ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

Advertisment

ஆரம்பம்- சிம்மம்.

8-7-2019- கன்னி.

10-7-2019- துலாம்.

Advertisment

12-7-2019- விருச்சிகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 1, 2, 3.

செவ்வாய்: பூசம்- 2, 3.

புதன்: புனர்பூசம்- 1, திருவாதிரை- 4, 3.

குரு: கேட்டை- 3, 2.

சுக்கிரன்: திருவாதிரை- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், அஸ்தமனம்.

குரு, சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார். அத்துடன் கார்த்திகை 4-ஆம் தேதிவரை (20-11-2019) அஸ்தமனமாகவும் இருக்கிறார். ஆகஸ்ட் 10-ஆம் தேதிவரை (ஆடி 25) செவ்வாய் கடகத் தில் நீசம். பிறகு சிம்ம ராசிக்கு மாறுவார். நீசம் என்பது மைனஸ் பாயின்ட். அஸ்தமனம் என்பது இன்னொரு மைனஸ் பாயின்ட். ஆக, டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்ற தியரியின்படி, ராசிநாதனை அஸ்தமனப் பலனும் பாதிக்காது; நீசப் பலனும் பாதிக்காது. இதை ஜோதிடத்தில் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்று சொல்வார்கள். ஆகவே, மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கும், மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இக்காலம் பொற்காலம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு, பொருளாதாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் மனநிறைவு, மகிழ்ச்சி ஆகிய எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களும், சுயதொழில் புரிகிறவர்களும் உத்தியோக உயர்வு, தொழில் உயர்வு, தனநிறைவு, தாராளமான பணவரவு ஆகிய திருப்தியான பலன்களை சந்திக்கலாம். சிலருக்கு எதிர் பாராத பயணம் உண்டாகும். அதனால் நன்மை யான பலனும் பயனும் உண்டு.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகன் அல்லது துர்க்கைக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய்தீபமேற்றி வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. அவர் ராகு- கேது சம்பந்தம் பெறுகிறார். (கேதுவுடன் சேர்க்கை- ராகுவின் பார்வை). பொதுவாக ராகு- கேது சம்பந்தம் இருந்தாலே சலனம், சந்தேகம், சச்சரவு ஆகிய துர்பலனையெல்லாம் சந்திக்கநேரும். என்றாலும், ராசிநாதனாகிய சுக்கிரன் சாரத்தில் (பூராடத்தில்) இருப்பதாலும், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற விதிப்படி சனி அஸ்தமனம் அடைவ தாலும் அட்டமத்துச்சனியின் கெட்ட பலன் கள்விட்டு விலகிவிடும். தொட்டுத்தொடராது. அதேசமயம் சனி, கேது, ராகு சம்பந்தம் என்ப தால் மனசஞ்சலமும், கடன் கவலைகளும், கௌரவப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ராசியை குரு பார்ப்ப தால், "கழுவின மீனில் நழுவின மீனைப்போல' எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம். 2-ஆமிடத்தில் 2-க்குடைய புதன் ஆட்சிபெற, ராசிநாதன் சுக்கிரனும், 4-க்குடைய சூரியனும் சம்பந்தப்படுவதால் சிலர் வீடு, மனை, பிளாட், வாகனம் போன்ற வகையில் சுபமுதலீடு செய்யலாம். அதற்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையலாம். சுக்கிரன் 6-க்குடையவர் என்பதால், அதை சுபக் கடனாக ஏற்றுக்கொள்ளலாம். 7-க்குடைய செவ்வாய் நீசம் என்றாலும், நீசபங்கம் என்பதால் கணவன்- மனைவிக்குள் தேக நலனில் பிரச்சினைகள் உருவாகி விலகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சுக்கிரனுக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார்; வக்ரமாகவும் இருக்கிறார்; அஸ்தமனமாகவும் இருக்கிறார். குதிரை கீழே விழுந்தது மட்டுமல்லாமல், குழியையும் பறித்த கதையாக, மனதை வாட்டும் பல நிகழ்ச்சிகளை சந்திக்கநேரும். நல்லது செய் தாலும் பொல்லாப்பு வரும். விரயாதிபதி சுக்கிரனும் சம்பந்தப்படுவதால் கணவன்- மனைவிக்குள் கருத்துவேறுபாடு அல்லது உடல்நலக்குறைவு அல்லது மனவருத்தம் ஏற்பட இடமுண்டு. கூடியவரை இருவரும் மற்ற வர்களின்- அதாவது கணவன்- மனைவி வகையிலும், மனைவி- கணவர் வகையிலும் உள்ள சுற்றத்தாரைப் பற்றிய குற்றம் குறை களை விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும். ஏசல்கள் பூசல்களை உண்டாக்கும். மேலும் மனைவி வகையிலோ, சகோதரி வகை யிலோ யாருக்கும் ஜாமின் பொறுப்பேற்க வேண்டாம். யாருக்கும் கடன் வாங்கி நிதியு தவியும் செய்யவேண்டாம். அனுதாபம் பார்த்து கடன் வாங்கிக் கொடுத்தால் ஆப்ப சைத்த குரங்காக மாட்டிக்கொள்வீர்கள். அதே போல கூடியவரை தொழில்துறையில் நஷ்டத்தை மீட்கவேண்டுமென்று மேன் மேலும் கடன்வாங்கி முதலீடு செய்யாதீர்கள். அது மரமேறிக் கைவிட்டவன் நிலைக்கு ஒப்பாகும்.

பரிகாரம்: புதன்கிழமை பெருமாள் அல்லது நவகிரகத்தில் புதன் சந்நிதிக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபமேற்றவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் செவ்வாய் நீசமாக இருந்தாலும் சனியின் சாரம் பெறுகிறார். (பூரம்). சனி, செவ்வாய்க்கு உச்ச ராசிநாதன். அதாவது செவ்வாய் மகரத்தில் உச்சம். மகரம் சனியின் வீடு. அத்துடன் சனிக்கு வீடுகொடுத்த குரு செவ்வாயின் வீட்டில் (விருச்சிகம்) நின்று செவ்வாயைப் பார்க்கிறார். ஆகவே உங்களை செவ்வாயின் நீசப்பலன்கள் எதுவும் அணுகாது. பிள்ளை களை நல்வழி நடத்துவதிலும், அவர்களின் எதிர்காலத்திட்டங்களை நிறைவேற்று வதிலும் மிகுந்த அக்கறை காட்டி செயல் படுத்துவீர்கள். மனைவி, குடும்பம், பெற் றோர் எல்லாருக்கும் உதவிகரமாக இருப் பீர்கள். தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் நிலவும் சச்சர வுகள், சங்கடங்கள் எல்லாம் விலகிவிடும். சலனங்களும் இல்லாமல் மாறிவிடும். தொழில்விருத்தி, முன்னேற்றம், உடன்பிறப் புகள் வகையில் அனுகூலம் ஆகிய பலன் களை எதிர்பார்க்கலாம். கணவன்- மனைவி இருவருடைய சம்பாத்தியமும் பெருகும். அதனால் பழைய கடன்கள் அடையும். சிறுசேமிப்பு ஏற்படும். எதிர்காலத்தில் பிள்ளைகளின் படிப்பு, நலத்திட்டங்களுக் காக சுபமுதலீடுகள் செய்யலாம். சிலர் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யலாம். சந்திர பகவானுக்கு வெள்ளைப்பூ சாற்றி நெய்தீபமேற்றலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் பலம்பெறுகிறார். அவருடன் 2, 11-க்குடைய புதனும் ஆட்சி. 3, 10-க்குடைய சுக்கிரனும் சம்பந்தம். தொழில், பொருளாதாரம், குடும்பச்சூழ்நிலை, உறவினர்கள் வகை யிலும், சுற்றம், நட்புச்சூழலிலும் குறையொன்றுமில்லை. மனைவியின் ஒத்துழைப் பும், அனுசரணையும் சொந்தபந்தங்களின் நட்புக்கு ஆதரவாக அமையும். சிலர் வாகனப் பரிமாற்றங்கள் செய்யும் சூழ்நிலை உருவாகும். இருசக்கர வாகனம் வைத்திருப்போர் புதிதாக நான்கு சக்கர வாகனம் வாங்கலாம். அதற்கு கடனாக நிதியுதவி கிடைக்கும். உடன்பிறந் தோர் வகையில் கேடுகெடுதிக்கு இடமில்லை என்றாலும், பொருளாதாரத்தைப் பொருத் தளவில் ஜாமின் பொறுப்பேற்காமல், பட்டும் படாமலும் தாமரையிலை தண்ணீர்போல நடந்துகொள்வது நல்லது. பச்சாதாபமும் அனுதாபமும் காட்டினால் "தாட்சண்யம் தனநாசம்' என்பதுபோல பணச்சுமையை நீங்கள் சுமக்கவேண்டும். அதனால் மனச்சுமையை யும் ஏற்கவேண்டும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், சிலருக்கு வம்புத் தொல்லையும் இருக்கும். சிலருக்கு அன்புத் தொல்லையும் இருக்கும். அன்புத்தொல் லையே வம்புத்தொல்லையாக மாறலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு தாமரை மலர் சாற்றி, நெய் தீபமேற்றவும்.

dd

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி. அவருடன் 9-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. விரயாதிபதி சூரியனும், ராகுவும் அவரோடு சேர்வதால் தகப்பனார் வகையில் அல்லது பங்காளி வகையில் சில சங்கடங்களை சந்திக்கவேண்டும். அவர்கள் வகையில் சில விரயங்களையும் சுமக்கவேண்டும். இப்படிப் பட்ட நிலை ஏற்படாவிட்டால் அரசு சம்பந் தப்பட்ட தொல்லைகளும், சங்கடங்களும், விவகாரங்களும் ஏற்படும். அதை சந்தித்து தீர்வுகாண வேண்டும். சூரியன்- ராஜகிரகம். அரசியல் கட்சி போன்ற ஈடுபாடு உடைய வர்களுக்கு ஏமாற்றங்களும், இழப்புகளும், கௌரவப் போராட்டங்களும் உண்டாகும். உடன்பிறப்புகள் வகையிலும் சிலர் சங்கடங் களை சந்திக்கவேண்டும். அவர்களுக்கு அனுதாபப்பட்டு கடன் வாங்கிக் கொடுத் திருந்தால், அந்தக் கடன்களை நீங்களே அடைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். உறவுமுறையில் மனவருத்தம், பிரிவு, பிளவு களை சந்திக்கவேண்டும். அதுமட்டுமல்லாது, மனைவி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், வந்தவர்களுக்கு வாரிவழங்கி இப்போது வம்பில் மாட்டிக்கொண்டீர்களே என்ற பழிபாவத்தையும் குடும்பத்தில் ஏற்கவேண்டும். அதனால் மனநலமும் கெடும்; உடல்நலமும் கெடும். ஆக, எல்லா வகையிலும் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை சக்கரத்தாழ் வாருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்கிறார். அவருடன் 9-க்குடைய புதனும் ஆட்சியாக சேர்ந்திருக்கிறார்; லாபாதிபதி சூரியனும் சம்பந்தம். முயற்சி களில் முன்னேற்றம் தெரியும். செயல்கள் சீரும்சிறப்புமாக அமையும். செய்யும் தொழில் விருத்தியடையும். சொந்தத்தொழில் புரிகிறவர்களுக்கு வேலையாட்கள் வகையில் பிரச்சினைகள் இருந்தாலும், தொய்வில் லாமல், எல்லாம் முறையாக இயங்கும். புதிய தொழில் முயற்சிகளுக்கு நிதியுதவியோடு கூட்டாளிகள் வந்து அமைவார்கள். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பை ஏற்படுத் திக் கொள்ளலாம். அதிக உழைப்பில் ஆதாயம் பெறலாம். சிலர் குடியிருப்பு அல்லது தொழில் அமைப்பில் சில மாறுதல்களையோ சீர்திருத்தங்களையோ செயல்படுத்தலாம். மனைவியின் பெயரிலும் தொழில் அமைப் புகளை உருவாக்கலாம். அல்லது பங்குதார ராகச் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு முதலீடு பற்றாக்குறையை சமாளிக்க தங்க நகை களைக் கொடுத்தும் உங்களுக்கு உதவலாம். ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் ஏற்படாது. உடலையும் மனதையும் வருத்திவரும் நோய்நொடிகளெல்லாம் தொலைதூரமாக விலகி ஓடிப்போகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கி ரனுக்கும், மகாலட்சுமிக்கும் வெண்மலர் மாலை சாற்றி நெய்தீபமேற்றி வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ் வாய் 9-ல் நீசம். அவர் சனியின் சாரம்பெறு கிறார் (பூசம்). சனி- செவ்வாய்க்கு உச்ச ராசிநாதன். அத்துடன் செவ்வாயின் வீட்டிலிருக்கும் குரு செவ்வாயைப் பார்க்கிறார். எந்தவொரு கிரகமும் அந்த கிரகத்தின் உச்ச ராசிநாதன் சம்பந்தம் பெற்றாலும், அந்த கிரகத்துக்கு வீடுகொடுத்தவன் சம்பந்தம் பெற்றாலும், அந்த கிரகத்தில் நிற்கும் உச்ச ராசிநாதன் சம்பந்தம் பெற்றாலும், அந்த கிரகம் சுபப்பலனைத் தருவார் என்பது ஜோதிட நுட்ப விதி. செவ்வாய் கடகத்தில் இருக்கிறார். கடகத்தில் குரு உச்சம். அந்த குருவின் பார்வை செவ்வாய்க்குக் கிடைப்பது ஒரு ப்ளஸ் பாயின்ட். அதேபோல செவ்வாய் மகரத்தில் உச்சம். அது சனியின் ராசி. அந்த சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது இரண்டாவது ப்ளஸ் பாயின்ட். எனவே, ராசிநாதன் செவ்வாய் நீசம் என்ற மைனஸ் பாயின்ட் அடிபட்டுப்போகும். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். நமது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டுமென்றால், முதலில் பணபலம் வேண்டும். அடுத்தது படைபலம் வேண்டும். இரண்டும் இல்லாதவர்களுக்கு தெய்வபலம் இருந்தால் போதும். அது உங்களுக்கு உண்டு.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகன் அல்லது துர்க்கைக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச் சனி நடக்கிறது. அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைவு. குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைவு என்றாலும், ராசிநாதனுக்குத் திரிகோணம். நல்ல நேரத்திலும் கெட்டநேரம், கெட்ட நேரத்திலும் நல்லநேரம் என்று சொல்வதுபோல, உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் நடைபெறு கின்றன. நாம் ஒதுங்கி நடந்து போனாலும் சைக்கிள்காரன் நம்மீது மோதி நம்மையும் விழச்செய்து அவனும் கீழே விழுகிறான். ஆனால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை; காயமும் இல்லை என்பதுபோல ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறது. உடலில் நோய் என்பதில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று முடியாமல் வைத்தியம் பார்க்கும் நிலை. தொழில்துறையில் இருப்பவர்களுக்கு தன்னிடம் வேலைபார்த்தவனே வெளியேறி போட்டிக்கடை வைப்பான்- கருவாட்டுக் கடைக்கு எதிர்க்கடை வைப்பதுபோல. ஆனாலும் உங்கள் வாடிக்கையாளர் உங்களைவிட்டு விலகமாட்டார்கள்; ஆதரவு தருவார்கள். அது உங்களுக்கு ஆறுதலாக அமையும். வேலை பார்ப்பவர்கள், உடனிருப் பவர்கள் விடுமுறை எடுத்துப்போவதால் அவர்கள் வேலையையும் சேர்த்துப் பார்க்கும் நிலை உருவாகும். பணிச்சுமை கூடினாலும் மேலிலிடத்தாரின் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குருபக வானுக்கு சுண்டல்கடலை மாலை சாற்றி, நெய்தீபமேற்றவும். தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு விரயச்சனி நடக்கிறது. சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய நான்குபேரும் 6-ல் மறைவு. சனியும் கேதுவும் 12-ல் மறைவு. வாரத்தொடக்கத்தில் சந்திரனும் 8-ல் மறைவு. 7-ல் செவ்வாய் இருந்து ராசியைப் பார்த்தாலும் நீசத்தன்மை. ஆக, குரு ஒருவர்தான் உங்களுக்கு 11-ல் பலம்பெறுகிறார். என்றாலும், அவரும் 12-க்குடையவர் பாதக ஸ்தானத்தில் இருக் கிறார். ஆக கோட்சாரத்தில் பெரும்பாலும் எல்லா கிரகங்களும் எதிர்மறைப் பலனாக அமைகிறது. வாழ்க்கையிலும் சரி; தொழில் துறையிலும் சரி; வேலை பார்க்கும் இடத்திலும் சரி- எல்லாம் எதிர்மறைப் பலனாகவே இருக்கிறது. பின்னே போனால் உதைக்கிறது. முன்னே வந்தால் முட்டுகிறது. ஆனாலும் அன்றாடத் தேவைகளுக்குப் பஞ்சமில்லை "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி, எந்த ரூபத் திலேயோ வழிவிடுகிறது. அதேசமயம் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று நாள் ஓடுகிறது. சிலருக்கு கடன்கவலை, சிலருக்கு குடும்பக் கவலை. மாணவர்களுக்கு கல்விக்கவலை அல்லது தடை, சிலருக்கு தொழில் கவலை, சிலருக்கு சத்ரு கவலை, போட்டி, பொறாமை கவலை, சிலருக்கு பிணிபீடை கவலை. இப்படி எல்லாருக்கும் ஏதோ ஒரு கவலை. "நான் ஒரு ராசியில்லா ராஜா' என்று பாடும் நிலை.

பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெறு கிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 10-ல் பலம்பெறுகிறார். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. வேலையில் இருப்போருக்கு முன்னேற்றமும் மனநிறைவும் ஏற்படும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும், பதவி உயர்வும் உண்டாகும். குடும்பத்தில் மனைவி மக்கள் ஒத்துழைப்பு மனநிறைவை ஏற்படுத்தும். தாயாதி பங்காளி வகையில் பொறாமையும் ஓமளிப்பும் தாக்கும். இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பயணிப்பீர்கள், தேக்கமில்லாமல் செயல்படுவீர்கள். பொருளா தாரத்தில் தேவைகள் அதிகரிப்பதால்- பணவரத்து குறைவாக இருப்பதால் பற்றாக் குறை ஏற்படும். அதைச் சமாளிக்க அக்கம்பக்கம் கடன் வாங்கும் அவசியம் உண்டாகும். ஒருசிலர் வேலைக்காகவும் அல்லது வீடு, மனை, வாகன வசதிக்காகவும் கடன் வாங்கும் கட்டாயம் உண்டாகும். காரியம் கைகூடுவதாலும், நினைத்தது நிறைவேறுவதாலும் கடன் ஒரு சுமையாக அமையாது; பெரும்சுமையாகத் தெரியாது. அதை அத்தியாவசியக் கடன் என்று ஆறுதல் அடையலாம். கடன்களும் எளிதாக அடைபடும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை நெய்தீபமேற்றி வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆக, பன்னிரண்டு ராசிக்காரர்களில் நடப்புக் கோட்சாரம் (குரு 9-ல் இருக்கும் வரை) உங்களுக்கு அதிர்ஷ்டக் காற்றாக வீசுகிறது. அதிர்ஷ்ட மழையாகவும் பொழிகிறது. அதேசமயம் 10-ல் உள்ள சனியும் கேதுவும், அவர்களைப் பார்க்கும் கிரகங்களும்- நளபாகமான சாப்பாட்டில் ஏதாவது ஒரு அயிட்டத்தில் உப்பு அல்லது காரம் கூடினால் சுவை குறைவதுபோல ஒரு உணர்வை ஏற்படுத்தும். உப்புக் குறைந்தாலும் போட்டுக் கொள்ளலாம். கூடிவிட்டால் என்ன செய்வது? டி.வி. விளம்பரத்தில் வருவதுபோல ""உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா'' என்று விசாரிக்க முடியுமா? அறுசுவை உணவு குறிபிட்ட நேரத்தில் தயாரித்து வைத்தும், காலாகாலத்தில் சாப்பிட முடியாதநிலை ஏற்படலாம். அல்லது பசிநேரத்தில் பசி அதிகமாகி, டைனிங் டேபிளில் வந்தமர்ந்த பிறகும் சாப்பாடு தயாரிக்காத நிலையாக அமையலாம். இதுதான் இருந்தும் இல்லாத நிலை என்பது. மழை பெய்யாமலும் கெடுக்கும்; சமயத்தில் அதிகமாகப் பெய்தும் கெடுக்கிறது என்று விவசாயிகள் வேதனைப்படுவதுபோல உங்கள் மனோ நிலை அமையும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குரு பகவானுக்கு முல்லைப்பூ சாற்றி நெய்தீபமேற்றி வழிபடவும். தட்சிணாமூர்த்திக்கும் சாற்றி வழிபடலாம்.