Advertisment

இந்த வார ராசிபலன் 4-11-2018 முதல் 10-11-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasipalan-4-11-2018-10-11-2018

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

6-11-2018- துலாம்.

8-11-2018- விருச்சிகம்.

10-11-2018- தனுசு.

கிரக பாதசாரம்:

சூரியன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2.

செவ்வாய்: அவிட்டம்- 4,

சதயம்- 1.

புதன்: அனுஷம்- 1, விசாகம்- 4.

குரு: அனுஷம்- 1, 2.

சுக்கிரன்: சுவாதி- 2, 1.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 1.

கேது: உத்திராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், சுக்கிரன்

அஸ்தமனம்.

7-11-2018- புதன் அஸ்தமனம்

7-11-2018- சுக்கிரன் உதயம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த வாரமும் தொடர்ந்து 11-ல் இருக்கிறார். உங்கள் காரியங்களில் தோல்விக்கு இடமில்லை என்றாலும், போராடித்தான் ஜெயத்தைச் சந்திக்கமுடியும். 2-க்குடைய சுக்கிரன் 7-ஆம் தேதி அஸ்தமன நிவர்த்தியாகிறார். கடந்த வாரம் சந்தித்துவந்த பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். கொடுக்கல்- வாங்கலில் யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களின் கவனமும், வேலைமீது காட்டும் அக்கறையும் மேலிடத்தாரிடையே உங்களுக்கு நன்மதிப்பை உண்டாக்கும். ஆனால், சக ஊழியர்களில் சிலர் உங்களைப் புறம் பேசி குறை கூறுவர். அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. 3-க்குடைய புதன் 8-ல் மறைந்தாலும், உடன்பிறந்த வகையில் நன்மைகளும் உண்டாகும். ஏனெனில் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது நீங்களே அறிந்ததுதான். மூத்த சகோதர- சகோதரிகளால் அனுகூலமும் ஆதரவும் ஏற்படும். 7-ல் சுக்கிரன் ஆட்சி. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். 10-ல் கேது. சிலர் தொழில் வகைக்காக இடமாற்றங் களையும், சிலர் தொழில் மாற்றங்களையும் சந்திக்கநேரும். 9-க்குடைய குரு 8-ல் மறைவதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக சாதகமான முடிவுகள் ஏற்படாது. இழுபறி நிலை நீடிக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இந்த வாரம் 7-ஆம் தேதி ரிஷப ராசிநாதன் சுக்கிரன் அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். 6-ல் சுக்கிரன், அவருடன் 4-க்குடைய சூரியன் நீசம். ஆட்சி பெற்ற சுக்கிர னோடு அவர் சேருவதால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. "அட்டமத்துச்சனி தொட்டது துலங்காது' என்பார்கள். ஆனால் ரிஷப ராசிக்கு சனி கெடுதல் செய்யமாட்டார். 9, 10-க்குடைய சனி 8-ல் மறைவது நல்லதல்ல என்றாலும், சனிக்கு வீடு கொடுத்த குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 7-ஆமிடம் உபதொழில், மனைவி- கணவன் ஸ்தானம். 7-க்குடைய செவ்வாய் 10-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். உங்கள் கருத்துக்களை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தில் உறுதியாக நின்று வெற்றியடைவீர்கள். படித்து முடித்து வேலைக்காக வெளிநாட்டு முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த தருணம் நல்ல முயற்சியாக அமைந்து கைகொடுக்கும். 35 வயதுக்குமேல் திருமணமாகாத ஆண்களுக்கும், 30 வயதுக்குமேலான பெண்களுக்கும் இனி கல்யாணம் கைகூடிவரும். சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தையும் எதிர்கொள்ள நேரும். பொருளாதாரத்தில் கடன் வாங்க நேரும். பழைய கடனை அடைக்க புதுக்கடனும் வாங்கும் அவசியம் ஏற்படலாம். சகோதரர்களால் அனுகூலமும் ஆ

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

6-11-2018- துலாம்.

8-11-2018- விருச்சிகம்.

10-11-2018- தனுசு.

கிரக பாதசாரம்:

சூரியன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2.

செவ்வாய்: அவிட்டம்- 4,

சதயம்- 1.

புதன்: அனுஷம்- 1, விசாகம்- 4.

குரு: அனுஷம்- 1, 2.

சுக்கிரன்: சுவாதி- 2, 1.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 1.

கேது: உத்திராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், சுக்கிரன்

அஸ்தமனம்.

7-11-2018- புதன் அஸ்தமனம்

7-11-2018- சுக்கிரன் உதயம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த வாரமும் தொடர்ந்து 11-ல் இருக்கிறார். உங்கள் காரியங்களில் தோல்விக்கு இடமில்லை என்றாலும், போராடித்தான் ஜெயத்தைச் சந்திக்கமுடியும். 2-க்குடைய சுக்கிரன் 7-ஆம் தேதி அஸ்தமன நிவர்த்தியாகிறார். கடந்த வாரம் சந்தித்துவந்த பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். கொடுக்கல்- வாங்கலில் யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களின் கவனமும், வேலைமீது காட்டும் அக்கறையும் மேலிடத்தாரிடையே உங்களுக்கு நன்மதிப்பை உண்டாக்கும். ஆனால், சக ஊழியர்களில் சிலர் உங்களைப் புறம் பேசி குறை கூறுவர். அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. 3-க்குடைய புதன் 8-ல் மறைந்தாலும், உடன்பிறந்த வகையில் நன்மைகளும் உண்டாகும். ஏனெனில் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது நீங்களே அறிந்ததுதான். மூத்த சகோதர- சகோதரிகளால் அனுகூலமும் ஆதரவும் ஏற்படும். 7-ல் சுக்கிரன் ஆட்சி. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். 10-ல் கேது. சிலர் தொழில் வகைக்காக இடமாற்றங் களையும், சிலர் தொழில் மாற்றங்களையும் சந்திக்கநேரும். 9-க்குடைய குரு 8-ல் மறைவதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக சாதகமான முடிவுகள் ஏற்படாது. இழுபறி நிலை நீடிக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இந்த வாரம் 7-ஆம் தேதி ரிஷப ராசிநாதன் சுக்கிரன் அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். 6-ல் சுக்கிரன், அவருடன் 4-க்குடைய சூரியன் நீசம். ஆட்சி பெற்ற சுக்கிர னோடு அவர் சேருவதால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. "அட்டமத்துச்சனி தொட்டது துலங்காது' என்பார்கள். ஆனால் ரிஷப ராசிக்கு சனி கெடுதல் செய்யமாட்டார். 9, 10-க்குடைய சனி 8-ல் மறைவது நல்லதல்ல என்றாலும், சனிக்கு வீடு கொடுத்த குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 7-ஆமிடம் உபதொழில், மனைவி- கணவன் ஸ்தானம். 7-க்குடைய செவ்வாய் 10-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். உங்கள் கருத்துக்களை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தில் உறுதியாக நின்று வெற்றியடைவீர்கள். படித்து முடித்து வேலைக்காக வெளிநாட்டு முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த தருணம் நல்ல முயற்சியாக அமைந்து கைகொடுக்கும். 35 வயதுக்குமேல் திருமணமாகாத ஆண்களுக்கும், 30 வயதுக்குமேலான பெண்களுக்கும் இனி கல்யாணம் கைகூடிவரும். சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தையும் எதிர்கொள்ள நேரும். பொருளாதாரத்தில் கடன் வாங்க நேரும். பழைய கடனை அடைக்க புதுக்கடனும் வாங்கும் அவசியம் ஏற்படலாம். சகோதரர்களால் அனுகூலமும் ஆதரவும் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் வக்ரமாக இருக்கிறார். 7-ஆம் தேதிமுதல் அஸ்தமனமாகிறார். 7-க்குடைய குரு 6-ல் மறைகிறார். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும். 7-ல் சனி- திருமணத்தடைகளை சந்திக்க நேரும். 11-க்குடைய செவ்வாய் 9-ல் நின்று 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பூமி, வீடு, மனை சம்பந்தமான விரயங்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டைப் பழுது பார்த்து, புதுப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். 2-ல் ராகு- பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சிற்சில குழப்பங்களையும் சந்திக்க நேரும். விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையை வளர்த்துக்கொண்டால் அவற்றிலிருந்து நிவாரணம் அடையலாம். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அவர்களின் திட்டங்களும் கல்விக்கான செயல்பாடும் பூர்த்தியாகும். 6-ல் குரு மறைந்தாலும் 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். 10-க்குடையவர் 10-ஆமிடத்தையே பார்ப்பதால் தொழில்துறையில் சங்கடங்களுக்கு இடமில்லை. 8-ல் உள்ள கேது அலைச்சல்களை சற்று அதிகமாகவே தருவார். நண்பர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்கநேரும். தேகசுகம் நன்றாக இருக்கும். தாயின் சுகம் தெளிவு பெறும். புதிய வாகனங் கள் வாங்கும் முயற்சிகள் நிறைவேறும்.

thisweekrasiகடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 5-ல் குரு நின்று ராசியைப் பார்க்கி றார். ராசியில் ராகு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். என்றாலும் அந்த வெற்றியை அனுபவிக்க போட்டி, பொறாமைகளைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும். சிலருக்குத் தொழில் போட்டி, சிலருக்கு உடன்பிறந்தவகையில் போட்டி, சிலருக்குப் பணிபுரியுமிடத்தில் போட்டி! போட்டி இருந்தால்தானே வெற்றி என்ன என்பது தெரியும். 6-ல் உள்ள சனி போட்டி, பொறாமை, எதிரி ஆகியவற்றை சமாளிக்கும் சக்தியைத் தருவார். 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதால் தொழில் போட்டிகளை சமாளிக்கவே, "தனி தைரியத்தைக் கொடு இறைவா' என்று நீங்கள் வேண்டிக்கொள்ளும்படியான இடைஞ்சல்களை சந்திக்கநேரும். உதாரணமாக, நீங்கள் எடுத்த ஆர்டரை முடிக்கும் தறுவாயில் உங்களிடம் பணிபுரிந்து விலகிய அல்லது உங்களோடு போட்டி போட்ட கம்பெனி தட்டிப்பறித்து உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இது 10-க்குடையவர் 8-ல் மறைந்த சஞ்சலம், ஏமாற்றம் போன்ற பலன்கள் ஆகும். என்றா லும் தைரியத்தைக் கைவிடாது உங்கள் முயற்சியை செலுத்தி செயல்படுங்கள். 7-ல் கேது. கணவன்- மனைவிக்குள் சிறுசிறு பூசல்களும் சச்சரவுகளும் தோன்றி மறையும். பிரிவு- பிளவு ஏற்படாது. பொருளாதாரத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசம். ராசிநாதன் நீசமடைவது நல்லதல்ல. என்றாலும் 3-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெற்று சூரியனுடன் இணைந்திருப்பதால் அவருக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 2-க்குடைய புதன் 4-ல் அஸ்தமனம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலை நீடிக்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் தோன்றுவதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாயார்வழியில் இருக்கும் மனக் கிலேசங்கள் மாறி ஒற்றுமையுணர்வு மேலோங்கும். சிலர் புதிய வாகனம் வாங்கும் ஆர்வத்தில் கவனம் செலுத்த லாம். 7-ல் செவ்வாய், அவரைப் பார்க்கும் சனி. கணவன்- மனைவிக்குள் குழப்பம், விவாதம் போன்றவற்றை சந்திக்கலாம். 12-ல் ராகு, 6-ல் கேது. சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 10-ஆம் இடத்தை 9-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். ராசியையும் பார்க்கிறார். வேலையில் முன்னேற்றம், தொழில்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சங்கடமும் சஞ்சலமும் உண்டாகும். அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் செலவுகள் வந்துசேரும். அது செய்முறைச் செலவுகளாகக்கூட அமையலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 3-ல் அஸ்தமனம். உங்கள் செயல்பாடு, கீர்த்தி இவற்றில் தேக்கநிலை உருவாகலாம். 2-க்குடைய சுக்கிரன் உதயமாகி, 2-ல் ஆட்சியாக இருக்கிறார். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் நன்மைகள் ஏற்படும். இருவருக்கும் நடந்துவரும் பிரச்சினைகளை சமாளிக்க ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்துச் சென்றால் ஒற்றுமை நிலவும். 4-ல் சனி. தாயார் சுகம், தன் சுகம் இவற்றில் நோய் நொடிகளை சந்திக்கநேரும். தாயாருக்கு மூட்டுவலி சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும். 5-ல் உள்ள கேதுவும், 11-ல் உள்ள ராகுவும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுகின்றனர். தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். குரு 3-ல் நின்றாலும் அவர் பார்ப்பது 7, 9, 11 ஆகிய இடங்கள். எனவே தகப்பனாரால் நன்மை அடையலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் ஒரு நல்ல தீர்வுக்கு வரும். தேவையற்ற மனக் குழப்பம் விலகும். தொழில்புரிவோர் கூட்டாளி வகையில் உள்ள சங்கடங்களை மறந்து, மன்னித்து, ஒன்றுகூடி தொழிலை நடத்தலாம். உபதொழில்மூலம் வருமானம் அமையலாம். காரியஜெயம் ஏற்படும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

கடந்த வாரம் துலா ராசிநாதன் சுக்கிரன் அஸ்தமனமாக இருந்தார். இந்த வாரம் 7-ஆம் தேதி சுக்கிரன் அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். உங்கள் செயல்பாடு, கீர்த்தி இவற்றில் இருக்கும் இடர்ப்பாடுகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். தேவைகள் பூர்த்தி யாகும். பணப்பற்றாக்குறை நீங்கும். தாயன்பு, மனைவியின் கனிவு, குடும்பத்தில் குதூகலம், உறவினர்களின் ஆதரவு, சகோதர வகையில் நன்மை ஆகிய நற்பலன்கள் உண்டாகும். வாகன சுகம் போன்ற நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். 10-ல் உள்ள ராகு தொழில்துறையில் சில அதிரடி மாற்றங்களை உருவாக்குவார். கூட்டுத்தொழில் புரிவோர் அதிலிலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கும் திட்டங்களை செயல்படுத்தலாம். கல்வியில் பிள்ளைகள் சற்று மந்தமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஹயக்ரீவர் வழிபாட்டை செயல்படுத்தி, ஹயக்ரீவ மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம். சிலர் தகப்பனார் வழியில் எதிர்பாராத இழப்புகளைச் சந்திக்கநேரும். 7-ஆமிடத்தை சுக்கிரன் பார்க்கிறார். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமணம் தாமதமாகும். தேகசுகம் நன்றாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 4-ல் நிற்க, 2-ல் உள்ள சனி அவரைப் பார்க்கிறார். 6-க்குடையவர் 4-ல் கேந்திரம் பெறுகிறார். பூமி, வீடு, மனை சம்பந்தமாக சுபமங்கள விரயச்செலவுகள் செய்யலாம். அதற்காக பணப் பற்றாக்குறையை சரிசெய்ய வெளியில் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். 4-ஆம் இடம் கல்வி ஸ்தானம் என்பதால் கல்விக்காக சிலர் வெளிநாட்டுப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஏழரைச்சனியில் படிப்பு மந்தமாக செயல்படும் என்பார்கள். என்றா லும் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் விடாமுயற்சியும் வெற்றியைத் தரும். சனியின் மந்த புத்தியைத் தோற்கடிக்கலாம். "தெய்வத் தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிலி தரும்'' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். தகப்பனாரால் சிலருக்கு அனுகூலமும் உண்டு. தொந்தரவுகளும் ஏற்படலாம். 12-க்குடையவர் 12-ல் ஆட்சியாக இருப்பதால் விரயங்களையும் அலைச்சல்களையும் சந்திக்கநேரும். ஜென்ம குரு 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமண முயற்சிகள் கைகூடும். 3-ல் உள்ள கேது தைரியத்தை அதிகமாக்குவார். நண்பர்களால் உதவி ஏற்படும். சகோதர- சகோதரிவகையில் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். உங்கள் செயல்பாடுகளில் தேக்கம், தாமதம் போன்றவற்றை சந்திக்கநேரும். ஜென்ம ராசியில் சனி. சனிக்கு வீடு கொடுத்த குரு செவ்வாய் வீட்டில். செவ்வாய் சனி வீட்டில். சனி செவ்வாயைப் பார்க்கிறார். ஆக, மூவரும் சம்பந்தப்படுகிறார்கள். 9-க்குடைய சூரியன் 11-ல் இருக்கிறார். பொதுவாக ஒரு காரியம் தேக்கமில்லாமல், தடையில்லாமல் நிறைவேற சூரிய ஹோரையில் நேரம் குறித்துக்கொடுத்தால் அது ஜெயமாகும் என்பது ஜோதிடவிதி. 11-ஆமிடம் ஜெயஸ்தானம். அங்கு சூரியன் 11-க்குடைய ஆட்சிபெற்ற சுக்கிரனோடு கூடியிருப்பதால் நீசபங்கமாகிறார். எனவே அரசு சம்பந்தப்பட்ட உதவிகளை எதிர் பார்த்துக் காத்திருப்போருக்கு அரசின் சகாயமும் அனுகூலமும் ஏற்படும். 8-ல் உள்ள ராகு வேலை, உத்தியோகம் இவற்றில் சில குழப்பங்களை உண்டுபண்ணலாம். சஞ்சலம், மனசங்கடம் போன்றவற்றை ஏற்படுத்துவார். ஜென்மச்சனியும் அதற்கு ஒரு காரணமாக விளங்குவார். 12-க்குடைய செவ்வாய் 3-ல் அமர்ந்து 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிலர் வீடு கட்டுவதற்கு வங்கிக்கடனை எதிர்பார்க்கலாம். அல்லது புதிய வீடு வாங்கும் முயற்சியாகவும் கடனை சந்திக்கநேரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு அனுகூலமான பலன்கள் நடைபெறும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். (7-11-2018). எனவே தொழிலிலில் ஏற்பட்ட தொய்வுகள் விலகும். பார்ட்னர்ஷிப் தொழில் செய்வோரிடையே இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் விலகும். 3, 12-க்குடைய குரு 11-ல் சஞ்சரிக்கிறார். அவை மறைவு ஸ்தானம் என்றாலும், 11-ல் நிற்கும் குரு 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம் என்பது எல்லாரும் அறிந்ததே! ராசிநாதன் சனி 12-ல். மகர ராசிக்கு விரயச்சனி நடக்கிறது. ஆனாலும், பாதிப்புகளுக்கு இடமிருக்காது. ஜென்ம கேது உங்களது திட்டங்களை செயல்படுத்தலாமா, வேண்டாமா என்ற குழப்பங்களைத் தந்தாலும், 11-ல் இருக்கும் குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியத்துடன் செயலிலில் இறங்குவீர்கள். பிள்ளைகள் வகையில் நல்ல பலன்கள் உண்டாகும். அவர்களின் எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சிகள், உருவாக்கும் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவலாம். குரு பார்ப்பதால் பிரிவு- பிளவிற்கு இடம்வராது. சிலர் உபதொழில், கூட்டுத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஜனன ஜாதகத்தை வைத்துப் பலனறிந்து நடந்துகொள்ளவும். அயல்நாட்டுப் படிப்பு முயற்சிகளும் கைகூடி வரும். புதிய வேலை வாய்ப்புகளும் அமையலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு 12-ல் கேது. 6-ல் ராகு. சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவாரணம் போன்ற பலன்களை சந்திக்கலாம். 12-ஆம் இடம் விரயம், சலனம், அயன சயன போகத்தைக் குறிக்கும் இடம். அங்கிருக்கும் கேது அந்த இடத்துப் பலனைக் கெடுப்பார். எனவே கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத் திற்குரியவர்கள் என்ற நிலையிலிலிருந்து மாறி, அதிர்ஷ்டத்துக்குரியவர்களாகவும் மாறுவது நிச்சயம். ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்ப்பதே ஒரு பலம்தான். 2-க்குடைய குரு 2-ஆமிடத்தையே பார்ப்பதால் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் மிகவும் சரளமாக இருக்கும். 9-க்குடைய சுக்கிரன் 9-ல் ஆட்சி. சுக்கிரன் களஸ்திரகாரகன். அவர் அஸ்தமனம் நீங்கி உதயமாகிவிட்டார். (7-11-2018). எனவே பெண்களாக இருந்தால் கணவருக்கும், ஆண்களாக இருந்தால் மனைவிக்கும் அனு கூலமும் ஆதாயமும் எதிர்பார்க்கலாம். கணவரின் பூர்வீக சொத்து சம்பந்தமாக இருக்கும் வில்லங்க நிலைமாறி, சுமுகமான தீர்வுகள் கிடைக்கப்பெற்று உங்களுக்கு சேரவேண்டிய பங்கு வந்துசேரும். நியாயமான பங்கு எதுவோ அதற்கு மட்டும்தான் ஆசைப்படவேண்டும். அத் தனைக்கும் ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிடக்கூடாது. தான் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிக்க நினைப் பது தவறான எண்ணம். சிலர் அதை மாற்றிக்கொள்ளவேண்டும். 9-ல் சூரியன் நீசம். தகப்பனாருக்கு சில வைத்தியச் செலவுகள் வரலாம். வாகனவகையில் எச்சரிக்கை யுடன் நடந்துகொள்ளவேண்டும். நீசபங்கம் என்பதால் "தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போனதுமாதிரி' என்று சொல்வது போல் இழப்புகள் எதுவும் நிகழாது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். கடந்த காலத்தில் (8-ல் குரு இருந்தபோது) உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை, கெடுபலன்களை 9-ல் இருக்கும் குரு மாற்றி நற்பலன்களாக செயல்படுத்துவார். என்றாலும் கடந்தகால கசப்பான அனுபவங்களை ஒரு பாடமாக நினைத்து மாறவேண்டுமே தவிர, பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நல்லது. 8-க்குடைய சுக்கிரன் 8-ல் ஆட்சி. 7-11-2018-ல் உதயமாகிறார். வீண் சஞ்சலம், எதிர்பாராத விரயம், திடீர்ப்பயணம் ஆகியவற்றை சந்திக்கலாம். 10-ஆமிடத்து சனி பதிகுலைக்கும் என்பதுபோல் சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது பழைய தொழிலைவிட்டு புதிய தொழில் உருவாக்குதல், வேறுசிலருக்கு பழைய தொழிலை புதுப்பித்தல் போன்ற பலன்களை உருவாக்கும். 12-ல் உள்ள செவ்வாய் 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். உடன்பிறந்த வகையில் "அண்ணன் என்னடா- தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று கண்ணதாசன் பாடல் எழுதியதுமாதிரி பனிப்போர் நடந்துகொண்டுதான் இருக்கும். அவரவர் எண்ணம்போல் வாழ்வு. "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்ற அடிப்படையில் செயல்பட்டால் மதிப்பும் மரியாதையும் கூடும். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகளை மாறிமாறி சந்திக்கவேண்டிய சூழ்நிலை. கையிலுள்ள கடைசி பணம் தீரும்போதுதான் அடுத்த பணம் புரளும். சரளமான பணப்புழக்கத்திற்கு இடமில்லாத வகையில்தான் நாளும் பொழுதும் ஓடும். பிள்ளைகளுக்கு நற்பலன்கள் உண்டாகும். அவர்களால் பெருமை வந்துசேரும்.

bala091118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe