ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
10-9-2018- கன்னி.
12-9-2018- துலாம்.
14-9-2018- விருச்சிகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 3, 4, உத்திரம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: பூரம்- 2, 3, 4, உத்திரம்- 1, 2.
குரு: விசாகம்- 2, 3.
சுக்கிரன்: சுவாதி- 1, 2.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
15-9-2018- கன்னி புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். கடந்த வாரம் வக்ரநிவர்த்தியாகிவிட்டார். ராசிநாதன் தன் ராசியைத் தானே பார்ப்பது ஒரு பலம்தான். உங்களுடைய செயல்பாடுகளும் திட்டங்களும் காரியங்களும் பூர்த்தியாகும். 4-ல் உள்ள ராகு உங்கள் உடல்நலம் மற்றும் தாயாரின் உடல்நலத்தில் சிற்சில வைத்தியச்செலவுகளை உண்டாக்குவார். 9-க்குடைய குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய்நிவர்த்தி ஏற்படும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். தாயாருக்கு ஆபரண அணிகலன் சேர்க்கை உண்டாகும். 4-ஆம் இடத்துக்குச் செவ்வாய் பார்வை கிடைக்கிறது. பூமி, வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். புதிய வீடு கட்டுவதற்கு லோன் அமையும். வங்கிக்கடனும், தனியார் கடனும் கிடைக்கும். 7-ல் சுக்கிரன் ஆட்சி. பொதுவாக 7-ல் சுக்கிரன் என்றால் அது களஸ்திர தோஷம் என்பது பொதுவிதி. இங்கு ஆட்சி என்பதால் அதற்கு விதிவிலக்கு உண்டு. உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் கருத்து வேறுபாடுகள் நிலவலாம். சிலருக்கு தாய்மாமன்வழி ஆதரவு கிடைக்கும். தொழில்துறையில் சிக்கல்கள் விலகி நன்மையும் மேன்மையும் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு என்றாலும் ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷமில்லை. மேலும் குருவோடு சேர்க்கை. குரு சம்பந்தம் பெறும் எல்லா கிரகங்களையும் எந்தவிதமான தோஷமும் அணுகாது. அதாவது குருவோடு சேர்ந்தாலும், குருவால் பார்க்கப்பட்டாலும், குருவின் சாரம் பெற்றாலும், குருவுக்கு கேந்திர- திரிகோணத்தில் இருந்தாலும் குருவின் சம்பந்தம் இருப்பதாக அர்த்தம்! ரிஷப ராசிக்கு குரு 8, 11-க்குடையவர். தன் சுயசாரம் (விசாகம்) பெறுகிறார். குருவின் பார்வை 10-ஆம் இடம், 12-ஆம் இடம், 2-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. குரு நிற்பது ராசிக்கு 6-ஆம் இடம் என்றாலும், 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். (9-ஆம் இடம்). உங்களுடைய தொழில் முன்னேற்றமடையும். வரவு- செலவுகள் தடையின்றி தாராளமாக இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். குடும்பத்தில் அன்பு தழைக்கும்; நிம்மதி பிறக்கும்; ஆனந்தம் தவழும். ராசிக்கு எட்டில் சனி இருப்பதால் சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம். சிலர் வெளிநாடும் போகலாம். பிள்ளைகள் செய்த தவறால் சிலர் தொல்லைகளைச் சந்தித்து துன்பப்படலாம். என்றாலும் தசாபுக்தி சாதகமாக அமைந்தால் துன்பம் தூரவிலகியோடும். முக்கியமான அல்லது அத்தியாவசியமான காரியங்களுக்காக சிலர் கடன் வாங்க நேரும். வங்கிக்கடன் அல்லது குறைந்த வட்டிக்கடன் வாங்கலாம். 3-ஆம் இடத்து ராகு- செவ்வாய், கேது பார்வையைப் பெறுவதால் உடன்பிறப்புகள் வகையில் சிலர் அன்புத் தொல்லைக்கு ஆளாகலாம். அல்லது தவிர்க்க முடியாத செலவுகளைச் சுமக்கலாம். எவ்வளவு நன்மை செய்தாலும், உண்மையாகப் பாடுபட்டாலும் சகோதர வகையில் சஞ்சலமும் சந்தோஷக் குறைவும்தான் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் வாரத் தொடக்கத்தில் சிம்மத்திலும், பிறகு வாரக்கடைசியில் கன்னியிலும் சஞ்சாரம். அதாவது 3-ல் இருக்கும் புதன் 4-ல் ஆட்சியாக மாறுவார். எனவே உங்களுடைய ஆசைகளும் எண்ணங்களும் திட்டங்களும் மிகமிக எளிதாக ஈடேறும். கனவுகள் எல்லாம் நனவு
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
10-9-2018- கன்னி.
12-9-2018- துலாம்.
14-9-2018- விருச்சிகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 3, 4, உத்திரம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: பூரம்- 2, 3, 4, உத்திரம்- 1, 2.
குரு: விசாகம்- 2, 3.
சுக்கிரன்: சுவாதி- 1, 2.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
15-9-2018- கன்னி புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். கடந்த வாரம் வக்ரநிவர்த்தியாகிவிட்டார். ராசிநாதன் தன் ராசியைத் தானே பார்ப்பது ஒரு பலம்தான். உங்களுடைய செயல்பாடுகளும் திட்டங்களும் காரியங்களும் பூர்த்தியாகும். 4-ல் உள்ள ராகு உங்கள் உடல்நலம் மற்றும் தாயாரின் உடல்நலத்தில் சிற்சில வைத்தியச்செலவுகளை உண்டாக்குவார். 9-க்குடைய குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய்நிவர்த்தி ஏற்படும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். தாயாருக்கு ஆபரண அணிகலன் சேர்க்கை உண்டாகும். 4-ஆம் இடத்துக்குச் செவ்வாய் பார்வை கிடைக்கிறது. பூமி, வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். புதிய வீடு கட்டுவதற்கு லோன் அமையும். வங்கிக்கடனும், தனியார் கடனும் கிடைக்கும். 7-ல் சுக்கிரன் ஆட்சி. பொதுவாக 7-ல் சுக்கிரன் என்றால் அது களஸ்திர தோஷம் என்பது பொதுவிதி. இங்கு ஆட்சி என்பதால் அதற்கு விதிவிலக்கு உண்டு. உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் கருத்து வேறுபாடுகள் நிலவலாம். சிலருக்கு தாய்மாமன்வழி ஆதரவு கிடைக்கும். தொழில்துறையில் சிக்கல்கள் விலகி நன்மையும் மேன்மையும் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு என்றாலும் ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷமில்லை. மேலும் குருவோடு சேர்க்கை. குரு சம்பந்தம் பெறும் எல்லா கிரகங்களையும் எந்தவிதமான தோஷமும் அணுகாது. அதாவது குருவோடு சேர்ந்தாலும், குருவால் பார்க்கப்பட்டாலும், குருவின் சாரம் பெற்றாலும், குருவுக்கு கேந்திர- திரிகோணத்தில் இருந்தாலும் குருவின் சம்பந்தம் இருப்பதாக அர்த்தம்! ரிஷப ராசிக்கு குரு 8, 11-க்குடையவர். தன் சுயசாரம் (விசாகம்) பெறுகிறார். குருவின் பார்வை 10-ஆம் இடம், 12-ஆம் இடம், 2-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. குரு நிற்பது ராசிக்கு 6-ஆம் இடம் என்றாலும், 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். (9-ஆம் இடம்). உங்களுடைய தொழில் முன்னேற்றமடையும். வரவு- செலவுகள் தடையின்றி தாராளமாக இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். குடும்பத்தில் அன்பு தழைக்கும்; நிம்மதி பிறக்கும்; ஆனந்தம் தவழும். ராசிக்கு எட்டில் சனி இருப்பதால் சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம். சிலர் வெளிநாடும் போகலாம். பிள்ளைகள் செய்த தவறால் சிலர் தொல்லைகளைச் சந்தித்து துன்பப்படலாம். என்றாலும் தசாபுக்தி சாதகமாக அமைந்தால் துன்பம் தூரவிலகியோடும். முக்கியமான அல்லது அத்தியாவசியமான காரியங்களுக்காக சிலர் கடன் வாங்க நேரும். வங்கிக்கடன் அல்லது குறைந்த வட்டிக்கடன் வாங்கலாம். 3-ஆம் இடத்து ராகு- செவ்வாய், கேது பார்வையைப் பெறுவதால் உடன்பிறப்புகள் வகையில் சிலர் அன்புத் தொல்லைக்கு ஆளாகலாம். அல்லது தவிர்க்க முடியாத செலவுகளைச் சுமக்கலாம். எவ்வளவு நன்மை செய்தாலும், உண்மையாகப் பாடுபட்டாலும் சகோதர வகையில் சஞ்சலமும் சந்தோஷக் குறைவும்தான் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் வாரத் தொடக்கத்தில் சிம்மத்திலும், பிறகு வாரக்கடைசியில் கன்னியிலும் சஞ்சாரம். அதாவது 3-ல் இருக்கும் புதன் 4-ல் ஆட்சியாக மாறுவார். எனவே உங்களுடைய ஆசைகளும் எண்ணங்களும் திட்டங்களும் மிகமிக எளிதாக ஈடேறும். கனவுகள் எல்லாம் நனவுகளாகும். 7, 10-க்குடைய குரு 5-ல் இருந்து ராசியைப் பார்ப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். தொழில், வேலை, உத்தியோகம் தேடி அலைவோருக்கு இவையெல்லாம் ஈடேறும். திருமணமாகிப் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவர். வேலை விஷயமாக வெளிநாடு போயிருந்தவர்கள் கைநிறைய சம்பாதித்து, சொந்த ஊருக்குத் திரும்பி மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதோடு- சொந்த வீடு, சொந்தக் கார் போன்ற வசதிகளோடு வாழலாம். 8, 9-க்குடைய சனி 7-ல் கேது சாரத்தில் இருப்பதால்- ராகு, கேது, சனி சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடப்பவர்களுக்குத் திருமணத்தடை அல்லது திருமணத்தில் குழப்பமும் ஏற்படலாம். 2-ஆம் இடத்து ராகு விஷவாக்கு எனப்படும். அதனால் பேச்சில் வாய்மையும், தூய்மையும் அவசியம் தேவைப்படும். நல்லதே நினைக்க வேண்டும். நல்லதே சொல்ல வேண்டும்; நல்லதே செய்ய வேண்டும்; அப்படியிருந்தால் நல்லதே நடக்கும். அதைத்தான் பெரியவர்கள் "மனம்போல் வாழ்வு' என்றார்கள். எதிலும் "பாஸிட்டிவ் தாட்ஸ்' (டர்ள்ண்ற்ண்ஸ்ங் பட்ர்ன்ஞ்ட்ற்ள்) வேண்டும். "நெகட்டிவ் தாட்ஸ் (சங்ஞ்ஹற்ண்ஸ்ங் பட்ர்ன்ஞ்ட்ற்ள்) கூடாது. "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பது சான்றோர் வாக்கு! "அறச்சொல் அறவே கூடாது.'
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ஜென்ம ராகு நிற்க, அவருக்கு 7-ல் செவ்வாயும் கேதுவும் நிற்கிறார்கள். செவ்வாய் கடக ராசிக்கு 5, 10-க்குடையவர்; 7-ல் உச்சம்! திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் நன்மைகள் நடக்கும். பணவரவு- செலவுகளும், ஆதாயங்களும் இருக்கும். இருவரும் வேலை பார்த்து சம்பாத்தியம் செய்து, எதிர்காலத்துக்காகவும், பிள்ளைகளின் வரும்காலத்துக்காகவும் சேமித்து வைக்கலாம். வேலையில் வருமானம் இல்லாத பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து தனவரவு எதிர்பார்க்கலாம். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உங்களுடைய தேவைகளை வெளியிடாமல் சொந்தக் காலூன்றி செயல்படுவீர்கள். அதனால் சிலசமயம் திருஷ்டியும் ஓமலிப்பும் தேவையில்லாத விமர்சனமும் உருவாகலாம். இது ஜென்ம ராகுவின் வேலை என்றாலும் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் செயல்படுவீர்கள். அதேசமயம் தேவைகள் ஏராளம் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமாளிப்பீர்கள். இசைப்பாடகர் நாகூர் ஹனிபா, "இறைவனிடம் கையேந்துங்கள்- அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' என்று ஒரு பாடல் பாடியிருப்பார். அவரே "தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கப்பெறும்' என்றும் பாடியிருப்பார். உங்கள் வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது. அதற்குக் காரணம் 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அது குருவருளையும் திருவருளையும் கூட்டுவிக்கும். 10-க்குடைய செவ்வாயும் உச்சம். கேது- ராகு சம்பந்தப்படுவதால் உங்கள் முயற்சிகளில் தோல்விக்கு இடமில்லையென்றாலும், பலாப்பழத்தை வெளித்தோலை வெட்டியெடுத்து சுளையைப் பிரித்தெடுத்து- கொட்டையை நீக்கிச் சாப்பிடுவதுபோல கடின முயற்சியாகக் காணப்படும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் 3, 10-க்குடைய சுக்கிரன் சாரத்திலும் (பூரம்), பிறகு தனது சுயசாரத்திலும் (உத்திரம்) சஞ்சரிக்கிறார். சிம்ம ராசிக்கு 9-க்குடைய செவ்வாய் 6-ல் உச்சம் பெற்று, 9-ஆம் இடத்தையே பார்க்கவும், 10-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெற்று 9-ஆம் இடத்தையே பார்க்கவும் தர்மகர்மாதிபதியோகம் ஏற்படுகிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். தொழில், வியாபாரத்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்கிறவர்கள் ஆன்மார்த்தமாக மனசாட்சிப்படி வேலை செய்வார்கள். அதனால் நிர்வாகத்தினரின் பாராட்டுக்கு ஆளாகலாம். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். 7-ஆம் இடத்தை 7-க்குடைய சனி பார்ப்பது ஒருவகையில் ஒருசிலருக்கு களஸ்திர தோஷத்தை ஏற்படுத்தலாம். அல்லது மறுவிவாக முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாரிசு உள்ளவர்கள் அவசியம் மறுமணம் செய்துகொள்வதில் தவறில்லை. குழந்தைகளுக்கு ஆதரவு தேவைப்படுமல்லவா! குழந்தைகள் இல்லாதவர்கள் மறுமணம் பற்றி யோசித்து முடிவெடுப்பது நல்லது. குறிப்பாக மக நட்சத்திரக்காரர்களுக்குத்தான் களஸ்திரதோஷம், புத்திரதோஷம் ஏற்பட இடமுண்டு. 40-45 வயது நடப்பவர்கள் மறுமணம் செய்துகொள்வதில் தவறில்லை. 50-55 வயதைக் கடந்தவர்கள் தாரமிழந்த நிலையில், தனித்த வாழ்வை மேற்கொள்வதே சரியானதாகும். நாத்திகத்தில் ஈ.வே.ரா. பெரியாரும், ஆன்மிகத்தில் பித்துக்குளி முருகதாசும், தேவார இன்னிசைப்பாடகர் தருமபுரம் சுவாமிநாதனும் 60 வயதில் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் சிற்றின்பத்துக்காக மறுமணம் செய்துகொள்ளவில்லை. சொத்துகளைப் பராமரிக்கவும், சமயத்தொண்டினைத் தொடரவும்தான் வயோதிகத்திலும் வாழ்க்கையை வகுத்துக்கொண்டார்கள்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 12-ல் மறைவு. வாரக்கடைசியில் கன்னி ராசிக்கு மாறி ஆட்சி பலம் பெறுவார். 2-ல் சுக்கிரன் ஆட்சி. அவருடன் 4, 7-க்குடைய குரு சம்பந்தம். பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. குடும்பச் சூழ்நிலையிலும், வரவு செலவிலும் பாதிப்புக்கு இடமில்லை. தேவைக்கேற்ற பணப்புழக்கம் தெளிவாகக் காணப்படும். சில குடும்பங்களில் கணவர் சம்பாத்தியம் இல்லாத சூழ்நிலையில், மனைவிக்கு சம்பாத்தியம், வருமானம் காணப்படும். சில குடும்பங்களில் கணவன்- மனைவி இருவருமே சம்பாத்தியம் செய்யலாம். என்றாலும் 3, 8-க்குடைய செவ்வாய் 5-ல் உச்சம் பெற்று, கேது- ராகு சம்பந்தம் என்பதாலும், விரயாதிபதி சூரியன் ஆட்சி என்பதாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிப்புக்கு இடமின்றி அதற்கென்று ஒரு செலவு வரும். ஒருசமயம் விருந்தினர் வருகை, ஒருசமயம் பள்ளிச்செலவு, ஒருசமயம் மொய்ச்செலவு, ஒருசமயம் சுற்றுலாச்செலவு, ஒருசமயம் ஆன்மிக வழிபாட்டுச்செலவு என்று மாறிமாறி ஏதாவது ஒரு செலவு ஏற்படும். ஒருசிலருக்கு தனியார் வகையிலோ தனது குடும்பத்தினர் வகையிலோ வைத்தியச்செலவு ஏற்படலாம். அது சக்திக்குமீறிய செலவாக அமையலாம். இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் வகையில் உங்களுக்கு சாமர்த்தியம் ஏற்படும். கடவுள் கருணை காட்டுவார். கூடியவரை கடன்வாங்காமல் காலத்தை ஓட்டலாம். சிலருக்கு தாய்வழி உதவியும், சிலருக்கு மனைவிவழி உதவியும் கிடைக்கும். ஒருசிலர் எப்போதோ வாங்கிப்போட்ட ஒதுக்குப்புறமான இடத்தை இப்போது நல்ல விலைக்கு விற்று நிதி நிலையை- பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்மத்தில் ஆட்சி பெறுகிறார். அவருடன் 3, 6-க்குடைய குரு சேர்க்கை. இருவரும் 7-ஆம் இடத்தைப் பார்க்க, 7-க்குடைய செவ்வாய் 4-ல் உச்சம். திருமணமாக. வேண்டியவர்களுக்குத் திருமணம் கைகூடும் திருமணமாகியும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த தம்பதிகள் இணைந்து வாழும் அமைப்பு உருவாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் விவாகரத்து வேண்டி கோர்ட்டுவரை போனவர்களும் மனம்மாறி வழக்கை வாபஸ் பெறலாம். சந்தேகத்தின் அடிப்படையில் தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்த தம்பதிகள் உறவை வெட்டிக்கொண்டு விவாகரத்து பெறலாம். 7-ஆம் இடத்தை செவ்வாய் பார்க்க, 7-க்குடையவரோடு கேது- ராகு சம்பந்தம் என்பதால் சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமண முயற்சிகளில் ஈடுபடலாம். அல்லது மறுமணம் செய்துகொள்ளலாம். அவரவர் ஜாதக அமைப்பின்படி இப்படிப்பட்ட பலன்களை அனுபவிக்க வேண்டும். சிலர் வாரிசுக்காக மறுமணம் செய்துகொள்ளலாம். (சட்டரீதியாக). ஒழுக்கமில்லாத அரசியல்வாதிகள் "சின்ன வீடு' செட்டப் செய்துகொள்வார்கள். ஒரு அன்பர் மூன்று குடும்பம் (மூன்று மனைவி) வைத்துக்கொண்டார். அவர் தம்பிக்கு 30 வயது முடிந்தும் திருமணம் நடக்கவில்லை. அவர், "ஒவ்வொருத்தனும் மூன்று திருமணம், மூன்று குடும்பம் வைத்துக்கொள்கிறான். எனக்கு ஒரு திருமணத்துக்கே வழியில்லை- ஹோட்டல் சாப்பாடு' என்று புலம்புவார். இதைத்தான் "தாரமும் குருவும் தலைவிதிப்படி அமையும்' என்பார்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். அவர் 6-க்குடையவரும் ஆவார் என்பதோடு, 6-ஆம் இடத்தையே பார்க்கிறார். அதனால் போட்டி, பொறாமை, எதிரி, கடன், நோய், வைத்தியச்செலவு போன்றவையெல்லாம் வளர்ச்சியடையும். அதேசமயம் 6-ஆம் இடத்தை 8-க்குடைய சுக்கிரனும் பார்க்க, 2, 5-க்குடைய குருவும் பார்ப்பதால் 6-ஆம் பாவப்பலன் கட்டுக்கடங்கிக் காணப்படலாம். அதனால் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. செவ்வாயின் பார்வை 6-ஆம் இடம், 9-ஆம் இடம், 10-ஆம் இடங்களுக்கும் கிடைக்கிறது. 9-ல் ராகு நிற்க, கேது பார்வை. எனவே வாய்வு அல்லது நரம்பு சம்பந்தமான நோய் நொடிகளும், வைத்திய விரயச்செலவுகளும் ஏற்படலாம். அல்லது குலதெய்வ வழிபாட்டில் கௌரவப் பிரச்சினைகளைச் சந்திக்கலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளும் விவகாரங்களும் விரும்பத்தகாத பலன்களும் விளைவதோடு- முடிவெடுக்க முடியாத குழப்ப நிலையும் காணப்படலாம். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும்- தனியார்துறைப் பணியில் இருப்பவர்களுக்கும் இடம் மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் முன்னேற்றமான மாற்றங்களும், பாதகமாக அமைந்தால் பதவியில் இறக்கம் அல்லது பதவி நீக்கம் போன்ற பலன்களும் உண்டாகும். ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி- வாக்குச்சனி- குடும்பச்சனி என்றெல்லாம் சொல்லப்படும் இரண்டாம் இடத்துச் சனி நடக்கிறது. இதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் உயிர்ச்சேதம், பொருள் சேதம் போன்ற இழப்புகள் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டியது அவசியம். அத்துடன் ஒரு திங்கட்கிழமை சிவன் கோவிலில் ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு தற்போது ஜென்மச்சனி (ஏழரைச்சனி) நடக்கிறது. சனி கேதுவின் சாரத்தில் (மூலம்) சஞ்சாரம். ராசிநாதன் குரு 6-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்து 11-ல் இருக்கிறார். ஆக இந்த ஏழரைச்சனி ஒருசிலருக்கு சாதகமாகவும், ஒருசிலருக்குப் பாதகமாகவும் அமைகிறது. மூல நட்சத்திரக்காரர்களுக்கு இயந்திரம்போல ஓயாத உழைப்பு, பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நோய்த்தொல்லை, அமைதிக்குறைவு, உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளில் தடை, தாமதம், கடமைகளைச் செய்ய முடியாத கவலை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினை- பலன்! இதில் முதல் சுற்று- இரண்டாம் சுற்று- மூன்றாம் சுற்று என்று ஒரு நிலை இருந்தாலும், எந்தச் சுற்றாக இருந்தாலும் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் பாதிப்பு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவேண்டும். அத்துடன் ஒரு திங்கட்கிழமையன்று சிவாலயத்தில் ருத்ர ஜெபப் பாராயணம், ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். மேற்படி ருத்ரஹோமம் செய்ய காரைக்குடி சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கலாம். பல நூறு ஹோமங்கள் செய்து பலர் பலன் அடைந்திருக்கின்றார்கள். அத்துடன் ஏழரைச்சனியின் தாக்கம் குறைய அவரவர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அந்த அளவு மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றலாம். சனி பகவானின் குருநாதர் பைரவர்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். அத்துடன் மகர ராசிக்கு இப்போது ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. சனிக்கு சாரம் கொடுத்த கேது (மூலம்- 1-ல் சனி) ஜென்ம ராசியில் செவ்வாயுடன் சம்பந்தம். 8-ல் சூரியன், புதன். இன்ப- துன்பங்கள் கலந்தே காணப்படலாம். பிஸ்கட்டில் 50-க்கு 50 என்று ஒரு பிஸ்கட் உண்டு. அது இனிப்பும் உப்பும் கலந்த சுவையாக இருக்கும். அதேபோல நெல்லிக்காயைச் சுவைத்தால் துவர்ப்பாக இருக்கும். உமிழ்நீர் சம்பந்தமானதும் இனிப்பாக மாறும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வரவும் உண்டு, செலவும் உண்டு; பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் சேமிப்புக்கு வழி இருக்காது. சமயத்தில் சிறுசேமிப்பு சேர்த்து வைத்திருந்தவற்றையும் அவசரத்தேவைக்கு எடுத்து செலவிடவேண்டிய அவசியம் உண்டாகும். 9-க்குடைய புதன் 6-க்குடையவராகி 8-ல் மறைய, அவரோடு சூரியன் சேர்க்கை என்பதால் தகப்பனார் வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு சொத்துப் பிரச்சினைகள் தலைவலியாக அமையும். தகப்பனார் அல்லது தாயார் குடும்பத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதால் அண்ணன்- தம்பி, அக்காள்- தங்கை, உடன்பிறப்புக்களிடையே வருத்தங்கள் ஏற்படலாம். தசாபுக்திகள் பாதமாக இருந்தால் பிரிவினைகூட வரலாம். சிலசமயம் ஒரு வீட்டுக்குள்யே இரு சமையல் செய்யும் சூழ்நிலையும் உருவாகலாம். அதனால் விட்டுக்கொடுத்துப் பொறுமையாகப் போவது நல்லது. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 11-ல் இருக்க, குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அங்கேயே ஆட்சியாக இருப்பதால் உங்களுக்கு புதிய தெம்பும் நம்பிக்கையும் துணிவும் உண்டாகும். 5-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சி என்பதால் மனதுக்கு உற்சாகம் உண்டாகும். திட்டங்கள் நிறைவேறும். கருதிய காரியங்கள் கைகூடும். தொழில்துறையில் முற்போக்கான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள், நட்பு வட்டாரத்தில் நல்லுறவும் நன்மைகளும் உண்டாகும். வியாபாரம், தொழில்துறையில் இதுவரை நிலவிய தடைகள் எல்லாம் தகர்ந்துவிடும். முழு அளவில் முயற்சிகள் வெற்றியாகும். போட்டி, பொறாமையாளர்களின் பொருமல்கள் பொசுங்கிப்போகும். குடும்பத்தில் சகோதர- சகோதரிகளின் அன்பும் பந்தபாசங்களும் அதிகமாகும். 6-க்குடைய புதன் 8-ல் மறைவதால் கடன்கள் கட்டுக்கடங்கிக் காணப்படும். நோய்நொடி, வைத்தியச்செலவுகள் விலகும். நீறு பூத்த நெருப்பாக இருந்த பகை உணர்வுகளும், பொறாமை ஓமலிப்புகளும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும். 7-ல் ராகு, ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்தில் தடை, தாமதம் காணப்படலாம். அப்படியிருந்தால் பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் 8-ல் இருப்பது ஒருவகையில் குற்றம்தான். அதனால் எந்தவொரு காரியத்தைத் தொட்டாலும் மதில்மேல் பூனையாக எந்தப் பக்கம் தாவும் என்று அனுமானிக்க முடியாதபடி குழப்பம் ஏற்படும். சிலருக்கு பணத்தேவை மிகமிக அதிகமாகக் காணப்படும். வேறுசிலருக்கு ஆயிரம் வந்தாலும் பத்தாது; ஐயாயிரம் வந்தாலும் பத்தாது. ஐம்பதாயிரம் வந்தாலும் அதற்கும் ஒரு செலவு இருக்கும். ஆக, சேமிக்க முடியாதபடி பொருளாதாரத்தில் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கும். அதேசமயம் எந்தத் தேவைகளும் அரைகுறை என்று இல்லாமல் தாமதப்பட்டாலும் முழுமையாக நிறைவேறும். ஒருசிலர் "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்கு' என வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். என்னத்தெ கண்ணையா சினிமாவில் சொன்ன மாதிரி வாய்ப்புகள் "வரும் ஆனா வராது' என்ற நிலையாகவும் இருக்கும். தற்போது குருவும் சுக்கிரனும் ஒன்றுகூடியிருப்பதால் (அக்டோபர் 4-வரை வரும் குருப்பெயர்ச்சிவரை) 8-ஆம் இடத்து குருவின் கெட்ட பலன்கள் குறைய இடமுண்டு. குறிப்பாக, பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு குரு, சுக்கிரன் சேர்க்கை நம்பிக்கையையும், நற்பலனையும் தரக்கூடும்.பூரட்டாதி குருவின் நட்சத்திரம். உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி குரு வீட்டில் இருக்கிறார்.