ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
27-1-2019 முதல் 2-2-2019 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
27-1-2019- துலாம்.
29-1-2019- விருச்சிகம்.
31-1-2019- தனுசு.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 4, அஸ்வினி- 1.
புதன்: திருவோணம்- 4, அவிட்டம்- 1, 2, 3.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: கேட்டை- 3, 4, மூலம்- 1, 2.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 4.
கேது: உத்திராடம்- 2.
கிரக மாற்றம்:
28-1-2019- புதன் உதயம்.
30-1-2019- தனுசு சுக்கிரன்.
1-2-2019- மேஷச் செவ்வாய்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் விரயஸ்தானத்தில் (12-ல்) இருக்கிறார். பிப்ரவரி 11-ஆம் தேதி ஜென்ம ராசியான மேஷத்தில் ஆட்சியாக மாறுகிறார். அதுவரை 12-ல் செவ்வாய் மறைந் தாலும், குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதால் செலவுகள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ள செலவு, சுபச் செலவு என ஆறுதல் அடையலாம். ஒருசிலரின் அனுபவத்தில் தவிர்க்கமுடியாதபடி சொந்தம், சுற்றம், பங்காளி வகையிலும், மிகமிக நெருங்கிய வட்டாரத்திலும், பழகிய நண்பர்கள் வகையிலும் செய்முறைச் செலவுகளும், உதவிபுரியும் வகையில் செலவுகளும் உண்டாகலாம். கடமைக்காக செலவு செய்வது ஒன்று, பெருமைக்காக செலவு செய்வது என்பது இன்னொன்று. இந்த இரண்டுமே உங்கள் வாழ்க்கையில் இடம்பெறும் அமைப்பு ராசியில் உண்டு! அதாவது ஜனன ஜாதகத்தில் 2-ஆம் இடத்தில் அல்லது ராசியில் ராகு- கேது சம்பந்தமும், சனி சம்பந்தமும் இருந்தால், பெருமைக்காக செலவு செய்யும் குணமும்; குரு, ராசிநாதன் அல்லது லக்னநாதன் சம்பந்தம் இருந்தால் கடமைக்காக செய்யும் தன்மையும் உண்டாகும். 4-ஆம் இடத்து ராகுவும், 10-ஆம் இடத்துக் கேதுவும் ஒருசிலருக்கு தொழில் அல்லது வாழ்க்கை அல்லது ஆரோக்கியத்தில் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தோற்றுவிக்கும். சிலருக்கு வாகனம், தாய்வழியிலும், பூமி, மனை, வீடு வகையிலும் அவசிய மான செலவுகளை உண்டாக்கலாம். ஒருசிலருக்கு கணவன் வழியில் அல்லது மனைவிவழியில் கௌரவப் போராட்டங் களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். குடும்பத்தில் மனைவி மக்கள் வகையில், ஏட்டிக்குப் போட்டியான எதிர்மறை வாக்குவாதங்களும், அதனால் முடிவுக்கு வரமுடியாத குழப் பங்களும் உருவாகலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கண் இருந்தும் குருடராய், காது இருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய், மௌனமாகவும் அமைதி யாகவும் நடந்துகொண்டால், விபரீத விளைவுகளைச் சந்திக் காமல், விவகாரங்களைச் சந்திக்காமல் தப்பிக்கலாம். வியாழக்கிழமைத்தோறும் குரு பகவான் அல்லது சீரடி சாய்பாபாவை வழிபட்டால் பிரச்சினைகள் விலகிப்போகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து, குருவோடு சேர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், அட்டமச்சனியின் தாக்குதல் உங்களை அணுகாமல் தப்பிக்கலாம். எந்தப் பிரச் சினையானாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றலையும், துணிவையும் 3-ஆம் இடத்து ராகு தருவார். அவருக்கு உறுதுணையாக நின்று 11-ஆம் இடத்து செவ்வாய் உங்களுக்கு வெற்றியையும் உண்டாக்குவார். 9-ஆம் இடத்துக்குரிய சனி 8-ல் மறை வதால், ஒருசிலருக்கு தகப் பனார் அல்லது பூர்வீகச் சொத்து வகையில் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்தி சாதகமாக அமைந்தால், அந்தத் தொல்லைகள் அன்புத்தொல்லைகளாக மாறலாம். பாதகமாக அமைந் தால் அதுவே வம்புத் தொல் லையாக மாறக்கூடும். எந்தத் தொல்லையாக அமைந் தாலும், அதை பந்தத் தொல் லையாக பாவித்து ஒதுக்கி விடலாம். அட்டமத்துச்சனி சொந்தம், சுற்றம், நட்பு ரூபத்திலும் தாக்கலாம். விரோதி ரூபத்திலும் விரட்டலாம். அதை நீங்களும் துரத்தியடிக்க ராசிநாதனும், சுக்கிரனும் உதவலாம். அட்டமத்துச்சனி ரிஷப ராசி - ரிஷப லக்னத்துக்கும், துலா ராசி- துலா லக்னத்துக்கும் யோகச்சனியாக மாறி சுக யோக போகங்களைச் செய்யக்கூடும். சேர்ந்துவாழும் தம்பதிகளைப் பிரிந்துவாழச் செய்யும். பிரிந்து தவிக்கும் தம்பதிகளை இணைந்து வாழவைக்கும்! இது என்ன குழப்பமான பலன் என்று நினைக்காதீர்கள். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் என்று குடும்பத்தில் இருந்து சிலரை இடமாற்றம் செய்து பிரிக்கலாம். ஏற்கெனவே பிரிந்துவாழும் தம்பதிகளை இணைந்துவாழச் செய்யலாம். அரசுவேலையில் உள்ள கணவன்- மனைவியை ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் செய்து சேர்த்துவைக்கும்! கெடுதலிலும் நல்லது நடக்கும். சனி எப்போதும் கெடுதலையே செய்வார் என்று நினைக் கக்கூடாது. சனி நல்லதும் செய்யக்கூடும். அதனால்தான் அவருக
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
27-1-2019 முதல் 2-2-2019 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
27-1-2019- துலாம்.
29-1-2019- விருச்சிகம்.
31-1-2019- தனுசு.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 4, அஸ்வினி- 1.
புதன்: திருவோணம்- 4, அவிட்டம்- 1, 2, 3.
குரு: கேட்டை- 3.
சுக்கிரன்: கேட்டை- 3, 4, மூலம்- 1, 2.
சனி: பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 4.
கேது: உத்திராடம்- 2.
கிரக மாற்றம்:
28-1-2019- புதன் உதயம்.
30-1-2019- தனுசு சுக்கிரன்.
1-2-2019- மேஷச் செவ்வாய்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் விரயஸ்தானத்தில் (12-ல்) இருக்கிறார். பிப்ரவரி 11-ஆம் தேதி ஜென்ம ராசியான மேஷத்தில் ஆட்சியாக மாறுகிறார். அதுவரை 12-ல் செவ்வாய் மறைந் தாலும், குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதால் செலவுகள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ள செலவு, சுபச் செலவு என ஆறுதல் அடையலாம். ஒருசிலரின் அனுபவத்தில் தவிர்க்கமுடியாதபடி சொந்தம், சுற்றம், பங்காளி வகையிலும், மிகமிக நெருங்கிய வட்டாரத்திலும், பழகிய நண்பர்கள் வகையிலும் செய்முறைச் செலவுகளும், உதவிபுரியும் வகையில் செலவுகளும் உண்டாகலாம். கடமைக்காக செலவு செய்வது ஒன்று, பெருமைக்காக செலவு செய்வது என்பது இன்னொன்று. இந்த இரண்டுமே உங்கள் வாழ்க்கையில் இடம்பெறும் அமைப்பு ராசியில் உண்டு! அதாவது ஜனன ஜாதகத்தில் 2-ஆம் இடத்தில் அல்லது ராசியில் ராகு- கேது சம்பந்தமும், சனி சம்பந்தமும் இருந்தால், பெருமைக்காக செலவு செய்யும் குணமும்; குரு, ராசிநாதன் அல்லது லக்னநாதன் சம்பந்தம் இருந்தால் கடமைக்காக செய்யும் தன்மையும் உண்டாகும். 4-ஆம் இடத்து ராகுவும், 10-ஆம் இடத்துக் கேதுவும் ஒருசிலருக்கு தொழில் அல்லது வாழ்க்கை அல்லது ஆரோக்கியத்தில் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தோற்றுவிக்கும். சிலருக்கு வாகனம், தாய்வழியிலும், பூமி, மனை, வீடு வகையிலும் அவசிய மான செலவுகளை உண்டாக்கலாம். ஒருசிலருக்கு கணவன் வழியில் அல்லது மனைவிவழியில் கௌரவப் போராட்டங் களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். குடும்பத்தில் மனைவி மக்கள் வகையில், ஏட்டிக்குப் போட்டியான எதிர்மறை வாக்குவாதங்களும், அதனால் முடிவுக்கு வரமுடியாத குழப் பங்களும் உருவாகலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கண் இருந்தும் குருடராய், காது இருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய், மௌனமாகவும் அமைதி யாகவும் நடந்துகொண்டால், விபரீத விளைவுகளைச் சந்திக் காமல், விவகாரங்களைச் சந்திக்காமல் தப்பிக்கலாம். வியாழக்கிழமைத்தோறும் குரு பகவான் அல்லது சீரடி சாய்பாபாவை வழிபட்டால் பிரச்சினைகள் விலகிப்போகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து, குருவோடு சேர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், அட்டமச்சனியின் தாக்குதல் உங்களை அணுகாமல் தப்பிக்கலாம். எந்தப் பிரச் சினையானாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றலையும், துணிவையும் 3-ஆம் இடத்து ராகு தருவார். அவருக்கு உறுதுணையாக நின்று 11-ஆம் இடத்து செவ்வாய் உங்களுக்கு வெற்றியையும் உண்டாக்குவார். 9-ஆம் இடத்துக்குரிய சனி 8-ல் மறை வதால், ஒருசிலருக்கு தகப் பனார் அல்லது பூர்வீகச் சொத்து வகையில் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்தி சாதகமாக அமைந்தால், அந்தத் தொல்லைகள் அன்புத்தொல்லைகளாக மாறலாம். பாதகமாக அமைந் தால் அதுவே வம்புத் தொல் லையாக மாறக்கூடும். எந்தத் தொல்லையாக அமைந் தாலும், அதை பந்தத் தொல் லையாக பாவித்து ஒதுக்கி விடலாம். அட்டமத்துச்சனி சொந்தம், சுற்றம், நட்பு ரூபத்திலும் தாக்கலாம். விரோதி ரூபத்திலும் விரட்டலாம். அதை நீங்களும் துரத்தியடிக்க ராசிநாதனும், சுக்கிரனும் உதவலாம். அட்டமத்துச்சனி ரிஷப ராசி - ரிஷப லக்னத்துக்கும், துலா ராசி- துலா லக்னத்துக்கும் யோகச்சனியாக மாறி சுக யோக போகங்களைச் செய்யக்கூடும். சேர்ந்துவாழும் தம்பதிகளைப் பிரிந்துவாழச் செய்யும். பிரிந்து தவிக்கும் தம்பதிகளை இணைந்து வாழவைக்கும்! இது என்ன குழப்பமான பலன் என்று நினைக்காதீர்கள். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் என்று குடும்பத்தில் இருந்து சிலரை இடமாற்றம் செய்து பிரிக்கலாம். ஏற்கெனவே பிரிந்துவாழும் தம்பதிகளை இணைந்துவாழச் செய்யலாம். அரசுவேலையில் உள்ள கணவன்- மனைவியை ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் செய்து சேர்த்துவைக்கும்! கெடுதலிலும் நல்லது நடக்கும். சனி எப்போதும் கெடுதலையே செய்வார் என்று நினைக் கக்கூடாது. சனி நல்லதும் செய்யக்கூடும். அதனால்தான் அவருக்கு பொங்குசனி என்றும், மங்குசனி என்றும் ஒரு பேர் உண்டு! நெல்லிக்காய்க்கு துவர்ப்புச் சுவையும் உண்டு. இனிப்புச் சுவையும் உண்டல்லவா! கொடிய விஷத்தால் ஆளைக்கொல்லும் பாம்பை நல்ல பாம்பு என்று சொல்லிலுவதில்லையா? ஆக நல்லதும் கெட்டதும் ஒரே இடத்தில்தான் உள்ளது! தீபம் ஏற்றும் ஒரு தீக்குச்சிதான் ஒரு குடிசையை தீக்கிரையாக்குகிறது! இந்தக் குணம் நவகிரங்களுக்கும் உண்டு. "ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை, என்பார்கள். அதேபோல சனி பகவானுக்கும் மங்குசனி என்றும், பொங்குசனி என்றும், பலன்தரும் தன்மை உண்டு. சனி இனியவராக- கனிவான பலன்தர சனிக்கிழமைதோறும் அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து, அந்த எண்ணிக்கை அளவு மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய் தீபமேற்றவும். சனியின் குருநாதர் பைரவர்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைந்தாலும், ராசிக்கு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு, அவருக்கு பன்னிரண்டிலும், ராசிக்கு ஆறிலும் மறைவு. தொடக்கத்தில் 2-க்குடைய சந்திரன் சாரத்தில் இருக்கும் புதன், பிறகு 6, 11-க்குடைய செவ்வாயின் சாரத்திலும் (அவிட்டம்) சஞ்சாரம். எனவே நல்லதும் கெட்டதும் கலந்த ஒரு பலனை, இந்த வாரக் கோட்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு அன்பளிப்பாகத் தரும். 2-ஆம் இடத்து ராகு குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கலாம். 8-ல் உள்ள கேது, சூரியன், புதன் கௌரவப் போராட்டங்களை உருவாக்கலாம். 8-ஆம் இடம் என்பது விபத்து, ஏமாற்றம், தடை, தாமதம், இழப்பு போன்ற துர்ப்பலன்களைத் தரும். 1, 4-க்குடைய புதனும், 3-க்குடைய சூரியனும் கேதுவோடு கூடுவதால், மேற்கண்ட கெடுபலன்களைச் சந்திக்கும் நிலை! 3-ஆம் இடம் சகோதர ஸ்தானம், நட்பு ஸ்தானம். அதனால் சகோதர வகையிலும் (உடன்பிறப் புகள்), நண்பர்கள் வகையிலும், உறவினர்கள் வகையிலும் தவிர்க்கமுடியாத செலவுகளையும், விரயங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உண்டாகும். சிலர் நம்பிக்கைத் துரோகம் அல்லது ஏமாற்றங்களையும் சந்திக்கலாம். போட்டி, பொறாமை, பகை குணம் கொண்டோர் முகத்துக்கு நேராக இனிமையாகவும், முதுகுக்குப் பின்னால் கடுமையாகவும் நடந்துகொள்ளலாம். அப்படிப் பட்டவர்களை அடையாளம்கண்டு அவர்களை விலக்கவேண்டும். அல்லது அவர்களைவிட்டு நீங்கள் ஒதுங்கவேண்டும். "நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா?' என்ற ஆராயச்சியைவிட மேலே பாய்ந்து கடிக்காமல் போனால் நல்லது என்று எடுத்துக்கொள்ளவேண்டும். "வாழும் வீட்டில் வன்குரங்கு நுழைந்தமாதிரி' உங்கள் வாழ்விலும், குடும்பத்திலும் உறவினர்கள் சகுனிபோல நுழைந்து சதிசெய்யலாம். அதனால் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால், தொழில் முன்னேற்றத்துக்காக சிலர் கடன் வாங்கலாம். சிலர் வீடு கட்டுவதற்காகவும் அல்லது கார், டூவீலர் வாங்குவதற்காகவும் கடன் வாங்கலாம். சிலர் வியாபார நோக்கத்தோடு டிராவல்ஸ் ஆரம்பிக்க கடன் வாங்கலாம். சிலர் டாக்ஸி, மினிவேன், லாரி, விவசாய டிரக் போன்றவை வாங்குவதற்காக அதற்காக கடன் வாங்கலாம். திருச்சேறை கடன் நிவர்த்தி ஸ்தலம். அங்குள்ள ரிணவிமோசனருக்கு 11 திங்கள்கிழமை தொடர் அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யலாம். கடன் தொல்லையும், சுமையும் குறையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகு நின்றாலும், 5-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பது பலம். அவருடன் சுக்கிரனும் திரிகோணமாக இருப்பதும் பலம்! அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் எப்போதும், எந்தக் குறையும் வராது. "பாட படிக்க பரத வியம் கற்க தேட சுகிக்க செலவழிக்க கற்கடக மல்லாது மற்கிடமேது' என்று ஒரு ஜோதிடப் பாடல் உண்டு. அதன்படி கடக ராசிக்காரர் களுக்கும், கடக லக்னத்தாருக்கும் லௌகீகத் தேவைகள் எல்லாம் எப்படியோ நிறைவேறும். அதிலும் பாக்கியாதிபதி குரு 5-ல் திரிகோணம் பெற்று 9-ஆம் இடத்தையும், ராசியையும் பார்ப்பதால், குருவருளும் திருவருளும் பரி பூரணமாக உருவாகி, உங்களை வழிநடத்தும்! அதேசமயம் ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் உங்களை அறியாமலேயே, உங்களுக்குள் ஒரு ஈகோ உணர்வையும் உருவாக்கலாம்! அதை நீங்கள் தன்னம்பிக்கை, தன்மானம் என்று சொன்னாலும், மற்றவர்களுக்கு மாறுபாடாக, வித்தியாசமாகத் தோன்றலாம். அதனால் உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம்! ஒருவரை மாடு என்று சொல்லு வதும், பசு என்று சொல்லுவதும் ஒன்று என்றாலும், வித்தியாசம் உண்டல்லவா! 6-ல் உள்ள சனி கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ரு நிவர்த்தி ஆகிய பலன்களைச் செய்யும். அதேசமயம் மனைவி, பிள்ளைகள் வகையில் ஆத்திரப்படாமல், அரவணைத்துச் செல்லப் பழகிக்கொள்வது அவசியம்! உறவினர்கள் வகையிலும், உடன்பிறப்புகள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் அனுசரித்து நடக்கப் பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம். சிலர் வீட்டுக்குள் அனுசரிப்பாக செயல்படுவார்கள். சிலர் வெளிவட்டாரத்தில் அனுசரிப்பாக செயல்படலாம். சிலர் வீட்டுக்கு நல்லவ ராகவும், வெளியில் கெட்டவராகவும், சிலர் வீட்டாருக்குக் கெட்டவராகவும், வெளி யாருக்கு நல்லவராகவும் இருப்பார்கள். அப்படியில்லாமல், இருவகையிலும் நல்ல வராக வாழ்வதே நல்லது. அதைத்தான் "ஊரோடு ஒத்து ஒழுகல்' என்றார்கள். 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம் ஆகும். அதனால் முதலிலில் எழுதியபடி, குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களை வழிநடத்துவதால், நீங்கள் நினைத்தது நிறைவேறும். கருதியது கைகூடும். விரும்பியதும் வேண்டுவதும் கிடைக்கும்! அதைத்தான் "வாயானை மனத் தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத் தறிந்து முடிப்பான் தன்னை' என்று பெரி யோர்கள் இறைவனை வாழ்த்தினார்கள். சிலருக்கு தொழில்துறையில் புதிய வாய்ப்பு களும், புதிய திட்டங்களும் நிறைவேறும். அதேபோல படிக்கும் மாணவ- மாணவி யர்கள் பள்ளி மாற்றம், படிப்பு மாற்றம், மேற் படிப்பு யோகங்களை அடையலாம். வேலையில் இருப்போருக்கு பணி மாற்றம், பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடுவது யோகம் தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி, ராசிக்கு 5-ல் திரிகோணம்; சூரியனுக்கு 12-ல். குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானம் என்பதால், தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, வேலை செய்யும் இடத்தில் திருப்தி, விரும்பிய இடப்பெயர்ச்சி, வாழ்க்கையில் நிறைவு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். அத்துடன் சுபக்கடன் உருவாகும். நல்ல காரியங்களுக்காக கடன் வாங்கலாம். அதுதான் சுபக்கடன் எனப்படும். 2, 11-க்குடைய புதனும் 6-ல் மறைவு. 11-ஆம் இடத்துக்கு 8-லும், 2-ஆம் இடத்துக்கு 5-லும் இருப்பதால், வரவேண்டிய லாபத்தில் பங்கு குறையலாம். வில்லங்கம், விவகாரம் இவற்றிலெல்லாம் வெற்றி கிடைக்கலாம். பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. குடும்பத்தில் அமைதி, ஆனந்தத்துக்கு இடமுண்டு. வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். அனுபவசாலிகளின் ஆலோசனையும், அறிவுரையும் உங்களை வழிநடத்தும். முக்கியமானவர்களின் உதவி கிடைக்கும். அதனால் உங்கள் திட்டங்களும், காரியங்களும் வெற்றியாகும். தொழில், வியாபாரம், பதவி ஆகியவற்றில் தளர்ச்சிகள் நீங்கி வளர்ச்சிகள் உண்டாகும். 4-ஆமிடத்துச் செவ்வாயும், 8-ஆம் இடத்து குருவும் பரிவர்த்தனை என்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் பழையதைக் கொடுத்துப் புதியதை வாங்கவும் அல்லது பரிவர்த்தனை செய்யவும் யோகம் உண்டு. கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிநாதன் புதன் திருவோணத்தில் இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் 11-க்குடைய சந்திரன் சாரத்திலும், பிறகு 3, 8-க்குடைய செவ்வாய் சாரத்திலும் (அவிட்டம்) சஞ்சாரம். செவ்வாய் 8-க்குடையவராக இருந்தாலும், ராசிக்கு 7-ல் நின்று குருவால் பார்க்கப்படுவதால், சிந்தனையிலும் செயலிலிலும் புதிய மாற்றங் களும், திட்டங்களும் உருவாகும். திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். நடக்காது, முடியாது என்று சொன்ன காரியங்கள் எல்லாம் எளிதாக ஈடேறும். நண்பர்களும், உறவினர்களும் துணையாக இருப்பார்கள். அதைக் காட்டிலும் ஆர்வம், அக்கறை, விடாமுயற்சியோடு செயல்படுவீர்கள். அதனால் வெற்றி நிச்சயித்த வெற்றியாக எளிதாகும். எண்ணங்களும் நிறைவேறும். பழைய நண்பர்களை நீண்டகால இடை வெளிக்குப் பின் சந்திப்பீர்கள். இளமைக்கால நினைவுகளை சிந்திப்பீர்கள். பொறாமை யாளர்களின் விமர்சனங்களைப் பொருட் படுத்த வேண்டாம். இந்தக் காலத்தில் சொந்த மாக எதையும் சாதிக்க முடியாதவர்கள், கட்டிய வீட்டிற்கு எட்டு வக்கணை சொல்லு வார்கள். தலைவலிலிக்கு மருந்து கேட்டால் பத்துபேர் பத்துவிதமான வைத்தியம் சொல்லு வார்கள். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், அடுத்தவர்கள் ஆலோசனை உங்களை திசைமாறி. தடுமாற வைக்கும். ஆகவே, எண்ணித்துணிக கருமம் என்ற வள்ளுவர் குறளுக்கேற்றபடி உங்கள் சொந்த புத்தியுடனும், சொந்த சிந்தனையோடும் செயல்படவேண்டும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக்கிறார். 3, 6-க்குடைய குரு சம்பந்தம். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்து ராசியைப் பார்க்கிறார். குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை. அதனால் 6-ஆமிடத்து தோஷம் இருவருக்கும் இல்லை. 6-ல் உள்ள செவ்வாயின் பலன்- சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, பகை நிவர்த்தி ஆகிய பலனாகும். 2-ல் உள்ள குருவும் சுக்கிரனும் காரணமாக எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களில் தீவிர அக்கறை காட்டுவீர்கள். தொழில்துறையிலும், வியாபாரத்திலும் நல்ல மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பதால், தடையில் லாத வெற்றிகளையும், முன்னேற்றங்களையும் சந்திக்கலாம். சொல்லுவதையே செய்வீர்கள், செய்வதைத்தான் சொல்லுவீர்கள். 10-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் கேதுவும் தொழில், வாழ்க்கை, பதவி, உத்தியோகத்தில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், அதேபோல தேக ஆரோக்கியத்தில் பிரச்சினை களை உருவாக்கினாலும், ராகுவை குரு பார்ப்பதாலும், கேதுவுக்கு வீடு கொடுத்த சனி குரு வீட்டில் இருப்பதாலும் பாதிப்புகள் இல்லாமல் சமாளிக்கலாம். 6-ஆமிடத்துச் செவ்வாய் காரணமாக பகைமை குணம் கொண்டவர்கள் அல்லது பொறாமை குணம் கொண்டவர்கள் உங்களை விமர்சனம் செய்யலாம். அதைப் பெருந்தன்மையோடு சகித்துக்கொண்டு, "துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்ற அடிப்படையில் செயல்படவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய், மீன ராசியில் குரு வீட்டிலும், குரு, செவ்வாயின் வீடான விருச்சிகத்திலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த்தனைக்கு சொந்த வீட்டில் ஆட்சியாக இருப்பதற்கு சமமான பலன் எனப்படும். மேலும் ராசி நாதன் செவ்வாயை ஜென்ம குரு பார்ப்பதும் சிறப்பான பலன். மனதில் வகுத்த திட்டங்கள் மனம் விரும்பியபடி நிறைவேறும். உங்கள் தனித்திறமைகள் சிறப்பாகவும், தெளிவாக வும் வெளிப்படும். குடத்துக்குள் இருக்கும் தீபம் இப்போது குன்றின்மேல் ஏற்றிய தீபமாகப் பளிச்சிடும். கற்றோரும் மற்றோரும் உங்களைப் போற்றிப் புகழும் காலம். திருமண மாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு யோகம் உண்டாகும். ஏழரைச்சனியின் காரணமாக கடந்த காலத்தில் பிரிந்துவாழ்ந்த தம்பதிகள், இனி இணைந்து வாழும் அமைப்பு உண்டாகும். 10-க்குடைய சூரியன், 7-க்கு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால், மனைவியின் பேரில் சில புதிய தொழில்களைத் தொடங்கலாம். அல்லது படித்துப் பட்டம் பெற்று, வேலைக்காகத் தேடியலையும் மனைவிமார் அல்லது கணவன்மார்களுக்கு, அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். அரசு வேலை அல்லது தனியார் வேலை அமை வதற்கு வாய்ப்பு உண்டு. ஏழரைச்சனி நடப் பதால் ஒருசிலர் வெளிநாடு செல்லலாம். வேலைக்காகவும், வியாபாரத்துக்காகவும் வெளிநாடு போகலாம். தொழில்துறையிலும், வியாபாரத்துறையிலும் நல்ல வளர்ச்சியும், நல்ல லாபமும் உண்டாகும். அதேபோல அரசுப்பணியில் இருப்பவர்களுக்கும் திருப்திகரமான பதவி உயர்வு, ஊதிய உயர்வு, மனநிறைவு உண்டாகும். ஜென்மத்தில் குருவும் சுக்கிரனும் இருப்பதால் பொதுநல சிந்தனை யோடு செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களிலும், குலதெய்வ வழிபாடு களிலும், குலதெய்வத் திருப்பணி காரியங் களிலும் ஈடுபடுத்துவார்கள். மற்றவர்களின் பாராட்டுக்கும், மதிப்பும் மரியாதைக்கும் இடமுண்டாகும். தேக ஆரோக்கியம் தெளி வாகக் காணப்படும். உடன்பிறந்தவர்களால் நன்மைகளும் அனுகூலமும் உண்டாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. 6, 11-க்குடைய சுக்கிரன் சாரத்தில் சனி இருக் கிறார். சுக்கிரன் 12-ல் இருந்தாலும், ராசிநாதன் குருவோடு சம்பந்தம். எனவே, இந்த ஏழரைச் சனி எந்தச் சுற்றாக இருந்தாலும்- அதாவது முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றாக இருந்தாலும், எல்லாருக்கும் பொங்கு சனியாகப் பொலிவைத் தரும். பூரிப் பான பலனைத் தரும். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும், வேலை, தொழில், உத்தி யோகத்திலும் உங்கள் அணுகுமுறை அற்புத மாக அமையும். அதனால் மதிப்பும், மரியா தையும் பெருகும். பாராட்டு குவியும். 4-ல் செவ்வாயும், அவருக்கு வீடு கொடுத்த குரு 12-ல் செவ்வாய் வீட்டிலும் இருப்பதால் (செவ்வாய்- சனி பரிவர்த்தனை) மனை, வீடு, வாகனம் போன்ற வகையில் சுபச்செலவுகள் உருவாகும். வாகனப் பரிவர்த்தனையும் செய்யலாம். அதற்கான வங்கிக்கடனும் வாங்கலாம். வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒத்தி வீட்டுக்குக் குடிபோகலாம். ஒத்தி வீட்டில் இருப்போர் சொந்த வீடு வாங்கலாம். அதற்குக் கடனும் கிடைக்கும். மாதாமாதம் எளிய தவணை (இ.எம்.ஐ) செலுத்தலாம். அதற்குரிய வாய்ப்பு, வருமானம், சூழ்நிலைகளும் அமையும். 2-ஆமிடத்துக் கேதுவும், 8-ஆமிடத்து ராகுவும் நல்லவரையும் தவறாகக் கருதும் எண்ணத்தை ஏற்படுத்தும். அவசர ஆராய்ச்சியாக யாரையும் தவறாகக் கருதாமல், நிதானமாக சிந்தித்து செயல்படுவது அவசியம். நல்லோர் நட்பு நெல்லிக்கனிபோல முதலில் துவர்க்கும்; பின்பு இனிக்கும். 7, 10-க்குடைய புதனோடு, 9-க்குடைய சூரியன் சேருவது தர்மகர்மாதிபதி யோகமாகும். எதிர்பாராத யோகங்களும், அதிர்ஷ்டங்களும் உங்களைத் தேடிவரும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் நிற்க, அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 12-ல் நிற்க, 6-க்குடைய புதனும், 8-க்குடைய சூரியனும் ஜென்மத்தில் நிற்பதால், பேச்சு, செயலில் நிதானம் தேவை. எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாதபடி குழப்பநிலை காணப்படும். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் புறக்கணிக்காமல், "சிறு துரும்பும் பல்குத்த உதவும்' என்ற பழமொழிப்படி செயல்படுவது நல்லது. உங்களுடைய எண்ணங்களும், திட்டங்களும் சரியானதாக அமைந்தாலும், அதை முறையாக செயல்படுத்த முடியாமல் போவதால், சிலசமயம் தோல்விகளையும் சந்திக்கநேரும். எங்கே தவறு இருக்கிறது என்று தெரிந்து, தெளிவுபடுத்தி, தெளிந்து செயல்பட்டால் தவறுகள் திருத்தப்படும். தோல்விகள் விரட்டப்படும். வெற்றிகள் தழுவப்படும். குறிப்பாக குடும்பத்தார், உற்றார், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் வகையில் யாரையும் புறக்கணிக்காமல், அவர்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால், எளிதாக வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கலாம். எதிர்பாராத நண்பர்களின் உதவியும், ஒத்தாசையும் சரியான தருணத்தில் உங்களைக் காப்பாற்றும்; வழிநடத்தும். "தோழரோடும் ஏழமை பேசேல்' என்பது பழமொழி. எனவே பழகியவர்களிடமோ அறிமுகம் இல்லாதவர்களிடமோ உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம். இதுதான் வாழ்க்கையின் ரகசியம். வெற்றிக்கு வழிகாட்டி. கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு 10-ல் நின்று 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தில் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை. மேலும் 2, 10-க்குடைய குருவும் செவ்வாயும் பரிவர்த் தனையாக இருக்கிறார்கள். தொழில்துறையில் தொய்வுகள் இல்லாத தொடர் வெற்றிகளைச் சந்திக்கலாம். வேலை பார்க்கும் இடத்தில் வேட்கைகள் நிறைவேறி, வெகுமதிகள் பெறலாம். மகிழ்ச்சியான சிந்தனைகளும், மட்டில்லாத திட்டங்களும் மனதை உற்சாகப்படுத்தும். நிறைவு ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் சொல்லுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம்பெறு வீர்கள். உங்கள் அனுபவ ஞானமும், அறிவுத்திறனும் அதற்குப் பக்கபலமாக அமையும். தாராளமான பணவரவும், செல்வநிலையும், சேமிப்பு நிலையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகள் எல்லாம் திட்டமிட்டபடி, தெள்ளத்தெளிவாக நிறைவேறுவதால், வாக்குநாணயம் காப்பாற்றப்படும். எதிர்கால நலனைக் கருதிய ஆக்கப்பூர்வமான வழிமுறைகளையும் வகுக்கலாம். வங்கி, இன்ஸ்யூரன்ஸ் வகைகளில் சேமிப்புத் திட்டங்களையும் செயல்படுத்தலாம். சிலர் சீட்டுகளில் முதலீடு செய்யலாம். ஏமாற்றமில்லாத சிட்பண்டுகளின் தொடர்பு உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஜென்ம ராசியில் இருக்கிறார். 1, 9-க்குடையவர்களுடைய பரிவர்த்தனை யோகம். ராசிநாதன் குரு 10-க்கும் உடையவராகி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே ஆன்மிகச் சுற்றுலா, ஆலய வழிபாடு, சுபமங்கள நிகழ்ச்சிகள், தெய்வ கைங்கரியங்கள், பூஜை வழிபாடுகள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பேரும் பெருமையும் அடையலாம். பாராட்டுகளைக் குவிக்கலாம். 3, 8-க்குடைய சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுவதால், சுக்கிரனுக்கு அட்டமாதிபத்திய தோஷம் விலகிவிடுகிறது. 10-ல் உள்ள சனி உங்கள் கடமைகளையும், காரியங்களையும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தவிடாமல், இடையூறுகளையும் தடைகளையும் உருவாக்கினாலும், குரு- செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தால், கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் கனகச்சிதமாக நிறைவேற்றும் யோகமும் உண்டாகும். அது குருவருளும் திருவருளும் தரும் வெகுமதியாகும். 10-ல் உள்ள சனி 4-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும் பார்ப்பதால், ஒருசிலருக்கு தன் சுகம் அல்லது வாழ்க்கைத்துணையின் சுகம் இவற்றில் ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கி, செலவுகளை ஏற்படுத்தலாம். என்றாலும், தர்மகர்மாதிபதி யோகத்தால் மலைபோல வரும் பிரச்சினைகள் பனிபோல விலகிவிடும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால், வடு தெரியாமல் காயமும் மறைந்துவிடும். தொழில்துறையில் சிலர் தீவிர அக்கறை செலுத்தி, மாற்றுத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தலாம். அதில் வெற்றியும் காணலாம்.