ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
27-11-2018- கடகம்.
29-11-2018- சிம்மம்.
1-12-2018- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 2, 3, 4.
செவ்வாய்: சதயம்- 3, 4, பூரட்டாதி- 1.
புதன்: விசாகம்- 1, 2.
குரு: அனுஷம்- 3.
சுக்கிரன்: சித்திரை- 4, சுவாதி- 1.
சனி: மூலம்- 3.
ராகு: பூசம்- 1.
கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
குரு அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 11-ல் பலம் பெற்று 2-ஆம் இடம், 5-ஆம் இடம், 6-ஆம் இடங்களைப் பார்க்கிறார். மேஷம் சர ராசி; அதற்கு 11-ஆம் இடம் பாதக ஸ்தானமாயிற்றே- அங்கு செவ்வாய் இருக்கும்போது பலம்பெறு கிறார் என்று எழுதுகிறீர்களே என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆம் இடங்கள் பலமான இடங்கள். அதேபோல சனிக்கும் மேற்கண்ட இடங்கள் பலம் பொருந்திய இடங்கள். அதனிலும் மேலாக லக்னாதிபதியையும் ராசியாதிபதியையும் எந்தவொரு தோஷமும் அணுகாது; எந்த தோஷமும் பாதிக்காது. விதிவிலக்கு உண்டு. செவ்வாய் சனி வீட்டில் இருந்து, சனியால் செவ்வாய் பார்க்கப்படுவதும் ஒரு சிறப்பு. ஆகவே உங்கள் நலம், குடும்பத் திலுள்ளவர்களின் நலம், குழந்தை களின் நலம் எல்லாம் ஒரேசீராக அமையும். எல்லாம் நலமாக அமைவதால் எல்லாம் நன்மை யாகவே நடக்கும். முயற்சி களில் தளர்ச்சிவிலகி வளர்ச்சி உண்டாகும். மனக்கிளர்ச்சி மாறும். 10-ல் கேது இருப்பதால் சொந்தத்தொழில் செய்கிறவர்கள் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு தொழிலையும் கவனிக்க வேண்டும். வேலையாட்களையும் சிப்பந்தி களையும் கண்காணிக்க வேண்டும். கண்ணி மைக்கும் நேரத்தில் களவு போகலாம். அல்லது காணாமல் போகலாம். குறிப்பாக, யாரை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறீர்களோ அவர்களே நம்பிக்கைத் துரோகியாக மாறி உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷம் நீங்கும். பொதுவாக ராசியாதிபதிக்கும் லக்னாதிபதிக்கும் எந்த தோஷமும் இருக்காது. அதேமாதிரி ஆட்சி, உச்சம்பெறும் கிரகத்துக்கும் எந்த தோஷமும் இருக்காது. கையுறை அணிந்து கரன்டு கம்பியில் வேலை பார்ப்பதற்குச் சமம்! மேலும் 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் ஒரு பிளஸ் பாயின்டு. குரு நல்லவரோ கெட்டவரோ- குரு பார்க்க கோடி நன்மை! குரு, குருதான். அவர் மதிப்புக்குரியவர், வணக்கத்துக்குரியவர். அதனால் அட்டமச்சனியின் தாக்கம் குறையும். தவிரவும் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தை அட்டமத்துச்சனி கெடுக்காது. நல்லதே செய்வார். அதற்கு உதாரணம், பல வருடங்களுக்கு முன்பு கலைஞருக்கு அட்டமத்தில் சனி வந்தபோதுதான் மூன் றாண்டுக்காலம் முதல்வராக இருந்தார். அப்போது ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு பரிகாரத் திருமணம் செய்துகொள்ளும்படி கலைஞரிடம் சொல்லியதாகவும்- அதன்படி கலைஞர் ஒரு பரிகாரத் திருமணம் செய்து அந்தப் பெண்ணுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்து விலக்கிவிட்டதாகவும் ஒரு வதந்தி நிலவியது. இருந்தாலும் அட்டமத்துச் சனி விலகியதும் கலைஞருக்குப் பதவி போய்விட்டது. எனவே அட்டமஸ்தானம் கெட்ட இடம் என்றாலும், எல்லாருக்கும் அது ஒர்க்கவுட் ஆகாது. குறிப்பாக ரிஷபம், துலாம் ஆகிய ராசிக்கும் அல்லது லக்னத் துக்கும் சனி யோகாதிபதி என்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகமும் அதிர்ஷ்ட வாய்ப்பும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல், அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனோடு சம்பந்தம். 7, 10-க்குடைய சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க, 7-க்குடைய குரு 6-ல் மறைவதால் கணவன்- மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு மறையும். உறவில் பிரச்சினை இல்லை யென்றால் நோய், பீடை, வைத்தியச்செலவு என்று ஏற்பட
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
27-11-2018- கடகம்.
29-11-2018- சிம்மம்.
1-12-2018- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 2, 3, 4.
செவ்வாய்: சதயம்- 3, 4, பூரட்டாதி- 1.
புதன்: விசாகம்- 1, 2.
குரு: அனுஷம்- 3.
சுக்கிரன்: சித்திரை- 4, சுவாதி- 1.
சனி: மூலம்- 3.
ராகு: பூசம்- 1.
கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
குரு அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 11-ல் பலம் பெற்று 2-ஆம் இடம், 5-ஆம் இடம், 6-ஆம் இடங்களைப் பார்க்கிறார். மேஷம் சர ராசி; அதற்கு 11-ஆம் இடம் பாதக ஸ்தானமாயிற்றே- அங்கு செவ்வாய் இருக்கும்போது பலம்பெறு கிறார் என்று எழுதுகிறீர்களே என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆம் இடங்கள் பலமான இடங்கள். அதேபோல சனிக்கும் மேற்கண்ட இடங்கள் பலம் பொருந்திய இடங்கள். அதனிலும் மேலாக லக்னாதிபதியையும் ராசியாதிபதியையும் எந்தவொரு தோஷமும் அணுகாது; எந்த தோஷமும் பாதிக்காது. விதிவிலக்கு உண்டு. செவ்வாய் சனி வீட்டில் இருந்து, சனியால் செவ்வாய் பார்க்கப்படுவதும் ஒரு சிறப்பு. ஆகவே உங்கள் நலம், குடும்பத் திலுள்ளவர்களின் நலம், குழந்தை களின் நலம் எல்லாம் ஒரேசீராக அமையும். எல்லாம் நலமாக அமைவதால் எல்லாம் நன்மை யாகவே நடக்கும். முயற்சி களில் தளர்ச்சிவிலகி வளர்ச்சி உண்டாகும். மனக்கிளர்ச்சி மாறும். 10-ல் கேது இருப்பதால் சொந்தத்தொழில் செய்கிறவர்கள் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு தொழிலையும் கவனிக்க வேண்டும். வேலையாட்களையும் சிப்பந்தி களையும் கண்காணிக்க வேண்டும். கண்ணி மைக்கும் நேரத்தில் களவு போகலாம். அல்லது காணாமல் போகலாம். குறிப்பாக, யாரை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறீர்களோ அவர்களே நம்பிக்கைத் துரோகியாக மாறி உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷம் நீங்கும். பொதுவாக ராசியாதிபதிக்கும் லக்னாதிபதிக்கும் எந்த தோஷமும் இருக்காது. அதேமாதிரி ஆட்சி, உச்சம்பெறும் கிரகத்துக்கும் எந்த தோஷமும் இருக்காது. கையுறை அணிந்து கரன்டு கம்பியில் வேலை பார்ப்பதற்குச் சமம்! மேலும் 7-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் ஒரு பிளஸ் பாயின்டு. குரு நல்லவரோ கெட்டவரோ- குரு பார்க்க கோடி நன்மை! குரு, குருதான். அவர் மதிப்புக்குரியவர், வணக்கத்துக்குரியவர். அதனால் அட்டமச்சனியின் தாக்கம் குறையும். தவிரவும் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தை அட்டமத்துச்சனி கெடுக்காது. நல்லதே செய்வார். அதற்கு உதாரணம், பல வருடங்களுக்கு முன்பு கலைஞருக்கு அட்டமத்தில் சனி வந்தபோதுதான் மூன் றாண்டுக்காலம் முதல்வராக இருந்தார். அப்போது ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு பரிகாரத் திருமணம் செய்துகொள்ளும்படி கலைஞரிடம் சொல்லியதாகவும்- அதன்படி கலைஞர் ஒரு பரிகாரத் திருமணம் செய்து அந்தப் பெண்ணுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்து விலக்கிவிட்டதாகவும் ஒரு வதந்தி நிலவியது. இருந்தாலும் அட்டமத்துச் சனி விலகியதும் கலைஞருக்குப் பதவி போய்விட்டது. எனவே அட்டமஸ்தானம் கெட்ட இடம் என்றாலும், எல்லாருக்கும் அது ஒர்க்கவுட் ஆகாது. குறிப்பாக ரிஷபம், துலாம் ஆகிய ராசிக்கும் அல்லது லக்னத் துக்கும் சனி யோகாதிபதி என்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகமும் அதிர்ஷ்ட வாய்ப்பும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல், அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனோடு சம்பந்தம். 7, 10-க்குடைய சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க, 7-க்குடைய குரு 6-ல் மறைவதால் கணவன்- மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு மறையும். உறவில் பிரச்சினை இல்லை யென்றால் நோய், பீடை, வைத்தியச்செலவு என்று ஏற்பட்டு விலகும். அதுவும் ஏற்படா விட்டால் கணவன் வகை அல்லது மனைவி வகையில் வருத்தம், பகை, விவகாரம், பிரச்சினை ஏற்பட்டு சங்கடப்படுத்தும். எனவே குடும்பத்திலும் சரி அல்லது வெளியுலக நண்பர்கள் வகையிலும் சரி; நெருக்கமானவர்களிடத்திலும் சரி- கோபதாபங்களை விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போக முயற்சி செய்தால் விபரீத விளைவுகளைத் தடுக்கலாம். காரியம் பெரிதா? வீரியம் பெரிதா என்றால் காரியம்தான் பெரிது என்பதை கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். காரியமாக வேண்டுமென்றால் கழுதை யானாலும் காலைப்பிடிப்பதில் தவறில்லை என்பார்கள். 7-க்கு பத்துக்கதிபதியான சூரியன் 7-ல் குருவோடு கூடிநிற்பதாலும், 7-க்குடைய செவ்வாய் 7-க்கு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் மனைவியின் யோகத்துக்கு தொழில் ஆரம்பிக்கலாம் அல்லது மனைவிக்கு யோகமான உத்தி யோகம் அமையலாம். அல்லது மனைவி வகையில் வரவேண்டிய சொத்துசுகங்கள் வந்துசேரும்! 2-ஆம் இடத்து ராகு பொருளா தாரத்திலும் சரி; குடும்பச்சூழ்நிலையிலும் சரி- பிரச்சினைகளையும் குழப்பங்களையும் உருவாக்கலாம் என்றாலும், ராசியை 9-க்குடைய சனி பார்ப்பதாலும், ராசிநாதன் சுக்கிரனோடு 5-ல் சேர்ந்திருப்பதாலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு எதிர்பார்க்கலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியை 5-ல் உள்ள 9-க்குடைய குரு பார்ப்பதால், ஜென்ம ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்குகின்றன. அதாவது ஒரு திரிகோணாதிபதி (9-க்குடையவர்) மற்றொரு திரிகோணத்தில் (5-ல்) இருக்கிறார். அதனால் தெய்வானுகூலம் உண்டாகும். 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும், 2-ஆம் இடத்தைப் பார்ப்ப தால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாது. தொழில்வளம், குடும்ப நலம், பொருளாதார பலம் எல்லாம் திருப்தி கரமாக இருக்கும். தொழில்துறையில், உத்தியோகத்துறையில் சிலசமயம் பிரச்சினைகள் உருவானாலும் அவற்றை எளிதாக சமாளிக்கலாம். அதற்குக் காரணம் 9-க்குடைய குரு 9-ஆம் இடத்தையே பார்ப்பதுதான். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். இந்த காலகட்டத்தில் எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க ஒன்று படைபலம் வேண்டும். அல்லது பணபலம் வேண்டும். இந்த இரண்டும் இல்லாதவர்களுக்கு தெய்வபலம் வேண்டும். 10-க்குடைய செவ்வாய் எட்டில் மறைவ தாலும், செவ்வாய் சகோதரகாரகன் என்பதாலும் ஒருசிலரின் அனுபவத்தில் கூட்டுத்தொழில் அல்லது சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்குள், அண்ணன்- தம்பிக்குள் பிரச்சினை உருவாகும். "அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன்' என்றெல்லாம் வாக்குவாதங்கள் உண்டாகும். எல்லாம் வார்த்தையளவில்தான் வளருமே தவிர செயலளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்குக் காரணம் குரு பார்வைதான். வேலையில் டென்ஷன் இருந்தாலும் கடமையைத் தவறாமல் செய்வதால் அதுவே உங்களுக்குப் பரிகார கவசமாகும். லாபாதிபதி சுக்கிரனும், விரயாதிபதி புதனும் ஒன்றுசேர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் அல்லது வாகனம் அல்லது குடியிருப்பு வகையில் தவிர்க்கமுடியாத செலவுகள் ஏற்படலாம். அவை அத்தியாவசியமான செலவுகள்தான். அதனால் கவலைப்படத் தேவையில்லை. செலவுகள் ஏற்பட்டால் வரவுகளும் வரத்தான் செய்யும். இறைக்கிற கிணறுதான் ஊறும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் குருவோடு சேர்க்கை. குரு 5, 8-க்குடையவர். உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் முன்னேற்றமும் உண்டு. பின்னடைவும் இருக்கும். 5-ல் உள்ள சனி மனதில் ஏதோ ஒரு குழப்பத்தையும் சஞ்சலத்தையும் உருவாக்கும். அல்லது பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மனவருத்தம் ஏற்படலாம். அல்லது புத்திர தோஷம் உண்டாகலாம். 5-ஆம் இடம் மனது- புத்திர ஸ்தானமாகும். அதில் 6-க்குடைய சனி இருப்பதால் அந்த வகையில் திருப்தியில்லாத பலன்களை நடத்துவார். அதேசமயம் ஜனன ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்தால் சனியின் பாதிப்புகளுக்கு விதிவிலக்காகும்; பரிகாரமாகும். மேலும், சனி குரு வீட்டில் இருப்பதால் சனியின் பாதிப்பு கடுமையாக இருக்காது. தவறு செய்யும் பிள்ளையைக் கண்டிக்க தகப்பனார் அடித்துத் திருத்துவதைவிட, தாயின் கண்டிப்பும் தண்டனையும் பதமாகத்தானே இருக்கும் அல்லது இதமாகத்தானே இருக்கும். 6-ல் கேது, 12-ல் ராகு- பாவகிரகங்கள் பாவஸ்தானங்களில் இருப்பதால் எந்த சங்கடமும் உங்களை அணுகாது, நெருங்காது. 10-க்குடையவர் சுக்கிரன் 10-க்கு 6-ல் மறைவ தால் தொழில்துறையில் போட்டியும் பொறா மையும் அதிகமாக இருந்தாலும், சுக்கிரன் ஆட்சி பெறுவதால் அவற்றை எதிர்நீச்சல் போட்டு சமாளிக்கலாம். 2, 11-க்குடையவர் 10-க்குடையவரோடு இணைவதால் தனலாபம் பெறத் தடையிருக்காது. முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். மேலும் சிம்ம ராசிக்கு 9-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தை 4-ஆம் பார்வை பார்ப்ப தால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். எனவே குறையேதும் வராது.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 2-ல், 2-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம். சுக்கிரன் 9-க்குடையவர். புதன் 10-க்குடையவர். இருவரும் இணைவது தர்மகர்மாதிபதி யோகமாகும். தர்மகர்மாதிபதி யோகம் இருந்தால் போதும்; எல்லாக் காரியங்களும் எண்ணியவாறே அமையும். "வாயானை- மனத்தானை- மனத்துள் நின்ற கருத்தானை- கருத்தறிந்து முடிப்பான் தன்னை' என்று நால்வரில் ஒருவர் பாடினார். இப்படி நினைத்ததை நிறைவேறச்செய்வதுதான் தர்மகர்மாதிபதி யோகம்! ஒரு ஏழை விறகு வெட்டி குளக்கரையிலிருந்த மரமேறி மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, அவன் கோடரி கை தவறி குளத்துக்குள் விழுந்துவிட்டது. வாழ்வாதாரமாக இருந்த கோடரி போய்விட்டதே என்று கரைமேல் நின்று அழுதான். அப்போது ஒரு தேவதை தோன்றி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து, "இதுவா தொலைந்துபோன கோடரி?' என்று காட்டியது. "இல்லை' என்றான். அடுத்து ஒரு வெள்ளிக்கோடரியை "இதுவா' என்று காட்ட, "அதுவும் இல்லை' என்றான். கடைசியாக இரும்புக் கோடரியைக் காட்ட "இதுதான்' என்று வாங்கிக்கொண்டான். அவன் நேர்மையை கவனித்த அந்த தேவதை தங்கம், வெள்ளிக் கோடரியையும் கொடுத்துவிட்டது. இதையறிந்து பக்கத்து வீட்டுக்காரன் தன் இரும்புக்கோடரியை குளத்தில் போட்டுவிட்டு அழுதான். அதே தேவதை தங்கக்கோடரியைக் காட்டியதும் "அதுதான்' என்று கைநீட்ட "நீ பேராசையால் பொய் சொல்கிறாய்' என்று மறைந்துவிட்டது. பிழைப்புக்கு வைத்திருந்த இரும்புக்கோடரியும் போய்விட்டது. இதுதான் தர்மகர்மாதிபதி யோகம். ஒன்றை இழந்தால் அதற்கு பதிலாக உயர்வான வேறொன்று கிடைக்கும். அதற்கு நேர்மை வேண்டும். பேராசை கூடாது. இதைத்தான் வள்ளுவர் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்றார். திண்ணியர் என்பதற்கு வைராக் கியமும் வாய்மையும் என்று பொருள்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி! அவருடன் 9, 12-க்குடைய புதன் சேர்க்கை! பெரும் செல்வந்தர் அல்லது முக்கியமான பிரமுகரின் அறிமுகமும் தொடர்பும் கிடைப்பதால் உங்களுடைய கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். 10-ல் ராகு நிற்க அவரை 2-ல் உள்ள குரு பார்ப்பதால், புதிய தொழில் அமைப்புக்கு பிள்ளையார் சுழி போடப்படும். வேலைதேடி அலைவோருக்கு வெளிநாட்டு வேலை யோகம் அமையும். அதற்கு வி.ஐ.பி.யின் ஆதரவும் உதவியும் அமையும். அதுதான் யோகம் என்பது. எம்.ஜி.ஆர் அந்தக் காலத்தில் முதலமைச் சராகப் பதவியேற்ற சமயம்- மதுரையிலிலிருந்த ஒரு பிரபலமான ஜோதிடர் தன் மகளுக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கேட்டு ரிஜிஸ்டர் தபாலில் விண்ணப்பித்தார். உடனே அந்தப் பெண்ணுக்கு கவுன்சிலிலிங் வந்தது. சீட் கிடைத்து விட்டது. வெறும் தபால் செலவுதான். இதுதான் யோகம்! இதுமாதிரிதான் தர்மகர்மாதிபதி யோகமும். அதேபோல காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பூவராகவன் என்ற எம்.எல்.ஏவுக்கு மந்திரி பதவி கொடுக்க அவரை உடனடியாக வரும்படி தகவல் வந்தது. அவர் ரயில், பஸ் என்று எதிர்பார்க்காமல் லாரியில் ஏறிப்போய் முதல மைச்சரை சந்தித்தார். அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். எல்லா முதலமைச்சரும் போலீஸ் இலாகாவைத் தன் பொறுப்பில் தான் வைத்திருப்பார்கள். (சில அவசியக் காரணத்துக்காக.) ஆனால் காமராஜரோ போலீஸ் இலாகாவை மந்திரி கக்கனுக்குக் கொடுத்தார். அதுதான் காமராஜரின் பெருந் தன்மை! இன்றைய அரசியல் தலைவர்களில் அவரைப்போல யார் இருக்கிறார்கள்? காமராஜரோடு அரசியல் தூய்மை போய் விட்டது. காஞ்சி மகாபெரியவரோடு ஆன்மிக வாய்மை போய்விட்டது. இந்த நேரத்தில் அந்த இரு மகாபுருஷர்களையும் நினைவு கொள்ளத்தான் வேண்டும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் சனி வீட்டிலிலிருக்க, அவரை குரு வீட்டிலிருக்கும் சனி பார்க்கிறார். குரு செவ்வாய் வீட்டில் ஜென்ம ராசியில் இருக்கிறார். எனவே ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்தில் இருந்தாலும், இந்த ஏழரைச்சனி இப்போது உங்களுக்குப் பொங்குசனி யாக செயல்பட்டு பொலிலிவையும் பூரிப்பையும் தரும் என நம்பலாம். 9-ல் ராகு இருப்பது பூர்வீகச் சொத்து அல்லது தகப்பனாருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றாலும், பிதுர் காரகன் சூரியனோடு சேர்ந்த குரு 9-ஆம் இடத்தையும், ராகுவையும் பார்ப்பதால் தோஷம் விலகும். சிக்கலும் பிரச்சினையும் உங்களுக்கு அனுகூலமாக அமையும். அதாவது கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பதுபோல! அதேபோல குலதெய்வக் கோவில் வழிபாடும் ஈடுபாடும் பெருகும். ஆன்மிகப் பயணமும் சுற்றுலாவும் ஏற்படும். குலதெய்வமும் அதன் எல்லையும் எதுவென்றே தெரியாமல் இருப்போருக்கு இப்போது அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் வழிவகையும் ஏற்படும். பங்காளி களின் ஒற்றுமைக் குறைவால் பூட்டிக்கிடந்த கோவிலைத் திறந்து புனரமைத்து பூஜைசெய்யலாம். அதற்கு உங்கள் பங்கு பெரும்பங்காக அமையும். சிலர் ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு ஜோதிடம் பயிலலாம். சிலர் வைத்தியம், மாந்திரீகம், எண்கணிதம், வாஸ்து, அருள்வாக்கு சொல்வது போன்ற காரியங்களில் ஆர்வம், அக்கறை காட்டலாம். ஜாதகரீதியாக ராகு தசை அல்லது ராகு புக்தி நடந்தால் நல்ல குருநாதரை நாடலாம். நல்ல சீடனை குருநாதரே தேடிவந்து உபதே சிப்பார். மாணிக்கவாசகருக்கு திருப் பெருந்துறையில் (ஆவுடையார்கோவிலில்) சிவபெருமானே வந்து குருவாகி உபதேசம் செய்தார். சுந்தரரை சிவனே வந்து ஆட்கொண்டார்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்ம ஏழரைச்சனி நடக்கிறது. சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடந்தால் எல்லாவகையிலும் எதிர்நீச்சல் போடும்படி இருக்கும். மற்றவர்கள் பயப்படவேண்டாம். பிரச்சினைகளுக்கு இடமில்லை. ராசிநாதர் குரு 12-ல் இருந் தாலும், வீடுகொடுத்த செவ்வாய் சனி வீட்டில் அமர்ந்து சனியால் பார்க்கப்படுவது சிறப்பு. 10-க்குடைய புதனும், 11-க்குடைய சுக்கிரனும் 11-ல் சேர்க்கை. எனவே தொழில், வாழ்க்கை, பதவி, உத்தியோகம் எல்லாவற்றிலும் உங்களுக்கு எந்த சங்கடமும் இருக்காது; பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் எல்லா வகையிலும் எல்லாவற்றிலும் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். இதுகூட இல்லை யென்றால் ஏழரைச்சனிக்கு மதிப்பில்லையே! கொட்டினால்தான் தேள்- கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்று ஆகிவிடாதா? அதேசமயம் கடமை வீரர்களுக்கும், வைராக் கியம் உடையவர்களுக்கும், சாதனையாளர் களுக்கும், விசுவாசமானவர்களுக்கும் ஜென்மச்சனியும் பாதிக்காது; 2-ஆம் இடத்துக் கேதுவும் பாதிக்காது; 8-ஆம் இடத்து ராகுவும் பாதிக்காது. நல்லவர் களுக்கு எப்போதும் தெய்வம் துணையிருப்பதால், சனி, ராகு- கேது போன்ற கிரகங்களின் பாதிப்பு இருக்காது. ஞானசம்பந்தர் பாடியமாதிரி "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே!' பகவத் கீதையில் பரந் தாமன் கண்ணன் "கடமையைச் செய்- பலனை எதிர்பார்க்காதே' என்ற மாதிரி கடமையைச் செய்கிறவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம்; மயங்க வேண்டாம்; தயங்க வேண்டாம். தெய்வம் நம்பிக்கை துரோகிகளை மன்னிக் காது. நல்லவர்களுக்கு என்றும் துணை நிற்கும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறை கிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைகிறார். அவருடன் சூரியனும் சேர்க்கை. ஆனால் ராசிக்கு 11-ல் அமர்வு. எனவே ஜென்ம கேதுவும், சப்தம ராகுவும் சில பிரச்சினைகளை அவ்வப் போது உருவாக்கினாலும், 11-ஆம் இடத்து சூரியனும் குருவும் கழுவின மீனில் நழுவின மீனாக உங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். தப்பிக்க வழிபிறக்கும். பொருளாதாரத்தைப் பொருத்தவகையில் நெருக்கடி நிலையும், பணத் தட்டுப்பாடும் காணப்பட்டாலும் தேவைகள் பூர்த்தி யடையும், எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். அது இருந்தால் போதுமே- வேறென்ன வேண்டும்? "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை' என்றும், "யானையைக் கொண்டாங்க குதிரையைக் கொண்டாங்க ஊர்கோலம் போக' என்றும் பாடலாமே! இதுதான் 11-ஆம் இடத்து சூரியன் பலன்! அதுமட்டுமா? 9-க்குடைய புதனும், 10-க்குடைய சுக்கிரனும் 10-ல் சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எத்தனையோ ஆயிரக்கணக்கான யோகங்கள் இருந்தாலும், ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதி பதி யோகம் ஒன்று இருந்தால்போதும். மற்ற எல்லா யோகங்களையும் அது கூட்டணி வைத்துக்கொண்டு வந்துவிடும். "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை' என்பார்களே, அந்த அதிர்ஷ்டம் தானாக வந்துசேரும். அத்துடன் 5-க்குடைய சுக்கிரனும், 9-க்குடைய புதனும் சேர்வது இரு திரிகோணாதிபதிகள் இணைவது போன்று பெரும் யோகம்! அதிர்ஷ்டம்! அதனால் விரும்பியவை கிடைக்கும். ஏசுநாதர் சொன்னதுபோல "தட்டுங்கள் திறக் கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கப்பெறும்!'
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம். கும்ப ராசியில் 3, 10-க்குடைய செவ்வாய். 10-ல் 2, 11-க்குடைய குரு, 7-க்குடைய சூரியனுடன் சம்பந்தம். 2-க்குடைய குரு 2-ஆம் இடத்தையே பார்க்கிறார். பொருளா தாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவைக்கேற்ற நேரத்தில் தேவைகள் பூர்த்தியடையும். வரவேண்டிய பாக்கி சாக்கி வசூலாகும். அரசு வகையில் இருந்து வரவேண்டிய பணம் எல்லாம் வந்துசேரும். ராஜாங்க காரியங்களிலும் அனுகூலமான நிலையும் வெற்றியும் உண்டாகும். 6-ல் உள்ள ராகு எதிரி, போட்டி, பகை, கடன், நோய், வைத்தியச் செலவு போன்ற ஆறாமிடத்துப் பலன்களை எல்லாம் வேறோடு விலக்கி விரட்டியடிப்பார். அதேபோல 12-ஆம் இடத்துக் கேதுவும் வீண் விரயச் செலவு களை விலக்கிவிடுவார். விரயம் ஏற்பட்டாலும் பயனுள்ள, பலனுள்ள செலவுகள் என்றும், சுபச்செலவுகள் என்றும் குறிப்பிடலாம். சிலர் உல்லாசப்பயணம் போகலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா போகலாம். காசி, ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் என்று வடமாநிலப் பயணம் போய் வரலாம். இவையெல்லாம் சுபச்செல வாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். பந்த பாசத்துக்கு பங்கமில்லை. ஒட்டுறவுக்கும் பஞ்சமில்லை. கருத்து வேறுபாடு காணமாக, வெறுத்து விலகிப் போன உறவினர்கள் மனம் திருந்தி விரும்பி வரலாம். நீங்களும் பெருந்தன்மையாக மறப்போம்- மன்னிப்போம் என்று ஏற்றுக்கொள்ளலாம். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு ஒன்பதில் பலம்பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அவர் 10-க்குடையவர்; 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் உங்கள் விருப்பங்களும் எண்ணங்களும் முழுமையாக நிறைவேறும். ஒருசில காரியங்களில் உடனுக்குடன் முழுமையான பலனும் வெற்றியும் கிடைக்கும்! ஒருசில காரியங்களில் கொஞ்சம் தாமதமான பலன் கிடைக்கும். பொதுவாக தோல்விக்கும் ஏமாற்றத்துக்கும் இடமில்லை. உத்தி யோகத்தில் இருப்போருக்கு உன்னத மான பலன்களும் உயர்வான நிலையும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர் களுக்கு லாபமும் வெற்றியும் உண்டாகும். புதிய தொழில் முயற்சி வளர்ச்சியடையும்; முன்னேற்றமடையும். சிலருடைய அனுபவத்தில் புதிய கூட்டாளிகள் அமைவார்கள். கிளைகளை ஆரம்பித்து திறம்பட நடத்தலாம். சிலருக்கு உடன் பிறந்த கூட்டாளிகள் வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டு "வெட்டுவேன் குத்துவேன்' என்ற வசைகளையும், பழிச்சொல்லையும், பகைத்தன்மையையும் சந்திக்க நேரலாம். அவையெல்லாம் ஆத்திரத்தில் வரும் வார்த்தைகள் என்று பெரிதுபடுத்தாமல், பெருந்தன்மையாக நடந்துகொள்வது அவசியம். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவன் விட்டுக்கொடுப்பதில்லை. இப்பிறவியில் பிறந்துவிட்டோம். இனிவரும் பிறவியில் யார் யாரோ எங்கெங்கோ- யாருக்குத் தெரியும்? பாண்டவர்களும் கௌரவர்களுமாக இல்லாமல்- ராமர்- லட்சுமணனாக வாழ்வதால் என்ன நஷ்டம்? யாருக்கு என்ன இழப்பு?