Advertisment

இந்த வார ராசிபலன் 11-11-2018 முதல் 17-11-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasi-palan

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

13-11-2018- மகரம்.

15-11-2018- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 1, 2, 3, 4, மூலம்- 1.

செவ்வாய்: சதயம்- 1, 2.

புதன்: விசாகம்- 4, 3, 2.

குரு: அனுஷம்- 3.

சுக்கிரன்: சுவாதி- 1, 2, 3, 4.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 1.

கேது: உத்திராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம், வக்ரம்.

16-11-2018- குரு அஸ்தமனம்.

சுக்கிரன் வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் பலம்பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த சனியின் பார்வையைப் பெறுகிறார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம். எனவே குரு 8-ல் மறைந் தாலும் தோஷம் விலகும். அதேபோல 5-க்குடைய சூரியன் 7-ல் நீசம் என்றாலும், வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சி என்பதால் நீசபங்கம் அடைவார். எனவே உங்கள் செயல்களிலும் முயற்சிகளிலும் தொடக் கத்தில் தடைகளும் குறுக்கீடுகளும் இடை யூறுகளும் காணப்பட்டாலும், உங்கள் விடாமுயற்சியாலும் வைராக்கியத்தாலும் முடிவில் வெற்றி பெறலாம். நினைத்ததை நிறைவேற்றலாம். கருதியதை சாதிக்கலாம். 2, 5-க்குடைய புதன் 8-ல் மறைவு, வக்ரம் என்பதால் போட்டி, பொறாமைகள், எதிரி உபாதை களிலிருந்து தப்பிக்கலாம். புதன், குருசாரம் பெறுவதால் மேற்கண்ட தொல்லைகள் (6-ஆம் பாவக்கெடுதல்கள்) உங்களை நோக்கிப் படை யெடுக்கும். ஆனாலும் "என்னத்தெ' கண்ணையா சொன்னதுபோல "வரும்; ஆனா வராது.' யானை யின்மீது அமர்ந்து போகிறவர்மீது நடந்து போகிறவன் எச்சில் துப்பினால் அவர்மேல் படுமா? நீங்கள் யானைமேல் சவாரி போகிறவர். தரையில் நின்று எச்சில் துப்புபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் போக்கில் செயல் படுங்கள். உங்கள் முயற்சிகளும் எண்ணங்களும் நிறைவேறும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும், துலா ராசியில் ஆட்சி என்பதால் மறைவு தோஷம் விலகும். 2, 11-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் சனி, சூரியன், புதன் சம்பந்தம். எனவே வாக்கு, தனம், குடும் பத்திலும், பிள்ளைகள், எண்ணம், திட்டம் ஆகியவற்றிலும் (அதாவது 2-ஆம் பாவம், 5-ஆம் பாவம்) எந்த பாதிப்பும் சலனமும் இருக்காது. ராசிநாதன் மறைவின் பலன்- சில காரி யங்கள் உடனுக்குடன் செயல்படும்; சில காரி யங்கள் தாமதமாக செயல்படும். உதாரணமாக, ஒருவழிப்பாதையில் (சிங்கிள் ரோட்டில்) முன்னே ஒரு மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தால் பின்னால் வரும் கார் முந்திக்கொண்டு (ஓவர் டேக்) செல்லமுடியாமல் அதன் பின்னாலேயே மெதுவாகப் போகநேருமல்லவா? அதேசமயம் ஏதாவது ஒரு இடத்தில் வழிகிடைக்கும்போது முந்திக்கொண்டு போய்விடலாம். அதுபோல உங்கள் காரியங்களும் திட்டங்களும் தாமதமானா லும் நிறைவேறிவிடும். சூரியன் 6-ல் நீசம் என்பதால் சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் சங்கடம் வரலாம். சிலருக்கு வாகனம் சம்பந்தமாக விரயச்செலவு ஏற்படலாம். சிலருக்கு தாயார் வகையில் பிரச்சினைகள் அல்லது வைத்தியச்செலவுகள் ஏற்படலாம். அல்லது இடம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் சிக்கல் ஏற்படலாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் குரு பார்க்கும் பெருமையும், ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற தன்மையும் உங்களுக்குக் காவலாக இருந்து காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் வக்ரம், அஸ்தமனம். அத்துடன் 6-ல் மறைவு. அவருடன் குருவும் சேர்ந்து 6-ல் மறைகிறார். அதுமட்டுமல்ல; 8-க்குடைய சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 2-ல் ராகு; 8-ல் கேது. இவையெல்லாம் உங்களுக்கு எதிர்மறை கிரக அமைப்பென்பதால், பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக இருக்கும். சிலசமயம் பின்னே போனால் உதைக்கும்; முன்னே சென்றால் கடிக்கும் என்ற நிலையும் நிலவும். 2-ஆம் இடத்து ராகு குடும்பத்தில் அமைதிக்குறைவை உண்டாக்கும். சொல்லாததையும் சொன்னதாக வம்பு வழக்கு வந்துசேரும். ஒரு மாமியார் வெளியில் போயிருந்த சமயம், ஒரு பிச்சைக்காரன் அந்த வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். அந்த

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

13-11-2018- மகரம்.

15-11-2018- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 1, 2, 3, 4, மூலம்- 1.

செவ்வாய்: சதயம்- 1, 2.

புதன்: விசாகம்- 4, 3, 2.

குரு: அனுஷம்- 3.

சுக்கிரன்: சுவாதி- 1, 2, 3, 4.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 1.

கேது: உத்திராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம், வக்ரம்.

16-11-2018- குரு அஸ்தமனம்.

சுக்கிரன் வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் பலம்பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த சனியின் பார்வையைப் பெறுகிறார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம். எனவே குரு 8-ல் மறைந் தாலும் தோஷம் விலகும். அதேபோல 5-க்குடைய சூரியன் 7-ல் நீசம் என்றாலும், வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சி என்பதால் நீசபங்கம் அடைவார். எனவே உங்கள் செயல்களிலும் முயற்சிகளிலும் தொடக் கத்தில் தடைகளும் குறுக்கீடுகளும் இடை யூறுகளும் காணப்பட்டாலும், உங்கள் விடாமுயற்சியாலும் வைராக்கியத்தாலும் முடிவில் வெற்றி பெறலாம். நினைத்ததை நிறைவேற்றலாம். கருதியதை சாதிக்கலாம். 2, 5-க்குடைய புதன் 8-ல் மறைவு, வக்ரம் என்பதால் போட்டி, பொறாமைகள், எதிரி உபாதை களிலிருந்து தப்பிக்கலாம். புதன், குருசாரம் பெறுவதால் மேற்கண்ட தொல்லைகள் (6-ஆம் பாவக்கெடுதல்கள்) உங்களை நோக்கிப் படை யெடுக்கும். ஆனாலும் "என்னத்தெ' கண்ணையா சொன்னதுபோல "வரும்; ஆனா வராது.' யானை யின்மீது அமர்ந்து போகிறவர்மீது நடந்து போகிறவன் எச்சில் துப்பினால் அவர்மேல் படுமா? நீங்கள் யானைமேல் சவாரி போகிறவர். தரையில் நின்று எச்சில் துப்புபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் போக்கில் செயல் படுங்கள். உங்கள் முயற்சிகளும் எண்ணங்களும் நிறைவேறும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும், துலா ராசியில் ஆட்சி என்பதால் மறைவு தோஷம் விலகும். 2, 11-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் சனி, சூரியன், புதன் சம்பந்தம். எனவே வாக்கு, தனம், குடும் பத்திலும், பிள்ளைகள், எண்ணம், திட்டம் ஆகியவற்றிலும் (அதாவது 2-ஆம் பாவம், 5-ஆம் பாவம்) எந்த பாதிப்பும் சலனமும் இருக்காது. ராசிநாதன் மறைவின் பலன்- சில காரி யங்கள் உடனுக்குடன் செயல்படும்; சில காரி யங்கள் தாமதமாக செயல்படும். உதாரணமாக, ஒருவழிப்பாதையில் (சிங்கிள் ரோட்டில்) முன்னே ஒரு மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தால் பின்னால் வரும் கார் முந்திக்கொண்டு (ஓவர் டேக்) செல்லமுடியாமல் அதன் பின்னாலேயே மெதுவாகப் போகநேருமல்லவா? அதேசமயம் ஏதாவது ஒரு இடத்தில் வழிகிடைக்கும்போது முந்திக்கொண்டு போய்விடலாம். அதுபோல உங்கள் காரியங்களும் திட்டங்களும் தாமதமானா லும் நிறைவேறிவிடும். சூரியன் 6-ல் நீசம் என்பதால் சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் சங்கடம் வரலாம். சிலருக்கு வாகனம் சம்பந்தமாக விரயச்செலவு ஏற்படலாம். சிலருக்கு தாயார் வகையில் பிரச்சினைகள் அல்லது வைத்தியச்செலவுகள் ஏற்படலாம். அல்லது இடம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் சிக்கல் ஏற்படலாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் குரு பார்க்கும் பெருமையும், ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற தன்மையும் உங்களுக்குக் காவலாக இருந்து காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் வக்ரம், அஸ்தமனம். அத்துடன் 6-ல் மறைவு. அவருடன் குருவும் சேர்ந்து 6-ல் மறைகிறார். அதுமட்டுமல்ல; 8-க்குடைய சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 2-ல் ராகு; 8-ல் கேது. இவையெல்லாம் உங்களுக்கு எதிர்மறை கிரக அமைப்பென்பதால், பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக இருக்கும். சிலசமயம் பின்னே போனால் உதைக்கும்; முன்னே சென்றால் கடிக்கும் என்ற நிலையும் நிலவும். 2-ஆம் இடத்து ராகு குடும்பத்தில் அமைதிக்குறைவை உண்டாக்கும். சொல்லாததையும் சொன்னதாக வம்பு வழக்கு வந்துசேரும். ஒரு மாமியார் வெளியில் போயிருந்த சமயம், ஒரு பிச்சைக்காரன் அந்த வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். அந்த வீட்டு மருமகள், "இந்த வீட்டில் பிச்சைபோடும் வழக்கமில்லை; போய் வா' என்றாள். அவன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். அப்போது எதிரில் வந்த மாமியார் பிச்சைக்காரனிடம், "மருமகள் என்ன சொன்னாள்?' என்று கேட்க, நடந்ததைச் சொன்னான் அவன். "அப்படியா சொன்னாள்? என்னோடு வா' என்று அழைத்துச் சென்றாள் மாமியார். இந்த அம்மாள் ஏதாவது போடுவார் என்ற நம்பிக்கையோடு பின்னே சென்றான் அவன். வீட்டருகே வந்ததும் மாமியார், "இந்த வீட்டில் பிச்சைபோட மாட்டார்கள் என்று சொல்ல மருமகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நான் சொல்கிறேன். இங்கே எதுவும் கிடைக்காது. போய் வா' என்றாளாம். இப்படி குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு செல்வாக்கு இருக்காது. எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மறை வாதம்தான் உண்டாகும். எனவே கருத்து சொல்லாமல் மௌனமாக இருக்கவேண்டும். அல்லது "வெள்ளைக் காகம் பறக்கிறது' என்று அவர்கள் சொன்னால், "ஆமாம்; பறக்கிறது' என்று சொல்ல வேண்டும்.

rasipalan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் கேதுவும் நிற்கிறார்கள். 5-ஆம் இடத்து குரு உங்கள் ராசியைப் பார்க்கி றார். கடக ராசிக்கு செவ்வாய் 10-க்குடையவர். குரு 9-க்குடையவர். இவ்வாறு சம்பந்தம் பெறுவதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். குருவருளும் திருவருளும் உங்களுக்குத் துணைநின்று வழிநடத்தும். "குறையொன்றும் இல்லை; மறைமூர்த்தி கண்ணா' என்று எம்.எஸ். பாடியதுபோல குறையேதும் வராது. 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதால் அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்தாலும் (வரும்; ஆனால் வராது என்பதுபோல) அது உங்களை பாதிக்காது. கையுறை (ரப்பர் கிளவுஸ்) மாட்டிக்கொண்டு மின்சார வேலை செய்வதுபோல! ஜென்ம ராகு சிலசமயம் உங்களுக்கு டென்ஷனை ஏற்படுத்தும் உதாரணமாக, ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவர்கள் உங்களிடம் சந்தேகம் கேட்டால் பதில் சொல்வீர்கள். அதையே மூன்று நான்குமுறை கேட்டால் ஆத்திரப் படுவீர்கள். இந்த ஆத்திரத்தை உருவாக்கு வது ராகு- கேது! அதனால் ராகுவை சாந்தப்படுத்த நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும். இதை ஔவைப்பிராட்டியே "ஆறுவது சினம்' என்று சொல்லியிருக்கிறார். வள்ளுவர் கோபத்தை, சினத்தை "ஆட்கொல்லி' என்பார். சினம் கொண்டால் ரத்தக்கொதிப்பு ஏற்படும். ரத்தக்கொதிப்பு அதிகமானால் இதயத் துடிப்புக்கு சிக்கல் ஏற்படும். என்றாலும் ராகுவை குரு பார்ப்பதால் எல்லாப் பிரச்சினைகளும், சிக்கல்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகியோடிவிடும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசம். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அங்கு ஆட்சி பெறுவதால் சூரியன் நீசபங்க ராஜயோகம் அடைவார். எனவே சிம்ம ராசிநாதனுக்கு பலம் கிடைக்கிறது. அவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் குருவருளும் திருவருளும் கைவரப் பெறும். குந்தி தேவிக்குத் திருமணத்துக்கு முன்பாக, ஒரு முனிவர் வந்து குந்தியின் உபசரணையால் மகிழ்ந்து, சூரிய மந்திரத்தை உபதேசம் செய்துவிட்டு, "காலம் வரும் போது சரியான சந்தர்ப்பத்தில் இது பயன்படும்' என்று சொல்லிப் போய் விட்டார். குந்தி பொறுமையாக இல்லாமல் உடனே மந்திரப் பிரயோகம் செய்துவிட்டாள். உடனே சூரியன் காட்சியளித்து (பிரத்தியட்சமாகி) "என்ன வேண்டும்' என்றார். குந்திக்கு சரியான பதில் சொல்லத்தெரியவில்லை. சூரியன் ஒரு குழந்தையை வரவழைத்து அவள் கையில் கொடுத்துவிட்டார். அவள் "திருமணத்துக்கு முன்பே குழந்தையா' என்று, அதைப் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்து, உடம்போடு இணைந்த கவச குண்டலத்தோடு நதியில் விட்டுவிட்டாள். அதை ஒரு தேரோட்டி கண்டெடுத்து வளர்த் தான். அவன்தான் கர்ணன்! பிற்காலத்தில் கர்ணன் அர்ஜுனனுக்குச் சமமான வில்லாளியாக விளங்கினான். உங்கள் ஜாதக தசாபுக்தி சாதகமாக அமைந்துவிட்டால் உங்களுக்கு சத்குரு அனுக்கிரகம் கிடைக்கும், உபதேசமும் கிடைக்கும். உங்கள் கனவு களும் லட்சியங்களும் நிறைவேறும். 9-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்தால்தான் குரு உபதேசமும் திருவருள் கருணையும் அமையும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 3-ல் மறைவு என்றாலும் குருவோடு சம்பந்தம். அதுமட்டு மல்ல; குருவின் சாரத்தில் (விசாகத்தில்) இருக்கிறார். "நல்லாரைக் காண்பதும் நன்று; நல்லார் சொல்லைக் கேட்பதும் நன்று; நல்லாரோடு இணங்கியிருப்பதும் நன்று' என்பதுபோல குரு நல்லவர் என்பதால், புதனுக்கு (ராசிநாதன்) குரு சம்பந்தம் என்பதால், மறைவு, அஸ்தமனம் போன்ற எந்த தோஷங்களும் இல்லை. புதன் 1, 10-க்குடையவர். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மேன்மை பெறும். தளர்ச்சியில்லாத வளர்ச்சி உண்டாகும். 4-ல் உள்ள சனி சின்னச் சின்ன உடல் உபாதைகளையும் ஆரோக்கியக் குறைவையும் ஏற்படுத்தலாம். சிலருக்கு நரம்புத் தளர்ச்சி, சிலருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பீடைகள், சிலருக்கு வாய்வுத்தொல்லை, சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு விலகும். அவரவர் தசாபுக்திக்கேற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ளவும். அத்துடன் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய- தன்வந்த்ரயே அமிருத கலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநா சனாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்யலட்சுமி ஸமேத தன்வந்த்ரயே மகாவிஷ்ணவே நமஹ' என்ற மந்திரத்தை தினசரி ஜெபிக்கவும். மூன்றுவகையான நோய்த் தொல்லைகளும் விலகும். இயற்கை மாற்றத்தால் வரும் நோய் ஒருவகை. உணவுப் பழக்கவழக்கத்தால் வரும் நோய் இரண்டாவது வகை. முற்பிறவி காரணமாக வரும் நோய் மூன்றாவது வகை. இந்த மூன்றும் நீங்குவதுதான் ஸர்வ ஆமய விநாசனாய என்பதன் அர்த்தம். 10-க்கு 8, 9-க்குடைய சனி 10-ஆம் இடத் தைப் பார்ப்பதால் சிலர் தொழில் மாற்றத் தைச் செய்யலாம். சிலர் தொழில் சீர்திருத் தம் செய்யலாம். சிலர் புதிய தொழில் தொடங்கலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற, அவருடன் 11-க்குடைய சூரியன் சம்பந்தம். சுக்கிரன் ராகு சாரம். சூரியன் குரு சாரம். சுக்கிரன் 8-க்குடையவர். குரு 6-க்குடையவர். எனவே ஏழரைச்சனி விலகியும் இன்னும் சிலருக்கு சனியால் ஏற்படும் பக்கவிளைவுகள் பரிபூரணமாக விலகியதாகத் தெரியவில்லை. மழைவிட்டும் தூறல் நிற்காத கதையாக பலருக்கு பழைய தொந்தரவுகளின் தொடர்ச்சி தொடர்கதையாகத் தொடருகிறது. பெரும்பாலும் பிப்ரவரியில் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு 50 சதவிகிதம் குறைந்து விடும். அடுத்து குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 100 சதவிகிதம் விலகிவிடும். அதுவரை பாதிக்கிணறு தாண்டிய கதையாகத் தொட்டும் தொடாமலும் இருக்கும். ஒரு ஜோதிடரிடம் ஒருவர், "பிறந்ததுமுதல் கஷ்டம்தான். எப்போது மாறும்?' என்றார். அவர் "50 வயதுவரை கஷ்டம்தான்' என்றார். வந்தவர், "அதன்பிறகு சுகம் வருமா' என்று ஆர்வத்தால் கேட்டார். ஜோதிடர் "அதுவே பழகிப்போகும்' என்றார். அதுமாதிரி கிரக சோதனைகள் படிப்படியாகக் குறையும். அதுவே பின்னால் பழகிப் போய்விடும். 3-ஆம் இடத்துச்சனி 5-ஆம் இடம், 9-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால்- சனி துலா ராசிக்கு யோகாதிபதி என்பதால் பிள்ளைகள் வகையில் நல்லதே நடக்கும். தகப்பனார், பூர்வ புண்ணிய சொத்துப்பிரச்சினைகள் சம்பந்தமானவற்றில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். வீடு கட்டுதல், இடம் வாங்குதல், தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை தேடிப்போகலாம். 2-ல் புதனும் குருவும் இருப்பதால் சிலருக்கு எதிர்பாராத தனப் ராப்தி கிடைக்கலாம். சிலருக்கு எப்போதோ கொடுத்து வைத்திருந்த பணம்- வராது என்ற நினைத்த பணம் எதிர்பாராதவிதமாக வந்துசேரும். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வரவேண்டிய ஓய்வூதியமும் வந்துசேரும். இப்படி வரவேண்டிய பணமும், ஓய்வூதியமும் வந்துசேர தத்தாத்ரேயர் மந்திரம், கார்த்தவீர்யார்ஜுன மந்திரம் ஜெபிக்கலாம். தத்தாத்ரேயர் மந்திரம்: "ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரோம் ஏஹ்யேஹி தத்தாத்ரேய நமஹ'; கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்: "ஓம் நமோ பகவதே கார்த்தவீர்யார் ஜுனோ நாமராஜா பாஹு ஸஹஸ்ர வான் அஸ்ய ஸ்மரண மாத்ரேண கதம் நஷ்டம்-ச- லப்யதே ஓம்'. இதை தினமும் 108 முறை ஜெபம் பண்ணலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் நின்று 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 7-ஆம் இடத்தை 2-க்குடைய குருவும் பார்க்கிறார். அதனால் திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமணம் நிகழும். ஏழரைச்சனியின் தொடக் கத்தில் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந் தவர்கள் இப்போது ஒன்றுசேரலாம். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலையும் சம்பளமும் கிடைக்கும் சொந்தத் தொழில் கனவு கண்டவர்களுக்கு தொழில் யோகம் அமையும். சம்பளத்துக்கு வேலை செய்தவர்கள் கூட்டுத்தொழில் அல்லது சுயதொழில், தனித்தொழில் தொடங்கலாம். பல வருடங்களுக்கு முன்பு மதுரையில் பிரபல மான ஹோட்டலில் ரூம் பாயாக வேலை செய்த பையன் ரூமை சுத்தம்செய்து படுக்கை விரிப்பு விரிக்கப்போனவன், அந்த ரூமில் காற்றாடியைப் போட்டு படுத்துவிட்டான். ஆளைக்காணோமே என்று தேடிப்பார்த் ததில் ரூமில் படுத்துறங்குவது தெரிந்து உடனே வேலையைவிட்டு வெளியேற்றி விட்டார்கள். சில மணி நேரம் கழித்து அந்த பையனுக்கு பத்து லட்சம் லாட்டரியில் பரிசு விழுந்ததாகத் தேடிவந்தார்கள். அதாவது அதிர்ஷ்டம் தேடிவருவதற்கு முன்பே அவனுக்கு வேலையாள், சிப்பந்தி என்ற கவனம் மாறி சுகவாசமாக அனுபவிக்கும் எண்ணம் வந்துவிட்டது. சம்பள பாக்கியை வாங்கிப் போக வந்தவனுக்கு மேனேஜர் விவரத்தைச் சொல்லிப் பாராட்டினார். நான் லாட்டரி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இந்த விவரம் தெரியும். 2, 5-க்குடைய குரு- ஜென்ம ராசியில் 8, 11-க்குடைய புதனோடு சேர்வது அதிர்ஷ்ட யோகம்! உங்களுடைய தசாபுக்திகள் அனுகூலமாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும். அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டமாக வரவேண்டும். 2, 8, 11, 5, 9-க்குடையவர்கள் சம்பந்தம் ஏற்படும்போது அதிர்ஷ்ட யோகம் அமையும். சொர்ணாகர்ஷண பைரவர் மந்திர சித்தி பெற்றால் அதிர்ஷ்ட யோகமும் தனயோகமும் அமையும். சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்: "ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரூம் க்லாம் க்லூம் ஸஹவம் ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய லோகேஸ்வராய சொர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரய வித்வேஷணாய ஆம் ஸ்ரீம் பைரவாயமஹா.' இதை முடிந்தவரை சொல்லலாம். தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் பணம் கிடைத்துவிடும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் சனி வீட்டிலும், சனி குரு வீட்டிலும் இருப்பது ஒரு சிறப்பு. குரு, சனி, செவ்வாய்க்கு ஒரு தொடர்பு இருப்பதால் உங்கள் ராசிநாதன் குரு 12-ல் மறைந்த தோஷம் விலகுகிறது. அவருடன் 7, 10-க்குடைய புதன் சம்பந்தம். சிலருக்கு தொழில் வகையில் டென்ஷன் அல்லது ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. சிலர் உத்தியோக சம்பந்தமாக- வேலை சம்பந்தமாக "டரெயினிங் கேம்ப்' போகலாம். சிலர் தொழில் சம்பந்தமான "டூர்' போகலாம். புதிதாகப் போகிறவர்களுக்கு அது ஜாலி- அடிக்கடி போகிறவர்களுக்கு வேலி! 2-ல் உள்ள கேது ஒருசிலருக்கு குடும்பப் பிரச்சினைகளில் தலைவலியை ஏற்படுத்தும். சிலருக்கு கௌரவப் பிரச்சினை. சிலருக்கு "ஈகோ'. சிலருக்கு வறட்டுக் கௌரவம். சிலருக்கு தன்மானப் பிரச்சினை. சிலருக்குப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை- நெருக்கடி. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை! இருந்தாலும் 5-க்குடைய செவ்வாய் 3-ல் தைரிய ஸ்தானத்தில் இருப்பதால் மனவுறுதியும் வைராக்கியமும் ஏற்படும். அதனால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். 4-க்குடைய குரு 12-ல் இருப்பதால் சிலருக்கு தேகநலத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். நோய்க்கும் பார், பேய்க்கும் பார் என்பதுபோல சிகிச்சையும் அவசியம். தசாபுக்திக்கேற்ற பரிகார பூஜையும் அவசியம். ஜென்மச்சனியின் தாக்கம்போக சனிக்கிழமைதோறும் அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அந்த எண்ணிக்கையளவு மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட் டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து ஏழரைச்சனி விலகும்வரை தீபமேற்றவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு செவ்வாய் வீட்டில். செவ்வாய், சனி வீட்டில். இப்படி செவ்வாய், சனி, குரு மூவருக்கும் ஒரு இணைப்பு ஏற்படுகிறது. அதனால் ராசிநா தன் 12-ல் மறைந்த தோஷம் விலகும். பாதிப்பு இருக்காது. குரு விரயாதிபதி, சனி ராசியா திபதி, செவ்வாய் பாவாதிபதி. எனவே உங்களுடைய செயல்களிலும் முயற்சி களிலும் காரியங்களிலும் சிலசமயம் தடை, தாமதம், குறுக்கீடுகள் காணப்பட்டாலும் முடிவில் உங்கள் எண்ணம்போல், விரும் பியதுபோல் எல்லாம் நிறைவேறும். 11-ஆம் இடத்து குரு 3-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க் கிறார். நண்பர்கள் வகையிலும், சகோத ரர்கள் வகையிலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். பழைய நண்பர்கள் விலகி புதிய நண்பர்கள் உதவிபுரியலாம். பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்பது தொல் காப்பிய சூத்திரம்! ஒரு காலத்தில் ஜோதிடம், ஜாதகம் என்பதே ஓலையில் எழுதப்பட்டது. பிறகு பேப்பரில், நோட்டில் எழுதப்பட்டது. தற்போது டெலிபோன், செல்லில் பதிவு செய்யப்படுகிறது. விஞ்ஞானம் வேகமாக வளர்ச்சி யடைகிறது. ஆனால் இந்த விஞ்ஞானம் எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கிறது என்பது பொய்! ஏற்கெனவே இருப்பதை சீர்திருத்தம் செய்துகாட்டுகிறது. அன்று சீதையை இராவணன் பறக்கும் விமானத்தில் தூக்கிச் சென்றதாகப் புராணம் சொல்லும். அதே புராணக்கதைகளில் மாயக்கண்ணாடியில் மந்திர ஜெபம் செய்தவுடன் எங்கேயோ தொலைதூரத்தில் இருப்பது தெரியும். இன்று டெலிவிஷன்- செல்போன் எல்லாம் இந்த வகைதான். ராக்கெட் போன்றவை மகா பாரத யுத்தத்தில் பயன்படுத்திய ஆயுதங் களுக்குச் சமமானவை. இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடிக்க வில்லை. அன்று இருந்தவற்றைத்தான் இன்று கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறார்கள்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த குரு 12-ல் விருச்சிகத் தில் இருக்க, விருச்சிக ராசிநாதன் செவ்வாய் சனியின் வீட்டில் என்று ஒன்றுக்கொன்று சங்கலித்தொடர்போல பின்னிப்பிணைந்து இருப்பது ஒருவகையில் உங்களுக்கு பிளஸ் பாயின்டுதான். எனவே உங்களுடைய முயற்சி களில் சிலசமயம் எதிர்பாராத செலவுகளும் விரயங்களும் ஏற்பட்டாலும் அதனால் வெற்றியும் நன்மையும் இருக்கும். அரசு அலுவல கங்களில் முதியோர் பென்ஷன் வாங்கப் போனால் சிலருக்கு மாமுல் கொடுத்து பணம் வாங்கிவருவதில்லையா? இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்தால் அந்தந்த காரியம் நிறைவேறும். அதேபோல ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றைப் பெறமுடியும். 6-ஆம் இடத்து ராகு, 12-ஆம் இடத்துக் கேதுவின் பலன் இதுதான். பாவகிரகம் பாவ ஸ்தானத்தில் இருப்பதால் அந்த பாவத்தன்மையை சுபத்தன் மையாக மாற்றச் செயல்படும். 3, 10-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் துணிவோடு செயல் படுத்தும் நிலை ஏற்படும். இங்கிலாந்து நாட்டில் இருந்த ஒரு சிறுவன் யாருக்கும் அடங்கா தவனாக இருந்தான். அவன் எங்கேயாவது போய்த் தொலையட்டும் என்று தாயார் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்த்து இந்தியா வுக்கு அனுப்பிவிட்டார். அவன் துணிகரமாக செயல்பட்டு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தான். அவன்தான் ராபர்ட் கிளைவ்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் இருந்து ராசியைப் பார்க்கிறார். அவர் 10-க்கும் உடையவர். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். எனவே குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். "வாயானை- மனத் தானை- மனத்துள் நின்ற கருத்தானை- கருத்தறிந்து முடிப்பான் தன்னை' என்று ஒரு வாசகத்தில் வரும். இப்படி திருவருள் புரிகிற இறைவன் குருவாய் வருவான்- அருள்வான். அதுதான் தர்மகர்மாதிபதி யோகம். 10-ல் உள்ள குரு 12, 4, 10-ஆம் இடங்களைப் பார்ப்பதால் உங்கள் தொழில், வாழ்க்கை, எல்லாக் காரியங்களும் எளிதாக ஈடேறும். அவன் அருளாலே அவன்தாள் வணங்கி அனைத்தையும் பெறலாம். வேண்டுவார்க்கு வேண்டுவது ஈவான் ஆண்டவன்! 6-க்குடைய சூரியன் 8-ல் மறைவு, நீசம் என்பதால் கடன், எதிரி, போட்டி, பொறாமைகள் எல்லாம் விலகியோடிப்போகும். அதனால் எதிலும் எதிர்ப்பும் எதிரியும் இல்லாத வெற்றிதானே! 9-ல் உள்ள குரு உங்களுக்கு ஆன்மிக நாட்டத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். தெய்வ ஸ்தல யாத்திரை, தரிசனத்தை உண்டாக்குவார். செலவுகள் வந்தாலும் பயனுள்ள செலவுகள்- பலன் தரும் செலவுகள்தான்; நிறைவான செலவுகள்தான். புதிய தொழில் திட்டங்கள் கைகூடும். இழந்த பொருளை மீண்டும் பெறலாம். 5-ல் உள்ள ராகு பிள்ளைகள் வகையில்- பேரன், பேத்திகள் வகையில் பேரானந்தம் பெறச்செய்யும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மனைவி, மக்கள், குடும்பத்தாருடன் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.

bala161118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe