ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
17-2-2019- கடகம்.
19-2-2019- சிம்மம்.
21-2-2019- கன்னி.
23-2-2019- துலாம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.
செவ்வாய்: அஸ்வினி- 4, பரணி- 1.
புதன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2.
குரு: கேட்டை- 4.
சுக்கிரன்: பூராடம்- 2, 3, 4, உத்திராடம்- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார்; 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். கடந்த வாரம் 4-ல் இருந்த ராகு 3-ஆமிடத்துக்கு மாறிவிட்டார். உடல் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். மருத்துவச் செலவுகள் விலகும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான நற்பலன்கள் நடைபெறலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப் பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். 9-ல் கேதுவும், அவருடன் சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். ஆன்மிக வழிபாடும், தெய்வப் பிரார்த்தனைகளும் நிறைவேறும். 8-ல் குரு இருந்தாலும், குரு இருப்பது செவ்வாய் வீட்டில்; அவருக்கு செவ்வாய் பார்வை. எனவே, அட்டமத்து குரு கெடுதல் செய்யாது. திடீர் யோகம். அதிர்ஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு தொழில்வகையில் மாற்றம் அல்லது வேலையில் இடமாற்றம், வேறுசிலருக்கு குடி யிருப்பு மாற்றம் ஆகியவற்றைச் சந்திக்கநேரும். சூரியன் 11-ல் இருப்பதால் எடுத்த காரியங்களும், முயற்சியும் வெற்றிபெறும். பொது வாக ஒரு செயலைத் தொடங்கி, ஜெயமாவதற்கு சூரியன் 11-ல் இருக்கும்போது நேரம் குறித்துக் கொடுத்தால் அது வெற்றியாகும். அது "ஜெயவேளை' எனப்படும். உடன்பிறந்த சகோதர- சகோதரி களால் ஆதாயம், நன்மை உண்டாகும். நண்பர்களினால் சகாயம் ஏற்படும். தன்னம்பிக்கை யும், மனதைரியமும் அதிக மாகக் காணப்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் இருந்தாலும், 8-க்குடைய குரு 7-ல் இருந்து ராசியைப் பார்ப்பது சிறப்பு. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தடை களை முறியடிக்கும். சனி 8-ல் இருந்தாலும், ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி பாதிப்பை ஏற்படுத்தாது. 2-ல் இருக்கும் ராகு குடும்பத்தில் சில குழப்பங்களையும், பொருளாதாரத்தில் பற்றாக்குறையையும் ஏற்படுத்தினாலும், சுக்கிரன் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். 8-ல் உள்ள கேது அலைச்சல் திரிச்சலை ஏற்படுத்தும். திடீர்ப் பயணம் உண்டாகும் என்றாலும், ஆதாயம் தரும் பயணமாக அமையும். அதிர்ஷ்டமும் உண்டாக லாம். சில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். தாமதமாகலாமே தவிர தடையாகாது; கவலைப் பட அவசியமில்லை. ஜாதக தசாபுக்திகள் யோக மாக இருந்தால், சிலருக்கு சொத்துப் பரிவர்த் தனை யோகமும் அமையும். பூர்வீகச் சொத்து கள் வகையில் இருந்துவரும் வில்லங்கம், வியாஜ் ஜியங்கள் சாதகமான முடிவுக்கு வரும். வழக்கு களில் நல்ல தீர்ப்பும் அமையும். தந்தைவழி உறவில் இருக்கும் விரிசல்கள் விலகி ஒற்றுமையுணர்வு ஏற்படும். அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முனைவீர்கள். நேசித்த சொந்தபந்தங்கள் வந்து உதவிசெய்வார்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் சூரியனோடு சம்பந்தம். ஜென்ம ராசியில் ராகு. 7, 10-க்குடைய குரு 6
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
17-2-2019- கடகம்.
19-2-2019- சிம்மம்.
21-2-2019- கன்னி.
23-2-2019- துலாம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.
செவ்வாய்: அஸ்வினி- 4, பரணி- 1.
புதன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2.
குரு: கேட்டை- 4.
சுக்கிரன்: பூராடம்- 2, 3, 4, உத்திராடம்- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார்; 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். கடந்த வாரம் 4-ல் இருந்த ராகு 3-ஆமிடத்துக்கு மாறிவிட்டார். உடல் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். மருத்துவச் செலவுகள் விலகும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான நற்பலன்கள் நடைபெறலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப் பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். 9-ல் கேதுவும், அவருடன் சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். ஆன்மிக வழிபாடும், தெய்வப் பிரார்த்தனைகளும் நிறைவேறும். 8-ல் குரு இருந்தாலும், குரு இருப்பது செவ்வாய் வீட்டில்; அவருக்கு செவ்வாய் பார்வை. எனவே, அட்டமத்து குரு கெடுதல் செய்யாது. திடீர் யோகம். அதிர்ஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு தொழில்வகையில் மாற்றம் அல்லது வேலையில் இடமாற்றம், வேறுசிலருக்கு குடி யிருப்பு மாற்றம் ஆகியவற்றைச் சந்திக்கநேரும். சூரியன் 11-ல் இருப்பதால் எடுத்த காரியங்களும், முயற்சியும் வெற்றிபெறும். பொது வாக ஒரு செயலைத் தொடங்கி, ஜெயமாவதற்கு சூரியன் 11-ல் இருக்கும்போது நேரம் குறித்துக் கொடுத்தால் அது வெற்றியாகும். அது "ஜெயவேளை' எனப்படும். உடன்பிறந்த சகோதர- சகோதரி களால் ஆதாயம், நன்மை உண்டாகும். நண்பர்களினால் சகாயம் ஏற்படும். தன்னம்பிக்கை யும், மனதைரியமும் அதிக மாகக் காணப்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் இருந்தாலும், 8-க்குடைய குரு 7-ல் இருந்து ராசியைப் பார்ப்பது சிறப்பு. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தடை களை முறியடிக்கும். சனி 8-ல் இருந்தாலும், ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி பாதிப்பை ஏற்படுத்தாது. 2-ல் இருக்கும் ராகு குடும்பத்தில் சில குழப்பங்களையும், பொருளாதாரத்தில் பற்றாக்குறையையும் ஏற்படுத்தினாலும், சுக்கிரன் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். 8-ல் உள்ள கேது அலைச்சல் திரிச்சலை ஏற்படுத்தும். திடீர்ப் பயணம் உண்டாகும் என்றாலும், ஆதாயம் தரும் பயணமாக அமையும். அதிர்ஷ்டமும் உண்டாக லாம். சில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். தாமதமாகலாமே தவிர தடையாகாது; கவலைப் பட அவசியமில்லை. ஜாதக தசாபுக்திகள் யோக மாக இருந்தால், சிலருக்கு சொத்துப் பரிவர்த் தனை யோகமும் அமையும். பூர்வீகச் சொத்து கள் வகையில் இருந்துவரும் வில்லங்கம், வியாஜ் ஜியங்கள் சாதகமான முடிவுக்கு வரும். வழக்கு களில் நல்ல தீர்ப்பும் அமையும். தந்தைவழி உறவில் இருக்கும் விரிசல்கள் விலகி ஒற்றுமையுணர்வு ஏற்படும். அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முனைவீர்கள். நேசித்த சொந்தபந்தங்கள் வந்து உதவிசெய்வார்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் சூரியனோடு சம்பந்தம். ஜென்ம ராசியில் ராகு. 7, 10-க்குடைய குரு 6-ல். 7-ல் சுக்கிரன், சனி, கேது. 11-க்குடைய செவ்வாய் ஆட்சி. ஆக, இந்த வாரம் சாதக பாதகம் இரண்டும் கலந்த வாரமாக அமை கிறது. வரவும் உண்டு; செலவும் உண்டு. சில அயிட்டங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறுசேமிப்பாக சேர்த்த பணத்தை, வேறு அயிட்டங்களுக்காக செலவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். ஜாதக தசாபுக்தி களில் 6, 8, 12 சம்பந்தமிருந்தால், ஊர்க்குருவி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத் ததை, ஒரே நொடியில் பருந்து கொள்ளை யடித்துப் போனமாதிரி பறிமுதலாகிவிடும் அல்லது தொலைந்துபோய்விடும். என்றாலும், ராசிநாதன் 9-ல் இருப்பதால், இறைக்க இறைக்க ஊறும் கேணிபோல, செலவு ஆகஆக அந்த இடத்தை நிரப்ப வரவும், வருமானமும் வந்துசேரும். மனைவி அல்லது கணவர் வகையில் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படலாம். பணப்பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். என்றாலும், 5-க்குடைய சுக்கிரன் ராசியைப் பார்க்க, 9-க்குடைய சனி ராசிநாதன் புதனைப் பார்ப்ப தால், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றப்படலாம். அதாவது, 5, 9 என்ற இரண்டு திரிகோணாதிபதிகள் சம்பந்தம் ராசிக்கும், ராசியாதிபதிக்கும் கிடைப்பதால், குருவருளும் திருவருளும் துணைநிற்கும். ஆக, செலவுகளைத் தவிர்க்கமுடியாது என்ற நிலையில், அதை சுபச்செலவாக அல்லது சேமிப்பு செலவாக திட்டமிட்டுச் செய்ய லாமே! ஜென்ம ராகு- எதிர்கால கற்பனை பயத்தை உருவாக்கினாலும், விடாமுயற்சி யாலும், வைராக்கியத்தாலும் துணிந்து செயல்படவேண்டும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 12-ல் ராகுவும், 6-ல் சனி, கேதுவும் இருப்பது நல்ல பலம். ஆனால், ராசிக்கு 4, 11-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவது பலவீனம். என்றாலும் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு ராசியைப் பார்ப்பது அந்த குறையைப் போக்கி, நிறைவாக்கிவிடுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதும், கோடி தோஷம் அகலும் என்பதும் விதி! மேலும், 10-க்குடைய செவ்வாய் 10-ல் ஆட்சி என்பது, உங்கள் கடமைகளை நிறைவேற்றத் தடையில்லை என்பதற்கும், காரியங்களை செயல் படுத்த வீரியம் உண்டு என்பதற்கும் எடுத்துக் காட்டாக அமையும். 9-ஆம் இடத்தை 9-க்குடைய குரு 5-ல் நின்று பார்க்கிறார் என்ற பெருமையை வலியுறுத்தி, குரு வருளும் திருவருளும் உங்களுக்குத் துணை புரியும்; பக்கபலமாகும். எண்ணுகிற எண்ணங்கள் ஈடேறும். நினைக்கிற திட்டங்கள் நிறைவேறும். 2-க்குடைய சூரியனும், 12-க்குடைய புதனும் 8-ல் மறைந்து, 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், எவ்வளவு காசுபணம் கையில் புரண்டாலும், தேவைகள் முழுமையாகப் பூர்த்தியடையாமல் குறைவாக- நிலுவையாக இருக்கும். என்றாலும் புதன் 3-க்கும் உடையவர் என்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் செயல்படுவீர்கள். நண்பர்களும், உடன்பிறப்புகளும் துணைநிற்க சாதனை புரிவீர்கள். ஒரு சிலருடைய அனுபவத்தில் உடன்பிறப்பு களிடையே கருத்துமோதல் காணப் பட்டாலும், நீரடித்து நீர் விலகாது என்றும், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றும் ஆறுதல் அடைந்தால் மாறுதல் உண்டாகும். உண்மையில், இந்த ஜென்மாவில் உடன்பிறப்புகளோடு பிறந்துவிட்டோம்; அடுத்த ஜென்மாவில் யார் யாரோ, எங்கெங்கேயோ! இந்தப் பிறவியில் சொந்தம், சுற்றத்தோடு இணைந்து செயலாற்றி இன்ப மடையலாமே!
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் கும்பத்தில் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாகவே, ராசிநாதனோ அல்லது லக்ன நாதனோ தன் ராசியையும் அல்லது தன் லக்னத் தையும் தானே பார்ப்பது சிறப்பு. எனவே இதுவரை உங்களை மதிக்காமல், மரியாதை தராமல் நடத்தியவர்களும், உங்களை ஒதுக் கியவர்களும் இனி, தாமாகவே உங்களைத் தேடிவருவார்கள்; வந்து உறவுகொண்டாடு வார்கள். சூரியன் பலம் நன்றாக இருப்பதால், மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். எந்த காரியத்தையும் தைரியத்தோடு, துணிவாகச் செயல்படுத்தி வெற்றிகாணலாம். இதற்கு, அடுத்தவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தள்ளிச்சென்ற காரியங்கள் முடிவுக்குவரும். 11-ஆம் இடத்து ராகு- தொழில் முன்னேற்றம், தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி அதற்காக வங்கியில் கேட்ட கடனுதவி ஆகியவையெல்லாம் கிடைக்கப்பெற்று வெற்றி காணலாம். கேது 5-ல் இருப்பது, பிள்ளைகளின் நற்பலனுக்கு வித்து அமைத் திடும். இழுத்தடித்துக் கொண்டிருக்கும் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சாதகமான முடிவுபெறும். உடன்பிறந்த வகையில் தாமரை இலை தண்ணீர்போல, ஒட்டியும் ஒட்டாமலும் உறவு இருக்கும். காலம் மாறும்போது அவை சரியான நிலைபெறும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல், 12-க்குடைய சூரியனோடு இருக்கிறார். 6, 8, 12-ஆம் அதிப திகள் அதே இடத்திலோ அல்லது ஒன்று கூடியோ இருந்தால் யோகங்கள் உண்டாகும். இந்த அடிப்படையில் 12-க்குடையவர் 12-ஆமிடத்தையே பார்ப்பதால், விபரீத ராஜயோகம் ஏற்படலாம். 4-ல் உள்ள கேதுவும் சனியும் உடல்நலத்தில் ஆரோக்கியத் தொல்லை களைத் தரலாம். பூமி, வீடு, வாகன வகையில் சில பிரச்சினைகள் தோன்றி மறையும். கேது, குரு வீட்டில் இருப்பதால், மேற்கண்ட பிரச்சினை களால் பெரிய பாதிப்புகளோ சங்கடங்களோ நிகழாது. குரு 3-ல் நின்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், குலதெய்வ வழிபாடு குடும்பத் தைக் காக்கும். 11-ல் நின்ற ராகு 10-ல் மாறி யிருக்கிறார். அரசு அல்லது தனியார்துறையில் பணிபுரிவோருக்கு இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் பிரச்சினையும், மனசங்கடமும் உருவாகும். 8-க்குடைய செவ்வாய் 8-ல் ஆட்சிபெற்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவினாலும், அதை சமாளிக்கலாம். அதற் குண்டான முயற்சியும் வெற்றிபெறும். 3-ல் உள்ள குரு உடன்பிறந்தவர்களால் உதவியை யும் அனுகூலத்தையும் தருவார்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 3-ல் உள்ள கேதுவும், சனியும் நல்ல இடத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் ராசிநாதன் சுக்கிரன் இணைந்திருக்கிறார். எதிர் பாராத மாற்றங்கள் வந்துசேரும். அவை நல்ல மாற்றாக நிகழும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தாயின் உடல்நலம் சீராகும். ராகு- கேதுப் பெயர்ச்சி நல்ல ஏற்றத்தைத் தரும். 9-ல் உள்ள ராகு உங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை பெறும். சகாய ஸ்தான கேது- ஆன்மிக வழிபாடுகள் செய்வ தன்மூலம் முயற்சிகளில் வெற்றி தருவார். 2-ல் உள்ள கேது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவார். பற்றாக்குறை நிலைமை மாறி பணப்புழக்கம் சரளமாக அமையும். தொழில்ரீதியான வெளியூர்ப்பயணம் ஆதாயம் தரும். 2, 7-க்குடைய செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று ராசியையும் பார்க்கிறார்; 2-ஆமிடத் தையும் பார்க்கிறார். திருமணவயதை ஒட்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண வாய்ப்பும், முயற்சியும் கைகூடும். கணவன்- மனைவிக்குள் அன்பும், ஆதரவும், அன்யோன் யமும் அதிகமாகும். 5-ல் சூரியனும் புதனும். பிள்ளைகள்வகையில் சஞ்சலங்களை ஏற்படுத் தினாலும், 5-க்குடைய சனி 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். மலைபோல வரும் துன்பங்கள் பனிபோல விலகும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுக்கும் செயல்பாடு பூர்த்தியாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு என்றாலும், ஆட்சி பெறுகிறார். ஆட்சி, உச்சம் பெற்ற கிரகத்துக்கு மறைவு தோஷமில்லை. தீயணைப்பு வண்டிக்கும், 108 அவசர ஆம்புலன்ஸிற்கும், காவல்துறை வாகனத்துக்கும் ஒருவழிப்பாதையில் (நோ என்ட்ரி) செல்ல சட்டதிட்டம் விதிவிலக்கு உண்டல்லவா! அதுமாதிரி சில கிரகங்களுக்கும் சில காரணங்களால் விதிவிலக்கு உண்டு. அதேபோல 6-ஆம் இடத்துச் செவ்வாய் 6-ஆம் பாவத் தொல்லைகளை வேரோடு விலக்கிவிடும். அதாவது எதிரி, கடன், வைத் தியச்செலவு,போட்டி, பொறாமைகள் போன்ற ஆறாம் இடத்துத் தொல்லைகள் அணுகாது. சத்ரு ஜெயம், நோய் நிவாரணம், கடன் நிவர்த்தி என்பது ஜோதிடவிதி. மேலும் 2, 5-க்கு டையவர் ஜென்மத்தில் நின்று 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்ப்ப தால், மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. மனைவி, மக்கள் வகை, சொந்தபந்தம் அன்பு ஆதரவும் கொஞ்சமில்லை. காசு பணம், பொருளாதாரமும் வஞ்சமில்லை. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணிய திண்ணியராகப் பெறின்' என்ற குறளுக்கேற்ற மாதிரி வைராக்கியத் தாலும், விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கை, தைரியத்தாலும் சாதனை புரிந்து, வெற்றிக் கனியைப் பறிக்கலாம். வேதனைகளையும், சோதனைகளையும் விரட்டியடிக்கலாம். ஏழரைச்சனியின் கடைசிக்கட்டம். இதுவரை மங்குசனியாக உங்களை மயங்கவைத்த சனி- தயங்கவைத்த சனி இனி, பொங்குசனியாக மாறி பொலிவைத் தருவார்- பூரிப்பைத் தருவார்- புனிதமடையச் செய்வார்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு என் றாலும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 5-ல் ஆட்சி பெற்று, 8-ஆம் பார்வையாக குருவைப் பார்க்கிறார். எந்த ஒரு கிரகம் மறைவு பெற்றாலும், அந்த கிரகம் ஆட்சி, உச்சமாக இருந்தாலும், அதற்கு வீடு கொடுத்த கிரகத்தின் பார்வை அல்லது சம்பந்தம் பெற் றாலும், நவாம்சக் கட்டத்தில் ஆட்சி, உச்ச கதியாக அமர்ந்தாலும் மறைவு தோஷம் மாறி நிறைவாகிவிடும். இது தசாபுக்திகளுக்கும் பொருந்தும்- கோட்சார அமைப்புக்கும் பொருந்தும்! மறைவுக்குப் பலன் இல்லையா என்ற சந்தேகம் வரலாம். உண்டு. ஆனால், அதன் கெடுதல்கள் விலகி நல்லது சற்று தாமதமாக நடக்கும்! ட்யூப் லைட் சுவிட்சைப் போட்டதும் சில வினாடிகள் கழித்து சுடராக எரிவது போல! கற்பூரம் பற்றவைத்ததும் உடனே பற்றிக் கொள்ளும். எது எப்படிப் போனாலும், ஜென்மத்தில் குரு இருப்பது சிறப்புதான். "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பதுபோல, குருவுக்கும் குணம் உண்டு. அதனால்தான் "நல்லாரைக் காண்பதும் நன்று. நல்லாரோடு இணங்குவதும் நன்று. நல்லர்; சொல் கேட் பதுவும் நன்று' என்று பெரியோர்கள் பெருமை யாகச் சொல்லியிருக்கிறார்கள். குரு நல்லவர்! வல்லவர்! எந்த குறையும், தோஷமும் இல்லாத வர். அதனால்தான் அவருக்கு குரு என்று பேர். "கு' என்றால் இருட்டு, "ரு' என்றால் போக்குகிறவர்! இருளைப் போக்குகிறவர். ஒளியை உண்டாக்குகிறவர். அப்படிப்பட்டவர் ஜென் மத்தில் இருப்பதால், உங்களுக்கு ஏழரைச் சனியின் காலம் ஜென்மச்சனியாக அமைந் தாலும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்பலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஜென்மத்தில் இருந்த கேதுவும், 7-ல் இருந்த ராகுவும் கடந்தவாரம் மாறியது ஒரு பெரிய விடுதலை என்று கூறலாம். ஏழரைச்சனி நடந்தாலும், சனி ராசிநாதன் என்ற அடிப்படையில் பாதிப்புகள் வராது. 12-ல் இருக்கும் கேது தடை, தாமதங்களை விலக்குவார். இடையூறு சக்திகள் அகலும். வீடு மாற்றங்கள் விரும்பியவகையில் அமையும். சிலர் வெளிநாட்டுப் பயணமோ அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி எடுப்பதோ கைகூடும். 6-ல் உள்ள ராகு நோய் நொடி, கடன் சுமை, போட்டி, பொறாமை ஆகியவற்றை ஒழிப்பார். உத்தியோகத்தில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். பணியின் காரண மாக சுமைகூடினாலும், ஓய்வற்ற உழைப் பாக இருந்தாலும் ஆதாயம் உண்டு. படிப் பிற்கேற்ற வேலை இல்லையே என்று கவலைப் பட்டவர்களுக்கும் நல்ல உத்தியோகம் அமையும். 11-ல் உள்ள குரு 3, 5, 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், உடன்பிறப்பு, பிள்ளைகள் வகையில் பாராட்டும் நன்மையும் ஏற்படும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை யும், அனுசரிப்புத் தன்மையும் உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். புதிய நட்பால் வியாபாரத்தை விருத்தி செய்யலாம். கொடுக்கல்- வாங்கலில் சீரான பலன் இயங்கும். தேகசுகம் தெளிவாக இருக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று கும்ப ராசியையே பார்க்கிறார். திறமை, செயல்பாடு, புகழ், கீர்த்தி, செல்வாக்கு இவையெல்லாம் சிறப் பாக செயல்படும். கடந்த வாரம் நடைபெற்ற ராகு- கேதுப் பெயர்ச்சி, கும்ப ராசிக்கு கூடுதல் பலமாக அமையும். கேது 11-ல் இருப்பது தொழில் லாபத்தைத் தரும். பணவரவும் கூடும். சிலர் வீடு கட்டும் முயற்சியில் இறங்கி யிருந்து, வங்கிக்கடனுக்காகக் காத்திருப் போருக்கு கடனுதவி கிடைக்கும். 3-ல் செவ்வாய் ஆட்சி. சகோதர வகையில் அல்லது சகோதரி வகையில் ஒற்றுமையும் பாச உணர்வும் அதிகரிக்கும். 10-ல் உள்ள குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில்ரீதியாக லாபங்கள் பெருகும். 7-க்குடைய சூரியன் ஜென்மத்தில் இருப்பதால், தொட்ட காரியமெல்லாம் ஜெயமாகும். பெரியோரின் ஆசியும் கிடைக்கப்பெறும். என்ன தான் ஆசி, தெய்வ அனுகூலம் இருந்தாலும், அதிக பணவரவு கண்ணை மறைக்காமல் பணிவுடனும், பண்புடனும், தன்னடக்கத் துடனும் நடந்துகொள்வது மிக அவசியம். எவ்வளவு வசதி வந்தாலும், அடக்கத்துடனும் அமைதியுடனும் இருந்தால்தான் "போடா, ஆண்டவனே நம்ம பக்கம்தான்' என்று பெருமையாக மார்தட்டிக்கொள்ளலாம். இது பொதுவான ஒரு கருத்துதானே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய செவ்வாய் 2-ல் ஆட்சி. அவர் குருவைப் பார்க்கிறார். கிட்டத்தட்ட குரு- செவ்வாய் பரிவர்த்தனைபோல எடுத்துக்கொள்ளலாம். விட்டுப்போன சொந்தபந்தங்கள் ஒன்று சேரலாம். விலகிப்போன தொழில்முறைகள் மீண்டும்வந்து ஒட்டிக்கொண்டு, புதிய முயற்சிகளோடு செயல்படுத்தலாம். 10-ல் மாறிய கேது புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளை உண்டாக்குவார். வேற்றினத்தவ ரால் உதவியும் நன்மையும் ஏற்படும். உங்கள் தொழிலில் கூட்டாளியாகச் சேர பலர் முன்வருவர். ஏற்கெனவே கூட்டு சேர்ந்தவர்கள் காலை வாரிவிட்டு துரோகம் செய்ததை நினைத்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். தொழிலிலும், செலவிலும் அகலக்கால் வைக்காமல், சிக்கனத்தையும் கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும். 4-ல் உள்ள ராகு உடல்நலத்தில் சிறுசிறு தொல்லைகளை ஏற்படுத்துவார். தாயின் ஆரோக்கியத்தில் வைத்தியச்செலவுகள் உண்டாகும். குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றல், திறமையும் உண்டு என்பதால் கவலைப்பட வேண்டாம். உடன்பிறந்த சகோதரர்களால் மனவருத்தமும், பகையும் இருந்தாலும், "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்ற அடிப்படையில் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். "நீரடித்து நீர் விலகாது' என்பதை கருத்தில்கொண்டு செயல்படுங்கள்.