Advertisment

இந்த வார ராசிபலன்

/idhalgal/balajothidam/week-rasipalan-7

29-7-2018 முதல் 4-8-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

29-7-2018- கும்பம்.

31-7-2018- மீனம்.

3-8-2018- புதன் வக்ரநிவர்த்தி.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூசம்- 3, 4, ஆயில்யம்- 1.

செவ்வாய்: திருவோணம்- 3.

புதன்: பூசம்- 1.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

சனி வக்ரம்.

புதன் வக்ரம், அஸ்தமனம்.

30-7-2018- புதன் உதயம்.

2-8-2018- கன்னி சுக்கிரன்.

3-8-2018- புதன் வக்ரநிவர்த்தி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். பாக்கியாதிபதி குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய சனி 9-ல். தர்மகர்மாதிபதி யோகம்! எல்லா வகையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை; குழப்பமும் இல்லை. எல்லாம் நல்லபடியாக நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகூடும். எண்ணியவை ஈடேறும். கருதியவை கைகூடும். தொட்டது துலங்கும், பட்டது துளிர்க்கும். முக்கியமான பிரமுகர்களை- வி.ஐ.பி.க்களைச் சந்திப்பீர்கள். அதனால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அது நிறைவேற வி.ஐ.பி.க்களின் ஆதரவும் உதவியும் அனுகூலமாக அமையும். உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரிகளினாலும் ஆதாயம் உண்டு, நன்மையுண்டு. எதிர்காலத் திட்டங்கள் எளிதில் வெற்றி பெற இனிய ஒத்துழைப்பு உண்டாகும். 4-ல் சூரியன், புதன், ராகு சேர்க்கை. 4-ஆம் பாவ சம்பந்தமான பல பிரச்சினைகள் உருவாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பூமி, வீடு, வாகன சம்பந்தமான தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். தாயின் சுகம் பாதிக்கலாம் அல்லது தாய்வழி உறவில் சங்கடம் ஏற்படலாம் அல்லது தந்தைவழி உறவில் வருத்தம் உண்டாகலாம். தொழில்துறையிலும், வாழ்க்கை அமைப்பிலும் பிரச்சினைகள் இல்லாதபடி காணப்படும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற இக்காலம் உன்னதமான காலம். அதேபோல குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடுகளும் மனநிறைவைத் தரும். மேற்கண்ட வகைகளில் திருப்பணி பொறுப்பேற்று செயல்படுத்தலாம். மொத்தத்தில் இந்த வாரம் மனதுக்கு உகந்த வாரம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திர பலம். சுபகிரகம் திரிகோணத்திலும், அசுப கிரகம் கேந்திரத்திலும் பலம் பெறுவார்கள். இங்கு சுக்கிரன் சுபகிரகமா- அசுபகிரகமா என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லாத வகையில் ராசிநாதன் என்ற அந்தஸ்தை அடைவார். ராசிநாதனுக்கும் லக்னநாதனுக்கும் கேந்திரம், திரிகோணம் என்ற இரண்டுக்கும் உரிய மதிப்பும் தகுதியுமுண்டு. 1, 5, 9 திரிகோணம். 1, 4, 7, 10 கேந்திரம். 1 என்பது ராசிக்கும் லக்னத்துக்கும் உரியது. எனவே சுக்கிரன் 4-ல் தனது சுயசாரத்திலும் (பூரம்- 4), பிறகு தான் நின்ற ராசியாதிபதியான சூரியன் சாரத்திலும் (உத்திரம்) இருப்பதால் இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நற்பலன்களாகவே நடைபெறும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் எதற்கும் குறைவில்லை. இழந்த பதவியும் இழந்த செல்வமும் மீண்டும் பெறலாம். அதேசமயம் சுக்கிரன் 6-க்கும் உடையவர் என்பதால் எதிரி, கடன், போட்டி, பொறாமை, நோய், வைத்தியச்செலவு போன்ற 6-ஆம் இடத்துப் பலன்களும் உங்களைத் தேடிவரலாம். என்றாலும் 6-க்கு 11-ல் சுக்கிரன் நிற்பதால் அவற்றையெல்லாம் வேரோடு களைந்து வெற்றி பெறும் யோகமும் உண்டாகும். மேலும் 6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம், 2-ஆம் இடத்துக்கு பஞ்சம ஸ்தானம் என்பதால் புதிய தொழில் விருத்தி, செய்தொழில் சிறப்பு, தன வருமானம், லாபம், சேமிப்பு, குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி, மனநி

29-7-2018 முதல் 4-8-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

29-7-2018- கும்பம்.

31-7-2018- மீனம்.

3-8-2018- புதன் வக்ரநிவர்த்தி.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூசம்- 3, 4, ஆயில்யம்- 1.

செவ்வாய்: திருவோணம்- 3.

புதன்: பூசம்- 1.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

சனி வக்ரம்.

புதன் வக்ரம், அஸ்தமனம்.

30-7-2018- புதன் உதயம்.

2-8-2018- கன்னி சுக்கிரன்.

3-8-2018- புதன் வக்ரநிவர்த்தி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். பாக்கியாதிபதி குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய சனி 9-ல். தர்மகர்மாதிபதி யோகம்! எல்லா வகையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை; குழப்பமும் இல்லை. எல்லாம் நல்லபடியாக நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகூடும். எண்ணியவை ஈடேறும். கருதியவை கைகூடும். தொட்டது துலங்கும், பட்டது துளிர்க்கும். முக்கியமான பிரமுகர்களை- வி.ஐ.பி.க்களைச் சந்திப்பீர்கள். அதனால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அது நிறைவேற வி.ஐ.பி.க்களின் ஆதரவும் உதவியும் அனுகூலமாக அமையும். உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரிகளினாலும் ஆதாயம் உண்டு, நன்மையுண்டு. எதிர்காலத் திட்டங்கள் எளிதில் வெற்றி பெற இனிய ஒத்துழைப்பு உண்டாகும். 4-ல் சூரியன், புதன், ராகு சேர்க்கை. 4-ஆம் பாவ சம்பந்தமான பல பிரச்சினைகள் உருவாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பூமி, வீடு, வாகன சம்பந்தமான தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். தாயின் சுகம் பாதிக்கலாம் அல்லது தாய்வழி உறவில் சங்கடம் ஏற்படலாம் அல்லது தந்தைவழி உறவில் வருத்தம் உண்டாகலாம். தொழில்துறையிலும், வாழ்க்கை அமைப்பிலும் பிரச்சினைகள் இல்லாதபடி காணப்படும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற இக்காலம் உன்னதமான காலம். அதேபோல குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடுகளும் மனநிறைவைத் தரும். மேற்கண்ட வகைகளில் திருப்பணி பொறுப்பேற்று செயல்படுத்தலாம். மொத்தத்தில் இந்த வாரம் மனதுக்கு உகந்த வாரம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திர பலம். சுபகிரகம் திரிகோணத்திலும், அசுப கிரகம் கேந்திரத்திலும் பலம் பெறுவார்கள். இங்கு சுக்கிரன் சுபகிரகமா- அசுபகிரகமா என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லாத வகையில் ராசிநாதன் என்ற அந்தஸ்தை அடைவார். ராசிநாதனுக்கும் லக்னநாதனுக்கும் கேந்திரம், திரிகோணம் என்ற இரண்டுக்கும் உரிய மதிப்பும் தகுதியுமுண்டு. 1, 5, 9 திரிகோணம். 1, 4, 7, 10 கேந்திரம். 1 என்பது ராசிக்கும் லக்னத்துக்கும் உரியது. எனவே சுக்கிரன் 4-ல் தனது சுயசாரத்திலும் (பூரம்- 4), பிறகு தான் நின்ற ராசியாதிபதியான சூரியன் சாரத்திலும் (உத்திரம்) இருப்பதால் இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நற்பலன்களாகவே நடைபெறும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் எதற்கும் குறைவில்லை. இழந்த பதவியும் இழந்த செல்வமும் மீண்டும் பெறலாம். அதேசமயம் சுக்கிரன் 6-க்கும் உடையவர் என்பதால் எதிரி, கடன், போட்டி, பொறாமை, நோய், வைத்தியச்செலவு போன்ற 6-ஆம் இடத்துப் பலன்களும் உங்களைத் தேடிவரலாம். என்றாலும் 6-க்கு 11-ல் சுக்கிரன் நிற்பதால் அவற்றையெல்லாம் வேரோடு களைந்து வெற்றி பெறும் யோகமும் உண்டாகும். மேலும் 6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம், 2-ஆம் இடத்துக்கு பஞ்சம ஸ்தானம் என்பதால் புதிய தொழில் விருத்தி, செய்தொழில் சிறப்பு, தன வருமானம், லாபம், சேமிப்பு, குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி, மனநிறைவு, திருப்தி, சந்தோஷம் போன்ற பலன்களையும் சந்திக்கலாம். பொருளாதாரத்திலும் திருப்தியான பலன்கள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 2-ல் சூரியன்- ராகுவோடு சம்பந்தம். 8, 9-க்குடைய சனியின் சாரம் (பூசம்). சனி ராசிக்கு 7-ல் கேந்திர பலம் பெற்று ராசியைப் பார்க்கிறார். கடினமான காரியங்களையும் மிக எளிதாக முடிப்பீர்கள். மலைபோல வரும் பிரச்சினைகளும் துன்பங்களும் பனிபோல விலகிவிடும். நண்பர்களும் சகோதரர்களும் உடன்பிறப்புகளும் உங்களுக்கு "உதவும் கரங்களாக' இருந்து, உறுதுணையாக உதவி செய்வார்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்வார்கள். 7, 10-க்குடைய குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது யோகம்! பலம்! எனவே மனைவி- மக்கள், சுற்றத்தார் எல்லாரும் உங்களுக்குப் பக்கபலமாக நின்று உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு தோழமைக் கட்சியினரின் தொடர்பும் ஆதரவும் உன்னதமாக அமையும். வாக்குவாதங்களும் எதிர்வாதங்களுமாக இருந்த நிலை மாறும். குடும்பச் சூழ்நிலையிலும் உங்கள் சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். மனைவி, மக்கள், சம்பந்தகாரர்கள், சுற்றத்தார் அனைவரும் உங்கள் சொல்வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுக்கொள்வார்கள். அதனால் உங்கள் கோரிக்கைகளும் திட்டங்களும் முழுமையாக நிறைவேறும். "ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகிற மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும்' என்பதுபோல சில காரியங்களை கனிவாகப் பேசி சாதிக்கலாம். சில காரியங்களை அதிகார தோரணையாக சாதிக்கலாம்.

sivan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் சூரியன், ராகு சேர்க்கை நலமில்லை. விரயாதிபதி புதன் ஜென்மத்தில் வக்ரம், அஸ்தமனம் என்பதும் பலமில்லை. அதனால் நியாயமாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளும் தனவரவுகளும் ஏமாற்றமாகலாம். அல்லது கிடைக்காமல் தடையாகலாம். உதாரணமாக ஒரு இடத்தை வேறுசில நபர்களோடு (புரோக்கர்களோடு) இணைந்து கிரயம் பேசி முடிக்கலாம். ஆனால் உங்களுக்குச் சேர வேண்டிய கமிஷனை- பங்கை அவர்கள் தராமல் ஏமாற்றலாம்; சண்டைபோடலாம். அதேசமயம் 9-க்குடைய குரு 4-ல் அமர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால்- 10-க்குடைய செவ்வாய் ராசியாதிபதி சந்திரன் சாரம் (திருவோணம்) பெறுவதால் வேறுவகையில் அந்த இழப்பு ஈடு செய்யப்படும். உங்களை ஏமாற்றியவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களிடையே நியாயம் தேடி வரும்போது அதற்கு மாற்றுப் பரிகாரமாக இழப்பைச் சரிப்படுத்தலாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பங்கை உச்சம் பெற்ற செவ்வாய் பகிர்ந்து வழங்குவார். "கிடைக்க வேண்டும் என்று இருப்பது கிடைக்காமல் போகாது; கிடைக்காது என்பது கிடைக்காமல் போய்விடும்' என்று ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் வசனம் பேசுவார். அதையே விவேகானந்தரும் "உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இருப்பதை ஆண்டவனால்கூட தடுக்க முடியாது' என்று சொல்லியிருக்கிறார். ù.ஜன்ம ராகுவும், சப்தம கேதுவும் சில ஏமாற்றங்களையும் தடைகளையும், தோல்விகளையும் சந்திக்க வைத்தாலும் அது நன்மைக்குப் போடும் அடித்தளம்!

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசியில் 3, 10-க்குடைய சுக்கிரன் தனது சுயசாரத்திலும் (பூரம்), பிறகு தான் நின்ற ராசிநாதன் சூரியன் சாரத்திலும் (உத்திரம்) சஞ்சாரம்! ராசி நாதன் சூரியன் 12-ல் ராகுவோடு சம்பந்தம். சிலருக்கு புத்திரர் வகையில் சோகம், வருத்தம். சிலருக்கு மனைவி வகையில் வருத்தம். பிள்ளைகள் இல்லையென்பது புத்திர தோஷம். பிள்ளைகள் பிறந்து பிறந்து இறப்பது புத்திர சோகம்! மனைவியை இழப்பது களஸ்திர தோஷம். மனைவியைப் பிரிவது களஸ்திர சோகம்! 5-ல் உள்ள சனி 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பலன் இதுதான்! என்றாலும் 5-க்குடைய குரு 7-ஆம் இடத்தைப் பார்ப்பது பரிகாரம் என்றாலும் அவர் ராசிக்கு 8-க்கும் உடையவர் ஆவார். அதனால் பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்த கதை என்பார்கள். அதுபோல அவலை நினைத்து வெறும் உரலை இடித்த நிலையாக சிலருடைய வாழ்க்கை கற்பனைக் கனவுகளாகக் காணப்படும். சிலருடைய வாழ்க்கை கானல் நீராக ஓடிவிடும். 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய சுக்கிரனும் தமக்குள் 6 ஷ் 8 (சஷ்டாஷ்டகமாக) இருப்பதன் பலன் இதுதான்! அதேசமயம் 9-ஆம் இடத்தை குரு (5-க்குடையவர்) பார்ப்பதால் வாழ்க்கையின் முக்கிய தேவைகள் எல்லாம் ஓடியடையும். உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று "உ' காரத்துக்கும் பஞ்சம் இருக்காது. ஆனாலும் 5-ஆம் இடத்துச்சனி மனதில் ஏதோ ஒரு நிறைவில்லாத குறையை உருவாக்குவார். அதுவும் போகப் போகப் பழகிவிடும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 11-ல் இருப்பது பலம். என்றாலும் வார முற்பகுதி வரை அவர் வக்ரமாகவும் அஸ்தமனமாகவும் இருப்பதால் எதுவும் முழுமையடையாத நிலையாகக் காணப்படும். விருந்தில் சாதம் பரிமாறிய பிறகு சாம்பாரோ- ரசமோ- குழம்போ எதுவும் ஊற்றாத மாதிரி! சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, சிலருக்கு அண்டை அயலார் அல்லது நண்பர்கள் அல்லது உற்றார்- உறவினர்களினால் பிரச்சினைகளும், வம்பு தும்பு வழக்குகளும் தேடிவரும் காலம்! விலகி விலகிப் போனாலும் பின்னால் விரட்டி விரட்டி வரும் நேரம்! 2-ல் குரு தன் சுயசாரம் பெறுவதால் பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்காது. சரளமான பணப்புழக்கம் இருந்தாலும், 2-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைய, அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அவருக்கு 12-ல் மறைவதால் எவ்வளவு வரவு வந்தாலும் அவ்வளவும் செலவாகிவிடும். மிச்சப்படுத்த முடியாது. அப்படிச் சொல்லுவதைவிட மிச்சம் இருக்காது. 5, 6-க்குடைய சனி 4-ல் அமர்ந்து 6-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும், ஜென்ம ராசியையும் பார்ப்பதால் சிலருக்கு நோய் உபாதை- வைத்தியச்செலவு, சிலருக்கு கடன் தொல்லை அல்லது எதிரிகளின் தொல்லை, சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் மனைவி, மக்கள் வகையில் போராட்டம், அமைதிக் குறைவு, ஆனந்தம் இல்லாத நிலை! கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி! கடன்பட்டும் பட்டினி என்ற கதையாக வாழ்நாள் வீண் நாளாக ஓடும்!

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் பலம். அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அவருக்கு 12-ல் மறைந்தாலும் துலா ராசிக்கு 10-ல் ஜென்ம குரு, 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். அடிப்படை வாழ்க்கை வசதிகள் எதற்கும் குறைவில்லை. தேவைகள் அனைத்தும் எப்படியோ பூர்த்தியடையும். என்றாலும் திட்டமிட்டபடி- குறிப்பிட்டபடி எதுவும் நடக்காது. அதாவது நேரடி ஒரே பஸ்ஸில் (த்ரூ பஸ்) பயணம் போகாமல் பல பஸ்ஸில் மாறி மாறிப் பயணம் போவதுபோல! சில காரியங்களை விடாப்பிடியாக அடுத்தடுத்த முயற்சிகள் செய்து முடிக்கவேண்டும். சில காரியம் சிலசமயம் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக- அதிர்ஷ்டவசமாக நிறைவேறும். "ஒன்று நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்றாகும்- அன்றி அதுவரினும் வந்தெய்தும். ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும் எனையாளும் ஈசன் செயல்' என்று ஒரு புலவர் பாடினார். அதுமாதிரிதான் உங்கள் நேரம், காலம் ஓடுகிறது. அதற்காக மனம் சோர்ந்துவிடமாட்டீர்கள். அதுதான் 5-ஆம் இடத்தை குரு பார்த்த பெருமை! "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்' என்று வள்ளுவர் சொல்லுவார். எனவே உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். அதேசமயம் 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதால் உங்கள் வெற்றிக்கும் லாபத்துக்கும் நீங்கள் உங்கள் மனைவியையும் மதிக்கவேண்டும், தெய்வத்தையும் துதிக்கவேண்டும். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். அந்த பாக்கியம் உங்களுக்குக் கிடைக்க மனைவியின் மனம் மகிழ்ச்சியாக அமையவேண்டும். அப்போதுதான் தெய்வமும் உங்களை ஆசிர்வதிக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். அவருக்கு வீடு கொடுத்த சனி 2-ல்- அவருக்கு 12-ல்! சனிக்கு வீடு கொடுத்த குரு சனிக்கு 11-ல் ராசிக்கு 12-ல்- ராசிநாதனுக்கு 10-ல். இப்படிப்பட்ட ஒரு கிரக நிலை விபரீத ராஜயோகத்தைத் தரும். அதாவது குறிப்பிட்ட வேலையோ, சரீர உழைப்போ, சம்பாத்தியமோ, முறையான வரவோ எதுவும் இல்லாவிட்டாலும் உங்கள் தேவைகளும் குடும்பத்தாரின் தேவைகளும் எப்படியோ ஓடியடையும். நடந்துபோகும் உங்களை ஒருவர் காரில் அழைத்துப் போவார். கலெக்டர் ஆபீசில் உங்களால் அவருக்கு ஆக வேண்டிய காரியத்தை நீங்கள் முடித்துக் கொடுப்பீர்கள். ஏ.ஸி. ஹோட்டலில் சாப்பாடு வாங்கித் தந்து வீட்டாருக்கு வேண்டிய சாப்பாட்டை பார்சல் வாங்கித் தந்து கைச்செலவுக்கும் காசு தந்து காரிலேயே வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார். இன்றைய பொழுது திவ்யமாக ஓடிவிட்டது. நாளைய பொழுது எப்படி ஓடும் என்று கற்பனைக்கவலை வந்துவிடும். இன்று படியளந்த இறைவன் நாளை உங்களைக் கைவிட்டு விடுவானா? அவன் நாளையும் உங்களைக் காப்பாற்றுவான் என்று நம்புங்கள். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு! ஆதியும் பகவனும் ஊர் ஊராகப் போனார்களாம். எங்கே குழந்தை பிறக்கிறக்கிறதோ அங்கேயே அந்தக் குழந்தையை விட்டுவிட்டுப் போகவேண்டும் என்று ஒரு திட்டத்தோடு தாய் ஆதியை தந்தை பகவன் அழைத்துச்சென்றானாம். அப்படிப் போனபோது ஔவையார் (அழகான பெண் குழந்தை) பிறக்க அதைப் பிரிய தாய்க்கு மனமில்லை. அப்போது அந்தக் குழந்தை "இட்டமுடன் என் தலையில் எழுதிவிட்ட சிவனும் செத்துவிட்டானோ. முட்டமுட்ட அவனுக்கே பாவம். அல்லது உனக்கேன் அன்னை' என்று பாடி வழியனுப்பியதாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு தன் ராசிக்கு 11-ல் பலம் பெறுகிறார். 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்க்கிறார். எனவே உடன்பிறந்தோர் வகையிலும், உற்றார்- உறவினர்களாலும், உயிருக்கு உயிரான நண்பர்கள் வகையிலும் உங்களுக்கு நல்லது நடக்கும். சிலசமயம் முன்பின் அறிமுகமில்லாதவர்களாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அதேபோல மனைவி, பிள்ளைகள் வகையிலும் உங்களுக்கு ஆதரவும் அனுசரணையும் உதவிகளும் எதிர்பார்க்கலாம். 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் சிலசமயம் நீங்கள் யாருக்கு ஆத்மார்த்தமாக உதவிகள் செய்தீர்களோ அவர்கள் நன்றி விசுவாசமில்லாமல் நடந்துகொள்வார்கள். அதனால் உங்கள் மனம் வேதனைப்படலாம். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். நன்றி கெட்டவர்கள் அதன் பலனை அவராகவே அனுபவித்துவிடுவார்கள். அதை வள்ளுவர் "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்றார். அதேபோல "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்று கூறினார். உதவி செய்வது நமது கடமை. அதனை நினைக்காதவர்கள் பாடு அவர்களோடு! நீங்கள் செய்த உதவி தெய்வத்துக்கும் தெரியும், உங்கள் மனதுக்கும் தெரியும். தெய்வம் உங்களை மறக்காமல் காப்பாற்றும். இதெல்லாம் ஏழரைச்சனியின் லீலை!

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். என்றாலும் கேது சாரத்தில் இருக்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 10-ல்- சனிக்கு 11-ல் இருப்பதால் தொழில், வாழ்க்கை, வேலை, உத்தியோகம் இவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. அதேசமயம் பத்து ரூபாயில் முடியவேண்டிய ஒரு காரியத்தை 20 ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். சிலசமயம் ஐந்து ரூபாயில்கூட முடிந்துவிடும். அதாவது திட்டமிட்ட பட்ஜெட் என்பது இருக்காது. கூடுதலாகவும் அமையும்; குறைச்சலாகவும் அமையும். கல்யாண விருந்து சாப்பாட்டில் கடைசிப்பந்தியில் அமர்ந்தால் சில அயிட்டம் இல்லாமல் போகலாம். அப்பளம், பாயசம் தீர்ந்திருக்கலாம். அல்லது கூட்டுப் பொரியல், வெஜிடபிள் பிரியாணி தீர்ந்திருக்கலாம். என்றாலும் சமையல்காரர் விசேஷ ஆட்களுக்காக ஒதுக்கி எடுத்து வைத்திருந்த அயிட்டங்களை ரகசியமாகக் கொண்டு வந்து உங்களுக்குப் பரிமாறலாம். இதுதான் யோகம் என்பார்கள்; அதிர்ஷ்டம் என்பார்கள். அது இஷ்டமாக வருவதுதான் அதிர்ஷ்டம். விரும்பிப்போனால் விலகிப்போகும்- விலகிப்போனால் விரும்பி வரும். இது அதிர்ஷ்டத்துக்கும் பொருந்தும், செல்வ லட்சுமி கடாட்சத்துக்கும் பொருந்தும். என்றாலும் எதையும் எதிர்பாராமல் காத்திருந்தால் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைப்பது உறுதி. சிலருக்குத் திருமணத்தடை, தாமதம் ஏற்பட்டாலும் தாமதம் நற்பலனாக முடியும். நல்ல கணவன் நல்ல மனைவி அமைவார்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல். அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு11-ல். கும்ப ராசிக்கு 9-ல் நின்று கும்ப ராசியைப் பார்க்கிறார். குரு பார்வை ஜென்ம ராசி, 3-ஆம் இடம், 5-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. சகோதர ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும். அட்டைப்பூச்சியாக ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சிய கெட்டவர்கள் விட்டு விலகிப் போவார்கள். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும், என்றும் நல்லவர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொண்டு உதவி செய்வார்கள். இதுதான் 2, 11-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்த்த பலன்! ஒரு மனிதனுக்கு நல்ல நேரம் வரும்போது கெட்டது எல்லாம் விலகிவிடும். கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது நல்லவை எல்லாம் விட்டு விலகிப்போகும். இதுதான் கால தத்துவம்! பாரதத்தில் துரியோதனனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது விதுரர் விலகிப்போனார். சகுனி வந்து ஒட்டிக்கொண்டார். அதேபோல இராவணனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது விபீஷணன் விலகிப் போனான். எது எப்படிப் போனாலும் 11-ஆம் இடத்து சனியும், 9-ஆம் இடத்து குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களை எந்தக் கெடுதலும் அணுகாது. தொழில், வேலை, உத்தியோகம், வாழ்க்கை எல்லாவற்றிலும் நற்பலன்களே நடக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை சாதிக்கலாம். செலவுகள் காணப்பட்டாலும் மிச்சப்படுத்தலாம்; சேமிக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு- 8-ல் இருப்பது மீன ராசிக்காரர்களையெல்லாம் பாடாய்ப்படுத்துகிறது; ஆட்டுவிக்கிறது. ஒரு திரைப்படத்தில் "ஆட்டுவித்தால் ஆடாதார் யாரோ கண்ணா' என்று பாடுவார்கள். அதுமாதிரி நீங்கள் சாட்டையில்லாத பம்பரமாக ஆடுகிறீர்கள். சிலருக்குக் கௌரவப் பிரச்சினை, சிலருக்கு பணப்பிரச்சினை, சிலருக்கு கடன் பிரச்சினை, சிலருக்கு ஆரோக்கியப் பிரச்சினை, சிலருக்கு நோய்- வைத்தியச்செலவு பிரச்சினை, சிலருக்கு குடும்பப் பிரச்சினை, சிலருக்கு வாழ்க்கைப் பிரச்சினை, சிலருக்கு எதிரிகளால் பிரச்சினை, சிலருக்கு வழக்கு விவகாரப் பிரச்சினை, சிலருக்கு ஆழம்தெரியாமல் காலை விட்டுவிட்டு எடுக்க முடியாதபடி சொத்து, வீடு, வாகனம் என்று முதலீடு செய்துவிட்டு அதைப் பராமரிக்க முடியாமலும் அதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் பாதிக்கிணறு தாண்டிய நிலை! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை- வாழ்க்கையே வெறுத்துப்போகிறது. அதற்காக உயிரைப் போக்கிக்கொள்ளவும் துணிவில்லை. இறைவன் கொடுத்த உயிரை இறைவன்தானே எடுக்கவேண்டும். நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. குரு எட்டில் வக்ரமாக இருந்த வரை முழுபாதிப்பு. வக்ரநிவர்த்திக்குப்பிறகு வேறு நிலை. அக்டோபரில் 4-ல் குருப்பெயர்ச்சி. அதன்பிறகு உங்கள் காட்டில்தான் மழையோ மழை! செழிப்பு! ராஜயோகம் உங்களைத் தங்கப்பல்லக்கில் சுமந்துசெல்லும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe