ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
14-8-2018- கன்னி.
16-8-2018- துலாம்.
18-8-2018- விருச்சிகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: பூசம்- 2, 3, 4, ஆயில்யம்- 1.
குரு: விசாகம்- 1, 2.
சுக்கிரன்: அஸ்தம்- 1, 2, 3.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
செவ்வாய் வக்ரம்.
சனி வக்ரம்.
17-8-2018- சிம்ம சூரியன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து 10-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதோடு, 4-ஆம் இடத்தையும் 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அத்துடன் பாக்கியாதிபதி குருவும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அதனால் 2, 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம் என்ற கெடுபலன் விலகிவிடுகிறது. அதனால் வாக்கு, தனம், குடும்பம் எனும் இரண்டாமிடத்துப் பலனும், மனைவி, கணவன், உபதொழில் என்ற ஏழாமிடத்துப் பலனும் உங்களுக்கு மிகமிக நன்றாக அமையும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். வரவேண்டிய பணம் எல்லாம் வந்துசேரும். கொடுக்க வேண்டியவையெல்லாம் முறையாகக் கொடுத்து நாணயம் காப்பாற்றப்படும். கணவன்- மனைவிக்குள் இணக்கமும் நெருக்கமும், அன்யோன்யமும் உண்டாகும். கடந்த அட்டமச்சனியில் (2017 டிசம்பருக்கு முன்னால்) வறட்டுக்கௌரவத்தாலும் முரட்டுப்பிடிவாதத்தாலும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்து, வம்புதும்புகளை மறந்து, அன்பைப் பொழிந்து வாழலாம் இணைந்து! மாணவ- மாணவியருக்கு கல்வியறிவு மேன்மையும் ஞாபக சக்தியும் அதிகம் பலமாகும். குறிப்பாக இஞ்சினீயரிங் அல்லது சட்டப்படிப்பு பயில்வோருக்கு இக்காலம் சாதகமான காலமாகும். 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகம்! சொந்தத் தொழில் புரிவோருக்கும், கூட்டுத்தொழில் செய்வோருக்கும் தொழில் மேன்மையும் லாபப் பெருக்கமும் உண்டாகும். சம்பளத்துக்கு அடிமை வேலை செய்வோர் சொந்தத் தொழில் ஆரம்பித்து லட்சம் லட்சமாக சேமிக்கலாம். குறைந்த சம்பளத்துக்கு உள்நாட்டில் வேலை பார்ப்பவர்கள் வெளிநாட்டுக்குப் பறந்துபோய் கைநிறைய சம்பாதிக்கலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் கன்னியில் நீசமாக இருக்கிறார். குருவும் சனியும் மறைகிறார்கள். 9-ல் செவ்வாய் உச்சமாக இருந்தாலும் கேது- ராகு சம்பந்தம் பெறுகிறார்கள். எனவே இந்த வாரம் சிறு காரியத்தைத் தொடங்கினாலும் மலையாகவும் மலைப்பாகவும் தெரியும். வீண் செலவுகள் அதிகமாகி மன வருத்தத்தை உண்டுபண்ணும். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் உடல்நலக்குறைவும், செயல் தேக்கமும், நண்பர்களால் ஏமாற்றமும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் நல்லது நடக்கும். நண்பர்களால் நன்மையும் உண்டாகும். உணவு, சாப்பாட்டு வகையில் கட்டுப்பாடு அவசியம். சகோதரவழியில் அன்புத்தொல்லைகளுக்கு ஆளாக நேரும். வம்புத்தொல்லை, அன்புத்தொல்லை என்று இரண்டு உண்டு. வம்புத்தொல்லையைவிட அன்புத்தொல்லை கூடயிருந்தே குழிபறிக்கும் தன்மைக்குச் சமம். ஒருசிலர் மனக்கசப்பின் காரணமாகவோ வெறுப்பு நிலை காரணமாகவோ செய்த வேலையை விட்டுவிட்டு விஆர்.எஸ். கொடுத்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். அல்லது குடும்பத்தைவிட்டே ஒதுங்கி இருக்கும் நிலையும் உருவாகலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணை இல்லாமல் விரக்தி அடைந்து, யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார். எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்கெல்லாம் தசாபுக்தி மட்டும் காரணமல்ல. குடும்ப சாபதோஷமும்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
14-8-2018- கன்னி.
16-8-2018- துலாம்.
18-8-2018- விருச்சிகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: பூசம்- 2, 3, 4, ஆயில்யம்- 1.
குரு: விசாகம்- 1, 2.
சுக்கிரன்: அஸ்தம்- 1, 2, 3.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
செவ்வாய் வக்ரம்.
சனி வக்ரம்.
17-8-2018- சிம்ம சூரியன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து 10-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதோடு, 4-ஆம் இடத்தையும் 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அத்துடன் பாக்கியாதிபதி குருவும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அதனால் 2, 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம் என்ற கெடுபலன் விலகிவிடுகிறது. அதனால் வாக்கு, தனம், குடும்பம் எனும் இரண்டாமிடத்துப் பலனும், மனைவி, கணவன், உபதொழில் என்ற ஏழாமிடத்துப் பலனும் உங்களுக்கு மிகமிக நன்றாக அமையும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். வரவேண்டிய பணம் எல்லாம் வந்துசேரும். கொடுக்க வேண்டியவையெல்லாம் முறையாகக் கொடுத்து நாணயம் காப்பாற்றப்படும். கணவன்- மனைவிக்குள் இணக்கமும் நெருக்கமும், அன்யோன்யமும் உண்டாகும். கடந்த அட்டமச்சனியில் (2017 டிசம்பருக்கு முன்னால்) வறட்டுக்கௌரவத்தாலும் முரட்டுப்பிடிவாதத்தாலும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்து, வம்புதும்புகளை மறந்து, அன்பைப் பொழிந்து வாழலாம் இணைந்து! மாணவ- மாணவியருக்கு கல்வியறிவு மேன்மையும் ஞாபக சக்தியும் அதிகம் பலமாகும். குறிப்பாக இஞ்சினீயரிங் அல்லது சட்டப்படிப்பு பயில்வோருக்கு இக்காலம் சாதகமான காலமாகும். 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகம்! சொந்தத் தொழில் புரிவோருக்கும், கூட்டுத்தொழில் செய்வோருக்கும் தொழில் மேன்மையும் லாபப் பெருக்கமும் உண்டாகும். சம்பளத்துக்கு அடிமை வேலை செய்வோர் சொந்தத் தொழில் ஆரம்பித்து லட்சம் லட்சமாக சேமிக்கலாம். குறைந்த சம்பளத்துக்கு உள்நாட்டில் வேலை பார்ப்பவர்கள் வெளிநாட்டுக்குப் பறந்துபோய் கைநிறைய சம்பாதிக்கலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் கன்னியில் நீசமாக இருக்கிறார். குருவும் சனியும் மறைகிறார்கள். 9-ல் செவ்வாய் உச்சமாக இருந்தாலும் கேது- ராகு சம்பந்தம் பெறுகிறார்கள். எனவே இந்த வாரம் சிறு காரியத்தைத் தொடங்கினாலும் மலையாகவும் மலைப்பாகவும் தெரியும். வீண் செலவுகள் அதிகமாகி மன வருத்தத்தை உண்டுபண்ணும். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் உடல்நலக்குறைவும், செயல் தேக்கமும், நண்பர்களால் ஏமாற்றமும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் நல்லது நடக்கும். நண்பர்களால் நன்மையும் உண்டாகும். உணவு, சாப்பாட்டு வகையில் கட்டுப்பாடு அவசியம். சகோதரவழியில் அன்புத்தொல்லைகளுக்கு ஆளாக நேரும். வம்புத்தொல்லை, அன்புத்தொல்லை என்று இரண்டு உண்டு. வம்புத்தொல்லையைவிட அன்புத்தொல்லை கூடயிருந்தே குழிபறிக்கும் தன்மைக்குச் சமம். ஒருசிலர் மனக்கசப்பின் காரணமாகவோ வெறுப்பு நிலை காரணமாகவோ செய்த வேலையை விட்டுவிட்டு விஆர்.எஸ். கொடுத்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். அல்லது குடும்பத்தைவிட்டே ஒதுங்கி இருக்கும் நிலையும் உருவாகலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணை இல்லாமல் விரக்தி அடைந்து, யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார். எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்கெல்லாம் தசாபுக்தி மட்டும் காரணமல்ல. குடும்ப சாபதோஷமும் காரணம். 9-ல் ராகு- கேது சம்பந்தம் இருந்து குரு பார்வை இல்லையெனறால் குடும்ப தோஷம் ஏற்படும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 2-ல் இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் 8, 9-க்குடைய சனியின் சாரத்திலும் (பூசம்), வாரக்கடைசியில் தன் சுயசாரத்திலும் (ஆயில்யம்) சஞ்சாரம். மதிப்பு, மரியாதை, கௌரவம் இவற்றுக்கு கேடு கெடுதி இல்லையென்றாலும், பொருளாதாரத்திலும் குடும்பச் சூழ்நிலையிலும் ஏதாவது பிரச்சினை உருவாகும். 8-க்குடையவர் 7-ல் இருப்பதாலும், களஸ்திர காரகன் சுக்கிரன் நீசமடைவதாலும் ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணத்தடை ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு, பனிப்போர் உருவாகலாம். என்றாலும் 7-க்குடைய குரு 5-ல் திரிகோணம் பெற்று, ஜென்ம ராசியைப் பார்ப்பதால் மலைபோல் வரும் துன்பம் பனிபோல விலகும். திருமணத்தடை உள்ள ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்ள வேண்டும். இருசாரரும் காமோகர்ஷண ஹோமமும் செய்துகொள்ள வேண்டும். 10-க்குடைய குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதனால் கோட்சாரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் குருவருளும் திருவருளும் உங்களுக்கு கைகொடுக்கும். காப்பாற்றும். கரைசேர்க்கும். ஒருசிலருக்கு குலதெய்வ வழிபாட்டுக் குறைகள் தெரிகின்றன. அதை நிவர்த்திசெய்து கொண்டால் எல்லாம் அனுகூலமாக முடியும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் சூரியன், புதன், ராகு கூடியிருக்க, 10-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் சேர்ந்த கேதுவும் ராசியைப் பார்க்கிறார். தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இவற்றில் பாதிப்புக்கு இடமில்லை என்றாலும் எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் குறுக்கீடு, தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். சுற்றுச் சூழ்நிலைகள் உங்களை டென்ஷன் ஆக்கும், ஆத்திரப்பட வைக்கும். அதேசமயம் 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதோடு, எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகமும், தர்மகர்மாதிபதி யோகமும் இருந்தால் அந்த ஜாதகர் கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்துவிடலாம். தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் இடமில்லை. தொழில்காரகன் சனி, தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் இருவரும் 10-ஆம் இடத்துக்கு திரிகோணமாகவும் கேந்திரமாகவும் இருப்பதால் தொழில், வாழ்க்கை யோகத்தில் முன்னேற்றம் உண்டு. அவர்கள் இருவரும் வக்ரமாக இருப்பதால் நன்மைகள் எல்லாம் மிகமிக மெதுவாகத் தாமதமாக நடக்கும். ஆனாலும் தோல்விக்கு இடமில்லாமல் முடிவில் எல்லாம் வெற்றியாகும். 4-க்குடைய சுக்கிரன் தன் ஸ்தானத்துக்கு 12-ல் மறைவாகவும் நீசமாகவும் இருப்பதால் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ஸ்தானத்திற்கு 12-ல் மறைகிறார். ராகு- கேது சம்பந்தம் பெறகிறார். 9-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்து ராசியையும் ராசிநாதனையும் பார்க்கிறார். எனவே தொழில்துறையில் தொய்வுகள் ஏற்படலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு உடனிருப்பவர்களால் தொல்லைகளும், வம்பு வழக்குத் துன்பங்களும் ஏற்படலாம். குறிப்பாக அவரவர் வேலையை அவரவர் கவனித்தால் போதும். அடுத்தவர்கள் வேலையில் தலையிடுவது தவறு. பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை காணப்படுவதால் கடன் வாங்கி சில காரியங்களை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்குப்போய் வேலை பார்க்கும் விருப்பம் நிறைவேறும். குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகள் உருவாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் கடன்பட்டுத் தொழிலை விரிவாக்கலாம்.. அல்லது சொந்த வீடு கட்டலாம். இடம் வாங்கிப் போகலாம். அதற்கும் கடன் உதவி கிடைக்கும். 5-ல் உள்ள சனி வக்ரம் என்பதால், 5-க்குடைய குரு 3-ல் மறைவதால், அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அவருக்கு 12-ல் நீசமடைவதால் சிலருக்கு வாரிசு சம்பந்தமான தோஷங்களோ பிரச்சினைகளோ, வைத்தியச்செலவுகளோ உருவாகலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து செயல்படவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் சூரியன், ராகுவோடு சம்பந்தம். சூரியன் விரயாதிபதி. எனவே உறவினர்களாலும் நண்பர்களாலும் தவிர்க்க முடியாத விரயங்களைச் சந்திக்கலாம். ஒருசிலருடைய அனுபவத்தில் அனுதாபப்பட்டு கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கமால் போவது யானை வாயில்போன கரும்பு மாதிரி! எனவே, தாட்சண்யம் தனநாசம் என்று சொல்வதுபோல ஏமாற்றங்களையும் இழப்புகளையும் தவிர்ப்பதற்கு மனதை கல்லாக்கிக்கொள்ள வேண்டும். கருணை காட்டக்கூடாது. 5, 6-க்குடைய சனி ஜென்ம ராசியையும், 10-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும் பார்ப்பதால் சிலர் பங்காளிப் பகையை சந்திக்கலாம். சிலர், பெற்ற பிள்ளைகளே பிரச்சினைகளாகி விரோதிகளாக மாறி கோர்ட் வழக்கு என்று போகலாம். ஒருசிலர் அடிதடி, வெட்டுக்குத்து என்று போலீஸ் விவகாரத்துக்கும் ஆளாகலாம். எனவே கூடியவரை வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய், செவியிருந்தும் செவிடராய் ஒதுங்கியிருப்பது உத்தமம். மூன்று குரங்குகள் ஒன்று வாய்பொத்தி, ஒன்று கண்ணைப் பொத்தி, ஒன்று காதைப் பொத்தியிருக்கும். அதுபோல நீங்கள் அதை நினைத்து நடந்துகொள்ளுங்கள்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 12-ல் மறைவு, நீசம். அவருக்கு ராஜயோகாதிபதி சனி பார்வை. 3, 6-க்குடைய குரு ஜென்ம ராசியில் சுய சாரம். எதிலும் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாதபடி தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும் காலம். சில காரியங்கள் நல்லதுபோல் தெரிந்து செயலி−ல் இறங்கிவிட்டால் முடிவில் அதுவே கெடுதலாக அமையும். சில காரியங்களைக் கெடுதலாக நினைத்து ஒதுங்கிப்போனால் அதுவே மற்றவர்களுக்கு நல்லதாகவும் ஆதாயமாகவும் அமைந்துவிடும். லாட்டரி டிக்கெட் காலத்தில் பம்பர் லாட்டரியில் ஒரு அன்பர் 8-ஆம் நம்பர் டிக்கெட் வாங்கினார். அவருடன் சேர்ந்து அவர் நண்பரும் வேறு ஒரு டிக்கெட் வாங்கினார். அது 6-ஆம் நம்பர். 8-ஆம் நம்பர் டிக்கெட் வாங்கியவர் தனக்கு 8 ராசியில்லை என்று அந்த டிக்கெட்டை நண்பருக்குக் கொடுத்துவிட்டு அவர் டிக்கெட்டை இவர் வாங்கிக்கொண்டார். அவர், ""எந்த டிக்கெட்டும் ராசிப் பொருத்தம் பார்க்கமாட்டேன். கிடைக்க வேண்டிய யோகம் இருந்தால் கிடைக்கும்'' என்று வாங்கிக்கொண்டார். முடிவில் அவருக்கே பத்து லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது. (8-நம்பருக்குப் பரிசு.). இப்படி பல உதாரணங்கள் உண்டு. எது கிடைக்கவேண்டுமென்று இருக்கிறதோ அது கண்டிப்பாகக் கிடைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் உச்சம்; ராகு- கேது சம்பந்தம். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தடைகள் எல்லாம் விலகும். உங்கள் முன்னேற்றத்திற்கு வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நண்பர்களின் சகாயமும் உதவியும் கிடைக்கும். 3-ஆமிடம் நண்பரையும் குறிக்கும், உடன்பிறப்புக்களையும் குறிக்கும். அங்கு செவ்வாய் உச்சம் என்பதால் நல்லதே நடக்கும். 2-ல் சனி இருப்பதும் அவருக்கு வீடு கொடுத்த குரு 12-ல் மறைவதும், குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அவருக்கு 12-ல் மறைவதும், 7-க்குடைய சுக்கிரன் நீசம் என்பதும், கணவன்- மனைவிக்குள் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், மனவருத்தங்களும் உண்டாகும். ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை பாடிக்கறக்க வேண்டும் என்பதுபோல யார்- யாருக்கு எப்படியெப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு உங்கள் காரியங்களை சாதித்துக்கொள்ளவேண்டும். அதாவது அன்பாகப் பேச வேண்டிய இடத்தில் அன்பாகவும், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபமாகவும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கவும் உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். அதுவே பிரச்சினைகள் தீர வழி!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் 11-ல் இருக்கிறார். தன் சொந்த சாரத்தில் இருக்கிறார். (விசாகம்). அடிப்படை வாழ்க்கை வசதிகள், பொருளாதாரம் இவற்றில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் ஜென்மத்தில் உள்ள சனி கேதுவின் சாரம் பெற்று (3) வக்ரமாக இருப்பதால் ஒருசிலருக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று ஏதாவது சரீர உபாதைகளும், மன சங்கடங்களும் ஏற்படும். வேறுசிலருக்கு வேலைப்பளு (ஒர்க்லோடு), சாப்பிடவும் தூங்கவும் நேரமில்லாதபடி டென்ஷன் ஏற்படலாம். முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களுக்கு நேரம்கெட்ட நேரத்தில் சாப்பிடப் போகும்போது சாப்பாட்டை வாயில் வைக்கும்போதே தொலைபேசியில் அவசரச் செய்தியும் அழைப்பும் வரும், தட்டில் உள்ள சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்துபோக நேரும். ஒருசிலர் அனுபவத்தில் உதவிக்கு வந்த உடன்பிறப்புக்களும் அல்லது வேண்டியவர்களும் பாதிக்கிணறு தாண்டியதுபோல எல்லாவற்றிலும் அரைகுறையாக அம்போ என்று விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இவையெல்லாம் ஜென்மச்சனியின் வேலையா? 2-ஆம் இடத்துக் கேது செய்யும் பாதகமா? 8-ஆம் இடத்து ராகு செய்யும் அவலமா என்று புரியாமல் குழப்பம் ஏற்படும். ஆக, கேட்டை மூட்டை செவ்வாய் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. ஜென்ம ராசியில் உள்ள கேதுவின் சாரம். (மூலம்). நவாம்சத்தில் மேஷத்தில் நீசம். சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 10-ல் -சனிக்கு 11-ல். எனவே தொழில்துறையில் சிலருக்கு எதிர்பாராத மாற்றங்களும் ஏமாற்றங்களும் விரயங்களும் செலவுகளும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் அந்த விரயங்களும் செலவுகளும் அடுத்து ஏற்படப்போகும் லாபத்துக்கும் ஆதாயத்துக்கும் "பவுண்டேசன்' (அஸ்திவாரம்) போட்ட மாதிரி ஆகிவிடும். சனி விரயத்தில் இருந்தாலும் அவர் ராசிநாதன் என்பதால் எல்லாமே சுபவிரயமாகிவிடும் அல்லது எதிர்காலத்துக்கான முதலீடு போலாகிவிடும். எந்த ஒரு நல்லது நடக்கும்போதும் அதற்குமுன்னால் சில சோதனைகளைச் சந்தித்தாக வேண்டும். அப்போதுதான் அந்த நல்லதுக்கு ஒரு 'வேல்யூ'- மதிப்பு இருக்கும். நிழலி−ன் அருமை வெய்யிலி−ல் தான் தெரியும் என்பார்கள் ஒரு சிறு உதாரணக்கதை. ஒரு சோம்பேறி மகனுக்கு அவன் தாயார் பாசத்தால் ரகசியமாக சாப்பாடு போட்டு வந்தாள். அதைப்பார்த்த தகப்பனார் அந்த அம்மாளைக் கண்டித்து, ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பாதித்து கொண்டு வந்து கொடுத்தால்தான் சாப்பாடு போடவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் வீட்டிலி−ருந்து வெளியேற்றிவிடுவேன் என்று உத்தரவு போட்டார். அவருக்குத் தெரியாமல் தினசரி மகனுக்கு ஒரு ரூபாய் கொடுத்து அப்பாவிடம் தரும்படி செய்தாள். அவர் அதை வாங்கியதும் வீட்டு எதிரில் உள்ள ஒரு குளத்தில் தூக்கி எறிந்துவிடுவார். இதையும் அவர் கண்டுபிடித்து அவன் உழைத்து சம்பாதித்துக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவு போட்டார். ஒரு நாள் அம்மா ரூபாய் கொடுக்காததால் அன்று அவன் வேறு வழியில்லாமல் ஒரு மூட்டையை சுமந்து கூலி−யாக ஒரு ரூபாய் வாங்கி அப்பாவிடம் கொடுக்க அதையும் அவர் எதிரில் இருந்த குணத்தில் தூக்கி எறிந்துவிட்டார். உடனே அவனுக்கு கோபம் வந்து கஷ்டப்பட்டு மூடை சுமந்து சம்பாதித்த காசை தூக்கி எறிந்துவிட்டாயே என்று சண்டை போட- குளத்தில் இறங்கி எடுடா என்றார். ஏற்கெனவே எறிந்த காசோடு சேர்த்து பல ரூபாய் கிடைத்தது. இதுதான் உழைப்பின் பெருமை. உண்மையான உழைப்புக்கு சம்பளமும் உண்டு போனஸூம் கிடைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி. தன் ராசிக்கு 11-ல் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் இருக்கிறார். அத்துடன் உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் சனியும் ராசியைப் பார்க்கிறார். எனவே பணப்புழக்கம் சரளமாகவே இருக்கும். வாங்கியதும் கொடுக்க வேண்டியதும் முறையாக நடக்கும். வரவேண்டியதும் வரும். கொடுக்க வேண்டியதும் கொடுக்கப்படும். தொழில் ஸ்தாபனங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் வியாபாரமும், வரவும் செலவும் தேக்கமில்லாமல் இயங்கும், செயல்படும். 5-ஆம் இடத்தை சனியும் பார்க்க குருவும் பார்க்கிறார். சனி ராசிநாதன் பார்வை என்பதால் பாதிக்காது. குரு பார்வை நிறைவைத் தரும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் பெருகும். புதிய தொழில் கைகூடும். பழைய தொழில் சிறப்பாக இயங்கும். அதேபோல தனியார்துறையிலும், அரசுத்துறையிலும் பணிபுரிகிறவர்கள் இடையூறு இல்லாமல் செயல்பட்டு நற்பெயர் எடுக்கலாம். பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்! 10-க்குடையவர் செவ்வாய் 12-ல் உச்சம்- கேது சம்பந்தம், ராகு பார்வை. சிலர் வெளியூர் வேலை மாற்றம் செய்யலாம் அல்லது வெளியூரில் புதுத்தொழில் (பிராஞ்சு) ஆரம்பிக்கலாம். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. புதன்- ராகு சம்பந்தம் என்பதால் சிலருக்குத் திருமணத்தடை ஏற்படலாம். அல்லது கணவன்- மனைவிக்குள் பிரச்சினைகளும் வருத்தங்களும் உருவாகலாம். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் பிரிவினையும் ஏற்படலாம். அல்லது விவாகரத்து வழக்கு நடக்கலாம். என்றாலும் குரு ராசியைப் பார்ப்பதால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் அல்லது மறுமணம் மனம்போல செயல்படவும் காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 9994274067-ல் தொடர்புகொண்டு ƒஹாமம் செய்யலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அவருக்கு 12-ல் மறைவு, நீசம். இது எல்லா வகையிலும் உங்களுக்குப் பாதிப்புதான். குரு தன் சுயசாரத்தில் (விசாகம்) இருப்பதால் உயிருக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் நித்திய கண்டம் பூரண ஆயுசு, பொருளாதார ரீதியாக சக்திக்குமீறிய செலவுகளைச் சமாளிக்க முடியாமல் எல்லாரிடமும் கௌரவப் பிச்சை எடுக்கவேண்டிய நிலை. ஒரு காலத்தில் பை நிறைய பணம் இருந்த சமயம் கேட்பவர் எல்லாருக்கும் கை நிறைய அள்ளிக்கொடுத்த காலம் இருந்தது. இப்போது அன்றாட, அத்தியாவசியச் செலவுகளுக்குக்கூட யாரிடம் கேட்பது, யாரிடம் கடன் வாங்குவது என்ற நிலை! எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி பேத்தி சடங்காகிவிட்டாள் என்று ஒரு பஸ் பிடித்து அக்கம் பக்கம், சொந்தம் சுற்றம் என்று எல்லாரையும் அழைத்துக்கொண்டுபோய் அண்டாகுண்டா, பட்டுப்புடவை என்று சீர்செனத்தி எல்லாம் செய்து ஆடம்பரமாக செய்தார். எல்லாம் பத்து வட்டிக்கு கடன் வாங்கிதான் டம்பமாக செய்தார். இதெல்லாம் தேவைதானா? ஊர்கூடி தேர் இழுத்த கதையாகிவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கத் தாமதமானால்தான் என்னவாகும் என்பது தெரியும்! அதாவது விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல- நிலைமைக் கேற்ற செயலை மேற்கொண்டால்தான் சிறப்பாக இருக்கும். அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடித்த கதைதான்! இதெல்லாம் எட்டாமிடத்து குருவின் திருவிளையாடல் என்று கூறுவதைவிட வேறு என்ன சொல்லமுடியும்? பொதுவாக எதிலும் அகலக்கால் வைக்கக்கூடாது. சரியானவழியில் மேற்கொள்ளும் முயற்சிகள்தாம் வெற்றியடையுமேதவிர வெறும் வாய் அலங்கார வார்த்தைகள் பலன் தராது- பயன்பெறாது! பகவத் கீதையில் கண்ணபரமாத்மா சொன்னபடி எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்.