Advertisment

இந்த வார ராசி பலன் - 31-3-2019 முதல் 6-4-2019 வரை

/idhalgal/balajothidam/week-rasi-palan-31-3-2019-6-4-2019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

1-4-2019- கும்பம்.

4-4-2019- மீனம்.

6-4-2019- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1, 2.

செவ்வாய்: கிருத்திகை- 4, ரோகிணி- 1.

புதன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2, 3.

குரு: மூலம்- 1.

சுக்கிரன்: சதயம்- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 3.

கேது: உத்திராடம்- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ஆம் இடத்தில் சஞ்சாரம். வாரத் தொடக்கத்தில் 5-க்குடைய சூரியன் சாரத்திலும், பிறகு 4-க்குடைய சந்திரன் சாரத்திலும் சஞ்சாரம்! பாக்கியாதிபதி குருவும், ஜீவனா திபதி சனியும் 9-ல் சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதுமட்டுமல்ல; பாக்கியாதிபதி குரு மேஷ ராசியைப் பார்க்க, ராசிநாதன் செவ்வாய் குருவைப் பார்ப்பதால், இந்த வாரம் முழுவதும் உங்களுக்குத் தடையில்லாத முன்னேற்றமும், தளர்ச்சியில்லாத வளர்ச்சியும் காணப்படும். முயற்சிகள் யாவும் முழு வெற்றியாகும். 5-க்குடைய சூரியன் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு கடன் உபாதைகளும், சிலருக்கு நோய்த் தொல்லைகளும், சிலருக்கு போட்டி, பொறாமை போன்ற பலன்களும் நடக்கலாம். என்றாலும் எண்ணங்களும் லட்சியங்களும் எளிமையாக ஈடேறும்; இனிமையாக நிறைவேறும்; வலிமையாகவும் அமையும். 2, 7-க்குடைய சுக்கிரன் 11-ல் புதனோடு சம்பந்தம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு குறிப்பிட்டபடி நடக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் முறையாக வருவதால், கொடுக்கவேண்டிய பாக்கிசாக்கிகளையும் சரியாகக் கொடுத்து விடலாம். 10-க்குடைய சனி 9-ல் தன் ஸ்தா னத்துக்கு 12-ல் அமர்வதால், தொழில்துறையில் சீர்திருத்தங்களும், முன்னேற்றகரமான செயல்திட்டங்களும் நிறைவேறும். உத்தி யோகத்தில் இருப்போருக்கும் இவ்வாரம் இனிய வாரம். கடமைகளை முறையாகச் செய்து மேலிடத்தாரின் பாராட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அனுகூலம் அடையலாம்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மிகச்சிறப்பான பலனைத் தரும். ஒருசிலர் குலதெய்வத் திருப்பணிகளில் பங்குபெற்று மனநிறைவடையலாம். குலதெய்வம் தெரியாத வர்களுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியவரும். குலதெய்வமே தெரியாத வர்கள் திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அல்லது காஞ்சிபுரம் சென்றும் வழிபடலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் திக்பலம் பெறுகிறார். அவருடன் 2, 5-க்குடைய புதன் சம்பந்தம். 2-ல் உள்ள ராகு சாரத்தில் சுக்கிரன் சஞ்சாரம்! அதனால் ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி நடைபெற்றாலும், அது பொங்கு சனியாக பூரிப்பையும் பொலிவையும் தரும். எட்டாமிடம் விபத்து, ஆயுள் (மரணம்) ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம் என்றாலும், 2, 9, 11 சம்பந்தம் பெறும்போது அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். விபத்தும், மரணமும் கண்ணுக்குத் தெரியாமல்- எதிர்பாராமல் வருவதுபோல அதிர்ஷ்டமும் கண்ணுக்குத் தெரியாமல்- எதிர்பாராமல் வருவது! 8-ஆம் இடத்தை 7, 12-க்குடைய செவ்வாய் பார்ப்பதால், மனைவி மூலமாகவும், நண்பர்கள்மூலமாகவும், தொழில் கூட்டாளிகள் மூலமாகவும் அதிர்ஷ்டமும்,யோகமும் உங்களைத் தேடிவரும். 12 பாவகத்திலும் எந்த ஒரு பாவகமும் முழுமை யான கெடுதல் என்றோ, முழுமையான நன்மை என்றோ சொல்லமுடியாது. கெடுதலிலும் நல்லது மறைந்திருக்கும். நல்லதிலும் கெடுதல் ஒளிந்திருக்கும். "பிறக்கும்போது எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளே. அவர்கள் நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னையின் வளர்ப்பிலே' என்றும், "பிறக்கும் போது பொறந்த குணம் போகப்போக மாறுது' என்றும் திரைப்படங்களில் பாடல் எழுதினார்கள். ரிஷப ராசிக்கு 8-க்குடையவர் கெட்டவர் என்றாலும், அவர் 11-க்குடையவர்; லாபம், வெற்றிக்கும் அதிபதி! அட்டமச் சனியால் வீடு மாற்றம், தொழில் மாற்றம், இட மாற்றம், வேலை மாற்றம், பதவி மாற்றம் போன்ற மாற்றங்களும் ஏற்றமாக இருக்கும்.

Advertisment

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி மடம் உள்ளது. வியாழக்கிழமை அங்கு சென்று வழிபடலாம். குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம். திருவருள் இருந்தால் கிரக சோதனைகளை வெல்லலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் திரிகோணாதிபதி (5-க்குடைய) சுக்கிரன் சம்பந்தம் பெறுகிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் அல்லது கோட்சார கிரக அமைப்பிலும் கேந்திரம்- திரிகோணம் கிடைத்தால் ராஜயோகம் எனப்படும். ரிஷப ராசிக்கு 9, 10-க்குடைய சனியும், கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாயும், துலா ராசிக்கு 4, 5-க்குடைய சனியு

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

1-4-2019- கும்பம்.

4-4-2019- மீனம்.

6-4-2019- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1, 2.

செவ்வாய்: கிருத்திகை- 4, ரோகிணி- 1.

புதன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2, 3.

குரு: மூலம்- 1.

சுக்கிரன்: சதயம்- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 3.

கேது: உத்திராடம்- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ஆம் இடத்தில் சஞ்சாரம். வாரத் தொடக்கத்தில் 5-க்குடைய சூரியன் சாரத்திலும், பிறகு 4-க்குடைய சந்திரன் சாரத்திலும் சஞ்சாரம்! பாக்கியாதிபதி குருவும், ஜீவனா திபதி சனியும் 9-ல் சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதுமட்டுமல்ல; பாக்கியாதிபதி குரு மேஷ ராசியைப் பார்க்க, ராசிநாதன் செவ்வாய் குருவைப் பார்ப்பதால், இந்த வாரம் முழுவதும் உங்களுக்குத் தடையில்லாத முன்னேற்றமும், தளர்ச்சியில்லாத வளர்ச்சியும் காணப்படும். முயற்சிகள் யாவும் முழு வெற்றியாகும். 5-க்குடைய சூரியன் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு கடன் உபாதைகளும், சிலருக்கு நோய்த் தொல்லைகளும், சிலருக்கு போட்டி, பொறாமை போன்ற பலன்களும் நடக்கலாம். என்றாலும் எண்ணங்களும் லட்சியங்களும் எளிமையாக ஈடேறும்; இனிமையாக நிறைவேறும்; வலிமையாகவும் அமையும். 2, 7-க்குடைய சுக்கிரன் 11-ல் புதனோடு சம்பந்தம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு குறிப்பிட்டபடி நடக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் முறையாக வருவதால், கொடுக்கவேண்டிய பாக்கிசாக்கிகளையும் சரியாகக் கொடுத்து விடலாம். 10-க்குடைய சனி 9-ல் தன் ஸ்தா னத்துக்கு 12-ல் அமர்வதால், தொழில்துறையில் சீர்திருத்தங்களும், முன்னேற்றகரமான செயல்திட்டங்களும் நிறைவேறும். உத்தி யோகத்தில் இருப்போருக்கும் இவ்வாரம் இனிய வாரம். கடமைகளை முறையாகச் செய்து மேலிடத்தாரின் பாராட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அனுகூலம் அடையலாம்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மிகச்சிறப்பான பலனைத் தரும். ஒருசிலர் குலதெய்வத் திருப்பணிகளில் பங்குபெற்று மனநிறைவடையலாம். குலதெய்வம் தெரியாத வர்களுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியவரும். குலதெய்வமே தெரியாத வர்கள் திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அல்லது காஞ்சிபுரம் சென்றும் வழிபடலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் திக்பலம் பெறுகிறார். அவருடன் 2, 5-க்குடைய புதன் சம்பந்தம். 2-ல் உள்ள ராகு சாரத்தில் சுக்கிரன் சஞ்சாரம்! அதனால் ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி நடைபெற்றாலும், அது பொங்கு சனியாக பூரிப்பையும் பொலிவையும் தரும். எட்டாமிடம் விபத்து, ஆயுள் (மரணம்) ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம் என்றாலும், 2, 9, 11 சம்பந்தம் பெறும்போது அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். விபத்தும், மரணமும் கண்ணுக்குத் தெரியாமல்- எதிர்பாராமல் வருவதுபோல அதிர்ஷ்டமும் கண்ணுக்குத் தெரியாமல்- எதிர்பாராமல் வருவது! 8-ஆம் இடத்தை 7, 12-க்குடைய செவ்வாய் பார்ப்பதால், மனைவி மூலமாகவும், நண்பர்கள்மூலமாகவும், தொழில் கூட்டாளிகள் மூலமாகவும் அதிர்ஷ்டமும்,யோகமும் உங்களைத் தேடிவரும். 12 பாவகத்திலும் எந்த ஒரு பாவகமும் முழுமை யான கெடுதல் என்றோ, முழுமையான நன்மை என்றோ சொல்லமுடியாது. கெடுதலிலும் நல்லது மறைந்திருக்கும். நல்லதிலும் கெடுதல் ஒளிந்திருக்கும். "பிறக்கும்போது எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளே. அவர்கள் நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னையின் வளர்ப்பிலே' என்றும், "பிறக்கும் போது பொறந்த குணம் போகப்போக மாறுது' என்றும் திரைப்படங்களில் பாடல் எழுதினார்கள். ரிஷப ராசிக்கு 8-க்குடையவர் கெட்டவர் என்றாலும், அவர் 11-க்குடையவர்; லாபம், வெற்றிக்கும் அதிபதி! அட்டமச் சனியால் வீடு மாற்றம், தொழில் மாற்றம், இட மாற்றம், வேலை மாற்றம், பதவி மாற்றம் போன்ற மாற்றங்களும் ஏற்றமாக இருக்கும்.

Advertisment

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி மடம் உள்ளது. வியாழக்கிழமை அங்கு சென்று வழிபடலாம். குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம். திருவருள் இருந்தால் கிரக சோதனைகளை வெல்லலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் திரிகோணாதிபதி (5-க்குடைய) சுக்கிரன் சம்பந்தம் பெறுகிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் அல்லது கோட்சார கிரக அமைப்பிலும் கேந்திரம்- திரிகோணம் கிடைத்தால் ராஜயோகம் எனப்படும். ரிஷப ராசிக்கு 9, 10-க்குடைய சனியும், கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாயும், துலா ராசிக்கு 4, 5-க்குடைய சனியும், மகர ராசிக்கு 5, 10-க்குடைய சுக்கிரனும், கும்ப ராசிக்கு 4, 9-க்குடைய சுக்கிரனும் ராஜயோகாதி பதிகளாக பலன் செய்வார்கள். கேந்திர- திரிகோணாதிபதிகளின் சம்பந்தம்பெறும் கிரகங்களும் யோகத்தையே செய்யும். 6, 8, 12-க்குடைய கெட்டவர்கள் தொடர்பிருந் தாலும், அதன் கெடுபலன் குறையும்; பாதிக்காது. தசாபுக்திக் காலங்களிலும் இந்த விதி பொருந்தும். ஒரு கெட்டவனோடு சேரும் நல்லவன் கெடுவதும் உண்டு. ஒரு நல்லவனோடு சேரும் கெட்டவனும் நல்லவனாவதும் உண்டு. இரண்டும் ஒன்றுபோலத் தோன்றி னாலும், இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதைத்தான் "அஞ்சு ஒன்பதுக்கதிபர் பாபர்- சுபரானாலும் பொன் போன்ற நன்மை புரிவார்' என்று "ஜோதிட கிரக சிந்தாமணி'யில் சொல்லப் பட்டுள்ளது. ஜென்ம ராகு குடும்பக் குழப்பத்தை உருவாக்கினாலும், குரு, சனி பார்வையால் குறை நிறைவாகும். குரு பார்க்க கோடி நன்மை! குரு 10-க்குடையவர். சனி 9-க்குடை யவர். கேந்திர- திரிகோணாதிபதி பார்வை யாகும். இதை திருவள்ளுவர் "பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்பார். அதாவது பொய்யும் மெய் யாகும்! (குற்றமில்லாத நன்மை ஏற்படும்போது).

பரிகாரம்: ஜென்ம ராகு- சப்தமக் கேதுவின் தோஷம் விலக சித்தர்களின் ஜீவசமாதி சென்று தியானம் செய்ய வேண்டும். தேனி வழி உத்தம பாளையம் சென்று வழிபடவேண்டும். அது தென்காளஹஸ்தி எனப்படும். ராகு- கேதுவுக்கு தனிச் சந்நிதி உண்டு. ஞாயிற்றுக் கிழமைதோறும் ராகு காலத்தில் அபிஷேக பூஜை செய்வார்கள்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு முக்கியமான கிரகங்கள் மறைகிறார்கள். குரு, சனி 6-ல் மறைவு. புதன், சுக்கிரன் 8-ல் மறைவு. ஆனாலும், 2-க் குடைய சூரியன் 9-ல் குரு வீட்டில் இருப் பதால், மறைவுபெறும் கிரகங்களும் நிறைவு பெறும்! வெற்றிக்கு வழியமைக்கும். இராமா யணத்தில் இராமபிரான் மறைந்திருந்து தாக்கிதான் வாலியைக்கொன்று, சுக்ரீவனுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். யுத்த தர்மத்திலே மறைந்திருந்து தாக்கும் செயலை "கொரில்லா போர்' என்பார்கள். பிதுர்காரகன் சூரியன் பிதுர்ஸ்தானத்தில் நிற்பதும், பிதுர்ஸ்தானாதி பதி குரு 6-ல் மறைவதும் பிதுர் ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு பலக்குறைவு தான்! என்றாலும் காரகனும் ஸ்தானாதிபதி யும் குரு வீட்டில் இருப்பதால் பலம்பெறு கிறார்கள். சூரியன் பகலில் பலம். சந்திரன் இரவில் பலம்! அதிலும் வளர்பிறையில் சந்திரன் பலம்- தேய்பிறையில் சந்திரனுக்கு பலக்குறைவு என்றெல்லாம் ஜோதிடத்தில் விதிவிலக்குகள் உண்டு. அதேபோல, பௌர்ணமியிலிருந்து பஞ்சமிவரை வளர்பிறைக்குச் சமம் என்றும் விதியுண்டு. வானில் பௌர்ணமிக்கு மறுநாளில் தான் நிலவு, முழுநிறைவாக ஜொலிக்கும். இதெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், 12 ராசிகளிலும் "பாடப்படிக்க பரதவியம் கற்க தேடசுகிக்க செலவழிக்க கற்கடக மல்லாது மற்கிடமேது' என்று ஒரு ஜோதிடப் பாடல் உண்டு. பிரம்மா இந்த உலகத்தைப் படைக்கும்போது கடக லக்னம்தான் உதய மானதாக ஒரு வரலாறு. எனவே கடக ராசி அல்லது கடக லக்னத்தார் கிரக சோதனை களை வென்று சாதிக்கும் தன்மையுடைய வர்கள். அதேபோல சிம்ம ராசிக்கும், சிம்ம லக்னத்துக்கும் அந்த சிறப்புண்டு. கடகம்- சந்திரன் வீடு. சிம்மம்- சூரியன் வீடு. இவர்கள் இருவருக்கும்தான் 12 கட்டத்தில் ஒவ்வொரு வீடு. மற்ற ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு இரண்டு வீடுகள் ஆட்சி வீடுகளாகும்.

பரிகாரம்: திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சந்திரனுக்குரிய தலம். கும்ப கோணம் அருகில் கற்கடகேஸ்வரர் கோவில் கடக ராசிக்குரிய கோவில். (திருவிசை நல்லூர் அருகில்). திங்கட்கிழமை சென்று வழிபடலாம்.

murugan

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 8-ல் மறைவு. என்றாலும் அவர் நிற்பது குரு வீடு. குரு சிம்ம ராசிக்கு 5-ல் ஆட்சி; சூரியனுக்கு 10-ல். இங்கு கேந்திரம்- திரிகோண சம்பந்தம் பெறுவதாலும், சூரியனுக்கு மறைவு தோஷம் நீங்கும். எந்த ஒரு கிரகம் 6, 8, 12-ல் மறைந்தாலும், அதற்கு சாரம் கொடுத்தவரும், வீடு கொடுத்த வரும் அந்த கிரகத்துக்கு கேந்திர- திரிகோணம் ஏறினாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும், மறைந்த கிரகத்துக்கு நிறைந்த பலன் ஏற்படும் என்பது சூட்சும விதி. எனவே சிம்ம ராசிக்கு 2, 11-க்குடைய புதன், 3, 10-க்குடைய சுக்கிரன் இருவரும் 7-ல் சேர்ந்து ராசியைப் பார்ப்பதால், உங்கள் சொல்வாக்கு செல்வாக்கு பெறும். குடும்பத் தில் அமைதியும், ஆனந்தமும் மலரும். செய்தொழில்துறையில் லாபம் பெருகும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும். புதுமுயற் சிகளும் வளர்ச்சிபெறும். புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், நாகதோஷம் உள்ளவர் களுக்கும் பரிகார ஹோமத்தால்- தெய்வ அனுக்கிரகத்தால் வாரிசு உதயமாகும். சந்தான பரமேசுவர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான கணபதி ஹோமம், தத்தாத் ரேயர் ஹோமம் செய்வதால் 5-ல் சனி, கேது, குரு நிற்கும் தோஷம் விலகும். புத்திர ஸ்தானத்தில் புத்திரகாரகன் குரு நிற்பது புத்திர தோஷம் என்றாலும், குரு ஆட்சிபலம் என்பதால் தோஷமில்லை. 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் குருவருளும் திருவருளும் பெருகி உங்கள் விருப்பங்கள் யாவும் விரைவாக நிறைவேறும். இந்த உலகத்தில் இறையருள் இருந்தால் போதும்; எல்லாமே குறைவறப் பெறலாம். 9-ல் குரு இருப்பவர்களுக்கும், குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பவர்களுக்கும், தர்மகர்மாதிபதி யோகம் பெற்றவர்களுக்கும் குருவருள் குறைவற இருப்பதால் திருவருள் நிறைவாகும். அதுதான் பூர்வபுண்ணிய பாக்கியம்.

பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவி பாளையம் என்ற கிராமத்தில் கோடிச்சாமியின் ஜீவசமாதி உள்ளது. ஒவ்வொரு அமாவாசை யன்றும், பௌர்ணமியன்றும் சிறப்புப் பூஜைகள், அன்னதானம் நடக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் சிலமுறை சென்று தரிசனம் செய்துள்ளேன்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 6-ல் மறைகிறார். அவருடன் 2, 9-க்குடைய சுக்கிரனும் மறைவு. புதன் ராசிநாதன் என்பதோடு 10-ஆம் இடத்துக்கும் அதிபதி. அவர் 6-ல் மறைவதால் தொழில்துறையில் போட்டி பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும் குறுக்கிடும் என்றாலும், 10-ஆம் இடத்துக்கு 9-ல் புதன் இருப்பதால், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறலாம். அதேசமயம் 10-ல் ராகு நிற்க, சனி- கேது பார்ப்பதால் "எதிரிகள்- ஜாக்கிரதை' என்று மிகவும் முன்னெச் சரிக்கையாக செயல்படவேண்டும். கண்ணில் விளக் கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு விழிப்போடும், சுதாரிப்போடும் செயல்படவேண்டும். இல்லா விட்டால் எதிரிகளும் போட்டியாளர்களும் எளிதாக உங்களை ஏமாற்றிவிடுவார்கள். அலட்சிய மாக இருந்த முயலை ஆர்வத்தோடு செயல்பட்ட ஆமை முந்திச் சென்று வெற்றிபெற்ற கதையா கிவிடும். எதிர்களிடம் எச்சரிக்கையாக இருப் பதைவிட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், சாமர்த்தியசாலியை ஜெயிக்க எதிரிகள், நண்பர்கள் வேடத்தில் புகுந்து ஐந்தாம்படையாகக் கவிழ்த்துவிடுவார்கள். இதுதான் ராகு- கேதுவின் வேலை. மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, பாற்கடலில் கடைந் தெடுத்த அமிர்தத்தை தேவர்களுக்குப் பங்கிட்டு வழங்கிவரும்போது ஒரு அசுரன் தேவரைப்போல வேடமிட்டு வரிசையில் அமர்ந்து அமிர்தத்தை வாங்கிப் பருகியதாகவும், அதை சூரியனும் சந்திரனும் கண்டுபிடித்துக் கூறியதாகவும், விஷ்ணு அசுரனை சக்கரத்தால் கழுத்தை அறுக்க, அவர்கள் சாகாமல் ராகு- கேதுவாக மாறியதாகவும் புராணம்! அதனால்தான் சூரியனையும் சந்திரனையும் ராகுவும் கேதுவும் தீண்டுவதால் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஏற்படுவதாக ஐதீகம்.

பரிகாரம்: மதுரை- சிங்கம்புணரியில் முத்து வடுகநாத சித்தர் ஜீவசமாதி உள்ளது. வாத் தியாரய்யா கோவில் எனப்படும். அமாவாசையன்று காலை 11.00 மணிக்கும், பௌர்ணமியன்று இரவு 11.00 மணிக்கும் அபிஷேக பூஜை நடக்கும். இதில் கலந்துகொண்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் மற்றொரு திரிகோணாதிபதியான 9-க்குடைய புதன் சம்பந்தம். பொதுவாக தர்மகர்மாதிபதி சம்பந்தம்போல இரண்டு திரிகோணாதிபதிகள் இணைந்தாலும், பார்த்துக்கொண்டாலும், சாரப் பரிவர்த்தனையடைந்தாலும், பரிவர்த்தனையாக இருந்தாலும், அந்த ஜாதகத்துக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும் என்பது உறுதி. அதன்பலன் மனதில் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்கும். வாழ்க்கையில் வளமும் நலமும் கொழிக்கும். ஆரோக்கியம் தழைக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நிறைவேறும். மகிழ்ச்சி பிறக்கும். அபிராமி அந்தாதியில் பாடிய மாதிரி "தனம் தரும்; கல்வி தரும்; தளர்வறியா மனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; பதினாறு செல்வ மெல்லாம் பெருகும்!' அதனால்தான் "தெய்வத்தை நம்பினோர் கைவிடப்படார்' என்று முன்னோர்கள் சொன்னார்கள். நல்ல சீடனை குரு நாடிவந்துஆட்கொண் டருளுவார். அதற்கு உதாரணம் சுந்தரர்தான். நாச்சியாரை மணமுடிக்க சுந்தரர் முனைந்த போது- சிவபெருமானே முன்வந்து தடுத்தாட்கொண்டு அழைத்துப்போனார். திருவெண்ணெய்நல்லூரில் காட்சியருளி னார். தீட்சை (குரு உபதேசம்) என்பது மூன்று வகை! ஸ்பரிச தீட்சை (தொட்டு அருள்வது), தொண்டு தீட்சை (குருவுக்குப் பணிவிடை செய்து பலன் பெறுவது), நயன தீட்சை (பார்வையிலேயே குருவருள் பெருகச் செய்வது). இதையே இன்னொருவிதமாகச் சொல்வார்கள். கோழி- மீன்- ஆமை என்ற அடிப்படையில்! கோழி முட்டையிட்டு அடைகாத்தல். கடமையாற்றுவது. மீன் நீரில் முட்டையிட்டு திரும்பிப் பார்க்குமாம். அதன் பார்வைபட்டவையெல்லாம் குஞ்சாகி விடுமாம். (பார்த்தல்). ஆமை எங்கேயோ முட்டையிட்டுவிட்டு எங்கேயோ இருந்து நினைத்த மாத்திரம் அந்த முட்டை பொரிந்து குஞ்சாகிவிடுமாம். (நினைத்தல்). கோழி- குடும்பக்கடமை. மீன்- சாது தரிசனம் பாவ விமோசனம். ஆமை- ஞானிகள் சித்தம்! இந்த உலகம் உய்வடைய ஞானிகளும் சித்தர்களும் சித்தம்கொள்ள வேண்டும்.

பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங் கலம் சாமியார்கரடு என்ற சிறுகுன்றில் ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் ஜீவசமாதி திகழ் கிறது. அங்கு சென்று தியானிக்கவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 10-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் ராசிநாதனோ அல்லது லக்னநாதனோ எங்கிருந்தாலும், எந்த இடத்தைப் பார்த்தாலும், குறிப்பாக ராசி அல்லது லக்னத்தைப் பார்த்தாலும், "நீரளவே ஆகுமாம் நீராம்பல்' என்ற மாதிரி எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும், கஷ்டங்கள் வந்தாலும் நிலைகுலையாமல், கவிழாமல், வீழ்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கலாம். தாமரை மலர் குளத்தில் நீர் வற்றினாலும், நீர் உயர்ந்து காணப்பட்டாலும் நீர்மேல்தான் மிதக்கும். நீரில் மூழ்கிவிடாது. அதையே பெரியோர்கள் "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்றார்கள். "செல்வந்தனைவிட கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; "கற்றாரைக் கற்றாரே காமுறுவர். ஆகவே 2-ல் உள்ள குரு ஆட்சிபெற்றதால், ஏழரைச்சனி நடந்தாலும் உங்கள் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம் எல்லாம் கொஞ்சம்கூட குறையாது. அதேபோல 2-ல் கேதுவும் சனியும் இருப்பதால், கையிருப்பு, ரொக்கம் இல்லையென்றாலும், அந்தந்த நேரத்தில் அந்தந்த தேவைகள் எளிதாகப் பூர்த்தியடையும். அதாவது வாடகை, கரன்டு பில், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு வரி, பள்ளிக்கட்டணம், விசேஷங்களுக்கு மொய்ச்செலவு- இப்படி எந்த தேவையானாலும் அவை நிறைவேறும். அதனால்தான் "வாயானை- மனத்தானை- மனத்துள்நின்ற கருத்தானை- கருத்தறிந்து முடிப்பான் தன்னை- தூயானை- தூவெண்ணையாற்றன் தன்னை- சுடர்திங்கள் சடையானை- தொடர்ந்து நின்றென் தாயானை- தவமாகிய தன்மையானை- தலையாய தேவாதி தேவனை- சேயானை தென்கூடல் சிவனை' என்று நால்வரில் ஒருவர் பாடினார்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டியில ஜோதிநிர்வாண மௌனகுரு சுவாமிகள் (அவதூதர்) ஜீவசமாதி சென்று வழிபடவும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். அதனால் இன்னொரு வகையில் ஜென்மச்சனியும், ஜென்ம கேதுவும், சப்தம ராகுவும் இருந்தாலும், அவ்வப்போது சிறுசிறு குழப்பங்களும் சங்கடங்களும் தோன்றி னாலும், அதில் அகப்பட்டுக்கொள்ளாமல் கரைசேரலாம். மேலும் 5-க்குடைய செவ்வாய் ஆறில் மறைவதால், மனதில் இனம்புரியாத வேதனை அல்லது காரண காரியமில்லாத கவலை ஏற்பட்டாலும், மறுநிமிடமே அதை விலக்கிவிட்டு மனஆறுதலும் தைரியமும் அடையலாம். ஒருசிலருக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலை. ஒருசிலருக்கு எதிர்காலத் தைப்பற்றிய சிந்தனை. ஒருசிலருக்கு குடும் பத்தில் அனுசரிப்பு நிலவாத நினைவுகள். ஒருசிலருக்கு எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி ஒரு வெறுமை- இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. இதற்குக் காரணம் ஜென்மச்சனியா, ஜென்ம கேதுவா, சப்தம ராகுவா, செவ்வாயின் பார் வையா என்று தெளிவாக சொல்ல முடியாத நிலை! எது எப்படியிருந்தாலும் ராசிநாதன் குரு ஆட்சிபெறுவதால், அறிவுப்பூர்வமாக செயல்பட்டு, ஆறுதல் பெற்று எதிர்கொண்டு சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பொது வாக அரைத்த மாவையே அரைக்கும் கிரைண்டர்போல நடந்துபோனதையே நினைத்து நினைத்து வருந்துவதை விட்டு விட்டு, நடக்கப்போவதை வரவேற்று, வெற்றி கொள்ளும் ஆர்வத்தோடு தயாராவதை லட்சிய மாகக்கொள்ள வேண்டும். நேற்று என்பது முடிந்தது; கவலை வேண்டாம். நாளை என்பது வரவிருப்பது; எப்படியிருக்குமோ. இன்று என்பது கண்முன் நிகழ்வதே. அதை இனிமை யாக்கி அனுபவிக்க முயலவேண்டும்.

பரிகாரம்: திண்டுக்கல் மலையின் பின்புறம் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அவர் காலத்தில் ரமண மகரிஷியும், சுப்பிரமணிய சிவாவும் சந்நியாசம் வேண்டும் என்று வந்தார்கள். அவர்களுக்கு ஒரு சிறு சோதனை வைத்து, ரமணரை ஆன்மிகத்துக்கு திருவண்ணாமலைக்கும், சுப்பிரமணிய சிவாவை அரசியலுக்கும் அனுப்பிய மகான். உங்கள் எதிர்காலத்துக்கும் அவர் வழிகாட்டுவார்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருடன் 12-க்குடைய குருவும் மறைவு. கேதுவும் மறைவு! இதில் குருவையும் கேதுவையும் மறைவு தோஷம் பாதிக்காது. ஆனால் ராசிநாதன் 12-ல் மறைவு என்பதால், உங்கள் எண்ணங்களிலும், திட்டங்களிலும், செயல்களிலும் குழப்பங்களும், தடுமாற்றங் களும், முடிவெடுக்க முடியாத நிலையும் உருவாகும். பூட்டிய வீட்டை சிறிதுதூரம் போனபிறகு வீட்டைச் சரியாக பூட்டினோமா, இல்லையா என்று சந்தேகம் வருவதுபோல, நீங்கள் செய்த செயல்களிலேயே- காரியங் களிலேயே அவை சரிதானா? இல்லையா என்ற சந்தேகமும் குழப்பமும் ஏற்படலாம். இந்த நிலையில்தான் "எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற வள்ளுவரின் வாக்கை தெள்ளத்தெளிந்து பின்பற்ற வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் தாமதம் ஏற்படலாம். இருந்தாலும் தளர்வடையாமல் தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும் "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று வள்ளுவர் சொல்லியுள்ளார். தெய்வத்தால் முடியாதது என்று ஒன்று மில்லை. இருந்தாலும் உங்கள் விடாமுயற்சியை தெய்வம் சோதித்துப் பார்க்கும். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான். கௌசிகனாக ராஜயோகத்தில் மிதந்தவர்- பிரம்மரிஷியாக கடும்தவம் இயற்றி, தன் தவவலிமையை மேனகைக்கும்- திரிசங்கு வுக்கும் தாரைவார்த்துவிட்டு, கடைசியில் தன் காயத்தையே (சரீரத்தை) திரியாக்கி, தீபமேற்றி, காயத்ரி மந்திரத்தைத் தோற்று வித்து வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷியாக வில்லையா?

பரிகாரம்: திருப்பரங்குன்றத்தில் (மதுரை அருகில்) கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியும், சோமப்பா சித்தரின் ஜீவசமாதியும் உண்டு. ரயிலையே நிறுத்திய சித்தர் மாயாண்டி சுவாமி! அங்கு சென்று வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல் இருக்கிறார். பொதுவாக சனி பகவானுக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் பலம்பொருந்திய- பலன் தரும் இடங்களாகும். அதிலும் சனிக்கு வீடு கொடுத்த குருவும், அங்கு ஆட்சிபெறுவது சிறப்பு. கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்த மாதிரி என்றும் கூறலாம். பருத்தி, புடவையாய்க் காய்த்த மாதிரி என்றும் கூறலாம். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நிறைவேறும். எண்ணியவை எண்ணியபடி ஈடேறும். விரும்பியவை விரும்பியபடியே நடக்கும். அதைத்தான் அதிர்ஷ்டம் என்பது! யோகம் என்பது! சனியுடனும் குருவுடனும் கேது சம்பந்தப்பட்டு ராகு பார்ப்பதால், சில காரியம் உடனுக்குடன் நினைத்தது நினைத்த படி நிறைவேறும். சில காரியம் தாமதப் படும். சில காரியம் எதிர்மறையாகத் தோல்வி யாகும். அப்படி தாமதமானாலும்- தடைப்பட்டாலும்- ஏமாற்றமானாலும்- எதிர்மறையாக நிகழ்ந்தாலும் அதுவும் ஒரு நன்மைக்காகவே அமையும். ஆரம்பத்தில் அது தெரியாது. முடிவில் அல்லது பிறகு அது நல்லதுதான் என்பது புரியும். இதைத்தான் ஒரு புலவர் "ஒன்று நினைக் கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்- அன்றி அது வரினும் வந்தெய்தும்- ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும் எனையாளும் ஈசன் செயல்' என்று பாடினார். ஆக, நல்லது நடப்பதும், கெட்டது நடப்பதும் எல்லாம் ஈசன் செயல்தான். தொழில்துறையிலும், வாழ்க்கை அமைப்பிலும் தடை, தாமதம் ஏற்பட்டாலும், குறுக்கீடுகள் உருவானாலும் எதிர்கால நலனைக் கருதி பொறுமையாக செயல்பட்டு சாதனை படைக்கவேண்டும். சிலசமயம் பணநெருக்கடி இருந்தாலும் தேவைகள் வரும்போது அவை நிறைவேறும். எதிர்பார்த்தவர் உதவாவிட்டாலும் எதிர்பாராதவர் உதவி செய்யலாம்.

பரிகாரம்: கரூர் அருகில் நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதி சென்று வழிபடவேண்டும். அவதூதர். அந்த இடத்தில் காவேரி தென்வடலாகப் பாயும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சனியும் கேதுவும் கூடியிருக்க- ராகு பார்க்கிறார். குரு- சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். அதிலும் குருவுக்கு ராசிநாதன் என்ற பெருமையும் சேரும். மீன ராசிக்கும், மீன லக்னத்துக்கும் இந்த கிரக அமைப்பு திறமைகளை வளர்க்கும். பெருமைகளை சேர்க்கும். உறவுகளை இணைக்கும். வளமைகளை உண்டாக்கும். 10-ஆம் இடத்து குரு வக்ரமடைந்து 9-ஆம் இடத்துக்கு- விருச்சிகத்துக்கு 18-5-2019-ல் மாறுவார். இந்த யோகம் அப்போதும் தொடரும். அடுத்து 9-ல் இருந்து மறுபடியும் 10-ஆம் இடத்துக்கு- தனுசுவுக்கு 28-10-2019-ல் மாறுவார். அப்போதும் இந்த யோகம் தொடரும். ஆக, மீன ராசிக்காரர்களுக்கு மற்ற எந்த ராசிக்காரர்களுக்கும் இல்லாத அளவு தொடர் யோகமாக அமையும். சிலசமயம் அரசுப்பணியிலுள்ள அதிகாரிக்கு ஓய்வுக்காலத்திற்குப் பிறகும் சில மாதம் பதவி நீட்டிப்பு கிடைக்கும். அதுமாதிரிதான் இதுவும். குருவின் சஞ்சாரம், தர்மகர்மாதிபதி யோகம். உங்களுக்கு அதி அற்புதமாக- அதிர்ஷ்டமாக வேலை செய்யும். "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும்' என்ற பழமொழிக்கேற்ப, இந்த சந்தர்ப் பத்தை- கிரகநிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டியது உங்கள் சாமர்த்தி யத்தைப் பொருத்தது. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். சாமர்த்தி யமும் சாதுரியமும் வல்லவனுக்கு உரியது. அதனால்தான் "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்றார்கள். அதேசமயம் வல்லமை யும் நேரம், காலம், ஜாதகத்தைப் பொருத்தே அமையும்.

பரிகாரம்: சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. முருகனையே தரிசித்தவர். இரு காலிலும் வண்டிச்சக்கரம் ஏறி எலும்பு முறிந்த நிலையிலும் ஆபரேஷன், சிகிச்சை எதுவும் இல்லாமல் முருகனைப்பாடியே குணமான மகான்! அவர் எல்லையைத் தொட்டாலே தொல்லைகள் இல்லாமல் தொலைந்து விடும்.

bala050419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe