ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
28-8-2018- மீனம்.
30-8-2018- மேஷம்.
1-9-2018- ரிஷபம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 3, 4, பூரம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1, 2, 3.
குரு: விசாகம்- 2.
சுக்கிரன்: சித்திரை- 1, 2, 3.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
செவ்வாய் வக்ரம்.
28-8-2018- சிம்ம புதன்.
31-8-2018- துலா சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி,கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். தன் ராசியைத் தானே பார்க்கிறார். 4-க்குடைய சந்திரன் சாரம். (திருவோணம் 2-ல்). 2, 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம். என்றாலும் 7-ல் குரு சுயசாரம் பெறுவதாலும், ராசியைப் பார்ப்பதாலும் கணவன்- மனைவிக்குள் அன்பு, அனுசரிப்புத் தன்மை, அன்யோன்யம் உண்டாகும். பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. என்றாலும், சிலசமயம் வரவுக்குமீறிய செலவுகளால் அதை சமாளிக்க அக்கம்பக்கம் கடன் வாங்கும் சூழலும் உருவாகும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நீண்டகாலத் தவணைத் திட்டத்தில் வாங்கலாம். புதிய வேலை அல்லது புதிய திட்டத்திற்கு முயற்சி செய்வீர்கள். அதை நிறைவேற்ற செல்வாக்கான ஒரு பிரமுகரை நாடுவீர்கள். அவரும் மனப்பூர்வமாக உங்களுக்கு உதவுவார். 9-ல் சனி இருந்தாலும், 10-ல் இருக்கும் கேது சாரம் பெறுவதால் தொழில், வாழ்க்கை இவற்றில் பாதிப்புக்கு இடமில்லை. 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உண்டாகும். அது உங்களை வழிநடத்தும். ஆரோக்கியத்தில் கவனம்தேவை. சிறு வைத்தியச்செலவுகள் வந்துவிலகும். பயப்படத் தேவையில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த புதன் கடகத்தில் சொந்த சாரம். அத்துடன் சுக்கிரனுக்கு சாரம் கொடுத்த செவ்வாய் 9-ல் உச்சம். எனவே சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. அடுத்தவர்களுக்காகவும், பழகிய நண்பர்களுக்காகவும், குடும்ப உறவினர்களுக்காகவும் அவர்கள் பிரச்சினைகளை உங்கள் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதி செயல்படுவீர்கள், பாடுபடுவீர்கள். சிலசமயம் உங்கள் சொந்தக் கைக்காசையே செலவுசெய்து அவர்களைத் திருப்திப்படுத்துவீர்கள். என்றாலும் அவர்கள் நன்றி மறந்தவர்களாக மாறிவிடுவார்கள். அதை நினைத்து நீங்கள் வேதனைப்படுவீர்கள். "நல்லதுக்கே காலம் இல்லை; சொல்லப்போனால் வெட்கக்கேடு' என்று வருந்துவீர்கள். ராசிநாதன் நீசமடைந்த பலன் உங்கள் மனதைத் தாக்கும். அதேபோல பிள்ளைகள் வகையிலும் தொல்லைகள் உண்டாகும். மனைவி அல்லது கணவர் வகையில் உறவினர்களின் ஏமாற்றத்திற்கு ஆளாக நேரும். அனுதாபப்படலாமே தவிர, அவர்களுக்காக எந்த "ரிஸ்க்'கும் எடுத்து எதுவும் செய்யக்கூடாது. புதிய தொழில் சம்பந்தமாக கடன் கிடைக்கும். தைரியமாக செயல்படலாம். நட்டம் வராது. என்றாலும் லாபம் மெதுவாகக் கிடைக்கும்.
மிதுனம்
(ம
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
28-8-2018- மீனம்.
30-8-2018- மேஷம்.
1-9-2018- ரிஷபம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 3, 4, பூரம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1, 2, 3.
குரு: விசாகம்- 2.
சுக்கிரன்: சித்திரை- 1, 2, 3.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
செவ்வாய் வக்ரம்.
28-8-2018- சிம்ம புதன்.
31-8-2018- துலா சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி,கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். தன் ராசியைத் தானே பார்க்கிறார். 4-க்குடைய சந்திரன் சாரம். (திருவோணம் 2-ல்). 2, 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம். என்றாலும் 7-ல் குரு சுயசாரம் பெறுவதாலும், ராசியைப் பார்ப்பதாலும் கணவன்- மனைவிக்குள் அன்பு, அனுசரிப்புத் தன்மை, அன்யோன்யம் உண்டாகும். பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. என்றாலும், சிலசமயம் வரவுக்குமீறிய செலவுகளால் அதை சமாளிக்க அக்கம்பக்கம் கடன் வாங்கும் சூழலும் உருவாகும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நீண்டகாலத் தவணைத் திட்டத்தில் வாங்கலாம். புதிய வேலை அல்லது புதிய திட்டத்திற்கு முயற்சி செய்வீர்கள். அதை நிறைவேற்ற செல்வாக்கான ஒரு பிரமுகரை நாடுவீர்கள். அவரும் மனப்பூர்வமாக உங்களுக்கு உதவுவார். 9-ல் சனி இருந்தாலும், 10-ல் இருக்கும் கேது சாரம் பெறுவதால் தொழில், வாழ்க்கை இவற்றில் பாதிப்புக்கு இடமில்லை. 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உண்டாகும். அது உங்களை வழிநடத்தும். ஆரோக்கியத்தில் கவனம்தேவை. சிறு வைத்தியச்செலவுகள் வந்துவிலகும். பயப்படத் தேவையில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த புதன் கடகத்தில் சொந்த சாரம். அத்துடன் சுக்கிரனுக்கு சாரம் கொடுத்த செவ்வாய் 9-ல் உச்சம். எனவே சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. அடுத்தவர்களுக்காகவும், பழகிய நண்பர்களுக்காகவும், குடும்ப உறவினர்களுக்காகவும் அவர்கள் பிரச்சினைகளை உங்கள் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதி செயல்படுவீர்கள், பாடுபடுவீர்கள். சிலசமயம் உங்கள் சொந்தக் கைக்காசையே செலவுசெய்து அவர்களைத் திருப்திப்படுத்துவீர்கள். என்றாலும் அவர்கள் நன்றி மறந்தவர்களாக மாறிவிடுவார்கள். அதை நினைத்து நீங்கள் வேதனைப்படுவீர்கள். "நல்லதுக்கே காலம் இல்லை; சொல்லப்போனால் வெட்கக்கேடு' என்று வருந்துவீர்கள். ராசிநாதன் நீசமடைந்த பலன் உங்கள் மனதைத் தாக்கும். அதேபோல பிள்ளைகள் வகையிலும் தொல்லைகள் உண்டாகும். மனைவி அல்லது கணவர் வகையில் உறவினர்களின் ஏமாற்றத்திற்கு ஆளாக நேரும். அனுதாபப்படலாமே தவிர, அவர்களுக்காக எந்த "ரிஸ்க்'கும் எடுத்து எதுவும் செய்யக்கூடாது. புதிய தொழில் சம்பந்தமாக கடன் கிடைக்கும். தைரியமாக செயல்படலாம். நட்டம் வராது. என்றாலும் லாபம் மெதுவாகக் கிடைக்கும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் வாரத்தொடக்கத்தில் சுயசாரம் பெறுகிறார். பிறகு 8-ல் இருக்கும் கேது சாரம் பெறுகிறார். 2-ல் நிற்கும் புதன் 28-ஆம் தேதி சிம்மத்திற்கு மாறுவார். அங்கு சூரியன் ஆட்சியாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் தைரியமாக- திடமாக- தீர்க்கமான முடிவோடு செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லாத வகையில் தாராளமான சூழ்நிலையும், போதிய நிறைவும் உண்டாகும். சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஏமாற்றத்திற்கு இடமில்லாத வகையில் அது வளரும்; பெருகும். சிலர் இன்ஸ்யூரன்ஸ் வகையில் பெருந்தொகையை முதலீடு செய்து மாத வட்டி வசூல் செய்யலாம். பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். அதற்காக வங்கிக்கடன் அல்லது எல்.ஐ.சி. கடன் வாங்கலாம். வெளியில் வாங்கும் தனியார் கடனைவிட வங்கி அல்லது எல்.ஐ.சி. கடன் வட்டி குறைவாக இருக்கும். ஒருசிலர் வெளியூர் வேலை அல்லது வெளிநாட்டு வேலைக்குப் போகின்ற சூழ்நிலை வரும். வாரம் முழுக்க அயராத உழைப்பு காணப்படும். தொழில் முன்னேற்றமும் இருக்கும்; அதற்கான பலனும் பயனும் எதிர்பார்க்கலாம். மனைவியின் அன்பும் ஆதரவும் உங்களுக்குப் பக்கபலமாக அமையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் புதனும் ராகுவும் நிற்க, 7-ல் 5, 10-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் கேதுவும் சந்திரனும் சேர்ந்து ராசியைப் பார்க்கிறார்கள். 2-ல் சூரியன் ஆட்சி. எதிர்பார்த்த துறையில் பணவரவு கிடைக்கும். எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த அவர்கள் விரும்பியவண்ணம் செயல்பட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெரியோர்களுக்கு (முதியோர்களுக்கு) பேரன்- பேத்தி வகையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையும், காட்டும் அன்பும் உங்களுக்குத் தெம்பூட்டும். 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலை, உத்தியோகத்தில் மனநிறைவும் திருப்தியும் ஏற்படுவதோடு மேலிடத்தாரின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவராவீர்கள். ஒருசிலர் சொந்தத் தொழிலில் தீவிரமாக இறங்கலாம். அதேபோல கூட்டுத்தொழில் முயற்சியும் கைகொடுக்கும். தொழில் சம்பந்தமாக அல்லது வேலை சம்பந்தமாக தவிர்க்க முடியாத பயணங்களும் அலைச்சலும் காணப்படும். அதேசமயம் அது உங்களுக்கு பாராட்டையும் நல்ல மதிப்பையும் உருவாக்கித் தரும். எதிர்காலத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு அது அஸ்திவாரமாக அமையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். கேதுவின் சாரத்திலும், சுக்கிரனின் சாரத்திலும் சஞ்சாரம். கேது 6-லும், சுக்கிரன் 2-லும் இருக்கிறார்கள். சுக்கிரன் நீசபங்கம். பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. சிலருக்கு வரவுக்கேற்ற செலவுகளும், சிலருக்கு வரவுக்குமீறிய செலவுகளும் காணப்படலாம். அதைச் சரிக்கட்ட சிலர் கடன் வாங்கலாம். அப்படிக் கடன் வாங்குவதும் சிலருக்கு வட்டியில்லாக் கடனாகவும், சிலருக்கு குறைந்த வட்டிக் கடனாகவும் அமையும். 7-க்குடைய சனி கேது சாரம் பெற்று 5-ல் இருப்பதால் ஒருசிலருக்கு குடும்பத்தில் முக்கியமானவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருக்கலாம். ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறமுடியும். ஒரு கதவு அடைப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும். எந்த ஒன்றைப் பெற வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு விலை இருக்கும். அதைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். இவையெல்லாம் உங்களுக்கு சாதாரண நிகழ்ச்சிகளாக அமையும். அதேசமயம் அவை உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அஸ்திவார முயற்சியாக அமையும். 9-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 9-ஆமிடத்தைப் பார்ப்பதோடு குருவும் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் உண்டு.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் சுயசாரம் பெறுகிறார். வாரக்கடைசியில் கேது சாரத்திற்கு மாறுவார். இது உங்களுக்கு அனுகூலமான கிரக அமைப்புதான். புதனோடு ராகு சம்பந்தம்; கேது பார்வை. உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழுமையான அளவில் நிறைவேறும். ஒருசிலருக்குத் தாயாரின் ஆசிர்வாதம், ஒருசிலருக்கு மனைவியின் ஒத்துழைப்பு, ஒருசிலருக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு பக்கபலமாக அமையும். ரத்தத்தின் ரத்தம் என்று சொன்னாலும் சரி அல்லது உடன்பிறப்புகள் என்று பாராட்டினாலும் சரி- உங்களுக்காக உயிரைக் கொடுக்கவும், உதவி செய்யவும் உரித்தானவர்களும் விசுவாசமானவர்களும் காத்திருக்கிறார்கள். தேவைப்படும் நேரம் அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 2-ஆமிடத்து குரு பொருளாதாரத்தில் சரளமான நிலையை உருவாக்குவார். பணத்தட்டுப்பாடு இருக்காது. உங்களுக்கு வரவேண்டியது வந்துசேரும். கொடுக்க வேண்டியவருக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். 3, 8-க்குடைய செவ்வாய் வக்ரமானாலும் 5-ல் உச்சம். ஆகவே பிள்ளைகள் வகையில் சிலருக்குத் தொல்லைகள் உருவாகலாம். ராகு- கேதுவும் சம்பந்தப்படுகிறார்கள். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் அது வம்புத் தொல்லையாக இருக்கும். சாதகமாக இருந்தால் அன்புத் தொல்லையாக இருக்கும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் நீசம். என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த புதன் ராசிக்கு 10-ல் இருப்பதால் சுக்கிரனுக்கு நீசபங்கம் ஏற்படும். நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திரம் பெற்றாலும் நீச கிரகம் நீச பங்கமாகும். ஜென்ம ராசியில் 3, 6-க்குடைய குரு சுயசாரம் பெறுகிறார். (விசாகம்). செல்வாக்கு, மதிப்பு, மரியாதை இவற்றுக்குக் குறைவில்லை. என்றாலும் 3-ல் சனி இருப்பதாலும், குரு 6-க்குடையவர் என்பதாலும் உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்கள் வகையில் சிலர் பகை, வருத்தங்களைச் சந்திக்க நேரும். அல்லது தவிர்க்கமுடியாத செலவுகளுக்காக கடன் வாங்க நேரும். அல்லது தொழில் விருத்திக்காக கடன்பட நேரிடும். எது எப்படியானாலும் அந்தக் கடன் சுபக்கடன்- விருத்திக்கடன் எனலாம். கடன் வாங்காதவர்களே இல்லை. எளிய மக்கள்முதல் வலிலிய கோடீஸ்வரர்வரை கடன் வாங்கிதான் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இன்னும் சிலர் (கிரிமினல் புத்திக்காரர்கள்) கோடிகோடியாக வங்கிக்கடனை வாங்கி ஏமாற்றுகிறார்கள். அந்தக்கடன் வாங்குவதற்கும் ஒரு மச்சம், ராசி வேண்டியிருக்கிறது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். 9-க்குடைய சந்திரன் சாரத்தில் வக்ரம். சில காரியங்களை எளிய முயற்சியால் நிறைவேற்றிவிடலாம். சில காரியங்களை கடின முயற்சிக்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். எப்படியானாலும் காரியம் நிறைவேறிவிடும். படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன, போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன! படுத்தவுடன் தூக்கம் வந்தால் சரிதான்! இதற்கு முக்கியமான காரணம் ஏழரைச்சனியில் பாதச்சனி. அவருக்கு வீடு கொடுத்த குரு 12-ல் மறைவு. அதனால் "ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும்.’ பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்க வேண்டும்' என்ற பழமொழிப்படி நடந்துகொள்ளவேண்டும். ஒருசிலர் காரியவெற்றிக்காக பகைவரையும் நாடவேண்டிவரும். "காரியமாவதற்காக கழுதையானாலும் காலைப்பிடி' என்னும் பழமொழி உண்டல்லவா? ஒருசிலர் எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற முறையில் கூட்டணி சேருவார்கள். இவையெல்லாம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒரு திரைப்படத்தில் "எப்படியும் வாழலாம் என்பது ஒரு பாலிலிசி. இப்படித்தான் வாழவேண்டும் என்பது இன்னொரு பாலிலிசி' என்று வசனம் பேசுவார். இதில் உங்களுக்கு எந்த பாலிசியோ அந்த பாலிசியைக் கடைப்பிடித்து காரியம் சாதிக்கலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. அவருக்கு வீடு கொடுத்த குரு 11-ல் சுயசாரம் பெறுகிறார். செல்வாக்கு, மதிப்பு, மரியாதை இவற்றுக்குக் குறைவில்லை. உணவு, உடை, உறைவிடம் இவற்றுக்கும் குறைவில்லை. இந்தியில் "ரொட்டி,' கபடா, "கர்' என்று சொல்லுவார்கள். ஆக, மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்குக் குறைவில்லை என்றாலும் பெரும்பாலோருக்கு மனதில் நிறைவில்லை. ஒருசிலருக்கு நோய்த் தொல்லை. மருந்தாலும் குணமில்லை; மாந்திரீகத்தாலும் குணமில்லை. எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத அவஸ்தை. ஒருசிலருக்கு வயதுவந்த பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைத்து கடமைகளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கவலை. ஒருசிலருக்கு வேலைப்பளு, கடமை உணர்ச்சி, ஓய்வு ஒழிவில்லை. ஒருசிலருக்கு தன் தேவைகள் பூர்த்தியடைந்தாலும் எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் செயல்படும்போது கூடப்பிறந்தவர்களே ஐந்தாம் படையாக மாறி தொல்லை கொடுப்பார்கள். ஆக, இந்த ஏழரைச்சனி அவரவர் சக்திக்கேற்ற வகையில் ஒவ்வொரு சங்கடத்தைத் தருகிறது. சனி சாந்தி செய்து கொள்ளவும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம். 2020 வரை விரயச்சனி. பிறகு ஜென்மச்சனி இரண்டரை வருடம். பிறகு பாதச்சனி இரண்டரை வருடம். சனி ராசிநாதன் என்பதால் பாதிப்புக்கு இடமிலில்லை என்று சொன்னாலும் முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனியாக சோதனையும் வேதனையும் தருவது உறுதி. இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு சந்திர தசையோ, சந்திரபுக்தியோ, ராகு- கேது தசாபுக்தியோ நடந்தால் சிக்கல். மற்றவர்களுக்கு பொங்கு சனி. மூன்றாவது சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனி என்று சொன்னாலும் எம பயத்திற்கு இடமில்லை. கலைஞர், வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் 94 வயதுவரை வாழ்ந்தவர்கள். அவர்களெல்லாம் மூன்று சுற்று சனியையும் பார்த்தவர்கள். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வேதனையும் சோதனையும் விரட்டி விரட்டி வந்து துரத்தியடிக்கும். அல்லது நோய்த்தொல்லை, கடன் தொல்லை, போட்டி பொறாமை, எதிரித் தொல்லை இவற்றைச் சந்திக்க வேண்டும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் சிறு வைத்தியத்தால் குணமாகிவிடும். ஒருசிலருக்கு கவலையே நோய்க்கான காரணமாகிவிடும். கடமைகளை நிறைவேற்றவில்லை என்பதே கவலைதான்!
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் நின்று (ராசிக்கு- 9-ல்) உங்கள் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பது உங்கள் வகையில் பலிதமாகும். 7-ல் சூரியன் ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். உங்கள் கனவுகளும், திட்டங்களும் படிப்படியாக நாளுக்கு நாள் முன்னேற்றமடையும்; வளர்ச்சியடையும்; வெற்றியடையும். சில காரியங்களில் சில நேரம் வேகத்தடை காணப்பட்டாலும் பயணம் தடைப்படாது. உங்கள் விடாமுயற்சியாலும் வைராக்கியத்தாலும் சாதனை படைக்கலாம். அதேசமயம் 5-க்குடைய புதன் வார முற்பகுதியில் கடகத்தில் இருக்கும்வரை தேவையில்லாத குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படலாம். ஆனாலும் 28-ஆம் தேதி சிம்மத்திற்கு புதன் மாறுவார். அடுத்து வாரக்கடைசியில் கன்னியில் இருக்கும் சுக்கிரன் துலா ராசிக்கு மாறி ஆட்சி பெறுவார். அதன்பிறகு ஹைவேஸ் பைபாஸில் பயணம் போவதுமாதிரி தடையில்லாமல் பயணிக்கலாம். இதுவரை குடத்துக்குள் ஏற்றிவைத்த தீபமாக இருந்த உங்கள் வாழ்க்கை புதன், சுக்கிரன் பெயர்ச்சிக்குப் பிறகு குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம்போல பிரகாசிக்கலாம்! வெற்றிமேல் வெற்றி வந்துசேரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவது குற்றம்தான்! பல மீன ராசிக்காரர்களின் கனவுகளையும் திட்டங்களையும் தவிடுபொடியாக்கி தடுமாறச் செய்கிறது. "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்- அன்றி அது வரினும் வந்தெய்தும்- ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்- எனையாளும் ஈசன்செயல்' என்று ஒரு பாடல் உண்டு. அது அப்படியே இப்போது உங்களுக்கு நடக்கிறது. 8.00 மணிக்கு என்றால் 7.50-க்கே எல்லாம் ரெடியாகிவிடுவீர்கள். இது ஒரு காலம். ஆனால் இப்போது எட்டு மணி ஒன்பது மணியாகி அதுவும் மாறி 10.00 மணியாகும். அல்லது 11.00 மணிகூட ஆகும். குறிப்பாக பண வரவு- செலவில் கடும் சோதனைகளைச் சந்திப்பீர்கள். பையில் கையைவிட்டு கைக்கு வந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்காமல் செலவுசெய்த காலம்போய். இப்போது எண்ணி செலவு செய்வதற்கே பணத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை! கேட்காமலேயே பணம்வந்த காலம்போய் இப்போது எல்லாரிடமும் கைநீட்டி கௌரவப் பிச்சை எடுத்தும் கிடைக்காத நிலை! ஆனால் இந்த சோதனையெல்லாம் குருப்பெயர்ச்சி (4-10-2018) வரைதான். அதுவரை பொறுமையாக- நம்பிக்கையாகக் காத்திருங்கள். அதன்பிறகு நீங்கள் லட்சாதிபதியாக, கோடீஸ்வரராக காலம் உங்களை ஆசிர்வதிக்கும்.