Advertisment

இந்த வார ராசிபலன் 24-6-2018 முதல் 30-6-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasipalan-4

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

24-6-2018- விருச்சிகம்.

27-6-2018- தனுசு.

29-6-2018- மகரம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 4.

புதன்: புனர்பூசம்- 4, பூசம்- 1, 2, 3.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: பூசம்- 4, ஆயில்யம் 1,2,3

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. பாக்கியாதிபதி, பாக்கிய ஸ்தானத்தில் 10-க்குடைய சனியுடன் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே வாரம் முழுவதும் அனுகூலமான பலன்களே நடக்கும் என்று நம்பலாம். 5-க்குடைய சூரியன் அதற்கு 11-ல் நின்று குரு பார்வையைப் பெறுவதால் மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாரிசு வேண்டுவோருக்கு வாரிசு உதயமாகும். பெற்றோர் சொல் கேட்டு பிள்ளைகள் செயல்படுவதால் பேரானந்தம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். 7-ல் குரு, 4-ல் சுக்கிரன். கணவன்- மனைவி உறவில் நெருக்கமும் இணக்கமும் எதிர்பார்க்கலாம். ஒருவரையொருவர் புரிந்துசெயல்பட்டாலே நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது தெளிவாகும். 10-ல் கேது- ராகு சம்பந்தம் இருப்பதால் சிலசமயம் நண்பர்களாலும், குறுகிய மனம் படைத்த உறவினர்களாலும், பொறாமையாளர்களாலும் குடும்ப அமைதிக்கு குந்தகம் ஏற்பட இடமுண்டு. அதற்கு இடம் தராமல் அனுசரித்து நடக்கும் மனப்பக்குவம் பெற்றுவிட்டால் சங்கடங்களையும் சஞ்சலங்களையும் விரட்டியடித்துவிடலாம். சந்தேகங்களையும் அணுகவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். தேக சுகத்தில் அவ்வப்போது சிறுசிறு குறைகள் தெரிந்தாலும், உச்சம்பெற்ற ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் குறைகள் நிவர்த்தியாகும். ஒருசிலருக்கு வாகன மாற்றம் அல்லது வீடு மாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். எந்த மாற்றமானாலும் அது நல்ல மாற்றமாக அமையும்.

Advertisment

thisweekrasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. அவருக்கு வீடு கொடுத்த குருவும் 6-ல் மறைகிறார். எனவே, எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் கஷ்டமாகத்தான் முடிக்க வேண்டும். சிலசமயம் தொட்டதும் துலங்காது. காரணமும் விளங்காது. வசதி வாய்ப்புகள், அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு கேடு கெடுதிக்கு இடமில்லை என்றாலும் இருப்பதை விருத்தி செய்ய முடியாது. ஒரு வேலையை ஆரம்பித்து முடிப்பதற்குள் அடுத்த வேலை குறுக்கிடும். அதில் உங்கள் கவனமும் முயற்சியும் திரும்பிவிடும். அதனால் எல்லாம் அரைகுறையாக இருக்கும். பாதிக்கிணறு தாண்டிய நிலையில் எல்லாம் இருக்கும். ஒருசிலர் அனுபவத்தில் திருமணப் பொருத்தம் பேசிமுடித்து மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கப்போகும்போது காரணமில்லாமல் நின்றுவிடும். அதேமாதிரி மாதக்கணக்கில் வேலை தேடி அலைவோருக்கும் விண்ணப்பங்கள் போடுகிறவர்களுக்கும் ஒரே தேதியில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடத்திலிருந்து இன்டர்வியூவுக்கு அழைப்புகள் வரும். எங்கு போவது என்ற குழப்பம் ஏற்படும். 8-ல் உள்ள சனி 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் அல்லது வெளிவட்டாரத்தில் நிதானித்துப் பேச வேண்டும். ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். குடும்பத்திலும் அர்த்தமற்ற குழப்பங்கள் ஏற்பட இடமுண்டு. அனுசரித்து நடப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு இருக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநா

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

24-6-2018- விருச்சிகம்.

27-6-2018- தனுசு.

29-6-2018- மகரம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 4.

புதன்: புனர்பூசம்- 4, பூசம்- 1, 2, 3.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: பூசம்- 4, ஆயில்யம் 1,2,3

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. பாக்கியாதிபதி, பாக்கிய ஸ்தானத்தில் 10-க்குடைய சனியுடன் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே வாரம் முழுவதும் அனுகூலமான பலன்களே நடக்கும் என்று நம்பலாம். 5-க்குடைய சூரியன் அதற்கு 11-ல் நின்று குரு பார்வையைப் பெறுவதால் மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாரிசு வேண்டுவோருக்கு வாரிசு உதயமாகும். பெற்றோர் சொல் கேட்டு பிள்ளைகள் செயல்படுவதால் பேரானந்தம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். 7-ல் குரு, 4-ல் சுக்கிரன். கணவன்- மனைவி உறவில் நெருக்கமும் இணக்கமும் எதிர்பார்க்கலாம். ஒருவரையொருவர் புரிந்துசெயல்பட்டாலே நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது தெளிவாகும். 10-ல் கேது- ராகு சம்பந்தம் இருப்பதால் சிலசமயம் நண்பர்களாலும், குறுகிய மனம் படைத்த உறவினர்களாலும், பொறாமையாளர்களாலும் குடும்ப அமைதிக்கு குந்தகம் ஏற்பட இடமுண்டு. அதற்கு இடம் தராமல் அனுசரித்து நடக்கும் மனப்பக்குவம் பெற்றுவிட்டால் சங்கடங்களையும் சஞ்சலங்களையும் விரட்டியடித்துவிடலாம். சந்தேகங்களையும் அணுகவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். தேக சுகத்தில் அவ்வப்போது சிறுசிறு குறைகள் தெரிந்தாலும், உச்சம்பெற்ற ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் குறைகள் நிவர்த்தியாகும். ஒருசிலருக்கு வாகன மாற்றம் அல்லது வீடு மாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். எந்த மாற்றமானாலும் அது நல்ல மாற்றமாக அமையும்.

Advertisment

thisweekrasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. அவருக்கு வீடு கொடுத்த குருவும் 6-ல் மறைகிறார். எனவே, எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் கஷ்டமாகத்தான் முடிக்க வேண்டும். சிலசமயம் தொட்டதும் துலங்காது. காரணமும் விளங்காது. வசதி வாய்ப்புகள், அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு கேடு கெடுதிக்கு இடமில்லை என்றாலும் இருப்பதை விருத்தி செய்ய முடியாது. ஒரு வேலையை ஆரம்பித்து முடிப்பதற்குள் அடுத்த வேலை குறுக்கிடும். அதில் உங்கள் கவனமும் முயற்சியும் திரும்பிவிடும். அதனால் எல்லாம் அரைகுறையாக இருக்கும். பாதிக்கிணறு தாண்டிய நிலையில் எல்லாம் இருக்கும். ஒருசிலர் அனுபவத்தில் திருமணப் பொருத்தம் பேசிமுடித்து மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கப்போகும்போது காரணமில்லாமல் நின்றுவிடும். அதேமாதிரி மாதக்கணக்கில் வேலை தேடி அலைவோருக்கும் விண்ணப்பங்கள் போடுகிறவர்களுக்கும் ஒரே தேதியில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடத்திலிருந்து இன்டர்வியூவுக்கு அழைப்புகள் வரும். எங்கு போவது என்ற குழப்பம் ஏற்படும். 8-ல் உள்ள சனி 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் அல்லது வெளிவட்டாரத்தில் நிதானித்துப் பேச வேண்டும். ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். குடும்பத்திலும் அர்த்தமற்ற குழப்பங்கள் ஏற்பட இடமுண்டு. அனுசரித்து நடப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு இருக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் தளர்ச்சிக்கு இடமில்லை. வளர்ச்சி உண்டாகும். அதனால் மனதில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படும். 3-க்குடைய சூரியன் ஜென்மத்தில் நின்று சனியின் பார்வையைப் பெறுவதால் நண்பர்கள் வகையிலோ அல்லது உடன்பிறந்தோர் வகையிலோ பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். சிலருடைய அனுபவத்தில் உதவிசெய்தும் உபத்திரவத்தைச் சுமக்கும் நிலை உருவாகலாம். சொந்த ஜாமீன் பொறுப்பேற்று பணம் வாங்கி மற்றவர்களுக்கு உதவி புரியலாம். ஆனால் அவர்கள் அந்த நாணயத்தைக் காப்பாற்றத் தவறிவிடுவார்கள். உங்கள் நாணயம் கெட்டுவிடக்கூடாது என்று கைப்பணத்தை கொடுத்து மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளலாம். 7-ல் சனி திருமணத்தடைகளை ஏற்படுத்தலாம். என்றாலும் 7-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதால் தோஷம் நீங்கி திருமண முயற்சிகள் கைகூடும். ஆண்கள் அல்லது பெண்கள் இருபாலாருக்கும் திருமணம் விரைவில் நடக்க ஜாதகரீதியாக தேவையான பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். சம்பளத்துக்கு வேலை செய்வோருக்கு வேலைப்பளுவும் பணிச்சுமையும் அதிகமாக இருக்கலாம். ஆனாலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கப்படும். சொந்தத்தொழில் செய்கிறவர்களுக்கு போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளைச் சமாளிக்க வேண்டிய நிலை உண்டாகும். 6, 11-க்குடைய செவ்வாய் 8-ல் உச்சம். கேது- ராகு சம்பந்தம் என்பதால் கடன்கள் கட்டுக்கடங்கிக் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். தொழில் கடன், கல்விக் கடன் கிடைக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் சுக்கிரன், புதன், ராகு நிற்க அவர்களை செவ்வாய், கேது பார்ப்பதால் வேலையில், உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், அலைச்சல் திரிச்சல் இருந்தாலும் 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். சாதனை படைப்பீர்கள். ஒருசிலருக்கு "ரிஸ்க்' எடுப்பது "ரஸ்க்' சாப்பிடுவது மாதிரி இருக்கும். ஜென்ம ராகு- சப்தம கேது சிலருக்கு "கமிட்மென்ட்ஸ்' ஏற்படுத்தி அதை "கிளியர்' செய்வது வேடிக்கை விளையாட்டைப்போல் அமையும். ஜாதக தசாபுக்திகள் மோசமாக இருந்தாலும் அல்லது பாதகமாக இருந்தாலும் தெய்வ வழிபாடு உங்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும். அது சத்து ஊசி போடுவதுபோலவும், சத்து டானிக் சாப்பிடுவதுபோலவும் பரிகாரமாகும். இதுவரை செய்துவந்த வேலையில் வேலைச்சுமை அதிகமாகவும் கூடுதல் பொறுப்பை ஏற்று நடத்துகின்ற சூழலும் அமையும். அதனால் உள்ளுக்குள் ஒருவித பயஉணர்வும் தென்படும். எடுத்த பொறுப்பை நல்லபடியாக நிறைவேற்றி நல்ல பெயர் எடுக்க முடியுமா? நிறுவனத்தைக் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகங்கள் உள்ளுக்குள் ஓடும். என்றாலும் உடன்பணிபுரிபவர்கள் அதற்குத் தக்க பலமாக இருந்து உங்களின் பணியையும் செவ்வனே முடிக்க உதவுவதுடன் ஆதரவாகவும் அமைவார்கள். மேற்கூறியபடி தெய்வ பலமும் உங்களைக் காப்பாற்றும். உங்கள் காரியங்கள் வெற்றியாக மாறி மாலைசூட்டும். சவாலே சமாளி என்று கோல் அடிக்கலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 12-ல் புதன், சுக்கிரன், ராகு சேர்க்கையும், 11-ல் சூரியனும் இருப்பதால் வரவுக்குமேல் எதிர்பாராத செலவுகளும் விரயங்களும் வரும். அவை தவிர்க்க முடியாதவை. சிலருக்கு சுபச்செலவுகளாகவும், சிலருக்கு வீண்விரயச் செலவுகளாகவும் இருக்கலாம். 5, 8-க்குடைய குரு 4-ல் இருப்பதால் சிலருக்கு தேக சுகக்குறைவும் வைத்தியச்செலவும் ஏற்படலாம். சிலருக்கு ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் சுபச்செலவுகள் வீடு, மனை, வாகனம் சம்பந்தமாக ஏற்படலாம். சிலர் வீடு மாறலாம். 10-ஆம் இடத்துக்கு 6-ல் குரு இருப்பதால் ஒருசிலர் தற்போது பார்த்துவரும் வேலையைவிட வேறு நல்ல உயர்ந்த வேலைக்கும் அதிக சம்பளத்துக்கும் மாறலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் செய்யும் தொழில் அல்லது பார்க்கும் வேலையில் "டென்ஷன்' அதிகமாகக் காணப்படும். 12 மணி நேரம் வேலை பார்த்தும் ஓவர் டைம் சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றமாக அமையலாம். 7-க்குடைய சனி 6-க்குடையவராகி 5-ல் இருப்பது தோஷம். ஒருசிலருக்கு வாரிசு தோஷம்- வாரிசு ஏக்கம் இருக்கலாம். அல்லது மனைவிக்கும் (பிள்ளைகள் இருப்பவருக்கு) பிள்ளைகளுக்கும் வைத்தியச்செலவு வரலாம். சிலர் ஜாதகப்படி தாயாரஅல்லது உடன்பிறப்புக்கள் வகையில் வருத்தம், தவிர்க்க முடியாத செலவுகளைச் சந்திக்கக்கூடும். அல்லது சொத்துப் பிரச்சினைகள் மனதுக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். வண்டி, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ரிப்பேர் செலவு அல்லது வாகன மாற்றம் போன்ற பலன்கள் நடக்கும். 5-ல் சனி இருக்க சூரியன் பார்ப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். அதற்காக கும்பகோணம் அருகில் குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று குரு தத்தாத்ரேயரை வழிபட வேண்டும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 11-ல் நட்பு ஸ்தானம் பெறுகிறார். அது சந்திரன் வீடு. சந்திரனின் மகன் புதன் என்று ஒரு விதியுண்டு. அதனால் குடும்பத்தில் அப்பா, அம்மா, பிள்ளை உறவும், அண்ணன்- தம்பி, உற்றார்- உறவினர் வழி உறவும் சிறப்பாக அமையும். ஜாதக தசாபுக்தி காரணமக சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் கவலைகளும் உருவானாலும்கூட அவை பெரிதாகாமல் விரைவில் மறைந்து உறவுகள் பலமடையும். தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த உறவுகள் நெருக்கமாகி விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையும் வளரும். "நீரடித்து நீர் விலகாது', "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்றெல்லாம் பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். அர்த்தாஷ்டமச்சனி (4-ல் உள்ள சனி) ராசியைப் பார்ப்பதோடு 6-ஆம் இடம், 10-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தொழில் போட்டி உருவெடுத்தாலும், குருவும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் யாவும் சனி பகவானாலேயே தீர்க்கப்படும். "ஆவதும் சனியாலே அழிவதும் சனியாலே' என்பதுபோல சனி நல்லதும் செய்வார்; அல்லதும் செய்வார். சனியில் மங்கு சனி என்றும், பொங்கு சனி என்றும் உண்டு. 10-ஆம் இடத்தை குருவும் சனியும் பார்ப்பதால் எந்தத் தொழில்துறையை மேற்கொண்டாலும் அதன் சிகரத்தைப் பிடிக்கும் அளவு உங்களுக்கு திறமையும் பெருமையும் உண்டாகும். 6-க்குடைய சனி 4-ல் என்பதால் தாயார் அல்லது தன் சுகத்தைப் பற்றிய கவலை சிலருக்கு உண்டாகும். தன்வந்திரி பகவானுக்கு அபிஷேக பூஜை செய்து குணமடையலாம். தொழில் சம்பந்தமான புதுமுயற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லாம் வெற்றியாகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசியில் குரு இருக்கிறார். அவர் ராசிக்கு 3, 6-க்குடையவர். என்றாலும் 3-ஆமிடத்துக்கு 11-ல், 6-க்கு 8-ல் இருப்பதால் உடன்பிறந்தோர், நண்பர்கள் வகையில், கூட்டாளிகள் வகையில் நன்மைகள் உண்டாகும். 6-ஆமிடம் சத்ரு ஸ்தானம், நோய் நொடி, பீடை ஸ்தானம். இவற்றுக்கு 8-ல் குரு மறைவதால் 6-ஆமிடத்துக் கெடுபலன்கள் எல்லாம் ஓடிஒளிந்து போகும். மைனஸ் ஷ் மைனஸ் = ப்ளஸ் என்ற மாதிரி கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பது விதி! ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். அவருடன் ராகு கூடியிருக்கிறார். 12-க்குடைய புதனும் அவர்களுடன் இருக்கிறார். தொழில்துறையில் சில மாற்றங்கள் நிகழும். அவை நல்ல மாற்றங்களாகவும் அமையும். சிலருக்கு கூட்டுத் தொழிலிலில் பிரச்சினைகளும் சிக்கலும் ஏற்படலாம். பொருளாதாரத்தில் சிறுசிறு குறைபாடுகள் காணப்பட்டாலும் தேவைகள் பூர்த்தியாவதில் தடை ஏதும் இருக்காது. குரு பார்வை 5, 7, 9-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதால் புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். வேலை விஷயமாக சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகள் எடுக்கலாம். வெளிநாட்டு முயற்சியும் வெற்றி பெறலாம். தகப்பனார் உடல்நிலையில் வைத்தியச் செலவுகள் உண்டாகும். பாதிப்புக்கு இடமில்லை. பயம் வேண்டாம். உங்கள் திட்டங்கள் தாமதமானாலும் செயல்பாட்டில் தேக்கம் இருக்காது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சமாக இருக்கிறார். 2-ல் சனி. ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடைபெறுகிறது. வரவுக்கு மீறிய செலவுகளும் அலைச்சல்களும் இருக்கத்தான் செய்யும். என்றாலும் முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனியாக செயல்படும். இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனியாக செயல்படும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு கண்டச்சனியாக செயல்படும். ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி நடக்கும் காலங்களில் சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடந்தால் யாருக்காவது உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும். இது எவ்வளவு பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் தடுக்கமுடியாது. அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது சிவாலயத்தில் ருத்ர ஹோமம்செய்து சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். (ஒருமுறை செய்யவும்). 3-ஆமிடம் இளைய சகோதர ஸ்தானம். அங்கு செவ்வாய்- கேது இருப்பதால் சகோதர வகையில் சச்சரவுக்கும் சலிப்புக்கும் இடமுண்டாகும். அதேசமயம் செவ்வாய் ராசிநாதன் என்பதால் பெரியவர்கள், சிறியவர்கள் செய்த பெரும்பிழையை மன்னித்து ஏற்றுக்கொண்டால் உறவு முறியாது. உடன்பிறந்தவர்கள் வகையில் கடன்கள் ஏற்பட இடமுண்டு. ஒருசிலருக்கு "சீர் கொடுத்தால் சகோதரி' என்ற வாக்கியம் பொருந்தும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 11-ல் பலம் பெறுகிறார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் உத்தம ஸ்தானங்களாகும். எனவே, 11-ல் உள்ள குரு 3-ஆம் இடத்தையும், 5-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். 3-ஆமிடம் தைரியம், சகாயம், நட்பு, சகோதரம் போன்ற இடத்தைக் குறிக்கும். இவற்றில் உங்களுக்கு அற்புதமான பலன்கள் நடைபெறும். பிரிந்த நண்பர்களும் உறவினர்களும் விரும்பிவந்து உறவு கொண்டாடுவார்கள். ஒருசில குடும்பங்களில் நேசமும் வேண்டாம்- நெருக்கமும் வேண்டாம் என்று திட்டு முறைப்பாடு செய்தவர்களும், கோவிலிலில் காசு வெட்டிப் போட்டவர்களும் இப்போது ஒன்றுகூட நினைக்கலாம். அப்படி இருப்பவர்கள் குலசாமிக்கும், பதினெட்டாம் படிக் கருப்புக்கும் காணிக்கைகளை வைத்துவிட்டு விபூதி பூசிக்கொண்டு ஒன்றுகூட வேண்டும். அப்படிச் செய்தால் இரண்டு குடும்பத்திலும் பின்விளைவுகள் பாதிக்காது. 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், மகிழ்ச்சி ஸ்தானம். அங்கு ராசிநாதன் பார்ப்பதால் மனதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிள்ளைகளின் எதிர்காலம் பிரபலமாக அமையும். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் மனைவியால் கணவருக்கும், கணவரால் மனைவிக்கும் நலம் உண்டாகும்; வளம் உண்டாகும். நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று பிரிக்க முடியாத அளவு கருத்தொற்றுமையால் கலந்து உறவாடலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. என்றாலும் சனி ராசிநாதன் என்பதால் விரயச்சனி சுபமங்கள விரயச் சனியாக செயல்படும். சனி ராசிநாதன் என்பதால் ஏழரைச்சனி உங்களை பாதிக்காது. பொதுவாக ரிஷப ராசி, துலா ராசி, மகர ராசி, கும்ப ராசி ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனியும், அட்டமத்துச்சனியும் பாதிக்காது. 3, 12-க்குடையவர் குரு; 10-ல் இருக்கிறார். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். ஏற்கெனவே நடந்துவரும் தொழில்துறையில் கிளைகளை ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே நடந்துவரும் தொழிலிலில் சுப முதலீடு செய்யலாம். படித்துப் பட்டம் பெற்று இளைஞர்கள், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை முயற்சி கைகூடும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். நீண்ட காலமாக சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் இக்காலகட்டத்தில் சொந்தத் தொழில் தொடங்கலாம். ராசியில் செவ்வாய் உச்சம் என்பதால் செவ்வாய் தோஷமில்லை. ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகு, புதன், சுக்கிரன் இருப்பதும் களஸ்திர தோஷம். சிலருக்கு முதல் திருமணமே தடையாகும்; தாமதமாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும். முதல் திருமணம் சிலருக்கு ரத்தாகலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனுக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அத்துடன் குரு நிற்பதும் திரிகோணம்; அவர் பார்க்கும் 5-ஆம் இடமும் திரிகோணம். 1, 5, 9 திரிகோணம். அது லட்சுமி ஸ்தானம் எனப்படும். 1, 4, 7, 10 கேந்திரஸ்தானம். அது விஷ்ணு ஸ்தானம் எனப்படும். கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் வள்ளுவர் சொன்ன மாதிரி "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிலிதரும்' என்ற கருத்துப்படி முயற்சியால் யோகங்களை அடைய வேண்டும். திரிகோண ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் முற்பிறவியின் பலனாக இப்பிறவியில் தெய்வாதீனமாக யோகங்களை அடையச் செய்யும். (அதை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம்). 7-க்குடைய சூரியன் 5-ல் இருப்பதாலும் அவரை குருவும் சனியும் பார்ப்பதாலும் ஒருசில ஆண்களுக்கு மனைவி வகையில் சொத்து சுகங்கள் அமையும். கும்ப ராசிப் பெண்களுக்கு கணவர் வகையில் மேற்படி யோகங்கள் அமையும். பொதுவாக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். 5-ல் சூரியன் நிற்பது தோஷம் என்றாலும் குரு, சனி பார்வையால் தோஷம் விலகும். நல்ல வாரிசு அமையும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு குரு 8-ல் மறைகிறார். அத்துடன் வக்ரமாக இருக்கிறார். ஜூலை 4 வரை (ஆனி- 20) குரு வக்ரம். இது உங்களுடைய செயல் நடவடிக்கைகளில் எந்த விதமான தீர்க்கமான முடிவை எடுக்க முடியாதபடி குழப்பத்தைத் தரும் காலம். 5-ல் ராகு, புதன், சுக்கிரன் இருப்பது மனதில் ஏதோ ஒரு கனம் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். வசதி வாய்ப்பு, தொழில் வருமானம் இவற்றில் பிரச்சினைக்கு இடமில்லை. என்றாலும் எந்த ஒரு சிறு செயலிலிலும் முடிவெடுக்க முடியாத குழப்பம் இருக்கும். முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத, சம்பந்தமில்லாத, அநாமதேயப் பேர்வழிகளின் குறுக்கீட்டால் உங்கள் மனதில் கலக்கமும், செயலிலில் தயக்கமும் ஏற்படலாம். தேவையற்ற விமர்சனங்களுக்கும் ஆளாக நேரும். ஒருசிலருடைய அனுபவத்தில் வேலிலியே பயிரை மேய்வதுபோலவும், வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோலவும், பாலூட்டி வளர்த்த பாம்பு கையைக் கொத்துவதுபோலவும் சில சங்கடங்களை சந்திக்க நேரும். அதிகபட்சம் குரு 9-ல் வரும்வரை இந்த உபாதைகள் இருந்தாலும் குருவின் வக்ர நிவர்த்திகளுக்குப் பிறகே (ஜூலை- 4) விமோசனம் பிறக்கும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்று சொல்வதுபோல உங்கள் பெருமையும் கௌரவமும் காப்பாற்றப்படும். மதிப்பு, மரியாதைக்குக் குறைவிருக்காது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe