4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
14-10-2018- தனுசு.
16-10-2018- மகரம்.
19-10-2018- கும்பம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 1, 2, 3.
செவ்வாய்: அவிட்டம்- 1.
புதன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2, 3.
குரு: விசாகம்- 4.
சுக்கிரன்: விசாகம்- 1, சுவாதி- 4.
சனி: மூலம்- 2.
ராகு: பூசம்- 1.
கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
சுக்கிரன் வக்ரம்
. 18-10-2018- துலா சூரியன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராசிநாதனோ லக்னநாதனோ எந்த இடத்தில் இருந் தாலும் அல்லது எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடத்தின் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். ராசியைப் பார்ப்பதால் திறமை, பெருமை, செல்வாக்கு, கீர்த்தி, செயல்வேகம், மதிப்பு, மரியாதை இவற்றுக்குக் குறைவில்லை. 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தேக ஆரோக்கியம் தெளிவாக அமையும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான உங்கள் கனவுத் திட்டங்கள் நிறைவேறும். தாய்க்கு சௌக்கியமும், தாயன்பும், பாசமும் பெருகும். 4-ல் ராகு இருந்தாலும் அவரை பாக்யாதிபதி குருவும் பார்ப்பது விசேஷம். எனவே ராகு தோஷம் நிவர்த்தியாகிறது. குரு பார்க்க கோடிதோஷம் விலகும்; கோடி நன்மை உண்டாகும் என்பது ஜோதிடவிதி! 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் குரு 8-ல் மறைந்த தோஷமும் விலகும். விரயாதிபதி விரயத்தைப் பார்ப்பதால் சுப விரயச்செலவுகள் ஏற்படலாம். 5-க்குடைய சூரியன் 6-ல் மறைவது ஒருவகையில் குற்றம் என்றாலும், சூரியன் ராசிநாதன் சாரத்தில் (சித்திரையில்) இருப்பதாலும், 5-ஆம் இடத்தை செவ்வாய் (ராசிநாதன்) பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். நன்மைகள் உண்டாகும். அல்லவை விலகும். தொல்லைகள் அகலும். 6-க்குடைய புதன் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும், 7-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறுவதால் எல்லா பிரச்சினைகளும் நீங்கிவிடும். உடல்நலமும் மனநலமும் சீராகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமும் ஆதரவும் பெருகும். நண்பர்களால் நல்லுதவியும் மேன்மையும் ஏற்படும். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்ற குறளுக்குப் பொருத்தமாக நல்ல நண்பர்களை சந்திக்கலாம்; நன்மை களை சிந்திக்கலாம். 8-ல் உள்ள பாக்யாதிபதி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் தேடிவந்து அணைக்கும். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றிபெறலாம். பரிசுகள் வாங்கலாம். பாராட்டுகள் அடையலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம்பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், ஆட்சி பலம் அடைவதால் மறைவு தோஷமில்லை. ஒருவழிப் பாதையில் (நோ என்ட்ரி) ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவற்றுக்கு விதிவிலக்கு இருப்பதுபோல ராசிநாதன், லக்னநாதனுக்கு விதிவிலக்கு உண்டு! மேலும் சுக்கிரன் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். 5-க்குடைய புதன் சேர்க்கை. எனவே போட்டி, பொறாமை, கடன், எதிரி, நோய் நொடி, வைத்தியச்செலவு போன்ற ஆறாம் இடத்துப் பலன்களையெல்லாம் வேறாக்கி விலக்கி விடலாம். மேலும் 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தான மாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம். 2-ஆம் இடத்துக்கு பஞ்சம ஸ்தானம் என்பதால் தொழில் விருத்தியும், தொழில் மேன்மையும், தனலாபமும் உண்டாகும். வாக்கு, தனம், குடும்பம் இவற்றில் நன்மைகள் உண்டாகும். ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி நடந்தாலும், அது எத்தனையாவது சுற்றாக இருந்தாலும் பொங்குசனியாகப் பொலிலிவைத் தரும். ரிஷப ராசிக்கும், துலா ராசிக்கும் சனி ராஜயோகாதிபதி என்பதால், சனி 8-ல் இருந்தாலும் அனுகூலமான பலன்களே நடக் கும்! அட்டமத்துச்சனி பொங்கு சனியாக நல்லது செய்யும். 30 வருடங்களுக்கு முன்பு கலைஞர் முதல்வராகப் பொறுப்பு ஏற்றது அட்டமத்துச் சனியில்தான்! அட்டமத்துச்சனி விலகியதும் அவர் பதவியும் விலகிவிட்டது. ஜெயலலிதா அந்த இடத்துக்கு வந்தார். கலைஞர் ரிஷப ராசி தான்! சுக்கிரன் ஆட்சி என்பதால் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். இல்லறம் இனிமையாகும். மனைவியின் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்று வீர்கள். கடந்தகாலத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவாழ்ந்த தம்பதிகளும் இனி இணைந்து வாழத்தொடங்கலாம். வாரிசு இல்லாதவர்கள் வாரிசு யோகம் அடையலாம். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களுக்கும் நல்ல மண வாழ்க்கை அமையும். 7-ல் வந்துள்ள குரு தனிமை வாழ்வை விரட்டி இனிமை வாழ்வை வழங்குவார். தொழில்துறையிலும் உத்தியோகத்திலும் உயர்வான பலன்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுவதோடு, 5-க்குடைய யோகாதிபதியான சுக்கிரனோடும் சம்பந்தம். அதனால் 2-ஆம் இடத்து ராகு, 8-ஆம் இடத்துக் கேது, 6-ஆம் இடத்து குரு, 7-ஆம் இடத்து சனி ஆகிய நான்கு கிரக தோஷமும் பலமிழக்கிறது. 9-க்குடைய சனி 9-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், 10-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் பலம் ஏற்படுகிறது. 6-க்குடைய செவ்வாய் 8-ல் மறை வதும் ஒருவகையில் பலம்தான். மனநலம், உடல்நலம் இரண்டும் வளம்பெறுகிறது. 4-ல் உள்ள சூரியன் தேக ஆரோக்கியத்தை வளப் படுத்துவதோடு, தாய்வழி உறவில் மேன்மை யையும் பாசத்தையும் பெருமையையும் தருவார். அதேபோல பூமிகாரகன் உச்சம். வாகனகாரகன் சுக்கிரன், 4-க்குடைய புதன் திரிகோணம் என்ப தால் பூமி, வீடு, வாகன வகையிலும் நற் பலன்கள்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
14-10-2018- தனுசு.
16-10-2018- மகரம்.
19-10-2018- கும்பம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 1, 2, 3.
செவ்வாய்: அவிட்டம்- 1.
புதன்: சுவாதி- 4, விசாகம்- 1, 2, 3.
குரு: விசாகம்- 4.
சுக்கிரன்: விசாகம்- 1, சுவாதி- 4.
சனி: மூலம்- 2.
ராகு: பூசம்- 1.
கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
சுக்கிரன் வக்ரம்
. 18-10-2018- துலா சூரியன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராசிநாதனோ லக்னநாதனோ எந்த இடத்தில் இருந் தாலும் அல்லது எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடத்தின் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். ராசியைப் பார்ப்பதால் திறமை, பெருமை, செல்வாக்கு, கீர்த்தி, செயல்வேகம், மதிப்பு, மரியாதை இவற்றுக்குக் குறைவில்லை. 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தேக ஆரோக்கியம் தெளிவாக அமையும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான உங்கள் கனவுத் திட்டங்கள் நிறைவேறும். தாய்க்கு சௌக்கியமும், தாயன்பும், பாசமும் பெருகும். 4-ல் ராகு இருந்தாலும் அவரை பாக்யாதிபதி குருவும் பார்ப்பது விசேஷம். எனவே ராகு தோஷம் நிவர்த்தியாகிறது. குரு பார்க்க கோடிதோஷம் விலகும்; கோடி நன்மை உண்டாகும் என்பது ஜோதிடவிதி! 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் குரு 8-ல் மறைந்த தோஷமும் விலகும். விரயாதிபதி விரயத்தைப் பார்ப்பதால் சுப விரயச்செலவுகள் ஏற்படலாம். 5-க்குடைய சூரியன் 6-ல் மறைவது ஒருவகையில் குற்றம் என்றாலும், சூரியன் ராசிநாதன் சாரத்தில் (சித்திரையில்) இருப்பதாலும், 5-ஆம் இடத்தை செவ்வாய் (ராசிநாதன்) பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். நன்மைகள் உண்டாகும். அல்லவை விலகும். தொல்லைகள் அகலும். 6-க்குடைய புதன் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும், 7-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறுவதால் எல்லா பிரச்சினைகளும் நீங்கிவிடும். உடல்நலமும் மனநலமும் சீராகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமும் ஆதரவும் பெருகும். நண்பர்களால் நல்லுதவியும் மேன்மையும் ஏற்படும். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்ற குறளுக்குப் பொருத்தமாக நல்ல நண்பர்களை சந்திக்கலாம்; நன்மை களை சிந்திக்கலாம். 8-ல் உள்ள பாக்யாதிபதி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் தேடிவந்து அணைக்கும். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றிபெறலாம். பரிசுகள் வாங்கலாம். பாராட்டுகள் அடையலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம்பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், ஆட்சி பலம் அடைவதால் மறைவு தோஷமில்லை. ஒருவழிப் பாதையில் (நோ என்ட்ரி) ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவற்றுக்கு விதிவிலக்கு இருப்பதுபோல ராசிநாதன், லக்னநாதனுக்கு விதிவிலக்கு உண்டு! மேலும் சுக்கிரன் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். 5-க்குடைய புதன் சேர்க்கை. எனவே போட்டி, பொறாமை, கடன், எதிரி, நோய் நொடி, வைத்தியச்செலவு போன்ற ஆறாம் இடத்துப் பலன்களையெல்லாம் வேறாக்கி விலக்கி விடலாம். மேலும் 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தான மாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம். 2-ஆம் இடத்துக்கு பஞ்சம ஸ்தானம் என்பதால் தொழில் விருத்தியும், தொழில் மேன்மையும், தனலாபமும் உண்டாகும். வாக்கு, தனம், குடும்பம் இவற்றில் நன்மைகள் உண்டாகும். ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி நடந்தாலும், அது எத்தனையாவது சுற்றாக இருந்தாலும் பொங்குசனியாகப் பொலிலிவைத் தரும். ரிஷப ராசிக்கும், துலா ராசிக்கும் சனி ராஜயோகாதிபதி என்பதால், சனி 8-ல் இருந்தாலும் அனுகூலமான பலன்களே நடக் கும்! அட்டமத்துச்சனி பொங்கு சனியாக நல்லது செய்யும். 30 வருடங்களுக்கு முன்பு கலைஞர் முதல்வராகப் பொறுப்பு ஏற்றது அட்டமத்துச் சனியில்தான்! அட்டமத்துச்சனி விலகியதும் அவர் பதவியும் விலகிவிட்டது. ஜெயலலிதா அந்த இடத்துக்கு வந்தார். கலைஞர் ரிஷப ராசி தான்! சுக்கிரன் ஆட்சி என்பதால் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். இல்லறம் இனிமையாகும். மனைவியின் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்று வீர்கள். கடந்தகாலத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவாழ்ந்த தம்பதிகளும் இனி இணைந்து வாழத்தொடங்கலாம். வாரிசு இல்லாதவர்கள் வாரிசு யோகம் அடையலாம். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களுக்கும் நல்ல மண வாழ்க்கை அமையும். 7-ல் வந்துள்ள குரு தனிமை வாழ்வை விரட்டி இனிமை வாழ்வை வழங்குவார். தொழில்துறையிலும் உத்தியோகத்திலும் உயர்வான பலன்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுவதோடு, 5-க்குடைய யோகாதிபதியான சுக்கிரனோடும் சம்பந்தம். அதனால் 2-ஆம் இடத்து ராகு, 8-ஆம் இடத்துக் கேது, 6-ஆம் இடத்து குரு, 7-ஆம் இடத்து சனி ஆகிய நான்கு கிரக தோஷமும் பலமிழக்கிறது. 9-க்குடைய சனி 9-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், 10-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் பலம் ஏற்படுகிறது. 6-க்குடைய செவ்வாய் 8-ல் மறை வதும் ஒருவகையில் பலம்தான். மனநலம், உடல்நலம் இரண்டும் வளம்பெறுகிறது. 4-ல் உள்ள சூரியன் தேக ஆரோக்கியத்தை வளப் படுத்துவதோடு, தாய்வழி உறவில் மேன்மை யையும் பாசத்தையும் பெருமையையும் தருவார். அதேபோல பூமிகாரகன் உச்சம். வாகனகாரகன் சுக்கிரன், 4-க்குடைய புதன் திரிகோணம் என்ப தால் பூமி, வீடு, வாகன வகையிலும் நற் பலன்கள் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் சொந்த வீடு, சொந்த வாகனம் (டூவீலர், ஃபோர்வீலர்), சொந்த மனை போன்ற யோகங்களும் அமைந்துவிடும்! பணம் இருப்பு இல்லாவிட்டாலும், குறைவாக இருந்தாலும் கடன் கிடைக்கும். அதற்குக் காரணம் 6-க்குடைய செவ்வாய் உச்சமான பலன் தான்! கடன் வாங்கினாலும் அதை சுபக்கடனாக ஏற்றுக்கொள்ளலாம். வரவேண்டிய பாக்சிசாக் கிகள், பெருந்தொகையெல்லாம் எளிதாக வந்துசேரும். அதைவைத்து மனைவியை திருப்திப் படுத்தி, அவர்கள் ஆசைகளையும் விருப்பங் களையும் பூர்த்திசெய்து ஆடை, ஆபரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். சிலருக்கு மனைவிவகையில் உள்ள சொத்துப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்பட்டு வரவேண்டிய பங்கு பாகங்கள் வந்துசேரும். அக்கம்பக்கத்தாரின் திருஷ்டி அல்லது பொறாமையைச் சந்திக்க நேரும். அந்த மாதிரி இருந்தால் திருஷ்டி துர்க்கா ஹோமம் செய்யலாம். 10-ஆம் இடத்தை சூரியன் பார்ப்பதால் அரசியலிலில் உள்ளோருக்கு முன்னேற்றமும், முக்கியப் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அதேபோல அரசு வேலைக்கு முயற்சிப் போருக்கு வேலைவாய்ப்பும், அரசு வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 5-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு குருவளும் திருவருளும் நிரம்பக் கிடைக்கும். ஒரு மனிதன் சாதனை புரிவதற்கு ஒன்று பணபலம் வேண்டும் அல்லது படைபலம் வேண்டும். இந்த இரண்டும் சிலசமயம் சோதனையாகிவிட்டாலும், குருவருளும் திருவருளும் உடையவர்களுக்கு தோல் விக்கே இடமிருக்காது. ராமபிரான் ஆற்றல் பெற்று, சிவபூஜை செய்த இராவணனை வெல்வதற்கு அகத்தியர் மாமுனி ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை உபதே சித்தார். அதனால் குருவருளும் திருவருளும் கைவரப்பெற்று இராவணனை வெற்றி கொண்டார். உங்கள் ராசிக்கு 9-க்குடைய குரு 5-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்ப் பதோடு, 9-ஆம் இடத்தையும் பார்ப்பதோடு, 5-க்குடைய (திரிகோணாதிபதி) சுக்கிரனும் 5-ல் ஆட்சி பெறுவதால், குருவளும் திருவருளும் உருவாகும். 10-க்குடைய செவ்வாய் 7-ல் உச்சம்பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப் பதோடு, ஜென்ம ராசியையும் 2-ஆம் இடத் தையும் பார்க்கிறார். உங்களுடைய திறமை வெளிப்படும். பெருமையும் செல்வாக்கும் பளிச்சிடும். அதனால் மனமும் மகிழ்ச்சியும் செழித்திடும்! வேலை பார்க்கும் இடத்தில் விசுவாசமும், உண்மை, நேர்மை, வாய்மை, தூய்மையாகவும் செயல்படுவதால் உங்களைப்போன்ற ஊழியர் தேவையென்று உங்களுக்கு மற்றவர்கள் வலைவீசுவார்கள். ஆனால் நீங்கள் பிடிகொடுக்காமல், கழுவின மீனில் நழுவின மீனாக வலையில் சிக்காமல் நீந்துவீர்கள். உங்களைச் சார்ந்தவர்கள், "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்; சந்தர்ப்பம் வரும்போது சாதகமாக்கிக்கொள்ள வேண்டும், என்பார்கள். ஆனால் நீங்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும், பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதைக் கோட்டை விடக்கூடாது என்றும் தயங்குவீர்கள். மயங்குவீர்கள். அந்த நிதானமே உங்களுக்கு தனி பலம் ஆகும்! இதேபோல கூட்டுத்தொழில் செய்கிறவர்களுக்கும் கூட்டு நிலைக்குமா அல்லது கூட்டைப் பிரித்து தனியே செயல்படலாமா என்ற குழப்பமும், தர்மசங்கடமான நிலையும் உண்டாகும். பல வருடங்களாகக் கூட்டாக அரிசி வியாபாரம் செய்த இரு கூட்டாளிகள் வீடுவாசல், சொத்து என்று நல்ல வளர்ச்சி அடைந்தார்கள். இருவருக்கும் பருவ வயதுடைய மகள்கள். ஒரு கூட்டாளி மகளை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்து, பிடிக்கவில்லையென்று கை நனைக்காமல் கிளம்ப- மற்ற கூட்டாளி தன் வீட்டில் வந்து காபி சாப்பிட்டுப் போகும்படி மரியாதை நிமித்தம் அழைத்துப் போனார். வந்தவர்களுக்கு அவர் பெண் பிடித்துப்போக, அந்தப் பெண்ணுக்கே பூ வைத்துவிட்டார்கள். வந்தது வினை- கூட்டுப் பிரிந்துவிட்டது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் சித்திரை நட்சத்திரத்தில் (பாக்யாதிபதி சாரம்) இருக்கிறார். 9-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் உச்சம்பெற்று 9-ஆம் இடத்தையே பார்ப்பதும், 10-க்குடைய சுக்கிரன் 10-க்கு 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுவதும் சிறப்பு! எனவே தொழில், வாழ்க்கை, வேலை, உத்தியோகத்தில் குறை வில்லாத வளர்ச்சியும் நிறைவும் உண்டாகும். ராசிநாதன் 2-ல் இருப்பதால் பொருளா தாரத்திலும் நிறைவு உண்டாகும். தாராள மான பணப்புழக்கமும், வரவு-செலவும், கொடுக்கல்-வாங்கலிலில் திருப்தியும் உண்டா கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். 5-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்ப தால் செய்தொழில் விருத்தியும், புதிய தொழில் வாய்ப்புகளும், எதிலும் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். சிலர் கூட்டுத் தொழில் துறையில் "பார்ட்னர்ஷிப்' ஏற்படுத் திக் கொள்ளலாம், சொந்த முதலீடு இல்லா தவர்கள் "ஒர்க்கிங் பார்ட்னராக' சேர்ந்து தொழிலை நிர்வாகம் செய்யலாம். ஒரு அன்பர் மாவு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அவருடைய நேர்மையும் உழைப்பும் முதலாளிக்குத் திருப்தியை உண்டாக் கியதால் "ஒர்க்கிங் பார்ட்னராக' சேர்த்துக் கொண்டார். அதிலும் அவர் விசுவாசமாக செயல்பட்டதால் தன் மகளையே அவருக்கு மணம் செய்துகொடுத்து சமக்கூட்டாளி யாக்கிவிட்டார் (ஈகுவல் பார்ட்னர்). நாள டைவில் முதலாளி வயது முதிர்வு காரண மாக (ஒரே மகள்- ஒரே மருமகன்) அவரையே முழு உரிமையாளராக்கிவிட்டார். இதுதான் யோகம். பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் கோவையில் ஜூபிடர் ஸ்டுயோவில் சிறுசிறு வேடம்பூண்டு நடித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு கைரேகை ஜோதிடர் எம்.ஜி.ஆரின் கையைப் பார்த்து "பிற்காலத்தில் தமிழகத் திற்கு முதலமைச்சாரவீர்கள்' என்று பலன் சொன்னாராம். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பதவி ஏற்றதும் அவரை மறக்காமல், "என் கையைப் பார்த்து ஜோதிடம் சொன்னவர் என்னை வந்து பார்க்கவேண்டும்' என்று பேப்பரில் அறிக்கைவிட்டார். அதன்படியே அந்த ரேகை ஜோதிடர் (நடராஜன் என்று நினைக்கிறேன்) எம்.ஜி.ஆரைப் பார்த்து பரிசுகள் பெற்றுச் சென்றார். இதுதான் அதிர்ஷ்ட யோகம் என்பது!
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல் 2-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம். ஜென்ம ராசியில் 12-க்குடைய சூரியன். குடும்ப வாழ்க்கையில் நிறைவும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவி உறவில் அன்யோன்யமும், அன்பும் நிலவும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு களில் திருப்தி உண்டாகும், வாக்கு நாண யமும் காப்பாற்றப்படும். தவிர்க்க முடியாத செலவுகளும் ஏற்பட்டாலும் அவை பயனுள்ள- பலன் தரும் செலவுகளாக அமையும். செலவுக்கேற்ற வரவும் கிடைக்கும். இறைக்க இறைக்க கிணறு ஊறுவதுபோல, ஒரு பக்கம் செலவுகள் ஏற்பட்டாலும் மறு பக்கம் வரவுகளும் வரும். 4-ல் சனி இருப்ப தால் சிலர் வீடுமாறும் அவசியம் ஏற்படும். சிலர் சொந்த வீடு அல்லது சொந்த மனை வாங்கலாம். அதற்காகக் கடன் வாங்கலாம். அது சுபக்கடன்தான்! விருத்திக் கடன்தான்! 4-ல் உள்ள சனி 5, 6-க்குடையவர் என்பதால் திட்டங்களும் கனவுகளும் நிறைவேறும். கடன்களும் உருவாகும். அதேசமயம் 3-க்கு டைய சகோதரகாரகன் செவ்வாய் 5-ல் கேது- ராகு சம்பந்தம் என்பதால், உங்கள் முன்னேற் றத்திலும் வளர்ச்சியிலும் உடன்பிறந்தோரும் நண்பர்களும் பொறாமைப்படலாம். வாய் வாழ்த்தினாலும், மனம் மாசடைந்து புழுங்க லாம். அதனால் "ஒன்றே செய்- நன்றே செய்- அதையும் இன்றே செய்- செய்வதையும் ரகசியமாய் செய்!' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். பெண்ணைப் பெற்றவர்களுக்கும், ஆணைப் பெற்றவர்களுக்கும் நல்ல இடத்துச் சம்பந்தம் அமையும். பிள்ளைகள் ஜாதகத்தில் ராகு- கேது தோஷம், ராகு- கேது தசாபுக்தி, களஸ்திரதோஷம், மாங்கல்ய தோஷம் என்று இருந்தால் ஹோமம் செய்து, கலச அபிஷேகம் செய்யவேண்டும். பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும் செய்ய வேண்டும். இருசாராருக்கும் பொதுவாக காமோகர்ஷண ஹோமமும் சேர்த்துச் செய்யவேண்டும். சுகஸ்தானத்தில் (4-ல்) சனி இருப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் நரம்புத் தளர்ச்சி, வாகன விபத்து, முழங்காலுக்குக் கீழே காயம், எலும்பு முறிவு போன்ற சிகிச்சைகள் ஏற்பட இடமுண்டு. நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்பது போல, வைத்திய சிகிச்சையும் செய்யவேண்டும். தன்வந்திரி பகவானுக்கு அபிஷேக பூஜையும் செய்யவேண்டும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சி பெறுவதோடு குரு சாரத்தில் (விசாகத்தில்) வக்ரம். பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை கிரகம் என்பார்கள். நல்லது நடக்காது என்பார்கள். அது தவறான கணிப்பு. குரு வீடான மீனத்தில்தான் சுக்கிரன் உச்சம்! பகை வீட்டில் எப்படி உச்சபலம் பெறமுடியும்? மீன ராசிக்கு (குருவின் ராசிக்கு) சுக்கிரன் 3, 8-க்குடையவர். தனுசு ராசிக்கு (குருவின் ராசிக்கு) சுக்கிரன் 6-க்குடையவர். அதேபோல ரிஷப ராசிக்கு (சுக்கிரன் ராசிக்கு) குரு 8-க்குடையவர். துலா ராசிக்கு (சுக்கிரன் ராசிக்கு) குரு 6-க்குடையவர். இப்படி இரு கிரகமும் 6, 8 ஆதிபத்தியம் பெறுவதால் பகை என்று கணித்துவிட்டார்கள். உண்மையில் குரு தேவ குரு- சுக்கிரன் அசுர குரு! தேவர்களும் அசுரர்களும்தான் பகையே தவிர, அவர்களின் குருமார்களுக்குள் பகைத்தன்மையில்லை. வாதியின் வக்கீலும், பிரதிவாதியின் வக்கீலும் நீதிமன்றத்தில் காரசாரமாக வாக்குவாதம் செய்து மோதிக்கொண்டாலும், இரண்டு வக்கீல்களுக்குள் விரோதம் ஏற்படாது. நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்ததும் சேர்ந்து காபி சாப்பிடலாம். அதேபோல சட்டசபையில் ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும் மோதிக்கொண்டால் பகை என்று அர்த்தமில்லை. கொள்கைக்காக வாதம் புரியலாமே தவிர பொது இடங்களிலும், விருந்து விழாக்களிலும் இரு தலைவர்களும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள். கைகொடுத்துக்கொள்வார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவருக்கு மந்திரிக்குரிய அந்தஸ்தும் வாகனமும் பாதுகாப்பும் தரக்கூடும். எனவே சுக்கிரன் குரு சாரம் பெறுவதால் கெடுதல் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்துப் பலனை சுக்கிரன் செய்வார். 2-ல் இருப்பதால் வாக்கு, தனம், குடும்பம், வித்தை போன்ற ஆதிபத்தி யத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். துலா ராசிக்கு 6-க்குடையவர் என்பதால் போட்டி, பொறாமைகள், கடன், எதிரி, இடையூறு, வைத்தியச்செலவு, நோய்நொடி போன்ற 6-ஆம் இடத்துப் பலன் நடக்கும். 3-ஆம் இடம் சகோதர ஸ்தானம், நட்பு ஸ்தானம். உடன்பிறப்புகள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் நல்லது நடக்கும். நன்மைகள் விளையும். 3-ல் உள்ள சனி 3-ஆம் இடத்துப் பலன்களில் சில தீங்குகளை உருவாக்கினாலும், வீடு கொடுத்த குரு விசாகம் 4-ல் நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் கெடுதலும் நன்மையாகவே முடியும். ஒரு ராஜா பழம் நறுக்கும்போது விரலை நறுக்கிக்கொண்டார். மந்திரி "நன்மைக்கே' என்றாராம். உடனே ராஜா கோபப்பட்டு அவரை சிறையில் அடைத்து விட்டு தனியே வேட்டைக்குப் போய் விட்டாராம். அப்போது மந்திரி வருத்தப் படாமல் "இதுவும் நன்மைக்கே' என்றாராம். வேட்டைக்குப் போன ராஜாவை காட்டு வாசிகள் சிறைப்பிடித்து தங்கள் குலதெய்வத்துக்கு நரபலி கொடுக்கப் போனபோது, ராஜாவின் விரல் ஒச்சமாக இருப்பதைப் பார்த்து விடுதலை செய்துவிட்டார்கள். மந்திரி சொன்னது நினைவுக்கு வந்து, "உம்மை சிறையில் அடைத் தது எப்படி நன்மையாகும்?' என்றாராம். "நான் உடன் வந்திருந்தால் உங்களுக்கு பதில் என்னை நரபலி கொடுத்திருப்பார்கள்' என்றாராம். ஆகவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் என்பது கீதா உபதேசம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் உச்சம். அவருடன் கேது- ராகு சம்பந்தம். என்றாலும் செவ்வாய் சுயசாரம். (அவிட்டம்). எனவே ஏழரைச்சனி நடந் தாலும் உங்களுக்கு எந்த வகையிலும் பாதிப் புக்கு இடமில்லை. சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் இடமில்லை. மேலும் ஜென்ம ராசியில் குரு. 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கே பலம் அதிகம். எனவே மனசு, மக்கள், மகிழ்ச்சி, திட்டம் ஆகிய 5-ஆம் இடத்துப் பலன்கள் சந்தோஷமாக நடக்கும். 7 என்பது திருமணம், மனைவி, கணவன், உபதொழிலைக் குறிக்கும். திருமணத்துக் காகக் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு யோகம் அமையும். வாரிசு இருப்போருக்கு அவர்களின் எதிர்காலம் இனிமையாக அமையும். படிப்பு, பட்டம், உத்தியோகம், வெளிநாட்டு வேலை, வாழ்க்கை, திருமணம், புத்திரபாக்கியம் போன்ற நன்மைகள் உண்டாகும். 9-ஆம் இடம் தெய்வ உபாசனை, குலதெய்வ வழிபாடு, குரு உபதேசம், பிரார்த்தனை, பூர்வ புண்ணியம், தகப்பனார் போன்ற பலன்களைக் குறிக்கும் இடம். இவற்றில் நீங்கள் நினைத்தபடியும், எதிர்பார்த்தபடியும் இனிமையாக ஈடேறும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதிருந்தவர்களுக்கும் இனி எல்லையும் தெய்வமும் தெரியவரும். பங்காளிப் பிரச்சினையாலும் முதல் மரியாதை யாருக்கென்ற கௌரவப் பிரச்சினையாலும் நின்றுபோன வழிபாடு, ஆராதனைகளைக் கூடிப்பேசி, விட்டுக்கொடுத்து விழா எடுக்கலாம். கோவில் திருப்பணிகளை செம்மைப்படுத்தி, செயல் படுத்தி சிந்தை குளிரலாம். சிலருக்கு அறங்கா வலர் பதவியும், திருப்பணிக்கமிட்டி உறுப் பினர் பதவியும் கிடைக்கும். இன்றைக்கு பொதுக்காரியங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சுயகாரியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் சுயநலத்தோடுதான் ஈடுபடு கிறார்கள். அதற்கு இடையூறாக இருக்கும் நல்லவர் களை கழற்றிவிடத்தான் கருதுவார்கள். தேனை எடுத்தவன் புறங்கையை நக்கிப் பார்க்காமல் இருப்பானா? அந்த வகையில் நீங்கள் தப்பிப்பிறந் தவர்கள்; விதிவிலக்கானவர்கள். அதற்கு குரு நின்ற இடமும், பார்த்த இடமும்தான் காரணம். எல்லாரும் மகாத்மா காந்தியாக முடியுமா? மகானாக இருப்பதால்தான் இந்தியப் பொருளா தார நோட்டுகளில் அவர் சின்னம் திகழ்கிறது. அதுபோல உங்கள் நேர்மையும் தூய்மையும் வாய் மையும் எதிர்காலத்தில் உங்களுக்கு தனி ஒரு இடத்தை, தகுதியான இடத்தை அமைத்துக் கொடுத்து சிறப்பிக்கும். அதற்கு குருவருளும் திருவருளும் துணைபுரியும். ஏழரைச்சனியில் இப்படியும் நடக்குமா என்று சந்தேகப்பட வேண்டாம். சனி நல்லவருக்கு நல்லவர்- பொல்லா தவருக்குப் பொல்லாதவர்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் கடந்த ஓராண்டு நல்ல இடத்தில் (11-ஆம் இடத்தில்) இருந்தும், 90 சதவிகிதம் யாருக்கும் நல்லது நடக்கவில்லை. ஏதோ பத்து சதவிகிதம்தான் 11-ஆம் இடத்துப் பலன் பாராட்டும்படி அமைந்தது. மீதம் 90 சதவிகிதம் துன்பமும் தொல்லையும்தான். துலா ராசி யிலிருந்த குரு 4-ஆம் இடத்துக்கு எட்டிலும், 6-ஆம் இடத்துக்கு ஆறிலும், 12-ஆம் இடத்துக்கு பன்னிரண்டிலும் நின்று 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்த்தார். ஜென்மத் தில் ஜென்மச்சனி நின்று, அவரும் 3-ஆம் இடம், 7-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்த்தார். அதனால் பெரும்பாலோருக்கு ஆரோக்கியக் குறைவு, மகிழ்ச்சிக்குறைவு, திருப்தியற்ற வாழ்க்கை, குடும்பத்தில் சுபமங்கள காரியங் களில் தடை, வரவுக்கு மீறிய செலவு, தூக்க மின்மை, நிம்மதியின்மை, அலைச்சல், தேவை யற்ற விரயம் போன்ற பலன்களைச் சந்தித்த நிலை. இப்போது குரு 12-ஆம் இடமான விரய ஸ்தானத் துக்கு வந்திருப்பதால், 11-ஆம் இடத்துப் பலனில் செய்ய வேண்டிய நற்பலன்களை யெல்லாம் 12-ல் செய்வார் என்று எதிர் பார்க்கலாம். 12-ல் இருக்கும் குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தேக ஆரோக் கியத்தில் தெளிவான நிலை ஏற்படும். பூரண ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு, மனை, வாகன பாக்கியம் உண்டாகும். இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்கலாம். 6-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பலனாக அதற்கு கடன் வசதி கிடைக்கும். சுலபத்தவணையில் அடைக்கலாம். 8-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு கடன்களை அடைத்து நாணயத்தைக் காப்பாற்ற முடியுமா என்ற கவலையை உருவாக்கலாம். 8-ல் உள்ள ராகு அந்தக் கவலையைப் போக்கி, 2-ல் உள்ள கேது தாராளமான வரவு- செலவுகளை ஏற்படுத்துவார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 9-க்குடைய சூரியன் 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதுதான். அத்துடன் 10-க்குடைய புதன் 11-ல் 11-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம் என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். நட்டம் என்பதே இல்லை. எல்லாம் லாபம். மகாகவி பாரதியார் "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாடினார். நீங்கள் "எங்கும் வெற்றி எதிலும் வெற்றி தெட்டதெல்லாம் வெற்றி' என்று பாடலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 12-ல் மறைவு. ஜென்ம ராசியில் 4, 11-க்குடைய செவ்வாய் உச்சம்; கேது சம்பந்தம்- ராகு பார்வை! லாபமாகத் தெரியும் காரியங் களும், தொழில் அமைப்பும் முடிவில் விரய மாகவும், நஷ்டமாகவும் அமைந்துவிடும். அதேசமயம் நஷ்டமும் விரயமாகவும் தொடக்கத்தில் தெரியும். பல காரியங் கள், முடிவில் லாபமும் சேமிப்புமாகத் தெரியும். இதை நினைக்கும்போது எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. "நடக்கும் என்பார் நடக்காது! நடக்காது என்பார் நடந்து விடும்' என்ற பாடல்தான். அதேபோல கண்ண தாசன் எழுதிய இன்னொரு பாடல், "நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடல்! ஆக பகவத் கீதையில் கீதாஉபதேசம் சொன்னமாதிரி "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது- எது நடக் கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.' எனவே வாரியார் கூறிய மாதிரி "வருவது- தானே வரும்; வருவதுதானே- வரும்!' ஆக எது நடக்கிறதோ அது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அது நல்லதோ கெட்டதோ- அதை மனதார ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டால் தோல்வியில் வருத்தமும் இருக்காது. வெற்றியில் மகிழ்ச்சியும் இருக்காது. ராசிபலனை எழுதச் சொன்னால் எதையோ தத்துவத்தை எழுதுவதாக நினைக்காதீர்கள். வாழ்வதற்கு லட்சியமும் வைராக்கியமும் வேண்டும். எப்படியும் வாழலாம் என்பது ஒரு நிலை. இப்படித்தான் வாழவேண்டும் என்பது இன்னொரு நிலை. அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். வரலாற் றிலும் இடம்பெற முடியும். ஏசு, புத்தர், நபிகள் நாயகம், மகாத்மா எல்லாரும் மனிதராகப் பிறந்தவர்கள். தங்களது கொள்கையால் வாழ்ந்து காட்டிய நெறியால் வரலாற்றில் இடம் பெற்றார்கள். சமீபத்தில் நமக்குத் தெரிய அப்துல்கலாம் அவர்களும் நமக்கு ஒரு வழிகாட்டி விஞ்ஞானியாக இருந்தார். அவர் நாட்டின் தலைவராக உயரவில் லையா? ஒரு குடும்பம் செந்நெறியாக செயல்பட்டால் ஒரு ஊரே செம்மையாகும். பல ஊர் சேர்ந்தது ஒரு நாடு! ஆக உங்களுக்கு இப்போது ஏழரைச்சனி நடக்கிறது. அதிலும் விரயச்சனி நடக்கிறது. இது உங்களைத் தவறான பாதையில் அழைத்துச்செல்லாமல் இருக்க, சரியானவழியில் உங்கள் வாழ்க்கைப் பயணம் செல்லவேண்டும். மனம்போன வழியில கால்போனால் ஊர்போய்ச் சேர முடியாது. ஜோதிடம் என்பது உங்களுக்கு சரியான வழிகாட்டி. (கெய்டு).
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 12-ல் மறைந்தாலும் ராசிக்கு 10-ல் இருக்கிறார். 9-ல் புதனும் சுக்கிரனும் சேர்க்கை. பொது வாகவே கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்துக் குரியவர்கள் என்று அடிக்கடி எழுதுவேன். அதற்கு ராசிநாதனே விரயாதிபதியாவதும் தான் காரணம். ஆனால் சமீபகாலமாக கும்ப ராசிக்காரர்கள் பக்கம் அதிர்ஷ்டக்காற்று திரும்பி வீசுகிறது. அதாவது ராசிநாதன் சனி 11-ல் இருப்பதே காரணம். "ஆறு பன்னொன் பான் மூன்றில் அந்தகன் நிற்கும்போது கூறு பொன் பொருளுண்டாம்; குறைவிலாச் செல்வ முண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்; காறு பாலாஷ்ட லட்சுமி கடாட்சமும் உணடாகும்' என்பது ஜோதிடப் பாடல். எனவே 2020-க்குள், சனி மகரத்துக்கு ஏழரைச்சனியாக வருவதற்குள், உங்கள் கனவுகளும் திட்டங்களும் நனவாகும். தொழில்துறையில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும். கடல்கடந்த வர்த்தகத் தொடர்பில் கணிசமான லாபம் உண்டாகும். ஆறாம் இடத்து ராகு ரோகம், ருணம், சத்ரு, கடன், நோய், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை, எதிரி, இடையூறு இவற்றையெல்லாம் அழித்து நன்மைபுரிவார். அதேபோல 12-ஆம் இடத்துக் கேது தேவையற்ற விரயங்களையும், வீண் செலவுகளையும் விலக்கி பயன் தரும் பலன்களையும் நலன்களையும் ஏற்படுத்துவார். தன லாபத்தோடு தொட்டதெல்லாம் துலங்கும். புதிய தொழில் மைப்புகள் உருவாகி சிறப்பாக நடக்கும். தொழில் கிளைகள் தொடங்கலாம். ரியல் எஸ்டேட் அல்லது கெமிக்கல், டிரக்ஸ், மருந்துவிற்பனை, சில்லரை, மொத்த வியாபாரம் போன்றவை செயல்படும். அதேபோல ஏற்றுமதி- இறக்குமதி தொழில் தொடங்கலாம். அதற்காக பார்ட்னர்ஷிப் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக முஸ்லிம் நண்பர் களைக் கூட்டுச்சேர்த்துக்கொள்ளலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பது மிகமிகச் சிறப்பு. இதுவரை உங்களுக்கு 8-ல் இருந்து தலையில் கொட்டிக்கொண்டே இருந்த எட்டாமிடத்து குரு இப்போது உங்கள் ராசிக்கு 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் வந்திருப்பதும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 11-ல் உச்சம் பெறுவதும், மிகமிக மிகச்சிறப்பு. (டி.வி. விளம்பரங்களில் வருவது போல. ட்ரிபிள் ஆக்ஷன் சிறப்பு). "பெரு பதினொன்று ஏழு, பேர் ஒன்பதாம் இரண்டு, ஐந்தில் குரு வரும் காலம் தருமமும் தானமும் உண்டு. தாய்- தந்தை துணையும் உண்டு. அருமையும் பெருமையும் உண்டு. அன்னதானச் சிறப்புமுண்டு அரசர் நேசமுண்டு' என்பது ஜோதிடப் பாடல். அதிலும் மீன ராசிக்கு 10-க்குடைய குரு 9-ல் அமர்வது தர்மகர் மாதிபதி யோகமாகும். ஆகவே 12 ராசிக்காரர் களில் மீன ராசிக்காரர்களுக்குத்தான் ராஜ யோகமும் அதிர்ஷ்ட யோகமும் அமையும். கடந்த காலத்தில் உங்களோடு பழகி முகத்துக்கு நேராக சிரித்துப்பேசி, முதுகுக்குப் பின்னால் வக்கணை காட்டி குழிபறித்தவர்கள் எல்லாம் இனி வழிதெரியாமல் விழிபிதுங்கி அழியப் போவது உறுதி! ஐந்தாம்படை வேலை பார்த் தவர்கள் நொந்து நூலாகி வெந்து ஒழிந்து விடுவார்கள். ஒரு மனிதருக்கு கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது கெட்டவர்கள் எல்லாம் வந்து ஒட்டிக்கொள்வார்கள். நல்லவர்கள் எல்லாம் ஒதுங்கிவிடுவார்கள். நல்ல நேரம் ஆரம்பிக்கும்போது கெட்டவர்கள் எல்லாம் விட்டு விலகிவிடுவார்கள். நல்லவர்கள் எல்லாம் வந்து சேர்ந்து துணைநிற்பார்கள்- வழிகாட்டுவார்கள். கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு கெட்ட நேரம் இருந்தது. இப்போது நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. ஆகவே இனி எல்லாம் இன்பமயமாகவும், பொன்மயமாகவும் மாறிவிடும். தொட்டது துலங்கும். கடன்கள் மறையும். உடன்பிறந் தோர் உதவிகரமாக இருப்பார்கள். இராவ ணனுக்கு துரோகம் இழைத்த விபீஷணர் களாக இருந்தவர்களை ஒதுக்கிவிட்டு, இராமனுக்கு அன்பு காட்டிய குகனாகவும், ஆதரவாக இருந்த லட்சுமணனாகவும் உள்ள வர்களை இணைத்துக்கொள்ளலாம். வருமானம் பெருக வழிவகை உருவாகும். வழக் குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நூறு இருநூறுக்கும் கஷ்டப்பட்டவர்கள் இனி ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத் தில் புரளலாம். தேவைகளைப் பெருக் கிக்கொள்ளலாம். "இனியொரு துன்பம் என்ப தில்லை- இனி எல்லாமே இன்பமயம் தான்.'