-ல் உள்ள செவ்வாய் விரயங்களை உண்டாக்கினாலும், அவை எதிர்காலத்திற்கு உண்டான அஸ்தி வாரம்போல அமையும். அதனால் அதை சுபவிரயம் என்று எடுத்துக்கொள்ளலாம். செவ்வாய் பூமிகாரகன், கேது, சுக்கிரன் சாரத்தில் (அஸ்வினி, பரணி) சஞ்சரிப்பதால் கட்டடம், பூமி வகையிலும் அல்லது வாகன வகையிலும் சுபச்செலவுகளுக்கு இடமுண்டு. மேற்படி வகையில் செலவுகள் ஏற்பட்டால் தேக ஆரோக்கியம் சம்பந்தமான வைத்தியச் செலவுகளைத் தவிர்க்க லாம். ராகு- கேது தசாபுக்தி ஜாதகத்தில் நடந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சி னைக்கு இடமுண்டு. என்றாலும் நீசபங்க ராஜ யோகம் பெற்ற குரு ராகு வைப் பார்ப்பதால் பாதிப்பு கள் இல்லாமல் சங்கடங் கள் விலகும். தொழில் சம்பந்தமான புதுமுயற்சி கள் கைக்கூடும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆ

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 4, பரணி- 1.

புதன்: திருவோணம்- 1, 2, 3.

குரு: திருவோணம்- 1.

சுக்கிரன்: மூலம்- 2, 3, 4, பூராடம்- 1.

சனி: உத்திராடம்- 2.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

14-1-2021- மகர சூரியன்.

சனி அஸ்தமனம்.

15-1-2021- சனி உதயம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

11-1-2021- தனுசு.

13-1-2021- மகரம்.

15-1-2021- கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 4-ஆமிடம், 7-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஆரோக்கியம், தேகசுகம், கல்வி மேன்மை, பூமி, வீடு, வாகன யோகம் இவற்றுக்கெல்லாம் அனுகூலமான காலம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும் திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மேன்மையும் உண்டாகும். வசதி இருப்பவர்கள் கணவன் அல்லது மனைவியின் பெயரில் பூமி, வீடு, வாகன யோகத்தை அடையலாம். அதற்காக சுபக்கடன் அமையலாம். குறைந்த வட்டியும் நீண்டகாலத் தவணையுமான கடன் கிடைக்கும். அதாவது சுபமுதலீடு என்று அர்த்தம். சிலர் தொழில் துறையில் சுபமுதலீடு செய்யலாம். பலகாலமாக சம்பளத்தில் மிகக் கடுமையாக உழைத்தவர்கள், இக்கால கட்டத்தில் சொந்தத் தொழில் ஆரம்பிக்க லாம். கடன் வாங்கியோ அல்லது கூட்டுச் சேர்ந்தோ தொழில் ஆரம்பிக்கலாம். குருவும் சனியும் 10-ஆமிடமான தொழில் ஸ்தானத் தில் சேர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அவருடன் 6-க்குடைய புதனும் சேர்ந்திருப்பதால் தொழில் விருத்திக் கடனும் கிடைக்கலாம். 9-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. தகப்பனார் வகையில் வரவேண்டிய சொத்து சுகங்கள், பங்கு பாகங்கள் முறையாகக் கிடைக்க வாய்ப்புண்டு. கிடைப்பதை அப்படியே நிர்வகிக்கலாம் அல்லது தன் விருப்பப்படி தனக்கு சாதகமான இடத்தில் பரிவத்தனை செய்து கொள்ளலாம்.

weekrasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ஜென்ம ராகு நிற்கி றார். ராசிநாதனும் சுக்கிரனும், 4-க்குடைய சூரியனும் 8-ல் மறைகிறார்கள். உங்கள் முயற்சியில் தளர்ச்சியும் கிளர்ச்சியும் உண்டாகலாம். சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். ஜாதகரீதியான தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்துகொண்டால் தடைகள் விலகும். காரியங்கள் கைக்கூடும். 9-ஆமிடத்தில் குரு, சனி, புதன் சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகத்தைக் குறிப்பதால் ராகு- கேதுக்களினால் உண்டாகும் தடை களும் கெடுதல்களும் மாறி விருப்பம்போல் சாதனை படைக்கலாம். 12-ல் உள்ள செவ்வாய் விரயங்களை உண்டாக்கினாலும், அவை எதிர்காலத்திற்கு உண்டான அஸ்தி வாரம்போல அமையும். அதனால் அதை சுபவிரயம் என்று எடுத்துக்கொள்ளலாம். செவ்வாய் பூமிகாரகன், கேது, சுக்கிரன் சாரத்தில் (அஸ்வினி, பரணி) சஞ்சரிப்பதால் கட்டடம், பூமி வகையிலும் அல்லது வாகன வகையிலும் சுபச்செலவுகளுக்கு இடமுண்டு. மேற்படி வகையில் செலவுகள் ஏற்பட்டால் தேக ஆரோக்கியம் சம்பந்தமான வைத்தியச் செலவுகளைத் தவிர்க்க லாம். ராகு- கேது தசாபுக்தி ஜாதகத்தில் நடந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சி னைக்கு இடமுண்டு. என்றாலும் நீசபங்க ராஜ யோகம் பெற்ற குரு ராகு வைப் பார்ப்பதால் பாதிப்பு கள் இல்லாமல் சங்கடங் கள் விலகும். தொழில் சம்பந்தமான புதுமுயற்சி கள் கைக்கூடும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ராசிக்கு 8-ல் மறைகிறார். என்றா லும் வீடுகொடுத்த சனியோடு சம்பந்தம். அங்கு நீசபங்கம் பெற்ற குருவும் சம்பந்தம். புதன், குரு, சனி மூவரும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார் கள். 2, 9, 11-க்குடையவர்கள் சம்பந்தப்படும்போது 8-ஆமி டம் அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். (9-க்குடையவரும், 11-க்குடையவரும் 2-ஆமிடத் தைப் பார்க்கிறார்கள்- சனி, செவ்வாய்). அடுத்து 7, 10-க்குடைய குரு நீசபங்க ராஜயோகம் பெற்று அவரும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், திருமணமானவர்களுக்கு கணவரால் மனைவிக்கும் அல்லது மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். பங்கு பாகங்கள், சொத்து சுகங்கள் கிடைப் பதற்கு வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தில் அப்படிப் பட்ட வசதி இல்லாதவர்களுக்கு சுயமுயற்சியாலும் தொழில் விருத்தியாலும் தன சம்பாத்தியமும் லாபமும் உண்டாகும். புதன், குரு, சனி 8-ல் மறைந் தாலும், குருவும் புதனும் சந்திரன் சாரம் பெறுவதாலும், சனி சூரியன் சாரம் பெறுவதாலும் தாய்வழிச் சொத்து அல்லது தந்தைவழிச் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. சொத்து சுகங்கள் இல்லாதவர்களுக்கு அவர்களின் ஆதரவையும் அனுசரணையையும் மேன்மையையும் தரும். 11-ஆமிடத்துச் செவ்வாய்- உடன்பிறந்தவர்களால் ஆதரவும் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 7-ல் புதன், குரு, சனி சேர்க்கை அற்புதப் பலன்களைத் தரும். இதில் குருவும், புதனும் ராசிநாதன் சந்திரன் சாரம் பெறுகிறார்கள். (திருவோணம்). சனி 2-க்குடைய சூரியன் சாரம் பெறுகிறார். (உத்திராடம்). எனவே உங்கள் மதிப்பு, மரியாதையும் செல்வாக்கும் குறைவில்லாமல் வளர்ச்சியடையும். 5-ஆமிடத்துக் கேதுவும், 11-ஆமிடத்து ராகுவும் உங்கள் கனவுகளையும் திட்டங்களையும் லட்சி யங்களையும் வெற்றி பெறச் செய்யும். 10-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் புது முயற்சிகளை வெற்றி யாக்கும். செய்தொழில் விருத்தியாகும். பூமி, கட்டடம், அக்னி சம்பந் தப்பட்ட துறையில் இருப் பவர்களுக்கு நல்ல முன் னேற்றமும் லாபமும் பெருகும். அக்னி என்பது செங்கல் சூளைவாசல் அல்லது ஹோட்டல், டீக்கடை போன்றவை அடங்கும். ஜாதக தசா புக்திகளை அனுசரித்து வளர்ச்சியும் லாபமும் பெருகும். அதில் முழு நிறைவும் திருப்தியும் இல்லாதவர்கள் திருச்சுழி, செவலூர், திருச்சி மார்க்கெட் அருகில், ஸ்ரீ முஷ்ணம் போன்ற இடங்களுக்குச் சென்று பூமிநாதர், பூவராக சுவாமியை வழிபட்டால் வளர்ச்சியும் நன்மையும் லாபமும் பெருகும். 6-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. தொழில்ரீதியாக அரசு சம்பந்தமான காரிய ஜெயமும் கடன் உதவிகளும் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. அரசுப் பணியிலிருப்பவர் களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 3, 10-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்து 5-ல் இருக்கிறார். உடன்பிறப்புகள் வகையிலும் தொழில் அல்லது உத்தியோக வகையிலும் உங்களுக்கு நல்லது நடக்கும். புதுப்புதுத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தலாம். அதில் பூரணமான வெற்றியும் அடையலாம். சிலர் தகப்பனார் செய்துவந்த தொழிலை ஏற்று நடத்தலாம். அதை விருத்தியடையச் செய்ய லாம். கலை உலகத்திலும் தொழில்துறையிலும் வாழையடி வாழையாக தகப்பனாருக்குப் பிறகு அவர் பாதையில் பயணம் செய்வோர் தங்கள் செயல் திறனால் சீரும் சிறப்பும் அடையலாம். பிதுரார்ஜித சொத்துகள்வகையில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் சாதகமாக அமையும். வில்லங்கம், விவகாரம் இருந்தாலும் உங்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் பிதுரார்ஜித சொத்துகளைப் பரிவர்த்தனை செய்து அதை அபிவிருத்தி செய்யலாம். 4-ல் கேது, 10-ல் ராகு இருப்ப தால் சிலருக்கு தன்சுகம் அல்லது தாயின்சுகம் இவற்றில் பிரச்சினைகள் உருவாகும். தொழில்துறையில் செயல் தேக்கம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்துகொண்டால் தடைகளைக் கடக்கலாம். மொத்தத்தில் பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. வரவு- செலவு வழக்கம்போல் நடைபெறும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். புதன் 10-க்கும் உடையவராவார். 10- கேந்திர ஸ்தானம். கேந்திராதிபதி மற்றொரு கேந்திரம் ஏறினால் கேந்திர தோஷம் எனப்படும். அதனால் பாதகம் உண்டாகும். கேந்திராதிபதி திரிகோணம் ஏறினால் பாதகாதிபத்திய தோஷம் விலகி நன்மையே உண்டாகும். சந்திரகாவியம் என்ற ஜோதிட நூலில் "5, 9-க்கதிபதிர் பாபர் சுபரானாலும் மிஞ்சும் சுபபலனே தருவார்' என்று சொல்லப்படுகிறது. அந்த விதி 5, 9-ல் இருக்கும் கிரகங்களுக்கும் பொருந்தும். 10-க்குடைய புதன் 10-க்கு 8-ல் மறையும் தோஷம் நிவர்த்தியாகிறது. 9-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் கேதுவும், ராகுவைப் பார்க்கும் குருவும், இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர் களுக்கும், குலதெய்வ இருப்பிடம் தெரியாத வர்களுக்கும் குலதெய்வமும் அதன் எல்லை யும் தெரியும் வாய்ப்பை ஏற்படுத்துவர். துவாக்குடி என்ற ஊரில் சாந்தி என்பவரிடம் குலதெய்வக்குறி கேட்கலாம். செல்: 94435 33173-ல் தொடர்புகொண்டு போகலாம். 4-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தாயார் நலம் பெறுவார். பூமி, வாகனம், வீடு சம்பந்தமான திட்டங்களை நிறைவேற்றலாம். பொருளாதார வசதியும் கடனாக அதற்குக் கிடைக்கலாம். அல்லது உடன்பிறப்பு வகையில் நன்மைகள் ஏற்படலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் இருக்கிறார். சூரியன் அவருடன் சம்பந்தம். அவர் களுக்கு வீடுகொடுத்த குரு 4-ல் நீசபங்க ராஜயோகம். உங்கள் திட்டங்களும் எண்ணங் களும் தெளிவாக அமைகிறது. அதேபோல செயல்பாடுகளும் தெளிவாகவே செயல்படு கிறது. 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் உங்கள் முயற்சிகளில் தடைகளையும் தாமதங்களை யும் உருவாக்கினாலும், நீசபங்கம் பெற்ற குரு ராகுவைப் பார்ப்பதாலும் கேதுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் கேதுவைப் பார்ப்ப தாலும் "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடிய மாதிரி எந்தக் குறையும் உங்களைத் தாக்காது. "போற்றுவோர் போற் றட்டும் புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை தைரியமாகச் சாற்றுவேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று கவியரசர் கண்ணதாசன் பாடிய மாதிரி உங்கள் கருத்தை ஆணித்தரமாக வெளியிடுவீர்கள். உங்கள் தைரியத்திற்கும் துணிவிற்கும் செயலுக்கும் உற்ற துணையாக தாயாரோ அல்லது தாரமோ இருப்பார்கள். அதனால்தான் தாய்க்குபின் தாரம் என்று சொன்னார்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதுபோல செவ்வாயும் ராசியைப் பார்ப்பதால் உடன்பிறப்புகளும் உறுதுணையாக செயல்படுவார்கள். தேக ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் பிரச்சினைக்கு இடமில்லை.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பலம் பெறுவதால் மறைவு தோஷம் விலகும். வாரத் தொடக்கத் தில் கேது சாரத்திலும், பிறகு சுக்கிரன் சாரத்திலும் (அஸ்வினி மற்றும் பரணி) சஞ்சாரம் செய்வார். கேது ஜென்ம ராசியிலும் சுக்கிரன் 2-ஆமிடத்திலும் இருப்பதால், உங்களுக்கு குறையேதும் வராது. அதாவது ராகு- கேது இருக்குமிடங்கள் அதன் பாவகத் தன்மையை பாதிக்கும் என்றாலும், ராசிநாதனுடைய தொடர்பு அல்லது 5, 9 எனப்படும் திரிகோணாதிபதிகளின் தொடர்பு ஏற்படும்போது அதன் பாதிப்பு குறையும். எனவே ஏழரைச்சனிக் காலத்தில் நீங்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இப்போது விடிவுகாலம் அல்லது விமோசனம் பிறக்குமென்று எதிர்பார்க்கலாம். ஜென்மம் என்பது செல்வாக்கு, மதிப்பு, செயலாக்கம் இவற்றைக் குறிக்கும். அதில் பாவகிரகம் இருக்கும்போது அதை பங்கப்படுத்தும். சுபகிரகம் இருக்கும்போது அதை தங்கம்போல் ஜொலிக்கவைக்கும். அதேபோல ராசிநாதன் சம்பந்தப்படும்போது குறைகள் எல்லாம் நிறைவுகளாகும். எனவே ஜென்ம கேது, சப்தம ராகு கெடுதல் விளைவிக்குமோ என்று பயப்பட வேண்டாம். ராசிநாதன் செவ்வாய் கேதுவை மட்டும்தானே பார்க்கி றார். ராகுவைப் பார்க்கவில்லையே என்று சந்தேகம் ஏற்படலாம். ராகு தலை; கேது வால். இதில் எதைப் பார்த்தாலும் தோஷம் நிவர்த்தியாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசமடைந்தாலும் வீடுகொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. ஒரு கிரகம் நீசம்பெற்றால், வீடுகொடுத்த கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றாலும், நீச கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றாலும் நீசபங்கராஜ யோகமாகும் என்பது பொதுவிதி! அதேபோல நீசமடையும் கிரகம்- அந்த கிரகத்தின் உச்ச ராசிநாதனோடு தொடர்பு ஏற்படும்போதும் நீசபங்கம் உண்டாகும்! (உதாரணமாக குரு- சந்திரனோடு சேர்ந்தாலும் அல்லது சந்திரன் சாரம் பெற்றா லும் குருவுக்கு நீசபங்கம் ஏற்படும். ஏனென் றால் குரு சந்திரன் வீடான கடகத்தில் உச்சம் பெறுவார்). நீசபங்கம் என்றால் என்ன அர்த்தம்? கீழ்கோர்ட்டில் பாதக மாகத் தீர்ப்பாகும் ஒரு வழக்கு மேல் கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமாகத் தீர்ப்பாக்கிக்கொள்வதற்குச் சமம். மகாகவி பாரதியார் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததை, ""வாராதுபோல் வந்த மாமணியைத் தோறப்போமா' என்று பாடினார். அதுபோல கிடைத்ததை இழக்காமல் காப்பாற்றுவதற்குச் சமம். தனுசு ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைவது எதிர்ப்பு, இடையூறு, போட்டி ஆகியவற்றைக் குறிப்பிட்டாலும், மனோபலத்தாலும் தெய்வபலத்தாலும், குருவருளாலும் திருவருளாலும் அவற்றைக் கடந்து முன்னேறமுடியும். பாதகம் எல்லாம் சாதகமாகும். 6-ஆமிடத்து ராகுவும் 12-ஆமிடத்துக் கேதுவும் ஆகாத போகாத விஷயங்களில் உங்களை அலைக்கழித்தாலும், குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பதுபோல கழிவுகளை விலக்கி நெளிவுசுளிவாகப் பலனடையலாம். 7, 10-க்குடைய புதன், குரு, சனியோடு சம்பந்தப்படுவதால் வாழ்க்கைத்துணைவரின் பேரில் தொழில் தொடங்கலாம்; லாபம் பார்க்கலாம்; சேமிப்பை அடையலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சி பெறுகிறார். அவருடன் 6, 9-க்குடைய புதனும் 3, 12-க்குடைய குருவும் சேர்க்கை. குருவுக்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. முன்னோர்கள், மூதாதையர்கள் வகையிலும், பங்காளி வகையிலும் சங்கடங்களையும் சஞ்சலங்களையும் சந்தித்தாலும், உங்கள் புத்திசாலித்தனத்தாலும் தைரியத்தாலும் அவற்றை எதிர்கொண்டு சமாளித்து வெற்றிபெறலாம். 6-க்குடைய புதன் 6-ஆமிடத்துக்கு 8-ல் மறைவதாலும், 9-க்குடைய புதன் 9-க்கு 5-ல் திரிகோணம் பெறுவதாலும் எதிரிகளை உதிரிகளாக்கி வெற்றிகொள்ளலாம். குருவருளாலும் திருவருளாலும் பரிபூரணமான இயக்கம் நடைபெறும். முன்னோர்களின் ஆசியும் உங்களை வழிநடத்தும். 8-க்குடைய சூரியனும், 5, 10-க்குடைய சுக்கிரனும் 12-ல் மறைவது ஒருவகையில் பாதிப்புதான். அதேசமயம் சூரியன் தொடக்கத்தில் சுக்கிரன் சாரமும், பிறகு தன் சுயசாரமும் பெறுவதால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதுபோல, ஏமாற்றங்களையும் தோல்விகளையும் வெளியில் தெரியாதபடி சமாளித்து செயல்படுவீர்கள்; ரேஸ் ஆட்டத்தில் தடுமாறிக் கீழேவிழுந்த குதிரை துள்ளியெழுந்து மீண்டும் ஓடுவதுபோல உங்கள் காரியங்களை வீரியமாகச் செயல்படுத்துவீர்கள்; வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். பொருளாதாரத்திலும் பணப்புழக்கத்திலும் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுகிறார். அவருடன் 5, 8-க்குடைய புதனும், 2, 11-க்குடைய குருவும் சம்பந்தப்படுவதால் பாதிப்புக்கு இடமில்லை. 12-ஆமிடம் விரயஸ்தானம் என்றாலும் 2, 11-க்குடைய குரு சம்பந்தப்படுவதால் இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல, செலவுகள் ஏற்பட்டாலும் அதை ஈடுசெய்யும் வகையில் வரவுகளுக்கும் இடமுண்டு. ஒருசில சமயம் வரவுக்குமுன் செலவுவந்து உங்களை சிந்திக்கச் செய்தாலும், மறுநிமிடம் அதை சமாளிக்கும் வகையில் வரவுகளுக்கும் வழிவிடும். அதனால் கவலைப்பட மாட்டீர்கள்; சோர்வடைய மாட்டீர்கள். சாதகமான தசாபுக்தி நடப்பவர்களுக்கு எல்லாமே சுபமங்களச் செலவுகளாக மாறும். செலவில் மூன்றுவகை உண்டு. சுபச்செலவு, தண்டச்செலவு, ஏமாற்றமான செலவு என்று உண்டு. உங்களுக்கு ஏற்படும் செலவுகள் எல்லாம் சுபச்செலவுகளாகவே அமையும். பயனுள்ள பலன்தரும் செலவுகளாகவே அமையும். 3-ல் செவ்வாய் ஆட்சி என்பதாலும், ஒருசிலருக்கு உடன்பிறப்புகள் அல்லது பங்காளி வகையிலும் செலவுகள் ஏற்படலாம். தெய்வப் பிரார்த்தனை வகையிலும், குலதெய்வக் கோவில் திருப்பணிவகையிலும் சிலருக்கு சுபமங்களச் செலவுகள் ஏற்படலாம். 12-க்குடைய தசாபுக்தி அல்லது சுக்கிரனுடைய தசாபுக்தி நடப்பவர்களுக்கு சுற்றுலா, உல்லாசம் போன்ற சுபச்செலவுகள் ஏற்படும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீசமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சி பெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். அத்துடன் புதன் மீன ராசியில் நீசம் என்றாலும், அந்த நீச ராசிநாதனாகிய குரு புதனுடன் சம்பந்தப்படுவதால் உங்களுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு, அம்சமான பல காரியங்கள் கைகொடுக்கும். 10-ல் சூரியன், சுக்கிரன் இருப்பது தொழில் துறையில் அல்லது வேலை, உத்தியோகத்தில் உங்களுக்கு முன்னேற் றகரமான திருப்பங்களை உண்டாகும். புதிய திட்டங்கள் கைக்கூடும். 2-ல் செவ்வாய் ஆட்சியென்பதால் வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகும். பழைய கடன்கள் அடைபடும். சகோதரவகையில் உடன்பாடும் ஒற்றுமையும் எதிர்பார்க்கலாம். 3-ஆமிடத்து ராகுவும் 9-ஆமிடத்துக் கேதுவும்- ஆன்மிகத்தில் ஈடுபாட்டையும், ஆலய வழிபாட்டையும், குலதெய்வக் கோவில் திருப்பணியையும், தெய்வ ஸ்தல யாத்திரையையும் உண்டாக்கும். நீண்டகாலப் பிரார்த்தனைக் கடன்களையெல்லாம் இக்காலக்கட்டத்தில் நிறைவேற்றலாம். செலவுகள் ஒருபுறம் இருந்தாலும் வரவுகளும் குறைவில்லாமல் வந்துசேரும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நிறைவேறும். உங்கள் முயற்சியால் நிதிவசூல் செய்து ஆலயத் திருப்பணிகளை செய்யும் பாக்கியம் ஒருசிலருக்கு அமையும்.

bala150121
இதையும் படியுங்கள்
Subscribe