ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
19-8-2018 முதல் 25-8-2018 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக நின்று ராசியைப் பார்க்கிறார். 4-ஆமிடம், 5-ஆமிடங்களையும் பார்க்கிறார். 4-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். அதனால் 4-ல் ராகு, 10-ல் கேது என்ற கெடுபலன் மறையும். எல்லாம் நன்மையாக நடக்கும். தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். பூமி, வீடு, மனை சம்பந்தமான சுபச்செலவுகள் நிறைவேறும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அவருக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு இவற்றுக்குக் குறைவில்லை. கடுமையான காரியங்களை எளிமையாக நிறைவேற்றிவிடலாம். திருமணத்தடை விலகும். நல்ல மனைவி, நல்ல கணவன் அமைவார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் தெளிவு பெறும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம். வழக்கு வில்லங்கம், விவகாரம் உங்களுக்கு சாதகமாக முடியும். 5-ல் சூரியன் ஆட்சி என்பதால் புத்திர தோஷம் விலகும். வாரிசு உருவாகும். பொதுவாக 5-ல் சூரியன் இருப்பது புத்திர தோஷம் என்றாலும், இங்கு ஆட்சி என்பதாலும் ராசிநாதன் பார்ப்பதாலும் தோஷம் விலகும். தொழில் வளம்பெறும். புதிய முயற்சிகள் கைகூடும். சம்பளத்தில் இருப்போர் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். தேவைப்பட்டால் கூட்டு சேர்ந்துகொள்ளலாம்.
பரிகாரம்: மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசமாக இருக்கிறார். 3-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். சந்திரனும் 7-ல் நீசம் பெறுகிறார். சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 9-ல்உச்சம் பெறுகிறார். எனவே சுக்கிரனுக்கும் நீசபங்க ராஜயோகம். சந்திரனுக்கும் நீசபங்க ராஜயோகம். வரவு- செலவுகள் தேக்கமில்லாமல் ஓடியடையும் என்றாலும் மிச்சப்படுத்த முடியாதபடி செலவுகள் ஏற்படும். 6-ல் குரு சுயசாரம் பெறுவதால் கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் ரொட்டேஷன் தெளிவாக இருக்கும். இங்கு வாங்கி அங்கு கொடுப்பதும், அங்கு வாங்கி இங்கு கொடுப்பதும் சரளமாகக் காணப்படும். அதேபோல வாக்கு நாணயத்தையும் காப்பாற்ற முடியும். போட்டி, பொறாமைகள், தேவையற்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கி முன்னேறலாம்; சாதிக்கலாம். பணநெருக்கடி என்று சொல்ல முடியாவிட்டாலும் பணத்தேவைகள் அதிகமாக இருக்கும். சொந்தம், சுற்றத்தார், நண்பர் வட்டாரத்தில் சுபச்செலவுகளும் மொய்ச் செலவுகளும் ஏற்படும். அட்டமத்துச்சனி என்பதால் சிலர் வீடு மாறலாம். சிலர் வெளியூர் வேலை செல்லலாம். அல்லது வெளிநாடு போகலாம்.
பரிகாரம்: அட்டமத்துச்சனியின் தோஷம் விலக அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து அத்தனை எண்ணிக்கை மிளகை சிவப்புத்துணியில் கட்டி சனிக்கிழமைதோறும் பைரவர் சந்நிதியில் நெய்தீபமாக ஏற்றவும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒரு பலம். என்றாலும் ராசிநாதன் புதன் 2-ல் ராகுவோடு கூடியிருக்கிறார். எனவே உங்களுடைய முயற்சி, செயல்பாடு இவற்றில் தடைகள் ஏதும் இல்லையென்றாலும், காரியங்களை நிறைவேற்றுவதில் தாமதம் அல்லது தள்ளிப்போட வேண்டிய சூழல்கள் உருவாகலாம். 4-ல் சுக்கிரன் நீசம். தாயார் உடல்நலத்தில்- ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும், கணவன்- ம
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
19-8-2018 முதல் 25-8-2018 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக நின்று ராசியைப் பார்க்கிறார். 4-ஆமிடம், 5-ஆமிடங்களையும் பார்க்கிறார். 4-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். அதனால் 4-ல் ராகு, 10-ல் கேது என்ற கெடுபலன் மறையும். எல்லாம் நன்மையாக நடக்கும். தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். பூமி, வீடு, மனை சம்பந்தமான சுபச்செலவுகள் நிறைவேறும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அவருக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு இவற்றுக்குக் குறைவில்லை. கடுமையான காரியங்களை எளிமையாக நிறைவேற்றிவிடலாம். திருமணத்தடை விலகும். நல்ல மனைவி, நல்ல கணவன் அமைவார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் தெளிவு பெறும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம். வழக்கு வில்லங்கம், விவகாரம் உங்களுக்கு சாதகமாக முடியும். 5-ல் சூரியன் ஆட்சி என்பதால் புத்திர தோஷம் விலகும். வாரிசு உருவாகும். பொதுவாக 5-ல் சூரியன் இருப்பது புத்திர தோஷம் என்றாலும், இங்கு ஆட்சி என்பதாலும் ராசிநாதன் பார்ப்பதாலும் தோஷம் விலகும். தொழில் வளம்பெறும். புதிய முயற்சிகள் கைகூடும். சம்பளத்தில் இருப்போர் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். தேவைப்பட்டால் கூட்டு சேர்ந்துகொள்ளலாம்.
பரிகாரம்: மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசமாக இருக்கிறார். 3-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். சந்திரனும் 7-ல் நீசம் பெறுகிறார். சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 9-ல்உச்சம் பெறுகிறார். எனவே சுக்கிரனுக்கும் நீசபங்க ராஜயோகம். சந்திரனுக்கும் நீசபங்க ராஜயோகம். வரவு- செலவுகள் தேக்கமில்லாமல் ஓடியடையும் என்றாலும் மிச்சப்படுத்த முடியாதபடி செலவுகள் ஏற்படும். 6-ல் குரு சுயசாரம் பெறுவதால் கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் ரொட்டேஷன் தெளிவாக இருக்கும். இங்கு வாங்கி அங்கு கொடுப்பதும், அங்கு வாங்கி இங்கு கொடுப்பதும் சரளமாகக் காணப்படும். அதேபோல வாக்கு நாணயத்தையும் காப்பாற்ற முடியும். போட்டி, பொறாமைகள், தேவையற்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கி முன்னேறலாம்; சாதிக்கலாம். பணநெருக்கடி என்று சொல்ல முடியாவிட்டாலும் பணத்தேவைகள் அதிகமாக இருக்கும். சொந்தம், சுற்றத்தார், நண்பர் வட்டாரத்தில் சுபச்செலவுகளும் மொய்ச் செலவுகளும் ஏற்படும். அட்டமத்துச்சனி என்பதால் சிலர் வீடு மாறலாம். சிலர் வெளியூர் வேலை செல்லலாம். அல்லது வெளிநாடு போகலாம்.
பரிகாரம்: அட்டமத்துச்சனியின் தோஷம் விலக அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து அத்தனை எண்ணிக்கை மிளகை சிவப்புத்துணியில் கட்டி சனிக்கிழமைதோறும் பைரவர் சந்நிதியில் நெய்தீபமாக ஏற்றவும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒரு பலம். என்றாலும் ராசிநாதன் புதன் 2-ல் ராகுவோடு கூடியிருக்கிறார். எனவே உங்களுடைய முயற்சி, செயல்பாடு இவற்றில் தடைகள் ஏதும் இல்லையென்றாலும், காரியங்களை நிறைவேற்றுவதில் தாமதம் அல்லது தள்ளிப்போட வேண்டிய சூழல்கள் உருவாகலாம். 4-ல் சுக்கிரன் நீசம். தாயார் உடல்நலத்தில்- ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும், கணவன்- மனைவி தேக சுகத்தில் சௌகரியக் குறைவுகளும் தோன்றும். 7-ல் இருக்கும் சனி திருமணத் தடைகளை உருவாக்குவார். 3-ல் சூரியன் ஆட்சி. உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் வகையில் சுபச்செலவுகளைச் சந்திக்கலாம். தைரியமான சில முடிவுகளை எடுக்கலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியம். வரவு- செலவு திட்டமிட்டபடி நடைபெற்றாலும் செலவுகள் கூடுதலாகவே அமையும். செலவினங்களைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினை முயற்சிகளில் சாதகமான முடிவுகள் தள்ளிப்போகலாம். தெய்வ யாத்திரைகள், தெய்வ கைங்கரியங்களை நிறைவேற்றலாம்.
பரிகாரம்: திண்டிவனம் அருகில் (புதுச்சேரி பாதையில் மயிலம் பிரிவில்) திருவக்கரை சென்று வக்ரகாளியம்மனையும் சந்திர மௌலீஸ்வரரையும் வழிபடவேண்டும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் புதன்- ராகு சேர்க்கை இருந்தாலும், 10-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதால் தொழில், வாழ்க்கை இவற்றில் பாதிப்புக்கு இடமில்லை. அத்துடன் 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா கிறது. அதனால் உங்களுடைய அடிப்படை வாழ்க்கை வசதிகள், மதிப்பு, மரியாதை எதற்கும் குறைவில்லை. தொட்டது துலங்கும்; கருதியது கைகூடும். களஸ்திரகாரகன் சுக்கிரன் 3-ல் மறைவு- நீசம் என்பதாலும், 7-ல் கேது நிற்பதாலும் பருவ வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் தடையாகும்; தாமதமாகும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்துகொள்ள திருமணத்தடை விலகும். 7-க்குடையவர் 6-ல் மறைவதும், 7-ல் கேது- ராகு சம்பந்தப்படுவதும், சுக்கிரன் நீசமடைவதும் தோஷம்தான். எனினும் குடும்பாதிபதி சூரியன் ஆட்சி பெறுவதால் கல்யாணமானவர்கள் "ஈகோ' உணர்வை விலக்கி விட்டுக்கொடுத்துப் போனால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கருத்து வேறுபாடுகள் விலகும். புதுமுயற்சிகள் கைகூடும். அதேபோல புதிய வேலை முயற்சிகளும் வெற்றியடையும். தொழில் அபிவிருத்தி அடையும். சொந்தத் தொழில், கூட்டுத் தொழில் செய்கிறவர்களுக்குப் பொறுப்புகளும் சுமைகளும் அதிகமாக இருக்கும். இருந்தாலும் 10-ஆம் இடத்தை 9-க்குடையவரும் 10-க்குடையவரும் பார்ப்பதால்- குலதெய்வ நம்பிக்கை குறைவில்லாமல் இருப்பதால் எந்தக் குற்றமும் குறையும் ஏற்படாது.
பரிகாரம்: அவரவர் குலதெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட்டால் போதும். கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கைகொடுத்துக் காப்பாற்றும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஜென்மத்தில் ஆட்சி. 6-ல் உள்ள கேதுவின் சாரம் பெறுகிறார். கேதுவோடு 4, 9-க்குடைய செவ்வாய் உச்சம், சம்பந்தம். தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு, புதுமுயற்சிகளில் வெற்றி ஆகியவையெல்லாம் எதிர்பார்த்ததுபோல எண்ணியபடி நிறைவேறும். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களில் ஒருசிலர் தனிக்குடித்தனமாகப் பிரிந்துபோகும் வாய்ப்பு உண்டாகும். அதேபோல தொழில்துறையில் கூட்டாக இருந்தவர்களும் சுமுகமாகப் பிரிந்து சென்று தனித்தொழில் தொடங்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சமரசமாக, சுமுகமாக நிறைவேறும். பாதகமாக இருந்தால் பிரச்சினைகளோடு பிரிய நேரும். நீண்டகாலமாக அரிசித் தொழிலில் கூட்டு வியாபாரம் செய்து வந்தார்கள் இருவர். ஒரு கூட்டாளியின் மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அந்த மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் பிடிக்கவில்லை. காபிகூட சாப்பிடாமல் எழுந்துவிட்டார்கள். உடனிருந்த மற்றொரு கூட்டாளி "எங்கள் வீட்டில் காபியாவது சாப்பிட்டுவிட்டு போங்கள்' என்று உபசரித்தார். காபி சாப்பிட வந்தவர்கள் அந்தக் கூட்டாளியின் மகளைப் பார்த்துவிட்டு, இந்தப் பெண்ணை பையனுக்குத் தருமாறு கொண்டுவந்த பூவை அந்தப் பெண்ணுக்கு சூட்டிவிட்டார்கள். உடனே அடுத்த கூட்டாளிக்கு கோபம் வந்து, பல வருடமாக நடந்துவந்த கூட்டுத் தொழிலை முறித்துவிட்டார். யார் யாருக்கு எங்கே பிராப்தம் இருக்கிறதோ அங்கேதான் அது முடியும் என்பதை அவர் உணரவில்லை.
பரிகாரம்: திருமணத்தடை விலக ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்ளவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் பலமாக இருக்கிறார். ராகு- கேது சம்பந்தம் பெறுவதோடு ஆயில்ய நட்சத்திரத்தில் சுயசாரம் பெறுகிறார். ஜென்ம ராசியில் சுக்கிரன் நீசம் என்றாலும் நீசபங்க ராஜயோகம். எதிர்ப்பு, இடையூறுகள் காணப்பட்டாலும், தோல்விகள் தொடர்ந்து விரட்டிவந்தாலும் தைரியமாக முடிவுகளை எடுத்து செயல்படுத்தி, வெற்றி முத்திரை பதிப்பீர்கள். உடனிருப்போரும், உற்றவர்களும் மற்றவர்களும் பெண்டு பிள்ளைகளும் உறுதுணையாக செயல்படுவார்கள். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்றும், "இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என்றும் அறைகூவல் விடுத்து முன்னேற்றப் பாதையில் முழக்கமிட்டுப் பயணிப்பீர்கள். இதுதான் 5-ஆமிடத்து உச்ச செவ்வாயுடன் கேது சேர்ந்த பேராற்றல்! 4-ல் உள்ள சனி உங்கள் சுகம் அல்லது தாயின் சுகத்துக்கு சங்கடங்கள் ஏற்படுத்தினாலும் 4-ஆமிடத்துக்குரிய குரு சுயசாரம் (2-ல்) பெறுவதால் பாதிப்புக்கு இடமில்லை. 10-க்குடைய புதன் 11-ல் ராகுவோடு இருப்பதால் சிலருக்கு எதிர்பாராத தனப்ராப்தி அமையும். அதிர்ஷ்ட தேவதை அது இஷ்டமாக உங்களை வந்து அரவணைக்கும். குடிசையும் கோபுரமாகும். அதற்கேற்றமாதிரி ஜாதகத்தில் 2, 11, 8, 9-க்குடையவர்கள் சேர்க்கையில் இருந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்.
பரிகாரம்: சொர்ணாகர்ஷண பைரவ மந்திரத்தை ஜெபிக்கலாம். அந்த சந்நிதி இருக்கும் இடம்சென்று வழிபடலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் நீசம். அவருக்கு வீடு கொடுத்த புதன் 11-ல் ராகுவோடு சம்பந்தம். சுக்கிரன்- வெண்மை. புதன்- பச்சை. ராகு- கருப்பு. (ராகு- கரும்பாம்பு, கேது- செம்பாம்பு). சாமிக்கு அளிக்கும் வெள்ளைப்பூ நாளாவட்டத்தில் கருப்பாக மாறிவிடும். அதுபோல நீங்கள் தூய்மையானவராக இருந்தாலும் உங்கள் பழக்க வழக்கங்களினால் அவப்பெயருக்கு ஆளாக நேரிடும். காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல. கல்யாணம் செய்தவர் எல்லாம் சம்சாரி அல்ல. அவரவர் எண்ணம், செயல் இவற்றைப் பொருத்தே பலன்கள் மாறுகின்றன. ஏழரைச்சனிக் காலத்தில் ஏற்பட்ட அவப்பெயர்கள் சனி விலகி எட்டுமாதமாகியும் இன்னும் மாறவில்லை. குடும்பத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் நீங்கள் செய்த நல்லவற்றை பாராட்டாமல் சிறிய தவறுகளைப் பூதக்கண்ணாடியால் பார்த்து விமர்சிக்கிறார்கள். இருந்தாலும் ஜென்ம குரு உங்களுக்குத் திருப்பத்தை ஏற்படுத்துவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது தத்துவமாக இருந்தாலும், இன்றைய உலகத்தில் பணபலம், படைபலம், அதிகாரபலம், அரசியல் பலம் உள்ளவர்கள் ஊழல்களை மறைக்கிறார்கள்; உண்மைகளைப் புதைக்கிறார்கள். நீதி, நேர்மையான நமக்கு வாழ்வுண்டா என்று புலம்புவீர்கள். இறைவன் உங்களுக்கு சாட்சிசொல்ல வருவார்!
பரிகாரம்: மடப்புரம் (திருவாரூர் அருகில்) சென்று குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும். நியாயம் கிடைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். கேது- ராகு சம்பந்தம். அவருக்கு வீடு கொடுத்த சனி தன் ஸ்தானத்துக்கு 12-ல் மறைந்தாலும், கேது சாரத்தில் வக்ரமாக இருக்கிறார். ராசிக்கு 2-ல் குடும்பஸ்தானத்தில் ஏழரைச்சனியின் கடைக்கூறில் இருப்பதாலும், சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 12-ல் மறைவதாலும் குடும்பத்தில் யாரோ செய்த தவறுகளினால் தவிர்க்கமுடியாத வீண் விரயச்செலவுகள் ஏற்பட இடமுண்டு. ஒருசிலரின் அனுபவத்தில் பிள்ளைகள் செய்த விரும்பத்தகாத காரியங்களினால் நீங்கள் தலைகுனிவை சந்தித்து, தகுதி இல்லாதவர்களிடம் மன்னிப்பு கேட்கும் சம்பவத்தை சந்திக்கலாம். அல்லது குடும்ப கௌரவத்தைச் சுமந்து வேதனைப்படலாம். ஒருசிலர் மகனுக்காக அல்லது மகளுக்காக சம்பந்திகளிடம் சரணடையும் சூழ்நிலையும் ஏற்படலாம். இவையெல்லாம் ஏழரைச்சனியின் லீலைகள். ஒரு சின்ன அனுபவம். ஒரு நல்லவரின் மகன் சூதாடி ஒரு தொகையை நஷ்டமடைந்து கடன்காரனானார். கடனை அடைக்க இரண்டாயிரம் ரூபாய் புரோ நோட்டு எழுதி தகப்பனாரிடம் வசூல்செய்து வரும்படி ஒருவரை அனுப்பிவிட்டார். இரண்டாயிரம் ரூபாயில் ஐந்நூறு ரூபாய் அவருக்கு இனாம் கொடுத்துவிட்டு, பாக்கி ஆயிரத்து ஐந்நூறை தான் எடுத்துக்கொண்டு கடனை அடைத்தார். ரூபாய் கொடுத்த தகப்பனாருக்கு உண்மை தெரிந்தும் குடும்ப கௌரவத்திற்காக முழுத்தொகையைக் கொடுத்து புரோநோட்டை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டார்.
பரிகாரம்: சனி பகவானால் ஏற்படும் இந்த இழப்புகளைத் தவிர்க்க ஆஞ்சனேயரை வழிபடவும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். விசாகம் 2-ல் சுயசாரம் பெறுகிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 10-ல் நீசம் என்றாலும், ராசிக்கு கேந்திர பலம் பெறுவதால் நீசபங்கமடைகிறார். எனவே, ஏழரைச்சனி தனுசு ராசிக்காரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாடாய்ப்படுத்துகிறது. பெற்ற தகப்பனாருக்கு, பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்யவில்லையே என்ற வருத்தம். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக்கூட சம்பாதிக்க முடியாமல் சமாளிக்க முடியாத நிலை சிலருக்கு! வேறுசிலருக்கு ஆரோக்கியக்குறைவு. எல்லா டெஸ்ட்டுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் ஒன்றுமில்லை என்று சொன்னாலும், எதையும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை பலருக்கு. (உடல்பலவீனம்). “"நோய்க்கும் பார் பேய்க்கும் பார்'’ என்று மாத்திரை, மருந்து வேலைக்கு மந்திரித்து கயிறு கட்டினாலும் பலன் இல்லை. வேறு சிலருக்கு கடமையே கண்ணாகக் கருதி எட்டு மணி நேரத்திற்கு பன்னிரண்டு மணிநேரம் உழைத்தும் குடும்பத்தில் மனைவி, மக்களோடு சந்தோஷப்பட முடியாத நிலை! ஒருசிலருக்கு கட்டிக்கொடுத்த பெண்கள் வகையில் தீராத பிரச்சினைகள், ஓயாத கவலைகள். கோவில் கோவிலாகச் சென்றும் பிரார்த்தனை செய்தும் நிவர்த்தி கிடைக்காத நிலை! இப்படி சனிபகவான் இருப்பவரையும் படுத்துகிறார்! இல்லாதவரையும் படுத்துகிறார்!
பரிகாரம்: ஜென்மச்சனியின் தோஷம் விலக நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று ஏழரையடி உயர சனீஸ்வரரை வழிபடவும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். 8-ஆமிடத்து சூரியன் ஆட்சி பெற்று பலம்பெறுகிறார். 7-ஆமிடத்து ராகுவும், ஜென்ம கேதுவும் சிலரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கிறார். சிலருக்கு இடப்பெயர்ச்சி, சிலருக்கு பதவி மாற்றம், சிலருக்குத் தொழில் அல்லது வேலை மாற்றம், சிலருக்குக் குடியிருப்பு மாற்றம் என சந்திக்கநேரும். ஜாதக தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் எல்லாம் முன்னேற்றமாகவும், ஜாதக தசாபுக்தி பாதகமாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் எல்லாம் ஏமாற்றமாகவும் அமையும். மகர ராசிக்கு இப்போது நடக்கும் சனி விரயச்சனி. முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்குசனி. இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி. மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனி என்று சொல்லுவார்கள். இப்படி மாறுபட்ட சனியின் பலன்கள் எல்லாம் அவரவர் எண்ணம், செயல், நடவடிக்கைகளைப் பொருத்தே அமையும். இதைத்தான் பெரியவர்கள் மனம்போல் வாழ்வு என்கிறார்கள். இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் கஷ்டப்படுகிறார்களே! சனியின் பாதிப்புக்கு ஆளாகிறார்களே என்று நினைக்கலாம். முன்ஜென்மாவில் செய்த பாவச் செயல்கள்தான் இந்த ஜென்மாவில் சனி பகவானின் சாயலிலில் வருகிறது!
பரிகாரம்: நீங்கள் நல்லவராகவும் கெட்டவராகவும் இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது. சனி பகவானின் தொல்லையிலிலிருந்து விலக நல்லதே செய்யுங்கள். திருக்கொள்ளிக்காடு சென்று வழிபடுங்கள்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். கேதுவின் சாரத்தில் வக்ரமாக இருக்கிறார். கேது 12-லும், ராகு 6-லும் மறைகிறார்கள். பாவ கிரகங்கள் பாவ ஸ்தானத்தில் மறைவது நல்லது. ராசிநாதன் சனியும், சனிக்கு வீடு கொடுத்த குருவும் 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார்கள். (மிதுனத்தை). உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் வெற்றியடையும். செல்வாக்கும் மதிப்பும் மரியாதையும் உயரும். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு உருவாகும். வாரிசு உள்ளோருக்குப் பிள்ளைகளின் வளர்ச்சி மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஏற்படுத்தும். பிள்ளைகளால் பெருமையும் பூரிப்பும் அடையலாம். "ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோனாக்குதல் தந்தைக் கடனே' என்ற தத்துவப்படி, பெற்றவர்கள் பிள்ளைகளால் பெருமை அடைவார்கள். 5-க்குடையவர் 6-ல் மறைந்து, ராகு- கேது சம்பந்தம் பெறுவதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் பிள்ளைகளின் கௌரவ பாதிப்பான சில நிகழ்ச்சிகளால் பெற்றவர்கள் வெட்கித் தலைகுனியும் சம்பவங்களும் நடக்கும். என்றாலும் குரு பார்வையால் காலப்போக்கில் கவலைகள் சரியாகும். 9-ஆம் இடத்து குரு ராசியைப் பார்ப்பதால் வசதி படைத்தோரின் இல்லங்களில் அல்லது அரசியல்வாதிகளின் குடும்பங்களில் நடைபெறும் காதல் கல்யாணங்களும் கலப்புத் திருமணங்களும் சீர்திருத்தம் என்ற போர்வையால் மறைக்கப்படும். அதுவே இல்லாத ஏழை எளியோரின் இல்லத்தில் நிகழ்ந்தால் மானப்பிரச்சினையாகும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 8-ல் மறைகிறார். 10-ல் சனி இருக்கிறார். 2, 9-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்றாலும், ராகு- கேது சம்பந்தம் பெறுகிறார். இவையெல்லாம் மீன ராசிக்காரர்களுக்கு வைக்கப்படும் “"நீட்'’ தேர்வுக்குச் சமம். இதில் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் அவரவர் வினைப்பயனாகும். கௌரவப் பரிசோதனையாகும். அபாண்டமாக பழிசுமத்தப்பட்ட பட்டினத்தாரை அவர் யாரென்று தெரிந்துகொள்ளாமலேயே "கள்வனைக் கழுவிலேற்றுங்கள்'’ என்று மன்னன் ஆணையிட்டான். கழுமரத்தில் ஏறியதும் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. இருப்பினும் அந்த சிறு நேரத்தில் ஏற்பட்ட ரணம்- அதன் வலிலியை பட்டினத்தார் தாங்க முடியாமல் தர்மதேவதையிடம் கேட்கிறார். "சிறுவயதில் ஈசல்களின் சிறகுகளைப் பிய்த்துப்பிய்த்து அதற்கு ரண வேதனை உண்டாக்கி வேடிக்கைப் பார்த்த விளைவு'’ என்று தர்மத்தாய் பதில் சொல்கிறார். நாம் அடையும் ஒவ்வொரு துன்பத்திற்கும் வேதனைக்கும் நமது முன்வினைப்பயனே காரணமாகும். “அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்- "அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்- எவரெவர்க்கு உதவினர் தவறெவர் நினைவது தம்மை உணர்வதுவே'என்பது சொக்கநாதர் வெண்பா! ராசிநாதன் மறையும் காலமும் ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி நடக்கும் காலமும் இந்த வினைப்பயன் நம்மை வந்து தாக்கும்! அதை நீக்க பக்தியும் ஒழுக்கமும் தர்ம நடவடிக்கைகளும் அவசியம்!
பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடே நம்மை வழிநடத்தும். நம் வினைப் பயன்களை மாற்றியமைக்கும்.