Advertisment

இந்த வார ராசிபலன் 20-5-2018 முதல் 26-5-2018 வரை

/idhalgal/balajothidam/weekend-rasipalan-20-5-2018-26-5-2018

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

21-5-2018- சிம்மம்.

23-5-2018- கன்னி.

26-5-2018- துலாம்.malaysia murugan

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 3, 4, ரோகிணி- 1.

செவ்வாய்: திருவோணம்- 1.

புதன்: கிருத்திகை- 1, 2, 3, 4, ரோகிணி- 1.

குரு: விசாகம்- 2.

சுக்கிரன்: மிருகசீரிடம்- 4, திருவாதிரை- 1, 2, 3.

சனி: மூலம்- 3.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

20-5-2018- ரிஷப புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். அவருடன் கேது சம்பந்தம், ராகு பார்வை. எனவே வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். மூக்குள்ள வரை சளிதான். கடலில் எப்போது அலை ஓய்வது? அலைக்கு பயந்தவன் எப்போது இறங்கிப் குளிப்பது? என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதேபோல 9-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைக் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; ராசிநாதன் செவ்வாயும் 10-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே தைரியமாக எல்லாவற்றையும் சந்தித்து எதிர்நீச்சல் போட வேண்டியதுதான். பாவ புண்ணியம் பார்த்துக்கொண்டு போனால் போகட்டும் என்று மௌனமாக இருந்தாலும் சரி; மெத்தனமாக இருந்தாலும் சரி- எல்லாரும் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். குட்டக்குட்ட குனிகிறவனும் முட்டாள்; குட்டுகிறவனும் முட்டாள் என்பார்கள். இனியும் நீங்கள் முட்டாளாக இருக்கவேண்டாம். 3, 6-க்குடைய புதன் ஜென்ம ராசியில் இதுவரை இருந்தார். 20-ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுவார். அதனால் இதுவரை எதிரியைக் கண்டு பயந்து ஒதுங்கினீர்கள். இனிமேல் எதிரி உங்களைக் கண்டு பயப்படும்படி வீறுகொண்டு எழவேண்டும். கொட்டினால்தான் தேள்! கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி! "மனோகரா' திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம்- "பொறுத்ததுபோதும்; பொங்கி எழு மகனே' என்பது! "எளியார்தமை வலியார் வதையே புரிகுவதா. கொலைவாளினி எடடா- கொடியோர். செயல் அறவே' என்று பாரதிதாசன் எழுதிய மாதிரி நீங்களும் பொங்கி எழத்தான் வேண்டும். இந்த 20-ஆம் நூற்றாண்டில் ஏமாளியாகவும் இருக்கக்கூடாது- இளிச்சவாயனாகவும் இருக்கக்கூடாது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக்கிறார். தொடக்கத்தில் 7, 12-க்குடைய செவ்வாயின் சாரம் (மிருகசீரிடம்), பிறகு திருவாதிரையில் ராகு சாரம்! செவ்வாய் ராசிக்கு 9-ல் உச்சம். ராகு ராசிக்கு மூன்றில் செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். 10-க்குடைய சனி 8-ல் மறைந்து 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 6-ல் மறைவு. வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் குறைவில்லை. தொழில் இயக்கத்துக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் செயல்படமுடியாத நிலை! ஏ.ஸி. இருக்கிறது. கலர் டி.வி. இருக்கிறது. பிரிட்ஜ் இருக்கிறது. வாஷிங் மிஷின் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. ஆனால் கரன்டு இல்லை. யு.பி.எஸ்ஸும் வேலை செய்யவில்லை என்ற மாதிரி! கார் இருக்கிறது- டிரைவர் இல்லை. தனக்கும் டிரைவிங் செய்யத் தெரியாத மாதிரி! இதுதான் அட்டமச்சனி! சிலருக்கு மனைவியே இல்லை. சிலருக்கு மனைவி இருந்தும் தொண்டும் செய்ய முடியாதபடி படுத்த படுக்கை. சிலர் இரவானதும் "ஹைகிளாஸ் பார்' சென்று ஆறுதல் அடையும் நிலை! செல்வநிலைச் சீமான்களுக்கு இப்படியென்றால் வசதியில்லாத ஏழை எளியவர்களுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற மாதிரி நாளும் பொழுதும் ஏனோதானோ என்று எப்படியோ ஓடும்! ஒருசிலருக்கு தேவைகளைச் சுருக்கிக்கொள்ள முடியாத நிலையில், கடன்பட்டு தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு அசலும் கட்டமுடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் கடனை வாங்கி கடனைக் கொடுக்கும் நிலை! இப்படிக் கடன் வாங்கிக் கடனைக் கொடுப்பவனும் மரமேறிக் கைவிட்டவனும் ஓன்று! தேறவே முடியாது! இதுதான் அட்டமச்சனியின் வேலை. சிலருக்கு வீடு மாற்றம்! சிலருக்கு ஊர் மாற்றம்! சிலருக்கு வேலை மாற்றம்! சிலருக்கு வெளிநாட்டுப் பயணம்! சிலருக்கு பதவி இழப்பு அல்லது பதவி மாற்றம்! சிலருக்கு தொழில் மாற்றம்! ஆக 10-ஆம் இடம் என்பது வாழ்க்கை, தொழில் ஸ்தானம் என்பதால் இவற்றில் ஏதோ ஒரு மாற்றம் வரலாம்! எது வந்தாலும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டியது கடமை!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் தன் ராசிக்கு 11-ல் சூரியன் சாரம். வாரக்கடைசியில் சந்திரன் சாரம்! ராசிக்கும் ராசிநாதன் புதனுக்கும் 5-ஆம் இடத்து குரு பார்வை. குரு பார்க்க கோடி நன்மை! எனவே 7-ஆம் இடத்து

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

21-5-2018- சிம்மம்.

23-5-2018- கன்னி.

26-5-2018- துலாம்.malaysia murugan

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 3, 4, ரோகிணி- 1.

செவ்வாய்: திருவோணம்- 1.

புதன்: கிருத்திகை- 1, 2, 3, 4, ரோகிணி- 1.

குரு: விசாகம்- 2.

சுக்கிரன்: மிருகசீரிடம்- 4, திருவாதிரை- 1, 2, 3.

சனி: மூலம்- 3.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

20-5-2018- ரிஷப புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். அவருடன் கேது சம்பந்தம், ராகு பார்வை. எனவே வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். மூக்குள்ள வரை சளிதான். கடலில் எப்போது அலை ஓய்வது? அலைக்கு பயந்தவன் எப்போது இறங்கிப் குளிப்பது? என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதேபோல 9-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைக் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; ராசிநாதன் செவ்வாயும் 10-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே தைரியமாக எல்லாவற்றையும் சந்தித்து எதிர்நீச்சல் போட வேண்டியதுதான். பாவ புண்ணியம் பார்த்துக்கொண்டு போனால் போகட்டும் என்று மௌனமாக இருந்தாலும் சரி; மெத்தனமாக இருந்தாலும் சரி- எல்லாரும் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். குட்டக்குட்ட குனிகிறவனும் முட்டாள்; குட்டுகிறவனும் முட்டாள் என்பார்கள். இனியும் நீங்கள் முட்டாளாக இருக்கவேண்டாம். 3, 6-க்குடைய புதன் ஜென்ம ராசியில் இதுவரை இருந்தார். 20-ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுவார். அதனால் இதுவரை எதிரியைக் கண்டு பயந்து ஒதுங்கினீர்கள். இனிமேல் எதிரி உங்களைக் கண்டு பயப்படும்படி வீறுகொண்டு எழவேண்டும். கொட்டினால்தான் தேள்! கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி! "மனோகரா' திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம்- "பொறுத்ததுபோதும்; பொங்கி எழு மகனே' என்பது! "எளியார்தமை வலியார் வதையே புரிகுவதா. கொலைவாளினி எடடா- கொடியோர். செயல் அறவே' என்று பாரதிதாசன் எழுதிய மாதிரி நீங்களும் பொங்கி எழத்தான் வேண்டும். இந்த 20-ஆம் நூற்றாண்டில் ஏமாளியாகவும் இருக்கக்கூடாது- இளிச்சவாயனாகவும் இருக்கக்கூடாது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக்கிறார். தொடக்கத்தில் 7, 12-க்குடைய செவ்வாயின் சாரம் (மிருகசீரிடம்), பிறகு திருவாதிரையில் ராகு சாரம்! செவ்வாய் ராசிக்கு 9-ல் உச்சம். ராகு ராசிக்கு மூன்றில் செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். 10-க்குடைய சனி 8-ல் மறைந்து 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 6-ல் மறைவு. வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் குறைவில்லை. தொழில் இயக்கத்துக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் செயல்படமுடியாத நிலை! ஏ.ஸி. இருக்கிறது. கலர் டி.வி. இருக்கிறது. பிரிட்ஜ் இருக்கிறது. வாஷிங் மிஷின் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. ஆனால் கரன்டு இல்லை. யு.பி.எஸ்ஸும் வேலை செய்யவில்லை என்ற மாதிரி! கார் இருக்கிறது- டிரைவர் இல்லை. தனக்கும் டிரைவிங் செய்யத் தெரியாத மாதிரி! இதுதான் அட்டமச்சனி! சிலருக்கு மனைவியே இல்லை. சிலருக்கு மனைவி இருந்தும் தொண்டும் செய்ய முடியாதபடி படுத்த படுக்கை. சிலர் இரவானதும் "ஹைகிளாஸ் பார்' சென்று ஆறுதல் அடையும் நிலை! செல்வநிலைச் சீமான்களுக்கு இப்படியென்றால் வசதியில்லாத ஏழை எளியவர்களுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற மாதிரி நாளும் பொழுதும் ஏனோதானோ என்று எப்படியோ ஓடும்! ஒருசிலருக்கு தேவைகளைச் சுருக்கிக்கொள்ள முடியாத நிலையில், கடன்பட்டு தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு அசலும் கட்டமுடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் கடனை வாங்கி கடனைக் கொடுக்கும் நிலை! இப்படிக் கடன் வாங்கிக் கடனைக் கொடுப்பவனும் மரமேறிக் கைவிட்டவனும் ஓன்று! தேறவே முடியாது! இதுதான் அட்டமச்சனியின் வேலை. சிலருக்கு வீடு மாற்றம்! சிலருக்கு ஊர் மாற்றம்! சிலருக்கு வேலை மாற்றம்! சிலருக்கு வெளிநாட்டுப் பயணம்! சிலருக்கு பதவி இழப்பு அல்லது பதவி மாற்றம்! சிலருக்கு தொழில் மாற்றம்! ஆக 10-ஆம் இடம் என்பது வாழ்க்கை, தொழில் ஸ்தானம் என்பதால் இவற்றில் ஏதோ ஒரு மாற்றம் வரலாம்! எது வந்தாலும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டியது கடமை!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் தன் ராசிக்கு 11-ல் சூரியன் சாரம். வாரக்கடைசியில் சந்திரன் சாரம்! ராசிக்கும் ராசிநாதன் புதனுக்கும் 5-ஆம் இடத்து குரு பார்வை. குரு பார்க்க கோடி நன்மை! எனவே 7-ஆம் இடத்துச்சனி பகவானால் ஏற்படும் கெடுதல்களும் சங்கடங்களும் விலகிவிடும். ஒருசிலருக்கு திருமணத்தடை, ஒருசிலருக்கு வாரிசு தாமதம். திருமணமாகியும் மனைவியோடு இணைந்துவாழ முடியாதபடி சிலருக்கு பிரிவு- கருத்துவேறுபாடுகள்! இதற்குக் காரணம் குடும்ப ஸ்தானத்தில் ராகு, 8-ல் கேது. 10-க்குடைய குரு 5-ல் இருந்து ராசியைப் பார்த்தாலும் 10-க்கு 8-ல் குரு மறைவு என்பதால் தொழில், வாழ்க்கை, வேலையில் பிரச்சினைகளும் நிறைவு இல்லாத சூழ்நிலையும் உருவாகலாம். சிலருக்குக் குடியிருப்பு அல்லது தொழில் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். 6-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்து, 8-க்குடைய சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும். இருந்தாலும் குரு பார்வை ராசிக்குக் கிடைப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து போய்க்கொண்டே இருக்கலாம். 2-ஆம் இடத்து ராகு குடும்பத்தில் வாக்குவாதங்களையும் தர்க்கங்களையும் உருவாக்கலாம். அதனால் எல்லா வகையிலும் குடும்ப உறவினர்களிடமும் தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும்- பட்டும் படாமலும் இருப்பது நல்லது. 5, 12-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் நின்று குரு- சனி பார்வையைப் பெறுவதால் உறவினர்கள் வகையில் அல்லது நண்பர்கள் வகையில் நல்லது செய்தாலும் பொல்லாப்பு ஏற்படலாம். சிலசமயம் சொல்லாததைச் சொன்னதாகப் பழியும் வரலாம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பார்கள். 10-க்குடைய குரு 5-ல் பலம்பெற்று ராசி- ராசிநாதன்- சுக்கிரனைப் பார்ப்பதால் குருவருளும் திருவருளும் உங்களுக்குத் துணை நின்று வழிநடத்தும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ராகு நின்றாலும் 10-க்குடைய செவ்வாய் ஏழில் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். செவ்வாயுடன் கேது சம்பந்தம்! கேது ராசிநாதன் சந்திரன் சாரம் (திருவோணம்); ராகு செவ்வாய் நின்ற ராசிநாதன் சனியின் சாரம் (பூசம்). எனவே உங்களுக்கு கேடு கெடுதிக்கு இடமில்லாதபடி வாழ்க்கை, தொழில் முயற்சிகள் யாவும் திட்டமிட்டபடி செயல்படும். 10-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தையே பார்ப்பதும், 9-க்குடைய குருவும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும் ராஜயோகம் மட்டுமல்ல; தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். 11-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவு. அதற்கு குரு பார்வை! எனவே சில குடும்பங்களில் மனைவிக்கு தொழில், வருவாய் யோகம் வரும். சில குடும்பங்களில் மனைவி பேரில் புதிய தொழில் அமைப்பை உருவாக்கி செயல்பட்டு சம்பாத்தியம் பார்க்கலாம். சில மனைவிமார்கள் வேலைக்குப் போகலாம். அல்லது மனைவியை தொழில் கூட்டாளியாக்கலாம். வேலை பார்க்கும் மனைவிமாருக்கு பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு போன்ற நன்மைகள் உண்டாகலாம். சிலர் வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கை, நாணயம் கெடாமல் விசுவாசமாக வேலை செய்வதால் தவிர்க்கமுடியாத பயணங்களும் அலைச்சல்களும் இருக்கலாம். பொதுவாக கடக ராசியில் பிறந்தவர்களும் சரி; கடக லக்னத்தில் பிறந்தவர்களும் சரி- எந்த வேலையில் இருந்தாலும் அந்த வேலையில் விசுவாசமும் உண்மையும் ஆர்வமும் கொண்டு உழைப்பார்கள். அதேசமயம் அதிகமாகப் பயணம் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கு "பிளஸ் பாயின்டுதான்.' சிலருடைய ஜாதக அமைப்பு- நல்லா சுமக்கிற மாட்டு முதுகில் அதிகமாக இரண்டு மூட்டைகளை ஏற்றி வைப்பதுபோல உடன் இருப்போரின் பணிகளையும் இணைத்துப் பார்க்கும்படி நிலைமை உருவாகும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். ஜென்ம ராகுவும் 9-ஆம் இடத்தைப் பார்க்கும் கேதுவும் தெய்வப் புனித யாத்திரையையும் பயணங்களையும் தரும். பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் திக்பலம் பெற, அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் சூரியனுக்கு இரண்டிலும் ராசிக்கு 11-லும் இருக்கிறார். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு இக்காலம் தனலாபமும் தாராளமான வரவு செலவும் இருக்கும். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். சனியும் பார்க்கிறார். சனி தொழில்காரகன் என்பதால் தொழில் வளர்ச்சியும் மேன்மையும் உண்டாகும். உபதொழில் ஆரம்பமும் (பிராஞ்ச்) வளர்ச்சியும் உண்டாகும். அதற்கான திட்டங்களும் செயல்முறைகளும் கச்சிதமாக நிறைவேறும். மனித முயற்சிக்கு தெய்வ அனுகூல ஆசியும் கிடைக்கும். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கும் முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். முதலாளியின் பாராட்டும் எதிர்பார்க்கலாம். பதவி உயர்வும் கிடைக்கும். என்றாலும் குருவும் சனியும் வக்ரம் என்பதால் ஒருசில நிறுவனங்களில் ஆண்டுதோறும் வழக்கமாகக் கிடைக்கும் ஊதிய உயர்வை (இன்கிரிமென்டு) இந்த ஆண்டு நிறுத்திவைக்கலாம். அது உங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கலாம். உண்மையும் விசுவாசமும் உடைய ஊழியர்கள்- வேலைக்காரர்கள் முதலாளியை மட்டும்தானே நம்பியிருப்பார்கள். அவர்களை சந்தோஷப்படுத்துவதும் திருப்திப்படுத்துவதும் முதலாளிகளின் கடமையல்லவா! ஒரு ஸ்தாபனத்தில் பொறுப்பில் இருந்த ஒருவர்- நம்பினவர்- ரகசியமாக லட்சம் லட்சமாக- கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இதுதான் நம்பிக்கைத் துரோகம். அதேசமயம் நம்பிக்கைத் துரோகம் எப்போதும் உயர்வு தராது. தற்காலிகமாக வசதி வாய்ப்புகளை உருவாக்கினாலும் பிற்காலத்தில் அதன் பக்கவிளைவுகளை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். உண்மைக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு. தவறாக சம்பாதித்த செல்வம் தவறானவழியில்தான் போய்விடும். ஊழல்செய்து சம்பாதிக்கும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். அது காலத்தின் தீர்ப்பு.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 8-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் 5-ல் உச்சம் பெற்று புதனைப் பார்க்கிறார். 2-ல் உள்ள குருவும் புதனைப் பார்க்கிறார். புதன் 1, 10-க்குடையவர் என்பதால் உங்கள் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம் இவற்றுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. அதேசமயம் 5-ல் செவ்வாய் அட்டமாதிபதி உச்சம் பெற்று கேது- ராகு சம்பந்தம் பெறுவதால் மனதில் நிறைவும் திருப்தியும் இருக்காது. ஆனால் 20-ஆம் தேதி வார ஆரம்பத்திலேயே 8-ஆம் இடத்து புதன் 9-ல் மாறுவது நல்லது என்றாலும், 12-க்குடைய சூரியனோடு சம்பந்தம் என்பதும், 12-க்குடைய சூரியன் சாரம் என்பதும், குருவுக்கு 8-ல் மறைவதும் ஆகாது. தொழில், வியாபாரம், உத்தியோகம், வேலை எல்லாவற்றிலும் பிரச்சினைகளோடு போராடத்தான் வேண்டும். ஊர்க் காரியங்களையும் மற்றவர்கள் காரியங்களையும் விசுவாசமாகப் போய் கவனிப்பீர்கள்; நிறைவேற்றுவீர்கள். அந்த அளவுக்கு உங்கள் சொந்தக் காரியங்களையும் வீட்டுத் தேவைகளையும் கவனிக்க முடியாது; நிறைவேற்ற முடியாது. வாத்தியார் பிள்ளை மக்கு- போலீஸ்காரன் மகன் திருடன் என்ற பழமொழி மாதிரி, உங்கள் சொந்தம் சுற்றத்தாரின் விமர்சனத்துக்கு ஆளாக நேரும். சிலருடைய அனுபவத்தில் நெருங்கிப் பழகியவர்களின் நட்புக்கும் உறவுக்கும் சிக்கல் உண்டாகும். ஒருசிலரின் அனுபவத்தில் மிகமிக ஆன்மார்த்தவர்களின் அந்திம கால முக தரிசனமும் அமையாமல் போய்விடும். வாக்குறுதிகளும் தேக்கமாகிவிடும். சிலருக்கு திருமணத்தடையும் சிலருக்கு புத்திரத்தடையும் ஏற்பட இடமுண்டு.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 9-ல் இருக்கிறார். அவரை ஜென்ம குருவும் பார்க்கிறார். மூன்றில் இருக்கும் சனியும் பார்க்கிறார். சனி துலா ராசிக்கு ராஜயோகாதிபதி. அதாவது எந்த ஒரு கிரகம் ஒரு ராசிக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தியமும் பெறுகிறதோ அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாவார். ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் சனி பகவான் கேந்திர திரிகோணாதிபத்தியம் பெறுவார். ரிஷபத்துக்கு 9- திரிகோணம், 10- கேந்திராதிபதி. துலா ராசிக்கு 4- கேந்திரம், 5- திரிகோணாதிபதி ஆவார். ஆகவே ரிஷப ராசி, துலா ராசிக்காரர்களுக்கு சனி யோகாதிபதியாவார். அதனால் அவர்களை அட்டமச்சனியோ ஏழரைச்சனியோ கெடுக்காது. உதாரணம் கலைஞர்தான்! எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பிறகு கலைஞர்- ரிஷப ராசிக்கு 8-ல் சனி வந்தபோதுதான் மறுபடியும் முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமாராவ் பதவியைத் தக்கவைக்க ஒரு பரிகாரத் திருமணம் செய்துகொள்ளும்படி ஆலோசனை சொன்னதாக ஒரு வதந்தி! எனக்குத் தெரிந்த ஒரு அன்பர் தன் வீட்டில் சீட்டாட்டம் நடத்தினார். சீட்டு (சூதாட்டம்) ஆடியவர்களைவிட அதற்கு இடம் கொடுத்தவருக்குத்தான் தண்டனை அதிகம். வீட்டுச்சொந்தக்காரர் மேலும் வழக்குப் பதிவானது. ஜாதக ஆலோசனைப்படி உடனே தன் அக்காள் மகளைத் திருமணம் செய்துகொண்டார். மணப்பெண்ணின் மாங்கல்ய பலம் அவரை தண்டனையிலிலிருந்து காப்பாற்றிவிட்டது. ரெய்டு நடந்த அன்று அவர் பெண் பார்க்கப் போனதாகவும், சம்பந்தப்பட்ட இடத்திலேயே அவர் இல்லையென்றும், அவருக்குத் தெரியாமல் சூதாட்டம் நடந்ததாகவும் வக்கீல் வாதாடி விடுதலை வாங்கித் தந்துவிட்டார். அதாவது சாவித்திரி இழந்த கணவன் சத்தியவானை மீண்டும் உயிர்பிழைக்க வைத்தமாதிரி.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம்! 9-க்குடைய சந்திரன் சாரம் (திருவாணம்). செவ்வாய் 9-ஆம் வீடான கடகத்தையும் பார்க்கிறார். 10-ஆம் இடமான சிம்மத்தையும் பார்க்கிறார். எனவே தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 9-ல் ராகு நிற்பதால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். குலதெய்வ கடாட்சமும் கிடைக்கும். கோவில் திருப்பணிகளில் பங்கு பெறலாம். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆன்மிகத்தில் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் அதிகரிக்கும். சிலர் ஜோதிடம், எண் கணிதம், கைரேகை, அருள்வாக்கு போன்ற சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்து தொழில் செய்யலாம். 10-க்குடைய சூரியன் 7-ல் அமர்ந்து, சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் ராசிநாதன் சாரத்திலும் 9-ல் உள்ள ராகு சாரத்திலும் சஞ்சாரம் செய்வதோடு 2-ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்க்க, குடும்பாதிபதி குரு சுக்கிரனைப் பார்ப்பதால் திருமணத்தடை விலகி திருமணம் நடக்கும். நல்ல மனைவி அமைவார். திருமணமானவர்கள் மனைவி பேரில் தொழில் செய்யலாம். அல்லது படித்த மனைவிக்கு வேலை வாய்ப்பு உருவாகும்! சிலருக்கு மனைவிவழியில் சொத்துகள் வந்துசேரும். வீடு, பூமி போன்றவையும் அல்லது வாகனங்களும் கிடைக்கலாம். 3-ல் செவ்வாய் கேதுவோடு கூடி நிற்க ராகு பார்ப்பதால் சகோதர வகையில் சிலருக்கு தோஷம் உண்டாகும். சகோதரர், சகோதரி வகையில் வருத்தம், பிரிவு, இழப்பு ஏற்படலாம். குறிப்பாக செவ்வாய்- சனி, ராகு- கேது தசாபுக்தி நடப்பவர்களுக்கு உடன்பிறப்பு வகையில் கெடுபலன்கள் நடக்க வாய்ப்பு உண்டு. ஜாதக ரீதியான பரிகாரங்களைத் தேடிக்கொள்ளவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 11-ல் வக்ரமாக இருக்கிறார். ஜென்ம ராசியில் சனியும் வக்ரமாக இருக்கிறார். பொதுவாக வக்ரத்தில் உக்ரபலம் என்பது ஜோதிட விதி. அதாவது நல்ல இடத்தில் இருக்கும் வக்ர கிரகம் அந்த நல்ல இடத்துப்பலனை வலுவாக- ஸ்ட்ராங்காக- வக்ரமாகச் செய்யும். அதேபோல கெட்ட இடத்தில் இருக்கும் வக்ர கிரகம் அந்தக் கெட்ட இடத்துப்பலனையும் அதேமாதிரி வலுவாகச் செய்யும். சனி ஜென்ம ராசியிலும், குரு 11-ஆம் இடம் லாப ஸ்தானத்திலும் இருப்பதால் ஆயுள் தீர்க்கம். செயல்கள் தங்குதடை இன்றி நடக்கும். முயற்சிகள் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சி பெறும். செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம் இவற்றுக்குக் குறைவிராது. 11-ஆம் இடம் லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம். இவற்றுக்குக் குறைவில்லை. குரு 4-க்கும் உடையவர்; அதற்கு 8-ல் அவர் மறைவதால் 4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், சுகம், தாயார் ஸ்தானம். இவற்றுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். சிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை, சிலருக்கு குடியிருக்கும் வீட்டில் பிரச்சினை, சிலர் வாங்கிய வீடு அல்லது காலிலிமனையில் பிரச்சினை, சிலருக்கு தாயாருக்கு சுகக்குறைவு- இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை, நொம்பலம். அத்துடன் ஜென்மச்சனி 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 3-ஆம் இடங்களைப் பார்ப்பதால் உடன்பிறப்புகள், கணவர் அல்லது மனைவி வகையிலும் தொழில், உத்தியோகம், வேலை இவற்றிலும் டென்ஷன் அதிகமாக இருக்கும். அதேசமயம் ராசிநாதன் குரு 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 3-ஆம் இடங்களைப் பார்ப்பதால், வரும் காற்றும் இடியும் மின்னலும் கார்மேகமும் அடாதமழை பெய்யப் போகிறது என்பதற்கு அடையாளமாகத் தெரியலாம். ஆனால் பெரும் காற்று அடித்து சிறு தூறலோடு மழையை விரட்டி விடுவதுபோல உங்களுக்கு வரும் துன்பம் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகியோடிவிடும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் வக்ரம். 12-ஆம் இடம் பயணம், மாற்றம், வெளியூர் வாசம், செலவு இவற்றைக் குறிக்கும் இடம். அத்துடன் அவர் 2-க்குடையவர். குடும்ப ஸ்தானாதிபதி. 2-ஆம் இடம், 6-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். ஆகவே குடும்பத்தில் அவசியமான செலவுகளும் ஏற்படும். அனாவசியமான செலவுகளும் ஏற்படும். தேவையற்ற செலவுகளும் ஏற்படும். ஒருவருக்குத் தரவேண்டிய பணத்தை தெரியாமல் இருவரும் தந்துவிடலாம். அல்லது வாகனத்தை ரிப்பேர் செய்வதில் முதலிலில் செய்தவர் சரியில்லை என்று மறுபடியும் இன்னொருவரிடம் காட்டி ரிப்பேர் செலவு செய்யும்படி ஆகும். ஒருவர் பஸ்ஸில் முன்பக்கம் இருக்க- அவருடன் வந்தவர் கடைசியில் பின்பக்கம் இருக்க, இருவருமே தெரியாமல் இரண்டு டிக்கெட் வாங்கிவிட்டார்கள். முதலிலிலேயே தெரிந்திருந்தால் இன்னொரு டிக்கெட்டை வேறுஆளுக்கு மாற்றிவிட்டிருக்கலாம். இறங்கப் போகும்போது பாக்கி சில்லரையை வாங்கப் போகும்போதுதான் இருவரும் டிக்கெட் வாங்கியது புரிந்தது. இப்படி சிலசமயம் ஒட்டிக்கு ரெட்டி செலவும் வரலாம். அல்லது செய்த செலவையே மீண்டும் செய்யலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது சுற்றுலா பயணம் போகலாம். சிலர் குடியிருப்பு மாறலாம். சிலர் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். அல்லது பழைய வீட்டை- நிலத்தை விற்றுவிட்டு புதிய வீடு, இடம் வாங்கலாம். 3, 12-க்குடைய குரு 10-ல் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் 6-ல் மறைவு. அந்த சுக்கிரனை குரு பார்ப்பதால் சிலர் தொழில் சம்பந்தமான கடன்- சுபக்கடன் வாங்கலாம். அல்லது கூட்டுசேர்ந்து தொழில் ஆரம்பிக்கலாம். சம்பளத்துக்கு இருந்தவர்கள் அல்லது ரிட்டயர்டு ஆனவர்கள் தனியாகவோ கூட்டு சேர்ந்தோ தொழில் ஆரம்பிக்கலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் வக்ரம். குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ஐந்தில். அவரை சனியும் பார்க்கிறார். குருவும் பார்க்கிறார். பொதுவாக கும்ப ராசிக்காரர்களும் கும்ப லக்னத்தாரும் அனுதாபத்துக்குரியவர்கள் என்று அடிக்கடி எழுதுவேன். அதற்குக் காரணம் ராசிநாதனோ லக்னநாதனோ விரயாதிபத்யம் 12-க்குடையவராவதுதான். அதாவது தனக்குத்தானே விரயாதிபதி! "ஊணன் காரியம் (கருமம்) இழந்தான்- உலாத்தான் மனைவியை இழந்தான்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது சாப்பாட்டு ராமன் சாப்பிடுவதிலேயே கவனமாக- விருப்பமாக இருப்பதால் ஆகவேண்டிய காரியத்தை கவனிக்காமல் விட்டுவிடுவான். மனைவி மக்கள், குடும்பத்தை கவனிக்காமல் ஊர் சுற்றிக்கொண்டே இருப்பவனின் குடும்பம் அவனைவிட்டு விலகிப்போய்விடும். தனக்குத்தானே கெடுதலைத்தேடிக் கொள்வதால்தான் கும்ப ராசி, கும்ப லக்னத்தவர் அனுதாபத்துக்குரியவர்கள் என்ற லிலிஸ்டில் அடங்குகிறார்கள். ஆனால் இந்த வாரக் கோட்சாரம் அதற்கு நேர்மாறாக- அவர்கள் செய்யும் காரியங்கள் விவேகமாகவும் வெற்றிகரமாகவும் அடைந்துவிடும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக நன்மையாகிவிடும். குளத்தில் உள்ள மீன்கள் தங்கள் பசிக்காக குளத்தில் உள்ள அழுக்குகளைத் தின்னும்போது குளம் சுத்தமாகி விடுவதுபோல 12, 11-க்குடைய குரு 9-ல் வக்ரமாகி கும்ப ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத ராஜயோகமும் பாக்கியமும் உங்களைத் தேடிவந்து அரவணைக்கும்! ஆடுமாடு மேய்க்கும் காளிதாஸ் காளியின் அருளால் கவிகாளிதாஸாக மாறவில்லையா? திருவானைக்காவல் கோவிலிலில் ஒருவர் அம்பாளை வேண்டி தவம் இருந்தார். அவருடன் மடப்பள்ளி பரிச்சாரகனும் படுத்திருந்தான். ஒருநாள் அம்பாள் நேரில்வந்து தவம் இருந்த வரை வாயைத்திற என்று தன் வாயிலிலிருந்த தாம்பூலத்தைத் துப்ப எத்தனிக்கே அவர், "எச்சில்' என்று "சீபோ' என்று தள்ளிவிட்டார். அவர் பக்கத்தில் இருந்த பரிச்சாரகனிடம் வாயைத் திற என்றதும் கோவிலிலில் வேலை பார்ப்பவர் சாப்பிடக் கொடுக்க வருவதாக நினைத்து தூக்கத்திலேயே வாயைத்திறக்க, அம்பாள் தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவன் வாயில் துப்பியதும் அவன் மகாகவியாகிவிட்டான். அவர்தான் வசைபாட காளமேகம் என்று பட்டம் பெற்றவர்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு வக்ரமாகி 8-ல் மறைகிறார். அவர் 10-க்கும் உடையவர். 10-க்கு 11-ல் இருக்கிறார். தொழில், வாழ்க்கை எப்போதும்போல் இயங்கும். 10-ல் 12-க்குடைய சனி வக்ரம். அவர் 11-க்குடையவர். தொழில் வெற்றியடைந்தாலும் லாபம் பயன்படாது. எதிர்பார்த்த அளவு இருக்காது. குரு 8-ல் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 4-ல் இருந்தாலும் அவருக்கு சாரம் கொடுத்த செவ்வாய் சுக்கிரனுக்கு 8-ல் உச்சம்; கேது-ராகு சம்பந்தம். இதனால் சுதந்திரமாக உங்கள் விருப்பப்படி எண்ணம்போல, கெட்டிக்காரத்தனமாக நிர்வாகம் செய்த உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, கையை காலைக்கட்டி ஓரம்கட்டிய மாதிரி ஒரு சூழ்நிலை! அதாவது (ஹவுஸ்அரஸ்ட்) வீட்டுச் சிறைக்கைதிபோல! அதனால் பார்த்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிவிடலாமா என்ற சிந்தனை. சிலருக்கு விசுவாசமாக வேலை பார்த்தவருக்கு கண்காணிக்க உளவு ஆள் வைத்து கௌரவத்தை பாதிக்கலாம்! நான் ஒரு ‘ஹோட்டலிலில் மேனேஜராக இருந்தேன். உண்மையாக- விசுவாசமாக வேலை பார்த்தேன். மேற்பார்வையாளராக ஒருவரை வேலைக்கு சேர்த்தேன். அவர் முதலாளியிடம் என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிலி, முதலாளி சாடை மாடையாகப் பேச நான் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டேன். நான் சேர்த்த ஆளையே முதலாளி நிர்வாகியாக்கினார். அவர் ஹோட்டல் தொழிலிலில் லாபம் (சேமிப்பு) சேர்த்து சொத்து சேர்க்கமுடியாது. தவணை வாங்கி வீடு வாசலை வாங்கி ஹோட்டல் வருமானத்தில் அடைக்க வேண்டும் என்று வழி சொல்ல- இதை பழைய மேனேஜர் சொல்லவில்லையே என்று, அவர் சொன்னபடியே செய்து வீடு, கார் வாங்கினார். தொழில் சுருங்க தவணை அடைக்க முடியாமல் எல்லாவற்றையும் இழந்து முதலாளி நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். வள்ளுவர் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்றார். ஆக ஒரு மனிதருக்கு நல்ல நேரம் வரும்போது நல்லவர்கள் வந்து சேர்வார்கள். கெட்ட நேரம் வரும்போது நல்லவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். கெட்டவர்கள் வந்து ஒட்டிக்கொள்வார்கள். அம்மாவின் கெட்ட நேரத்துக்கு சின்னம்மா வந்து சேர்ந்ததுபோல! அதேசமயம் திறமையுள்ளவன் எங்கும் எப்போதும் தோற்கமாட்டான்; வெற்றி.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe