ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
14-1-2019- மேஷம்.
16-1-2019- ரிஷபம்.
18-1-2019- மிதுனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திராடம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 2, 3.
புதன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2, 3, 4.
குரு: கேட்டை- 2.
சுக்கிரன்: அனுஷம்- 2, 3, 4, கேட்டை- 1.
சனி: மூலம்- 4.
ராகு: புனர்பூசம்- 4.
கேது: உத்திராடம்- 2.
கிரக மாற்றம்:
14-1-2019- மகர சூரியன்.
புதன் அஸ்தமனம்.
சனி அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. செவ்வாய்க்கு வீடு கொடுத்த குரு 8-ல் மறைவு என்றாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த் தனை என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. செவ்வாய் 8-ல் ஆட்சியாகவும், குரு 12-ல் ஆட்சியாகவும் இருப்பதற்குச் சமம். அதனால் தவிர்க்கமுடியாத செலவுகள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ள- பலனுள்ள- அத்தியாவசியமான செலவுகள் என்றே சொல்லலாம். 9-ல் உள்ள சூரியன் 14-ஆம் தேதி 10-ல் மகரத்துக்கு மாறுவதால், உங்களுக்கு தொழில், வாழ்க்கை, பதவி, வேலையில் நிலவும் வருத்தங்களும், கஷ்டங்களும் விலகிவிடும். புதிய வேலை முயற்சி களும், புதிய தொழில் திட்டங்களும் கைகூடும். 4-ல் உள்ள ராகு ஒருசிலருக்கு ஆரோக்கியக் குறைவை உருவாக்கினாலும், பாதிப்புக்கு இடமில்லை. சளித் தொல்லை, இருமல், காய்ச்சல், சரும வியாதிகள் போன்ற தொல்லைகள் ஏற்பட்டு விலகும். சிலருக்கு அஜீரணத் தொல்லைகள் உண்டாகலாம். 2, 7-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதால், பொருளாதார நெருக்கடியும், பணப்புழக் கத்தில் தட்டுப்பாடும் ஏற்பட்டாலும், 2-க்குடையவரே 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். சிலர் தேவைகளைப் பூர்த்திசெய்ய அக்கம்பக்கம் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். சிலர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். அதனால் வட்டி நட்டம் ஏற்படலாம். குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வட்டியில்லாக் கடன் கிடைக்கும் யோகம் உண்டாகும். 10-ஆம் இடத்துக் கேது, பார்க்கும் வேலையில் பிரச்சினைகளையும் கவலைகளையும் உருவாக்கினாலும், 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால், வேலை அல்லது தொழில்துறையில் உள்ள சங்கடங்களை எளிதாக சமாளித்துவிடலாம். அதற்கான மனஉறுதியையும், தைரியத் தையும் திரிகோணத்தில் உள்ள புதன் (தைரிய ஸ்தானாதிபதி) தருவார் என்று நம்பலாம். அந்த தைரியம் பெறுவதற்கு தேவகோட்டையில் பிரத்தியங்கராதேவியை வழிபடலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் 8, 11-க்குடைய குரு சம்பந்தம். குரு 8-க்குடையவர் என்றாலும், சுக்கிரனுக்கு உச்ச ராசிநாதன் ஆவார். எனவே 8-க்குடைய தோஷம் விலகி, 11-க்குடைய பலம்பெறுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், லாபம், யோகம், வெற்றி ஆகிய நற்பலன்களே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அசுரகுருவும், தேவகுருவும் இணைந்திருப்பது ஒரு வகையில் யோகம்! 8-ஆம் இடம், 11-ஆம் இடம், 2-ஆம் இட அதிபதிகள் இணையும்போது, 8-ஆம் அதிபதி அதிர்ஷ்ட ஸ்தானாதி பதியாவார் என்பது பொது விதி. குரு 2-க்குடைய புதன் சாரத்தில் (கேட்டையில்) இருப்பதால், எதிர்பாராத ராஜயோகமும், அதிர்ஷ்ட யோகமும் உங்களைத் தேடிவந்து ஆட்கொள்ளும். 8-ல் சூரியன்- சனி சேர்க்கையால் சிலருக்கு ஆரோக்கியக்குறைவும் அல்லது பூமி, மனை, வாகன வகையில் தவிர்க்கமுடியாத செலவினங்களும் உண்டாகும். அட்டமச் சனி நடப்பதால் ஒருசிலருக்கு இடப் பெயர்ச்சியும் ஏற்படலாம். தொழில் ஸ்தானம், குடியிருப்பு, பதவி போன்றவற்றில் இடப் பெயர்ச்சியோ மாறுதலோ ஏற்படலாம். எந்த மாறுதலாக இருந்தாலும் அந்த மாறுதல்- சனி குரு வீட்டில் இருக்கிறார் என்பதாலும், கேது ராசியைப் பார்ப்பதாலும் நல்ல மாறுதலாகவும், முன்னேற்றமான மாறுதலாகவும் அமையும். சிலர் பழைய வாகனத் தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்க லாம். சிலர் கா மனை வாங்கலாம். அல்லது வீடு வாங்கலாம். வசதியிருப்பவர்கள் தனி வீடாகவும், வசதி குறைந்தவர்கள் அப்பார்ட் மென்டில் போர்ஷனாகவும் வாங்கலாம். வசதியிருந்தாலும் வங்கிக்கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தும்படியாக அமையும். அதேபோல கார், டூவீலர் வாங்குகிறவர்களும் லோன் போட்டு வாங்கும் சூழ்நிலை உண்டாகும். இதுதான் அட்டமச்சனியின் பலன்! கடன் நிவர்த்திக்கு திருச்சேறை சென்று வணங்கலாம். சுந்தரமூர்த்தி குருக்களைத் தொடர்புகொள்ளலாம். செல்: 94426 37759.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ராசிக்கு ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் சூரியன்- சனி சம்பந்தம். சனி 8-க்குடையவர் என்றாலும், பாக்கியாதிபதி கேந்திரம் பெறுவதால் அட்டமாதிபத்திய தோஷம் நீங்கும். அத்துடன் சூரியன் 3-க்குடையவர். சுயசாரத்தில் (உத்திராடம்) இருக்கிறார். இவர்களுடன
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
14-1-2019- மேஷம்.
16-1-2019- ரிஷபம்.
18-1-2019- மிதுனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திராடம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 2, 3.
புதன்: பூராடம்- 4, உத்திராடம்- 1, 2, 3, 4.
குரு: கேட்டை- 2.
சுக்கிரன்: அனுஷம்- 2, 3, 4, கேட்டை- 1.
சனி: மூலம்- 4.
ராகு: புனர்பூசம்- 4.
கேது: உத்திராடம்- 2.
கிரக மாற்றம்:
14-1-2019- மகர சூரியன்.
புதன் அஸ்தமனம்.
சனி அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. செவ்வாய்க்கு வீடு கொடுத்த குரு 8-ல் மறைவு என்றாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த் தனை என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. செவ்வாய் 8-ல் ஆட்சியாகவும், குரு 12-ல் ஆட்சியாகவும் இருப்பதற்குச் சமம். அதனால் தவிர்க்கமுடியாத செலவுகள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ள- பலனுள்ள- அத்தியாவசியமான செலவுகள் என்றே சொல்லலாம். 9-ல் உள்ள சூரியன் 14-ஆம் தேதி 10-ல் மகரத்துக்கு மாறுவதால், உங்களுக்கு தொழில், வாழ்க்கை, பதவி, வேலையில் நிலவும் வருத்தங்களும், கஷ்டங்களும் விலகிவிடும். புதிய வேலை முயற்சி களும், புதிய தொழில் திட்டங்களும் கைகூடும். 4-ல் உள்ள ராகு ஒருசிலருக்கு ஆரோக்கியக் குறைவை உருவாக்கினாலும், பாதிப்புக்கு இடமில்லை. சளித் தொல்லை, இருமல், காய்ச்சல், சரும வியாதிகள் போன்ற தொல்லைகள் ஏற்பட்டு விலகும். சிலருக்கு அஜீரணத் தொல்லைகள் உண்டாகலாம். 2, 7-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதால், பொருளாதார நெருக்கடியும், பணப்புழக் கத்தில் தட்டுப்பாடும் ஏற்பட்டாலும், 2-க்குடையவரே 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். சிலர் தேவைகளைப் பூர்த்திசெய்ய அக்கம்பக்கம் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். சிலர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். அதனால் வட்டி நட்டம் ஏற்படலாம். குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வட்டியில்லாக் கடன் கிடைக்கும் யோகம் உண்டாகும். 10-ஆம் இடத்துக் கேது, பார்க்கும் வேலையில் பிரச்சினைகளையும் கவலைகளையும் உருவாக்கினாலும், 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால், வேலை அல்லது தொழில்துறையில் உள்ள சங்கடங்களை எளிதாக சமாளித்துவிடலாம். அதற்கான மனஉறுதியையும், தைரியத் தையும் திரிகோணத்தில் உள்ள புதன் (தைரிய ஸ்தானாதிபதி) தருவார் என்று நம்பலாம். அந்த தைரியம் பெறுவதற்கு தேவகோட்டையில் பிரத்தியங்கராதேவியை வழிபடலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் 8, 11-க்குடைய குரு சம்பந்தம். குரு 8-க்குடையவர் என்றாலும், சுக்கிரனுக்கு உச்ச ராசிநாதன் ஆவார். எனவே 8-க்குடைய தோஷம் விலகி, 11-க்குடைய பலம்பெறுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், லாபம், யோகம், வெற்றி ஆகிய நற்பலன்களே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அசுரகுருவும், தேவகுருவும் இணைந்திருப்பது ஒரு வகையில் யோகம்! 8-ஆம் இடம், 11-ஆம் இடம், 2-ஆம் இட அதிபதிகள் இணையும்போது, 8-ஆம் அதிபதி அதிர்ஷ்ட ஸ்தானாதி பதியாவார் என்பது பொது விதி. குரு 2-க்குடைய புதன் சாரத்தில் (கேட்டையில்) இருப்பதால், எதிர்பாராத ராஜயோகமும், அதிர்ஷ்ட யோகமும் உங்களைத் தேடிவந்து ஆட்கொள்ளும். 8-ல் சூரியன்- சனி சேர்க்கையால் சிலருக்கு ஆரோக்கியக்குறைவும் அல்லது பூமி, மனை, வாகன வகையில் தவிர்க்கமுடியாத செலவினங்களும் உண்டாகும். அட்டமச் சனி நடப்பதால் ஒருசிலருக்கு இடப் பெயர்ச்சியும் ஏற்படலாம். தொழில் ஸ்தானம், குடியிருப்பு, பதவி போன்றவற்றில் இடப் பெயர்ச்சியோ மாறுதலோ ஏற்படலாம். எந்த மாறுதலாக இருந்தாலும் அந்த மாறுதல்- சனி குரு வீட்டில் இருக்கிறார் என்பதாலும், கேது ராசியைப் பார்ப்பதாலும் நல்ல மாறுதலாகவும், முன்னேற்றமான மாறுதலாகவும் அமையும். சிலர் பழைய வாகனத் தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்க லாம். சிலர் கா மனை வாங்கலாம். அல்லது வீடு வாங்கலாம். வசதியிருப்பவர்கள் தனி வீடாகவும், வசதி குறைந்தவர்கள் அப்பார்ட் மென்டில் போர்ஷனாகவும் வாங்கலாம். வசதியிருந்தாலும் வங்கிக்கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தும்படியாக அமையும். அதேபோல கார், டூவீலர் வாங்குகிறவர்களும் லோன் போட்டு வாங்கும் சூழ்நிலை உண்டாகும். இதுதான் அட்டமச்சனியின் பலன்! கடன் நிவர்த்திக்கு திருச்சேறை சென்று வணங்கலாம். சுந்தரமூர்த்தி குருக்களைத் தொடர்புகொள்ளலாம். செல்: 94426 37759.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ராசிக்கு ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் சூரியன்- சனி சம்பந்தம். சனி 8-க்குடையவர் என்றாலும், பாக்கியாதிபதி கேந்திரம் பெறுவதால் அட்டமாதிபத்திய தோஷம் நீங்கும். அத்துடன் சூரியன் 3-க்குடையவர். சுயசாரத்தில் (உத்திராடம்) இருக்கிறார். இவர்களுடன் ராசிநாதன் சேர்க்கை என்பதால், எல்லா தோஷங்களும் விலகிவிடும். கங்கை புனித நதி. அதனுடன் அசுத்தங்கள் இணைந்தாலும் கங்கையின் புனிதம் கெடுவதில்லை. அதுபோலவே லக்னாதிபதி அல்லது ராசியாதிபதியுடன் இணையும் கிரகங்களை எந்த தோஷமும் அணுகாது. அது கையுறை (ரப்பர் கிளவுஸ்) அணிந்து கரன்டைத் தொட்டு வேலை பார்ப்பது போல! ஷாக் அடிக்காது. 7-ஆம் இடம் கணவன் ஸ்தானம் அல்லது மனைவி ஸ்தானம். அதில் ராசியாதிபதி அமர்ந்து, 7-ஆம் இடத்துக்கு பாக்கியாதிபதி சூரியனோடும், ராசிக்கு பாக்கியாதிபதி சனியோடும் சம்பந்தப்படுவதால் கணவன்- மனைவி தாம்பத்திய ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். 7-க்குடைய குருவும், களஸ்திரகாரகன் சுக்கிரனும் 6-ல் மறைவதால், சிலசமயம் தம்பதிகளுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும், மோதல்களும் உருவா னாலும் அடுத்த நேரம் அது மாறிவிடும். அது கருத்து வேறுபாடு அல்லது மோதல் என்று அர்த்தமல்ல. அதற்கு பெயர் ஊடல்! இதை வள்ளுவர் "ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்று சொல்வார். பேரறிஞர் பெர்னாட்ஷா "கணவன்- மனைவிக்குள் அன்பு நிலைக்க வேண்டுமானால் இருவரும் சிலசமயம் லீவு (விடுமுறை) எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று சொல்யிருக்கிறார். ஆக, பிரிவும் உறவை பலப்படுத்தும். அதேபோல மோதல்களும் காதலை வளர்க்கும்! மோதல் என்பது சண்டையல்ல. (அடம்பிடிக்கும் குழந்தையை அன்புத்தாய் செல்லமாக கன்னத்தில் அடிப்பதுபோல). குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும், அன்யோன்யமும் ஏற்பட பேரளம் அருகில் திருமீயச்சூர் என்ற லதாம்பிகை கோவில் பிராகாரத்தில் சுவாமி, அம்பாளை சமாதானப்படுத்தும் ஒரு சிலை உள்ளது. ஒரு பக்கம் நின்று பார்த்தால் அம்மன் கோபமாக இருப்பதுபோலவும், மறுபக்கம் நின்று பார்த்தால் சிரித்த முகமாகவும் தெரியும். அதற்கு மாலை சாற்றி பூஜை செய்யலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடகத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது சில குழப்பங்களை ஏற்படுத்தலாம். சிலருடைய சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளும், சிலருடைய வேலை அல்லது தொழில்துறையில் பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குரு நின்று உங்கள் ராசியையும், அதில் உள்ள ராகுவையும் பார்ப்பதால் "கழுவின மீனில் நழுவின மீனாக' தப்பிவிடலாம். ஒரு நூல் இழையில் உயிர் தப்பினார் என்று பத்திரிகைகளில் விமர்சிப்பதுபோலவும், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரியும் எந்த பிரச்சினைகளும் உங்களைத் தாக்கமுடியாத தொலைதூரத்திற்கு ஓடிப்போகும். பாம்பைப் பார்த்து மனிதன் பயப்படுகிறான். மனிதனைப் பார்த்து பாம்பு பயப்பட்டு பதுங்கும். மனிதன் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பாம்பை அடித்துக்கொல்கிறான். பாம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மனிதனைக் கொத்துகிறது. இதுதான் இன்று நாட்டு நடப்பு. லஞ்சம் வாங்கும் அலுவலகத்தில் ஒருவன் மட்டும் யோக்கியனாக இருந்தால், அவனால் மற்ற எல்லாருக்கும் பிரச்சினை என்று, நல்லவன்மீது பொல்லாப்பும் பொய்ப்பழியும் சுமத்தி வெளியேற்ற முயற்சிக்கலாம். இது உலக வழக்கம்! அதற்காக பொய் எப்போதும், என்றும் ஆட்சிசெய்ய முடியாது. அதனால் தான் "சத்தியமே ஜெயம்' என்றார்கள். பொய்- சில காலத்தில் பொய்யாகிவிடும். மெய்- எப்போதும் நிலைத்து நிற்கும். பொய்க்கு சாட்சி அவசியம்- மெய்க்கு சாட்சி தேவையில்லை. பொய் பணபலத்தாலும், படைபலத்தாலும் ஆட்சி பீடத்தில் ஆட்டம் போட்டாலும் நிலைக்காது. பொய்யானவர்கள் சிறைக்கம்பிக்குள் கம்பி எண்ணுவதும் கண்கூடு! ஆகவே பொய்க்கும் மெய்க்கும் நடக்கும் போராட்டத்தில் மெய்தான் ஜெயிக்கும். நீங்கள் மெய்யானவர்கள் என்பதற்கு குரு உங்கள் ராசியைப் பார்ப்பதே சாட்சி! திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியும், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியும் உள்ளது. வழிபடலாம். அவர்களை வழிபட்டால் உங்களுக்கும் வழிபிறக்கும். தை பிறக்கப் போகிறது. தை பிறந்தால் வழிபிறக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடு கொடுத்த குரு 4-ல் கேந்திரம்! குருவோடு 10-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. சூரியனோடு 2, 11-க்குடைய புதனும், 6, 7-க்குடைய சனியும் சேர்க்கை! குருவும் சுக்கிரனும் 10-ஆம் இடத்துக்கு பார்வை! எனவே தொழில், வாழ்க்கை, பதவி, வேலை எல்லாவற்றிலும் உங்களுக்கு நல்ல பலன்களாவே நடக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல; 6-ஆம் இடத்தில் கேதுவும், 12-ஆம் இடத்தில் ராகுவும் இருப்பதும் நல்லது. அதாவது பாவஸ்தானங் களில் பாவகிரகங்கள் இருப்பதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற விதிப்படி கெட்டவை ஓடிவிடும். நல்லவை நாடிவரும்! எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை போன்ற 6-ஆம் இடத்துப் பலன்கள் எல்லாம் தூளாகிவிடும். வீண் விரயச்செலவுகளும், தண்டத் தீர்வைகளும், வட்டி நட்டங்களும் கெட்டுப்போய்விடும். 5-ல் சூரியன், புதன், சனி நிற்பது புத்திர தோஷம் என்பது விதி என்றாலும், சூரியனும் புதனும் சூரியன் சாரம். (ராசிநாதன் சாரம்). சனி 6-ல் உள்ள கேது சாரம். எனவே தோஷ நிவர்த்தியாகும். ஜாதகப்படி தோஷம் இருந்தால்தான் பாதிக்கும். கோட்சாரம் மட்டும் பாதிக்காது. பொது வாக ஜாதக தசாபுக்திக்கு 80 சதவிகிதப் பலன்கள். கோட்சாரத்துக்கு 20 சதவிகிதம்தான். அதேசமயம், கோட்சாரப்படி ஏழரைச்சனி, அட்டமச்சனி நடந்தால் மட்டும் கோட்சார பலன் 80 சதவிகிதமாகும். தசாபுக்திப் பலன்கள் சைலன்ட் ஆகிவிடும். இது ஏனென்றால் மிசா காலத்தில் அல்லது அவசரச்சட்ட காலத்தில், 144 ஊரடங்கு சட்ட காலத்தில் மற்ற சட்டதிட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செயலற்றதாகிவிடுவதுபோல! அதேபோல ஒரு ஜாதகத்தில் கோட்சாரத்தில் ஏழரைச்சனியோ, அட்டமச்சனியோ நடக்கும் காலம் ஜாதகரீதியாக சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், ஜாதகத்தில் எவ்வளவு பெரிய யோகங்கள் இருந்தாலும், யோகமான தசாபுக்திகள் நடந்தாலும், அவ்வளவும் சார்ஜ் இல்லாத செல்போனாகிவிடும்; செயலற்றதாகிவிடும். இப்படி சில விசேஷ விதிகள் ஜோதிடத்தில் உண்டு. 9-க்குடையவர் 8-ல் மறைவதால் குருவருளும் திருவருளும் பலமில்லை. அதனால் குரு கடாட்சம் கிடைக்க ஜீவசமாதி சித்தர்களை வழிபட வேண்டும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ராசிநாதன் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார் என்பதைவிட, 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார் என்பதே சிறப்பு. எனவே 4-ஆம் இடத்துச்சனி 6-க்குடையவராகி, உங்கள் ராசியைப் பார்க்கும் கெடுபலனை நிவர்த்தி செய்யும் பரிகாரமாகும். உங்களுடைய கௌரவம், செல்வாக்கு, பெருமை, திறமை, மதிப்பு, மரியாதை இவற்றுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. பங்கமும் இல்லை. புதிய திட்டங்களும், புதிய செயல்களும் வெற்றியடையும். சில காரியங்களில் புதிய கொள்கைகளை மேற்கொள்வீர்கள். குடும்பச் சூழ்நிலையில் உறவினர்களிடம் கலந்துபேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து சில செயல்களை மேற்கொள்வீர்கள். ஆரம்பத்தில் எதிரிடைக் கருத்துக்கூறிய உறவினர்களும் முடிவில் முழுமையாக உங்களுக்கு நட்பாகி, கூட்டணி சேர்ந்து கொடி பிடிப்பார்கள். ஆதரவுக்கோஷம் போடுவார்கள்! 5-ல் கேது புத்திர தோஷத்தைக் குறிக்கும் என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி குரு வீட்டில் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் இருப்பதால் தோஷம் நிவர்த்தியாகும். வாரிசு யோகம் உண்டாகும். ஏற்கெனவே வாரிசைப் பெற்றெடுத்தவர்கள் பிள்ளைகளால் பெருமை பெறுவார்கள். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களை நடத்துவார்கள். அரசு வேலைக் காரர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி யும், விரும்பிய பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். 8-க்குடைய செவ்வாய் 7-ல் இருப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் பிரிந்தவர்கள் கூடுவார்கள். பிரியமாக நடந்து குடும்பம் நடத்துவார்கள். சில பிரச்சினைகளில் பரந்த மனப்பான்மையாக விட்டுக்கொடுத்துச் சிறந்து விளங்குவீர்கள். ஆரோக்கியம், பொருளாதாரம் இவற்றில் திருப்தி நிலவும். தன்வந்திரி பகவானை வழிபடுவதும் அவர் மந்திரத்தை ஜெபிப்பதும் நல்லது.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் சனியின் சாரத்திலும், பிறகு புதன் சாரத்திலும் சஞ்சாரம். சனியும் புதனும் துலா ராசிக்கு யோகாதிபதிகள். (திரிகோணா திபதிகள்). சுக்கிரன் அட்டமாதிபதி யானாலும் ராசியாதிபதி என்பதால் தோஷமில்லை. எனவே பொருளாதாரத்திலும், கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளிலும் நாணயம் காப்பாற்றப்படும். நம்பிக்கை போற்றப்படும். 11-க்குடைய சூரியனும், 9-க்குடைய புதனும், 5-க்குடைய சனியும் 3-ல் இருக்க, அவர்களுக்கு வீடுகொடுத்த குரு 2-ல் ராசிநாதனோடு சேர்ந்திருப்பதால், நண்பர்களாலும், உடன்பிறந்தவர்களாலும் உங்களுக்கு மிகச்சிறந்த நற்பலன்கள் உண்டாகும். உதவியும், சகாயமும், ஒத்துழைப்பும் முழு அளவில் எதிர்பார்க்கலாம். நேற்றுவரை வேற்றுமனிதராகவும், விரோதியாகவும் விளங்கியவர்கள்கூட இன்று வேண்டியவர்களாகவும், நெருங் கியவர்களாகவும் மாறி வேண்டிய உதவிகளைக் கேட்காமலே, விரும்பி முன்வந்து செய்து கைகொடுப்பார்கள்! "உயிர் காப்பான் தோழன்' என்ற பழமொழிக்கேற்ப நடந்து கொள்வார்கள். 4-ல் உள்ள கேது உங்கள் ஆரோக்கியத்தையோ அல்லது தாயின் ஆரோக்கியத்தையோ கெடுக்கலாம். என்றாலும், 4-க்குடைய சனி தன் ஸ்தா னத்துக்கு 12-ல் மறைய, குரு 2-ல் நின்று 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நோய்த்தொல்லை இருந்தாலும், 6-ல் உள்ள செவ்வாய் நோய், கடன், வைத்தியச்செலவு, வட்டிச் செலவுகளை எல்லாம் சமாளிக்கும் சக்தியைக் கொடுப்பார். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகும். அதனால் கொடுக்க வேண்டிய பாக்கி சாக்கிகளைக் கொடுத்து நாணயத்தைக் காப்பாற்றலாம். அதேபோல அரசு ஊழியர்களுக்கும் அரசு வகையில் வரவேண்டிய தொகைகள் உரிய காலத்தில் வந்துசேர்ந்து சிந்தை மகிழ்வு பெறலாம். 10-ல் உள்ள ராகு தொழில்துறையில் சீர்திருத் தங்களைச் செய்வார். பதவியில் திருப்தியையும் முன்னேற்றத்தையும் தருவார். பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று கோடிச்சாமி ஜீவசமாதியை வழிபடவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் குரு வீட்டில் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடு கொடுத்த குரு, செவ்வாயின் வீட்டில் பரிவர்த்தனை. எனவே உங்கள் முயற்சிகளில் தளர்ச்சிகள் நீங்கி, வளர்ச்சிக்கு இடமுண்டு. வாழ்க்கையில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நிலவும். அதனால் மனதில் கிளர்ச்சிக்கு இடமில்லை. செவ்வாய்- குரு பரிவர்த்தனை யோகம், உங்கள் வாழ்க்கையில் சிறப்பான திருப்பத்தை உருவாக்கும். 6-க்குடைய செவ்வாய் 5-ல் திரிகோணம் என்பதால் சத்ரு ஜெயம் ஆகும். போட்டி, பொறாமை போகும். நோய் நிவர்த்தி, கடன் நிவர்த்தி, முயற்சிகளில் வெற்றி, தொழில்வகையில் லாபம், காரியங்களில் அனுகூலம் ஆகிய நற்பலன்கள் உண்டாகும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோணம் பெறும் கிரகங்கள், தங்களின் இயற்கையான கெடுதலான ஆதிபத்தியங்களை இழந்து நல்ல பலன்களை நடத்தும். குரு- செவ்வாய் பரிவர்த்தனை ஏழரைச்சனியின் சங்கடங்களை விலக்கும் பரிகாரமாகும். ஏழரைச்சனி உங்கள் ராசிக்கு இனி பொங்குசனியாகப் பொலிவைத் தரும். 3-ஆம் இடத்துக் கேது சிலருக்கு பங்காளிவகையில் பிரச்சினைகளையும் வருத்தங்களையும் ஏற்படுத்தலாம். அதேபோல 9-ஆம் இடத்து ராகு தகப்பனார் வர்க்கத்தில் தகராறுகளை ஏற்படுத்தலாம். கேதுப் பரிகாரமாக விநாயகரையும், ராகுப் பரிகாரமாக துர்க்கையம்மனையும் வழிபடலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவது ஒருவகையில் மைனஸ் பாயின்டுதான். என்றாலும் குரு செவ்வாய் வீட்டிலும், செவ்வாய் குரு வீட்டிலும் பரிவர்த்தனை என்பதால் தோஷம் நிவர்த்தி! இந்தப் பரிவர்த்தனை 4, 12-க்குடையவர்களின் பரிவர்த்தனை என்பதோடு, 4-க்குடையவரே 4-ஆம் இடத்தைப் பார்ப்பது ஒரு சிறப்பு. எனவே ஜென்மச்சனி சிலசமயம் சிலருக்கு தேக பீடைகளை உருவாக்கினாலும், பெரும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. தசாபுக்திக்கேற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். சிலர் புதிய வீடு அல்லது இடம் வாங்கலாம். சிலர் ஏற்கெனவே கடன்பட்டு வீடு வாங்கியிருந்தால் அந்தக் கடனை எளிதாக அடைப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். சிலர் புதிய வாகனம் வாங்கலாம் அல்லது வாகனப் பரிவர்த்தனை செய்யலாம். 10-க்குடைய புதன் ஜென்ம ராசியில் நிற்பதால், சிலர் பதவியில் அல்லது தொழில்துறையில் முன்னேற்றமான திருப்பங்களைச் சந்திக்கலாம். 2-ல் உள்ள கேது- ஒருசிலரின் அனுபவத்தில் குடும்பத்தில் நடக்கவேண்டிய நல்ல காரியங்களை காரண காரியமில்லாமல் அல்லது தெரியாமல் தாமதமாக்கலாம்; தடைப்படுத்தலாம். என்றாலும் கேது பாக்கியாதிபதியான சூரியன் சாரத்திலும் (உத்திராடம்), அவரைப் பார்க்கும் ராகு ராசிநாதன் குரு சாரத்திலும் (புனர்பூசம்) இருப்பதால், தடை, தாமதமானாலும் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். சூப்பர் ஸ்டார் சினிமாவில் சொன்ன மாதிரி- "லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்' என்ற மாதிரியும், "வரவேண்டிய நேரத்தில் வந்துவிடுவேன்' என்ற மாதிரியும் சொல்லி கில்லியடிக்கலாம்! 6-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவதும், 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதும்- எதிரியைப் போராடி ஜெயிக்கவேண்டிய அவசியமில்லை. எதிரியை- அவருடைய வேறு ஒரு எதிரியே வீழ்த்திவிடலாம். சரித்திர காலத்தில் ஆங்கிலேயர் கையாண்ட ராஜதந்திரம்- ஒரு எதிரியை அழிக்க வேறு ஒரு எதிரியோடு கூட்டுச்சேர்ந்து, எதிரி அழிந்ததும் கூட்டு சேர்ந்த எதிரியையும் அழித்துவிடுவார்கள். உதாரணம்- கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப் பனையும் பழிவாங்கியதுதான். எதிரியை அழிக்க சத்ருசம்ஹார ஹோமம் செய்யலாம். அல்லது சரபேஸ்வர ஹோமம் செய்யலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி, தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைவு. அதேசமயம் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை. எனவே கொள்கை வேறுபாடு கொண்ட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, பலமான ஆளும்கட்சியை எதிர்ப்பதுபோல, சனி குரு வீட்டில் இருக்க, குரு 11-ல் 3, 11-க்குடைய பரிவர்த்தனையாக இருப்பதால், வைராக்கியமும், துணிவும் உங்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வெற்றியைத் தேடித்தரும். ஹிட்லர் எல்லா நாடுகளையும் வென்று, ரஷ்யாவைப் பிடிக்க நெருங்கியபோது, ரஷ்யாவின் பருவநிலையை- குளிர்காலத்தைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கித் தோற்றுப்போனார். அப்படி இயற்கையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உங்களுக்கு கைகொடுப்பதால் நீங்கள் எளிதாக எதிரியை ஜெயித்துவிடலாம். வாலியிலின் பலம் தெரிந்த ராமன், நேருக்குநேர் மோதாமல் மறைந்திருந்து தாக்கி வாயை வதம்செய்து, சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை வாங்கித்தந்தான். ராம பாணம் எதிரியைக் கொன்றுவிட்டு ராமனிடமே திரும்பப்போகுமாம். ஆனால் வாலியின் நெஞ்சில் தைத்த ராமனின் அம்பு- வாலியின் நெஞ்சிலேயே நின்றுவிட்டதாம். ஆக, ராமன் யுத்த தர்மத்தைக் கைவிட்டான் என்று தெளிவாகிறது. எனவே வெற்றிக்காக நீங்களும் தர்மம் தாண்டிய செயல் களைச் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். உதாரணமாக குருநாதரான துரோணரை வெற்றிகொள்ள முடியாத சீடன் அர்ஜுனனுக்காக- கிருஷ்ணர் செய்த ராஜதந்திரத் தால் துரோணர் போரிலிருந்து விலகி, ஆயுதத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப்போகும் நிலை ஏற்பட்டதல்லவா! ராஜகிரகம் சூரியன்- அவருடன் சனி சம்பந்தம்! சூரியனும் சனியும் தந்தை- மகன்தான் என்றாலும் பகைவர்கள் அல்லவா! சொத்துப் பிரச்சினைக் காக அல்லது கௌரவப் பிரச்சினைக் காகப் பெற்றவர்களுடன் மோதும் சூழ்நிலை உருவாகலாம். கூடியவரை அதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் குருசாபம், தெய்வசாபம், ஸ்திரீ சாபம் என்பதோடு பெற்றவர் களின் சாபமும் தோஷத்தை உண்டாக்கும். பிதுர்சாப தோஷ நிவர்த்திக்கு தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகில் பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபடவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெறுகிறார். பொதுவாக சனி 3, 6, 11-ல் இருந்தால் யோகம்! அதிலும், குரு வீட்டில் அவர் இருப்பது இன்னும் சிறப்பான யோகம்! பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி! அவருடன் 5-க்குடைய புதனும், 7-க்குடைய சூரியனும் இணைந்து, அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 11-ல் ராஜயோகாதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதும், குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதும் பாலில் நழுவி விழுந்த பழம் வாயில் விழுந்த மாதிரி- அதாவது பருத்தி புடவையாகக் காய்த்த மாதிரி! மனைவி, மக்கள் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக, உதவியாகத் திகழ்வார்கள். ஒருசமயம் கிருஷ்ணரின் வெற்றிக்கு ஒரு அசுரனை வெல்ல, அவர் மனைவி பாமா துணைபுரிந்தார். அதேபோல தசரதன் வெற்றிக்கு அவர் மனைவி கைகேயி துணையாக நின்றாள். தசரதன் அதற்குப் பரிகாரமாக "இரண்டு வரம் கேள்' என்றார். சமயம் வரும்போது கேட்பதாகச் சொன்ன கைகேயி, ராமருடைய பட்டாபிஷேக நேரத்தில் பரதனுக்கு பட்டம் சூட்டவேண்டும் என்றும், ராமர் காட்டுக்குப் போக வேண்டும் என்றும் கேட்டதாகப் புராணம்! அந்த வரம்தான் கைகேயியின் மாங்கல்யத்தைப் பறித்தது- வாழ்க்கையை முறித்தது. ஆனால் சூரியனும் சனியும் குருவீட்டில் இருப்பதால், உங்களுக்கு அந்த அவலநிலை ஏற்படாது. ஆதரவாகவும் அனுகூலமாகவும் அமையும். அதற்கு இன்னொரு காரணம், 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும்! அதனால் 2-க்குடையவரும், 10-க்குடையவரும் பரிவர்த்தனை என்பதால், உங்கள் வாக்கு நல்வாக்காகவும், செல்வாக்காகவும் அமையும். ஒரு சொல் வெல்லும்- ஒரு சொல் கொல்லும். உங்கள் சொல் வாழவைக்கும்! விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு அரசு ஊழியன் "கடவுளே இல்லை' என்றான். "நீ சொன்னதை எழுதிக்காட்டு' என்றார். அவன் "God is no where'' என்று எழுதினான். உடனே விவேகானந்தர் w-க்கு பக்கத்தில் ஒரு கமா போட்டார். "God is now here' என்றாகி, கடவுள் இங்கேயே இருக்கிறார் என்று உணர்த்தினாராம். அந்த வாக்குச் சாதுரியம் கலைஞருக்கும் உண்டு. அண்ணல் காந்தியடிகளுக்கும் உண்டு.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று தன் ராசியைப் பார்க்கிறார். ராமர் இருக்கும் இடம் அயோத்தி என்பதுபோல, குரு எங்கிருந்தாலும் சிறப்பு. எந்த இடத்தைப் பார்த்தாலும் சிறப்பு! அதிலும் அவர் 10-க்குடையவராகி 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும்! இரண்டு திருடர்கள் அரண்மனைக்குத் திருடப்போனார் களாம். அதில் ஒருவன் பிடிபட்டான். மற்றவன் தப்பிவிட்டான். இதை "அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து குரு' என்று சொல்வதுண்டு. கலவர நேரத்தில் போலீஸ் தடியடி நடத்தும்போது அடிவிழுந்தவனுக்கு அட்டமச்சனி; அடிவிழாமல் தப்பி ஓடியவனுக்கு ஒன்பதாம் இடத்து குரு! "பாவம் ஓரிடம் பழி ஓரிடம்' என்பார்கள். தப்பு செய்தது நீங்களாக இருந்தாலும், நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள் என்று சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகவும், நிரபராதி என்றும் அமைந்துவிடும். இதுதான் ஒன்பதாம் இடத்து குரு மகிமை! அதேசமயம் 3-க்குடைய சுக்கிரன் குருவோடு சேர்க்கை! உடன்பிறந்தவர்களையும், மனைவியையும் திருப்திப்படுத்துவது கஷ்டம்! அவர்களின் கண்ணோட்டத்தில் நீங்கள் குற்றவாளியாகவே காட்சியளிப்பீர்கள்! அந்த களங்கத்தைத் துடைக்க நீங்கள் சாட்சிகளைத் தேடவேண்டும். சிவாஜி ஒரு படத்தில் பாடிய மாதிரி சாட்சிகள் இரண்டு- ஒன்று மனசாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி! இந்த இரண்டும் சபைக்கு வருமா? 6-க்குடைய சூரியனும், 12-க்குடைய சனியும் 10-ல் இருப்பதால், வாழ்க்கையிலும் அல்லது தொழில்துறையிலும் விரயச் செலவுகளும், தவிர்க்கமுடியாத கடன்களும் உருவாகத்தான் செய்யும். என்றாலும், அவை அத்தியாவசியமான- பயனுள்ள, பலன்தரும் கடன்கள்தான்! செலவுகளில் இரண்டுவிதமான செலவுகள்- அவசியமான செலவு, அனா வசியமான செலவு என்று இரண்டு உண்டு! அதேபோல கஷ்டத்திலும் சுமையிலும் இரண்டு வகை. சக்திக்கு மீறிய சுமை. (கடன் சுமை- பாரமான வண்டிச் சுமை போன்றவை). அது துன்பச்சுமை! சில சுமை சுகமான சுமை! தாய் வயிற்றில் கருவைத் தாங்குவதும், தேயிலைத் தோட்டத்தில் (நேபாளத்தில்) குழந்தையைக் கூடையில் வைத்து முதுகில் தாங்கும் சுமை- இவையெல்லாம் சுகமான சுமை! ஓரடியில் உலகை அளந்து, இன்னொரு அடியை மகாபலியின் தலையில் வைத்த உலகளந்த பெருமாளை வழிபட்டால் உங்கள் சுமையும் பாரமும் குறையும்; எளிதாகும்!