இந்த வார ராசிபலன் 21-7-2019 முதல் 27-7-2019 வரை

/idhalgal/balajothidam/week-rasipalan-21-7-2019-27-7-2019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

21-7-2019- மீனம்.

24-7-2019- மேஷம்.

26-7-2019- ரிஷபம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூசம்- 1, 2, 3.

செவ்வாய்: ஆயில்யம்- 1, 2.

புதன்: திருவாதிரை- 4. பூனர்பூசம்- 1, 2.

குரு: கேட்டை- 2.

சுக்கிரன்: பூனர்பூசம்- 2, 3, 4. பூசம்- 1.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

குருவக்ரம்.

சுக்கிரன் அஸ்தமனம்.

24-7-2019 கடகச் சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார்; 8-ல் இருக்கும் குருவின் பார்வையைப் பெறுகிறார். எனவே நீசபங்க ராஜ யோகமாகிறது. 5-க்குடைய சூரியன் 4-ல் செவ்வாயுடன் கூடியிருக்கிறார். அரசு சம்பந்தமாக எதிர்பார்த்த காரி யங்கள் நிறைவேறும். சூரியன் சனியின் சாரத்தில் சஞ்சாரம். எனவே சற்று அலைந்து திரிந்துதான் முடிக்க வேண்டிவரும்; தடையாகாது. 3-க்கு டைய புதன் ஆட்சி. அவருக்கு சனி, கேது பார்வை. 3-ல் சுக்கிரன், ராகு. உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. இதுவரையுள்ள மனசங்கடங்கள் விலகி ஒற்றுமை உண்டாகும் என்றாலும், தாமரை இலை தண்ணீர்போல செயல்படும். 3-ஆம் இடம் காமஸ்தானம்- அங்கு காமகாரகன் புதன் ராகுவோடு சம்பந் தப்பட்டு, சனி, கேதுவின் பார்வை யைப் பெறுகிறார். புதன் ஆட்சி என்பதால்- ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் காமவெறியும் மோகவெறியும் அதிகமாகும். குரு பார்வை இல்லை. எனவே சிலர் முறையற்ற, தராதரமற்ற காதல் வயப்பட்டு, சஞ்சலமும் குழப்பமும் அடையலாம். அபகீர்த்திக்கும் இடமுண்டு. அதற்கு உதாரணம் விஸ்வா மித்திரர்தான். தவநிலையிலும் தடுமாறி மேனகையிடம் மோகம் கொண்டு சகுந்த லைக்குத் தந்தையானார். காமத்தை வென்றவன் யோகி! கோபத்தைக் கொன்றவன் ஞானி! இந்த இரண்டும்தான் மனிதனைக் கீழே தள்ளும் கருவிகள். மனக்கட்டுப்பாட்டால் அவற்றை மாற்றலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் ராகு, புதனுடன் சேர்க்கையாக இருக்கிறார். குருவின் புனர்பூசம் சாரத்திலும், பிறகு சனியின் பூசம் சாரத்திலும் சஞ்சாரம். புரட்டாசி 3-ஆம் தேதிவரை சுக்கிரன் அஸ்தமனம். ஒரு கிரகம் நீசமடையலாம். நீசபங்க ராஜயோகம் என்று விதிவிலக்குண்டு. 6, 8, 12-ல் மறையலாம். வீடுகொடுத்தவன் சம்பந்தம் இருந்தால், மறைவு தோஷம் விதிவிலக்காகும். ஆனால் அஸ்தமனமடைந்தால் தோஷம்தான். ஆக ராசி நாதன் அஸ்தமனமாவதாலும், அத்துடன் அட்டமத்துச்சனி நடப்பதாலும், எந்தக் காரி யத்தை எடுத்தாலும் இழுபறியாகவே இருக்கும். குடும்பத்தில் குழப்பம் உருவாகும். கணவன்- மனைவி உறவில் கசப்புணர்வுகள் மேலோங் கும். பாக்யராஜ் ஒரு படத்தில் மனைவியை வெளியிடங்களில் அழைத்துச்சென்று சினிமா, ஸ்டார் ஹோட்டல் என்று சந்தோஷப்படுத்தி, இரவில் பள்ளியறைக்குப் போகும்போது, அந்த நடிகை மூன்றுநாள் விடுமுறை என்று தனியாகப்போய் படுத்துக்கொள்வார் என்பது போல கதையமைத்திருப்பார். இதுபோன்ற அனுபவங்கள், ஆசைகளில் ஏமாற்றங்கள் சில ஆண்களுக்குக் கிட

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

21-7-2019- மீனம்.

24-7-2019- மேஷம்.

26-7-2019- ரிஷபம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூசம்- 1, 2, 3.

செவ்வாய்: ஆயில்யம்- 1, 2.

புதன்: திருவாதிரை- 4. பூனர்பூசம்- 1, 2.

குரு: கேட்டை- 2.

சுக்கிரன்: பூனர்பூசம்- 2, 3, 4. பூசம்- 1.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

குருவக்ரம்.

சுக்கிரன் அஸ்தமனம்.

24-7-2019 கடகச் சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார்; 8-ல் இருக்கும் குருவின் பார்வையைப் பெறுகிறார். எனவே நீசபங்க ராஜ யோகமாகிறது. 5-க்குடைய சூரியன் 4-ல் செவ்வாயுடன் கூடியிருக்கிறார். அரசு சம்பந்தமாக எதிர்பார்த்த காரி யங்கள் நிறைவேறும். சூரியன் சனியின் சாரத்தில் சஞ்சாரம். எனவே சற்று அலைந்து திரிந்துதான் முடிக்க வேண்டிவரும்; தடையாகாது. 3-க்கு டைய புதன் ஆட்சி. அவருக்கு சனி, கேது பார்வை. 3-ல் சுக்கிரன், ராகு. உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. இதுவரையுள்ள மனசங்கடங்கள் விலகி ஒற்றுமை உண்டாகும் என்றாலும், தாமரை இலை தண்ணீர்போல செயல்படும். 3-ஆம் இடம் காமஸ்தானம்- அங்கு காமகாரகன் புதன் ராகுவோடு சம்பந் தப்பட்டு, சனி, கேதுவின் பார்வை யைப் பெறுகிறார். புதன் ஆட்சி என்பதால்- ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் காமவெறியும் மோகவெறியும் அதிகமாகும். குரு பார்வை இல்லை. எனவே சிலர் முறையற்ற, தராதரமற்ற காதல் வயப்பட்டு, சஞ்சலமும் குழப்பமும் அடையலாம். அபகீர்த்திக்கும் இடமுண்டு. அதற்கு உதாரணம் விஸ்வா மித்திரர்தான். தவநிலையிலும் தடுமாறி மேனகையிடம் மோகம் கொண்டு சகுந்த லைக்குத் தந்தையானார். காமத்தை வென்றவன் யோகி! கோபத்தைக் கொன்றவன் ஞானி! இந்த இரண்டும்தான் மனிதனைக் கீழே தள்ளும் கருவிகள். மனக்கட்டுப்பாட்டால் அவற்றை மாற்றலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் ராகு, புதனுடன் சேர்க்கையாக இருக்கிறார். குருவின் புனர்பூசம் சாரத்திலும், பிறகு சனியின் பூசம் சாரத்திலும் சஞ்சாரம். புரட்டாசி 3-ஆம் தேதிவரை சுக்கிரன் அஸ்தமனம். ஒரு கிரகம் நீசமடையலாம். நீசபங்க ராஜயோகம் என்று விதிவிலக்குண்டு. 6, 8, 12-ல் மறையலாம். வீடுகொடுத்தவன் சம்பந்தம் இருந்தால், மறைவு தோஷம் விதிவிலக்காகும். ஆனால் அஸ்தமனமடைந்தால் தோஷம்தான். ஆக ராசி நாதன் அஸ்தமனமாவதாலும், அத்துடன் அட்டமத்துச்சனி நடப்பதாலும், எந்தக் காரி யத்தை எடுத்தாலும் இழுபறியாகவே இருக்கும். குடும்பத்தில் குழப்பம் உருவாகும். கணவன்- மனைவி உறவில் கசப்புணர்வுகள் மேலோங் கும். பாக்யராஜ் ஒரு படத்தில் மனைவியை வெளியிடங்களில் அழைத்துச்சென்று சினிமா, ஸ்டார் ஹோட்டல் என்று சந்தோஷப்படுத்தி, இரவில் பள்ளியறைக்குப் போகும்போது, அந்த நடிகை மூன்றுநாள் விடுமுறை என்று தனியாகப்போய் படுத்துக்கொள்வார் என்பது போல கதையமைத்திருப்பார். இதுபோன்ற அனுபவங்கள், ஆசைகளில் ஏமாற்றங்கள் சில ஆண்களுக்குக் கிடைக்கும். இவையெல்லாம் கிரகங்களின் விளையாட்டுதான். யார்மீதும் குற்றமில்லை. சிலசமயம் விரும்பினால் விலகிப் போகும்; விலகிப்போனால் விரும்பிவரும். விரும்பிவருவது வேண்டாததாகவும் இருக்கும்!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

mm

எந்த ஒரு ராசிக்கும் லக்னத்துக்கும் குரு சம்பந்தம் இருக்கவேண்டும். அதாவது குரு ராசி, லக்னத்தில் இருக்கலாம் அல்லது பார்க்கலாம் அல்லது கேந்திர, திரிகோணமாக இருக்கலாம். அப்படி அமைந்தால், அந்த ஜாதகர் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து எண்ணியதை திண்ணமாகச் செய்து முடிக்க லாம். அப்படி அமையாவிட்டால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. எடுத்து வைத் தாலும் கொடுத்து வைக்காது. இன்றைக்கு தொன்னூறு சதவிகிதம் இந்தமாதிரி ஏமாற்றத் தோடுதான் வாழ்க்கை ஓடுகிறது. தொன்னூற் றொன்பது சதவிகிதம் என்றுகூட சொல்ல லாம். ஆசைப்பட்டதை அடைவதற்கும் கொடுப்பினை வேண்டும். இதைத்தான் சொக்க நாத வெண்பாவில் புலவர் பாடியிருக்கிறார். "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்; அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்; எவரெவர்க் குதவினர் எவரெவர்க்குதவிலர்; தவறெவர் நினைவது தம்மை உணர்வதுவே!' சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதையே "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்' என்று பாடினார். திருவள்ளுவரும் "ஊழிற் பெருவ− யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்' என்றார். ஆகவே ராசி, லக்னம்- இதற்கு 5, 9-க்குடையவர்கள் சம்பந்தமும், குரு சம்பந்தம் இருந்தால் கொடுத்துவைத்தவர்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் சூரியனும் செவ்வாயும் சேர்க்கை. அங்கு நீச ராசியில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாயின் ராசியான மேஷத்தில் சூரியன் உச்சம் என்ப தால், செவ்வாயுடன் சூரியன் இருப்பதால் செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைகி றார். மேலும் 9-க்குடைய குரு 5-ல் நின்று செவ் வாயைப் பார்க்கிறார். செவ்வாய் 10-க்கு டையவர். அதனால் தர்மகர்மாதிபதி யோகமும் ஏற்படுகிறது. “உழைப்பால் உயரும் உத்தமர்’ என்று உங்களைப் போற்றலாம். கடந்துவந்த பாதையை மறக்காமல், மற்ற வர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளும் தன்மையுடையவர் என்றும் போற்றலாம். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவெடுக்கலாம். 10-க்குடையவர் செவ்வாய் நீசம் என்பதாலும், 12-க்குடைய புதன் சாரம் பெறுவதாலும், உண்மையாக வேலை பார்த்தாலும், எட்டு மணி நேரத்திற்கு பன்னி ரண்டு மணிநேரம் உழைத்தாலும் ஒழுங்காக சம்பளம் கிடைக்காது. என்றாலும் அந்த உழைப்பின் பயன் வீணாகாமல் வேறு ரூபத்தில் அடையலாம்; அனுபவிக்கலாம். சில ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு உண்மை அனுபவம்- ஒருவர் மகளுக்கு திருமணப் பொருத்தம் பார்க்க வந்தார். 50 ஜாதகம் கொண்டுவந்தார். அதில் 15 ஜாதகத்தை மட்டும் தேர்வுசெய்து பொருத்தம் இருப்ப தாகக் கொடுத்தேன். அவர் வெறும் 15 ரூபாயைப் பெருமையாக ஏற்றுக்கொள்ளவும் என்று கொடுத்துவிட்டார். அடுத்துவந்த ஒரு வெளிநாட்டவர் ஒரு ஜாதகம் மட்டும் பொருத்தம் பார்த்து இருநூறு ரூபாய் கொடுத்துச் சென்றார். உண்மையான உழைப் புக்கு என்றும் ஊதியம் உண்டு.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைவு. என்றாலும் சூரியனின் உச்ச ராசிநாதன் செவ்வாயோடு சேர்க்கை. சிம்ம ராசிக்கு திரிகோணாதிபதியான குருவின் பார்வை. எனவே மறைவு தோஷம் விலகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், 5-க்கு டைய திரிகோணாதிபதி குரு 4-ல் கேந்திரம் பெறுவதுதான். அவர் ராசிநாதனைப் பார்ப்ப தால் அதைவிட சிறப்பு. ஆகவே நீங்கள் வெகுளிபோல காட்சியளித்தாலும் மற்றவர் களை எடைபோடுவதில் சாமர்த்தியசா−லி. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பானவர்; பண்பானவர். எடுத்த காரியங் களை எல்லாம் தொடுத்து முடிக்கும் திறமை யாளர். எதையும் எதிர்கொள்ளும் மனவுறுதி பிறக்கும். மற்றவர்களை சார்ந் திருக்காமல், நீங்களே சொந்தமாக சிந்தித்து, சுயமாக முடிவெடுத்து எதையும் சாதிப்பீர்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் நண்பர் களாவார்கள். அவர்களால் ஆதாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். 10-க்குடைய சுக்கிரன் 11-ல் நிற்பதால் தொழில்துறையில் முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத லாபங்களும் வெற்றிகளும் அடையலாம். புதிய முயற்சிகளும் கைகூடும். 5-ல் உள்ள சனியும் கேதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், யாரிடமும் ஆலோசனை கேட்காமல் செயல்படவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி பெறுகிறார். அவருடன் 9-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். எனவே தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடந்தும். சுக்கிரன் 2, 9-க்குடை யவர். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் பெருகும். சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். எதிர் காலம் பற்றி திட்டங்களை வகுத்து முக்கிய மான முடிவுகளை எடுக்கலாம். குடும்பத்தில் எதிர்மறை வாதங்கள் இல்லாமல், உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். நீங்கள் சொல்வதைக் கடைப் பிடித்து, உங்களைப் பின்பற்றி வருவார்கள். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஒத்தாசை யும் அமையும். புதியவர்களின் அறிமுக மும் நட்பும் உங்களை உற்சாகப்படுத்தும். 6-க்குடையவர் 4-ல் இருந்தாலும், சுக்கிரன் சாரம் பெறுவதால் தாயாதிவகையிலும், பங்காளிவகையிலும் நிலவும் தொல்லைகள் விலகும். பகை நீங்கி உறவுகூடும். நீண்டநெடு நாட்களாக விட்டுவிலகியிருக்கும் சொந் தங்கள், தானாகவே வந்து ஒட்டிக்கொண்டு உறவு கொண்டாடும். வேலைதேடி அலை வோருக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளி நாட்டு யோகமும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் மந்தநிலை மாறி, உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறலாம். தொழிலை விரிவுபடுத்தலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம். தொடக்கத்தில் 3, 6-க்குடைய குருசாரம். (புனர்பூசம்). பிறகு துலா ராசியின் யோகாதிபதியான சனியின் சாரம். செப்டம்பர் 20-ஆம் தேதிவரை சுக்கிரன் அஸ்தமனம். ஆகவே வறுமை, தரித்திரம், வசதி வாய்ப்பின்மை, பஞ்சம், பசி, பட்டினி ஆகியவற்றுக்கு இடமில்லை. என்றாலும், எந்த ஒரு சிறு காரியத்தைக்கூட மிகமிக சிரமப்பட்டுத்தான் நிறைவேற்றவேண்டும். அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதைத் தேடமுடியும்? எதைப் பார்க்க முடியும்? ராசிநாதனே அஸ்தமனம் என்றால் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? எப்படி எதிர்காலத்தை சமாளிக்கப் போகிறீர்கள்? இது மலைப்பாகவும் இருக்கும்; மயக்கமாகவும் இருக்கும்; தயக்கமாகவும் இருக்கும். கவியரசர் எழுதியமாதிரி, "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா' என்று ஆரம்பித்து, அதை சமாளிக்கும் அறிவுரையையும் அந்தப் பாட−லில் தருவார். நண்பர்கள், உறவினர்கள் தேடிவந்து பழகுவார்கள். அதேபோல கௌரவப் பதவிகளும் உங்களைத் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை அமையும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம் என்றாலும், நீசபங்க ராஜ யோகமடைகிறார். நீசபங்க ராஜயோகத்திற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று, செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் உச்சமடையும் சூரியன் சம்பந்தம். இரண்டு, செவ்வாய்க்கு திரிகோணத்தில் இருக்கும் குருவின் பார்வை. செவ்வாய் நின்ற ராசி கடகம். அதற்கு 9, 10-க்குடைய குரு செவ்வாய் சம்பந்தம் என்பதால் தர்மகர்மாதிபதி யோகம். மனதில் எவ்வளவு துக்கம் குடியிருந்தாலும், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்தோடு செயல்படுவீர்கள். எதிரிக்கும் நல்லது செய்யும் உங்கள் நற்பண்பால் உங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. விருச்சிக ராசிக்கு 5-க்குடைய குரு ஜென்மத்தில் நின்று 5-ஆம் இடத்தையே பார்க்கிறார். தேன் தானும் கெடாது. தன்னோடு சேர்ந்த பொருளையும் கெடவிடாது. அதேபோல 5-க்குடைய குரு 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பிறவியில் கோபக்காரரான உங்களிடம் அன்பும் இரக்கமும் இருக்கும். கோபமிருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். மனிதரில் இரண்டுவிதம்- மற்றவரை அழவைத்து ரசிப்பது ஒருவகை. அழுத கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறுவது இன்னொரு வகை! இதில் நீங்கள் எந்தவகை...?

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அத்துடன் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று சொல்வதுபோல! வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளையும், மேடுபள்ளங்களையும் சந்தித்தாலும் குன்றென நின்று நிமிர்ந்து நிற்பீர்கள். மண்மேடு சரியலாம். மலைமேடு சரியாது. மதிப்பும் மரியாதையும், செல்வாக்கும் சிறப்பும் என்றும் குறையாது. ஜென்ம ராசியில் சனியும் கேதுவும். 7-ல் ராகு. இயற்கையில் நீங்கள் நல்லவராக இருந்தாலும், உங்களைச் சுற்றி உள்ளவர்கள் நல்லவர்கள் என்று சொல்லமுடியாது. ரோஜாவைச் சுற்றியுள்ள முட்களைப்போல உங்களுக்குப் பாதுகாப்பா அல்லது பழிவாங்கும் உணர்வுகளா என்பது புரியாத புதிராக இருக்கும். சனியும் கேதுவும் ராகுவும்- நீங்கள் ரோஜாவாக மணம் பெற்றாலும், அதைச்சுற்றி இருக்கும் முட்களைப்போல தொல்லைகளைக் கொடுக்கலாம். 5-க்குடைய செவ்வாயை குரு பார்ப்பதால், குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும் என்பதால், இடையூறுகள் எத்தனை இருந்தாலும் எண்ணியது ஈடேறும். விரும்பியதை அடையலாம். வேண்டுவதைப் பெறலாம். தேகசுகத்தில் கவனம் தேவைப்படும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு; கேதுவுடன் சம்பந்தம்; ராகு பார்வை. விரயச் சனி நடக்கிறது. விரயாதிபதி குரு 11-ல் வக்ரம். தொழில்துறையிலும், செய்முயற்சிகளிலும் லாபம் தெரிந்தாலும், அதை முழுமையாக அனுபவிக்கமுடியாது. ரியல் எஸ்டேட் அல்லது வீட்டு புரோக்கர்கள் ஒரு வியாபா ரத்தை முடிக்கும்போது தனிப்பட்ட ஒருவர் என்றால் லாபம் முழுவதும் கிடைக்கும். அதுவே பலபேருடைய கூட்டுமுயற்சி என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்பந்தம் இல்லாமலே பங்கு தரவேண்டியது ஏற்படும். அதுமாதிரிதான் உங்களுடைய நிலை. மழைக்காலத்தில் ஒருவர் மட்டும் குடையில் நனையாமல் போகலாம். இருவர் தலை நனையாமல் போகலாம்; உடைகள் மட்டும் நனையும். அதற்குமேல் என்றால் உடல், உடை எல்லாம் நனையும். அதுமாதிரிதான் கூட்டுக் குடும்ப நிலை. இதி−லிருந்து விடுபட்டு வெளி யேறவும் முடியாது; உள்ளே இருந்து திருப்தி யடையவும் முடியாது. இதுதான் சனி, ராகு- கேதுவின் பலன். இந்த நிலை என்று மாறும் என விவசாயி மழையை எதிர்பார்த்து வானைப் பார்ப்பதுபோல சனிப்பெயர்ச்சிவரை காத் திருக்க வேண்டும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு 10-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஆயுள், ஆரோக்கியம், மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவற்றுக்குக் குறைவில்லை. வாக்கு, தனம், குடும்பம், பொருளாதாரத்திலும் குறைவில்லை. சனி கேது- ராகு சம்பந்தப் படுவதாலும், குரு வக்ரம் என்பதாலும், பயணத்தின்போது ஆங்காங்கே வேகத் தடைகளை மெதுவாகக் கடந்துசெல்லும் நிலைபோல, உங்கள் காரியங்களும் செயல் களும் திட்டங்களும் தேங்கித்தேங்கிப் போகும் நிலையாக இருக்கும். சிலசமயம் உங்கள்மீதே உங்களுக்கு நம்பிக்கை தளரும். வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றபிறகு சரியாகப் பூட்டி னோமா, பூட்டவில்லையா என்று சந்தேகப் பட்டு மீண்டும் வந்து இழுத்துப் பார்க்கும் நிலைபோல, உங்கள் செயல்களும் காரியங் களும் பின்னடைவாக- தேக்கமாக இருக்கும். சிலருக்குக் கடன் தொல்லைகள் அதிகமாகவும், சிலருக்கு நோய்த்தொல்லை அதிகமாகவும், சிலருக்கு சத்ரு தொல்லை அதிகமாகவும் காணப்படலாம். என்றாலும் 6-ஆமிடத்தை குரு பார்ப்பதால் நம்பிக்கையோடும் மனவுறுதியோடும் அவற்றை சமாளிக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சூரியன், சுக்கிரன், கேது நற்பலன் தருவார்கள். இதமாகப்பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்துமூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். விலகிய உறவினரும் விரும்பி வந்து சொந்தம் பாராட்டுவார்கள். மனைவியின் கருத்துகளை ஏற்று வளர்ச்சி காணலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பைப் பெறுவர். வியாபாரத்தில் இடையூறு விலகும். லாபம் அதிகமாகும். பூமி, வீடு, மனை சம்பந்தமாக சிற்சிறு தொல்லைகள் வந்து விலகும். பெண்களுக்குத் தாயார்வகையில் நன்மைகள் உண்டாகும். சொத்துசுகம் கிடைக்கும். குரு பார்வையால் திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றலாம். உறவினர், நண்பர்கள்வகையில் நிலவும் நெருடல்கள் எல்லாம்விலகி நிம்மதி உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை ஏற்படும். பாராட்டுகள் கிடைக் கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலை காணப்படும். குடும்பத்தில் கணவன்- மனை விக்குள் அன்யோன்யம் அதிகமாகும்.

bala260719
இதையும் படியுங்கள்
Subscribe