Advertisment

இந்தவார ராசிபலன் 8-7-2018 முதல் 14-7-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasipalan-5

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

9-7-2018- ரிஷபம்.

11-7-2018- மிதுனம்.

13-7-2018- கடகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 4.

புதன்: பூசம்- 4.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: மகம்- 1, 2, 3, 4.

சனி: மூலம்- 2, 1.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

சனி வக்ரம்.

8-7-2018- செவ்வாய் வக்ரம் ஆரம்பம்.

13-7-2018- புதன் வக்ரம் ஆரம்பம்.

14-7-2018- புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். 10-க்குடைய சனி 9-ல் தர்மகர்மாதிபதி யோகம். ராசியை செவ்வாயும் பார்க்கிறார்; குருவும் பார்க்கிறார். செவ்வாய் ராசிநாதன்- குரு பாக்யாதிபதி. எனவே வாரம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாகவும் சாதகமாகவும் இருக்கும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். 5-க்குடைய சூரியன் 3-ல் பாக்யாதிபதியான குரு சாரம் பெற்று, குருவும் சனியும் பார்க்கிறார்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும். கருதிய திட்டங்கள் யாவும் கைகூடும். நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும். தகுதிக்கு மீறிய எண்ணங்களையும் விருப்பங்களையும் விரட்டிவிடவேண்டும். அரசியலிலில் ஆதாயம்பெற, தகுதிக்குமீறிய ஆசைகளையும் விபரீத எண்ணங்களையும் வளர்த்துக்கொண்டு, பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று சில புதுப்பணக்காரர்கள் நினைத்தால் அவை நிறைவேறும் என்று நினைக்கக்கூடாது. படிப்பு, வேலை, உத்தியோகம், திருமணம், வாரிசு, சம்பாத்தியம் என்பவை நியாயமான கோரிக்கைகள். அவை நிறைவேறும். இராவணனுக்கு நல்ல மனைவி, நல்ல மகன் இருந்தும் அடுத்தவன் மனைவிமேல் ஆசைகொண்டு சீதையைச் சிறையெடுத்தான். அது தர்மவிரோதம்தானே! அதனால் அவன் அழிந்தான். துரியோதனன் பங்காளித் துவேசம் செய்து பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அனுபவிக்க ஆசைகொண்டான். அதனால் அவனும் அழிந்தான். மண்ணாசைக்கு துரியோதனனும், பெண்ணாசைக்கு இராவணனும் உதாரணம்! குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களைத் தவறு செய்யவிடாமல் தடுத்தாட்கொள்வார்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் கேந்திரம் பெற்று, 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அத்துடன் 8, 11-க்குடைய குருவும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-க்குடைய சனியும் பார்க்கிறார். "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதுபோல உங்கள் செல்வாக்கு என்றும் குறையாது. தேவைகளும் பூர்த்தியடையும். கையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேலை, தொழில், சம்பாத்தியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை வசதிகளும், சௌகர்யங்களும் குறைவில்லாமல் நிறைவேறும். 4-ல் 6-க்குடைய சுக்கிரன் நிற்க, 4-ஆம் அதிபதி சூரியனை சனியும் குருவும் பார்ப்பதால், ஒருசிலருக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். அல்லது தொழிலை நேரடி நிர்வாகம் செய்ய முடியாமல் இடையூறு ஏற்படலாம். "உடையவர் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை' என்றும், "தான் பார்க்கும் வேலைக்கு தம்பியை அனுப்பினால் ஆகுமா' என்றும் பழமொழி சொல்லுவார்கள். ஒரு பெரிய தொழில் ஸ்தாபனத்தின் உரிமையாளர், தொழிலாளி- முதலாளி என்று பேதம் பாராட்டாமல் வேலையாட்களை அரவணைத்து வேலை வாங்குவார். அதனால் தொழிலாளர்களும் எட்டுமணி நேரம் என்று கணக்குப் பார்க்காமல், ஓவர்டைம் சம்பளமும் எதிர்பார்க்காமல் விசுவாசமாக உழைத்தார்கள். எதிர்பாராதவிதமாக உரிமையாளர் உடல்நலமின்றி மாதக்கணக்கில் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அவர் மகன் நிர்வாகத்துக்கு வந்தார். அவர் வேலையாட்களைக் கடுமையாக நடத்த வேண்டும் என்று கண்டிஷன் போட்டு சலுகைகளை எல்லாம் ரத்து செய்து நிர்வகிக்க- நல்ல வேலையாட்கள் எல்லாம் விலகிப் போய்விட்டார்கள். தொழிலும

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

9-7-2018- ரிஷபம்.

11-7-2018- மிதுனம்.

13-7-2018- கடகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 4.

புதன்: பூசம்- 4.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: மகம்- 1, 2, 3, 4.

சனி: மூலம்- 2, 1.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

சனி வக்ரம்.

8-7-2018- செவ்வாய் வக்ரம் ஆரம்பம்.

13-7-2018- புதன் வக்ரம் ஆரம்பம்.

14-7-2018- புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். 10-க்குடைய சனி 9-ல் தர்மகர்மாதிபதி யோகம். ராசியை செவ்வாயும் பார்க்கிறார்; குருவும் பார்க்கிறார். செவ்வாய் ராசிநாதன்- குரு பாக்யாதிபதி. எனவே வாரம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாகவும் சாதகமாகவும் இருக்கும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். 5-க்குடைய சூரியன் 3-ல் பாக்யாதிபதியான குரு சாரம் பெற்று, குருவும் சனியும் பார்க்கிறார்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும். கருதிய திட்டங்கள் யாவும் கைகூடும். நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும். தகுதிக்கு மீறிய எண்ணங்களையும் விருப்பங்களையும் விரட்டிவிடவேண்டும். அரசியலிலில் ஆதாயம்பெற, தகுதிக்குமீறிய ஆசைகளையும் விபரீத எண்ணங்களையும் வளர்த்துக்கொண்டு, பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று சில புதுப்பணக்காரர்கள் நினைத்தால் அவை நிறைவேறும் என்று நினைக்கக்கூடாது. படிப்பு, வேலை, உத்தியோகம், திருமணம், வாரிசு, சம்பாத்தியம் என்பவை நியாயமான கோரிக்கைகள். அவை நிறைவேறும். இராவணனுக்கு நல்ல மனைவி, நல்ல மகன் இருந்தும் அடுத்தவன் மனைவிமேல் ஆசைகொண்டு சீதையைச் சிறையெடுத்தான். அது தர்மவிரோதம்தானே! அதனால் அவன் அழிந்தான். துரியோதனன் பங்காளித் துவேசம் செய்து பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அனுபவிக்க ஆசைகொண்டான். அதனால் அவனும் அழிந்தான். மண்ணாசைக்கு துரியோதனனும், பெண்ணாசைக்கு இராவணனும் உதாரணம்! குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களைத் தவறு செய்யவிடாமல் தடுத்தாட்கொள்வார்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் கேந்திரம் பெற்று, 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அத்துடன் 8, 11-க்குடைய குருவும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-க்குடைய சனியும் பார்க்கிறார். "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதுபோல உங்கள் செல்வாக்கு என்றும் குறையாது. தேவைகளும் பூர்த்தியடையும். கையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேலை, தொழில், சம்பாத்தியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை வசதிகளும், சௌகர்யங்களும் குறைவில்லாமல் நிறைவேறும். 4-ல் 6-க்குடைய சுக்கிரன் நிற்க, 4-ஆம் அதிபதி சூரியனை சனியும் குருவும் பார்ப்பதால், ஒருசிலருக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். அல்லது தொழிலை நேரடி நிர்வாகம் செய்ய முடியாமல் இடையூறு ஏற்படலாம். "உடையவர் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை' என்றும், "தான் பார்க்கும் வேலைக்கு தம்பியை அனுப்பினால் ஆகுமா' என்றும் பழமொழி சொல்லுவார்கள். ஒரு பெரிய தொழில் ஸ்தாபனத்தின் உரிமையாளர், தொழிலாளி- முதலாளி என்று பேதம் பாராட்டாமல் வேலையாட்களை அரவணைத்து வேலை வாங்குவார். அதனால் தொழிலாளர்களும் எட்டுமணி நேரம் என்று கணக்குப் பார்க்காமல், ஓவர்டைம் சம்பளமும் எதிர்பார்க்காமல் விசுவாசமாக உழைத்தார்கள். எதிர்பாராதவிதமாக உரிமையாளர் உடல்நலமின்றி மாதக்கணக்கில் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அவர் மகன் நிர்வாகத்துக்கு வந்தார். அவர் வேலையாட்களைக் கடுமையாக நடத்த வேண்டும் என்று கண்டிஷன் போட்டு சலுகைகளை எல்லாம் ரத்து செய்து நிர்வகிக்க- நல்ல வேலையாட்கள் எல்லாம் விலகிப் போய்விட்டார்கள். தொழிலும் நஷ்டத்துக்குள்ளானது. இதுதான் அட்டமச்சனியின் வேலை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் தைரிய ஸ்தானாதிபதி சூரியன் நிற்க, அவரை 7, 10-க்குடைய குரு 5-ல் இருந்து பார்க்கிறார். சனியும் 7-ல் நின்று ராசியையும் பார்க்கிறார்- சூரியனையும் பார்க்கிறார். சனி 8-க்குடையவர் என்றாலும், 9-க்குடைய திரிகோணாதிபதியாவார். எனவே உங்களுடைய தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை உங்கள் புத்திசாலிலித்தனத்தால் சமாளித்து வெற்றியடைவீர்கள். உங்கள் முயற்சி கால் பங்கு; இறைவன் அருள் முக்கால் பங்கு என்ற அளவில் உங்கள் எண்ணங்களும் காரியங்களும் கைகூடும். அதற்குக் காரணம் 9-க்குடைய சனியும், 10-க்குடைய குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதுதான். 11-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும், உச்சம் பெற்று 11-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் அதிர்ஷ்டவசமாக- அது இஷ்டவசமாக- எல்லாம் நன்மையாக நிறைவேறும். கேந்திர ஸ்தானம் என்பது முயற்சி ஸ்தானம். (விஷ்ணு ஸ்தானம்). திரிகோண ஸ்தானம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம். (லட்சுமி ஸ்தானம்). கேந்திரம் தரும் பலன் உழைப்புக்கேற்ற ஊதியம்! திரிகோணம் தரும்பலன் ஊதியத்தைக் கடந்து கிடைக்கும் சன்மானம்! போனஸ்! வெகுமதி! திருமணமாகாதவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமான மனைவி அமைவார். திருமணமானவர்களுக்கு மனைவியே- நல்ல துணையாக, மந்திரியாக நின்று வழிநடத்தலாம். மனைவி சொல்லே மந்திரம் என்று நம்பி செயல்படுகிறவர்கள் சீரும் சிறப்புமாக உயர்வு பெறலாம்! அவரவர் ஜாதக ரீதியாக 7-ஆம் பாவம், 8-ஆம் பாவம் தெளிவாக இருக்க வேண்டும். யோகமாக அமையவேண்டும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

Advertisment

கடக ராசியில் ராகு நின்றாலும் புதனும் நிற்க, 5, 10-க்குடைய செவ்வாய் 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பது ஒரு தனிபலம்! பிரம்மா முதலில் ஆணைப் படைத்ததாகவும், அடுத்து அவனுடைய உடலிலிலிலிருந்து ஒரு எலும்பை எடுத்துப் பெண்ணைப் படைத்ததாகவும் சொல்லுவார்கள். விஞ்ஞான ரீதியாக ஆணின் எலும்புகளின் எண்ணிக்கை பெண்ணின் உடலிலிலுள்ள எலும்புகளைவிட ஒன்று குறைவாகவே இருக்கும். பெண்ணுக்கு ஒரு எலும்பு கூடுதலாக இருக்கும். அதேபோல சிவன் பார்வதிக்குத் தன் உடலிலில் சரிசமமாக இடம் கொடுத்தார். அதுதான் அர்த்தநாரீஸ்வர தத்துவம். ஜாதகக் கட்டத்திலும் லக்னம் என்பது ஜாதகரைக் குறிக்கும். அதற்கு சமபங்கான ஏழாமிடம்- களஸ்திர ஸ்தானம்- மனைவி தானம் அல்லது கணவன் ஸ்தானம். ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் இருந்தாலும் செவ்வாய் ஏழில் உச்சம்! எனவே கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பிரிவு வாய்க்காலிலில் ஓடும் நீர் முடிவில் மெயின் வாய்க்காலிலில் சேர்வதுபோல, இருவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு சாதிக்கலாம்! பெருமை பெறலாம்! திறமைகளை வெளிப்படுத்தலாம்! எந்த ஒரு காரியத்தையும் கணவனும் மனைவியும் கலந்துபேசி செயல்பட்டால் உயர்வு நிச்சயம்! திருமணமாகாதவர்கள் யாரிடம் கலந்துபேசி முடிவெடுக்க முடியும்? அவர்கள் தாயாரைக் கலந்துபேசி முடிவெடுத்து செயல்படவேண்டும்! அதனால்தான் தாய்க்குப்பின் தாரம் என்றார்கள்.

thisweekrasi

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசியில் 3, 10-க்குடைய சுக்கிரன் நிற்க, வீடு கொடுத்த சூரியன் 11-ல் பலம் பெறுகிறார். சுக்கிரன் கேதுசாரம். (மகம்). கேது 6-ல். எனவே சிலருடைய ஜாதக அமைப்புப்படி மனைவிக்கு ஆரோக்கியக்குறைவு- வைத்தியச் செலவு ஏற்படலாம். பெண்கள் ஜாதகமாக இருந்தால் கணவருக்கு மேற்படி சுகக்குறைவும் வைத்தியச் செலவும் வரலாம். உயிர் பயமில்லை என்றாலும் அவஸ்தை! மனதுக்கு வேதனை. உதவி ஒத்தாசைக்குக்கூட ஆளில்லாமல் தானே மனைவியைப் பார்க்கவேண்டும். பிள்ளைகளைப் பார்க்கவேண்டும், சமையல் வேலையைப் பார்க்க வேண்டும், சம்பாத்தியத்தையும் தேடவேண்டும், தொழிலையும் கவனிக்க வேண்டும்... இப்படிப்பட்ட பிரச்சினைகளினால் உங்களுக்கு வெளியில் சொல்லமுடியாத வேதனைகளும் சோதனைகளும் ஏற்படலாம். என்றாலும் 9-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும், உச்சம் பெற்று 9-ஆம் இடத்தையும் பார்ப்பதோடு, 10-க்குடைய சுக்கிரனையும் பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. உங்களை குருவருளும் திருவருளும் வழிநடத்தும். மேலும் 11-ல் உள்ள சூரியன் எல்லா தோஷங்களையும் போக்குவார் என்பது ஒரு விசேஷவிதி. 11-ல் சூரியன் இருக்கும்படி ஒரு தொழில் ஆரம்பத்துக்கோ, ஒரு காரியத் தொடக்கத்துக்கோ லக்னம் அமைத்துக்கொடுத்தால் அது சீரும்சிறப்புமாக நீண்டகாலமாக இயங்கும் எனபது ஜோதிட விதி! ராசிநாதனை குருவும் சனியும் பார்ப்பது ராஜயோகம். அதாவது குரு திரிகோணாதிபதி. சனி கேந்திராதிபதி. திரிகோணமும் கேந்திரமும் சேர்வது ராஜயோகம் ஆகும்!

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன், தன் ராசிக்கு 11-ல் ராகுவோடு சம்பந்தம். புதனுக்கும் ராகுவுக்கும் 11-ஆம் இடம் யோகமான இடங்கள். அவர்களை உச்சம் பெற்ற செவ்வாயும் கேதுவும் பார்க்கிறார்கள். செவ்வாய் 3, 8-க்குடையவர். சகோதரர்கள், உடன்பிறப்புகள் வகையில் ஒருசிலருக்குத் தொல்லைகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு அது அன்புத் தொல்லையாகவும், வேறுசிலருக்கு வம்புத் தொல்லையாகவும் அமையலாம். சிலருடைய அனுபவத்தில் நெருங்கிப் பழகிய நண்பர்கள் அற்ப விஷயத்துக்காக வருத்தப்பட்டுப் பிரிந்து போய்விடுவார்கள். அரசியலிலில் பதவி, பண விஷயத்துக்காக சண்டை போட்டுக்கொள்வது சகஜம். ஆனால் குடும்பப் பழக்கமாகப் பழகியவர்கள் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டு விலகுவது கிரகத்தின் கோளாறுதான். இப்படித்தான் ஒரு அம்மாள் அண்ணன்- தங்கை என்று உரிமை கொண்டாடி பாசத்தோடு பழகியவர். பண உதவியெல்லாம் செய்தவர். வெளியூருக்குப் போகும்போது காரில் தானும் வருகிறேன் என்று சொல்ல- காரில் இடமில்லையென்று அவரை அழைத்துப்போகவில்லை. அதனால் உறவை முறித்துக்கொண்டு பிரிந்து போய்விட்டார். அவர் முன்னர் கொடுத்த அன்பளிப்புகளை எல்லாம் திரும்ப வாங்கிக்கொண்டார். அதன்பிறகு பல இழப்புகளை அந்த அம்மாள் சந்தித்துவிட்டார். அதேமாதிரி கூட்டுத் தொழில் செய்த இரு நண்பர்கள் வீட்டில் மணப்பருவத்தில் இரண்டு பெண்கள் இருந்தனர். ஒருவர் வீட்டுப் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் பிடிக்கவில்லை என்று காப்பிகூட சாப்பிடாமல் புறப்பட, அடுத்த நண்பர் மரியாதைக்காக தன் வீட்டுக்கு அழைத்துப்போய் உபசரிக்க- அந்த வீட்டுப்பெண் பிடித்து பூவைத்துவிட்டார்கள். இதனால் அவர்கள் கூட்டுப் பிரிந்துவிட்டது. யார் யாருக்கு எங்கே பிராப்தம் என்பதை உணராமல் போய்விட்டார்கள்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசியில் குரு இருக்க, அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அவருக்கு 11-ல் இருப்பதும், அவரை உச்ச செவ்வாய் பார்ப்பதும் ஒரு யோகம்! சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சூரியன் ராசிக்கு 9-ல் நின்று குருவின் பார்வையைப் பெறுவதும் ஒரு யோகம்! எனவே தகப்பனார் அல்லது பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் எந்த ஒரு அனுகூலமும் சாதகமும் இல்லாமல் பாதிக்கப்பட்டோருக்கு இப்போது நல்ல காலம் உதயமாகும். வம்பு தும்பு, வழக்கு, கோர்ட்டு என்று பஞ்சாயத்துக்குப் போகாமல், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கு பாகங்கள் வந்துசேரும். அதேபோல கௌரவப் பிரச்சினையால் நின்றுபோன குலதெய்வ வழிபாடுகளும் பூஜைகளும், சமரச உடன்பாடு ஏற்பட்டுப் பூஜைமுறைகள் முறையாகச் செயல்படும். பங்காளிகள் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவார்கள். கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்த விருந்தினரையோ சம்பந்தி வகையறாவையோ வரவேற்காமல் விட்டால் எப்படியோ- அப்படித்தான் பங்காளிச் சண்டையால் தெய்வத்தைக் கவனிக்காமல் விடுவதும்! அது இரு வகையறாவுக்கும் நல்லதல்ல! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதுபோல ஒன்றுபட்டு தெய்வ வழிபாடு செய்வது வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது! குளத்தோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால் குளத்துக்கு என்ன நஷ்டம்? உடையவர்களுக்குத்தான் நஷ்டம்! 2, 7-க்குடைய செவ்வாய் உச்சம். 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். ஆண்- பெண் இருபாலாருக்கும் திருமணம் கூடும். குருவும் பார்க்கிறார் அல்லவா!

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். கேது- ராகு சம்பந்தம். வீடு கொடுத்த சனி 12-ல் (தன் ஸ்தானத்துக்கு) மறைவு. எனவே உடன்பிறந்த வகையில் அல்லது நண்பர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகள் உருவானாலும் அவை சரியாகிவிடும்; சமரசமாகிவிடும். சஞ்சலங்கள் நீங்கிவிடும். 2-க்குடைய குரு 12-ல் மறைவு என்பதாலும், ஏழரைச்சனி என்பதாலும் தவிர்க்கமுடியாத செலவினங்கள் உண்டாகும். பெரும்பாலும் அவை சுபச்செலவுகளாகத்தான் இருக்கும். ஒருசிலருக்கு கொடுத்த பணம் குறிப்பிட்டபடி திரும்பக் கிடைக்காது. வாராக்கடன் எனலாம். அப்படியிருந்தால் கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுனரையும் வழிபட்டால் வரவேண்டிய பணம் வசூலாகிவிடும். 10-ல் சுக்கிரன் புதிய தொழில் முயற்சிகளுக்கு வித்திடுவார். கூட்டுத்தொழில் அமைப்பில் சிலருக்கு நாட்டமுண்டாகும். துணிந்து செயல்படலாம். வேலை தேடுவோர் வெளிநாடு அல்லது வெளிமாநிலம், வெளியூர் போகலாம். வாய்ப்புகள் சாதகமாக அமையும். 2-ல் உள்ள சனியை சூரியன் பார்ப்பதால் குடும்பச் சூழ்நிலையில் வாக்குவாதங்களையும் விதண்டாவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், பழகியவர்கள், உறவினர்கள் வகையில் நிதானித்துப் பேசவேண்டும். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். வாக்குச்சனி கோப்பைக் குலைத்துவிடும்! அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை, "தீயினால் சுட்டபுண் ஆறும்; நாவினால் சுட்டபுண் ஆறாது' என்றார்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி. (ஏழரைச்சனி நடக்கிறது). அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 11-ல் பலம். குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அவருக்கு 11-ல். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சூரியன் அவருக்கு 11-ல். அவருக்கு ராசிநாதன் குரு பார்வை. எனவே சனி உங்களைக் கெடுக்கமாட்டார். சிவ பாராயணப் பாடல்களில் ஒரு வரி உண்டு. "ஈசன் துணையிருக்க எருமை மாட்டான் வரமாட்டான்' என்று! அதுபோல சனி உங்களுக்கு இனியவராவார். முயற்சிகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். வேலையில் இருப்போருக்கு மேலிடத்தாரின் ஆதரவும் சலுகைகளும் உண்டாகும். தனித்தொழில் செய்வோருக்கு வருமானப் பெருக்கமும் பாராட்டும் ஒத்துழைப்பும் உண்டாகும். அரசுப்பணியாளர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும். ராகு- கேது தசை நடப்பவர்களுக்கு ஆரோக்கியக்குறைவும், நரம்பு சம்பந்தமான பிணிகளும், இடுப்பு கடுப்பு- பிடிப்பு போன்ற உபாதைகளும் ஏற்படலாம். (வயதானவர்களுக்குத்தான் இந்த பாதிப்பு). முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு தினசரி தன்வந்திரி பகவான் மூலமந்திரத்தை ஜெபப் பாராயணம் செய்தால் குணம் ஏற்படும். சிலருக்கு கட்டட சம்பந்தமான சுபச்செலவும், சிலருக்கு வாகனம் சம்பந்தமான அத்தியாவசியச் செலவும் வரலாம். சிலர் புதிய வீடு, மனை வாங்கலாம். முதலீடு செய்யலாம். வீடு, மனை சம்பந்தமான சுபப்பலன்களுக்கு செவலூர் பூமிநாத சுவாமி கோவில் சென்று வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு, வக்ரம். கேதுவின் சாரம். கேது ஜென்ம ராசியில் செவ்வாயோடு சம்பந்தம். 6, 9-க்குடைய புதன் ராகுவோடு சம்பந்தப்பட்டுப் பார்க்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவும், வைத்தியச்செலவும் வரும். சிலருக்குத் தவிர்க்க முடியாத பயணங்களும் அலைச்சல்களும் உண்டாகும். சிலருக்கு திருமணத்தடை அல்லது வாரிசுத்தடை ஏற்படும். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் உண்டாகும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கும் தனியார் பணியில் உள்ளவர்களுக்கும் பணிச்சுமையும் வேலைப்பளுவும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். 2-க்குடைய சனியும், சனிக்கு வீடு கொடுத்த குருவும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பெரும்பாலும் பணத்தட்டுப்பாட்டுக்கு இடமில்லை. தாராளமான வரவு- செலவும் பணப்புழக்கமும் காணப்படும். கொடுக்கல்- வாங்கல் ஓடியடையும். 8-க்குடையவர் 6-ல் மறைவது நல்லது. எதிரியாக இருந்தவர்களும் இப்போது உதவி கேட்டு வருவதால் பகை உணர்வு மாறும். தகை உணர்வு பெருகும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போலவும், நீரடித்து நீர் விலகாது என்பதுபோலவும், அன்னப்பட்சி நீரைவிடுத்து தனிப்பாலைப் பருகுவதுபோலவும் குற்றம் நீங்கி (கெட்டதை நீக்கி) நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் பெருந்தன்மை.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். 3, 6, 11 சனி பகவானுக்கு யோகமான இடங்கள். அத்துடன் தன் ராசியைத் தானே பார்க்கிறார். 2, 11-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்திலும் நற்பலன்கள் உண்டாகும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும். 7-ல் சுக்கிரன் இருப்பது களஸ்திர தோஷம் என்றாலும் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் தோஷம் விலகும். சகோதரவகையில் சிலருக்குப் பிரச்சினைகள் உருவாகி மறையும். 10-க்குடையவர் உச்சம் என்பதால் தொழில் சிறக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். அரசு, தனியார்துறைகளில் பணிபுரிவோருக்கு முன்னேற்றம் உண்டாகும். இடப்பெயர்ச்சி ஏற்பட்டால் வரவேற்று ஏற்றுக்கொள்ளலாம். அது முன்னேற்றத்திற்கு மூலகாரணமாக அமையும். 5-க்குடையவர் 6-ல் மறைவதாலும், 5-ல் அட்டமாதிபதி சூரியன் இருப்பதாலும் பிள்ளைகள் வகையில் சிலருக்குத் தொல்லைகளும் வைத்தியச்செலவுகளும் மனசங்கடங்களும் உண்டாகும். 5-ல் சூரியன் நிற்பது தோஷம் என்றாலும், குரு பார்வையால் நிவர்த்தி உண்டாகும். புத்திரதோஷம் உடையவர்கள் சந்தான பரமேஸ்வர ஹோமம் செய்யலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 8-ல் மறைகிறார். பொதுவாக ராசிநாதனோ லக்னநாதனோ மறைந்தாலும் அஸ்தமனமானாலும் பிரச்சினைகள்தான். "எங்க வீட்டுப் பிள்ளை' என்ற படத்தில் இரண்டு வேடத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பார். ஒரு எம்.ஜி.ஆர். வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் போய்விடுவார். இன்னொரு அப்பாவி எம்.ஜி.ஆர். வெறும் காபி மட்டும் சாப்பிடுவார். முரட்டு எம்.ஜி.ஆர். சாப்பிட்டதற்கும் சேர்த்து இவரிடம் பில் கொடுத்து வம்படியாக வசூல் செய்வார்கள். அதுமாதிரி யாரோ செய்த தவறுகளும் பிழைகளும் உங்கள் தலையில் விழும். அதற்கு நீங்கள் பொறுப்பேற்று தண்டம், தீர்வை கட்ட வேண்டும். போன வாரம்வரை குரு வக்ரமாக இருந்ததால் நீங்களும் வாய்மூடி எல்லாத் தவறுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். இப்போது குரு வக்ர நிவர்த்தி அடைந்துவிட்டார். சுயசாரமும் பெற்றுவிட்டார். (விசாகம்). இதுவரை பதுங்கிய புலியாக இருந்த நீங்கள் இனி பாயும் புலியாக மாறுவீர்கள். குட்டக்குட்ட குனிகிறவனும் முட்டாள். குட்டுகிறவனும் முட்டாள். அக்டோபர் 4-ல் குரு மாறுகிறார். அதன்பிறகு முழு வெற்றி உங்களுக்குத்தான். அதுவரை ஏறுகொண்ட சிங்கமே! வீறுகொண்டு எழு என்ற அடிப்படையில் எழுங்கள். போராடுங்கள். வாய்மையே வெல்லும்! எதிரிகளை உதிரிகளாக்கிவிடலாம். கொட்டினல்தான் தேள்! கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி!

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe