ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 4, ஆயில்யம்- 1, 2.
செவ்வாய்: மகம்- 2, 3, 4.
புதன்: ஆயில்யம்- 2, 3, 4, மகம்- 1, 2.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: பூரம்- 1, 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.v
கிரக மாற்றம்:
5-8-2021- சிம்ம புதன்.
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
2-8-2021- ரிஷபம்.
4-8-2021- மிதுனம்.
6-8-2021- கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 9-க்குடைய குரு 11-ல் பலம்பெற்று ராசிநாதனைப் பார்க்கிறார். ஒரு ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ, ராசிநாதனுக்கோ, லக்னநாதனுக்கோ குரு பார்வை கிடைப்பது மிகவும் சிறப்பு. செவ்வாயும் குருவைப் பார்க்கிறார். தொழில்துறையில் முன்னேற் றம், லாபம் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு அந்த தொழில் துறை சம்பந்தமாக புதிய திட்டங்கள், எண்ணங்களைத் தோற்றுவிப்பார். அதுவும் வெற்றிகரமாக செயல்படும். பிள்ளைகளால் நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். அவர்களைப் பற்றிய கற்பனை பயமோ, கவலையோ இருந்தால் அவையும் மாறி நம்பிக்கையும் உருவாகும். 2-ல் உள்ள ராகுவால் அவ்வப்போது குடும்பத்தில் குழப்பம், மனநிம்மதியற்ற நிலை போன்ற பலன்களை சந்திக்கநேரும். வீட்டுக்காக எவ்வளவு பாடுபட்டாலும் நற்பெயர் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துக்கும் மேலாக, வசைகளும் கிடைக்கிறதே என்று புலம்பலாம். சிலருக்கு கணவர் சரியாக இருந்தாலும் கணவர்வீட்டு ஆட்கள் சங்கடப்படுத்தும்படி நடக்கலாம். என்றாலும் 2-க்குடைய சுக்கிரன் 5-ல் இருப்பதாலும், குரு அவரைப் பார்ப்பதாலும் உங்கள் உழைப்புக்கும் பட்டபாட்டிற்கும் பயன் கிடைக்கும். முடிவில் உங்களுடைய அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்வார்கள். நீங்களும் பொறுமையுடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். ராசிநாதன் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் சஞ்சலம் விலகும். திடீர் அதிர்ஷ்ட யோகமும் ஏற்படலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரபலம் பெறுகிறார். அவருடன் 12-க்குடைய செவ்வாயும் இணைந்திருக்கிறார். 10-ல் குரு நின்று 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். தாய்சுகம், தன்சுகம் எல்லாம் நன்றாக இருக்கும். சிலர் புதிய வீடு, மனை, பூமி வாங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தலாம். ஜென்ம ராகு உங்கள் முயற்சி, செயல்பாடு இவற்றில் சிலநேரம் தாமதப்பலனை உண்டாக்கலாம். என்றாலும் 2-க்குடைய புதன் 3-ல் சூரியனோடு இணைந்திருக்கிறார். தைரியமும் தன்னம் பிகையும் குறையாது. எத்தனை இடையூறுகள், இன்னல்கள் வந்தாலும் தடைகளை உடைத்து முன்னேறும் அமைப்பு உண்டாகும். 7-ல் கேது திருமண காரியங்களில் சற்று தாமதப்பலனை ஏற்படுத்தும். 4-க்குடைய சூரியன் 3-ல் மறைகிறார். தகப்பனாரால் அல்லது தகப்பனார் வகையினரால் பிரச்சினைகளை சந்திக்கநேரும். ஜனன ஜாதகத்தில் தகப்பனார் ஸ்தானம் வலுவிழந்திருந்தால் ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படலாம். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுகிறார். ஒருபுறம் தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். இழுபறியாக இருக்குமென்று நினைத்திருந்த காரியங்கள் எளிதாக நிறைவேறும். பொருளாதாரப் பற்றாக்குறை நிலவினா லும் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்புக்கு இடமிருக்காது. வீடு, மனை, வாகனவகையில் கடன்கள் கிடைக்கும். தனியார் வங்கிக் கடனும் அமையும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு அட
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 4, ஆயில்யம்- 1, 2.
செவ்வாய்: மகம்- 2, 3, 4.
புதன்: ஆயில்யம்- 2, 3, 4, மகம்- 1, 2.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: பூரம்- 1, 2, 3, 4.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.v
கிரக மாற்றம்:
5-8-2021- சிம்ம புதன்.
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
2-8-2021- ரிஷபம்.
4-8-2021- மிதுனம்.
6-8-2021- கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 9-க்குடைய குரு 11-ல் பலம்பெற்று ராசிநாதனைப் பார்க்கிறார். ஒரு ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ, ராசிநாதனுக்கோ, லக்னநாதனுக்கோ குரு பார்வை கிடைப்பது மிகவும் சிறப்பு. செவ்வாயும் குருவைப் பார்க்கிறார். தொழில்துறையில் முன்னேற் றம், லாபம் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு அந்த தொழில் துறை சம்பந்தமாக புதிய திட்டங்கள், எண்ணங்களைத் தோற்றுவிப்பார். அதுவும் வெற்றிகரமாக செயல்படும். பிள்ளைகளால் நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். அவர்களைப் பற்றிய கற்பனை பயமோ, கவலையோ இருந்தால் அவையும் மாறி நம்பிக்கையும் உருவாகும். 2-ல் உள்ள ராகுவால் அவ்வப்போது குடும்பத்தில் குழப்பம், மனநிம்மதியற்ற நிலை போன்ற பலன்களை சந்திக்கநேரும். வீட்டுக்காக எவ்வளவு பாடுபட்டாலும் நற்பெயர் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துக்கும் மேலாக, வசைகளும் கிடைக்கிறதே என்று புலம்பலாம். சிலருக்கு கணவர் சரியாக இருந்தாலும் கணவர்வீட்டு ஆட்கள் சங்கடப்படுத்தும்படி நடக்கலாம். என்றாலும் 2-க்குடைய சுக்கிரன் 5-ல் இருப்பதாலும், குரு அவரைப் பார்ப்பதாலும் உங்கள் உழைப்புக்கும் பட்டபாட்டிற்கும் பயன் கிடைக்கும். முடிவில் உங்களுடைய அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்வார்கள். நீங்களும் பொறுமையுடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். ராசிநாதன் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் சஞ்சலம் விலகும். திடீர் அதிர்ஷ்ட யோகமும் ஏற்படலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரபலம் பெறுகிறார். அவருடன் 12-க்குடைய செவ்வாயும் இணைந்திருக்கிறார். 10-ல் குரு நின்று 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். தாய்சுகம், தன்சுகம் எல்லாம் நன்றாக இருக்கும். சிலர் புதிய வீடு, மனை, பூமி வாங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தலாம். ஜென்ம ராகு உங்கள் முயற்சி, செயல்பாடு இவற்றில் சிலநேரம் தாமதப்பலனை உண்டாக்கலாம். என்றாலும் 2-க்குடைய புதன் 3-ல் சூரியனோடு இணைந்திருக்கிறார். தைரியமும் தன்னம் பிகையும் குறையாது. எத்தனை இடையூறுகள், இன்னல்கள் வந்தாலும் தடைகளை உடைத்து முன்னேறும் அமைப்பு உண்டாகும். 7-ல் கேது திருமண காரியங்களில் சற்று தாமதப்பலனை ஏற்படுத்தும். 4-க்குடைய சூரியன் 3-ல் மறைகிறார். தகப்பனாரால் அல்லது தகப்பனார் வகையினரால் பிரச்சினைகளை சந்திக்கநேரும். ஜனன ஜாதகத்தில் தகப்பனார் ஸ்தானம் வலுவிழந்திருந்தால் ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படலாம். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுகிறார். ஒருபுறம் தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். இழுபறியாக இருக்குமென்று நினைத்திருந்த காரியங்கள் எளிதாக நிறைவேறும். பொருளாதாரப் பற்றாக்குறை நிலவினா லும் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்புக்கு இடமிருக்காது. வீடு, மனை, வாகனவகையில் கடன்கள் கிடைக்கும். தனியார் வங்கிக் கடனும் அமையும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு அட்டமத்துச் சனி நடக்கிறது. குடியிருப்பு மாற்றம், வேலை அல்லது உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றம் போன்ற பலன் களைச் சந்திக்கலாம். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்கு முயற்சித்திருந்தால் அவை வெற்றிகரமாக நிறைவேறும். இன்னும் சிலருக்கு வேலையில் பணிச்சுமை அதிகமாக ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த இடமாற்றமும் அவர் களுக்குப் பலன்தரும். அவ்வாறு மாற்றத்தை சந்திக்க இயலாதவர்களுக்கு அலைச்சலும் ஆதாயக் குறைவும் உண்டாகும். 11-க்குடைய செவ்வாய் 3-ல் 12-க்குடைய சுக்கிரனோடு இணைகிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம். என்றாலும் 7-க்குடைய குரு 9-ல் நின்று 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியையும் பார்க்கிறார். ஏற்கெனவே குறிப் பிட்டபடி குரு பார்வை ராசிக்கோ ராசி நாதனுக்கோ கிடைத்தால் அவர்களுக்கு வெற்றி உண்டாகும் என்பதில் சந்தேக மில்லை. தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அது மேலும் ஒரு ப்ளஸ் பாயின்ட்தான். இந்த அட்டமத் துச்சனி காலம் முடியும்வரை பெரியளவு சேமிப்புக்கு இடமிருக்காது அதேசமயம் பொருளாதாரத் தொய்வும் ஏற்படாது. சூரியனை சனி பார்க்கிறார். தந்தைவழி சொத்துகளால் சகோதரர்கள் வகையில் பிரச்சினைகள், சங்கடங்கள் நேரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 10-க் குடைய செவ்வாய் 2-ல் இருப்பதும், அவரை 8-ல் நிற்கும் குரு (9-க்குடையவர்) பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். சில எதிர் பாராத நன்மைகள் நடந் தேறும். இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். 10-ஆமிடம் கேந்திரம் முயற்சி ஸ்தானம்- விஷ்ணு ஸ்தானம். 9-ஆமிடம் திரிகோணம்- லட்சுமி ஸ்தானம். தொழில், வாழ்க்கை இரண்டிலும் உங்களது முயற்சி களும் செயல்பாடுகளும் வீண்போகாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற் றம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி, ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் அல்லது பணி உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். 2-க்குடைய சூரியனும் 12-க்குடைய புதனும் ஜென்ம ராசியில் ஒன்றுகூடி இருப்பதால், சுயதொழி-ல் உள்ளவர்கள் புதிய முதலீடு பற்றிய சிந்தனை செய்யலாம். அது லாபகரமானதாகவும் அமையும். அதாவது முத-ல் செலவு- பின்பு வரவு என்ற அடிப்படை யில் செயல்படும். 7-ல் உள்ள சனி ஜென்ம ராசி யைப் பார்க்கிறார். சிலருக்கு மனைவி வழியில் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். பெரிய பாதிப்பு களுக்கு இடமிருக்காது. சிலநேரம் உங்கள் திட் டங்கள், முயற்சிகள் இவற்றில் சிறுசிறு பின்னடைவு ஏற்படுவது போலத் தோன்றினாலும், 10-க்குடையவர், 5-க்கும் உடையவர் (செவ்வாய்) 5-ஆமிடத் தைப் பார்ப்பதால் முடிவில் காரியம் சுபமாகும். அவை கானல் நீர்போல தூரத்தில் தெரிந்தாலும் அருகில் சென்றவுடன் மறைந்து விடுவதுபோல! குரு, சுக்கிரன் பரஸ்பர பார்வையால் சிலருக்கு மனைவிவழியில் அனு கூலம் உண்டாகும். பெண்களாக இருந்தால் கணவன்வழியில் ஆதாயம் ஏற்படும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைவு. ஒரு ராசிநாதனோ அல்லது லக்னநாதனோ மறைவுதோஷம் பெறுவது ஒருவகையில் மைனஸ்தான். என்றாலும் குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் ராசிநாதன் மறைவு பெற்ற தோஷத்தை சமாளிக்கலாம். அத்துடன் 9-க்குடைய செவ்வாயும் 10-க்குடைய சுக்கிரனும் சேர்ந்து ஜென்ம ராசியில் இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் செய்யும் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் தடையின்றி முடிக்கலாம். லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக நிறைவேற்றுவதுபோல! 2-க்குடைய புதன் 12-ல் சூரியனோடு இணைந்திருக்கிறார். பொருளாதாரத்தில் சிறுசிறு பற்றாக் குறை, சங்கடமான நிலவரங்கள் உண்டா கும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு அவற்றை சமாளிக்கும் தைரியத்தையும் தன்னம் பிக்கையையும் தருவார். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். 8-க்குடைய குரு 7-ல் நிற்பதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும். திருமண முயற்சிகள் நிறைவே றும். திருமணமான கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்ய மும் அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். 6-ல் சனி ஆட்சி. தொழி-ல் போட்டி, பொறாமை, மறைமுக சத்ரு எல்லாம் விலகும். பூர்வீக சொத்து சம்பந்தமான நீதிமன்ற விவகாரங்களில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையில் ஒற்றுமை என்பது தாமரை இலைமேல் தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியன் 11-ல் இருப்பது ஒரு நன்மைதான். பொதுவாக எந்த ஒரு நற்காரியத்திற்கும் சூரியன் 11-ல் இருக்குமாறு லக்னம் அமைத்துக்கொடுத்தால் அது வெற்றிகரமாக நிறைவேறும் என்பது ஜோதிட அனுபவம். எனவே, நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும் என்று நம்பலாம். 4-க்குடைய குரு 6-ல் நின்று 10-ஆமிடம், 12-ஆமிடம், 2-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில் அல்லது வேலை, உத்தியோகம் இவற்றில் சில மாறுதல்களும் தேறுதல்களும் உண்டாகும். சிலருக்கு தொல்லை கொடுத்துவந்த சிப்பந்திகள் தானாகவே விலகும் நேரமிது. அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டாம். புதிய பணியாட்கள் வந்து சேருவர். 3-ஆமிடத்தைப் பார்க்கும் செவ்வாய் தைரியம், தன்னம்பிக்கை, நண்பர்களால் சகாயம் போன்ற பலன்களை ஏற்படுத்துவார். குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் விரயம் செய்து லாபம் பெறும் சூழ்நிலை அமையும். வாழ்க்கை அமைப்பிலும் அவ்வப் போது கடன் வாங்கி செயல்படுத்தும் நிலைமைகளையும் சந்திக்கலாம். பொருளா தாரத்தில் சேமிப்புக்கு இடமில்லை. வரவும் செலவும் சரிக்கு சரியாக அமையும். சிலநேரம் கைமீறிய செலவுகளும் ஏற்படலாம். பிள்ளைகள்வகையில் மங்கள காரியங்கள் கைகூடும். அதற்கான பணத்தேவைகளும் பூர்த்தி யாகும். சில பெண்களுக்கு கணவரால் வீண்செலவு, உபாதைகளைச்சந்திக்க நேரும். தேகநலனில் அக்கறை தேவை. வைத்தியச் செலவுகள் வந்து விலகும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 3, 5-க்குடைய குரு 5-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். 9-ஆமிடம், 11-ஆமிடங்களையும் பார்க்கிறார். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய திறமைகள் பளிச்சிடும். கீர்த்தி, புகழ், செல்வாக்கு எல்லாம் சிறப்பு பெறும். ஒரே இடத்தில் பல வருடங்களாக வேலை பார்த்தவர்கள் அடிமைத் தொழி--ருந்து விலகி சுயதொழில் முயற்சியில் ஈடுபடலாம். திடீரென வேலையி-ருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இதைவிட நல்ல இடத்தில் உத்தியோகம் அமையும்; நன்மதிப் பும் உண்டாகும். 2-ல் உள்ள கேது குடும்பத்தில் அவ்வப்போது சில சஞ்சலங்களை உண்டு. பண்ணினாலும், கேதுவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத் தேவைகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். நண்பர்களால் சகாயம் உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் 11-ல் நிற்பதால் உங்களது முயற்சிகளில் தோல்விக்கு இடமிருக்காது. மூத்த சகோதரர்மூலம் உதவியும் ஒத்தாசையும் கிடைக்கும். 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். வாழ்க்கையில் இதுவரை கஷ்ட- நஷ்டங்களை அனுபவித்த வர்களுக்கு அவற்றி-ருந்து விடுபடும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் அமையலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடு வோருக்கு இழுபறி நிலைமாறி உடனடி நிவாரணமும் கிடைக்கும். நிலுவையி-ருந்த பி.எஃப் தொகையும் கிடைக்கும். தேக நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசியில் ஜென்ம கேதுவும், சப்தம ராகு இருப்பதால் சில குறுக்கீடுகளும் தடைகளும் காணப்படலாம். திருமணத்தில் தாமதம் உண்டாகலாம். ராசிநாதன் செவ்வாய் 7-க்குடைய சுக்கிர னோடு இணைந்து ராசியைப் பார்க்கிறார். தடைகளையும் குறுக்கீடுகளையும் கடந்து வெற்றிப் பாதையில் பயணிக்கலாம். 3-ஆமிடத்தில் ஆட்சிபெற்ற சனி அதற் கான தைரியத்தையும் நண்பர்களின் சகாயத்தையும் தருவார். 10-க்குடைய சூரியன் 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் அந்த ஜாதகருக்கு எதிலும் வெற்றிதான் உண்டாகும்; தோல்விக்கு இடமில்லை. 4-ல் உள்ள குரு 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில்துறையில் முன்னேற் றகரமான மாற்றங்கள் ஏற்படும். சிலர் கூடுதல் கிளை அமைக்கும் முயற்சிகளில் இறங்கலாம். அதற்குண்டான முதலீட்டுக்கு கூட்டாளிகளும் வந்து இணைவர். பழகிய வட்டாரங்களில் இருந்த அவப்பெயர் மாறி நற்பெயர் உண்டாகும். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளினால் பாராட்டும் கிடைக்கும். வீடு அல்லது மனை வாங்க முனைவோருக்கு வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். தனியார் கடனும் கிடைக்கும். 8-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வாகனவகையில் பழுது, செலவு ஆகியவற்றை உண்டாக்கலாம். அந்நிய இனத்து நண்பர் ஒருவரால் பொருளாதார உதவி அமையும். கொடுக்கல்- வாங்கல் சீராக இருக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைகிறார். குருவுக்கு வீடுகொடுத்த சனி 2-ல் ஆட்சியென்பதால் குருவுக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்று நம்பலாம். 5-க்குடைய செவ்வாய் 9-ல் திரிகோணம் பெற்று குருவைப் பார்க்கிறார். அந்த வகையில் மறைவு தோஷம் விலகும் என்று எடுத்துக்கொள்ளலாம். உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் நிலவிய குழப்பங்கள் விலகும். வீடு, மனை விஷயமாக சில மாற்று யோசனைகள் தோன்றினா லும் அது நல்ல யோசனையாக அமையும். தாயாருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில பிணக்குகள் ஏற்பட்டு மறையும். அது உங்களை மனவருத்தமடையச் செய்யலாம். "பாலைப் பார்ப்பதா பானையைப் பார்ப்பதா' என்ற சூழலுக்கு ஆளாகலாம். 5-க்குடையவரை குரு பார்ப்பதால் எண்ண அலைகள் சீராக செயல்படும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மனைவிவழி உறவினரால் உதவியும் ஒத்தாசையும் பெறலாம். சிலர் கட்டடம் சம்பந்தமான செயல்களில் உதவி பெறலாம். 9-க்குடைய சூரியன் 8-ல் மறைந் தாலும், 9-ஆமிடத்தை ராசிநாதன் பார்ப்பதால் பெற்றோரிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் மாறி நல்லுறவும் பாசமும் பெருகும். எதிர்காலம் பற்றிய திட்டங்கள் செயல்வடிவம் பெறும். பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வித்திட்ட முதலீடுகளும் பயன்பெறும் வகையில் அமையும். தேகநலனில் அக்கறை காட்டவும். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை பெறும் நிலையும் உண்டாகும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஜென்மச் சனி நடக்கிறது. முதல் சுற்று மங்குசனி; இரண்டாம் சுற்று பொங்கு சனி; மூன்றாம் சுற்று மரணச்சனி எனப்படும். இதில் எந்த சுற்று சனியாக இருந்தாலும் மகர ராசிநாதனே சனி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார் என்று நம்பலாம். 12-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இட மில்லை. எனினும் வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போகும் நிலை. சிலர் பூமி, வீடு இவற்றில் முதலீடு செய்யலாம். சிலர் வாழ்க்கைத்துணையின் பேரில் மனை, வாகனம் போன்றவை வாங்கலாம். 2-ல் உள்ள குரு 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். தகப்பனார்வழியில் நன்மைகள் உண்டாகும். தகப்பனார்வழி பூர்வீக சொத்து சம்பந்தமாக நல்லமுடிவுகள் எடுக்கப்படும். அதற்கு பங்காளிவகையில் ஆதரவும் ஏற்படும். ஒருசிலருக்கு தந்தையின் வேலை கிடைக் கக்கூடும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலர் தொழி-ல் இடமாற்றம், வேலையில் ஊர்மாற்றம் போன்றவற்றை சந்திக்கநேரும். ஜென்மச்சனி வக்ரகதியில் செயல்படுகிறார். வக்ரகதியில் உச்சபலம். உங்களது திறமை, செயல்பாடு இவற்றில் துரித வேகம் உண்டாகும். 4-க்குடைய செவ்வாய் 8-ல் மறைகிறார். வீடு, மனை, கட்டடம் சம்பந்தமாக சில பின்னடைவு களை சந்திக்க நேர்ந்தாலும், 2-ல் உள்ள குரு பார்வையால் போராட்டங்களை சந்தித்தாலும் வெற்றியை நோக்கிய பயணம் ஏற்படும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. முதல் சுற்று நடப் பவர்களுக்கு மங்குசனியும், இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு பொங்குசனியும், மூன்றாவது சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனியும் நடக்கும். கும்ப ராசிநாதன் சனி என்பதால் எந்த சுற்றாக இருந்தாலும் பெரியளவு பாதிப்பு ஏற்படுத்தமாட்டார் என்று நம்பலாம். 2-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 7-ல் செவ்வாய், சுக்கிரன். இவர்களின் பார்வை ஜென்ம ராசிக்கு கிடைக்கிறது. பொதுவாக 7-ல் சுக்கிரன், செவ்வாய், நின்றால் தாமதத் திருமணம், திருமணத்தில் தடை என்பது ஜோதிடவிதி. இங்கு குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் தடை, தாமதங்கள் விலகும். 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள் காலதாமத மாகலாம். 10-க்குடைய செவ்வாய் 10-ஆமிடத் தைப் பார்க்கிறார். அக்னி, கட்டடம் சம்பந்தப் பட்ட தொழில்துறையினருக்கு வளமான வாழ்க்கைக்கு அச்சாரம் போட்டமாதிரி முன்னேற்றம் உண்டாகும். 9-க்குடைய சுக்கிரனும் 10-க்குடைய செவ்வாயும் ஒன்றுகூடி 7-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் எதிர்கால திட்டம் பற்றிய முயற்சிகள் கைகூடும். சிறுசேமிப்பு தக்கசமயத்தில் உதவும். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். ராசிநாதனே விரயாதிபதியாகவும் விரயஸ்தானத்திலும் இருப்பதால், சில நேரங்களில் வீண் செலவுகளையும் சந்திக்க நேரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். குருவுக்கு வீடுகொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைவு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் "ஜான் ஏற முழம் வழுக்கிய' கதையாகத்தான் அமைகிறது. 11-ல் சனி ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய செவ்வாயும் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எனவே, சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்துகொள்ள நேரிடும். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவு. குடும்ப ஸ்தானாதி பதி மறைவதால் குடும்பத்திலும் சில குழப்பங்கள், பிரச்சினைகள் தோன்றும். உங்கள் சொல்லுக்கு மதிப்பும் குறையலாம். குரு 10-க்குடையவர். 9-க்குடைய செவ்வாய் குருவைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, பல போராட்டங்களை சந்தித்தாலும் காரியஜெயம் உண்டாகும். அதற்கான முயற்சிகளைதான் சற்று அதிகமாக எடுக்கவேண்டியது வரும். 9-ல் உள்ள கேது ஆன்மிகப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வைப்பார். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக வில்லங்கம் விவகாரங்களை சந்திக்கலாம். விட்டுக்கொடுத்து அனுசரித் துச் சென்றால் பிரச்சினைகளில் சுமூகத் தீர்வு காணலாம். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடையே இருந்து வந்த சங்கடங் கள் விலகாம-ருப்பது மனதை வருத்த மடையச் செய்யும். பெற்றோர்களால் நன்மை உண்டாகும். நீண்டநாட்களாக நிறைவேறா மல் காத்திருந்த செயல் ஒன்றை இப்போது முடிக்கும் சூழல் அமையலாம். சிலர் வீடு அல்லது மனை வாங்கும் திட்டத்தை செயல்முறைப்படுத்தலாம்.