ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
25-3-2019- விருச்சிகம்.
27-3-2019- தனுசு.
29-3-2019- மகரம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரட்டாதி- 2, 3, 4.
செவ்வாய்: கிருத்திகை- 2, 3, 4.
புதன்: சதயம்- 3, 4.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: அவிட்டம்- 3, 4, சதயம்- 1.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்: இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருக்கிறார். 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். பிள்ளைகள் வகையில் நல்ல பலன்களைச் சந்திக்கலாம். 9-ல் குரு மாறி ஆட்சியாக இருக்கிறார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். குரு ராசியைப் பார்க்கிறார். எனவே உங்களது செயல்பாடு, கீர்த்தி, புகழ், செல்வாக்கு நன்றாக இருக்கும். சனியை செவ்வாய் பார்க்கிறார். குரு, சனி, செவ்வாய் ராகு- கேது சம்பந்தம் பெறுகிறார்கள். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர். குரு- ஞானத்திற்கு அதிபதி. சுக்கிரன்- காமத்திற்கு அதிபதி. தவநிலையில் இருக்கும் விசுவாமித்திரர் மேனகையின்மீது ஆசைப்பட்டு, தவநிலையிலிருந்து தவறி, சகுந்தலையைக் குழந்தையாகப் பெற்றெடுத் தார்கள். 12-ல் சூரியன் மறைகிறார். தகப்பனார் வழியில் சங்கடங்களும் வருத்தங்களும் உண்டாகலாம். என்றாலும் குரு ராசியைப் பார்க்கும் காரணத்தால் சங்கடங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 2-க்குடைய சுக்கிரன் 11-ல் இருக்கிறார். பொருளாதார வகையில் சிக்கல்களுக்கு இடமிருக்காது. தேவைகள் நிறைவேறும். 3-ல் ராகு- சகோதர வகையில் சகாயமும் ஆதரவும் ஏற்படும். தாய்மாமன்வழியில் செலவுகளும் விரயங்களும் உண்டாகும். 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால், பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிகளும் பூர்த்தியாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் இக்காலம் நிறைவேற்றும் வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி கெடுதல் செய்யமாட்டார் என்றாலும், 2-ல் ராகுவும், அதைப் பார்க்கும் கேதுவும் காரியத்தடை, தாமதம் ஆகிய வற்றைத் தரலாம். 8-க்குடைய குரு 8-ல் ஆட்சி, மறைவு. வாகன வகையில் பழுதுச்செலவுகள் அல்லது விரயங்கள் ஏற்படலாம். ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார்; 10-க்குடைய சனியால் பார்க்கப்படுகிறார். தொழில்துறையில் ஏற்பட்ட தொய்வுகள் அகலும். வியாபாரரீதியாக ஒப்பந்தமாகாமல் இழுபறியாக இருக்கும்நிலை மாறும் வாய்ப்புகள் அமையும். 2-ல் உள்ள ராகு காரணமாக குடும்பத்தில் குழப்பம், ஒற்றுமைக்குறைவு, கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளைச் சந்தித்தாலும், 8-ல் உள்ள குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அவற்றை சமாளித்து குடும்பக் குழப்பங்களைத் தீர்க்கலாம். 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் அமர்ந்து 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீடு, மனை ஆகியவற்றில் சில சீர்திருத்தங்களைச் செய்யலாம். சிலர் பழைய வீட்டைப் பழுதுபார்க்கும் செலவுகளுக்கான வங்கிக்கடன் அல்லது தனியார் கடனை எதிர்பார்க்கலாம். கடனுதவியும் கிடைக்கும். தேக சுகத்தில் சிறுசிறு வைத்தியச்செலவுகள் வந்து விலகும். பாதிப்புகளுக்கு இடமிருக்காது. செவ்வாய் 7-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணத்தடை அல்லது தாமதங்களைச் சந்திக்கநேரும். சிலர் காதல் திருமணம், கலப்புத் திருமணங்களை சந்திக்கலாம். எந்தக் காரியமும் தாமதமாக செயல்பட்டாலும், 11-ல் இருக்கும் சூரியன் முடிவில் காரிய வெற்றியைத் தருவார். தோல்விக்கு இடமில்லை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகு நிற்கிறார். 7, 10-க்குடைய குரு சாரம் பெறு கிறார். (புனர்பூசம்). சாரம் கொடுத்த குரு 7-ல் ஆட்சி பெற்று ராகுவையும் பார்க்கிறார்; ஜென்ம ராசியையும் பார்க் கிறார். ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெற்று (கும்பம்) வீடு கொடுத்த சனியின் பார்வையையும் பெறுகிறார். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, கௌரவம் ஆகிய வற்றுக்கு ஏதும் குறைவில்லை. நடைமுறை வாழ்க்கை சுமுகமாக இய
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
25-3-2019- விருச்சிகம்.
27-3-2019- தனுசு.
29-3-2019- மகரம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரட்டாதி- 2, 3, 4.
செவ்வாய்: கிருத்திகை- 2, 3, 4.
புதன்: சதயம்- 3, 4.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: அவிட்டம்- 3, 4, சதயம்- 1.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்: இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருக்கிறார். 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். பிள்ளைகள் வகையில் நல்ல பலன்களைச் சந்திக்கலாம். 9-ல் குரு மாறி ஆட்சியாக இருக்கிறார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். குரு ராசியைப் பார்க்கிறார். எனவே உங்களது செயல்பாடு, கீர்த்தி, புகழ், செல்வாக்கு நன்றாக இருக்கும். சனியை செவ்வாய் பார்க்கிறார். குரு, சனி, செவ்வாய் ராகு- கேது சம்பந்தம் பெறுகிறார்கள். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர். குரு- ஞானத்திற்கு அதிபதி. சுக்கிரன்- காமத்திற்கு அதிபதி. தவநிலையில் இருக்கும் விசுவாமித்திரர் மேனகையின்மீது ஆசைப்பட்டு, தவநிலையிலிருந்து தவறி, சகுந்தலையைக் குழந்தையாகப் பெற்றெடுத் தார்கள். 12-ல் சூரியன் மறைகிறார். தகப்பனார் வழியில் சங்கடங்களும் வருத்தங்களும் உண்டாகலாம். என்றாலும் குரு ராசியைப் பார்க்கும் காரணத்தால் சங்கடங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 2-க்குடைய சுக்கிரன் 11-ல் இருக்கிறார். பொருளாதார வகையில் சிக்கல்களுக்கு இடமிருக்காது. தேவைகள் நிறைவேறும். 3-ல் ராகு- சகோதர வகையில் சகாயமும் ஆதரவும் ஏற்படும். தாய்மாமன்வழியில் செலவுகளும் விரயங்களும் உண்டாகும். 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால், பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிகளும் பூர்த்தியாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் இக்காலம் நிறைவேற்றும் வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி கெடுதல் செய்யமாட்டார் என்றாலும், 2-ல் ராகுவும், அதைப் பார்க்கும் கேதுவும் காரியத்தடை, தாமதம் ஆகிய வற்றைத் தரலாம். 8-க்குடைய குரு 8-ல் ஆட்சி, மறைவு. வாகன வகையில் பழுதுச்செலவுகள் அல்லது விரயங்கள் ஏற்படலாம். ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார்; 10-க்குடைய சனியால் பார்க்கப்படுகிறார். தொழில்துறையில் ஏற்பட்ட தொய்வுகள் அகலும். வியாபாரரீதியாக ஒப்பந்தமாகாமல் இழுபறியாக இருக்கும்நிலை மாறும் வாய்ப்புகள் அமையும். 2-ல் உள்ள ராகு காரணமாக குடும்பத்தில் குழப்பம், ஒற்றுமைக்குறைவு, கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளைச் சந்தித்தாலும், 8-ல் உள்ள குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அவற்றை சமாளித்து குடும்பக் குழப்பங்களைத் தீர்க்கலாம். 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் அமர்ந்து 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீடு, மனை ஆகியவற்றில் சில சீர்திருத்தங்களைச் செய்யலாம். சிலர் பழைய வீட்டைப் பழுதுபார்க்கும் செலவுகளுக்கான வங்கிக்கடன் அல்லது தனியார் கடனை எதிர்பார்க்கலாம். கடனுதவியும் கிடைக்கும். தேக சுகத்தில் சிறுசிறு வைத்தியச்செலவுகள் வந்து விலகும். பாதிப்புகளுக்கு இடமிருக்காது. செவ்வாய் 7-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணத்தடை அல்லது தாமதங்களைச் சந்திக்கநேரும். சிலர் காதல் திருமணம், கலப்புத் திருமணங்களை சந்திக்கலாம். எந்தக் காரியமும் தாமதமாக செயல்பட்டாலும், 11-ல் இருக்கும் சூரியன் முடிவில் காரிய வெற்றியைத் தருவார். தோல்விக்கு இடமில்லை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகு நிற்கிறார். 7, 10-க்குடைய குரு சாரம் பெறு கிறார். (புனர்பூசம்). சாரம் கொடுத்த குரு 7-ல் ஆட்சி பெற்று ராகுவையும் பார்க்கிறார்; ஜென்ம ராசியையும் பார்க் கிறார். ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெற்று (கும்பம்) வீடு கொடுத்த சனியின் பார்வையையும் பெறுகிறார். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, கௌரவம் ஆகிய வற்றுக்கு ஏதும் குறைவில்லை. நடைமுறை வாழ்க்கை சுமுகமாக இயங்கும். தொழில்துறையிலும், வியாபாரத்திலும் திட்டமிட்டு வளர்ச்சிக்கான முயற்சிகளை செயல்படுத்தி லாபம் காணலாம். போட்டி, பொறாமைகளை வென்று முன்னேறலாம். 10-ல் சூரியன் பலம்பெறுவதால் அரசுத்துறை அல்லது தனியார்துறையில் பணிபுரிகிறவர்களுக்கு இக்காலம் நற்காலம், பொற்காலம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஆகிய நன்மைகள் எல்லாம் எளிதாக ஈடேறும். தாராளமான பணப்புழக்கமும், தேக்கமில்லாத வரவு- செலவுகளும் நடப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். குடும்பத்தார் விரும்பும் பொருட்களையெல்லாம் தடையில்லாமல் வாங்கிக்கொடுத்து திருப்திப்படுத்தலாம். ஏற்கெனவே வாங்கிய கடன்களோடு புதுக்கடன்கள் ஏற்பட்டாலும், அவற்றையும் பிரச்சினையின்றித் தீர்க்கலாம். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். ஜென்ம ராகு, சப்தமக் கேதுவால் ஒருசிலருக்கு தேக ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உண்டானாலும், குரு சம்பந்தம் பெறுவதால் எளியமுறையில் சுகம் காணலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, சனி, கேதுவும், 8-ல் புதன், சுக்கிரனும் இருப்பதால், இந்த வாரம் சிறு காரியங்களை செயல்படுத்துவதில் சிரமம், சிக்கல் காணப்படலாம். என்றாலும் 2-க்குடைய சூரியன் 9-ல் திரிகோணம் பெறுவதால், பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. தாராளமான பணப்புழக்கத்தால் தேவைகள் யாவும் பூர்த்தியடையும். அதேசமயம் எல்லா வகையிலும் "டென்ஷன்' இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல், குறிப்பிட்ட நேரத்தில் தூங்க முடியாமல் அலைச்சலும் திரிச்சலும் அதிகமாக இருக்கும். அதனால் சிலசமயம் வயிற்றுக்குத் தொந்தரவும் ஏற்படலாம். எட்டு மணிக்கு சாப்பிட வேண்டிய காலை சிற்றுண்டியை பதினோரு மணிக்குச் சாப்பிடுவது, பகல் ஒரு மணிக்கு சாப்பிட வேண்டிய மதிய உணவை பிற்பகல் நான்கு மணிக்கு எடுத்துக்கொள்வது என நேரங்கெட்ட நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கும். அல்லது தொந்தரவு இருக்கும். அதேபோல இரவு கண்விழித்து பல காரியங்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் மனதிற்கு சங்கடமாகவும் இருக்கும். என்றாலும் 10-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பதாலும், 6-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் எல்லா பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து திட்டமிட்டபடி நிறைவேற்றலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து ஒருசிலருக்கு தொழில்துறை அல்லது வாழ்க்கையில் அன்புத் தொல்லைகள் அதிகமாக இருக்கும். ஒருசிலருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். அரசுப்பணியில் இருப்போர் அடுத்தவர் வேலையையும் சேர்த்துப் பார்க்கும் சூழ்நிலை அமையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு 5-ல் திரிகோணமாகவும், ஆட்சியாகவும் இருந்து ராசியைப் பார்க்கிறார். 9-க்குடைய செவ்வாய் 10-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகம் அடைகிறார். எனவே சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலை, உத்தியோகம், தொழில்துறையில் விறுவிறுப்பாகவும் செயல்படுவீர்கள். ஆர்வத்தாலும், அக்கறையாலும் தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றி உண்டாகும். திட்டமிட்டபடி எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நிறைவேறும். "தீயா வேலை செய்யணும் குமாரு' என்று திரைப்படம் வந்தமாதிரி தீயாகப் பணியாற்றுவீர்கள். தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். திறமையாக வெற்றி காணுவீர்கள். 2, 11-க்குடைய புதன் 3, 10-க்குடைய சுக்கிரனுடன் 7-ல் அமர்ந்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக, திருமணமானவர்களுக்கு மனைவி துணையாக இருப்பார். திருமணமாகாதவர்களுக்கு தாயாரும் அல்லது உடன்பிறப்புகளும் உதவியாக இருப்பார்கள். 5-ல் கேது- சில நேரங்களில் உங்கள் திட்டங்களில் குழப்பத்தை உருவாக்கினாலும், தன்னம்பிக்கை, தைரியத்தாலும், விடாமுயற்சியாலும் அவற்றை எதிர்கொண்டு செயல்பட்டு, வெற்றி முத்திரை பதிக்கலாம். சிம்ம ராசிக்கு ராஜயோகாதிபதியான செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்ப்பதால், உங்கள் விடாமுயற்சிக்கும், வெற்றிக்கும் குருவருளும் திருவருளும் துணைபுரியும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார். அவருடன் 2, 9-க்குடைய சுக்கிரனும் 6-ல் மறைகிறார். அவர்களுக்கு வீடு கொடுத்த சனி 4-ல் நின்று ராசியைப் பார்க்கிறார்; ராசிநாதனையும் பார்க்கிறார். மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக, எல்லா முயற்சிகளும் முழுமையடையாமல் அரைகுறையாக நிற்கும். ஒருசிலர் கடனை வாங்கி கடனைக் கொடுக்கும்படி சூழ்நிலைகள் அமையும். பொதுவான பழமொழி- "கடனை வாங்கிக் கடனைக் கொடுப்பவனும், மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று' என்று சொல்லுவார்கள். விரயாதிபதி சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், குடும்பத்தில் வரவுக்குமீறிய செலவுகளும், ஆடம்பரச் செலவுகளும் ஏற்படும். சிலசமயம் ஒரு செலவுக்கு, இரு செலவுகளும் உண்டாகும். சிலசமயம் தேவையற்ற செலவுகளும், வறட்டு ஜம்பத்துக்காக செய்யவேண்டிய செலவுகளும் ஏற்படலாம். எது அத்தியாவசியமோ அதை மட்டும் செய்தால் கடன் சுமை அதிகமாகாது. "சிக்கனம் சீரமைப்பு' என்பது பழமொழி. 10-ல் ராகு நிற்க- அவரை 5, 6-க்குடைய சனியும், கேதுவும் பார்ப்பதால் எந்தத் தொழில், செயலைச் செய்தாலும், "நாளை பார்க்கலாம், நாளை பார்க்கலாம்' என்று சோம்பேறித்தனமாக, அலட்சியமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் ஆடி ஓடி அவதிப்படநேரும். ஆமை முயலை முந்திய கதையாகவும் மாறிவிடும். ஆகவே, "ஒன்றே செய்; அதையும் நன்றே செய்; அதையும் இன்றே செய்' என்ற கொள்கைப்படி செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம்!
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். எந்த ஒரு கிரகமோ அல்லது ராசிநாதனோ அல்லது லக்னநாதனோ திரிகோணம் பெற்றாலும் அல்லது கேந்திரம் பெற்றாலும் அவர்களுக்கு ராஜயோகம் உண்டாகும். நற்பலன்கள் நடக்கும். திரிகோணம் என்பது "லட்சுமி ஸ்தானம்' என்றும், கேந்திரம் என்பது "விஷ்ணு ஸ்தானம்' என்றும் சொல்லப்படும். லட்சுமி ஸ்தானம்- தெய்வ கடாட்சத்தால் எல்லாம் நிறைவேறும். அதைத்தான் "காக்கை உட்காரப் பழம் விழுந்த கதை' என்பார்கள். கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்த நிலையாகும். விஷ்ணு ஸ்தானம் என்பது முயற்சி ஸ்தானம். "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலிலி தரும்' என்று வள்ளுவர் சொல்லுவார். ஆகவே முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். லட்சுமி புகழ்ச்சிக்கும் போற்றுதலுக்கும் மயங்கி, கேட்கும் வரத்தை உடனே கொடுத்துவிடுவார். விஷ்ணு பலவகையில் சோதனை செய்து பார்த்துதான் கேட்கும் வரம் கொடுப்பார். அதனால்தான் திரிகோணம் தெய்வாதீனம் என்றும், கேந்திரம் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்றும் சொல்வார்கள். 9-ல் உள்ள ராகு பக்தி சிந்தனை, குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வப் பிரார்த்தனை ஆகிய பலனைத் தருவார். 3-ல் உள்ள கேது, சனி உடன்பிறப்புகள் அல்லது பங்காளி வகையில் பிரச்சினைகளை உருவாக்குவர். அங்கு (3-ல்) ஆட்சிபெற்ற குரு அவற்றை சமாளிக்கும் மனப்பக்குவத்தையும், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'யென்றும், "நீரடித்து நீர் விலகாது' என்றும் அனுசரிக்கும் தன்மையை உருவாக்குவார். 7-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதால் கணவன்- மனைவியின் ஆரோக்கியத்தில் பிரச்சினை உருவாகலாம். ஆரோக்கியம் அல்லது உறவில் சிக்கல்! ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரத்தை செய்துகொள்ளலாம். ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி ஹோமம், கல்வித்தடை விலகி முன்னேற்றத்துக்கு ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி, நீலு சரசுவதி, வாக்வாதினி ஹோமம், திருமணத்துக்கு- பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமம், ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமம், முறையற்ற காதல் முறிவுக்கு காமோகர்ஷண ஹோமம், தொழில்வளர்ச்சிக்கு விஜயலட்சுமி ஹோமம், பணவசதிக்கு சொர்ணாகர்ஷண பைரவ ஹோமம், கடன் நிவர்த்திக்கு ரிண விமோசன ஹோமம் என்று ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு பரிகாரம் உண்டு. அதைத் தெரிந்து செயல்படவேண்டும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் பாவகாதிபதி பாவகத்தைப் பார்த்தால் பாவக புஷ்டி (பலம்) என்பது பலன்! அதாவது அந்த ராசிநாதனே அந்த ராசியைப் பார்த்தால், எல்லா குற்றங்களும் நில்லாமல் மறைந்துவிடும். அதேபோல அந்தந்த ராசிநாதன், அந்தந்த ராசிக்கு திரிகோணம் அல்லது கேந்திரம் பெற்றாலும் அந்த ராசி (பாவகம்) பலம்பெறும்! அந்தந்த ராசிநாதன் அதற்கு 6, 8, 12-ல் மறைந்தால் அந்த ராசி பலவீனம் அடையும். (பலம் குறையும்.) 6, 8, 12-ல் பாவகிரகங்கள் இருந்தால் விதிவிலக்கு. (பலம் பெறும்.) உதாரணமாக 3-ல் சனி, கேது- ராகு சம்பந்தம் பெறுவது நல்லது. இது பொதுவிதி. துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி 3-ல் மறைவது குற்றம் என்றாலும், தன் ஸ்தானத்தை (5-ஆம் இடத்தை) தானே (சனி) பார்ப்பதால் குற்றமில்லை. ஒரு பெண் தற்காப்புக்காக- தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மது அருந்திய ஒரு முரடனைத் தாக்குவது குற்றமாகாது. சட்ட விரோதமாகாது! அதேபோல 9-ஆம் இடத்தில் உள்ள ராகு ஆன்மிக ஞானத்தையும், பக்தி வழி பாடுகளையும் தரும். அதற்கு சனி பார்வை கிடைப்பதால் குலதெய்வ வழிபாட்டில் பிரச் சினைகளையும் உருவாக்கலாம். குலதெய்வக் கோவில்களிலும், அரசியலிலிலும், ஆன்மிகத் திலும் நல்லவர்களும் உண்டு. கெட்டவர் களும் உண்டு. அரசியலிலில் காமராஜரும், ஆன்மி கத்தில் காஞ்சிப் பெரியவரும் தூய்மையான வர்கள், நல்லவர்கள்! இன்றைய அரசியல்வாதி களில் 99 சதவிகிதம் ஊழல்வாதிகள்தான். அதேபோல காவியுடையில் உள்ளவர்களும் காமவெறியாளர்கள்தான். ஆக மனிதர்கள் மட்டுமல்ல; எல்லா வற்றிலும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. குரு துரோணர் இந்த உலகத்தில் எத்தனைப்பேர் நல்லவர்கள், எத்தனைப் பேர் கெட்டவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கும்படி கூறினார். துரியோதனன், ""எல்லாரும் கெட்டவர்கள்தான். நல்ல வர்களே இல்லை'' என்றான். தர்மர், ""எல்லாரும் நல்லவர்கள்தான். எவ்வளவு பெரிய கெட்டவர்களானாலும் அவர்களிட மும் ஒரு நல்ல குணம் இருக்கிறது'' என்றார். பிறக்கும்போது எல்லாரும் நல்லவரே! வளரும்போதுதான் நல்லவரும் கெட்டவராக மாறுவார்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். தனுசு ராசிக்கு 5-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந் தாலும் ராசியைப் பார்க்கிறார். செவ்வாயின் ராசியான மேஷத்தை குரு பார்க்கிறார். எனவே குருவுக்கும் செவ்வாய்க்கும் தொடர்பு ஏற்படுகிறது. அதனால் உங்கள் மதிப்பு, கௌரவம், மரியாதை, செல்வாக்கு ஆகியவை எதற்கும் குறைவு ஏற்படாது. மனதில் மகிழ்ச்சி நிலவும். இதயத்தில் இனிமை பொழியும். திட்டங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். ஜென்மச்சனி 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார்; 10-க்குடைய புதனையும் பார்க்கிறார். எனவே தொழில், வியாபாரம் செழிக்கும். லாபம் கொழிக்கும். புதுமுயற்சிகள் வெற்றியடையும். 9-ஆம் இடத்தை குரு பார்க்க, 9-க்குடைய சூரியன் குரு வீட்டில் (மீனத்தில்) இருப்பதால் தெய்வ அனுகூலம் தெளிவாக இருக்கும். இஷ்டதெய்வம் இனிதாக அருள்புரியும். குருவருளும் திருவருளும் குறைவற அருள் பாலிலிக்கும். குலதெய்வத் திருப்பணிகள் நிறைவேறும். சிலருக்கு குலதெய்வக் கடாட் சமும், அருள்வாக்கு சொல்லும் ஆற்றலும் அமையும். அரசியல்துறையில் இருப் போருக்கு அடுத்தடுத்து வெற்றிமேல் வெற்றி உண்டாகும். பதவி யோகமும் உண்டாகும். 9-க்குடைய சூரியன் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால் அரசியல் ஆதாயம், அனுகூலம் எதிர்பார்க்கலாம். 6-ல் உள்ள செவ்வாய் போட்டி, பொறாமை, கடன், நோய், வைத்தியச் செலவு போன்ற 6-ஆம் இடத்து பலன்களையெல்லாம் வேரோடு வீழ்த்தி விரட்டியடித்துவிடும். எதிரிகள் உதிரிகளாகிவிடுவார்கள். ஜாதகத்தில் களஸ்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இருந்தால் திருமணம் தடையாகும். அதற்குக் காரணம் 7-ல் உள்ள ராகு; அவரைப் பார்க்கும் சனி. நாகதோஷ நிவர்த்தி செய்தால் திருமணத்தடை விலகும். இருபாலரும் காமோகர்ஷண ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதிசுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் திருமணத்தடை விலகி மனநிறைவான துணை அமையும். காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு பேசலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். 5, 10-க்குடைய சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பூராடம்). 6, 9-க்குடைய புதன் சுக்கிரனோடு சம்பந்தம். குடும்பச் சூழ்நிலையில் சிலநேரம் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவும், சிலநேரம் எதிர்ப்பும், சிலநேரம் விமர்சனமும் நிலவும். குறிப்பாகக் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் களுக்கு இவற்றை சமாளிக்கவேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலை காணப்படும். கவியரசர் கண்ணதாசன், "போற்றுவார் போற் றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்; ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் எதிர்ப்பினும் நில்லேன் அஞ்சேன்' என்று பாடிய மாதிரி, உங்கள் நிலையில் உறுதியாக, ஆணித்தரமாக நிற்பீர்கள். "ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்' என்ற பழமொழிப்படி "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்'. சிலரது பேச்சும் விமர்சனமும் மனதை சங்கடப்படுத்தும். சிலரது வாழ்த்தும் வரவேற்பும் உற்சாகமூட்டும். ஆக இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டு, உங்கள் கொள்கையில் நிலைப்பாடாக நின்று காரியங்களை சாதிப்பீர்கள். அவம தித்துப் பேசியவரும் அன்பு பாராட்டி ஆதரிப் பார்கள். வம்புசெய்து வழக்காடியவர்களையும் அன்புகாட்டி அரவணைத்து நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். தொழில், வியாபாரம், வாழ்க்கை ஆகியவற்றில் வளர்ச்சியும் முன் னேற்றமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 4, 9-க்குடைய சுக்கிரனும், 5, 8-க்குடைய புதனும் ஜென்ம ராசியில் இணைந்திருக்கிறார்கள். இருவரையும் ராசிநாதன் சனி பார்க்கிறார். ராசியை சனி பார்க்கும் காரணத்தால், உங்களது செயல்பாடு, திறமை, கீர்த்தி ஆகியவையெல்லாம் குறைவில்லாமல் நிறைவேறும். 7-க்குடைய சூரியன் 2-ல் இருக்கிறார். சில கணவன்மார்களுக்கு மனைவியால் நன்மை உண்டாகும். சிலருக்கு தொழில்துறையில் கூட்டாளிகள் வகையில் இருக்கும் சங்கடங்கள் விலகி ஒற்றுமை ஏற்படும். 3-ஆமிடத்தை குரு பார்க்கிறார். சகோதர- சகோதரிகளால் சகாயமும் ஆதரவும் உண்டாகும். 4-ல் உள்ள செவ்வாயால் வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் நற்பலன்களைச் சந்திக்கலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் சுமுகமான முடிவுக்கு வரும். சிலர் சொந்த வீடு வாங்கிக் குடியேறலாம். சொந்த வீட்டில் குடியிருப்போர் அவற்றில் கூடுதலான குடியிருப்புப் பகுதிகளைக் கட்டுதல் அல்லது பழைய வீட்டை வாங்கி புதிய முறையில் ஏற்பாடு செய்தல் போன்ற பலன்களைச் சந்திக்கலாம். 5-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் கேதுவும் பிள்ளைகளைப் பற்றிய கவலையையும் வருத்தங்களையும் ஏற்படுத்தலாம். என்றாலும் குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் சங்கடங் களும், சஞ்சலங்களும் விலகும். பாதிப்புகள் ஏற்படாது. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை யும் அன்யோன்யமும் அதிகமாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவரை 9-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் 6-க்குடைய சூரியன் ஜென்மத்தில் நிற்கும் தோஷம் விலகுகிறது. மேலும் சூரியன் 10-ஆம் இடத்துக்கு பாக்கியாதிபதி என்பதால், தொழில்துறையில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் காணப்படும். ஒருசிலரின் அனுபவத்தில் ஆறுமாதத்தில் அடையவேண்டிய வளர்ச்சியும் லாபமும், மூன்று மாதத்திலேயே தெரியுமளவு துரித முன்னேற்றமாக அமையும். பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபர்ஸ்ட், துரந்தோ எக்ஸ்பிரஸ் என்று ரயில்வேயில் பிரிவு இருப்பதுபோல, உங்களுடைய பயணத்தில் வேகமும் வளர்ச்சியும் காணப்படும். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று சொல்லப்படும். அதுபோல உங்களுடைய வெற்றிக்கு எல்லாமே ஆயுதமாகப் பயன்படும். அதைவிட சிறப்பு, நேற்றுவரை போட்டியாக- எதிரியாக இருந்தவர்கள், இன்று உங்கள் யோகத்துக்கு நண்பர்களாகவும், ஆதரவாளர்களாகவும் மாறுவார்கள். அதற்கு இன்றைய அரசியலில் தேர்தலில் கூட்டணி சேரும் கட்சியினரே உதாரணம்! அதேபோல குடும்பத்திலும் உங்களுக்கு எதிரும்புதிருமாக இருக்கும் உறவினர்களும், உடன்பிறப்புகளும் இக்காலம் உரிமை கொண்டாடி உதவிபுரிவார்கள்! ஒருசிலர் ஊர்விட்டு ஊர் மாறலாம். அதனால் பேர் புகழ் பெறலாம். கணிசமான லாபமும் பெறலாம். அதாவது குரு மீன ராசிக்கு ஒன்பதிலும் (விருச்சிகத்திலும்), அடுத்து பத்திலும் (தனுசு ராசியிலும்) இருக்கும் வரை, உங்கள் காட்டில்தான் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். விருச்சிகம், தனுசு (9, 10-ல்) குரு அதிசாரம், வக்ரம், வக்ரநிவர்த்தி என்று மாறிமாறி இருப்பார். அடுத்து 27-3-2020-ல் விகாரி வருடம், பங்குனி- 14-ல் குரு மகர ராசிக்கு மாறி நீசமடையும்வரை, ஹைவேஸ் ரோட்டில் தடையில்லாத- ஸ்பீட்பிரேக் இல்லாத பயணமாக அமையும். குரு 2020 மார்ச்சில் மகரத்தில் நீசம் அடையும் போது, ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து, தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம்.