இந்த வார ராசி பலன் 26-5-2019 முதல் 1-6-2019 வரை

/idhalgal/balajothidam/week-rasipala-2652019-1062019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

26-5-2019 முதல் 1-6-2019 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

28-5-2019- மீனம்.

30-5-2019- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 1, 2, 3.

செவ்வாய்: திருவாதிரை- 2, 3.

புதன்: ரோகிணி-4, மிருகசீரிடம்- 1.

குரு: கேட்டை- 4.

சுக்கிரன்: பரணி- 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

கிரக மாற்றம்:

குரு, சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் ராகு சாரத்தில் (திருவாதிரை), ராகுவோடு சம்பந்தம். அவர்களுக்கு 9-ல் உள்ள சனி- கேது பார்வை. பொதுவாக செவ்வாய், சனி சேர்ந்தாலோ, பார்த்தாலோ பிரச்சினைதான். அத்துடன் ராகு- கேது சம்பந்தமும் இருந்தால் கேட்கவேண்டுமா? குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த நிலைதான்! என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. ஒரு ஜாதகத்தில் தர்மகர் மாதிபதி யோகம் இருந்தாலும் அல்லது திரிகோண பலம் பெற் றாலும், அந்த ஜாதகர் கழுவின மீனில் நழுவின மீனாகவும், நித்திய கண்டம் ஏற்பட்டாலும் பூரண ஆயுசு என்பதுபோலவும், மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற மாதிரியும், அரசியல் தலை வர்கள் புல்லட் புரூப் கவசம் அணிந்து நடமாடுவதுபோலவும் ஒரு பாதுகாப்பு உண்டாகும். 9-க்குடைய குரு 8-ல் மறைவது ஒருவகையில் மைனஸ் பாயின்டு என்றாலும், அவர் வக்ரம்- கேட்டை (புதன்) சாரம் பெறுவதாலும், புதனும் குருவும் சமசப்தமம் என்பதாலும், டபுள் மைனஸ்= பிளஸ் என்ற விதிப்படி, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதுபோல கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக கைகொடுக்கும். 5-க்குடைய சூரியன் 2-ல் நின்று 9-க்குடைய குருவைப் பார்ப்பதால் (இரண்டு திரிகோணாதிபதிகள் சம்பந்தம்) பொருளாதாரத்தில் பாதிப்பில்லை. 6-க்குடைய புதன் 2-ல் இருப்பதால், சிலருக்கு கடன் இருந்தாலும் அதை சுபக்கடனாக ஏற்றுக்கொள்ளலாம். கடனால் மதிப்பு, மரியாதை, கௌரவம் பாதிக்காது. "கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று அந்தக் காலத்திலேயே கம்பர் பாடியுள்ளார். ""நீங்கள் கொடுக்கும்போது கொடுங்கள்'' என்று கடன் கொடுத்தவர்கள் கூறினாலும், உங்கள் மனது நாணயத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்று துடிக்கும். ஸல் அல் முகமதுநபிகள் ஒரு இடத்தில் கூறினார்- ""வாங்கிய கடனைத் திருப்பித்தரவேண்டும் என்று விசுவாசமாக நினைப்பவருக்கு அல்லா அள்ளித் தருவார். கடனைத் திருப்பித் தரக்கூடாது என்று நினைப்பவருக்கு அவர் தேவைக்கே கிடைக்காது'' என்று! அதுதான் உண்மை.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் இருந்தாலும் சுயசாரத்தில் (பரணியில்) இருப்பதால், விரயம் என்பது சுபவிரயமாக- மங்கள விரயமாக மாறிவிடும். செவ்வாய்- புதன் வீட்டில், புதன்- சுக்கிரன் வீட்டில்- சுக்கிரன் செவ்வாய் வீட்டில் இருப்பதால், இந்த மூவருக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. மலை நார்த்தங்காய்க்கும், கடல் உப்புக்கும் தொடர்பு ஏற்படுவதுபோல- அந்த தொடர்பு சுவை கூட்டும்! செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல், வாக்கு நாணயம், சுபச்செலவு போன்ற 12, 1, 2 ஆகிய வீட்டுப் பலன்கள் திருப்திகரமாக அமையும். அதுமட்டுமல்ல; இந்த கிரகப் பரிவர்த்தனையால் அட்டமச்சனியின் கெட்ட பலனும் விட்டுவிலகிவிடும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். வீடு அல்லது வேலை, உத்தியோக மாற்றம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால், வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். அட்டமச்சனியால் குறுக்கீடு களும் தடைகளும் ஏற்பட்டால் நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம் செய்துகொண்டால் அதுவே பரிகார சாந்தியாக அமைந்துவிடும். பரிகாரம் வேலை செய்யுமா? கிரகப் பலனை மாற்றியமைக்க முடியுமா என்று ஒரு சந்தேகம் எழலாம். மழை பெய்யும்போது குடைபிடித்துப் போவது பரிகாரம். மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தலை நனையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம் அல்லவா! கையுறை (ரப்பர் கிளவுஸ்) அணிந்து கொண்டு கரன்டு வேலை செய்தால் "ஷாக்' அடிக்காது அல்லவா? கையுறை பரிகாரம்! படிப்பு தெளிவில்லாத மாணவனுக்கு "டியூசன்'தான் பரிகாரம். இப்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

26-5-2019 முதல் 1-6-2019 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

28-5-2019- மீனம்.

30-5-2019- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 1, 2, 3.

செவ்வாய்: திருவாதிரை- 2, 3.

புதன்: ரோகிணி-4, மிருகசீரிடம்- 1.

குரு: கேட்டை- 4.

சுக்கிரன்: பரணி- 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

கிரக மாற்றம்:

குரு, சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் ராகு சாரத்தில் (திருவாதிரை), ராகுவோடு சம்பந்தம். அவர்களுக்கு 9-ல் உள்ள சனி- கேது பார்வை. பொதுவாக செவ்வாய், சனி சேர்ந்தாலோ, பார்த்தாலோ பிரச்சினைதான். அத்துடன் ராகு- கேது சம்பந்தமும் இருந்தால் கேட்கவேண்டுமா? குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த நிலைதான்! என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. ஒரு ஜாதகத்தில் தர்மகர் மாதிபதி யோகம் இருந்தாலும் அல்லது திரிகோண பலம் பெற் றாலும், அந்த ஜாதகர் கழுவின மீனில் நழுவின மீனாகவும், நித்திய கண்டம் ஏற்பட்டாலும் பூரண ஆயுசு என்பதுபோலவும், மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற மாதிரியும், அரசியல் தலை வர்கள் புல்லட் புரூப் கவசம் அணிந்து நடமாடுவதுபோலவும் ஒரு பாதுகாப்பு உண்டாகும். 9-க்குடைய குரு 8-ல் மறைவது ஒருவகையில் மைனஸ் பாயின்டு என்றாலும், அவர் வக்ரம்- கேட்டை (புதன்) சாரம் பெறுவதாலும், புதனும் குருவும் சமசப்தமம் என்பதாலும், டபுள் மைனஸ்= பிளஸ் என்ற விதிப்படி, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதுபோல கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக கைகொடுக்கும். 5-க்குடைய சூரியன் 2-ல் நின்று 9-க்குடைய குருவைப் பார்ப்பதால் (இரண்டு திரிகோணாதிபதிகள் சம்பந்தம்) பொருளாதாரத்தில் பாதிப்பில்லை. 6-க்குடைய புதன் 2-ல் இருப்பதால், சிலருக்கு கடன் இருந்தாலும் அதை சுபக்கடனாக ஏற்றுக்கொள்ளலாம். கடனால் மதிப்பு, மரியாதை, கௌரவம் பாதிக்காது. "கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று அந்தக் காலத்திலேயே கம்பர் பாடியுள்ளார். ""நீங்கள் கொடுக்கும்போது கொடுங்கள்'' என்று கடன் கொடுத்தவர்கள் கூறினாலும், உங்கள் மனது நாணயத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்று துடிக்கும். ஸல் அல் முகமதுநபிகள் ஒரு இடத்தில் கூறினார்- ""வாங்கிய கடனைத் திருப்பித்தரவேண்டும் என்று விசுவாசமாக நினைப்பவருக்கு அல்லா அள்ளித் தருவார். கடனைத் திருப்பித் தரக்கூடாது என்று நினைப்பவருக்கு அவர் தேவைக்கே கிடைக்காது'' என்று! அதுதான் உண்மை.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் இருந்தாலும் சுயசாரத்தில் (பரணியில்) இருப்பதால், விரயம் என்பது சுபவிரயமாக- மங்கள விரயமாக மாறிவிடும். செவ்வாய்- புதன் வீட்டில், புதன்- சுக்கிரன் வீட்டில்- சுக்கிரன் செவ்வாய் வீட்டில் இருப்பதால், இந்த மூவருக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. மலை நார்த்தங்காய்க்கும், கடல் உப்புக்கும் தொடர்பு ஏற்படுவதுபோல- அந்த தொடர்பு சுவை கூட்டும்! செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல், வாக்கு நாணயம், சுபச்செலவு போன்ற 12, 1, 2 ஆகிய வீட்டுப் பலன்கள் திருப்திகரமாக அமையும். அதுமட்டுமல்ல; இந்த கிரகப் பரிவர்த்தனையால் அட்டமச்சனியின் கெட்ட பலனும் விட்டுவிலகிவிடும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். வீடு அல்லது வேலை, உத்தியோக மாற்றம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால், வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். அட்டமச்சனியால் குறுக்கீடு களும் தடைகளும் ஏற்பட்டால் நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம் செய்துகொண்டால் அதுவே பரிகார சாந்தியாக அமைந்துவிடும். பரிகாரம் வேலை செய்யுமா? கிரகப் பலனை மாற்றியமைக்க முடியுமா என்று ஒரு சந்தேகம் எழலாம். மழை பெய்யும்போது குடைபிடித்துப் போவது பரிகாரம். மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தலை நனையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம் அல்லவா! கையுறை (ரப்பர் கிளவுஸ்) அணிந்து கொண்டு கரன்டு வேலை செய்தால் "ஷாக்' அடிக்காது அல்லவா? கையுறை பரிகாரம்! படிப்பு தெளிவில்லாத மாணவனுக்கு "டியூசன்'தான் பரிகாரம். இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் பரிகாரம் உண்டு. அதை முறையாகச் செய்தால் சரியான தீர்வு உண்டாகும். பரிகாரத்திலும் பக்க விளைவை ஏற்படுத்தும் போலிகள் உண்டு; பார்த்துச் செய்யவேண்டும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 12-ல் சுக்கிரன் வீட்டில். சுக்கிரன்- புதனுக்கு 12-ல் செவ்வாய் வீட்டில். செவ்வாய் புதன் வீட்டில்- ஜென்ம ராசியில். இப்படி புதன்- செவ்வாய்- சுக்கிரன் மூவருக்கும் ஒரு இணைப்பு ஏற்படுகிறது. சங்கிலித் தொடர்போல! அதனால் குரு 6-ல் மறைந்த தோஷம் நீங்கும். தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைத்து வெற்றிபெறும் கட்சிகள், கூட்டணி அரசு அமைத்து ஆட்சிபுரிவதுபோல, ஒரு அனுகூலம் உண்டாகும். குரு ராசிக்கு 6-ல் மறைந்தாலும், ராசிநாதன் புதன் சாரம் பெற்று (கேட்டை 4-ல்) புதனைப் பார்ப்பதாலும், குரு நவாம்சத்தில் மீனத்தில் ஆட்சிபெறுவதாலும், 7-ஆம் இடம், 10-ஆம் இடப் பலன்கள் அதியற்புதமாக விளங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு அன்யோன்யம், தாம்பத்திய ஒற்றுமை, வாரிசு யோகம் உண்டாகும். அதேபோல வேலை தேடி அலைவோருக்கு நல்ல வேலை- சம்பாத்தியமும், சுயதொழில் யோகமும், தொழில் விருத்தியும் மேன்மையும் உண்டாகும். சிலர் வெளிநாட்டுக் குப்போய் கைநிறைய சம்பாதிக்கலாம். வீடு, வாகனம் போன்ற கனவுத்திட்டங் களை நிறைவேற்றலாம். 6-ல் உள்ள குரு இதுசம்பந்தமான சுபக் கடன்களை உருவாக்கித் தருவார். 7-ல் சனி, கேது; அவர்களுக்கு செவ்வாய், ராகு பார்வை. 7-க்குடைய குரு 6-ல் மறைவு என்பதால், ஜாதக அமைப்பில் தசாபுக் திகள் பாதகமாக இருந்தால், கலப்புத் திருமணம், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம் போன்ற பலன்களைச் சந்திக்கக் கூடும். சிலர் காவல் நிலை யத்தில் திருமணம் செய்யும் நிலை ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் அவை சுமுகமாக நிறைவேற காரைக் குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் (ஆண்களுக்கு), பார்வதி சுயம்வர கலாஹோமம் (பெண்களுக்கு) செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் வேறுபல ஹோமங்களும் செய்யப்படும். (19 வகை).

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு குரு பார்வை கிடைப்பது சிறப்பு. அதனால் 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைந்த தோஷம் விலகும். குரு பார்க்க கோடி தோஷம் விலகும் என்பது ஜோதிட விதி. அதேசமயம் 7, 8-க்கு டைய சனி 6-ல் மறைவ தோடு, செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் பெறுவது குற்றம்தான். ஜனன ஜாத கத்திலும் மேற்படி செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் 7 அல்லது 7-க்குடையவருக்கு இருந் தால், கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் ஏற்படலாம். அப்படி யிருந்தால் அதற்குப் பரிகார மாக ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமமும், பெண் களுக்கு பார்வதி சுயம்வர கலாஹோமமும், இருவருக் கும் பொதுவாக காமோ கர்ஷண ஹோமமும் செய்து கொள்ள வேண்டும். காரைக் குடியில் சுந்தரம் குருக் களிடம் மேற்படி ஹோமம் செய்து நிவர்த்தி பெறலாம். (செல் 99942 74067). மேற்படி செவ்வாய்- சனி தோஷ அமைப்பு இல்லாதவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், கருத் தொற்றுமையும் அடைய லாம். 9-ஆம் இடத்தை 9-க்குடைய குரு பார்ப்பதால், குலதெய்வம், இஷ்டதெய்வ வழிபாடு சித்திக்கும். சிலர் தந்தையின் தொழிலைக் கற்று, ஆர்வத்தோடும் அக்கறையோடும் செயல் படுத்தலாம். 10-க்குடைய செவ்வாய்- ராகு- கேது சம்பந்தம் பெறுவதால், சிலர் ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம் (மணி மந்திர ஔஷதம்), அருள்வாக்கு கூறுவது போன்ற ஆன்மிகத்து றையில் ஈடுபட்டு பேரும்புகழும் அடையலாம். அதேசமயம் அதை தெய்வத்திருப்பணித் தொண்டாக செயல்பட்டால் சிறப்பு! பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் செயல் பட்டால், எதிர்மறை விளைவுகளைச் சந்திக் கக்கூடும். எனக்குத் தெரிந்த ஒருவர் சுடலை மாடனை வழிபட்டு அருள்வாக்கு கூறிவந்தார். ஒருகாலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வழிதடுமாறிப் போய்விட்டார். அதன் விளைவுகளையும் சந்தித்துவிட்டார்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல்- 2, 11-க்குடைய புதனோடு சம்பந்தம். அவர் களுக்கு 5, 8-க்குடைய குரு பார்வை. குரு 8-க்குடையவர் என்பதால், சில கௌரவப் போராட்டங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டாலும், கழுவின மீனில் நழுவின மீனைப்போல பாதிப்பு இல்லாமல் தப்பிக்கலாம். அதுதான் குரு 5-க்குடையவர் என்பதன் பலன்! 6, 7-க்குடைய சனி 5-ல்; கேது, செவ்வாய், ராகு சம்பந்தம் என்ப தால், சிலருக்கு புத்திர தோஷம் இருக்கலாம். சிலருக்கு புத்திர சோகம் இருக்கலாம். குழந்தையே பிறக்காதது புத்திர தோஷம். குழந்தை பிறந்து அழிவது புத்திர சோகம். அழிவில்லாமல் உயிரோடிருந்து- முடியாமல் இருந்தாலும், அதைப் பார்த்து கண்ணீர் வடித்தாலும் புத்திர சோகம். எனக்குத் தெரிந்த பேங்க் அதிகாரிக்கு இரண்டு மகன்கள் இருந்தும், இருவரும் நரம்புத்தளர்ச்சியால் செயல்பட முடியாமல், செயலற்ற நிலை. அதைப் பரிபாலிக்க முடியாமல் ஊனமுற்றோர் சிகிச்சை மையத்தில் சேர்த்து விட்டார். இது புத்திர சோகம்! குழந்தையே இல்லையென்றால் சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான கணபதி ஹோமம் செய்யலாம். ஆரோக்கியக்குறைவு என்றால் தன்வந்திரி ஹோமமும் செய்ய வேண்டும். இந்த ஹோமத்தோடு படிப்பு, ஆயுள் தீர்க் கத்துக்கும் மற்ற ஹோமங்கள் செய்யலாம். திருமணமாகாத ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம் வரகலா ஹோமமும், பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு பதிகமன ஹோமம் அல்லது சதிகமன யோகமும் செய்ய வேண்டும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

rasi

கன்னி ராசிநாதன் புதன் 9-ல் 12-க்குடைய சூரியனோடு சம்பந்தம்! 9-க்குடைய சுக்கிரன் அதற்கு 12-ல் ராசிக்கு 8-ல் மறைவு. எனவே தகப்பனார் அல்லது தந்தைவழி சொத்துகள் வகையில் பிரச்சினைகளும், சங்கடங்களும், விவகாரங்களும் ஏற்படலாம். என்றாலும் குரு பார்ப்பதால், மலைபோல வரும் பிரச்சினைகள் பனிபோல விலகிப்போகும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவை யான பரிகார ஹோமப் பூஜைகள் செய்து கொள்ளலாம். திருபுவனம் (கும்பகோணம் அருகில்) மற்றும் காரைக்குடி நகர சிவன் கோவிலில் சரபேஸ்வர சந்நிதி உள்ளது. அங்கு சென்று ஞாயிறு ராகுகால பூஜையாகச் செய்தால் சத்ரு ஜெயம்! அல்லது அய்யாவாடி, தேவகோட்டை, மானாமதுரை வேதிய ரேந்தல் விலக்கு முதலிய இடங்களில் பிரத்தியங்கரா தேவிக்கு தனிச்சந்நிதி உண்டு. அங்கும் பூஜை செய்யலாம். சத்ரு ஜெயம், போட்டி, பொறாமை, கண் திருஷ்டி தோஷம் எல்லாம் ஓடிப்போய்விடும். 4-ல் சனி, கேது, செவ்வாய், ராகு சம்பந்தம் இருப்பதால், சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். சிலருக்கு ஜாதக பாதக தோஷம் இருந்தால், அறுவை சிகிச்சை வைத்தியம் ஏற்படலாம். அல்லது எதிர்பாராத விபத்துகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் தன்வந்தரி ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். இப்படி தனக்கு சங்கடம் வரவில்லையென்றால், தாயாருக்கு பாதிப் புகள் ஏற்பட இடமுண்டு. தாயாரும் இல்லாதவர்களுக்கு வாகனம், பூமி, நிலம், வீடு போன்ற அமைப்பில் பிரச்சினைகளும், விவகாரங்களும், வீண் விரயங்களும் உருவாக லாம். அப்படிப்பட்டவர்கள் தசாபுக்தி களை அனுசரித்து, பரிகார ஹோமங்கள் செய்துகொள்ளலாம். அல்லது பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கும் ஆரணவல்லியம்மனுக்கும் ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 7-ல் மேஷத்தில் இருக்கிறார். 7- கணவர் ஸ்தானம், மனைவி ஸ்தானம். அங்கு ராசிநாதன் இருப்பதால் திருமண மாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு கணவன்- மனைவி உறவில் நெருக்கமும், அன்பும், பாசமும் பெருகும். வாரிசு வேண்டுவோர்க்கு வாரிசு யோகமும் உருவாகும். வேலை தேடி அலையும் பெண்களுக்கு வேலை யோகம் அமையும். ஏற்கெனவே திருப்தியில்லாத வேலையில் இருப்போருக்கு திருப்தியான வேலையும் நிறைவான சம்பாத்தியமும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடப் பெயர்ச்சியும் எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு வெளிநாட்டு யோகமும் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்பும், வேலை வாய்ப்பும் எதிர்பார்க்கலாம். குடும்பச் சூழ்நிலையில் மகிழ்ச்சியும், மனநிறைவும், கலகலப்பும் உண்டாகும். உறவினர்கள் வகை நெருக்கமும் இணக்கமும் ஏற்படும். பிரிந்திருந்த சொந்தபந்தம் இணைந்து இன்புறும்படியான நிகழ்ச்சிகள் இடம்பெறும். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்றும், "நீரடித்து நீர் விலகாது' என்றும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளலாம். 2-ஆம் இடத்து குரு சிலருக்கு தனயோகத்தை வாரிவழங்குவார். வாக்குவண்மையும், வாக்கு நாணயமும் காப்பாற்றப்படும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், சிலர் அருள்வாக்கு கூறுமளவு அறிவாற்றல் பெருகும். கோவில் பூஜை, வைத்தியம், ஜோதிடம், ஆரூடம், கைரேகை போன்ற கலைகளில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். தேக ஆரோக் கியத்தில் தெளிவு காணப்படும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் கைமாற்றுக் கடன் கொடுத்திருந்தால், இப்போது அவை திரும்பக் கிடைக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 8-ல் ராகுவோடு சம்பந்தம். அவர்களுக்கு சனி, கேது பார்வை. பொதுவாக செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் இருந்தாலே பிரச்சினைதான். வீதியில் போகிற ஓணா னைப் பிடித்து மடியில் கட்டிக்கொண்டு குத்துது- குடையுது என்று புலம்புவதற்குச் சமம்! சிலரை வம்புவழக்கு தேடிவரும். ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும், ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும். (காந்தம்போல). சிலர் வம்பு வழக்குகளைத் தேடிப்போய், வலியப் போய் சந்திப்பார்கள். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொள்ளவேண்டும். எப்படியிருந்தாலும் ஜாதகரீதியான பரிகாரங்களைத் தேடிக் கொள்ளவும். அல்லது பிரத்தியங்கரா வழிபாடும், சரபேஸ்வரர் வழிபாடும் செய்ய லாம். அல்லது சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டி துர்க்கா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். எந்த ஒரு பிரச்சினைக்கும் அக்னி காரியமும், ஜலமும் (நீரும்)தான் தீர்வு. பஞ்சபூதத் தத்து வத்தில் நீரும் நெருப்பும் எல்லா வினைகளையும் போக்கவல்லது. அதனால் தான், தைப்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையில், வேண்டாதவற்றை நெருப் பிட்டுப் பொசுக்கி நீரால் சுத்தப்படுத்து கிறார்கள். பஞ்சபூதத் தத்துவத்தால் உருவான இந்த சரீரத்தை (இறந்த பிறகு சடலத்தை) மண்ணில் புதைக்கிறார்கள். அல்லது நெருப் பிட்டு எரிக்கிறார்கள். மண்ணும் நெருப்பும் பஞ்சபூதத்தில் அடங்கும். சனி, கேது, செவ் வாய், ராகு தோஷம் இருந்தாலும், அவை உங்களைப் பாதிக்காமலிருக்க குரு ஜென்ம ராசியில் நின்று காத்தருளுவார். என்றாலும் பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். அதனால்தான் வள்ளுவர் "யாகாவாராயினும் நாகாக்க- காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'' என்றார். அத்துடன் "தீயினால் சுட்டபுண் உள்ளாறும்- ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்றார். ஆறினாலும் மாறாமல் இருப்பது வடு.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

ஜென்மத்தில் சனி, கேது. இவர்களுக்கு செவ்வாய், ராகு பார்வை. அத்துடன் ராசிநாதன் குரு 12-ல் மறைவு. ஜென்மச்சனி வேறு! ஆக கோட்சாரம் எந்த அளவுக்கு உங்களுக்கு எதிர்மறையாக வேலை செய்யுமோ, அந்த அளவுக்கு சோதனையாகவும் வேதனையாகவும் அமையும். இருந்தாலும் உங்களுடைய தெய்வ பக்தியும், யாருக்கும் கெடுதல்செய்ய நினைக்காத நல்ல மனதும் உங்களுக்கு கவசமாக இருந்து, எந்தவித ஆபத்தும் அணுகாமல் காத்து நிற்கும். "நல்லவன் வாழ்வான்' என்பது ஆன்றோர் வாக்கு. "வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்' என்பதும் சான்றோர் வாக்கு. ஏழரைச்சனி அல்லது ஜாதக தசாபுக்திகள் உங்களுக்கு எதிர்மறைப் பலனாக வேலை செய்தாலும், உங்கள் நல்ல உள்ளமும் தெய்வ நம்பிக்கையும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பாற்றும். அதனால்தான் ஞானசம்பந்தப் பெருமான்- "நவகோளும் ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல- அடியார் அவர்க்கு மிகவே' என்று பாடினார். அடியார்களுக்கு ஆண்டவனே பாதுகாவலனாக- செக்யூரிட்டியாக விளங்குவான். இருந்தாலும் மழையில் நனைந்தால் குளிர்ச்சி பிடித்து தும்மல் வருவதுபோல கிரகங்களின் பாதிப்பு காணப்பட்டாலும், ஜலதோஷ மாத்திரை சாப்பிட்டுக்கொள்வதுபோல, இறைவழிபாடு உங்களுக்கு கவசமாக விளங்கும். 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் ஒன்றுகூடி இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அது உங்களுக்கு கவசம் என்றாலும், 6-ல் இருப்பதால் காய்ந்த விறகு உடனே பற்றிக்கொள்ளும். ஈர விறகு சற்று தாமத மாகப் பற்றிக்கொள்வதுபோல தாமதப் பலன். (லேட்-பிக்கப்).

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைவு. குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் குருவுக்கு 8-ல் மறைவு. ஆக எல்லாம் மறைவாக இருப்பதால், "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' என்று "தில்லானா மோகனாம் பாள்' திரைப்படத்தில் பாடியமாதிரி மர்மம் தான்! இது "ஈகோ' பிராப்ளமா? அல்லது "கௌரவப் பிரச்சினையா?' எதுவானாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்று வறட்டுக் கௌரவம். சனியும் வக்ரம்- சனிக்கு வீடுகொடுத்த குருவும் வக்ரம். அதனால், சிலசமயம் நீங்கள் செய்யும் செலவுகள் வீண்செலவாக அமைந்தாலும், சிலசமயம் எதிர்பாராத திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். வக்ரத்தில் உக்ரபலம்! சனி 12-ல் வக்ரம். குரு 11-ல் வக்ரம்! எம்.ஜி.ஆர் பாடியதுமாதிரி "நடக்கும் என்பார் நடக்காது! நடக்காது என்பார் நடந்துவிடும்!' அதாவது லாபம் வரும் என்று நம்பி செய்த காரியங்களில் எதிர்பாராத நஷ்டம் வந்துசேரும். நஷ்டம் வந்துவிடும் என்று செய்யாமல் விட்ட சில காரியங்களில் லாபம் உண்டாகிவிடும். (மற்றவர்களுக்கு.) மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால், மற்றவர்களால்- நீங்கள் நம்பக்கூடியவர்களால் வெட்டிச் செலவும் தண்டச்செலவும் உண்டாகலாம். எதிர்பாராதவர்களால் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத நன்மைகளும் நடந்தேறும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் வக்ரம். அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல்- ராசிக்கு 10-ல். உத்தியோகத்தில் அல்லது வேலையில் அல்லது தொழில்துறையில் சில மாற்றங்கள் உண்டாகும். அது எந்த மாற்றமாக இருந்தாலும் சரி- அது பிறரால் பயன் தரும் மாற்றமாகவும், நலம்தரும் மாற்றமாகவும்தான் இருக்கும். சிலர் வீடு மாறலாம். சிலர் வேலை மாறலாம். சிலர் தொழில் மாறலாம். சிலர் பள்ளி மாறலாம். சிலர் ஊர் மாறலாம். ஒருசிலர் அரசு வேலையை எதிர்பார்த்து லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதா வேண்டாமா என்று குழப்பம் அடையலாம். இயற்கையாக வேலை கிடைப்பது ஒருவகை. பணம் (பெருந்தொகை) கொடுத்து வேலை வாங்குவது ஒருவகை. வேலைக்காக கொடுத்த பணத்தை சம்பள மாகப் திரும்பப் பெறுவதற்குள், வேலை பிடிக்கவில்லை என்று வேலையை விட்டுவிட்டால் கொடுத்த பணம் வேஸ்ட் தானே! அதனால் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுத்து செயல்படுவது நல்லது. ஒரு காலத்தில் கலைஞர் போட்ட திட்டங்களை யெல்லாம், அவருக்குப் பிறகு அரசு அமைத்த அம்மா அரசு கேன்சல் செய்துவிட்டது. இப்படி எதிர்பாராத தர்மசங்கடங்களையும் சந்திக்க நேரலாம். கும்ப ராசிக்கு 2-ஆம் இடத்தை 2-க்குடைய குரு பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்ல சம்பவங்களும் உண்டாகும். புதிய தொழில் யோகமும் அமையும். ஏற்கெனவே தொழில்துறையில் இருப்பவர்கள் தொழில் விருத்தி செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். லாபம் பெருகும். கடன்களை அடைக்கலாம். போட்டி, பொறாமைகளை வென்று ஜெயிக்கலாம். பணவரவுக்கும் பஞ்சமில்லை. செலவுக்கும் பஞ்சமில்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் திரிகோணம். ராசிக்குப் பார்வை. ராசிக்கு 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-க்கு 9-க்குடைய செவ்வாய் பார்வை- அதுவும் தர்மகர் மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். அதேசமயம் சனி, கேது; செவ்வாய், ராகு சம்பந்தம் இருப்பதால், சில சங்கடங்களும், சோதனைகளும், சம்பவங்களும் வேதனைகளும் உங்களைச் சுற்றி நடக்கலாம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும், சௌகர்யங்களுக்கும் பாதிப்பு இல்லை; பஞ்சமில்லை. எந்தக் குறையுமில்லை. அதாவது உங்கள் காரியங்களிலும், செயல்களிலும் கடைசி நேரம்வரை தடையும் தாமதமும் காணப்படலாம். உதாரணமாக, ரயில் பயணத்துக்கு பல வாரங்களுக்கு முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்தாலும், டிக்கெட் கன்பர்ம் ஆகாமல் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். அதனால் மனம் "பக்-பக்-திக்-திக்' என்று அலைபாயும். பயணத்துக்கு முதல்நாள் டிக்கெட் கன்பர்ம் ஆகிவிடும். இப்படி குடும்பத்தில் உள்ளவர்களை ஒன்றுதிரட்டி ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது சிரமமாக இருக்கும். ஒருவர் காட்டுக்கு இழுத்தால் இன்னொருவர் மேட்டுக்கு இழுப்பார். ஒவ்வொருவரும் அவரவர் தோதுபோல- அவரவர்களின் சௌகர் யத்தைக் கருதிதான் செயல்படுத்த முனைவார்கள். அதனால் விரக்தியும் வெறுப்பும் மேலோங்கி எப்படியாவது தொலையட்டும் என்று முடிவுக்கு வருவீர்கள். அதற்காக அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிப் போகவும் மாட்டீர்கள். எல்லாரையும் இழுத்துப்போட்டு கவுன்சிலிங்செய்து சமாதானப்படுத்தி, ஊர்கூடி தேரை இழுத்து நிறுத்தலாம்.

bala310519
இதையும் படியுங்கள்
Subscribe