Advertisment

இந்த வார ராசிபலன்

/idhalgal/balajothidam/week-rasipalan-12

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

23-12-2018 முதல் 29-12-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

24-12-2018- கடகம்.

26-12-2018- சிம்மம்.

28-12-2018- கன்னி.

கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்-3, 4, பூராடம்- 1.

செவ்வாய்: உத்திரட்டாதி- 1, 2.

புதன்: கேட்டை- 2, 3, 4,

மூலம்- 1.

குரு: கேட்டை- 1.

சுக்கிரன்: விசாகம்- 1, 2, 3.

சனி: மூலம்- 4.

ராகு: புனர்பூசம்- 4.

கேது: உத்திராடம்- 2.

thisweekrasi

Advertisment

கிரக மாற்றம்:

சனி அஸ்தமனம்.

27-12-2018- புதன் அஸ்தமனம்.

29-12-2018- தனுசு புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைகிறார். என்றாலும், செவ்வாய்க்கு வீடு கொடுத்த குரு செவ்வாயின் வீடான விருச்சிகத்திலும், குருவின் வீடான மீனத்தில் செவ்வாய் இருப்பதும் பரிவர்த்தனை யோகம் எனப்படும். பரிவர்த்தனை யோகம் பெறும் கிரகங்கள் தங்களுடைய ராசியில் இருப்பதாக ஐதீகம். எனவே குரு 12-ல் இருப்பதாகவும், செவ்வாய் 8-ல் இருப்பதாகவும் கணக்கு. அதனால் சிலசமயம் தவிர்க்கமுடியாத விரயங்கள் ஏற்பட்டாலும், செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவு, சுபவிரயம் என்று கணக்கிடலாம். வருமானம் அனைத்தும் சேமிப்புக்கு இடமில்லாமல் செலவாகும் என்பதால் கவலையும் ஏற்படலாம். 5-க்குடைய சூரியன் 9-ல் இருப்பதால்- ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோணம் ஏறுவதால்- எல்லாம் அனுகூலமாக நடப்பதற்கு இடமுண்டு. மேலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதிலும் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். 4-ல் ராகு நிற்பது தாய்க்குப் பீடை, கல்வியில் மந்தம், தனக்கு ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தினாலும், குரு பார்ப்பதால் பெரும் பாதிப்புக்கு இடமில்லை.

பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் என்னும் பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. சனியோடு சூரியனும் சம்பந்தம். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு அவர் களுக்கு 12-லும், ராசிக்கு 7-லும் அமர்வு. கௌரவப் போராட்டம், நல்லது செய்தாலும் பொல்லாப்பு, மனைவி, மக்கள் வகையில் பிரச்சினைகள், குடும்பக் குழப்பம், பிள்ளைகளின் பகை அல்லது மனவருத்தம், அதேபோல மனைவியாலும் பிரச்சினை, ஒருசிலருக்கு மனைவியே இல்லாதது பிரச்சினை. எண்பது வயதானா லும் மனைவி உடனிருந்தால் கணவரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும். அதனால்தான் அதை வாழ்க்கைத்துணை என்று சொல்கிறார்கள். வழித்துணையும் அவசியம்; வாழ்க்கைத்துணையும் அவசியம். கணவருக்குமுன் மனைவி இறைவனடி சேர்ந்தால் தீர்க்கசுமங்கலி; கணவர் முந்திவிட்டால் மனைவி எல்லாவற்றையும் இழந்தவள். இப்படி அட்டமத்துச்சனி இழப்புகளை ஏற்படுத்தினாலும், குரு ராசியைப் பார்ப்பதாலும், ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்து ஆட்சி யாக இருப்பதா லும், உணவு, உடை, உறைவி டம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. பையில் பணம் இல்லா விட்டாலும், கையில் காசு இல்லாவிட்டாலும் தேவை கள் பூர்த்தியாகும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியையும், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியையும் சென்று வணங்கலாம்.

மிதுனம்

(மிருகசீர

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

23-12-2018 முதல் 29-12-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

24-12-2018- கடகம்.

26-12-2018- சிம்மம்.

28-12-2018- கன்னி.

கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்-3, 4, பூராடம்- 1.

செவ்வாய்: உத்திரட்டாதி- 1, 2.

புதன்: கேட்டை- 2, 3, 4,

மூலம்- 1.

குரு: கேட்டை- 1.

சுக்கிரன்: விசாகம்- 1, 2, 3.

சனி: மூலம்- 4.

ராகு: புனர்பூசம்- 4.

கேது: உத்திராடம்- 2.

thisweekrasi

Advertisment

கிரக மாற்றம்:

சனி அஸ்தமனம்.

27-12-2018- புதன் அஸ்தமனம்.

29-12-2018- தனுசு புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைகிறார். என்றாலும், செவ்வாய்க்கு வீடு கொடுத்த குரு செவ்வாயின் வீடான விருச்சிகத்திலும், குருவின் வீடான மீனத்தில் செவ்வாய் இருப்பதும் பரிவர்த்தனை யோகம் எனப்படும். பரிவர்த்தனை யோகம் பெறும் கிரகங்கள் தங்களுடைய ராசியில் இருப்பதாக ஐதீகம். எனவே குரு 12-ல் இருப்பதாகவும், செவ்வாய் 8-ல் இருப்பதாகவும் கணக்கு. அதனால் சிலசமயம் தவிர்க்கமுடியாத விரயங்கள் ஏற்பட்டாலும், செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவு, சுபவிரயம் என்று கணக்கிடலாம். வருமானம் அனைத்தும் சேமிப்புக்கு இடமில்லாமல் செலவாகும் என்பதால் கவலையும் ஏற்படலாம். 5-க்குடைய சூரியன் 9-ல் இருப்பதால்- ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோணம் ஏறுவதால்- எல்லாம் அனுகூலமாக நடப்பதற்கு இடமுண்டு. மேலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதிலும் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். 4-ல் ராகு நிற்பது தாய்க்குப் பீடை, கல்வியில் மந்தம், தனக்கு ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தினாலும், குரு பார்ப்பதால் பெரும் பாதிப்புக்கு இடமில்லை.

பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் என்னும் பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. சனியோடு சூரியனும் சம்பந்தம். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு அவர் களுக்கு 12-லும், ராசிக்கு 7-லும் அமர்வு. கௌரவப் போராட்டம், நல்லது செய்தாலும் பொல்லாப்பு, மனைவி, மக்கள் வகையில் பிரச்சினைகள், குடும்பக் குழப்பம், பிள்ளைகளின் பகை அல்லது மனவருத்தம், அதேபோல மனைவியாலும் பிரச்சினை, ஒருசிலருக்கு மனைவியே இல்லாதது பிரச்சினை. எண்பது வயதானா லும் மனைவி உடனிருந்தால் கணவரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும். அதனால்தான் அதை வாழ்க்கைத்துணை என்று சொல்கிறார்கள். வழித்துணையும் அவசியம்; வாழ்க்கைத்துணையும் அவசியம். கணவருக்குமுன் மனைவி இறைவனடி சேர்ந்தால் தீர்க்கசுமங்கலி; கணவர் முந்திவிட்டால் மனைவி எல்லாவற்றையும் இழந்தவள். இப்படி அட்டமத்துச்சனி இழப்புகளை ஏற்படுத்தினாலும், குரு ராசியைப் பார்ப்பதாலும், ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்து ஆட்சி யாக இருப்பதா லும், உணவு, உடை, உறைவி டம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. பையில் பணம் இல்லா விட்டாலும், கையில் காசு இல்லாவிட்டாலும் தேவை கள் பூர்த்தியாகும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியையும், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியையும் சென்று வணங்கலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைவு என்றாலும், புதனுக்கு மட்டும் மறைவு தோஷமில்லை. அதனால் தான் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது ஜோதிட விதி. 7, 10-க்குடைய குருவும் 6-ல் மறைந்தாலும், ராசிநாதனோடு சேர்க்கை என்பதாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதாலும், கணவன்- மனைவி உறவில் பிணைப்புக்கும் இணைப்புக்கும் இடமுண்டு. கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உங்களுடைய முயற்சி, செயல்பாடு ஆகியவற்றில் பாதிப்புகள் இல்லையென்றாலும், காரியங்களை நிறைவேற்றுவதில் தாமதங்கள் ஏற்படலாம். அல்லது தள்ளிப்போகலாம். தன் சுகம் அல்லது தாயின் சுகம் பாதிக்கப்படலாம். தவிர்க்கமுடியாத வைத்தியச் செலவுகள் வரலாம். 2-ல் உள்ள குரு குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கினாலும், குரு பார்ப்பதால் குறைகள் விலகும்; நிறைவுகள் உண்டாகும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் வெற்றிபெறும். அதற்குத் தேவையான நிதியுதவியும், கடனுதவியும் எதிர்பார்க்கலாம். 7-ல் உள்ள சூரியன், சனி தகப்பனார், பிள்ளைகளுக்கு வருத்தம் ஏற்படச் செய்வார். அதற்கு இடம்தரவேண்டாம்.

பரிகாரம்: திண்டுக்கல் மலைக் கோட்டை பின்புறம் சுப்பையா சுவாமிகள் என்ற ஓதசுவாமிகளை வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது ஒருசிலருக்கு தொழில் பிரச்சினை அல்லது குடும்பப் பிரச்சினைகளை உருவாக்கலாம். என்றாலும் பாக்கியாதிபதி, திரிகோணாதிபதி குரு (9-க்குடையவர்) 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் (மற்றொரு திரிகோணாதிபதி இடம் 5), எல்லாப் பிரச்சினைகளும் நில்லாமல் ஓடிவிடும். ஒரு திரிகோணாதிபதி இன்னொரு திரிகோணம் ஏறுவது உத்தமம். மேலும், குரு 9-க்குடையவர். அவர் 9-ஆம் இடத்தையே பார்ப்பது விசேஷம். அங்கு குரு வீட்டில் செவ்வாயும் பரிவர்த்தனையாக இருப்பது அதனினும் விசேஷம். குரு வருளும் திருவருளும் பரிபூரணமாக அருள் பாலித்து வழிநடத்தும். இந்த கலியுகத்தில் ஜெயிப்பதற்கு ஒன்று பணபலம் வேண்டும் அல்லது படைபலம் வேண்டும். இரண்டும் இல்லாதவர்களுக்கு தெய்வபலம் வேண்டும். திருநாவுக்கரசரை கைகாலைக் கட்டி மன்னன் கடலில் தூக்கிப் போட்டபோது, "நற்றுணை யாவது நமச்சிவாயமே' என்று பாடித்தான் கரையேறினார். பணபலமும் படைபலமும் இருந்த காரணத்தால்- மமதையால் தகாதசெயல்களைப் புரிந்தவர்கள் எல்லாம் சிறையில் வாடுவதே இதற்கு உதாரணம்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டியில் மௌனகுரு சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 5-ல் திரிகோணம். அவருடன் 6, 7-க்குடைய சனி சம்பந்தம். மனைவி வகையில் அல்லது பிள்ளைகள் வகையில் பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். 5-ஆம் இடம் மனது, திட்டங்களைக் குறிக்கும் என்பதால், மனதில் சஞ்சலம், குழப்பம், காரணமில்லாத கவலைகளை சந்திக்கநேரும். என்றாலும், திரிகோணாதிபதி குரு, 5-க்குடையவர் கேந்திரத்தில், 4-ஆமிடத்தில் இருப்பது அதற்கு விதிவிலக்காகும். ஒரு கேந்திராதிபதி இன்னொரு கேந்திரம் ஏறினால் கேந்திர தோஷம். கேந்திராதிபதி திரிகோணம் ஏறினால் ராஜயோகம். 12 ராசிகளிலும் எந்த ஒரு கிரகத்துக்கு திரிகோணாதிபத்தியமும், கேந்திராதிபத்தியமும் கிடைக்கிறதோ, அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதி ஆவார். உதாரணம் தர்மகர்மாதிபதி. (தர்ம ஸ்தானம் 9- திரிகோணம். கர்மஸ்தானம் 10- கேந்திரம்). 11-க்குடைய புதன் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், 10-ஆம் இடத்துக்கு 11-க்குடைய குருவும் 10-ஆம் இடத் தைப் பார்ப்பதாலும், அந்த 10-ஆம் இடத் துக்கு 11-க்குடைய குருவும் புதனோடு சேர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் தொழில், வாழ்க்கை எல்லாம் சிறப்பாக அமையும்.

பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று கோடி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 4-ல் சூரியனும் சனியும் அமர, அவர்களுக்கு வீடு கொடுத்த குரு அவர்களுக்கு 12-லும், ராசிக்கு 3-லும் மறைவு. சூரியன் 12-க்குடையவர். சனி 6-க்குடையவர். இவர்களிருவரும் 4-ல் இணைந்து 10-ஆமிடத்தைப் பார்ப்பதும், சனி மட்டும் ராசியைப் பார்ப்பதும் பிரச்சினைதான். சிலருக்குத் தொழில், வாழ்க்கை பிரச்சினைகள். சிலருக்கு ஆரோக்கியத்தில் அல்லது இடம், பூமி, வாகன வகையில் பிரச்சினைகள். சிலருக்குத் தாய்வழிப் பிரச்சினைகள். சகோதரர்கள், பங்காளிகள் வகையில் சிலர் பிரச்சினைகளைச் சந்திக்கலாம். சிலருக்கு கௌரவப் பிரச்சினை. எல்லாம் இருந்தாலும் 10-க்குடைய புதன் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அதனால் எல்லாப் பிரச்சினைகளையும் தனி மனிதாக நின்று, தெய்வத்தின் துணையோடு சமாளித்துவிடலாம். அதற்கு ஆதரவாக 11-ஆம் இடத்து ராகுவும் உங்கள் வெற்றிக்குத் துணைபுரிவார். எதிர்ப்பும் இடையூறுகளும் ஒருபுறம் இருந்தாலும், வாக்கு ஸ்தானத்திலுள்ள சுக்கிரன் ஆட்சி பெறுவதால், உங்கள் வாக்கு சாதுர்யத் தால் எல்லா தோஷங்களையும் போக்கி விடலாம்.

பரிகாரம்: பொன்னமராவதி வழி சிங்கம்புணரியிலுள்ள முத்துவடுகச் சித்தர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெறுகி றார். 2-ல் உள்ள குருசாரம் பெறுகிறார். சிலர் குருவுக்கும் சுக்கிரனுக்கும் பகை என்பார்கள். உண்மையில் அந்த தத்துவம் தவறு. குரு, தேவர்களுக்காக வாதாடும் வக்கீல். சுக்கிரன் அசுரர்களை ஆதரிக்கும் வக்கீல். நீதிமன்றத் தில் இரண்டு வக்கீல்களும் கடுமையாக வாதம்செய்து வாதிட்டாலும், அவர்களுக்குள் சொந்தப்பகை இருக்காது. நீதிமன்றத்துக்கு வெளியேவந்து இருவரும் ஒன்றாக காபி சாப்பிடுவார்கள். குருவின் வீடான மீனத் தில்தான் சுக்கிரன் உச்சம்பெறுவார். பகைவன் வீட்டில் உச்சம்பெற முடியுமா? நவகிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகிய ஐந்து கிரகங்களும் அசுப கிரகங்கள் என்றும், குருவையும் சுக்கிரனையும் முழு சுபகிரகங்கள் என்றும்; வளர்பிறைச் சந்திரன் சுபகிரகமாகவும்- தேய்பிறைச் சந்திரனை அசுப கிரகமாகவும்; சுபரோடு இணையும் புதன் சுபத் தன்மையாகவும், அசுபகிரகத்தோடு சேர்கிறபோது அசுபத்தன்மையாகவும் ஜோதிடத்தில் வர்ணிக்கப்படுகிறது. எனவே, குருவுக்கும் சுக்கிரனுக்கும் பகை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை என்றும் வண்டி ஓட கணவன்- மனைவி என்ற இரு தனி சக்கரங்கள் அவசியம். ரயில் ஓடுவதற்கு இரு தண்டவாளம் அவசியம்! அதுபோலவே இதுவும். எனவே உங்கள் செயல்கள் நல்லமுறையில் நிறைவேறும். கருதியது கைகூடும்.

பரிகாரம்: சேந்தமங்கலம் ஸ்வயம்ப்ரகாச சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடுகொடுத்த குரு ஜென்ம ராசியில் பரிவர்த்தனை. 2-ஆம் இடத்தில் சூரியனும் சனியும் சம்பந்தம். எந்த ஒரு காரியத்தையும், எந்த ஒரு திட்டத்தையும், எந்த ஒரு செயலையும் தைரியமாக, திடமாக, தீர்க்கமான முடிவெடுத்து செயல்படுவீர்கள். அதனால் வெற்றிமேல் வெற்றிவந்து உங்களைத் தழுவும். விருச்சிக ராசிக்கு நடப்பு ஏழரைச்சனி என்றாலும், அது பொங்குசனியாக மாறி மங்களம் தருவார். பொருளாதாரத்திலும், குடும்பச் சூழ்நிலையிலும் குறையில்லாமல் நிறைவாக நடைபெறும். உங்கள் வெற்றிக்கு மனைவியும் மக்களும் உறுதுணையாக நின்று செயல்படுத்துவார்கள். அதேபோல, உடன்பிறப்புகளும் பங்காளிகளும் உறுதுணை யாக இருப்பார்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும், வாரிசுகளின் வாழ்க்கைக்கும் சேமிப்புத் திட்டங்களில் ஈடுபட்டு சேமிப்பீர்கள்; செயல்படுத்துவீர்கள். ஏமாற்றத் துக்கு இடமில்லாமல், அந்த முதலீடு பெருகும்; வளரும். உதாரணமாக, பிக்ஸட் டெபாசிட், இன்ஸ்யூரன்ஸ் போன்ற வகையில் முதலீடு செய்யலாம். இந்த ஏழரைச்சனி ஒருசிலருக்கு வெளியூர் வேலை யோகத்தையும், சம்பாத்தியத்தையும் தரும். ‘

பரிகாரம்: சேங்காலிபுரம் ராமானந்த சுவாமிகளின் ஜீவசமாதியையும், தத்தாத் ரேயரையும் வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய், 4-ல் குரு வீட்டில் கேந்திர பலம். அத்துடன் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை. எனவே ஏழரைச்சனியின் கடைசிக்கட்டத்தில் இருந்தாலும், சனியால் எந்த பாதிப்பும், பங்கமும் ஏற்படாது. ஜென்ம ராசியில் 9-க்குடைய சூரியன் இருப்பதால், தாய்- தந்தை, பெற்றோர் உறவு அற்புதமாக இருக்கும். 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் அது மற்றவர்களுக்கு பொறாமையாகவும் இருக்கும். பெற்றோர் இல்லாதவர்களுக்கு வாழ்க்கைத்துணை அல்லது மக்கள் துணை ஆதரவாக இருக்கும். ஜென்மச்சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலை, தொழில்துறையில் உயர்வுக்கான திட்டங்கள் மனதில் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். உள்நாட்டில் வருமானம் அதிகமுள்ள கம்பெனிக்கு வேலைக்குப் போவதா அல்லது வெளிநாட்டு வேலைக்குப் போவதா என்று மனம் ஊசலாடும். ஒருசிலர் சிறுசேமிப்பு சேர்த்து வீடு வாங்குவதா, கடனை அடைப்பதா என்று திட்டங்கள் போடலாம். எதுவானாலும் குரு- செவ்வாய் பரிவர்த்தனையால், உங்கள் எல்லா திட்டங்களும், முயற்சிகளும் நூற்றுக்கு நூறு வெற்றியடையும்.

பரிகாரம்: கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு; 8-க்குடைய சூரியன் சம்பந்தம். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு, அவர்களுக்கு 12-ல் மறைவு என்றாலும், ஜென்ம ராசிக்கு 11-ல் பலம். பொதுவாக, குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் பலம்தரும் இடங்கள். அதனால் ஜென்ம கேது, சப்தம ராகுவால் ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பரிகாரவழியாக எடுத்துக்கொள்ளலாம். 6, 9-க்குடைய புதன் 11-ல் குருவோடு சம்பந்தம். குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை. எனவே பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும். பங்கு பாகங்கள் முறையாகக் கிடைக்கும். வம்புதும்பு வழக்குகள் சாதகமாக மாறும். இந்த வகையில் கொஞ்சம் செலவுகள் காணப்பட்டாலும், லாபத்தில் குறைவு என்று எடுத்துக்கொள்ளுங்கள். அசல் முதலீட்டில் நஷ்டத்துக்கு இடமிருக்காது. முதலுக்கு மோசமில்லை. அதேசமயம் வாழ்க்கைத்துணையின் எதிர்மறைக் கருத்து களை சமாளிக்கத்தான் வேண்டும். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்பதை நினைத்து, அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூதி என்னும் கிராமத்தில் செம்பூதிச் சித்தர் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக விளங்குகிறார்கள்; சென்று வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெறுகிறார். அவருடன் 7-க்குடைய சூரியன் சம்பந்தம். 2-க்குடைய குருவும், 10-க்குடைய செவ்வாயும் பரிவர்த்தனை. குடும்பத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்த அவர்கள் விரும்பியபடி செயல்பட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெரியவர்களுக்கு பேரன்- பேத்தி வகையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். மற்றவர்கள் காட்டும் அன்பும், மரியாதையும் உங்களுக்குத் தெம்பூட்டும். வேலை, உத்தியோகத்திலும், செய்தொழிலிலும் மனநிறைவும் திருப்தியும் ஏற்படும். லாபம் பெருகும். வேலையில் இருப்போர் சொந்தத் தொழில் அல்லது கூட்டுத்தொழில் முயற்சிகளில் இறங்கலாம். அதில் முன்னேற்றம் காணலாம். அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி எல்லாம் உருவாகும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையும், அனுகூலமும் உண்டாகும். 12-ஆம் இடத்துக் கேது அலைச்சல், பயணங்களை அதிகமாக்கினா லும், அதற்கான ஆதாயமும் நன்மையும் இருக்கும். மனைவி வகையில் அல்லது கணவர் வகையில் சிலருக்குத் தனவரவு உண்டாகும்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் பனையப்பட்டி ஞானி சாதுபுல்லான் சுவாமிகள் ஜீவசமாதியை தரிசிக்கவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் பலம். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உங்கள் ராசியில் பரிவர்த்தனை. அத்துடன் 10-ல் சூரியன்- சனி கேந்திரபலம். 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே நடப்பு கோட்சார கிரக அமைப்பு 12 ராசிக்காரர்களில் உங்கள் ராசிக்குத்தான் (மீன ராசிக்குத்தான்) மிகமிக அனுகூலமாகவும் ஆதாயமாகவும் அமைகிறது. வாழ்க்கை, தொழில், உத்தியோகம், பொருளாதாரம், குடும்பச் செலவு எதிலும் உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. எந்தக் குறைவும் ஏற்படாது. ஆனால் 5-ல் உள்ள ராகுவால் மனதில் மட்டும் நிறைவு அல்லது திருப்தி இருக்காது. உண்மையாகச் சொன்னால் அது கற்பனைக் கவலை அல்லது கற்பனைக் கலக்கம்தான் என்றாலும், 5-ஆம் இடத்தையும், அங்குள்ள ராகுவையும் குரு (ராசிநாதன்) பார்க்கிறார் என்பதால், பாதிப்புக்கு இடமில்லை. சில காரியங்களிலும், செயல்களிலும் நீங்கள் மிகமிக அதிகமான பலனை எதிர்பார்ப்பீர்கள். நினைப்பதெல்லாம் உடனுக்குடன் நடக்கவேண்டும் என்று துடிப்பீர்கள். அது மனோ வேகம்! ஆனால் செயல் அப்படி அமையாது. அந்த செயல் வேகம், மனோ வேகத்துக்கு ஈடு இணையாக அமையாதபோது ஏற்படும் தாக்கம்தான், கற்பனைக் கவலைக்கும் கலக்கத்துக்கும் காரணம். உதாரணமாக வெளிநாடு சென்ற ஒருவர் கைநிறைய சம்பாதித்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது உற்றாரை, ஊரில் உள்ளவர்களைச் சந்திக்க மனோ வேகம் தூண்டும். ஆனால் பயணத்தின் தூரம், கால அவகாசம் மெதுவாகத்தானே இயங்கும். அதுபோல நீங்கள் மற்றவர்களையும், மற்றவர்களின் செயல்களையும் எதிர்பார்க்கும் நிலையில், அந்தப் பலன் தாமதமாகும்போது அதை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்காது.

பரிகாரம்: திண்டிவனம்- புதுச்சேரி பாதையில் மயிலம் அருகில் திருவக்கரையில் வக்கிர காளியம்மன் கோவிலிலில் குண்டலினி முனிவர் ஜீவசமாதியை வழிபடவும்.

ப்

bala281218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe