மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எந்த காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.
சுக்கிரன் திங்கட்கிழமை முதல் 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றி வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். அதிகாரிகள் ஆதரவு மிகமிகநன்றாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் சில உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியும்.
தற்போது உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் வரும் திங்கட்கிழமைமுதல் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக ஒருசில ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய அமைப்புகள், அசையா சொத்துவகையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய உதவியை நம்பாமல் எதிலும் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மறைமுகப் போட்டிகள் காரணமாக அடையவேண்டிய லாபத்தை அடைய இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம்செலுத்த வேண்டிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். ஒருசில நேரங்களில் கோபப்படாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 10-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நன்மை தரும்

பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்து அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்கமுடியும். போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளக் கூடிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத்தரும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக்குறைத்துக்கொண்டு உங்களுடைய படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நீங்கள்நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் வலுவாக இந்த வாரத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நீண்ட நாட்களாக உங்களுக்கு தடைப்பட்டு வந்த ஒரு
நல்ல காரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வரும் திங்கட்கிழமை முதல் 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில்அனுகூலங்கள், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உங்களைத்தேடி வரும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
நண்பர்கள் மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ராசியாதிபதி சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 9, 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தற்போது விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் வரும் திங்கட்கிழமை முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த வீண்செலவுகள் எல்லாம் குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்குஅனுகூலமான பலன்கள் ஏற்படும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக்குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பை நம்பாமல் எதிலும் நேரடியாக நீங்கள் இருந்து செயல்பட்டால்தான் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு சட்டரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பதுநல்லது. மாணவ- மாணவியர் கள் உணர்ச்சி வசப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்,அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஒரு பெரிய மனிதருடைய நட்பானது உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
தொழில் ரீதியாக பார்க்கின்றபொழுது நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக நன்றாக இருக்கும். சில விஷயங்களை நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர் பாராத அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கௌரவமான நிலை ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 12, 13.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் இந்த வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 8-ல் குரு சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவதன்மூலம் இருக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது.
ஒருசிலருக்கு கூட்டாளிகள்மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில்கூட மனைவி, பிள்ளைகளிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10, 11.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம்,அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் 9-ல் புதன், திங்கட்கிழமைமுதல் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகமிக சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த கவலைகள் எல்லாம் தற்போது மறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களது வளர்ச்சியானது மிகச்சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் நிமித்தமாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 13.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும் ராசியாதிபதி குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் செலவுகள் ஏற்பட்டு உங்களின் கையிருப்பு குறையும். வரவுக்கு மீறிய வீண்செலவுகளால் மனநிம்மதி குறையக் கூடிய நேரமாகும். சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் திங்கட்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் உதவியை நம்பாமல் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்களே நேரடியாக இருந்து செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களைச் சொல்வார்கள். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பழகுகின்ற பொழுது கவனமாக பழகுவது நல்லது. லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் நீங்கள் எதிலும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாகஅனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் உடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்கமுடியாத பணிகளைகூட வருகின்ற நாட்களில் சிறப்பாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் திங்கட்கிழமை முதல் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகுபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது உத்தமம்.
தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கக்கூடிய நேரமென்பதால் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பைகூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை பொதுஇடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்துக்கு சாப்பிடுவது தற்போதைக்கு உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் மிகவும் நிதானத்தோடும், பொறுமையோடும் செயல்படவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு பெண்கள் வழியில் தேவையில்லாத வீண்செலவுகள் ஏற்படும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத் துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். பேச்சால் வீண்வம்புகள் வரக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ஒருசில தேவையற்ற நிகழ்வுகளால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும்.
உணர்ச்சி வசப்படாமல்நிதானத்தோடு செயல்படுவதன்மூலமாக ஒருசில அனுகூல பலன்களை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு உங்களது மன நிம்மதி யானது குறையும். நம்பியவர்களே உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள் என்பதால் முக்கிய விஷயங்களை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரித்து வருவது நல்லது. ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்வார்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 13.
- முனைவர் முருகுபாலமுருகன்