ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
24-9-2018- மீனம்.
27-9-2018- மேஷம்.
29-9-2018- ரிஷபம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2, 3.
புதன்: அஸ்தம்- 2, 3, 4, சித்திரை- 1.
குரு: விசாகம்- 3.
சுக்கிரன்: சுவாதி- 4, விசாகம்- 1.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் தொடர்ந்து 10-ல் உச்சம் என்பதால், உங்களுடைய செயல்களிலும் காரியங்களிலும் எந்தக் குறையும் இல்லை; பாதிப்பும் இல்லை. அதேசமயம் செவ்வாயுடன் கேது சம்பந்தம்- ராகு பார்வை என்பதால், சிறுசிறு இடையூறுகளும் குறுக்கீடுகளும் ஏற்பட்டாலும் அவர்களுக்கு வீடு கொடுத்த சனி (10-க்குடையவர்) 9-ல் தனுசு ராசியில் அமர்வது தர்மகர்மாதிபதி யோகமாகும். சனிக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதுடன், ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். தொழில்வளம், உடல்நலம், மன நலம் எல்லாம் மேன்மையாக இருக்கும். 4-ல் ராகு, 6-ல் சூரியன். உங்களுக்கோ பிள்ளைகளுக்கோ சிறுசிறு வைத்தியச்செலவுகளும், பிணிபீடைகளும் வந்து விலகும். தொழில்துறையில் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தாவிட்டாலும் ஓரளவு முன்னேற்றத்தையும் திருப்தியையும் தரும் என்பது உறுதி. புதிய முயற்சிகள் கைகூடும். பழைய தொழில்துறையில் சீர்திருத்தங்களும் உபகிளைகளும் நூதன திட்டங்களும் வெற்றிபெறும். குடும்பத்தில் அனுசரணையும் அன்பும் ஆதரவும் பெருகும். சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். திருமணம், மகப்பேறு, காதணி விழா, கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் வைபவங்களும் இடம்பெறும். சிலர் ஆடம்பரக் கேளிக்கை விழாக்களில் கலந்துகொள்ளலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா, தெய்வத்திருத்தல யாத்திரை, ஆலய தரிசனங்களை மேற்கொள்ளலாம். ஜாதி சமய சங்கங்களில் அங்கம் வகிக்கலாம். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், நற்பணி மன்றம் போன்ற சமூக, சமுதாயப் பணிகளில் ஈடுபடலாம். உள்ளூரில் நல்ல வேலையும் நிரந்தர சம்பளமும் இல்லாதவர்கள் வெளிநாட்டு வேலைக்குப்போய் கைநிறைய சம்பாதிக்கலாம். சொந்த வீட்டுக் கனவுத் திட்டங்களை நிறைவேற்றலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு என்றாலும் சொந்த வீட்டில் ஆட்சி! அவருடன் குரு சேர்க்கை! பொதுவாக சுக்கிரன் அசுர குரு என்றும் குரு, (வியாழன்) தேவகுரு என்றும் சொல்லப்படும். அதனால் இருவருக்கும் பகைத்தன்மை உண்டு என்றும் சொல்வார்கள். அந்த வாதம் தவறு! அசுரர்களுக்கும் தேவர்களுக்கும்தான் பகையே தவிர, இருதரப்பு குருவுக்கும் பகையில்லை. மேலும் குருவின் வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். பகைவரின் வீட்டில் எப்படி உச்சபலம் பெற முடியும்? வாதிக்கும் பிரதிவாதிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விவகாரம் இருக்கலாம். அவர்கள் இருவரும் பகைவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்காக வாதாடும் இருதரப்பு வக்கீல்களும் பகைவர்களாவதில்லை. கோர்ட்டில் சண்டைபோட்டு வழக்காடினாலும் வெளியில் வந்ததும் சேர்ந்துபோய் காப்பி டீ சாப்பிடுவார்கள். எனவே குருவுக்கும் சுக்கிரனுக்கும் நேரடிப் பகையுமில்லை; மோதலுமில்லை என்பதோடு, இருவரும் சேர்ந்திருப்பதால் உங்களுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. மேலும் ராசிக்கு ஆறாமிடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம் என்பதால், தொழில்துறையிலும், வேலை அல்லது உத்தியோகத்திலும் நல்ல முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்களும்- வேலைக்கு இருப்போர் சொந்தத்தொழில் ஆரம்பிக்கவும் அல்லது கூட்டுத்தொழில் ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் உருவாகும். அதன் காரணமாக முதலீட்டுப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கலாம். அல்லது போட்டி பொறாமைகளை சந்தித்து முன்னேறலாம். எதுவானாலும் எதிரிகள் உதிரிகளாகிவிடுவார்கள். போட்டி பொறாமைகளை வாட்டி வதைத்து விரட்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
24-9-2018- மீனம்.
27-9-2018- மேஷம்.
29-9-2018- ரிஷபம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2, 3.
புதன்: அஸ்தம்- 2, 3, 4, சித்திரை- 1.
குரு: விசாகம்- 3.
சுக்கிரன்: சுவாதி- 4, விசாகம்- 1.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் தொடர்ந்து 10-ல் உச்சம் என்பதால், உங்களுடைய செயல்களிலும் காரியங்களிலும் எந்தக் குறையும் இல்லை; பாதிப்பும் இல்லை. அதேசமயம் செவ்வாயுடன் கேது சம்பந்தம்- ராகு பார்வை என்பதால், சிறுசிறு இடையூறுகளும் குறுக்கீடுகளும் ஏற்பட்டாலும் அவர்களுக்கு வீடு கொடுத்த சனி (10-க்குடையவர்) 9-ல் தனுசு ராசியில் அமர்வது தர்மகர்மாதிபதி யோகமாகும். சனிக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதுடன், ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். தொழில்வளம், உடல்நலம், மன நலம் எல்லாம் மேன்மையாக இருக்கும். 4-ல் ராகு, 6-ல் சூரியன். உங்களுக்கோ பிள்ளைகளுக்கோ சிறுசிறு வைத்தியச்செலவுகளும், பிணிபீடைகளும் வந்து விலகும். தொழில்துறையில் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தாவிட்டாலும் ஓரளவு முன்னேற்றத்தையும் திருப்தியையும் தரும் என்பது உறுதி. புதிய முயற்சிகள் கைகூடும். பழைய தொழில்துறையில் சீர்திருத்தங்களும் உபகிளைகளும் நூதன திட்டங்களும் வெற்றிபெறும். குடும்பத்தில் அனுசரணையும் அன்பும் ஆதரவும் பெருகும். சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். திருமணம், மகப்பேறு, காதணி விழா, கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் வைபவங்களும் இடம்பெறும். சிலர் ஆடம்பரக் கேளிக்கை விழாக்களில் கலந்துகொள்ளலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா, தெய்வத்திருத்தல யாத்திரை, ஆலய தரிசனங்களை மேற்கொள்ளலாம். ஜாதி சமய சங்கங்களில் அங்கம் வகிக்கலாம். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், நற்பணி மன்றம் போன்ற சமூக, சமுதாயப் பணிகளில் ஈடுபடலாம். உள்ளூரில் நல்ல வேலையும் நிரந்தர சம்பளமும் இல்லாதவர்கள் வெளிநாட்டு வேலைக்குப்போய் கைநிறைய சம்பாதிக்கலாம். சொந்த வீட்டுக் கனவுத் திட்டங்களை நிறைவேற்றலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு என்றாலும் சொந்த வீட்டில் ஆட்சி! அவருடன் குரு சேர்க்கை! பொதுவாக சுக்கிரன் அசுர குரு என்றும் குரு, (வியாழன்) தேவகுரு என்றும் சொல்லப்படும். அதனால் இருவருக்கும் பகைத்தன்மை உண்டு என்றும் சொல்வார்கள். அந்த வாதம் தவறு! அசுரர்களுக்கும் தேவர்களுக்கும்தான் பகையே தவிர, இருதரப்பு குருவுக்கும் பகையில்லை. மேலும் குருவின் வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். பகைவரின் வீட்டில் எப்படி உச்சபலம் பெற முடியும்? வாதிக்கும் பிரதிவாதிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விவகாரம் இருக்கலாம். அவர்கள் இருவரும் பகைவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்காக வாதாடும் இருதரப்பு வக்கீல்களும் பகைவர்களாவதில்லை. கோர்ட்டில் சண்டைபோட்டு வழக்காடினாலும் வெளியில் வந்ததும் சேர்ந்துபோய் காப்பி டீ சாப்பிடுவார்கள். எனவே குருவுக்கும் சுக்கிரனுக்கும் நேரடிப் பகையுமில்லை; மோதலுமில்லை என்பதோடு, இருவரும் சேர்ந்திருப்பதால் உங்களுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. மேலும் ராசிக்கு ஆறாமிடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம் என்பதால், தொழில்துறையிலும், வேலை அல்லது உத்தியோகத்திலும் நல்ல முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்களும்- வேலைக்கு இருப்போர் சொந்தத்தொழில் ஆரம்பிக்கவும் அல்லது கூட்டுத்தொழில் ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் உருவாகும். அதன் காரணமாக முதலீட்டுப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கலாம். அல்லது போட்டி பொறாமைகளை சந்தித்து முன்னேறலாம். எதுவானாலும் எதிரிகள் உதிரிகளாகிவிடுவார்கள். போட்டி பொறாமைகளை வாட்டி வதைத்து விரட்டிவிடலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி, உச்சம்! அவருடன் தைரிய ஸ்தானாதிபதி சூரியன் சம்பந்தம். 7, 10-க்குடைய குரு 5-ல் சுக்கிரனோடு சேர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதனால் எதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும், எல்லாரும் உங்கள் சொல்லைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டும் என்றும், உங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் விரும்புவீர்கள்; செயல்படுவீர்கள். உங்கள் விருப்பம் பரிபூரணமாக நிறைவேறும். அதற்குப் பக்கபலமாக உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார், நண்பர்கள் அனைவரும் தோள் கொடுப்பார்கள்- துணை நிற்பார்கள். ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரு கை தட்டவேண்டும். உங்கள் அமைப்புக்கு பல கைகள் இணைந்த கைகளாகி ஓசை எழுப்பும். 2-ல் ராகு இருப்பதால் மற்றவர்களின் பிரச்சினைகளில் ஆர்வமும் அக்கறையும் காட்டி, சீர்திருத்தி செயல்பட்டு பேரும்பெருமையும் அடையும் நீங்கள், சொந்தக் குடும்பத்தில்- சொந்தப் பிரச்சினைகளில் கண்டும் காணாதவர்களாக இருப்பதால் குடும்பத்தாரின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்படத்தான் செய்யும். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பவராக செயல்பட்டால் குடும்பத்தாரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகலாம். இதையே வள்ளுவர் "எண்ணித்துணிக கருமம்- துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்றார். அதுமட்டுமல்ல; "எள்ளாத எண்ணிச்செயல் வேண்டும். தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு' என்றும், "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்றும் கூறியுள்ளார். அதன்படி எதை, எப்படி, யாரால் செயல்படுத்த வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டால் சிறப்புகள் தேடிவரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகு நிற்க, 7-ல் செவ்வாயும் கேதுவும் நின்று பார்க்கிறார்கள். செவ்வாய் கடக ராசிக்கு 5, 10-க்குடையவர். 10-ஆம் இடத்தை 9-க்குடைய குருவும் பார்க்க- செவ்வாயும் பார்க்கிறார். தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. தொழில்துறையிலும், வாழ்க்கையிலும் உங்களுடைய எல்லா முயற்சிகளிலும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். தோல்விக்கும் இடமில்லை; தொய்வுக்கும் இடமில்லை. தொட்டது துலங்கும். ராகு- கேது சம்பந்தம் இருப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சிறுசிறு தடைகளும் குழப்பங்களும் இடையூறுகளும் ஏற்பட்டாலும், உங்களுடைய விடாமுயற்சியாலும் வைராக்கியத்தாலும் முடிவில் வெற்றியை அடையலாம். 2-க்குடைய சூரியன் 3-ல் விரயாதிபதி புதனோடு சேர்க்கை. அதற்கு 8-க்குடைய சனி பார்வை என்பதால் குடும்பத்தில், உடன்பிறப்புக்கள் வகையில், மனைவிவழியில் தவிர்க்கமுடியாத செலவுகளைச் சந்திக்க நேரும். சிலசமயம் அவை சுபமங்களச் செலவாகவும் அமையலாம். மொய்ச்செலவு, விருந்துச்செலவு, அன்பளிப்புச் செலவு, விசேஷச் செலவாகவும் இருக்கலாம். நஷ்டச்செலவுக்கு இடமில்லை. சிலருக்கு வாங்கிய கடனுக்கு வட்டிச்செலவாகவும் அமையலாம். வேறுசிலருக்கு பயணச் செலவும், அலைச்சல் செலவாகவும் அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளையும் திட்டங்களையும் வகுப்பீர்கள். படிப்பு, சேமிப்பு, இன்சூரன்ஸ் போன்ற வகையில் சுபமுதலீடு செய்யும் நிலை ஏற்படலாம். பொதுவாக எல்லாம் சுபச்செலவுகள்தானே தவிர, வீண் செலவுக்கு இடமில்லை. திருப்தியான செலவுகள்தான். மகிழ்ச்சியான செலவுகள் மனநிறைவான செலவுகள்!
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல்- கன்னியில். அந்த வீட்டுக்குடைய புதனோடு சேர்க்கை! சூரியன் தொடக்கத்தில் சுயசாரத்திலும் (உத்திரம்), வாரக்கடைசியில் விரயாதிபதியான சந்திரன் சாரத்திலும் சஞ்சாரம்! சிம்ம ராசிக்கு 4, 9-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று சிம்ம ராசியைப் பார்க்க, செவ்வாய்க்கு வீடு கொடுத்த சனி 5-ல் நின்று சூரியன்- புதனைப் பார்க்கிறார். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பூமி, வீடு, வாகன யோகம் அமையும். டூவீலர் வைத்திருப்பவர்கள், கார் வாங்கலாம். கார் வைத்திருப்பவர்கள் பழைய வண்டியைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கலாம். அதற்கு வங்கிக்கடன் வசதி கிடைக்கும். குடும்பத்தில் ஆடை, அலங்காரம், பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அது சுபச்செலவுதான். வேலை செய்யும் இடத்தில் திருப்தியும் முன்னேற்றமும் உண்டாகும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி, ஊதிய உயர்வு, மேலதிகாரியின் பாராட்டு போன்ற நற்பலன்கள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சகாயமும் எதிர்பார்க்கலாம். லாப ஸ்தானத்தை 5, 8-க்குடைய குரு பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையலாம். சிலருக்கு லாட்டரி- ஸ்பெகுலேஷன் போன்ற துறையிலும் அதிர்ஷ்டக்காற்று அரவணைக்கும். ரேஸ், சீட்டாட்டம் போன்ற வகையிலும் சிலர் ஈடுபட்டு லாபம் பார்க்கலாம். சுபவிரயமும் உண்டு. லாப விரயமும் உண்டு. தகப்பனார்- தாயார்- பாட்டனார்- பாட்டி வகையில் எதிர்பாராத வைத்தியச்செலவுகள் வர வாய்ப்புண்டு. அல்லது சொத்துப் பிரச்சினைகளில் செலவு ஏற்படலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் தன் ராசியில் ஆட்சி! அவருடன் விரயாதிபதியான சூரியன் சம்பந்தம். சூரியன் தொடக்கத்தில் சுயசாரத்திலும் (உத்திரம்), பிறகு சந்திரன் சாரத்திலும் (அஸ்தம்) சஞ்சாரம். எனவே வார முற்பகுதியில் தவிர்க்க முடியாத விரயச்செலவுகளும், பிற்பகுதியில் லாபமும் உண்டாகும். சிலர் லாப விக்கிரயம் செய்யலாம். அல்லது சொத்துப் பரிவர்த்தனை செய்யலாம். ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை வாங்கலாம். அதேபோல ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறலாம். அந்த ஒன்றைப் பெறவும் அதற்கென்று ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்துதான் மற்றதைப் பெறவேண்டும். இதற்குக் காரணம் 3, 8-க்குடைய செவ்வாய் 5-ல் உச்சம் பெற்று கேது- ராகு சம்பந்தம் பெறுவதே. "கொண்டு வந்தால் தந்தை- கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்- சீர் கொண்டு வந்தால் சகோதரி- கொலையும் செய்வாள் பத்தினி- உயிர் காப்பான் தோழன்' என்று "தூக்குத் தூக்கி' என்ற நாடகத்திலும் திரைப்படத்திலும் ஐந்து வாசகங்கள் வரும். இன்றைய நடைமுறையில் இவை சர்வசாதாரணமாக நடக்கிறது- "இதெல்லாம் சகஜமப்பா' என்பதுபோல! உயிர் காப்பான் தோழன் என்ற வாசகத்துக்கு பதில் "உயிர் கேட்பான் தோழன்' என்று நிலை மாறிவிட்டது. எல்லாம் அர்த்தாஷ்டமச்சனி- நாலாமிடத்துச்சனி படுத்தும் பாடு! 2-ல் குரு, சுக்கிரன். கொடுக்கல்- வாங்கல் சீராக இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். அதேசமயம் 6-க்குடைய சனி 6-ஆம் இடத்தைப் பார்க்க, குருவும் அதே 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன், வைத்தியச்செலவு, எதிர்ப்பு, போட்டி முதலிய ஆறாம் இடத்துப் பலன்கள் இருக்கத்தான் செய்யும். அதில் எதிர்நீச்சல் போடத்தான் வேண்டும் என்றாலும் கரையேறிவிடலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். ஆரம்பத்தில் ராகு சாரம். (சுவாதி). பிறகு குரு சாரம். (விசாகம்). ஜென்ம குரு, ஜென்ம சுக்கிரன். சோர்வு நீங்கி, தளர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டு முன்னேறலாம். 4-ல் கேது, 10-ல் ராகு. ஆன்மிகத்துறையில் ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். தீவிரமாக செயல்பட்டு மன நிறைவும் திருப்தியும் அடையலாம். அப்பர் சுவாமிகள்போல உழவாரப்பணியும் தெய்வத்தொண்டும்செய்து மன மகிழ்ச்சி அடையலாம். 9-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதால், ஆன்மிகத் தொடர்பும், ஜோதிட ஆர்வமும், ஞானமும், தியானம், யோகா போன்ற மார்க்கத்தில் ஈடுபாடும் ஏற்படும். சிலருக்கு வைத்தியத்திலும் (வைத்தியம் கற்பதில்) ஆர்வம் ஏற்படலாம். ஜாதகரீதியாக 5, 9-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் கோவில் நிர்வாகப் பொறுப்பு- பூஜை வழிபாடு, அர்ச்சகர் பணியிலும் ஈடுபடலாம். சிலர் அருள்வாக்கு, குறி சொல்லலாம். 6, 8, 12-க்குடைய தசாபுக்தி சம்பந்தம் இருந்தால் மேற்கண்ட புனிதத் துறையில் மாற்று மனம் உண்டாகி மாந்திரீகம், சம்பாத்தியம் என்று முறைகேடான வருமானம் பார்க்கலாம். உண்மையில் அது நல்லதல்ல- வாரிசுக்கும் வம்சத்துக்கும் விருத்தியில்லை. கத்தியெடுத்தவன் வாழ்வு கத்தியாலேயே முடிந்துவிடும் என்பதுபோல கெடுதலான மாந்திரீகமே அவர்களைக் கெடுத்துவிடும். அதனால் தான் நல்லது என்றும், கெட்டது என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். நல்லது தேன் போன்றது. தானும் கெடாது; தன்னுடன் சேர்ந்த பொருளையும் கெடுக்காது. கெட்டது அழுகிப்போன பூவைப்போல தன்னுடன் சேர்ந்த நல்ல பூவையும் அழுகச்செய்யும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். 9-க்குடைய சந்திரன் சாரம். (திருவோணம்). செல்வாக்கு, பெருமை, திறமை எல்லாம் இருந்தும் சத்திய சோதனைக்கு ஆளாகச் செய்யும். சோதனை என்பது சத்தியத்துக்குத்தானே! அசத்தியத்துக்கு அல்லவே. அது ஏனென்றால் செவ்வாய், கேது- ராகு சம்பந்தம் பெறுவதும், சந்திரன் வீட்டில் ராகு இருப்பதும்தான்! சூரியன், சந்திரன் இவர்களோடு ராகு- கேது இணையும் போதுதான் கிரகண தோஷம் ஏற்படுகிறது. சந்திரன் மனோகாரகன். உங்கள் ராசியில்தான் அவர் நீசமடைவார். அதனால் உங்கள் மனமும் உடலும் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு பாதிப்பை அடையும் நிலை உண்டாகும். "மனமது செம்மையானால் மந்திரமது ஜெபிக்க வேண்டாம்' என்பது பழமொழி. ஆகவே மனம் தெளிந்த நீரோடையாக இருக்கவேண்டும். அதற்கு மனப்பக்குவம் என்று பேர். சந்திரன் மனகாரகன் மட்டுமல்ல; உடல்காரகன், சரீர காரகனும்கூட! மனம் நிறைவாக இருந்தால் உடலும் திடமாக இருக்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம், அறிவு என்று ஐந்து நிலை மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இதில் தேர்வு பெறவேண்டும். அப்படியிருந்தால் மனப்பக்குவம் உண்டாகிவிடும். 2-ல் சனி. (ஏழரைச்சனி). குடும்பத்திலும், வாக்கு நாணயத்திலும், பொருளாதார வசதியிலும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும். அதன் பிடியிலிருந்து விடுபட உங்களுக்கு மனப்பக்குவம் உண்டாக வேண்டும். அதற்கு யோகா, தியானம், வழிபாடு என்று எவ்வளவோ வழிமுறைகள் உண்டு. அதைச் செயல்படுத்தவும். எளிய பரிகாரம்- அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து அத்தனை மிளகுகளை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமை காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபம் ஏற்றலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. என்றாலும் அவர் குரு வீட்டில் இருக்க, குரு அவருக்கு 11-ல் இருப்பதால், ஜென்மச்சனி பொங்கு சனியாக மாறி பொலிவைத் தரலாம். பொதுவாக சனி பகவானை நீதி தேவனுக்குச் சமமாகச் சொல்வார்கள். கண்ணைக் கட்டிக்கொண்ட நீதிதேவதை கையில் தராசு ஏந்தி பாரபட்சம் இல்லாமல் எடைபோட்டு தீர்ப்புச் சொல்வதற்குச் சமம் என்பார்கள்! சனி கர்மகாரகன்- தொழில்காரகன்! அவரவர் மனம், செயலைப் பொருத்து, அதற்கேற்ற பலனைத்தர வல்லவர்தான் சனி! நல்லதே நினை- நல்லதே செய்- நல்லதே நடக்கும் என்பதுதான் சனி பகவானின் தத்துவம். உப்புத்தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுவும் சனியின் தீர்ப்பு! ஆகவே சனி எல்லாரையும் தண்டிக்க மாட்டார்; கெடுக்கமாட்டார். நல்லவனுக்கு பாதுகாப்பாக இருப்பார். வல்லவனுக்கு பக்கத்துணையாவார். கெட்டவனுக்கு தீயவனாக இருப்பார்! அதனால்தான் ஏழரைச்சனிக் காலத்தை மங்கு சனி என்றும், பொங்கு சனி என்றும் பிரித்து வைத்தார்கள். பெரியோர்கள் இதையே சுருக்கமாக மனம்போல் வாழ்வு என்று சொல்லிலிவிட்டார்கள். காய்ச்சிய நல்லில பாலில் ஒரு உப்புக்கல் சேர்ந்தால் திரிந்துபோவதுபோல (கெட்டுப்போவதுபோல) ஏழரைச்சனி, அட்டமச் சனிக் காலத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ சந்திக்குமானால் உயிரிழப்பு, பொருள் இழப்பு போன்ற சேதங்களைச் சந்திக்க நேரும். அதற்கு முக்கியமான பரிகாரம்- திங்கள்கிழமை ருத்ரஹோமம் வளர்த்து சிவன்- அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். திங்கள்கிழமைதோறும் சிவலிலிங்கத்துக்கு காலையில் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. ஜென்மத்தில் செவ்வாய்- கேது, சேர்க்கை- ராகு பார்வை. ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாவிடும். "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும் எனையாளும் ஈசன் செயல்' என்று ஒரு புலவர் பாடினார். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் "நான் நினைத்தால் நீ பேச வேண்டும். நீ நினைத்தால் நான் பேசவேண்டும்' என்பதுபோல இருவர் நினைப்பும் பேச்சும் ஒன்றாகும்- அதாவது "நான் நினைத்தேன்- நீ சொல்லிவிட்டாய்' என்பதுபோல! எண்ணம், செயல், முடிவு (தீர்ப்பு) மூன்றும் எதிர்பார்த்ததுபோல அமையும். ஜென்மத்தில் செவ்வாயும் கேதுவும், ஏழில் ராகுவும் இருப்பது கணவன்- மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் ரயில்வே தண்டவாளம் மாதிரி இரண்டாகவே ஓடிக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை என்ற ரயில் அதில்தான் ஓடவேண்டும். 10-ல் சுக்கிரன், குரு சேர்க்கையால் ஸ்டேஷன் வரும் இடத்தில் "லூப்லைனில்' மாறி ஒன்றுசேரலாம். தொழில், வாழ்க்கை அது விருப்பப்படி இயங்கும். அதன்வழியே உங்கள் பயணம் தொடரும். குதிரை அது இஷ்டத்துக்கு ஓடுவது என்பது ஒருவகை. குதிரை லகானை நீங்கள் கைப்பிடித்து உங்கள் கன்ட்ரோலிலில் குதிரையை இயக்குவது என்பது இன்னொரு வகை. இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே தீர்மானித்து செயல்பட வேண்டும். மொத்தத்தில் கெடுதல் இல்லாமல் நல்லது நடக்கும் என்று நம்பலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் 11-ல். (தனுசு ராசியில்). அவருக்கு வீடுகொடுத்த சனி அதற்கு 11-ல். (துலா ராசியில்). அந்த துலா ராசி அதிபர் 11-க்குடைய சுக்கிரனோடு சேர்க்கை. அத்துடன் கும்ப ராசிக்கு குருபார்வை! எனவே உங்களுக்கு எண்ணம்போல இயக்கமும் ஏற்றமும் வெற்றியும் உண்டாகும். நினைத்தவை நினைத்தபடி நிறைவேறும். எண்ணியவை எண்ணியதுபோல ஈடேறும்! கருதியவை கருதியதுபோல கைகூடும்! பிறகென்ன- எல்லாம் நல்லபடி நடப்பது வெற்றிதானே! மகிழ்ச்சிதானே! அதிலும் 9-ல் குரு- சுக்கிரன் சேர்க்கை. குருவருளும் திருவருளும் இணைந்து அருள்புரியச் செய்யும் நிலை! இன்றைய உலகில் எதையும் சாதிக்க பணபலம் வேண்டும் அல்லது பதவிபலம் வேண்டும் அல்லது படைபலம் வேண்டும்! இந்த மூன்றும் இல்லாவிட்டாலும் குருபலமும் தெய்வபலமும் இருந்தாலும் போதும்- எல்லாம் இனிதே நடைபெறும். வைத்தியம் பார்க்கும் திறமையான டாக்டர்களும் "எல்லாம் முறையாகப் பார்த்துவிட்டோம்; இனி கடவுள்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்' என்று கடைசிக்கட்டமாக சொல்லிலி விடுகிறார்கள் அல்லவா! அந்தக் கடவுளே உங்களுக்கு அனுசரணையாக கருணை காட்டும்போது தோல்வி ஏது? துன்பம் ஏது? துயரம் ஏது? தொட்டதெல்லாம் துலங்கும்; பட்டதெல்லாம் துளிர்க்கும்; விட்டதெல்லாம் கிடைக்கும்; கெட்டதெல்லாம் கெட்டுப்போகும். கொண்டாட்டம்தான்! குதூகலம்தான்!
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு ராசிநாதன் குரு 12-ல் மறைவது ஒருவகையில் பாதிப்புதான்- குற்றம்தான். என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அங்கு ஆட்சிபெற்று சேர்ந்திருப்பதால் கெடுதலும் நல்லதாக மாறுகிறது. நெல்லிக்கனியின் துவர்ப்புச் சுவை நீர் பட்டதும் இனிப்பாக மாறுவதுபோல! மேலும் மீன ராசியில்- குருவின் வீட்டில்தான் சுக்கிரன் உச்சம் அடைவார். அதனால் வாடகை வீட்டில் குடியிருப்போரும் வீட்டுச் சொந்தக் காரரும் ஒரு போர்ஷனில் இருக்கும்போது குடியிருப்போர் அடக்கி வாசிப்பதுபோல, அடங்கியிருப்பதுபோல! மேலும் குரு தன் சுயசாரம். (விசாகம்). சுக்கிரனும் வார மத்தியில் குருவின் சாரம். (விசாகம்). மாறுவார். எனவே அடிப்படை வாழ்க்கை வசதிகள், தொழில், சௌகர்யம், கௌரவம் எதற்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி செயல்படாமல் திசைமாறிப்போய் கடைசியில் திட்டமிட்டபடி நிறைவேறும்- நேர்வழியில். குறுக்குவழியில் போகும் வாகனம் போக்குவரத்து தடையால் ரூட்மாறி, சுற்றிப்போய் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்சேரலாம்! குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்திலும் பிரச்சினை வராது. வரவேண்டியதும் எதிர்பார்ப்பதும் தாமதமாவதால் கொடுக்கவேண்டியதும் காரியம் பூர்த்தியாவதும் தாமதமாகும். அதுவும் இந்த வாரம் மட்டுமே. அடுத்த வாரம் 4-10-2018-ல் குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகமான இடத்தில் வருவதால் தங்கு தடையில்லாத யோகம் பொங்கும். நல்ல படம் டி.வியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்தடையால் சிக்கல் வந்தாலும் உடனே கரன்டு வந்துவிடும். படத்தைப் பார்க்கலாம்.